Category: tamil katturai APJ arul

கட்டுரைகள் APJ அருள்

  • AN EXTRACT OF SWAMI RAMALINGAM LIFE (வடலூர் இராமலிங்க சுவாமிகளின் வரலாற்றுச் சுருக்கம்)

     AN EXTRACT OF SWAMI RAMALINGAM LIFE(PUBLISHED IN SOUTH ARCOT DISTRICT GAZETTE-1878 SOUTH ARCOT MANUAL By J.H.GARSTIN, I.C.S.COLLECTOR OF S.A.DISTRICT, FIRST EDITION. 1678 SECOND EDITION, 1906 AS SOUTH ARCOT GAZETTEER By W.FRANCIS, I.C.S.COLLECTOR OF SOUTH ARCOT DISTRICT PAGES 316 &317 PARVATIPURAM
            A VILLAGE OF 1,189 INHABITANTS LYING 23 MILES SOUTH WEST OF CUDDALORE ON THE VRIDHACHALAM ROAD. THE PLACE IS CONNECTED WITH ONE RAMALINGA PARDESI, A SOMEWHAT CURIOUS EXAMPLE OF A LATER DAY SAINT WHO HAS BEEN ALMOST DEIFIED By HIS FOLLOWERS

           BORN IN 1823 IN THE CHIDAMBARAM TALUK OF VELLALA PARENTS IN HUMBLE CIRCUMSTANCES, HE DEVELOPED. WHILE STILL LITTLE MORE THAN A Boy,AN UNDENIABLE TALENT FOR VERSIFICATION AND HIS POEMS BROUGHT HIM INTO NOTIE. THEY DEALT WITH RELIGIOUS
    MATTERS;SOME OF THEM,LIKE THOSE OF THE FAMOUS SAIVITE SAINTS OF OLD WERE COMPOSED IN EULOGY OF THE MERITS OF THE DEITIES OF CERTAIN SHRINES SUCH As THE TEMPLES IN TIRUTTANI IN NORTH ARCOT AND TIRUVOTTIYUR NEAR MADRAS:OTHERS TOOK FOR THEIR SUBJECT THE BEAUTIES OF THE HIGHER LIFE.IT WAS THESE THAT LED To HIS BECOMING GRADUALLY REGARDED AS A SPIRITUAL GUIDE AND TEACHER. AFTER VISITING MANY OF THE WELL-KNOWN SACRED PLACES OF THE SOUTH. HE FINALLY SETTLED AT KARUNGULI. THE NEXT VILLAGE TO PARVATHIPURAM. AT ITS HEIGHT HIS INFLUENCE MUST HAVE BEEN VERY REAL, HIS ADMIRERS AND DISCIPLES, WHO INCLUDED EVEN
    LEVEL-HEADED GOVERNMENT OFFICIALS, ARE SAID TO HAVE CHANGED THEIR RESIDENCES AND GONE TO LIVE WHERE THEY COULD BE CONSTANTLY NEAR HIM. ABOUT 1872,THE CURIOUS OCTAGON-SHAPED SABHA WITH THE DOMED ROOF WHICH IS To BE SEEN AT VADALUR, A HAMLET OF PARVATHIPURAM. WAS ERECTED BY HIM FROM SUBSCRIPTIONS. IT IS SAID THAT THE SPOT WAS CHOSEN BECAUSE FROM IT ARE VISIBLE THE FOUR GREAT TOWERS OF NATARAJA’S SHRINE AT CHIDAMBARAM. IT IS NOT AN ORDINARY TEMPLE, THE DETAIL OF THE WORSHIP IN IT BEING UNUSUAL RAMALINGA PARADES SEEMS TO HAVE PERSUADED His DISCIPLES THAT THEY WOULD RISE AGAIN FROM THE DEAD AND HE CONSEQUENTLY URGED THAT BURIAL WAS PREFERABLE To CREMATION.EVEN BRAHMINS ARE SAID To HAVE BEEN BURIED IN THIS BELIEF AND PEOPLE WHO DIED IN OTHER VILLAGES WERE IN SEVERAL CASES BROUGHT TO VADALUR AND INTERRED THERE. IN 1874 HE LOCKED HIMSELF IN A ROOM STILL IN EXISTENCE IN METTUKUPPAM(HAMLET OF KARUNGULI)WHICH HE USED FOR SAMADHI OR MYSTIC MEDITATION INSTRUCTED HIS DISCIPLES NOT TO OPEN IT FOR SOMETIME. HE HAS NEVER BEEN SEEN SINCE AND THE ROOM IS STILL LOCKED. IT IS HELD BY THOSE WHO STILL BELIEVE IN HIM THAT HE WAS MIRACULOUSLY MADE ONE WITH HIS GOD AND THAT IN THE FULLNESS OF TIME HE WILL REAPPEAR To THE FAITHFUL WHATEVER MAY BE THOUGHT OF HIS CLAIMS TO BE A RELIGIOUS LEADER, IT IS GENERALLY ADMITTED BY THOSE WHO ARE JUDGES OF SUCH MATTERS THAT HIS POEMS, MANY OF WHICH HAVE BEEN PUBLISHED,STAND ON A HIGH PLANE, AND HIS STORY IS WORTH NOTING AS AN INDICATION OF THE DIRECTIONS WHICH RELIGIOUS FERVOUR MAY STILL TAKE

    I ATTAINED EVER INDESTRUCTIBLE DEATHLESS BODY, AS GRANTED BY
    THE APPEAL TO ARUTPERUN JOTHI.

    தமிழ் மொழிபெயர்ப்பு:

    வடலூர் இராமலிங்க சுவாமிகளின் வரலாற்றுச் சுருக்கம்
    – தென்னாற்காடு மாவட்ட அரசு ஆணை வெளியீடு 1878)
    தென்னாற்காடு மாவட்ட அரசு ஆணை வெளியீடு 1878 ஆம் ஆண்டில் வெளியானது J.N.கார்ஸ்மன் 1.கே. தென்னாற்காடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வெளியிடப்பட்ட தென்னாற்காடு மாவட்ட இதழ் (முதல் வெளியீடு 1878)
    இரண்டாம் பதிப்பானது 1906-ல் அ.பிரான்சிஸ் தென்னாற்காடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வெளியிடப்பட்ட தென்னாற்காடு மாவட்ட அரசு ஆணை பக்கம் 316, 317-ல் வெளியானது.
     
                      பார்வதிபுரம் மேற்படி இவ்வூரானது விருத்தாசலம் நெடுஞ்சாலையில் கடலூரிலிருந்து தென்மேற்கில் 23 மைலில் அமைந்துள்ளது சுமார் 1189 மக்களைக் கொண்டது (அப்போதையமக்கட்தொகை) மேற்படி இவ்வூனரானது இராமலிங்க சுவாமிகளுக்குத் தொடர்புடையதாகும்.
    இவர் தற்கால அருளாளர்கள் வரிசையில் ஓர் அற்புதமான முன்னோடியாவார் மேலும் அருடைய அடியவர்கள் (அபிமானிகள்) அவரைக்கடவுளாக மதித்தார்கள்
     
                        இவர் சிதம்பரம் தாலுக்கா மருதூரில் 1823ல் வேளாளர் குடும்பத்தில் பிறந்து எளிய சூழ்நிலையில் வாழ்ந்தார் அவர் சிறுவயதிலேயே பாடல்களை இயற்றக்கூடிய அற்புதமான ஆற்றலைப் பெற்றிருந்தார் அவருடைய பாடல்களே அவரைப் பிரசித்திப் பெற்றவராய்
    வெளிக்காட்டியது அப்பாடல்கள் அனைத்தும் அருள் நெறியை போதிப்பனவாகவே இருந்தன. ஒருசிலப் பாடல்கள் பண்டைய சைவ சமய அருளாளர்களால்
    ‘பிரசித்தமாகப் பாடப்பட்ட (தேவாரம் திருவாசகம் போன்றவை) சைவத்தலங்களாகிய சென்னைக்கு அருகிலுள்ள திருத்தணி, திருவொற்றியூர் முதலியவற்றில் கோயில் கொண்டிருக்கும் தெய்வங்களின் அருட்புகழைப் பற்றியதாகும் இன்னும் மற்ற பாடல்கள் மேலான அருளனுபவ வாழ்க்கையின் விளக்கங்களைக் கொண்டனவாகும் இப்பாடல்களே அவரைக் காலப்போக்கில் அருளியல் வழிகாட்டியாகவும் அருட்குருவாகவும் கருதும்படிச் செய்தன, அவர் தெற்கிலுள்ள பிரசித்தமான பல திருத்தளங்களைத் தரிசித்து வழிபட்டபின் பார்வதிபுரத்திற்கு அருகிலுள்ள கருங்குழியில் நிரந்தரமாக உறையத் தொடங்கினார் உண்மையாக இவருடைய செல்வாக்கு உச்ச நிலைக்கு சென்றதற்குச் சான்று அவரைப் போற்றி வாழ்ந்தவர்களும் அவருடைய அடியவர்களும் மேலான தரத்திலிருந்து அரசு உயர்அதிகாரிகளும் அவரை எப்போதும் பிரியாமல் உடன் இருப்பதற்காகவே தங்களுடைய இருப்பிடத்தை அவருடைய நெருங்கிய சமீபத்தில் அமைத்துக்கொண்டனர் என்பதாம். சுமார்1872-ல் பார்வதிபுரம் எனும் வடலூரில் ஓர் அற்புதமான எண் கோணவடிவில் ஞானசபையை மேல் கவிழ்ந்த செப்புத் தகட்டினால் கூடாரம் போன்ற கூரையுடன் அன்பர்களின் முயற்சியால் அமைத்தார். இங்கிருந்து பார்த்தால் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் நான்கு கோபுரங்களும் தெரியும்
    என்பதற்காகவே இவ்விடம் தேர்ந்தெடுக்கபட்டது என்று கூறப்படுகிறது.
    இது ஒர் சாதாரணக் கோயில் அல்ல. ஏனெனில் அதன் வழிபாட்டு முறைகள் வழக்கமான வழிபாட்டு
    முறைக்கு அப்பாற்பட்டது. மேலும் இராமலிங்க சுவாமிகள் தம்முடைய அடியவர்களுக்கு உபதேசித்ததாவது இறந்தவர்கள் திரும்பவும் எழுந்து நம்முடன் இருக்கப்பார்ப்போம் ஆகையால் இறந்தவர்களை எரிக்காமல் சமாதியில் வைக்கவேண்டும் என்றார். இதை மீண்டும் வலியுறுத்தினார் இந்தநம்பிக்கையில் பல பிராமணர்களும் கூட இறந்தவர்களை எரிக்காமல் புதைக்கத் தொடங்கினார்கள் மற்ற கிராமங்களில் இறந்தவர்களை எரிக்காமல் வடலூருக்குக் கொண்டுவந்து சமாதிவைத்தார்கள். இராமலிங்கசுவாமிகள் 1874 மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் உள்ள ஓர் அறையில் திருக்காப்பிட்டுக்கொண்டார். அவ்வறையில் அவர் சிவானுபவ நிஷ்டையில் இருப்பது.
    வழக்கம் அதனால் தன்னுடைய தொண்டர்களை இவ்வறையை கொஞ்சகாலம் திறக்க வேண்டாம்
    என்று கட்டளை இட்டார். அதன் பிறகு அங்கு அவ்வறையில் அவர் காணப்படவில்லை அவர் தன்னுடைய ஆண்டவராகிய அருட்பெருஞ்சோதியுடன் அற்புதமாகக்கலந்துவிட்டார் என்றும்
    பக்குவப்பட்ட காலத்தில் மீண்டும் அன்பர்களுக்கு வெளிப்பட்டு அருள்புரிவார் என்றும் ,
    சொல்லப்படுகிறது. இராமலிங்கசுவாமிகள் அருளாளர்கள் மரபில் திருக்கூட்டத்தலைவர் என்று அவரே உரிமை
    கொண்டாடுவது பற்றிய சிந்தனை எப்படியாயினும் சரியே அவரால் பாடப்பட்டு வெளியிடப்பட்ட பல பாடல்களைப் படித்துணர்ந்து அதன் தரத்தின் உண்மையையறிந்த உயர் நீதியுடைய பெரியோர்கள் பலரும் பொதுவாகவே இவ்வுண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். அன்றியும் இயல்பாகவே , அப்பாடல்கள் மிக உயர்ந்ததரத்திலும் மேலான தன்மையையும் உடையனவாகும், இது மேலும் வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் சரித்திரமானது இனிவருங்கால அருள்நெறி வளர்ச்சிக்கு வழிகாட்டும் என்பது மதிப்புடன் குறிப்பிடத்தக்கதாகும்.
    – இப்படிக்கு
    J.M.கார்ஸ்டின் I.C.S.
    தென்னாற்காடு மாவட்ட ஆட்சித் தலைவர்
    1878-ஆம் ஆண்டு வெளியீடு.

  • உண்மை”அன்னதானம்” எது? வள்ளலார் சொல்லும் “ஜீவகாருண்யம்” எது?. யாருடைய பசியை நீக்குதல் வேண்டும்?

    உண்மை”அன்னதானம்” எது?
    வள்ளலார் சொல்லும்
    “ஜீவகாருண்யம்” எது?.
    யாருடைய பசியை நீக்குதல் வேண்டும்? எவர் பசியை குறித்து யோசிப்பது அவசியமல்ல.
    —- ஏபிஜெ அருள்.
    இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:.

    ‘”…ஆகலில் நாமனைவரும் எந்த வகையிலும் ஆதாரமில்லாத “ஏழைகளுக்கு” பசி நேரிட்டபோது மிகவும் கருணை உள்ளவர்களாகி நம்மால் கூடியமட்டில் அந்தப் பசி என்கின்ற ஆபத்தைப் பொதுவாக நிவர்த்திப்பதற்கு முயற்சி செய்வதே ஆன்ம லாபம் என்று அவசியம் அறிய வேண்டும்.”

    இதை நாம் எல்லாரும் கண்டிப்பாக செய்தல் வேண்டும். நம்மால் கூடியமட்டில் இந்த ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடித்து மற்ற சீவர்களுக்கு ஏற்படுகின்ற இந்த அவத்தையை (பசியை) நீக்குதல் நம் உரிமை மற்றும் அடிப்படை ஒழுக்கம் ஆகும்.
    ஆனால்…….
    நிற்க!
    இந்த பசி என்கிற அவத்தையானது பொதுவாக எல்லா சீவர்களுக்கும் உண்டாகும். அப்படித்தானே.
    ஆனால், யாருடைய பசியை நீக்கினால் போதுமானது என விரிவாக பார்க்கும் போது;.
    19 தலைப்புகளில் வள்ளலார் தெளிவாக விளக்குகிறார்.
    # ‘ஏழைகளுக்கு.”.
    ஏழைகளின் பசியை போக்குவதே ஜீவகாருண்யம் என்கிறார் வள்ளலார்.
    ஏழைகள் தவிர வேறு எவரின் பசியை போக்கலாம் என வள்ளலார் சொல்கிறார்கள் எனப் பார்க்கும் போது;
    # பசியினால் தேகம் பாழகும் தருணத்தில் உள்ளவர்களுக்கு
    # பசியினால் நிலைதடுமாறி உடல் உறுப்புகள் அழியும் தருணத்தில் உள்ளவர்களுக்கு
    # பசியினால் மயக்கம் அடைபவர்களுக்கு 
    # பசியினால் களைந்து உயிரொடுங்கி மூர்ச்சை மூடிய காலத்தும் அயலாரை கேட்பது துணியால் கடவுளை நினைத்து நினைத்து நெருப்பில் படுத்து நித்திரை செய்யத் தொடங்குவாரைப் போல், அடிவயிற்றில் கொடிய பசி வைத்துப் படுக்கத் தொடங்குகின்ற விவேகிகளுக்கு
    # பகற்போதும் போய் விட்டது.பசியும் வருந்துகின்றது.வேறிடங்களில் போக வெட்கம், வாய்திறந்து கேட்க மானம் வலிக்கின்றது. வயிறு எரிகின்றது.உயிரை விடுவதற்கும் உபாயம் தெரியவில்லை. இவ்வுடம்பை ஏன் எடுத்தோம்? என்று மனமும் முகமும் சோர்ந்து, சொல்வதற்கு நாவெழாமல் உற்பாத சொப்பனம் கண்ட ஊமைப்போல் என்று மனம் மறுகுகின்ற மானிகளாகிய ஜீவர்களுக்கு,
    ஆகாரம் கொடுத்து பசியாற்றுவித்தல் அவசியம் என்கிறார் வள்ளலார்.

    ஆக,
    ” ஏழைகளுக்கும்”, 
    மேற்படியாக வருத்தமும், ஆபத்தும் வந்தவர்களுக்கும்,
    மட்டுமே செய்யும் அன்னதானமே “ஜீவகாருண்யம்”.

    இவர்களை தவிர, மற்றவர்கள் அனைவராலும் தங்களுக்கு நேரிட்ட பசியைத் தங்கள் முயற்சியினாலேயே மாற்றிக் கொள்ளத்தக்க வல்லபமுடையவர்கள் ஆதலால் அவர்கள் பசியைக் குறித்து மற்றவர்கள் யோசிப்பது அவசியமல்ல என்கிறார் வள்ளலார். மேற்படியான இவர்களுக்கு பசி நேர்ந்தால் துன்பமுண்டாகுமே என்று இரங்குவது மாத்திரம் அவசியமென்று அறிதல் வேண்டும் எனத் தெளிவாக குறிப்பிட்டு உள்ளார் வள்ளலார்.

    ஆக, பசியை தங்கள் முயற்சியினால் மாற்றிக் கொள்ளத் தக்கவர்களுக்கு, அவர்களின் பசியை தருமச் சாலையில் பசி நிவர்த்திக்க வேண்டிய அவசியமில்லை.

    இது போக, மற்ற உயிர்கள் அதாவது “சத்துவ” ஆகாரத்தால் பசி நிவர்த்தி செய்துக் கொள்ள தக்க மிருகம், பறவை, ஊர்வன,தாவரம் என்கின்ற உயிர்களுக்கு பசி வந்த போது, பசியை நிவர்த்தி செய்தல் வேண்டும்.
    ஆக,
    ஏழைகள் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளவர்களுக்கே அன்னதானமிடுதலே சரியாகும்.
    அங்ஙனம் “மட்டும்” நடைப்பெறுகின்ற தருமச்சாலைக்கு நம்மால் கூடியமட்டில் “பொருள்” முதலிய உதவி செய்தல் அவசியம். இந்த விளக்கம் தெரிந்துக் கொள்வது, நம்மை சுத்த சன்மார்க்க நெறி அறிவதற்கான தகுதியுள்ளவர்களாக ஆக்கிக் கொள்வதற்கே. 
    இங்ஙனம் செய்வது ஜீவகாருண்ய புண்ணியம் என்கிறார் வள்ளலார். இந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் சேர்வதற்கான தகுதி என தெரிதல் வேண்டும்.
    அதாவது, இறை வீட்டின் திறவுகோல்”ஜீவகாருண்யம்” ஆகும். வீட்டை திறந்து உள்ள சென்று செய்யும் அகப்பயிற்சியே சுத்த சன்மார்க்க பயனாகிய “நித்திய வாழ்வை” பெற்றுத்தரும்.
    அந்த ஒழுக்கத்தின் பெயர் “சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” ஆகும்.
    இந்த சுத்த சன்மார்க்க ஒழுக்கமே இறை வீட்டினுள் நாம் செய்யும் தொழிலாகும், கடமையாகும்
    என்கிறார் நம் வள்ளலார். அப்படியெனில் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்றால் என்ன? 
    பக்கம் 410ல் வள்ளலார் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்கள்;
    ‘ இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் “தலைவனையே” தொழுவீர்கள்’ இதுவே நம் தொழில் எனவும் குறிப்பிடுகிறார் நம் வள்ளலார்.
    ஆக, அன்பர்களே!
    (புறத்தில்)
    நம் அன்னதானப்பணி தரும சாலையில் “நம்மால் கூடிய மட்டில்” அதுவும், நம் வள்ளலார் “குறிப்பிட்டுள்ளவர்களின்” பசியை நீக்குவோம்,
    அடுத்து, 
    (அகத்தில்)
    நம் ஞான சபையில் (நம்முள்),
    நம் வள்ளலார் குறிப்பிட்டுள்ள படி ஒரே தலைவனாகிய உண்மைக் கடவுளை மட்டும் கருத்தில் கருதி தொழுவோம்.
    இதுவே வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்க தனி நெறி.
    —–என்றும் அன்புடன் ஏ.பி.ஜெ.அருள்.

  • சுத்த சன்மார்க்க பாடமும் -பயிற்சியும்

    அனைவருக்கும் வணக்கம்.நான் ஏபிஜெ அருள். பாடசாலையில் விசாரம் செய்யப் போவது மிக்க மகிழ்ச்சி தருகிறது. நமது விசாரம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி அடிப்படையிலே மட்டுமே. வள்ளலாரின் துணை இருந்து அய்யா அறிவிக்க உண்மை கடவுளை உள்ளபடி அறிவோம்.

    நன்றி.

    அன்புடன் ஏபிஜெ அருள்.

    பாடசாலையில் தெரிந்துக் கொள்ள வேண்டியவை நான்கு.

    (1)1) 22-10-1873 அன்று வள்ளலார் சொன்னது:உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. விசாரம் ::: இங்கு வள்ளலார் சொல்லிய உண்மை என்ன?

    (2)30-01-1874 வள்ளலார் சொன்னது;” இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்துக் கொள்ளவில்லை..”விசாரம் ; இங்கு வள்ளலார் சொல்லிய ஒழுக்கம் எது?

    (3)கொடி ஏற்றி ஆற்றிய உரையில்ஐப்பசி 7; 22/10/1873;என்னை ஏறாநிலைமிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. அந்த தேர்வுக்கு ஒருமை வரவேண்டும். தயவு வந்ததால் தான் பெரிய நிலைமேல் ஏறாலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது.விசாரம் ::; இங்கு வள்ளலார் குறிப்பிடும் ” ஒருமை” என்பது என்ன?

    (4)வள்ளலார் சொல்கிறார்கள்::”எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இது இருக்கின்றது.விசாரம்::வள்ளலாரின் அந்த தீவிர விருப்ப முயற்சியாக இருந்தது எது?இந்த விவசாரத்தை எடுத்துக் கொள்வோம்.தொடரும்… அன்புடன் ஏபிஜெ அருள்.

  • வள்ளலார் பயணித்த வழி இதுவே.ஆம். “தயவு” தயவே. தயவால் மட்டுமே. “தயவு” என்றால் என்ன?வள்ளலார் சொல்கிறார்கள்

    வள்ளலார் பயணித்த வழி இதுவே.ஆம். “தயவு” தயவே. தயவால் மட்டுமே. “தயவு” என்றால் என்ன?வள்ளலார் சொல்கிறார்கள்:-

    சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், .”எல்லா ஜீவர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை.”இங்கு “எல்லா ஜீவர்களிடத்தும் தயவும்” என உள்ளது. இதன் அர்த்தம்;எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளும் குணம் என்கிறார் வள்ளலார். இந்த உணர்வு நம்மிடம் இருவகையில் காரியப்படுவதாக வள்ளலார் சொல்கிறார்கள்.நம் சத்தியினளவு உயிர்க்கு உபகரித்தல் அல்லது ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவமாயிருத்தல்.மேற்படி செய்யக்கூடிய இரண்டில்முதலாவது புறம் இரண்டாவது அகம்.வள்ளலார் பயணித்த வழி இதுவே.வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் நாம் செய்யக் கூடிய பயிற்சியும் சாதனமும் இதுவே.

    புறத்தில் சாதனம்;தன் சத்தியினளவு உயிர்க்கு உபகரித்தல்.

    அகத்தில் சாதனம்;ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவமாயிருத்தல்.(இதுவே நாம் செய்யக் கூடிய ஜீவத்தயவு என்கிறார்).

    ஆக,ஒன்று (புறத்தில்),ஆன்மாக்களுக்கு  உபகரித்தல் அல்லது (நேராத பட்சத்தில்)  பிரார்த்தித்தல்.அல்லதுஇரண்டு (அகத்தில்)விசாரம் செய்தல். எப்படி எனில்;”..கடவுளினது புகழையும் ஆன்மாவின் தரத்தையும் நமது சிறுமையையும் கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து, நமது குறையெல்லாம் கடவுளின் திருவடியில் விண்ணப்பிப்பது…”இதுவே வள்ளலார் பயணித்த வழி.நிற்க!(மிக முக்கியம் இந்த இடம்)

    இது வள்ளலார் கண்ட தனி வழி என்று எப்படி ஆகும்?

    வள்ளலார் காலத்து முன்பே இந்த (தயவு) சாதனம் ஞானிகளிடத்தில் இருந்ததே. இந்த தயவு சாதனத்தால் நான் சாகாவரம் பெற்றேன். எனக்கு முன் எவரும் இந்த பேரின்ப வாழ்வு பெறவில்லை என்று வள்ளலார் எப்படி சொல்ல முடியும்??வள்ளலார் மற்ற மார்க்கங்களை பற்றியும் தனக்கு முன் ஞானிகள், யோகிகள், தேவர்கள், தலைவர்கள் பற்றியும் சொன்னதை பார்ப்போம்.முன் மார்க்கங்கள் முக்தி,சாமாதி பற்றி வியம்புகிறது. அதன் படியே அந்தளவே சித்திகள் (பலன்கள்) பெற்றனர். பூரண சித்தியாம் மரணம் தவிர்த்து பேரின்ப பெருவாழ்வில் எவரும் வாழவில்லை. அங்ஙனம்வாழ முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை, ஆசைப்படவும் இல்லை. ஆசைப்பட்டியிருந்தாலும் அதற்கான வழி அவர்களின் சமயம் மதம் சொல்லவில்லை. அவர்களில் சிலர் முயற்சியால் நீடுழி வாழ்ந்தனர் ஆனால் இறுதியில் சமாதி அடையவே செய்தனர். ஆக, முக்தியே முன் மார்க்கங்களில் பயனாக இருந்தது. இந்த அளவு பயனுக்கே சிந்திக்க வைத்தது சமயமத மார்க்கங்கள். இதுவே கடவுள் அருளாகப் பார்க்கப்பட்டது.நிற்க!அது எப்படி? எந்த சாதனத்தால் (அதாவது ‘ தயவு ‘ ) வள்ளலார் யாரும் பெறாத சாகாநிலை பெற்றாரோ அந்த தயவு சாதனம் மற்ற ஞானிகளும் பெற்றியிருந்தார்கள், அப்படியிருக்க, “நானே பெற்றேன்” எப்படி இந்த கூற்று..??எப்படி வள்ளலாரின் வழி, புதிய/தனி/பொதூ/சிறப்பு/உண்மைவழியாகும்?அன்பர்களே!வள்ளலார் எடுத்துக் கொண்ட வழி ஒரு புதிய வழியே? அதுவே தனி வழி பொது வழி சுத்த சன்மார்க்க வழியாகும். பார்ப்போம்.வள்ளலார் எடுத்துக் கொண்ட”தயவு” தயவு மட்டுமே. இங்கு “மட்டுமே” என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் வள்ளலாருக்கு முன்பு தயவு சாதனத்துடன் ஆசாரங்கள் சேர்ந்திருந்தது. வள்ளலாரின்”தயவில்”  எந்தவொரு ஆசாரமும் சேர்ந்திருக்கவில்லை. அதே நேரத்தில் வள்ளலார் கொண்டிருந்த “ஆசை” போல் எவரும் கொண்டிருக்கவில்லை. அதாவது மரணத்தை தவிர்த்துக் கொள்ளுதல். இதற்கு எவரும் முன் வரவில்லை காரணம் அவர்கள் பற்றுக் கொண்டிருந்த சமயமதமார்க்கங்கள் “மரணம்” உண்டு, சொர்க்கம் நரகம் இவையில் விசாரம் வைக்கப்பட்டது. இந்நிலையில் தன் ஆசையை நிறைவேற்ற வழி வகை இல்லாத சமய மதத்தை கை விட்டார் வள்ளலார். கைவிட்ட வள்ளலார் உண்மை கடவுளை காண லட்சியம் கொண்டார். உண்மை கடவுளை கண்டு தன் அதிதீவிர விருப்பமான மரணம் தவிர்த்து பேரின்ப பெருவாழ்வில் வாழ சாகாவரம் கேட்க ஆசைக் கொண்டார்.ஆனால் அதற்கான வழி….???இறைவனிடமே வேண்டினார்.எங்ஙனம்??உண்மை கடவுள் ஒருவரே உண்டென்றும், அக் கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிப்பட்டார்.நிற்க! கடவுள் இவரே என கருத்தில் கொள்ளாமல் “ஓர் உண்மை கடவுள் உண்டென்றும்..” என்று மட்டும் தான் கருத்தில் கொண்டு  வழிப்பட்டார் வள்ளலார்.மற்றொன்று,இந்த வழிப்பாட்டில் எந்தவொரு ஆசாரமும் இல்லை.அதாவது;கடவுளே!தங்கள் உண்மை நிலையை நீங்களே என் அறிவில் விரித்து, உள்ளத்தில் சொரூபம் காட்டி,  எனக்கு அருள் பாலித்து சாகா வரம் தர வேண்டும் என விண்ணப்பித்தார்.

    ஆக,எவராலும், எவ்வகை சாதனம் கொண்டு எவ்வளவு முயன்றாலும் கடவுளின் முழு உண்மையை இப்பிறவிலேயே, இப்பிறவியில் நாம் பெற்றிருக்கும் அறிவால், அறிந்து அனுபவிக்க முடியாது என்று  தெரியப்படுத்திய சமயமத மார்க்கங்களையும்,பயனில்லாத ஆசாரங்களையும் கைவிட்டு விட்டு மேலும், தன்னிடம் இருந்த மற்ற உலக ஆசாரங்களையும்  கைவிட்டு விட்டு,  தயவு மட்டுமே சாதனமாக கொண்டு, உண்மை அறிவால் விசாரம் செய்து, உண்மை அன்பால்  இப்பிறவிலேயே ஆண்டவரின் சொரூபம் காணவும், நித்திய வாழ்வை பெறவும்நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து கண்ணீர் விட்டு அழுதார்.அழுதார்.. அழுதார்.. அழுதார் கண்டார் உண்மை கடவுளின் சொரூபத்தை.உண்மை அனைத்தும் கடவுளால் விளக்கப்பட்டது.தான் பெற்ற இப்பேறு உயிர்கள் எல்லாம் பெற வேண்டும் என கடவுளிடத்தில் வேண்டினார்.நித்திய வஸ்துவாகிய அந்த ஒருவராகிய கடவுளிடத்தில் உள்ள தயவு வள்ளலாரிடம் வந்தது அறிந்த ஆண்டவர், அவர் நித்திய வாழ்வை பெற சாகாவரம் அருளினார்.

    இதுவே வள்ளலார் பயணித்த வழி. இவ்வழியே சுத்த சன்மார்க்கம் என்கிறார்.எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது சுத்த சன்மார்க்கம் என்கிறார் வள்ளலார்.நன்றி ஏபிஜெ அருள், கருணை சபை சாலை.

  • சுத்த சன்மார்க்கத்தில் “கடவுள்”

    உலகில் உள்ள அனைத்து மார்க்கங்களும் வெவ்வேறு, ஒன்றுபடாத, கடவுள் குறித்த நெறியை கொண்டு உள்ளது. அதில் நம்பிக்கை உள்ளவர்கள் இதில் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். (Vice-versa).
    19 ம் நூற்றாண்டில் வள்ளலார் இரக்கம் விட்டு (இரக்கம் மட்டுமே கொண்டு), கடவுள் உண்மை வெளிப்பட வேண்டி, உள்ளழுந்தி
    ஒரு புதிய வழியில் (வழி என்றால் மார்க்கம்) கண்ணீர் கால்வழி ஓடும் அளவு, நினைந்து, உணர்ந்து, நெகிழுந்து துதித்து, இடைவிடாது முயற்சி செய்தார்கள். 
    __ என் தனி வழியில்,
    கடவுளை கடவுள் உண்மையை கடவுள் சொரூபத்தை உள்ளபடி உணர்ந்தேன் என்கிறார். __
    அகத்தும் புறத்தும் எங்கும் பரிபூரணமாக விளங்கும் ஆண்டவரை, 
    அகத்திலே, சிற்சபையிலே, திருச்சிற்றம்பலத்திலே, உள்ளத்திலே உணர்ந்தேன் என்கிறார் வள்ளலார்.
    இந்த “அக அனுபவமே” வள்ளலார் பெற்ற “கடவுள் உண்மை”. 
    இந்த உண்மை சொரூபம் சமயமதங்களில் சொல்லப்பட்டவை அல்ல. ஆனால் சமயசாதத்திர புராணங்களில் சொல்லப்பட்ட அந்த கடவுள் கர்த்தர் தேவர் யோகி ஞானி இவர்கள் எதிர்பார்த்துக் கொண்டியிருந்த தனிப்பதியை தான் கண்டேன் என்கிறார் வள்ளலார்.
    இங்ஙனம் ஒவ்வொருவரும் அவரவர் உள் விளங்குகின்ற சிற்சபையில் அமர்ந்து இருக்கின்ற ஆண்டவரின் அருட்சோதி கண்டு களிப்படையலாம் என்கிறார். அருட் ஜோதி தெரியவிடாது மறைக்கும் திரைகளை சத்திய ஞான சபையில் காட்டி விளக்கம் தருகிறார். இது சத்தியம் என்று வெளிப்படுத்தி தன் வழிக்கு ” சுத்த சன்மார்க்கம்” என்று பெயரிட்டு அழைக்கிறார் வள்ளலார்.
    ஆக, கடவுளுக்கான 
    புற வழிபாடு, 
    புறத்திலே கடவுள் நிலையம், புறத்தில் விளங்குபவை மூலம் கடவுளை காணல் இங்கு கிடையாது.
    மொத்தத்தில் ,
    உபாசனை மார்க்கமாய் வழிபடுவது சுத்த சன்மார்க்க கொள்கை அல்ல என்கிறார் வள்ளலார்.
    ஆம், இங்கு தனித்தலைவன் லட்சியமே கொள்கை. 
    (உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற்குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை – காரணம் கடவுள் ஒருவரே! ஒன்றெனும் ஒன்று. ஆனால் “உபாசனை” கொள்கை அல்ல. இங்கு கொள்கை அழியா உரு பெறுதலே. ஆக, உபாசனை வழிபாட்டால் சாகா வரம் பெறமுடியாது.)
    # சத்திய அறிவால் அறியப்படும் கடவுள் ஒருவரே.
    # கடவுள் இல்லை எனச் சொல்வோர் நாக்கு முட நாக்கு.
    # எங்கும் பரிபூரணமாக விளங்கும் ஆண்டவரை அக சபையிலே கருணயால் உணர்ந்து கண்டு களிப்பதே சுத்த சன்மார்க்கம்.
    # கடவுள் அருள் என்பது அழிவிலா உருவை (சாகா வரம்) பெறுவதே.
    அப்படி எனில்,
    புறத்திலே வள்ளலார் கட்டிய சத்திய ஞான சபையின் வழிபாடு…??
    தனக்கு அகத்திலே கிடைத்த அற்புத
    # அறிவு, 
    # குணங்கள்,
    # கேள்விகள்
    # செயல்கள்
    # காட்சிகள்
    # அனுபவங்கள்
    இவை அனைத்தும்,
    நாமும் பெற( இது தான் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை) தான் சென்ற வழியை அங்ஙனமே நமக்கு உரைக்கிறார் வள்ளலார். 
    எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது தன் வழி( சுத்த சன்மார்க்கம்) என்கிறார்.
    இந்த உண்மையை (அகத்திலே உள்ளத்திலே கடவுளை உணரும் உண்மை) புறத்திலே விளக்கம் செய்விக்க கடவுள் சம்மதத்தால், இயற்றுவிக்கப்பட்ட சபையே சத்திய ஞான சபை. இங்கு, வள்ளலார்க்குள் வெளிப்பட்ட பெருங்களிப்பை நாமும் பெற, அதற்காக நம்மிடம்,
    தான் பின்பற்றிய வழி குறித்து, செய்த நன்முயற்சி குறித்து, மேற்படியால் பெற்ற சத்திய அறிவால் அறிந்த கடவுள் உண்மையை, அக்கடவுளை கண்டு செய்த அன்பை, இவை குறித்து நமக்கு விளக்கம் செய்வித்து, சத்திய ஞான சபையில் காட்டினார். இவ்விளக்கம் பெற்று தென்திசை நோக்கி, கடவுள் உண்மை வெளிப்பட, உள்ளழுந்தி நல்ல விசாரம் செய்ய வேண்டும்.
    அப்படி எனில் புறத்தில் நாம் என்ன செய்தல் கூடும், என்றால்,
    புறத்தில் நாம் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் உணர்வை வருவிக்கும் பயிற்சி. தயவு என்ற தகுதி.
    அதாவது;
    புறத்தில்
    “எல்லா உயிர்களிடத்தும் தயவும்”
    அகத்தில்
    “ஆண்டவரிடத்தில் அன்பும்”
    இந்த இரு சத்திய வாக்கியங்கள் “கருணை” என்றழைக்கிறார் வள்ளலார்.
    இந்த “கருணை” ஒன்றே சாதனம் என்கிறார் வள்ளலார்.
    எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்கும் இந்த
    தனி நெறியை
    காட்டும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்” புதிய மார்க்கமே”.
    இந்த புதிய மார்க்க வழியில் நாம் இடைவிடாது முயற்சி செய்வோம்.எலோரிடமும் தெரியப்படுத்துவோம். நம் பணியில் மேதகு அரசு, நம் தெய்வ நிலைய அதிகாரிகளும் ஈடுபட வேணுமாய் வேண்டியும், எல்லோருடன் ஒற்றுமையுடன், நம் மார்க்க லட்சியமாகிய ஆன்ம நேயத்துடன் பயணிப்போம்.
    (மேதகு அரசு, மதிப்பிற்குரிய அதிகாரிகள் இவர்கள் அனுமதிக்கப்பட்டவர்களே. 


    ஆதாரம்:

    வள்ளலார் July 1872 ல் வகுத்த விதியில் குறிப்பிட்டுள்ளது “ஆஸ்தான காவல் உத்தரவாதியாய் இருக்கின்றவர் கையில் (சாவியை) ஒப்புவித்தல் வேண்டும் என்கிறார் நம் வள்ளலார். இப்போது மக்களின் காவல், அரசே). நன்றி.

  • Watch “ஏன்?எதற்கு? தனி நெறி புதிய மார்க்கம் என வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்தை அறிவிக்க வேண்டும்? apj arul” on YouTube

    Published on Apr 27, 2019
  • “வள்ளலார்” வழக்கில்மேதகு உயர்நீதிமன்றம் உத்தரவு

    “வள்ளலார்” வழக்கில்மேதகு உயர்நீதிமன்றம் உத்தரவு.மதுரை கருணை சபை சாலை நிறுவநர் திருமதி இராமலெட்சுமி இளங்கோ @ ஏபிஜெ அருள் அவர்கள் தொடர்ந்த ” வள்ளலார் தனி நெறி” வழக்கில் மேதகு உயர்நீதிமன்றம், மதுரை கிளை, மாண்புமிகு நீதியரசர்கள் திரு என்.கிருபாகரன், திரு எஸ்.எஸ்.சுந்தர் , அமர்வு, சிறப்பான உத்தரவு ஒன்றை 23/04/19 அன்று பிறப்பிப்பித்துள்ளது

    .:::வழக்கு விபரம்:::

    வள்ளலார் அவர்களால் 19ம் நூற்றாண்டில் சாதி,சமய, மத,மார்க்கங்களை கடந்து, ஒரு தனி நெறியை, புதிய மார்க்கம் ஒன்றை கண்டு வெளிப்படுத்தினார்கள். அவர் கண்ட “சுத்த சன்மார்க்கம்”  எல்லா சமயங்களும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது. இந்நிலையில் மேதகு மாநில மத்திய அரசுகள் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தை தனி நெறி புதிய மார்க்கம் என விளம்புகை செய்வதற்கு பரிசீலித்து பரிந்துரைக்க இணை ஆணையர்,ஆணையர், அரசு செயலாளர், (HR&CE) இவர்களுக்கு உத்திரவிட வேண்டும் என்பதே.
    :::மேதகு உயர்நீதிமன்றம் தீர்ப்பு:::
    ” வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற இரக்க உணர்வு உடையவர் வள்ளலார். ஆரம்பத்தில் சமயத்தில் இருந்தாலும், பின்பு அவராலே காணப்பட்ட  வேறுப்பட்ட நெறியில் சென்றார். அவர் உடல் ஒளியுடம்பாகியது என்பது நம்பிக்கையாக உள்ளது. இதன் நெறி அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் வடலூரில் “தைப்பூசம்” கொண்டாடப்படுகிறது. எனவே வழக்கின் விண்ணப்பதாரரின் கோரிக்கையை சட்டச்சரத்துக்கள் அடிப்படையில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தவிடப்படுகிறது. 
    எனது வழக்கில்,  திரு எம். புருசோத்மன்,  திரு கண்ணன் வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.(இந்த மகத்தான உத்தரவால், இனி சுத்த சன்மார்க்க காலம் ஏற்பட, நமது நிலைய நிர்வாக அதிகாரிகள், உரிய ஆணையை அரசுகள் பிறப்பிக்க, பரிந்துரைப்பார்கள் என்பதில் முழுநம்பிக்கை நமக்கு உள்ளது.)நன்றி.

    அன்பர்களே!
     வள்ளலாரின்சுத்தசன்மார்க்க உண்மை தெரியாது பல வருடங்களாக அவர்தம் நிலையங்களில் அவரால் கைவிடப்படச் சொன்ன சடங்குகளால்வழிபாடுகள் அனுமதிக்கப்பட்டு வந்தது. அன்பர்களால் பல வழக்கிட்டு அவைகள் தடுக்கப்பட்டு, இன்று வள்ளலாரால் வகுக்கப்பட்ட விதிப்படி சத்திய ஞான சபையில் வழிபாடு நடைபெறுகிறது. இணை ஆணையர் உத்தரவுகள் பல இருந்தும், இன்னும் சில முரண்பாடுகள் இருக்கின்றன. பலரால் வள்ளலாரின் கொள்கை பலவாறு திரிக்கப்பட்டு வெளிப்படுத்தப் படுகிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு, வள்ளலாரின் நெறி, உண்மை பொது நெறி என்றும், சுத்த சன்மார்க்கம், வள்ளலார் 19 ம் நூற்றாண்டில் கண்ட புதிய பொது மார்க்கம் என்றும் சட்டபடி அங்கீகாரம் கிடைத்தால் தான், உலகத்தார்கள் உள்ளது உள்ளபடியாக தெரிந்திடவும், சாகா கல்வி குறித்த நல்ல விசாரணையும் உலகில் விரைந்து வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.அன்பர்கள் எல்லோரின் ஆதரவை இதற்கு கொடுத்து,சுத்த சன்மார்க்கம் என்ற புதிய உண்மை பொது நெறியை உலகத்தார்களிடம் விரைந்து வெளிப்படுத்துவோம்.சாதி சமயம் மதம் காணா வள்ளலார் வழியில்,நாம் அனைவரும் நன்முயற்சியில் கடவுள் அருளால் மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவத்தைகள் நீக்கி மரணமில்லா பெருவாழ்வை பெறுவோம். இது சத்தியம்.

    நன்றி: ஏபிஜெ அருள் அவர்கள்

  • சமூகப் புரட்சி செய்த ஞானி

    https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2018/10/05125642/Social-revolution.vpf

    தினத்தந்தி நாளிதழ்

    சிறப்புக் கட்டுரை

    சமூகப் புரட்சி செய்த ஞானி [Social Revolution]

    இன்று(அக்டோபர் 5-ந்தேதி) வடலூர் ராமலிங்க வள்ளலார் பிறந்த நாள்.

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகில் இருக்கும் மருதூரில் அக்டோபர் 5-ந் தேதி ராமையாப்பிள்ளை, சின்னம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ராமலிங்கம். எட்டாவது மாதத்திலேயே தந்தையார் காலமானார். ஐந்து குழந்தைகளை காப்பாற்றி வளர்க்க வேண்டி தனது சொந்த ஊர் பொன்னேரி அருகில் சின்னகாவணத்திற்கு ஐந்து குழந்தைகளை அழைத்து சென்ற சின்னம்மையார் அங்கிருந்து சென்னை ஏழு கிணறு வந்து தங்கினர். பின்பு தாயாரையும் இழந்த ராமலிங்கம் தனது அண்ணன் சபாபதிப்பிள்ளை பராமரிப்பில் வளர்ந்தார். சென்னை கந்த கோட்டம், திருவெற்றியூர் கோயில் எனச் சென்று தெய்வங்கள் மீது ஸ்தோத்திரப்பாடல்கள் பாடி மகிழ்ந்தார். இந்த ராமலிங்கம் பின்னாளில் வள்ளலார் என மக்களால் அழைக்கப்பட்டார். தெய்வத்தின் மீது அவரால் பல ஸ்தோத்திரங்கள் பாடப்பட்டன. இறைவன் அருள் பெற கருணை ஒன்றே போதுமான சாதனம் என்றார்.

    வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற அவரின் பாடல் வரியில் அவரின் உண்மை இரக்கத்தை காணலாம்.தனது 35-வது வயதில் வடலூர் கருங்குழி வந்து தங்கலானார். அங்கிருந்து அடிக்கடி சிதம்பரம் சென்று வழிபாடு செய்து வந்தார். தான் உண்மை கடவுளை கண்டு தரிசித்தேன் அக்கடவுள் அருளால் மரணத்தை தவிர்த்து தனி வடிவம் ஒளி தேகத்தை பெற்றேன் என அறிவிக்கிறார் வள்ளலார். 1874 ஜனவரி 30-ந் தேதி வடலூர் மேட்டுக்குப்பத்தில் ஒரு அறையினுள் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார் வள்ளலார். தான் பெற்ற ஒளி தேகம் போல் எல்லோரும் பெறலாம் என்கிறார்.அதற்கு கருணை ஒன்றே சாதனம் மற்றும் அக்கருணை நம்மிடம் விருத்தியாகமல் தடை செய்யும் சாதி சமய ஆச்சாரங்களை விட்டு ஒழியுங்கள். சமய மதங்களில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார் வள்ளலார். முடிவான இந்த கொள்கையை “சுத்த சன்மார்க்கம்” எனப்பெயரிடுகிறார் வள்ளலார்.
    திருவருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இவர் சமூகம், அறிவியல், ஆன்மீகத்தில் புரட்சியை கண்ட ஞானி ஆவார்.சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் நிறைந்திருந்த 19ம் நூற்றாண்டில் வள்ளலார் பல சமூக சீர்த்திருத்தங்களை செய்தவர். பெண்களுக்கு கல்வி, ஆண்பெண் சமத்துவம், முதியோர் கல்வி, விதவை சடங்குகளை மறுத்தல், கருணை இல்லா ஆட்சியை கண்டித்தல் உள்பட பல சமூகப் புரட்சியை செய்தவர் வள்ளலார்.ஆணும் பெண்ணும் வேறுபாடில்லா உயிர்களே என்பதை தனது திருஅகவல் மூலம் விளக்குகிறார் வள்ளலார்.


    பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்
    அண்ணுற வகுத்த அருட்பெரும் ஜோதி!”


    மேலும்,


    “பாடக்கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்கப்
    பயன்பெற நல் அருள் அளித்தபரம் பரனே!”
    “..கைமையைத் தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே!”


    பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் கற்பிக்க வேண்டும். பெண்களும் உண்மைகளை தெரிந்துக்கொண்டு உண்மைக் கடவுளை வழிபாடு செய்தல் வேண்டும் என்றவர் வள்ளலார். சமூகம், சமயத்தில் உண்மை புரட்சி கண்ட வள்ளலார் தமிழ் மொழியை இயற்கை உண்மை சிறப்பியல் மொழியாகும்.தமிழ் மொழியில் இயற்கை பற்றியும் கடவுளின் நிலையறிவதும் எளிதாக உள்ளது என்கிறார்.
    அறிவியலில் வள்ளலார் வெளிப்படுத்திய செய்தி மிகவும் பெரிய விசயமாகப் பார்க்கப்படுகிறது. அது இன்றைய விஞ்ஞான முடிவுக்கு மாறாக அண்டம் முடிவாகும் ஒன்றல்ல அது விரிந்து கொண்டே இருக்கிறது என்றவர்.கடவுள் அருளால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவஸ்தைகளை நீக்கிக் கொண்டு நம் தேகத்தை ஒளி உடம்பாக மாற்றிக் கொள்ளலாம் என்கிறார். என் மார்க்கம் இறப்பையொழிக்கும் மார்க்கம். என் மார்க்கத்தில் சாகாக்கல்வியை தவிர வேறு ஒன்றுமில்லை என்பது மூலம் அதாவது மனிதர் மரணமின்றி வாழலாம் என்றொரு மிகப்பெரிய ஒரு விசயத்தை உலகத்தாருக்கு வெளிப்படுத்துகிறார்.
    வருடம் தோறும் தைப்பூச பெருநாளில் வடலூர் பெருவெளியில் லட்சபோ லட்ச மக்கள் இவர் மேல் நம்பிக்கை கொண்டு ஜோதி தரிசனம் செய்ய வருகிறார்கள்.

    19ம் நூற்றாண்டில் ராமலிங்க அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு புதிய தனி மார்க்கம் சுத்த சன்மார்க்கம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இம்மார்க்க நெறி உலக உயிர்களை பொதுமையில் நோக்க வைக்கிறது. ஒழுக்கத்தை நிரப்பிக் கொள்ள செய்கிறது. உண்மைக் கடவுள் அருளால் மரணத்தையும் தவிர்த்து, மனிதர் கடவுள் அருளால் ஒரு புதிய ஒளி வடிவத்தை பெறலாம் என்கிறது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி. வள்ளலாரின் பிறந்த நாள்நமக்கு இனிய நாளே.
    ,

    ராமலட்சுமி

    வள்ளலார் ஏபிஜே அருள்

    கருணை சபை, மதுரை

  • மனுமுறைகண்ட வாசகம்

    மனுமுறைகண்ட வாசகம் – வள்ளலார் அருளியது

    நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
    வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
    தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
    கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
    மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
    குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
    ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
    தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
    மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
    உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
    களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
    பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
    ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
    வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
    வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
    பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
    இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
    கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
    நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
    கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
    கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
    காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
    கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
    கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
    குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
    குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
    கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
    பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
    பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
    கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ!
    ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
    கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
    அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
    குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ!
    வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
    பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
    பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
    ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
    சிவனடியாரைச் சீறி வைதேனோ!
    தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
    சுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ!
    தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
    தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!

    In English,

    Did I ever wound the feeling of good!
    Did I ever desert a friend in the mid way!
    Did I drag an innocent to the court and spoil his honour!
    Did I ever prevent a philanthropist from offering!
    Did I ever create misery to intimate friends!
    Did I ever enhance the house tax and thereby I looted anyone.
    Did I ever cause the poor people’s belly burn!
    Did I ever punish any person without compassion!
    Did I ever spoil anybody’s life by conspiracy!
    Did I ever aid and abet the murderer!
    Did I ever tell crooked route to the robber!
    Did I ever tell lie for the sake of wealth!
    Did I ever betray anyone after inducing desire!
    Did I ever fence the public to and fro passage!
    Did I ever reduce the wage after getting work done!
    Did I ever remain without looking into the face of hungry people!
    Did I ever say no to the beggars!
    Did I ever disclose the hiding place of an innocent!
    Did I ever indulge in sex with an unchaste woman!
    Did I rape a virgin under guard!
    Did I ever spoil the chastity of a married woman!
    Did I ever cause abortion and be happy!
    Did I ever hesitate to salute preceptors!
    Did I ever forget pay the teacher’s fee!
    Did I ever insult any learned scholar!
    Did I ever find fault in great men’s hymn!
    Did I ever imprison any bird in a cage!
    Did I ever tie up a calf without feeding it!
    Did I ever eat meat for the growth of my body!
    Did I ever sell adulterated food stuff!
    Did I ever do pain to the beloved person!
    Did I ever close tank of a drinking water!
    Did I ever cut down the shady tree!
    Did I ever ruin the field of others out of enmity!
    Did I ever demolish a public inn!
    Did I ever keep the temple door closed!
    Did I ever scold any devotee of shiva!
    Did I ever ridicule any saint doing penance!
    Did I ever insult the genuine sages!
    Did I ever violate the words of my father and mother!
    Did I ever humiliate god out of conceit!
    Did I commit any other sin other than these!
    I don’t know!

  • ஏமாற்றாதே! என்று சொல்வதைவிட ஏமாறாதே! என்று சொல்வதே சரி

    ஏமாற்றாதே! என்று சொல்வதைவிட ஏமாறாதே! என்று சொல்வதே சரி – ஏபிஜெ அருள்.
    ஆம். எவரிடமும் சென்று மக்களை ஏமாற்றாதே! பக்தர்களை ஏமாற்றாதே! என்று சொல்வதில் பலனில்லை. “ஏமாற்றாதே!” என்பதில் வெற்றிக்கு சாத்தியமில்லை என்றே சொல்லலாம். காரணம், ஏமாற்றுபவன் (அரசியலில் மக்களை/ ஆன்மீகத்தில் பக்தர்களை) மக்களை ஏமாற்றி பலன் அடையவேண்டும் என்று தீர்மானித்தே, களத்தில் இறங்குகிறான். ஆனால், ஏமாறுபவன், தான் ஏமாற வேண்டும் என தீர்மானித்து இருக்கவில்லை. திட்டம் தீட்டியவன், காரியத்தை எப்பேற்பட்டாவது நிறைவேற்றப் பார்ப்பான். ஏமாற்றுபவனிடம் வேகமும் உறுதியும் இருக்கும். 
    பூட்டை தாயாரித்தவன் அறிவாளி என்றால், அறிவாளி தாயாரித்து, பூட்டிய பூட்டை உடைக்கும் திருடன் ….? 
    என் ஆண்டவனால் பெற்றேன் பதவியும் பணமும் ஆரோக்கியமும் எனும் ஆன்மீக நம்பிக்கையில் நாம், ஆனால், 
    மற்ற சமயமத நம்பிக்கை உள்ளவர்களும் இதே போல் பதவியும்,பணமும், ஆரோக்கியமும் பெற்றியிருப்பதை குறித்து… ???
    ஏன், கெட்டவனிடம் அதே பதவி,பணம், ஆரோக்கியம் உள்ளதே…??
    (அரசியல் குறித்து இங்கு வேண்டாம்).
    ஆன்மீகத்தில், எத்தனை விதமான ஏமாற்று வேலைகள்?
    ஆம்.
    ஏமாற்றாதே! என்று சொல்வதைவிட ஏமாறாதே! என்று சொல்வதே சரி .
    ஆம். பக்தர்களை ஏமாறாமல் இருக்க வைக்க முடியும். 
    ஏமாற்றும் சாமியார்களை / மார்க்கக்கொள்கையை; 
    திருத்தவோ/மாற்றவோ முடியவே முடியாது.
    ஏமாற்றுபவர்கள் தூங்குவது போல் நடிப்பவர்கள். 
    சுவர் இருந்தா சித்திரம் வரையலாம் அது போல் ஏமாறுபவர்கள் இருந்தா ஏமாற்றலாம்.
    ஆமாம்,….
    நாம் ஏமாற்றுபவர்களா? ஏமாறுபவர்களா?
    இது “ஏமாறுபவர்களுக்கான” கட்டுரை.
    இக்கட்டுரையில் உதாரணத்திற்கு வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தை எடுத்துக் கொள்வோம்.
    ஏமாற்றும் வேலைகள்.. உதாரணத்திற்கு சில.
    # நெற்றிக்கண் பூட்டு திறந்து விடப்படும்.
    # வள்ளலார் பெயரில், மூச்சு பயிற்சி மூலம் சாகா கல்வி.
    # இவரே சுத்த சன்மார்க்க குரு, இவரே வள்ளலாரின் மறு பிறவி என்பது..
    # மார்க்கத்தார்களுக்கு குருவாக இருந்து, கையால் ஆசீர்வதித்தல்
    # ஜீவகாருண்யமே, கொல்லாமையே, சுத்த சன்மார்க்க நெறி எனச் சொல்லுதல்
    # வள்ளலாரின் கொள்கையான “சாகா வரம்” பெற பயிற்சி கொடுத்தல்
    # வள்ளலாரின் திருஅகவலை சமயமத கோயிலில் பாடுதல்.
    என்பவை சிலரால் நடத்தப்படுகிறது என வைத்துக் கொள்வோம்.

    இது சரியா..? சரியில்லையா..?

    சரியில்லை என்றால் ஏமாற்று வேலை. சரியில்லாதவையில், முயற்சி நாம் செய்தால், வள்ளலார் பெற்ற பயனை நாம் பெறமுடியாது.அப்படித்தானே.
    (இங்கு மிகச்சிலரே அபக்குவத்தில் அதாவது ஏமாற்ற வேண்டும் என்பது இல்லாமல் இதே தவறான வேலையை செய்வார்கள்.)
    “பலன்களுக்கு” தான் ஏமாற்றுபவர்கள் ஏமாற்று வேலையில் இறங்கி உள்ளனர்.
    ஏமாறுபவர்களுக்கு, ஏமாற்றுபவர்கள் பெற்ற “பலனில்” பங்கு கிடையாது. ஏனென்றால், ஏமாறுபவனே அப்பலன்களை முழுமையாக கொடுப்பவன்.
    சரி..
    ஏமாறாமல் இருக்க என்ன செய்ய?
    ஒரே வழி,
    “எதை வைத்து ஏமாற்றப்படுகிறோமோ , அதன் உண்மையை நாமே தெரிந்துக் கொள்ள வேண்டும்.”
    மேலே சொன்னவையின் உண்மை தெரிய நாமே லள்ளலாரை/ அவர் கொள்கைப் பற்றி நேரிடையாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.
    இதோ வள்ளலார் சத்திய வாக்கியங்கள்:::
    # ” உள்ளழுந்தி, அதை சிந்தித்து, சிந்தித்தலை விசாரித்தல்..”
    # என் மார்க்கத்தில் “அக அனுபவமே உண்மை.”
    # தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது, இவ்வுலகத்தார் என்னை தெய்வமெனச் சுற்றுகின்றார்கள்.
    # அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அக்ஷர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாஷையாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம் ( பலனின்மை) சுத்த சன்மார்க்கமே சிறந்தது.
    # ஜீவகாருண்யம் இறைவீட்டின் திறவுகோல். (அதாவது ஜீவகாருண்யம், கொல்லாமை, புலால் உண்ணாமை இவை சுத்த சன்மார்க்கத்தில் அடிப்படை தகுதியாக உள்ளது.இவை சமயமத மார்க்கத்திலும் அதன் இயல்பாக உள்ளதாக வள்ளலார் சொல்கிறார்கள்)
    # என்னைப்போல் நீங்களும் ( சமயம், ஆசாரங்களை) விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தை பெறுவீர்கள்..”
    # எனக்கு உண்மையை, ஆண்டவரே
    குருவாக இருந்து தெரிவித்தார். சாகா கல்வி ஆண்டவரே தெரிவித்து, சாகாவரம் அளித்தார்.
    # நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து,
    கண்ணீரால் இரக்கம் விட்டு இறைவன் அருள் கண்டேன்.( வள்ளலார் எவரையும் கைவிரித்து ஆசீர்வதிக்கவும் இல்லை.)
    # சுத்த சன்மார்க்கத்தில் வரும் கடவுள் சமய சாத்திர புராணங்களில் வரும் கடவுளர்,தேவர், அடியார்,யோகி,ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல….”
    # ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்து..
    என மேற்படியாக வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி விளங்குகிறது.
    இப்ப சொல்லுங்க..

    வள்ளலாரின் சுத்த சன்மார்க்கப் பெயரில் குரு நான் என்றும், சாகா கல்வி பயிற்சி, அகவல் கோயிலில் வாசித்தல்,ஜீவகாருண்யம் மட்டுமே சொல்வது, வள்ளலாரை தெய்வமாக்குவது, ஆசாரங்கள் சடங்குகள் செய்வது, இவை எல்லாம்
    சுத்த சன்மார்க்கத்தில் உண்டா..??
    கிடையவே… கிடையாது.
    இனி நாம் ஏமாறமாட்டோம்.
    ஆனால் அந்த ஏமாற்றும் வேலை இருக்கத்தான் செய்யும். ஏமாற்றுபவர்களுக்கு அவத்தைகள் வந்து சேரும். 
    அன்புடன்::
    ஏபிஜெ அருள்.
    கருணை சபை சாலை.
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப் பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி .