Category: tamil katturai APJ arul

கட்டுரைகள் APJ அருள்

  • சித்திரை-1 சுத்த சன்மார்க்க நாள்

    சுத்த சன்மார்க்க ஆண்டு 155

     
     
    சித்திரை-1 சுத்த சன்மார்க்க நாள்
    சுத்த சன்மார்க்க ஆண்டு 155
    *****************************************
    வள்ளலார் தனது மார்க்கத்தை பற்றி குறிப்பிடும் போது;
    “சுத்த சன்மார்க்கம் உண்மை அறியும் அறிவு மார்க்கம்“ என்கிறார்.
    திருவருட் பிரகாச வள்ளலார் தனது மகா பேருபதேசத்தில் (ஜப்பசி 7,1873) உபதேசித்தது;
    “ உண்மை சொல்ல வந்தனனே என்று
    உண்மை சொல்ல புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை.”
    அடுத்து;
    30-12-1874 அன்று, மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில்;
    கடவுள் அருளால் பெற்றிருந்த ஒளி தேகத்தில் வள்ளலார் வெளிப்படும் முந்தின இரவு 12 மணிக்கு தன்னை சூழ்ந்திருந்த மக்களை நோக்கி ;
    “ இதுகாறும் என்னோடு பழகியும் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்துக் கொள்ளவில்லையே …… “ என்கிறார் வள்ளலார்.
    நிற்க!
    ஆக, நாம் இப்போது வள்ளலார் சொன்ன உண்மை என்ன? என்ற கேள்வியை நம்முள் எழுப்பி விடை காண வேண்டும். அப்படித்தானே!
    அந்த உண்மை எதுவெனில்; அது அவர் கண்ட “சமரச சுத்த சன்மார்க்கமே”.
    நிற்க! சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கியத்தடைகளாக சமய மத மார்க்கங்களை அறிவிகிறார் வள்ளலார். அதாவது;
    — சைவம் வைணவம் போன்ற சமயங்களிலும்,
    — வேதாந்தம் சிந்தாந்தம் போன்ற மதங்களிலும்,
    — வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும்,
    லட்சியம் வைக்க வேண்டாம் என உபதேசித்து உள்ளார். உபதேசம் மட்டுமில்லாமல் பாடல்கள், விண்ணப்பங்கள், கடிதங்கள், அறிவிப்புகள் இவை மூலமும் அறிவித்து உள்ளார்கள்.
    முதல் விண்ணப்பத்தில்;
    “ … இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்பங்களும், வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும். “
    ஆக, வள்ளலார் தான் வைத்திருந்த சைவ சமயப் பற்று உட்பட அனைத்து பற்றைகளையும் கைவிட்டு விட்டார், கைவிடச் சொல்கிறார்.
    சைவ சமயத்தில் பற்றுக்கொண்டு பல ஸ்தலங்கள் சென்று, பல நூறு சமய ஸ்தோத்திரப் பாடல்களும் அதே போல், தத்துவங்களை போற்றி உபதேசித்தும், பாடியுள்ளார் வள்ளலார். இங்ஙனம் இருக்க, வள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்க காலத்தை எப்படி அறிய ?
    ஆம், இந்த கேள்வி மிக முக்கியம் ஆகும்.
    திருவருட் பிரகாச வள்ளலார் சில கால குறியீடுகளை தந்துள்ளார்கள்.
     
    சித்திரை முதல் தேதி 1871 அன்று வள்ளலாரின் கடித அறிவிப்பில்;
    ”சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லாம் உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக் காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன் மேலும் அதன் மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும், சாத்திர பேதங்களும், ஜாதி பேதங்களும், ஆசார பேதங்களும் போய், சுத்த சன்மார்க்க பெருநெறியொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது 29 மாதத்திற்கு மேல்.
    இப்போது வருகிற நமது கடவுள் இங்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச்சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.
    இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனிப்தலைமைப் பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னை யடுத்த தாங்களும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள், பெறுகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்”.
     
    -பிரஜோற்பத்தி சித்திரை-1
    ஆம், 12-04-1871 சித்திரை 1 அன்று நம் வள்ளலார் வெளியிட்ட மேற்படி அறிவிப்பு கடிதம் மூலம், அவர் கண்ட புதிய வழியை (மார்க்கத்தை) உலகிற்கு வள்ளலார் வெளிப்படுத்திய நாளாகவே எடுத்துக் கொள்ள முடிகிறது எனலாம்.
    இதிலுள்ள “…29 மாதத்திற்கு மேல் ..” (2 வருடம் மற்றும் 5 மாதங்கள், இதற்கு மேல்) இந்த காலத்தை இங்கிருந்து கூட்டி அதன் மேல் மாதத்தை பார்த்தால் அக்டோபர் 1873 என வருகிறது. வள்ளலார் 1873 ஜப்பசி 7 (22-10-1873) அன்று மகாபேருபதேசம் ஆற்றியுள்ளார்.
    சுத்த சன்மார்க்கத்திற்கென ஒரு தனி கொடியை ஏற்றி, கொடி பாடலையும், மகாமந்திரமும் அருளிய நந்நாள் ஆகும். நிற்க! இந்நாளில் வள்ளலார் ஒரு அளவு குறியீடு சொல்லியுள்ளார். இது நமது இந்த விசாரத்தை உறுதிபடுத்தி, முடித்து வைக்கிறது எனலாம்.
    ஆம், மகாபேருபதேசத்தில் வள்ளலார் சொல்கிறார்கள் ;
    “..இரண்டரை வருசமாக நான் சொல்லிக்கொண்டு வந்தேன். இனி சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டு இருப்பார்கள் ..”
    இந்த 2 ½ வருடத்தை அதாவது 2 வருடம் 6 மாதங்களை இந்த அக்டோபர் 1873 லிருந்து கழித்தால் வரும் மாதம் ஏப்ரல் மாதம் 1871 ஆகும். அது தான் நாம் ஏற்கனவே கண்ட சித்திரை 1. 1871 கடித அறிவிப்பு ஆகும்.
    மேலும், சுத்த சன்மார்க்க தனி நெறியை வெளிப்படுத்திய பின்பு 18-07-1872 அன்று, வள்ளலார் தனது சாலைக்கு “சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலை” என்றும், சபைக்கு “சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை “ என்றும், சங்கத்திற்கு “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்” என்றும் பெயர் மாற்றியதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
    ஆக, வள்ளலார் பல காலங்கள் இடைவிடாது செய்த கருணை நன்முயற்சியில் அருளால அறிவிக்கப்பட்ட உண்மையை (சமரச சுத்த சன்மார்க்கத்தை) வெளி உலகிற்கு வெளிப்படுத்திய நாள் ஒருவாறு சித்திரை 1, 1871 எனலாம். அப்படியெனில்; சுத்த சன்மார்க்க ஆண்டு 155.
    மேலும்,
    சித்திரை-1,1871-க்கு பின்பு, வள்ளலார் ஆற்றி உரைகள், எழுதியவை, பாடியவை, அனைத்தும் அவரின் முடிபான சமரச சுத்த சன்மார்க்கத்தையே வெளிப்படுத்துகிறது. அவையாவன;
     திருஅகவல்
     திருஅட்டகம்
     நான்கு விண்ணப்பங்கள்
     28 பாசுரங்கள் உட்பட 1871 க்கு பின்பு பாடிய பாடல்கள்
     12-04-1871க்கு பின்பு ஆற்றிய உபதேசங்கள்
     12-04-1871 கடிதமும் அதன் பின்பு வெளிவந்த கடிதங்கள், அறிவிப்புகள், கட்டளைகள், விதிகள்
     சத்திய ஞான சபை மற்றும் சபைக்கான விதிகள்
     18-07-1872 அன்று வெளிவந்த அறிக்கை மூலம் சாலை, சங்கம், சபைக்கு பெயர் மாற்றம் செய்கிறார்.
     மகாபேருபதேசம்.
    ஆக, வள்ளலார் தான் கண்ட புதிய வழியை (வழி என்றால் மார்க்கம்) சுத்த சன்மார்க்கத்தை உலகிற்கு வெளிப்படுத்திய நாள் சித்திரை முதல் தேதி (1871). அதனால் சுத்த சனமார்க்க சுத்த சன்மார்க்க தினம் சித்திரை-1 என்றும் சுத்த சன்மார்க்க ஆண்டு 155/2026 என்போம். ஆம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய உண்மை பொது நெறி சுத்த சன்மார்க்கம் என்பதை உலகிற்கு விரைந்து எடுத்துச் சென்று, “கருணை” ஆட்சி பரவி எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்.
    — அருளால் ஆய்வு – APJ அருள் @ நா.இளங்கோ.
  • சுத்த சன்மார்க்கத்தின் மரபுகள் நான்கில் ஒன்று “ மலங்கள் 5-ம் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்.” ஆகும்

    சமயங்களில் குறிப்பிடும் மலங்களின் எண்ணிக்கை மூன்று. சைவ சமயத்தின் படி; சொல்லும் மலங்கள்: ஆணவம், கன்மம், மாயை என மூன்று மலங்கள்.

    சீவக சிந்தாமணி படி ; ஆணவம், மாயேயம், திரோதனம் என மூன்று

    சுத்த சன்மார்க்கத்தின் படி ; 5 மலங்கள் சொல்கிறார் வள்ளலார்.

    ஆணவம், கன்மம், மாயை, மாமாயை, திரோதனம்

    இதுவே இன்றைய விசாரம்.

    பொதுவாக மலம் என்றாலே அஞ்ஞானம், அறியாமை.

    இறைவனின் உண்மை நிலையை அல்லது இயற்கையின் திறங்களை மனிதன் முழுமையாக தெரிந்துக் கொள்ளாது வைக்கும் அஞ்ஞான மற்றும் அறியாமை செயல்களை குறிப்பது மலங்கள் எனலாம்.

    முதலில் ; ஆணவம்.

    ஆணவம் என்பது; செருக்கு, அகங்காரம், நான் என்னும் அபிமானம் எனலாம். மேற்படி ஆணவம் இருந்தால், உண்மையை தெரிந்துக் கொள்ள முடியாது. கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்ற ஒளவையார் கூற்றை நாம் கருத்தில் கொண்டு உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு பணிந்து இருக்க வேண்டும்.

    ஆணவ மலம் இருள் என அழைக்கப்படுகிறது.

    அடுத்து;

    கன்மம்; கன்மம் என்றால் செயல் என்று பொருள்.

    நம் செயலால் ஏற்படுகின்ற வினையை அதாவது விளைவை குறிக்கிறது. ஒருவரின் தீய செயலால் ஏற்படுகின்ற துன்பத்தால் அவன் உண்மை குறித்த விசாரம் தடைப்படும்.

    அடுத்து; மாயை:

    மாயை என்றால்; பொய் தோற்றங்களை நம்பி கெடுதல்; உலகப் போகங்களில் லயித்து துன்பங்கள் வந்து சேருதல், நிலையின்மையில் நம்பிக்கை வைத்து வீண் போதல், மேலும் கற்பனைகள் எல்லாம் மாயை ஆகும்.

    இவை உண்மை குறித்து தெரிந்துக் கொள்ள உதவும் அறிவு விருத்திக்கு தடையாக அமைகின்றன.

    அடுத்து; மாமாயை மலம்;

    மாயை எவை எனக் கண்டோம். மாமாயை என்ற பெரிய மாயைகள் எனப்படும். மாமாயைகள் எனச் சிலவற்றை சுட்டி காட்டப்பட்டுள்ளது.

    எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் இறையொளியை, கருணையால், நம்முள், சத்திய அறிவினில், கண்டு களிக்கும் ஓர் உண்மை வழியை அருளால் நமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், இந்த உண்மை அறிவு வழி தெரிந்துக் கொள்ளாது மாமாயையால் தத்துவ சித்தி விகற்பங்களில் மற்றும் கற்பனைகளில் இருப்பதே மாமாயை என்கிறார் வள்ளலார்.

    ஆனால்,

    இந்த உண்மையை கருத்தில் கொள்ளாமல் பல்வேறு சமயங்களில், அச்சமயங்களில் குறித்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும், தத்துவ சித்தி கற்பனைகள் என்றும், அவ்வச் சமயங்க்களில் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்று உள்ளபடியே அறியாமல் அதில் நம்பிக்கை வைப்பது கூடாது என்கிறார் வள்ளலார்.

    அடுத்து; திரோதனை மலம்;

    அண்டங்கள் உலகங்கள் உயிர்கள் பொருள்கள் மற்றவைகள் தோற்றுவித்தும் விளக்கம் செய்வித்தும் துரிசு நீக்குவித்தும் பலன் தருவித்தும் விளங்கும் அருள் நிலையை அறியா வண்ணம் மறைக்கும் திரைகள் திரோதை சக்திகள் உள்ளன.

    மறைக்கும் திரைகளை அறிவு விசாரத்தால், ஆண்டவரிடத்து அன்பு வைப்பதால் பெறப்படும் அருளால் திரைகளை நீக்கிக் கொள்ளலாம்.

    ஆக, மலங்கள் என்றால் அஞ்ஞானம் அல்லது அறியாமை ஆகும். இதை நீக்க வேண்டுமானால் உண்மை அறிவை பெற வேண்டும். அறிவொளி உண்டானால் இருள் மலங்கள் ஒழியும். சரிதானே.

    ஆனால் மக்களோ, சமய மத மார்க்கங்களில் உபாய வகைகளை நம்புவதால், கன்மம் வினை இவைக்கு பயந்தும், மாமாயைக்கு கட்டுப்பட்டும் உள்ளனர். உருவாக்கப்பட்ட  சாதி மற்றும் சமய ஆசார கட்டுபாட்டுகளில் வீழ்ந்து, சடங்குகளில், கற்பனைகளில் வீண் போகின்றார்கள் என்கின்றார் வள்ளலார். 

    ஆக,

    ஆணவமாகிய நான் என்னும் செருக்கு இல்லாமல், பணிந்து நிற்றல்,

    கன்மம் ஆகிய தீய செயல்கள் செய்யாது, ஒழுக்கம் நிரப்புதல்,

    மாயையாகிய பொய் தோற்றம் மற்றும் நிலையற்ற உலக போகங்களில் லட்சியம் வையாது, உண்மையை விரும்புதல்,

    மாமாயையாகிய சாதி சமய மதங்கள் வேத ஆகமம் புராணக்கலைகள் இவற்றில் எதனிலும் லட்சியம் வையாது, சத்திய அறிவை பெற்று பொது நோக்கம் வருவித்துக் கொள்ளல்,

    திரோதையாகிய திரைகளை கருணை நன்முயற்சியால் விலக்கிக் கொண்டு, இறை சொரூபத்தை உள்ளத்தில் கண்டு நித்திய பேரின்ப வாழ்வை பெறுதல்.

    5 – மலங்களை நம் நன்முயற்சி மற்றும் இறை அருளால் நீக்கிக் கொண்டு, உண்மையை அகத்தில் அறிவைக் கொண்டு அறியச் சொல்லும் சுத்த சன்மார்க்கம் சாருவோம். நன்றி வணக்கம். அருள்.

    Karunai Sabai-Salai

    34, Poombuhar Nagar North Extn.,

    Uthangudi, Madurai-625 107. Tamil Nadu. India.

  • விசாரமே பயிற்சி, பயிற்சியில் திரைகள் விலக வேண்டும்.

    வணக்கம், அன்புடன் ஏபிஜெ அருள்.

    விசாரமே பயிற்சி, பயிற்சியில் திரைகள் விலக வேண்டும்.

    ஆண்டவரே குருவாக இருந்து, வள்ளலாருக்கு தெரிவித்த யோகா: “சுத்த மெய் ஞான யோகா”. உண்மை அறிவால் செய்யப்படுகின்ற மேற்படி யோகா பயிற்சியில், கடவுளின் உண்மை நிலையை அறிந்துக் கொண்டார் வள்ளலார்.

    இந்த யோகா பயிற்சில், வள்ளலார் தனது கருத்தில் கொண்டவை குறித்து இன்று நல்ல விசாரம், அருளால். இதோ;

    • ஓர் உண்மை கடவுள் உண்டென்றும், அக்கடவுளை,
    • உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிப்பட்டார்கள்.

    மேற்படி இரு சத்திய வாக்கியங்களை அறிவால் ஊன்றி,  

    கீழ்வருமாறு கருத்தில் மேலும் விரிவு படுத்த வேண்டும்.

    எல்லா அண்டங்களையும்,

    எல்லா உலகங்களையும்,

    எல்லா உயிர்களையும்,

    எல்லா பொருள்களையும்,

    மற்ற எல்லாவற்றையும்,

    தோற்றுவித்தும்

    விளக்கம் செய்வித்தும்,

    துரிசு நீக்குவித்தும்,

    பக்குவம் வருவித்தும்,

    பலன் தருவித்தும்,

    எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் கடவுளே, உங்கள் திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து,

    எக்காலத்தும்,

    எவ்விடத்தும்,

    எவ்விதத்தும்,

    எவ்வளவும்,

    தடைப்படாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைய அருள வேண்டும்.

    இவ்வாறக அருள் அடைவதற்கு, நமது அறிவில், ஓர் ஞான சபை உணர்ந்து, திருவருள் நடம் செய்கின்ற உணர்ச்சியை பெற்று, விளக்கம் செய்வித்து அருளுமாறு, வழிபாட்டில் இடைவிடாது தலைவனையே தொழ வேண்டும்.

    மேற்படி தொழுகையில்;

    சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுளே!

    தேவரீர், அற்புதத் திருவருள் விளக்கத்தால் எங்களையும் இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி உண்மை அறிவை விளக்கி உண்மை இன்பத்தை அளித்து சமரச சன்மார்க்க நிலையில் வைத்து, சத்திய வாழ்வை அடைவித்து நித்தியர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.

    இதுவே வழிபாடு, வழிபாட்டில் நம் முயற்சி ஆகும்.

    இந்த சுத்த சன்மார்க்க வழியில், வள்ளலாரின் உண்மை அறிவாகிய சத்திய ஞான சபையில், வள்ளலாருக்கு திருவருள் விளக்கம் செய்வித்து அருளப்பட்டது.

    விளக்கத்தில், பெருங்கருணை கடவுளின் திருவுரு காட்சி அருட்பெருஞ்சோதி தரிசனம் கிடைத்து, கண்டு பெருங்களிப்பு அடைந்தார்கள் வள்ளலார். தனது விருப்பமாகிய நித்திய தேகத்திற்கான வரத்தை பெற்று இன்பமடைந்தார் வள்ளலார்..

    தனது இறை அனுபவத்தை பதிவு செய்யும் போது, உண்மை கடவுள் கீழ்வருமாறு விளங்கிக் கொண்டுள்ளதை நமக்கு ஆன்ம நேயத்துடன் சொல்லியுள்ளார் வள்ளலார்:

    இதோ;

    “உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய் ஓங்குகின்றார்”

    இந்த காட்சியை ஒவ்வொருவரின் அகத்திலே, உண்மை அறிவாகிய சபையில் கண்டு தரித்து, அருள் பெறுவதே “பேரருள் அமுதம்” என்கிறார் வள்ளலார்.

    இதோ பாடல்: உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்

                  உலவா ஒருபே ரருளா ரமுதம்

                  தருவாய் இதுவே தருணம் தருணம்

    இதுவே வள்ளலார் கண்ட, சென்ற வழி, சுத்த சன்மார்க்கம். அவரின் உறுதியான வழிபாட்டை பாருங்கள்:

         உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்

         உலவா ஒருபே ரருளா ரமுதம்

         தருவாய் இதுவே தருணம் தருணம்

         தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ

         வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்

         மதிசேர் முடிஎம் பதியே அடியேன்

         குருவாய் முனமே மனமே இடமாக்

         குடிகொண் டவனே அபயம் அபயம்.      

    — நன்றி: பணிவுடன் ஏபிஜெ அருள்.

  • சுத்த சன்மார்க்கமே உயர்ந்தது.

    ஏன்? எப்படி? எதற்கு? – APJ அருள் @ இளங்கோ

    சுத்த சன்மார்க்கமே உயர்ந்தது. ஏன்? எப்படி? எதற்கு? – APJ அருள் @ இளங்கோ

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவருட் பிரகாச வள்ளலாரால் தோற்றுவிக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்கமே உயர்ந்தது. காரணம் இம்மார்க்கத்தின் நோக்கம், பெறுகின்ற பயன், மார்க்கத்தார்களின் விருப்பம், தகுதி, முயற்சி இவை உயர்ந்த தரத்தில் உண்மையாகவுள்ளது. யாதெனில்;

    • உலக அனைத்து உயிர்களுக்கான மார்க்கம்.
    • உலகியலில் பொது நோக்கம் வருவிக்கும் மார்க்கம்.
    • உண்மை அறியும் அறிவு மார்க்கம்.
    • ஆசாரமில்லா ஒழுக்கம் நிரப்பி கொள்ளும் கருணை மார்க்கம்.
    • உண்மை கடவுளை அறிவால் அறிந்துக் கொள்ளும் அனுபவ மார்க்கம்.
    • இயற்கை உண்மை கண்டு இயற்கை விளக்கம் தரிசிக்கும் அக வழி.
    • கடவுளின் அருளால் அவத்தைகளை நீக்கி, நித்திய வாழ்வுக்கான வழி.
    • ஆண்டவரிடத்தில் அன்பு வைக்கும் மார்க்கம்:

    இனி இவை குறித்து நல்ல விசாரம் செய்து,

    உறுதிப்படுத்தி உள்ளத்தில் உணர்ச்சி பெறுவோம். 

    சமரச சுத்த சன்மார்க்கம் என்பதில் உள்ளவை குறித்த வள்ளலாரின் சத்திய வாக்கியங்கள். அப்படியே கீழே தரப்படுகிறது:

    1) உலக அனைத்து உயிர்களுக்கான மார்க்கம்.

    1.1 ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்

    1.2 உண்ணாடி உயிர்கள்உறும் துயர் தவிர்த்தல் வேண்டும்

    1.3 புரைசேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல்  எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்

    1.4 எச்சார்பும் ஆகி உயிர்க்கிதம் புரிதல் வேண்டும்

    1.5 எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்.

    2) உலகியலில் பொது நோக்கம் வருவிக்கும் மார்க்கம்.

    2.1 எனை அடுத்தார் தமக்கெல்லாம் இன்பு தரல் வேண்டும்

    2.2 எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும்

    2.3 வரைசேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்

    2.4 ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமைஉளர் ஆகி    உலகியல் நடத்தல் வேண்டும்

    2.5 இருளாமை உறல்வேண்டும்.

    2.6 இச்சாதி சமய விகற்பங்களெலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்

    2.7 துடிசேர் எவ்வுலகமும் எத்தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்

    2.8 கமையாதி அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம் காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்

    2.9 சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்

    1. உண்மை அறியும் அறிவு மார்க்கம். 

    3.1 அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்

    3.2 ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்

    3.3 காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்

    3.4 தனித்த பேரன்பு மெய்அறிவும் நற்சபைக்குரிய ஒழுக்கமும் அழியா நல்ல மெய் வாழ்க்கையும் பெற வேண்டும்.

    1. ஆசாரமில்லா ஒழுக்கம் நிரப்பி கொள்ளும் கருணை மார்க்கம்.

    4.1 பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்   

    4.2 ஆணவம் ஆதியமுழுதும் அறுத்து நிற்றல் வேண்டும்

    4.3 அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்

    4.4 செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்

    4.5 எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமையறல் வேண்டும்

    4.6 ஆசாரம் முதலா நவின்ற கலைச்சரிதம் எலாம் பிள்ளைவிளையாட்டே

    4.7 எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்

    4.8 சார் உலக வாதனையை தவிர்க்கும் உள்ளம் வேண்டும்

    1. உண்மை கடவுளை அறிவால் அறிந்துக் கொள்ளும் அனுபவ மார்க்கம்.

    5.1 அன்புருவானவர் இன்புற உள்ளே அறிவுருவாயினீர் வாரீர் அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர். வாரீர்

    5.2 செறிவுடையார் உளத்தே நடஞ் செய்கின்ற அறிவுருவார் இதோ அம்பலத் திருக்கின்றார்

    5.3 சாகாத கல்வியே கல்வி

    5.4 ஒன்றே சிவம் தான் என அறிந்த அறிவே தகும் அறிவு

    5.5 மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்

    5.6 வேகாத கால் ஆதி கண்டு கொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய்த் தொழிலதாகும்

    5.7 அடிமுடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும்

    5.8 அறிவுள் அறியும் அறிவை அறிய அருளும் நிமல சரணம்

    1. இயற்கை உண்மை கண்டு இயற்கை விளக்கம் தரிசிக்கும் அக வழி.

    6.1 இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்             இயற்கையே இன்பமாம்

    6.2 அழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன்மார்க்க சங்கம்

    6.3 இயற்கையுண்மை தனிப்பதியே என்று கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடல் வேண்டும்

    6.4 இயற்கை உண்மையே உருவதாய் இன்பம் புணர்ந்திட புணர்ந்தவா

    6.5 இயற்கை உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய் ஓங்குகின்றார்

    6.6 எய்யாத அருட்சோதி என் கையுறல் வேண்டும்

    6.7 அருட்பெருஞ்சோதியைப் பெற்றே அகங்களித்தல் வேண்டும்

    6.8 கண்ணார நினை எங்கும் கண்வத்தல் வேண்டும்.

    1. கடவுளின் அருளால் அவத்தைகளை நீக்கி, நித்திய வாழ்வுக்கான வழி

    7.1 நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும்

    7.2 அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்

    7.3 தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும்   இல்லாதிருத்தல் வேண்டும்

    7.4 எல்லாஞ் செய்வல்ல சித்தே எனக்களித்தல் வேண்டும்

    7.5 எல்லாம் செய்வல்ல திறன் எனக்களித்தல் வேண்டும்

    7.6 இறந்த உயிர்தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும்

    7.7 செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்

    7.8 மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்

    7.9 எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்

    7.10 எண்ணியவாறு எந்நாளும் இவ்வுடம்பே இறவாத இயற்கை பெற்றேன்.

    1. ஆண்டவரிடத்தில் அன்பு வைக்கும் மார்க்கம்:

    8.1 தலைவ நினைப்பிரியாத நிலைமையும் வேண்டுவனே.

    8.2 நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே.

    8.3 எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே எந்தை நினதருட்புகழை இயம்பியிடல் வேண்டும்

    8.4 உனைப் பிரியாதுறுகின்ற உறவது வேண்டுவனே.

    8.5 திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்

    8.6 ஏக சிவபோக அனு போகம் உறல் வேண்டும்

    8.7 பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும்

    8.8 மருளாய உலகமெலாம் மருள் நீங்கி ஞானமன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்.

    8.9  ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்

    8.10 திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்

    8.11 பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்

    8.12 பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.

    8.13 தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்

    8.14 படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்

    8.15 படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்

    8.16 ஐந்தொழில் நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்

    8.17 செப்பாத மேனிலை மேல் சுத்தசிவ மார்க்கம்

    8.18 எத்தாலும் அழியாத வடிவதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிதுறல் வேண்டுவனே.

    8.19 உரைசேர் மெய்த்திருவடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே.

    8.20 ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.

    8.21 தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்தோங்குகின்ற தன்மையும் வேண்டுவனே.

    8.22 உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும் உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும் வேண்டுவனே.

    8.23 பொருளாம் ஓர் திருவடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து  ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டுவனே.

    8.24 விமலாதி உடைய ஒரு திருவடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே.

    ஆம்,

    • உலக அனைத்து உயிர்களுக்கான மற்றும் எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாகவும்,
    • கட்டுபாட்டு ஆசார வகைகள் ஒழிந்து போய் கருணை மட்டுமே சாதனமாக கொண்ட இரக்க நெறியாகவும்,                            
    • பெரும் பயனாகிய நித்திய பேரின்ப பெருவாழ்வை அருளும் தனி நெறியாகவும் விளங்குகிறது வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம்.

    நன்றி: APJ அருள் 8778874134

  • ச நா த ந வழக்கு தீர்ப்பில் வள்ளலார் பற்றி கருத்துக்கள்…

    ச நா த ந வழக்கு தீர்ப்பில் வள்ளலார் பற்றி கருத்துக்கள்.
     
    சனாதன வழக்கு ஒன்றில் (FIR QUASH) பிறப்பிக்கப்பட்ட ஓர் உத்தரவில் மேதகு நீதிமன்றத்தால் (உயர்நீதிமன்றம் மதுரை கிளை) வள்ளலார் குறித்து ஒரு கருத்து (as observation) சொல்லப்பட்டுள்ளது.
    👇👇
    “………25. Interestingly, It is stated in the counter that the respondents have referred to certain personalities and have those personalities have also stated against Sanathan Dharma. The first person…….. The next person referred is Vallalaar who hailed from Saivite philosophy and blendered with more emphasis on compassion for all living beings including animals, opposed slaughtering of animal, emphasized liberation of soul through “arutperumjothi” (burning lamp). Hence Vallalar is not against Sanathana Dharma. The above persons practiced some form of Sanathana Dharma and recommended the same. They stated to leave or shed unwanted things and practice Sanathan Dharma to attain liberation. The respondents are under the impression that since they recommended to leave or shed the unwanted things, they are against Sanathana Dharma, which is clear dis/misinformation. Except E.V.Ramasamy @ Periyar, none of them had uttered against the Santhana Dharma. Hence the counter has stated incorrect information….”
    👉(தமிழில் )👇
    “………25. சுவாரஸ்யமாக, எதிர்மனுதாரர்கள் சில ஆளுமைகளைக் குறிப்பிட்டுள்ளனர் என்றும், அந்த ஆளுமைகள் சனாதன தர்மத்திற்கு எதிராகவும் கூறியுள்ளனர் என்றும் எதிர்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் நபர்…….. அடுத்த நபர் என்று குறிப்பிடப்பட்டவர் வள்ளலார், அவர் சைவ தத்துவத்தைச் சேர்ந்தவர், விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் கருணை காட்டுவதில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார், விலங்குகளை வெட்டுவதை எதிர்த்தார், “அருட்பெரும்ஜோதி” (எரியும் விளக்கு) மூலம் ஆன்மா விடுதலையை வலியுறுத்தினார். எனவே வள்ளலார் சனாதன தர்மத்திற்கு எதிரானவர் அல்ல. மேற்கண்ட நபர்கள் ஏதோ ஒரு வகையான சனாதன தர்மத்தைப் பின்பற்றினர், அதையே பரிந்துரைத்தனர். தேவையற்றவற்றை விட்டுவிட அல்லது வீழ்த்தி மற்றும் விடுதலை பெற சனாதன தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் கூறினர். எதிர்மனுதாரர்கள் தேவையற்றவற்றை விட்டுவிட அல்லது வீழ்த்தி விட பரிந்துரைத்ததால், அவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்தில் உள்ளனர், இது தெளிவான தவறான தகவல்.பெரியாரின் ஈ.வி.ராமசாமியைத் தவிர, அவர்களில் யாரும் சந்தான தர்மத்திற்கு எதிராகப் பேசவில்லை. எனவே எதிர்மனுதாரர் தவறான தகவலைக் கூறியுள்ளார்….”
    👇
    வழக்கு அரசியல் மற்றும் அரசு சம்பந்தப்பட்டது. உயர்திரு டெப்புடி சிம் சார் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக ஒருவர் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்ட வழக்கு. அந்த எப்.ஐ.ஆ-ரை ரத்து செய்ய வந்த வழக்கு ஆகும். இவ்வழக்கு குறித்து நாம் பேச வரவில்லை.
    👇
    ஆனால், இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் வள்ளலார் குறித்து வந்துள்ள குறிப்புகள் பற்றியே பார்க்க வேண்டி உள்ளது. வள்ளலார் பற்றி மேலே சொன்ன எதுவும், எக்ஸ்செப்ட், வள்ளலார் ஒரு ஜீவகாருண்யர் என்பதை தவிர, மற்ற அனைத்துமே தவறான கருத்துக்கள் ஆகும்.
    மேதகு நீதிமன்றம், வள்ளலாரை பற்றி குறிப்பிடும் போது, கீழ்வருபவையை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்ததை வரிசையாகப் பார்ப்போம்.
     விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் கருணை காட்டுவதில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார், விலங்குகளை வெட்டுவதை எதிர்த்தார்……எனவே வள்ளலார் சனாதன தர்மத்திற்கு எதிரானவர் அல்ல.
    இங்கு உயிர் இரக்கம் சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியே.
    👇
    ஆனால், உயிரினங்களுக்கு கருணை காட்டினார், அதனால் வள்ளலார் சநாதன தர்மத்திற்கு எதிரானவர் அல்ல என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. இதில் தான் விசாரம் செய்ய வேண்டியுள்ளது.
    வரலாற்றை பார்க்கும் போது, வள்ளுவர் தனது திருக்குறளை அரங்கேற்ற அன்றைய வேதியர்கள் மற்றும் சமய வாதிகள் மறுத்து விட்டனர். காரணம், புலால் மறுத்தல், கொல்லாமை இவையே முதல் அறம் என்று வள்ளுவர் சொல்லியிருப்பதால், மறுக்கிறோம் என்றனர் ஆன்மீகவாதிகள், என்பர். அன்று ஒளவையார் பாட்டியார் மூலம் சில அட்ஜசமென்ட் செய்து திருக்குறள் அரங்கேற்றப்பட்டது என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.
    சனாதனத்தின் வேராகவுள்ள, வைதீகத்தின் நான்கு வேதங்களில் புலால் உணவு அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும், வேள்விகளில் உயிர் பலிகள் கொடுக்கப்பட்டது. பலியிடப்பட்ட உயிர்களின் மாமிசங்களை, வேள்வி வேதியர்கள் உணவாக கொண்டனர். மேலும், இராமயணத்தில் இராமர் கறி சாப்பிட்டார் என உள்ளது, என்று சமயச் சொற்பொழிவாளர் திரு துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.
    👇
    இந்நிலையில் முழுமையான ஜீவகாருண்யம் வள்ளுவத்தால், சமணத்தால் இங்கு வெளிப்பட்டவையே எனத்தெளிவாகுகிறது. வள்ளுவர் வழியில் வந்ததாக சொல்பவரே வள்ளலார். இந்நிலையில், வள்ளலார் ஜீவகாருண்யர் எனவே அவர் சனாதனத்திற்கு எதிரானவர் அல்ல என்பதில் உள்ள வரலாறு பொய்யானது. காரணம், ஜீவகாருண்யம் வைதீகத்தில்,புராணங்களில் ஆரம்பத்தில் இல்லை என்பதே உண்மை.
    அடுத்து,
     வள்ளலார் ஆன்ம விடுதலையை வலியுறுத்தினார்.
    ஆனால்;
    ஆன்ம விடுதலை என்பது சமயத்தின் பயன் ஆகும். இங்கு ஆன்மா என்பது தத்துவமே. வள்ளலார் முடிபாக உபதேசித்தது; இறைஅனுபவம் பெற்று, நித்திய வாழ்வைப் பெறுவதே சுத்த சன்மார்க்க முடிபு என்கிறார் வள்ளலார்.
    👇
    அடுத்து;
     வள்ளலார் சைவ சமயத்தை சார்ந்தவர்.
    ஆனால்;
    வள்ளலார் தனது சைவ சமயப்பற்றை முற்றிலும் கைவிட்டு விட்டு, ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டு வெளிப்படுத்தியுள்ளார்கள். சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும், இதிகாசம் புராணங்கள் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வையாதீர்கள் என்று மார்க்கத்தார்களுக்கு கட்டளையாகயிட்டு, அவற்றின் ஆசாரங்களில் மனம் பற்றாத படி இருக்க வேண்டும் என்கிறார் வள்ளலார். அவர் கண்ட மார்க்கமானது; எல்லா சமய மத மார்க்கங்களுக்கு உண்மை பொது நெறியாக விளங்குகிறது. அதே நேரத்தில் உலக சமய மதங்களை தன் மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கியத் தடையாக அறிவித்துள்ளார் வள்ளலார். சைவம் உட்பட சமயங்களை சாடிய பாடல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளது. இக்கட்டுரையின் இறுதியில் சில பாடல்கள் தரப்பட்டுள்ளது.
    👇
    அடுத்து;👇
     ஏதோ ஒரு வகையில் சனாதன தர்மத்தைப் பின்பற்றினர், அதையே பரிந்துரைத்தனர்.
    ஆனால்;
    இங்கு சனாதனம் என்றால் என்ன? அது ஒரு சமயமா? மதமா? அல்லது நூலா? எனத் தெரியவில்லை. வழக்கின் தீர்ப்பில் சனாதனம் என்றால் என்ன என விளக்கமில்லை. வழக்கு தரப்பினர்களும் வாதங்கள் வைத்ததாக தெரியவில்லை. தீர்ப்பில் இடம்பெறவில்லை.👇
    ஆனால், சென்னையில் நடைபெற்ற வழக்கில் சனாதனத்திற்கு 1905-ம் ஆண்டு வெளிவந்த திரு நாராயண அய்யர் அவர்களால் எழுதிய நூல் வைத்துதான் வாதாடப்பட்டதாக அறிய முடிகிறது. அந்த நூலை பார்க்கும் போது; வைதீக மதத்தை அடிப்படையாகக் கொண்டே தான் உள்ளது. நூலின் ஆசிரியரும் இப்படி தான் சொல்கிறார்கள்: “சுருதிகளை ஆதாரமாகக் கொண்ட சநாதன தருமம் அல்லது வேதீக தருமம் என்ற ஹிந்து சமயமானது” என்கிறார் ஆசிரியர் நூலின் முதல் பக்கத்தில்.
    ஆக, இதில் எல்லா மார்க்கத்தின் நெறிகள் கோடிட்டு காட்டினாலும் முதன்மையாக உள்ளவை வைதீக மத கோட்பாடுகளே மற்றும் உயர்ந்த ரிசிகளால் வடிவமைக்கப்பட்ட சுருதி, ஸ்மிருதி, இதிகாசங்கள், புராணங்கள் இவை வலியுறுத்தும் நான்கு வேதங்கள், வருண ஆசிரமம், குலம், சோதிடம், சாதி அமைப்பு, சமூக அமைப்பு, அரசு அமைப்பு, அண்ட, பிண்ட தத்துவங்கள் என எல்லாம் பெற்று விளங்குவது தான் சனாதனம் ஆகும்.
    ஆனால், இந்த நிலையில் வள்ளலார் சநாதன கோட்பாடுகளை மற்றும் எந்தொரு கோட்பாடுகளையும் பரிந்துரைக்க்கவுமில்லை அவர் பின்பற்றவுமில்லை என்பதை நாங்கள் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
    👇
    அடுத்து;
    தேவையற்றவற்றை விட்டுவிட அல்லது வீழ்த்தி மற்றும் விடுதலை பெற சனாதன தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என்று (வள்ளலார் உட்பட) அவர்கள் கூறினர்.
    என மேதகு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    👇
    ஆனால்
    👇
    வள்ளலார் மிகத்தெளிவாக கட்டளையிட்டுள்ளது யாதெனில்;
    “தத்துவவொழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.
    தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்.
    # அவையாவன:
    👇
    ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.” – வள்ளலார்.
    👇
    மேலே விட்டொழிக்க வேண்டிய பதின்மூன்று ஆசாரங்களில் பாதிக்கு மேல் சனாதநத்தில் உள்ளவையாகவும், மற்ற ஆசாரங்கள் உலக சமய மதங்களில் உள்ளவையாகவும் பார்க்கும் போது, வள்ளலார் எப்படி சனாதனத்தை பின்பற்ற வேண்டும் என சொல்லியிருப்பர்கள்?
    👇
    மேற்படி விசாரம் செய்யும் போது; ஒன்று தெரிய வருகிறது. யாதெனில்;
    👇
    தர்மம் என்றால் வைதீக மரபு படி ஆசாரங்கள் அல்லது கட்டுப்பாட்டு விதிகள் அல்லது முறைகள் எனப்படுகிறது. அன்றைய காலக்கட்டத்தில் சமூகம் மற்றும் அரசுகள் இந்த தர்மங்கள் படி தான் செயல் பட வேண்டும் என நடைமுறையில் ஆட்சியில் இருந்துள்ளது.
    👇
    ஆக, மேற்படி தர்மங்கள் (வகுக்கப்பட்ட ஆசாரங்கள் என்று அர்த்தம்) என்றும் நிலைத்திருக்குபடி இருக்க வேண்டும் என சநாதன தர்மம் சொல்கிறது. இங்கு சனாதனம் என்றால் என்றும் நிலைத்திருத்தல் அல்லது மாறாது இருத்தல் எனப்படும். கடவுள் பற்றிய புதிய நிலைப்பாடுகளை கூட வைதீக
    மாற்றிக் கொண்டுள்ளது. முதலில் பிரம்மம் ஒன்றே என்ற கொள்கை, பின்பு, அத்வைதம், துவைதம், விசிட்டாத்வைதம் என மாறியுள்ளது. ஆனால், எக்காலத்திலும் மாறாது உள்ளது மாறாமல் இருக்க வேண்டியது எதுவெனில்; “விதிக்கப்பட்ட ஆசாரங்கள்” என காண முடிகிறது. ஆக, வேதீகத்தில் மற்றும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ள ஆசாரங்கள் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதாகும். இதை வலியுறுத்தும் நூல் சனாதனம் என விசாரத்தில் ஒருவாறு பார்க்க முடிகிறது.
    👇
    அடுத்து;
     எதிர்மனுதாரர்கள் தேவையற்றவற்றை விட்டுவிட அல்லது வீழ்த்தி விட பரிந்துரைத்ததால், அவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்தில் உள்ளனர், இது தெளிவான தவறான தகவல்.
    👇
    ஆனால்;
    👇
    எங்களுக்கு, அதாவது, வள்ளலார் மார்க்கத்திற்கும் அரசியலுக்கும் அல்லது மேற்படி வழக்கிற்கும் உள்ளே வரவில்லை, வரவிரும்பவில்லை.
    👇
    ஆனால், வள்ளலாரின் கோட்பாடுகள் உலகில் தோன்றியுள்ள சமய மத மார்க்கங்களில் கீழ் வராது. அது, எல்லோருக்குமான உண்மை பொது நெறி ஆகும்.
    👇
    இந்நிலையில் வள்ளலார் என்பவர் சனாதனத்திற்கு எதிரானவர் என்றோ அல்லது சனாதனத்தின் உச்சம் என்றோ சொல்ல முடியாது. காரணம் வள்ளலார் ஆகட்டும் அல்லது வள்ளுவர் ஆகட்டும் இவர்களின் பார்வையானது உலக உயிர்களுக்கானது. அதே நேரத்தில் வள்ளலார் சாதியை பொய் என்றும், அதனால் அதை ஒழிக்கச் சொல்கிறார். புராணங்கள் எல்லாம் கற்பனை அதனால் அவற்றில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார்.
    அதே போல், மேலே குறிப்பிட்ட பதின்மூன்று ஆசார வகைகளை ஒழிந்து போக வைத்தால்தான், ஒருவருக்கு உண்மை அறிவும். அதனால் பொது நோக்கமும் வரும், பொது நோக்கம் உடையவரே கடவுளின் அருளை பெற முடியும் என்கிறார் வள்ளலார்.
    👍
    இதுவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார் கண்டு வெளிப்படுத்திய உண்மை பொது நெறியாகும்.
    🙏
    எதற்காக இப்படி விளக்கம் கொடுக்கிறோம் என்றால், வடலூர் வள்ளலார் நிலையங்களில் வள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்கத்திற்கு முரணான வகையில் வேத ஆசாரத்தின் அடிப்படையிலும், சைவ ஆகமங்கள் அடிப்படையிலும் வழிபாடுகள் புகுத்தப்பட்டிருந்தது. எங்களால் இருபது வழக்குகளுக்கும் மேலாக வழக்குகள் தொடுக்கப்பட்டு, இருபது வருடங்கள் போராடி, ஆணையரின் உத்தரவுகள் மற்றும் அவற்றை உறுதி செய்த நீதிமன்றத் தீர்ப்புகள் இவையால் வைதீக மற்றும் சைவ சமய ஆசாரங்கள் அகற்றப்பட்டு, வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத் தனி நெறி வழிபாட்டு விதிப்படி நிலையத்தில் ஜோதி தரிசனம் இன்று நடைபெற வைக்கப்பட்டள்ளது
    👇
    இந்நிலையில், வள்ளலார் சனாதனத்தை பின்பற்றினார் என்றோ அல்லது அவர் சைவ சமயத்தை சார்ந்தவர் என்றோ ஒரு நீதிமன்றமே தனது தீர்ப்பில் கருத்து தெரிவித்து இருப்பின், இருக்கின்றது. நாளைய காலத்தில், இதை மற்ற வழக்கில் எடுத்துக் காட்ட வாய்ப்புகள் உள்ளதால், இந்த விளக்கத்தை நாங்கள் தருவதற்கான சூழ்நிலையில் தள்ளப்பட்டு உள்ளோம்.
    👇
    இதன் அடிப்படையில் மேதகு நீதிமன்றத்திற்கும் மக்களுக்கும் வள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்கத் தனி நெறி வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு உள்ளதையும் கருதினோம்.
    🙏🙏🙏
    நன்றி ஏபிஜே அருள்.
    🙏🙏🙏
    👉எல்லாம் கடவுள் அம்சங்களே.
    👉எல்லோரும் சகோதரர்களே
    👉எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
    🙏🙏🙏
    👇👇
    சமயம் மதம் இவை சாடி வள்ளலார் பாடியுள்ள பாடல்கள் :
    ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
    சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
    அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
     
    சாதியு மதமுஞ் சமயமுங் காணா
    ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி
     
    சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
    ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
     
    சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த
    அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி
    ஆறாம் திருமுறை / முறையீடு
    சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
    சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
    ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
    ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
    நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
    நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
    ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
    ஆறாம் திருமுறை / திருக்கதவந் திறத்தல்
    கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
    கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
    நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
    நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
    ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
    இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
    தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
    ஆறாம் திருமுறை / சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
    அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
    எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
    எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
    இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
    எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
    உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
    உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.
    ஆறாம் திருமுறை / ஆன்ம தரிசனம்
    சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
    சாத்திரக் குப்பையும் தணந்தேன்
    நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
    நித்திய வாழ்க்கையும் சுகமும்
    ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
    அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
    ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
    உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
    ஆறாம் திருமுறை / சிவானந்தத் தழுந்தல்
    இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
    இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
    மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
    வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
    தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
    சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
    அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
    அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
    ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
    சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
    தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
    ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
    ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
    ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
    ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
    சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
    தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
    ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
    கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
    கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
    கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
    காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
    பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
    பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
    தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
    தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
    ஆறாம் திருமுறை / கண்கொளாக் காட்சி
    அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
    காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
    தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
    தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
    கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
    குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
    எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
    ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
    ஆறாம் திருமுறை / இறை திருக்காட்சி
    சமயமும் மதமும் கடந்ததோர் ஞான
    சபைநடம் புரிகின்ற தனியைத்
    தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச்
    சத்துவ நித்தசற் குருவை
    அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா
    ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை
    நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார
    நிதியைக் கண்டுகொண் டேனே.
    ஆறாம் திருமுறை / திருவடி நிலை
    இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
    பிரமன்ஈ சானனே முதலாம்
    மகத்துழல் சமய வானவர் மன்றின்
    மலரடிப் பாதுகைப் புறத்தும்
    புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
    புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
    செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
    தெரிந்தனன் திருவடி நிலையே.
    ஆறாம் திருமுறை / அச்சோப் பத்து
    சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
    விடுவித்தென் தன்னை ஞான
    நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
    நிலைதனிலே நிறுத்தி னானைப்
    பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்
    பராபரனைப் பதிஅ னாதி
    ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
    தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
    ஆறாம் திருமுறை / சிற்சத்தி துதி
    வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
    மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
    செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
    குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
    ஆறாம் திருமுறை / இறை பொறுப் பியம்பல்
    ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
    உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
    வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
    மன்றினை மறந்ததிங் குண்டோ
    ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
    ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
    பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
    பரிந்தருள் புரிவதுன் கடனே.
    ஆறாம் திருமுறை / சிவபுண்ணியப் பேறு
    மதத்திலே சமய வழக்கிலே மாயை
    மருட்டிலே இருட்டிலே மறவாக்
    கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
    கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
    பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
    பரிந்தெனை அழிவிலா நல்ல
    பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
    பண்ணிய தவம்பலித் ததுவே.
    ஆறாம் திருமுறை / சிவபுண்ணியப் பேறு
    குலத்திலே சமயக் குழியிலே நரகக்
    குழியிலே குமைந்துவீண் பொழுது
    நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து
    நிற்கின்றார் நிற்கநான் உவந்து
    வலத்திலே நினது வசத்திலே நின்றேன்
    மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம்
    பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்
    பண்ணிய தவம்பலித் ததுவே.
    ஆறாம் திருமுறை / ஆனந்தப் பரிவு
    சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
    ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
    ஆறாம் திருமுறை / சிவானந்தப் பற்று
    ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப
    நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும்
    சோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில்
    சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.
     
    ஆறாம் திருமுறை / தலைவி வருந்தல்
    இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
    ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
    எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
    என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
    நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
    நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
    அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
    அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.
    ஆறாம் திருமுறை / உற்ற துரைத்தல்
    நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
    வலத்தே அழியா வரம்பெற்றேன் மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
    குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே
    நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே.
    ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை
    பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என்
    புகல்வழிப் பணிகள்கேட்பப்
    பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப்
    பொருள்கண்ட சத்தர்பலரும்
    ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்
    கிசைந்தெடுத் துதவஎன்றும்
    இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற்
    றிருக்கஎனை வைத்தகுருவே
    நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும்
    நலம்பெறச் சன்மார்க்கமாம்
    ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல்
    நடத்திவரு நல்லஅரசே
    வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய
    மாமதியின் அமுதநிறைவே
    மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
    வல்லநட ராஜபதியே.
    ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை
    பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
    பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
    பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
    பேதமுற் றங்கும்இங்கும்
    போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
    போகாத படிவிரைந்தே
    புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
    பொருளினை உணர்த்திஎல்லாம்
    ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
    என்பிள்ளை ஆதலாலே
    இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
    றெண்ணற்க என்றகுருவே
    நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
    நிறைந்திருள் அகற்றும்ஒளியே
    நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
    நீதிநட ராஜபதியே
    ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை
    பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
    பவநெறி இதுவரை பரவிய திதனால்
    செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்
    செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
    புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
    புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
    தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
    ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை
    ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
    அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
    ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
    உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
    சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
    சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
    சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
    ஆறாம் திருமுறை / அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்
    சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும்
    அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத்
    தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்
    அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.
    ஆறாம் திருமுறை / அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்
    ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்
    வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம்
    தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி
    வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.
    ஆறாம் திருமுறை / அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்
    கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை
    நீதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம்
    பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல்
    விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே.
    ஆறாம் திருமுறை / புனித குலம் பெறுமாறு புகலல்
    சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
    சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
    ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
    அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
    நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
    நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
    வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
    மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.
    ஆறாம் திருமுறை / சுத்த சிவநிலை
    சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
    நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் – ஓதுகின்ற
    பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
    வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
    மரணமிலாப் பெருவாழ்வு
    குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
    கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
    வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
    மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
    பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
    புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
    செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
    சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.
    ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்
    கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
    கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
    சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
    சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
    வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
    மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
    முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
    முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.
    👇
    ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
    அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
    நீதியில் கலந்து நிறைந்தது நானும்
    நித்தியன் ஆயினேன் உலகீர்
    சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
    சத்தியச் சுத்தசன் மார்க்க
    வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
    விளம்பினேன் வம்மினோ விரைந்தே.
    ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி
    எம்பொருள் எம்பொருள் என்றே – சொல்லும்
    எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
    செம்பொருள் என்பது பாரீர் – திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
    ஜோதியுள் ஜோதி
    சைவ முதலாக நாட்டும் – பல
    சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
    தெய்வம் இதுவந்து பாரீர் – திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
    ஆறாம் திருமுறை / இது நல்ல தருணம்
    மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது
    வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
    கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
    கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல
    ஆறாம் திருமுறை / அருள் அற்புதம்
    சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
    சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
    மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
    மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்
    ஆறாம் திருமுறை / அருட்காட்சி
    சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
    சோதியைக் கண்டேன டி – அக்கச்சி
    சோதியைக் கண்டேன டி.
    ஆறாம் திருமுறை / கண்புருவப் பூட்டு
    சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
    தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
    இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
    என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
    ஆறாம் திருமுறை / அனுபவ மாலை
    சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
    சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
    பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
    பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ
    அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
    அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
    சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்
    திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி.
    👇
    இன்னும் பல நூறு பாடல்கள் சாதி சமய மத வேதாகமம் இவையெல்லாம் சாடி வள்ளலார் பாடியுள்ளார்கள்.
  • சந்நியாசி நித்தியானந்தர் உரைக்கு மறுப்புரை

     
     
    “சந்நியாசி நித்தியானந்தர் உரைக்கு மறுப்புரை”
    (APJ அருள் @ இளங்கோ)
    👇
    வேதம், ஆகமம், புராணங்கள் இவை பொய் புரட்டு என்று வள்ளலார் சொல்லவில்லை. இவை இடைச்செருகல். – நித்தியானந்தா.
    👇
    வேதம், ஆகமம், சமயம், மதம், இதிகாசங்கள், புராணங்கள் இவை பொய். இவையில் லட்சியம் வையாதீர்கள். -– வள்ளலார்.
    👇
    ஆதாரங்களுடன் ஆய்வு செய்வோம். உண்மை அறிவோம் – APJ அருள்.🙏
    ***********************
    பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவருட்பிரகாச வள்ளலார் தனது கடைசி இரண்டரை வருடங்களில் (1871–1873) தான் வைத்திருந்த சமயப்பற்றை முற்றிலும் கைவிட்டுவிட்டு மற்றும் சாதி சமய மத மார்க்கங்களை கடந்தும், அவற்றின் ஆசார வகைகளை மற்றும் உலக ஆசாரங்களை ஒழித்துக் கொண்டும், உண்மை அறிவால் அறியப்படுகின்ற ஓர் புதிய மற்றும் பொதுவாக விளங்கும் ஒரு மார்க்கத்தை “சமரச சுத்த சன்மார்க்கத்தை” கண்டார்கள். இம்மார்க்கத்தை சித்திரை முதல் தேதி 1871-ம் ஆண்டு நமக்கு வெளிப்படுத்தினார்கள்.
    வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத் தனி நெறி மீது, தாக்குதல் தொடர்ந்து தொடுக்கப்பட்டு வருகிறது.😡 இவர்கள் வள்ளலாரின் புதிய மார்க்கத்தின் பொது நெறியை உள்ளது உள்ளபடியாக தெரிந்துக் கொள்ளாமலும் மற்றும் அவர்களின் சாதிப் பற்று அல்லது வைதீக ஆசாரப்பற்று அல்லது சமய மதப் பற்று காரணமாகவும் மற்றும் வடலூர் நிலையங்களில் வேத ஆசாரங்களை, சமய வழிபாட்டை புகுத்த இன்று சிலரால் ,பல வழிவகைகளில், திட்டமிட்டு உள்ளவர்களாலும் வள்ளலாரின் உண்மை பொது நெறிமீது தாக்குதல் நடத்தப்படுகிறது எனலாம்.😭
    அதன் வரிசையில் சில நாட்களுக்கு முன்பு சுத்த சன்மார்க்கத் தனி நெறியில் தாக்குதல் தொடுத்துள்ளவர், உலக பிரபலம், சந்நியாச ஸ்டார், உயர்திரு நித்தியானந்த சாமியின் ஒரு விடியோ இன்று வாட்சப்பில் பரவி வருகிறது. இந்த வீடியோ அவரின் வீடியோ தானா?🤔 அல்லது ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.🤔 இருப்பினும் அதில் பரவி வரும் வாசகத்திற்கு மட்டும் நாம் மறுப்புரை கொடுப்பது கடமையாகும்.👍 இவரைப் போல் சிலரும் பேசி பரப்பி வருகின்றனர். அதனால் இந்த மறுப்புரை. 🙏
    வள்ளலாரின் தனி நெறிக்கு முரணான இது போன்ற செய்திகளுக்கு நாம் பதில் அளிக்காவிட்டால், அவர்களால் பரப்படும் பொய்களானது உண்மை போல் தோற்றத்தை பெற்று விடும். இன்று பவுத்தத்திற்கு ஏற்பட்ட நிலையே வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்திற்கு வருங்காலத்தில் ஏற்படும். அதனால் தான் இந்த விரிவான விளக்கம் ஆதாரத்துடன் தரப்படுகிறது. ஆதரங்களுடன் பதில் அளிப்போம். அன்புடன் ஏபிஜே அருள். நல்ல விசாரத்திற்கு வழிவகை செய்து உள்ளதாக நினைந்து அவருக்கு முதலில் நன்றியை பணிந்து தெரிவித்துக்கொள்கிறேன்.
    திரு நித்தியானந்தா உரை மூலம் பரவிய செய்திகள்:
    “வள்ளலார் வேதம், ஆகமம், புராணம் இவை புரட்டு எனச் சொல்லவோ அல்லது எழுதி வைக்கவோ இல்லை…. …. வள்ளலார் சொன்னதை அவங்க நோட்ஸ் எடுத்து சொன்னாங்களாம்… வள்ளலாரின் ஒரிஜினல் புக்ஸ் எல்லாம் பார்த்திட்டேன். பொய், புரட்டு என வருமிடங்களில் வேறு யாருடைய கையெழுத்து தான் இருக்கு… வள்ளலார் போன்றவர்கள் எத்தனை இடைச்செருகலை சந்தித்து இருப்பார்கள். ஆழ்ந்துவிட்டு பேசுங்கள்…..”
    இந்த பரப்புரை, முழுக்க முழுக்க பொய்யானது மற்றும் வள்ளலாரின் தனி நெறி உலகில் விரைந்து பரவிடாமல் செய்ய திட்டமிட்ட செயல் ஆகும். அவரின் கூற்று பொய்யானது என்று நாம் ஆதாரங்களுடன் நிரூபிப்போம் அருள் துணையுடன். இவர் என்ன ஆவணங்களை பார்த்தார் என்றோ, அதுவும் ஒரிஜினல் என்கிறார், அது எவை எனச் சொல்லவில்லை.
    👇
    அதற்முன் ஒரு முக்கிய விசயத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
    🙏
    வள்ளலார் வெளிப்படுத்திய பாதை புதியது. இந்த புதிய பாதையை தெரிந்துக் கொள்ளக் கூடியவர்கள் யாராக இருக்க முடியும் என்றால்;
    👇
     இந்த பாதையை அதாவது இந்த நெறியைதான் நான் தேடிக் கொண்டிருந்தேன் என்றுச் சொல்லக்கூடியவர்கள்;
     வள்ளலார் காட்டும் நெறியானது எவர் அறிவிற்கு சரியெனப்பட்டு ஒருமையை பெற்றவர்கள்.
     சமய மதங்கள் மீது எவ்வித விசாரம் இன்றி நம்பிக்கை வைப்பது போல் சுத்த சன்மார்க்கம் மீது விசாரமில்லாமல் நம்பிக்கை வைப்பது.
    ஆனால், இன்று தீய நோக்கத்தோடு வள்ளலாரின் ஆசாரமில்லாத கருணை நெறி மீது பொய்யுரைகள் பரப்பப்படுவது வேதனையாகவுள்ளது. காரணம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத் தனி நெறியானது உலக உயிர்களுக்கான பொது நெறியாக உள்ளது. சரி விசாரத்திற்கு வருவோம். முதலில்;
    👇
    வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத் தனி நெறியில், கடவுள் கொள்கை என்னவென்று தெரிந்துக் கொள்வது மிக, மிக அவசியம் ஆகும். இதுவே பல பேருக்கு புரியாமல் உள்ளது.
    சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் கொள்கை என்ன? வழிபாட்டில் கடவுள் யார்? வள்ளலார் அக விசாரத்தில் கண்ட கடவுள் யார்? என்று வினவினால்;
    👇
     சுத்த சன்மார்க்கத்தில் உண்மைக் கடவுளின் நிலையறிவதே கொள்கை. கடவுளின் உண்மை நிலையறிந்து, தரிசித்து, அருளால் நித்திய தேகத்தை பெறுவதே லட்சியம் ஆகும். உண்மையை ஆண்டவரே தெரிவிக்க வேண்ட வேண்டும்.
    வழிபாட்டில்; “ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல் வேண்டும்.”
     சமய சாத்திர புராணங்களில் வந்ததாக சொல்லப்படுகின்ற கர்த்தர், தெய்வம், யோகி, தலைவர் இவர்களில் “ஒருவரல்ல”. மேற்படி இவர்கள் எல்லோரும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் தனித்தலைமை பெரும்பதி பெருங்கருணைக் கடவுளை கண்டேன் என்கிறார் வள்ளலார்.
    👉நிற்க!
    திருவருட்பிரகாச மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை ஆகும். வள்ளலார் பதிவு செய்து வைத்திருக்கும் மற்றும் எழுதியும் உபதேசித்தும் உள்ள அவரின் அகஅனுபவ காட்சிகள், கருணை செயல்கள் மற்றும் அருள் பயன்கள் இவை வைத்து பார்க்கும் போது இம்மார்க்கத்தின் கொள்கையைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வருவது யாதெனில்;
    🙏
     ஆண்டவரே ஒருவரே! ஒன்றெனும் ஒன்றே!
     கடவுள் நித்தியர், மற்றவை தத்துவங்களே,
     இதை தெரிந்துக்கொண்டவரிடத்தில் தாழும் குணம் வரும்.
     இரக்கத்தால் இறைவன் நமக்கு உண்மை தெரிவிக்க தொழ வேண்டும்
     கருணை நன்முயற்சியில் அக அனுபவம் பெறுதலே அருளாகும்.
     அருளால் நித்திய தேகம் பெற்று பேரின்ப பெருவாழ்வே வரமாகும்.
    👇
    “ஒன்றெனும் ஒன்றே” என்பதின் பொருள் எல்லோராலும் தெரிந்துக்கொள்ள முடியும். தெரிந்துக்கொள்ள வேண்டும். ஒன்றெனும் ஒன்றாகிய ஒளியே எங்கும் எதிலும் பரிபூரணமாக நிறைந்து பரவி விளங்கி உள்ளது. ஒளியால் ஒளிவெளியில் எல்லாம் தோன்றி விளங்குகிறது. தோன்றியதினுள்ளும் அந்த ஒன்றேனும் ஒன்றின் ஒளியின் அம்சமே விளங்குகிறது. இந்த உண்மை இறைவனால் தான் விளக்கம் செயவிக்கப்படுகிறது.
    நிற்க! மேற்படி விஷயங்களை ஊன்றி கவனித்து, கருத்தில் கொள்ள வேண்டும். காரணம் இந்த தனி நெறியை தெரிந்துக் கொள்ளாமல் தான் பல வேறுபட்ட கருத்துக்கள் தோன்றுகின்றன.
    👇
    உலகில் சமய மதங்களில் காட்டப்பட்டு வணங்கப்படும் கடவுளர் எல்லோரும் உண்மை கடவுளின் அம்சங்களே என்கிறார் வள்ளலார். கடவுளின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் முடிபுகள் ஆறு அந்தங்கள் ஆகும். இவையில் சமரசம் கண்டு அந்தங்கள் ஐக்கியப்பட்டு, உண்மை தெரிவதாக உள்ளது. தான் கண்ட கடவுள் பற்றி குறிப்பிடும் போது சமய மத சாத்திர புராணங்களில் வந்ததாக சொல்லப்படும் கடவுளர்களில் ஒருவரல்ல என்கிறார் வள்ளலார்.
    👇
    ஆக, சமயங்களில் தனித்தனி காட்டும் கடவுளர்கள், இவர்கள் அனைவரும் உண்மை கடவுளின் ஒளி சொரூபத்தில் அடக்கம் என்கிறார். ஆனால் சமய கடவுளரிடத்தில் உண்மை கடவுளின் பரிபூரணத்தை நாம் நினைந்து, உணர்ந்து, அனுபவிக்க முடியாது.
    👇
    உதாரணத்திற்கு, ஐந்நூறு ரூபாயில் நூறு ரூபாய் உண்டு. ஆனால் நூறு ரூபாயில் ஐந்நூறு இல்லை. ✅
    அது போல் தான். எல்லாம் கடவுளின் துகள்களே. ஆனால் துகளில் பூரணப் பொருளின் உண்மை அறிய முடியாது.
    👇
    இதற்கு வள்ளலார் தரும் உதாரணம்: குருடர்களும் யானையும் என்ற கதை. 👇
    நான்கு குருடர்கள் யானையை தொட்டுப் பார்த்து யானைப்பற்றி தெரிந்துக் கொண்டது போல் சமய மதவாதிகள் கடவுளைப் பற்றி தங்கள் தங்கள் பெற்ற அனுபவங்களை கொண்டு முடிபாகக்கொண்டு அதையே வெளிப்படுத்தி, அதன் அடிப்படையில் சமயங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்பார் வள்ளலார்.
    👇
    நான்கு குருடர்கள் ஒரு யானையை பிடிகின்றனர். அவர்கள் பிடித்திருந்த பகுதியை வைத்து பேசிக் கொள்கிறார்கள்.
    👉யானையின் காலை பிடித்திருந்த ஒருவன் “யானை தூண் போல் உள்ளது” என்றான். 👉யானையின் காதை பிடித்திருந்த 2ம் நபர்; “ இல்லை இல்லை யானை சொலகு போல் உள்ளது” என்றான்.
    👉யானையின் வாலை பிடித்திருந்த 3ம் நபர்; “ இல்லை. யானை குச்சி போலுள்ளது” என்றான்.
    👉 யானையின் தும்பிக்கையை பிடித்திருந்த 4 ம் நபர்; “இல்லவே இல்லை யானை உலக்கை போலுள்ளது” என்றான்.
    நிற்க! இங்கு இந்த நான்கு குருடர்கள் சொன்னது அவர்களின் நிலையில் சரியே. அனால் உண்மையில் இவர்களில் ஒருவரும் முழுமையாக யானையைப் பற்றி அப்படியே சொல்லவில்லை அப்படித்தானே.
    காலை பிடித்தவர், யானை தூண் போல் உள்ளது எனச் சொல்லிவிட்டார்?. அவர் பிடித்தளவில், அவர் அறிந்தளவில், வியம்பினார். ஆனால் அவர் முழு உண்மையைவா உரைத்தார் ? இல்லை. அவரை குறைச் சொல்ல முடியாது. அதே நேரத்தில் அவர் கூற்றை உண்மை என்று அறிவில் ஒத்துக் கொள்ள முடியாது. அப்படித்தானே.
    இதை சரியாகப் புரிந்துக் கொள்ளாதவர்கள் அல்லது புரிந்துக்கொள்ளக்கூடிய திறன் இல்லாதவர்கள் வள்ளலார் சொல்லும் உண்மை கடவுள் எங்கள் சமய வேத ஆகமங்கள் ஆரணங்கள் வியம்பும் கடவுளரே அன்றி வேறல்ல என்கிறார்கள். எல்லாம் கடவுளின் அம்சங்களே ஆனால் கடவுளின் பரிபூரண உண்மை இல்லை. கடவுள் இவரே எனச் சுட்டிக்காட்டுவது சிறுப்பிள்ளை விளையாட்டாக உள்ளது என்கிறார் வள்ளலார்.
    👇
    இதன் அடிப்படையில் தான்,🙏 பாடல்களில்,👇 வேதம் சமயம் அவற்றின் ஆரணம் ஆகமம் இவை தனித்தனி காட்டும் தெய்வங்கள் எல்லாம், ஒன்றெனும் ஒன்றாகிய அருட்பெருஞ்ஜோதியில் காணலாம் என்கிறார் வள்ளலார். இவை மட்டுமல்ல, எல்லா அந்தங்களும் வியம்பும் பல் கோடி கடவுளர்களை, ராசியத்தை, பொருளை, பதிகளை, குருவை எல்லாம், ஒன்றெனும் ஒன்றாகி விளங்கு செம்பொருளாகிய சிவமே என்கிறார் வள்ளலார்.
    இதோ பாடல்கள்:
    👇
    ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்:
    வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்
    ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
    👇
    துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென
    உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே
    👇
    வேதமு மாகம விரிவுக ளனைத்தும்
    ஓதநின் றுலவா தோங்குமந் திரமே
    👇
    ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
    தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
    சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
    இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
    இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
    எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா…
    ஆறாம் திருமுறை / இறை திருக்காட்சி
    சுத்தவேத தாந்த பிரமரா சியத்தைச்
    சுத்தசித் தாந்தரா சியத்தைத்
    தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்
    சமரச சத்தியப் பொருளைச்
    சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்
    தெளிந்தபே ரானந்தத் தெளிவை
    வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்
    மெய்மையைக் கண்டுகொண் டேனே.
    👇
    ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்
    பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம்
    புகன்றபோ தாந்த நாதாந்தம்
    தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந்
    தத்தினும் தித்திக்கும் தேனே
    மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும்
    மாபெருங் கருணையா ரமுதே
    அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
    அம்மையே அப்பனே அபயம்.
    👇
    சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
    சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
    பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
    பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ
    அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
    அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
    சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்
    திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி.
    👇
    ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி
    எம்பொருள் எம்பொருள் என்றே – சொல்லும்
    எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
    செம்பொருள் என்பது பாரீர் – திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
    👇
    ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி
    சைவ முதலாக நாட்டும் – பல
    சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
    தெய்வம் இதுவந்து பாரீர் – திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
    👇
    ஆறாம் திருமுறை / அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்
    சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும்
    அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத்
    தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்
    அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.
    👇
    ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்
    வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம்
    தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி
    வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.
    👇
    ஆறாம் திருமுறை / இறை திருக்காட்சி
    ஆரண முடிமேல் அமர்பிர மத்தை
    ஆகம முடிஅமர் பரத்தைக்
    காரண வரத்தைக் காரிய தரத்தைக்
    காரிய காரணக் கருவைத்
    தாரண நிலையைத் தத்துவ பதியைச்
    சத்திய நித்திய தலத்தைப்
    பூரண சுகத்தைப் பூரண சிவமாம்
    பொருளினைக் கண்டுகொண் டேனே.
    ✅
    நிற்க! ஆக, ஒன்றெனும் ஒன்றாகிய செம்பொருள் நெறியே சுத்த சன்மார்க்கம் எனத் தெளிக. செம்பொருளே எல்லாமாக விளங்குகிறது எனப்படும்.
    இல்லை.. இல்லை.. என்போருக்கு அதாவது சிறு துகள்களையே செம்பொருள் என்பதும், அம்சங்களையே பரிபூரணம் என்பதும், தூசிகளையே உண்மை நிலை என்பதும் இவையெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டே என்கிறார் வள்ளலார். அதனால் தான், முழு உண்மை காட்டாது, புறம்கவிய சொல்லாது போன வேதாகமம், சமயங்கள் இவைப்பற்றியும் இவற்றில் உள்ள ஆசாரங்கள் பற்றியும் வள்ளலார் கீழ்வரும் பாடல்களில் சொல்வதை பாருங்கள்:
    👇👇👇
     சாதி பொய் ( பாடல்: 211 ),
     சமயம் பொய், மதம் பொய் (212),
     சாத்திரங்கள் குப்பை ( பாடல்: 64),
     வேதநெறி ஆகமம் இவை சூது ( பாடல்:186 )
     கலையாகிய இதிகாசங்கள், புராணங்கள் இவை கற்பனை ( பாடல்:187 )
     பாடல் :452 -ல் சமய வலை
     621- ல் நால்வருணம் ஆசிரமம், ஆசாரம் முதலியவை பிள்ளைவிளையாட்டே
     625-ல் நான்முகர்,உத்திரர்கள் நாரணர் இந்திரர்கள் வாவில் அருகர் புத்தர் முதல் மதத்தலைவர் எல்லாம் ஒளி சிறிதே அடைந்து
     657-ல் சமய மதக் குழி நின்ற என்னை எடுத்தானை
     718- ல் பிரமன்,விண்டு,உருத்திரன் மாயேச்சுரன் சதாசிவன் …. இவர்கள்…கட்டைவிரல் நகத்தின் கடையுறு துகள் அன்று அறிந்தனன் அதன் மேல் கண்ணன் திருவடி நிலையே
     719- ல் இவர்கள் பொதுவில் திருநடம் புரியும் துனையடிப் பாதுகைப் புறத்தே இடர் கெட வயங்கு துகள்
     927- ல் மதம் பிடித்தவர் எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு வந்து நிற்கின்றனர் வாய் திறப்பிப்பான்
     961- ல் தேய்வங்கள் பல பல சிந்தை செய் வாரும் …. வீண் கழிக்கின்றார்
     995- ல் ஊடல் செய் மதமும் சமயமும்…
     995- ல் மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே… வீண் பொழுது கழிக்கின்றார்
     996- ல் சமய நரகக் குழியிலே
     1473- ல் சாத்திர கோத்திர சண்டையிலே அலைகின்ற உலகீர் அழிதல் அழகலவே …
     1512- ல் வேதம் ஆகமம் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
     1571- ல் முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
     1546- ல் பயன் அடையா மூடமதம் அனைத்தும் முடுகி அழிந்திடவும் 1802- ல் சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்பது
     1919-ல் எச்சமயங்களும் பொய் சமயம் என்றீர்..
     2113- மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது வருணாசிரமம் சாய்ந்தது .. ஒழிந்தது … அழிந்தது
     2114- ல் குறித்த வேத ஆகமக் கூச்சலும் அடங்கிற்று — (இன்னும் பல நூறு பாடல்கள் உள)
    🙏🙏🙏
    வள்ளலார் தெளிவாக சொல்கிறார்கள்;👇 சுத்த சன்மார்க்கத்தில், பூர்வத்தில் சொன்ன சமய மதங்கள் அல்லாதனவே அன்றி இல்லாதனவல்ல. இதன் அடிப்படையில் தான், எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக சுத்த சன்மார்க்கம் விளங்குகிறது என்கிறார்.
    உண்மையை நம்புதல் வேண்டும். உபாய மார்க்கமாக வணங்குதல் கூடாது. அப்படியே வணங்கினாலும் ஒன்றெனும் ஒன்றாகிய செம்பொருளை தான் குறிக்கும். ஆனால் நாம் அடைய வேண்டுவது சிவானுபவமே, அதனால் தான், முழு பயன் அருளாத உலகில் காணும் சமய மத மார்க்கங்களை சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்திலும் முக்கியத்தடைகளாக அறிவிக்கிறார் வள்ளலார். இவைகளுக்கு, வள்ளலார் கைப்பட எழுதிய திருஅகவல், விண்ணப்பங்கள், பாடல்கள், கடிதங்கள், விதி வழிபாடுகள், இன்னும் பல நேரிடையான ஒரிஜினல் ஆவணங்கள் உள்ளன. அவை அனைத்தும் சமர்பிக்க நாங்கள் தயார். எங்கே? எப்போது? …… முடியுமா?
    👇
    மார்க்கத்தார்களுக்கு கட்டளை: 👇
    வேதம், ஆகமம், சமயம், ஆரணம், இதிகாசம், புராணங்கள், அந்தங்கள், எவற்றிலும் சுத்த சன்மார்க்கத்தார்கள் லட்சியம் வைக்க வேண்டாம். நமக்கு காலமில்லை. மேலும் அவையின் மூலம் அடையப்போவது சிறு பயன்களே. நமது லட்சியம் உண்மை ஆண்டவரின் அடி நடு முடி நிலை காண்பதே அதனால் ஆன்ம அறிவைக் கொண்டே விசாரம் செய்ய வேண்டும். ஆண்டவரே வந்து உண்மை தெரிவிக்க வேணுமாய் வேண்டும் என்ற புதிய பொது வழியில் முயற்சிக்க வேண்டும். தலைவனைத் தொழுவதே கடமை.
    வேதம் ஆகமம் சமயம் புராணங்கள் சாடும் பாடல்கள்: இதோ:
    👇
     ஆறாம் திருமுறை / இது நல்ல தருணம்
    குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
    குதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
    வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது
    விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. இதுநல்ல
    👇
     ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
    வேதமு மாகம விரிவும் பரம்பர
    நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே
    👇
     ஆறாம் திருமுறை / திருக்கதவந் திறத்தல்
    வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
    விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
    ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
    உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
    ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
    எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே..
    👇
     ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
    நல்லாசொல் யோகாந்தப் பதிகள்பல கோடி
    நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி
    வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி
    வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி
    இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி
    இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி
    எல்லாம்பே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
    என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே.
    👇
     ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
    இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
    இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
    மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
    மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
    செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே…
    👇
     ஆறாம் திருமுறை / கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்
    நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும்
    நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும்
    ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம்
    ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும்
    வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற
    வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்
    காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால்
    கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
    👇
     ஆறாம் திருமுறை / சிவானந்தப் பற்று
    ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப
    நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும்
    சோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில்
    சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.
    👇
     ஆறாம் திருமுறை / உபதேச வினா
    வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும்
    மேவும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
    👇
     ஆறாம் திருமுறை / திருவடிப் பெருமை
    சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச்
    சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி
    ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி
    உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி
    ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய்
    அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை
    வேதியனும் திருமாலும் உருத்திரளும் அறியார்
    விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி
    👇
     ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை
    நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
    நண்ணுறு கலாந்தம்உடனே
    நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின்
    ஞானமெய்க் கொடிநாட்டியே
    மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம்
    முன்னிப் படைத்தல்முதலாம்
    முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம்
    மூர்த்திகளும் ஏவல்கேட்ப
    வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர்
    வாய்ந்துபணி செய்யஇன்ப
    மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல்
    வளத்தொடு செலுத்துமரசே
    சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே
    துரியநடு நின்றசிவமே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
    👇
     ஆறாம் திருமுறை / அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்
    வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே
    ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர்
    வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை
    ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர்.
    👇
     ஆறாம் திருமுறை / சுத்த சிவநிலை
    வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
    வேதாக மத்தின் விளைவறியீர் – சூதாகச்
    சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
    என்ன பயனோ இவை.
    👇
     ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு
    பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
    பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
    துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
    துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
    தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
    சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
    கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
    காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.
    👇
     ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்
    தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச்
    சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே
    வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே
    இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
    👇
     ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்
    வண்டணிபூங் குழல்அம்மை எங்கள்சிவ காம
    வல்லியொடு மணிமன்றில் வயங்கியநின் வடிவம்
    கண்டவரைக் கண்டவர்தம் கால்மலர்முத் தேவர்
    கனமுடிக்கே முடிக்கின்ற கடிமலராம் என்றால்
    பண்டகுநின் திருத்தொண்டர் அடிப்பெருமை எவரே
    பகர்ந்திடுவர் மறைகளெலாம் பகர்ந்திடுவான் புகுந்தே
    விண்டுலர்ந்து வெளுத்தஅவை வெளுத்தமட்டோ அவற்றை
    வியந்தோதும் வேதி யரும் வெளுத்தனர்உள் உடம்பே.
    👇
     ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு
    வேதா கமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன் றாக வே
    விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போக வே
    பூதா திகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்று மே
    பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்று மே.
    வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே
    வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே
    நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்ட தே
    நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே.
    👇
     ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை
    ஆகம வேதம் அனேக முகங்கொண்
    டருச்சிக்கும் பாதரே வாரீர்
    ஆருயிர் நாதரே வாரீர். வாரீர்
    👇
     ஆறாம் திருமுறை / இது நல்ல தருணம்
    குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
    குதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
    வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது
    விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. இதுநல்ல
    👇
     ஆறாம் திருமுறை / என்ன புண்ணியம் செய்தேனோ
    ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார்
    ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார்
    ஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதிஉன்னோ
    டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே. என்ன
     ஆறாம் திருமுறை / சின்னம் பிடி
    மீதான நிலைஏறிச் சின்னம் பிடி
    வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி
    வேதாக மம்கடந்து சின்னம் பிடி
    வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி
    👇
     ஆறாம் திருமுறை / அனுபவ மாலை
    நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல்
    நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ
    போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும்
    புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும்
    வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும்
    விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும்
    வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும்
    மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே.
    👇
     ஆறாம் திருமுறை / அனுபவ மாலை
    கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்
    கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
    ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகி ரண்டத்
    திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
    பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்
    பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
    வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே
    வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.
    👇
     ஆறாம் திருமுறை / அனுபவ மாலை
    என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி
    இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்
    அன்புறுசித் தாந்தநடம் வேதாந்த நடமும்
    ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன்
    இன்பமய மாய்ஒன்றாய் இரண்டாய்ஒன் றிரண்டும்
    இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித்
    தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பே ரந்தத்
    தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே.
    👇
     ஆறாம் திருமுறை / அனுபவ மாலை
    சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
    தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
    உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
    ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
    அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
    ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
    பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
    பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
    👇
     ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
    ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
    ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
     ஆறாம் திருமுறை / பரசிவ நிலை
    தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
    துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
    மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
    மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
    ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
    ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
    தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
    சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
     ஆறாம் திருமுறை / திருநடப் புகழ்ச்சி
    ஆரணமே ஆகமமே ஆரணஆ கமத்தின்
    அரும்பொருளே அரும்பொருளின் அனுபவமே அறிவே
    காரணமே காரியமே காரணகா ரியங்கள்
    கடந்தபெரும் பதியேஎன் கருத்தமர்ந்த நிதியே
    பூரணமே புண்ணியமே பொதுவிளங்கும் அரசே
    புத்தமுதே சத்தியமே பொன்னேசெம் பொருளே
    தோரணமே விளங்குசித்தி புரத்தினும்என் உளத்தும்
    சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
     ஆறாம் திருமுறை / பெறாப் பேறு
    அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    மனந்தருவா தனைதவிர்த்தோர் அறிவினில்ஓர் அறிவாய்
    வயங்குகின்ற குருவேஎன் வாட்டமெலாம் தவிர்த்தே
    இனந்தழுவி என்னுளத்தே இருந்துயிரில் கலந்தென்
    எண்ணமெலாம் களித்தளித்த என்னுரிமைப் பதியே
    சினந்தவிர்ந்தெவ் வுலகமும்ஓர் சன்மார்க்கம் அடைந்தே
    சிறப்புறவைத் தருள்கின்ற சித்தசிகா மணியே.
     ஆறாம் திருமுறை / அடைக்கலம் புகுதல்
    நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று
    வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்
    பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை
    ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.
     ஆறாம் திருமுறை / திருவடிப் பெருமை
    அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய்
    ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன்
    தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
    சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
    மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
    மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ
    இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன்
    என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
     ஆறாம் திருமுறை / திருவடிப் பெருமை
    நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம்
    நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம்
    ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம்
    இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே
    ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம்
    அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம்
    ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின்
    உண்மைசொல வல்லவரார் உரையார்என் தோழி.
     ஆறாம் திருமுறை / தோழிக் குரிமை கிளத்தல்
    கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை
    கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை
    விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்
    மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
    அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே
    அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே
    துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்
    சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.
     ஆறாம் திருமுறை / அடிமைப் பேறு
    ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குணர்த்துகின்ற
    காரணமும் காரியமும் காட்டுவித்தான் – பூரணன்சிற்
    றம்பலத்தான் என்னாசை அப்பன் எலாவல்ல
    செம்பலத்தை என்உளத்தே சேர்த்து.
     ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை
    காரணம் இதுபுரி காரியம் இதுமேல்
    காரண காரியக் கருவிது பலவாய்
    ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே
    அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே
    பூரண நிலைஅனு பவமுறில் கணமாம்
    பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே
    தாரணி தனில்என்ற தயவுடை அரசே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
     ஆறாம் திருமுறை / பந்தாடல்
    சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்
    சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
    விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
    வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
    பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
    பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
    அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
    அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
     ஆறாம் திருமுறை / கண்புருவப் பூட்டு
    ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு
    ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
    எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
    என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
     ஆறாம் திருமுறை / அனுபவ மாலை
    என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே
    எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
    பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர்
    புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ
    புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல்
    புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா
    உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான்
    உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே.
     ஆறாம் திருமுறை / அனுபவ மாலை
    கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்
    கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
    ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகி ரண்டத்
    திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
    பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்
    பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
    வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே
    வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.
    👇
     ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
    சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
    அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
    சாதியு மதமுஞ் சமயமுங் காணா
    ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி
    சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
    ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
    சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த
    அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி
    👇
     ஆறாம் திருமுறை / முறையீடு
    சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
    சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
    ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
    ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
    நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
    நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
    ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
    👇
     ஆறாம் திருமுறை / திருக்கதவந் திறத்தல்
    கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
    கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
    நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
    நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
    ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
    இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
    தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
    👇
     ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்
    இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற் கரியபே ரின்பம்
    தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் தயாநிதி தனிப்பெருந் தந்தை
    அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம்
    சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
    👇
     ஆறாம் திருமுறை / சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
    அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
    எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
    எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
    இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
    எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
    உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
    உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.
    👇
     ஆறாம் திருமுறை / ஆன்ம தரிசனம்
    சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
    சாத்திரக் குப்பையும் தணந்தேன்
    நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
    நித்திய வாழ்க்கையும் சுகமும்
    ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
    அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
    ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
    உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
    👇
     ஆறாம் திருமுறை / அபயத் திறன்
    புல்லவா மனத்தேன் என்னினும் சமயம்
    புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்
    சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர்
    சொப்பனத் தாயினும் நினையேன்
    கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன்
    கனகமா மன்றிலே நடிக்கும்
    நல்லவா எல்லாம் வல்லவா உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
    👇
     ஆறாம் திருமுறை / சிவானந்தத் தழுந்தல்
    இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
    இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
    மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
    வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
    தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
    சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
    அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
    அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
     ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
    சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
    தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
    ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
    ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
    ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
    ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
    சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
    தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
     ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
    இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே
    இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித்
    தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்
    தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே
    எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே
    இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே
    முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்
    முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே.
     ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
    மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
    மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
    பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
    பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
    விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
    வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
    சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
    தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
     ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
    கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
    கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
    கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
    காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
    பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
    பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
    அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
    காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
    தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
    தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
    கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
    குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
    எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
    ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
     ஆறாம் திருமுறை / இறை திருக்காட்சி
    சமயமும் மதமும் கடந்ததோர் ஞான
    சபைநடம் புரிகின்ற தனியைத்
    தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச்
    சத்துவ நித்தசற் குருவை
    அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா
    ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை
     ஆறாம் திருமுறை / திருவடி நிலை
    இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
    பிரமன்ஈ சானனே முதலாம்
    மகத்துழல் சமய வானவர் மன்றின்
    மலரடிப் பாதுகைப் புறத்தும்
    புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
    புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
    செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
    தெரிந்தனன் திருவடி நிலையே.
     ஆறாம் திருமுறை / அச்சோப் பத்து
    சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
    விடுவித்தென் தன்னை ஞான
    நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
    நிலைதனிலே நிறுத்தி னானைப்
     ஆறாம் திருமுறை / பொதுநடம் புரிகின்ற பொருள்
    தத்துவ பதியே தத்துவம் கடந்த
    தனித்ததோர் சத்திய பதியே
    சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
    தமக்குளே சார்ந்தநற் சார்பே
    பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்
    பெறல்அரி தாகிய பேறே
    புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து
    பொதுநடம் புரிகின்ற பொருளே.
     ஆறாம் திருமுறை / சிற்சத்தி துதி
    வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
    மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
    செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
    குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
     ஆறாம் திருமுறை / இறை பொறுப் பியம்பல்
    ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
    உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
    வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
    மன்றினை மறந்ததிங் குண்டோ
    ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
    ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
    பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
    பரிந்தருள் புரிவதுன் கடனே.
     ஆறாம் திருமுறை / சிவபுண்ணியப் பேறு
    மதத்திலே சமய வழக்கிலே மாயை
    மருட்டிலே இருட்டிலே மறவாக்
    கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
    கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
    பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
    பரிந்தெனை அழிவிலா நல்ல
    பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
    பண்ணிய தவம்பலித் ததுவே.
     ஆறாம் திருமுறை / சிவபுண்ணியப் பேறு
    குலத்திலே சமயக் குழியிலே நரகக்
    குழியிலே குமைந்துவீண் பொழுது
    நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து
    நிற்கின்றார் நிற்கநான் உவந்து
    வலத்திலே நினது வசத்திலே நின்றேன்
    மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம்
    பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்
    பண்ணிய தவம்பலித் ததுவே.
     ஆறாம் திருமுறை / ஆனந்தப் பரிவு
    சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
    ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
     ஆறாம் திருமுறை / தலைவி வருந்தல்
    இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
    ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
    எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
    என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
    நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
    நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
    அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
    அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.
     ஆறாம் திருமுறை / தோழிக் குரிமை கிளத்தல்
    சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே
    தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
    தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர்
    தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர்
    இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை
    இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி
    நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம்
    நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே.
     ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை
    பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
    பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
    பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
    பேதமுற் றங்கும்இங்கும்
    போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
    போகாத படிவிரைந்தே
    புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
    பொருளினை உணர்த்திஎல்லாம்
    ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ…
     ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை
    பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
    பவநெறி இதுவரை பரவிய திதனால்
    செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்
    செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
    புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
    புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
    தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
     ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை
    ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
    அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
    ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
    உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
    சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
    சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
    சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
     ஆறாம் திருமுறை / புனித குலம் பெறுமாறு புகலல்
    சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
    சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
    ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
    அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
    நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
    நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
    வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
    மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.
     ஆறாம் திருமுறை / சுத்த சிவநிலை
    சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
    நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் – ஓதுகின்ற
    பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
    வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
     ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு
    குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
    கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
    வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
    மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
    பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
    புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
    செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
    சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.
     ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்
    கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
    கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
    சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
    சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
    வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
    மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
    முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
    முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.
     ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்
    சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
    சத்தியச் சுத்தசன் மார்க்க
    வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
    விளம்பினேன் வம்மினோ விரைந்தே.
     ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு
    சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே
    சாற்றப் புகினும் சாலார்அருளின் பெருமை உன்ன வே
    அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே
    அனந்தத் தொன்றென் றுரைத்துஞ் சாலா நின்பொன் னடியி லே.
     ஆறாம் திருமுறை / இது நல்ல தருணம்
    மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது
    வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
    கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
    கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல
     ஆறாம் திருமுறை / அருள் அற்புதம்
    சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
    சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
    மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
    மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்
     ஆறாம் திருமுறை / அருட்காட்சி
    சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
    சோதியைக் கண்டேன டி – அக்கச்சி
    சோதியைக் கண்டேன டி.
     ஆறாம் திருமுறை / கண்புருவப் பூட்டு
    சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
    தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
    இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
    என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு. *****************
    வள்ளலார் கண்ட சமரச சுத்த சன்மார்க்கம் என்பது; உலகில் வெளிப்பட்டுள்ள வைதீக மதமோ, சைவம், வைணவம், சமணம், பவுத்தம் போன்ற சமயமோ, வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களோ, இதிகாசங்கள், புராணங்களோ, மற்ற உலக சமய, மத, மார்க்கங்களோ இல்லை. இவையின் கிளையோ இல்லை. ஏற்கனவே வெளிப்பட்டுள்ள துவைதமோ, அத்வைதமோ, ஓரிறை கொள்கையோ, விசிட்டாத்வைதமோ, இயற்கை விதியோ, தாசமார்க்கமோ, சற்புத்திர மார்க்கமோ, சக மார்க்கமோ இல்லை. மேலும், வெளிபடுத்தப்பட்ட சாதன வகைகள் சரியை, கிரியை, யோகமோ, ஞானமோ இல்லை.
    👇
    சுத்த சன்மார்க்கம் தனி கடவுள், தனி வழிபாடு, பெரும்பயன் கொண்டு விளங்கும் ஓர் உண்மை பொது நெறி மற்றும் தனி நெறியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய மார்க்கம்.
    👇
    அதே நேரத்தில் சுத்த சன்மார்க்க தனி நெறியானது; எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாகும்.
    👇
    இதன் கோட்பாடுகள் நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுகளால், வள்ளலாரின் தனி வழிபாட்டு விதிகள் படி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.
    👇👇
    வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் இதுவே எனத் தெளிக: APJ அருள்.
    👇👇👇
     உண்மை கடவுளின் உண்மை நிலை காணும் அறிவு மார்க்கம்.
     காலம் காணாது, படி நிலைகள் இல்லா சிற்றம்பலத்தில் நிற்றல்
     கடவுளையே உண்மையை தெரிவித்து விளக்கச் சொல்லும் தனி வழி,
     புறத்தில் உயிர்களிடம் தயவு காட்டும் உணர்வும் இரக்கமும் மட்டுமே
     அகத்தில் ஆண்டவரின் திருக்காட்சி கண்டு களித்து அன்பு செலுத்துதல்
     அண்ட பிண்டம் பற்றிய விசாரமும் கருணையில் முயற்சியுமே பயிற்சி
     நமது சிறுமை,தரத்தையும் கடவுளின் பெருமை,தரத்தையும் விசாரித்தல்
     எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்றப் பொது பிரார்த்தனை
     பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய புதிய / பொது மார்க்கம்,
     சாதி சமயம் மதம் இவை பொய், கடவுள் உண்டு என்ற தனி நெறி
     சாதிசமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் ஒழிக்கப்படவேண்டும்,இதுகட்டளை
     உண்மை அறிவு வழங்கி பொது நோக்கம் வருவித்தல்,இதுவே ஆசாரம்
     சமய மத அனுபவங்கள் இல்லாது கடந்து விளங்கும் தனி அனுபவம்
     ஆண்டவரே விரைந்து வந்து உண்மை தெரிவி, கண்ணீரால் வழிபாடு
     அக அனுபவமே உண்மை, உபாயமார்க்க வழி கூடாது, இது சத்தியம்
     ஓங்கும் பெருவெளி முழுதும் அறிவு மயம் அறிவின் வடிவம் ஒளி
     பெருவெளியில் ஒளியால் எல்லாம் தோற்றம் தொன்றியவையுள் ஒளி
     இயற்கை உண்மை இயற்கை விளக்கம் இயற்கை இன்பமாகிய ஜோதி
     சொர்க்கம் நரகம் விசாரமில்லாது சாகாக்கல்வி தரம் அறிதல் அறிவு
     மலம் ஐந்தும் வெல்லும் வல்லபம், கடவுள் ஒருவரே என்ற உணர்ச்சி
     சாகாத்தலை, வேகாக்கால்,போகாப்புனல் மூன்றும் ஞான யோகக்காட்சி
     ஒன்றேனும்ஒன்றாகிய தனிப் பதியாகிய பெருங்கருணை கடவுள்
     மரணமில்லாது வாழும் பேரின்ப பெருவாழ்வே அதி தீவிர விருப்பம்
     அவத்தைகளை நீக்கிக்கொண்டு நித்திய தேகம் பெறுவதே அருள்
     தினம்தினம் அண்ட பிண்ட திறம் கண்டு இறை நடத்தரிசனம் இன்பம்
     அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
     தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    –APJ ARUL—
  • காவியா ? இது சரியா?

    வள்ளுவருக்கு பெருமை “வெள்ளை” உடையே.

    ஆதாரத்துடன் நல்ல விசாரம் செய்வோம். அன்புடன் ஏபிஜே அருள்.

    அனைவருக்கும் இனிய
    திருவள்ளுவராண்டு 2057 வாழ்த்துக்கள்.
    காவியும் வெள்ளை ஆடையும் இந்த இரண்டும் இறை சிந்தனையாளர்கள் கட்டும் உடை தான்.
    ஆனால் இவைக்கான தமிழ்மொழி வழி ஞானிகள் தரும் விளக்கம் என்ன எனத்
    தெரிந்துக்கொள்வோம்.
    காவி கட்டுவது யார்? எதற்கு?
    தயவு இல்லாத கடின சித்தர்கள் ஆகையால் அவர்களிடத்து தத்துவ ஆபாசம் உள்ளது.
    தத்துவத்தை செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக்குறி அல்லது அடையாளமாகத் தரிப்பது
    காவி.
    வெள்ளை ஆடை எதை குறிக்கும்?
    வெற்றியான பிறகு அடைவது தயவு. ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை. தயவு வெள்ளை
    என்பது; சுத்தம், சுத்தம் என்பது நிர்மலம், நிர்மலம் என்பது வெள்ளை வருணம். வெள்ளை என்பது
    ஞானம், ஞானம் என்பது அருள், அருள் என்பது தயவு, தயவு என்பது காருண்யம்.
    இதுவே, தமிழ்மொழி வழி சுத்த ஞானி வள்ளலார் தரும் விளக்கம். வள்ளலார் சமயத்தில் இருந்த
    போது தன்னுடைய சாலையில் திருக்குறள் வகுப்பு எடுத்தார்கள். சாதி சமய மதம் ஆசாரம்
    சாத்திரம் இவை பொய் என்று கண்டு ஓர் புதிய மார்க்கம் கண்டு அதில் இறைவனை கருணை
    மட்டுமே கொண்டு வழிப்பட்டால், நித்திய வாழ்வு கிடைக்கும் என்றார்கள். எனக்குமுன்
    திருவள்ளுவரே சாகா கல்வி குறித்து சொல்லியுள்ளார்கள் என்கிறார் வள்ளலார்.
    அன்பர்களே! வள்ளுவரின் திருக்குறள் அன்று அரங்கேற்ற விடவில்லை. அதற்கு வேத
    மதத்தினர்களும், சமய மதவாதிகளும் சொன்ன காரணம் என்னவென்று தெரியுமா? வள்ளுவர்
    கொல்லாமையும், புலால் மறுத்தலுமே அறங்களில் முதன்மையானது என வள்ளுவர் சொன்னதே காரணம். அன்று தயவு இரக்கம் கருணை அன்பு அன்றைய ஆதிக்கம் செலுத்திய ஆன்மிகத்தில் முழுமையாக வெளிப்பட்டிருக்கவில்லை. ஆம், புராணக் கடவுளே மாமிசத்தை சாப்பிட்டார் என இருப்பதை காணலாம். மகா முனிவர் என்றழைக்கப்பட்டவர் மாமிசம் சாப்பிட்டு ஒரு அரக்கனை வதம் செய்த கதையுண்டு. அடியார்களுக்கு விருந்துகள் அசைவ சாப்பாடே போன்றதை ஆன்மீக கதைகளில் காணலாம்.
    இந்நிலையில் தான் திருக்குறள் அரங்கேற்றப்படவில்லை. ஆனால் வள்ளுவரோ கருணையே
    முதன்மை அறம் என்றார்கள். இந்நிலையில் அன்று வாழ்ந்த ஒளவையார் பாட்டியாரே மன்றத்தில் வாதாடி அதுவும் சில காம்பரமைஸ் பண்ணி தான் திருக்குறளை அரங்கேற்ற வைத்தார்கள்.
    அதாவது, முதன்மை அறங்களாகிய கொல்லைமை, புலால் மறுத்தல் குறள்களை நூல் உள்ளே

    வைத்ததும், கடவுள் மேல் வாழ்த்து பாடியும், இப்படி சரிச்செய்தப் பிறகே வள்ளுவரின் திருக்குறள் அரங்கேற்றப்பட்டது எனபதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
    அய்யன் வள்ளுவரை போற்றுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கொல்லாமை புலால்
    மறுத்தலை இவற்றை மதிக்காமல், திருவள்ளுவரை போற்றுவது முடியாது. குருடர்கள் ஒரு
    யானையைத் தொட்டு, யானையின் உருவத்தை தொட்டவரை கணக்கிட்டது போல் தான்,
    இவர்களின் அறிவு குறள் பற்றி இருக்கும். முழு உண்மையை உணரமுடியாது. ஆனால் வள்ளுவர்
    மற்றும் வள்ளலார் இவர்கள் எல்லா உயிர்களின் இன்பத்திற்கே இரக்கம் கொண்டவர்கள்
    ஆவார்கள். பொது நோக்க நெறியை கண்டவர்கள். வள்ளுவரை போற்றுபவர்கள் இரக்கம்
    குறித்தும் நல்ல விசாரத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில் இரக்க உணர்வை மதிக்க
    கற்றுக்கொள்ள வேண்டும். இப்ப சொல்லுங்க, நமது தமிழ்மொழி வழி வந்து, உலக உயிர்களுக்கான பொதுவான பாதையையும், கருணை நெறியையும் தந்து அருளிய உலக பொது நாயகர்கள் சுத்த ஞானிகள் இவர்களின் உடை காவியா? வெள்ளையா?

    காவி உடை யுத்த குறி, தத்துவங்களை செயித்து தயவை பெறுவதற்கு.
    வெள்ளை உடை தயவானவர்கள் உடை,வெற்றியின் அடையாளம்.

    ஆக, வள்ளுவரும், வள்ளலாரும் வெள்ளை உடை ஆடை உடுத்திய சுத்த ஞானிகள் ஆவார்கள்.
    வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பவர்கள் குறளின் திறம் தெரியாதவர்கள், கருணையின்
    உண்மை அறியாதவர்கள்.
    உண்மையை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். பின்பு அறிந்துக் கொள்ள வேண்டும்.
    அதன்பின்பு அனுபவித்து அருள் பெற வேண்டும்.
    இந்த உண்மையை தெரிந்துக்கொண்ட தமிழ்மொழி, தமிழ்நாடு அரசும் மக்களும், இந்த இரு
    ஞானிகளுக்கு வெள்ளை உடைகளை வழங்கி வணங்குகிறார்கள்.
    தவறு செய்வது மனித இயல்பு, திருத்திக்கொள்வது மனித அறிவு.
    அன்பும் அறிவும் முறையே கடவுளின் வடிவமும் சொரூபமும் ஆகும்.
    இது சத்தியம். இது சத்தியம்.
    மிக்கப் பணிவுடனே,

    ஏபிஜே அருள் @ இளங்கோ.

  • *அருள்விளக்கமாலை*

    *அருள்விளக்கமாலை*
    *பான்மறுத்து* விளையாடும் சிறுபருவத் திடையே
    பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
    *மான்மறுத்து* விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
    வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
    *மீன்மறுத்துச்* சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
    விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
    *ஊன்மறுத்த* பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
    ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
    – ஒருவாறு விசாரம் 
     
    #
    ஆகா, நல்ல விசாரத்திற்கானப் பாடல் இது. வாருங்கள் ஒருவாறு விசாரம் செய்வோம்.
    “பான் மறுத்து…”
    அதாவது பால் குடி மறந்து விளங்கும் பருவத்தில் உலக இச்சையிலே பதியாது,
    அடுத்து,
    “மான்” மறுத்து என்பது திருமால் – வைணவக் கொள்கையை மறுத்த சைவ சமய ஐந்தெழுத்து பஞ்சாக்கர அக்ஷரத்தில் லட்சியம் கொண்டு;
    அடுத்து,
    ” மீன் ” மறுத்து, தான் கொண்டிருந்த சிவன் (சைவ நெறி) கொள்கை மறுத்து
    ” விண் ஜோதி ” பெரு வெளிக் கொள்கை கொண்டு;
    அடுத்து,
    ” ஊன் மறுத்த” அதாவது உடம்பால் பெறும் பசுஞானக் கொள்கையான ஆன்மாவிலேயே கலந்து கிடக்கும் நிலையை மறுத்து,
    அது கடந்த ஓர் உயர்ந்த அறிவுடையோருக்கு கிடைக்கும் உடல் பெறும் தனிவடிவம் “ஒளி வடிவக்” கொள்கையை முடிபாக கொண்டேன்.
    “நல்ல விசாரமே” சுத்த சன்மார்க்கத்தில் வழிபாடு.
     
    — ஏபிஜெ அருள்.
  • மடாதிபதிகளின் உரைகளுக்கு மறுப்பு உரை – APJ அருள் ( தொடர்ச்சி..)

    ஒரு சுத்த சன்மார்க்க மாநாட்டில் அழைப்பின் பேரில் கலந்துக் கொண்ட பெரும்மதிப்பிற்குரிய உயர்திரு மடாதிபதிகள் தங்களின் ஆசி உரையில் வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை போன்ற திருவார்த்தைகளும் மற்றும் ஜீவகாருண்யம், ஆன்ம நேயம் இவைகளும் முறையே மகான்கள்  மாணிக்கவாசகர், சேக்கிழார் மற்றும் சாந்தலிங்க அடிகளாரிடம் வள்ளலார் பெற்றுக் கொண்டே மகாமந்திரம் மற்றும் உபதேசதம் நல்கியுள்ளார் என்றார்கள்.
    மற்றொரு மடாதிபதி அவர்கள், சுத்த சன்மார்க்கத்தில் சன்னியாச துறவு நிலை (தீட்சை?) பெற்றுக் கொள்ளுங்கள். நான் இதுவரை 451 பேருக்கு சந்நியாச துறவு நிலை  கொடுத்துள்ளேன். அதில் ஒருவர் மட்டுமே உங்கள் சன்மார்க்கம் சார்ந்தவர். அதனால் நீங்கள் எல்லோரும் வள்ளற்பெருமான் வாக்குப்படி சந்நியாச துறவு பெற்றுக் கொள்ளுங்கள் என்று அருளாசி உரை வழங்கினார்கள்.
    நிற்க! இதற்கான மறுப்பு உரையை நாம் இங்கு பணிவுடன் வழங்கும் கடமையில் மற்றும் கட்டாயத்தில் உள்ளோம். காரணம் அருட்பாவா? மருட்பாவா? என்று விவாதங்கள் வள்ளலார் காலத்திலேயே அவருக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு வந்தது. அதன் பின்பும் 1902 வாக்கில் மீண்டும் வந்தது. இவை அவரின் சமய ஸ்தோத்திரப் பாடல்களின் மீதே என்பது ஆச்சரியம், ஆனால் உண்மை.
    அடுத்து, ஞானசபை பூசகர் மற்றும் சிலரின் ஆதிக்கத்தில் வள்ளலார் வளாகத்தில் சாத்திர சடங்குகள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட காலம் இவை பல வருடங்கள் நிலைத்திருந்தது. வள்ளலாரை மீண்டும் சமயத்துக்குள் கொண்டுவரும் முயற்சி இதனால் முடிபான நெறியில் கட்டப்பட்ட சத்திய ஞான சபையில் வேத சடங்குகள் எல்லாம் புகுந்துப்பட்டுவிட்டன. நிலையத்து புத்தகத்தில் சமயநெறி சார்ந்தப்  பகுதிகள் புகுத்தப்பட்டது. இவற்றையெல்லாம் எதிர்த்து சுமார் இருபது வருடங்கள் இருபத்தியேழு வழக்குகள் தொடுக்கப்பட்டு நம்மால் பெறப்பட்ட ஆணையர் ஆணைகள், நீதிமன்ற உத்தரவுகள் மூலமே வடலூர் நிலையம் மீண்டது. அங்கே மீண்டும் வள்ளலார் வழிபாட்டு விதிபடி தரிசனம், சுத்த சன்மார்க்கம் நிலைப்பெற்றது.
    இந்நிலையில் தான் இந்த கடமையையும் அருளால் நாம் ஆற்ற வேண்டி உள்ளது.
    அருட்பெருஞ்ஜோதி
    “சுத்தம்” என்பதற்கு வள்ளலார் தரும் விளக்கத்தை நாம் ஒவ்வொருவரும் எல்லோரும் இங்கு தெரிந்துக் கொள்ள வேண்டும்.
    சுத்த சன்மார்க்கந்தான் யாதெனில்: சுத்தம் என்பது ஒன்றுமல்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்கு பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமய மத அனுபவங்களைக் கடந்தது. சத்மார்க்கம் என்னும் பொருட்கு அர்த்தம் நான்கு வகை: அஃது பூர்வாதி உத்தரோத்தர பரியந்தம். இதன் முக்கிய லட்சியம் சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானமாகிய சுத்த சிவ துரியாதீத நிலை பெறில் விளங்கும்.
    சுத்த சன்மார்க்கமாவது குணநிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதங்களினது அனுபவம் அன்று. சுத்த சன்மார்க்கம் என்பது சத் சன்மார்க்கமேயாம். சுத்தமென்பது ஒன்றுமில்லாதது. ஆதலால், சுத்தமென்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு முன் வந்தமையால், முன் சொன்ன சமய மதங்களைத் தாண்டினது. அதன் அனுபவங்களையும் கடந்தது.
    நிற்க! ஆக,
    வள்ளலார் அவர்தம் மார்க்கத்தில் சுத்த சன்மார்க்கத்தில் அருளால் கண்ட ஜோதி மற்றும் அருட்பெருஞ்ஜோதியை, சுத்த ஜோதி என்றும்  சுத்த அருட்பெருஞ்ஜோதி என்கிறார் சுத்தம் என்பதற்கான வள்ளலார். தந்த விளக்கத்தை மேலே கண்டோம். சமய சன்மார்க்கத்தில் வெளிப்பட்டுள்ள ஜோதியை மற்றும் அரும்பெருஞ்ச்ஜோதியை மறுத்து கடந்து, “சுத்த ஜோதி” என்றும் “சுத்த அருட்பெருஞ்ஜோதி” எனக்குறிப்பிட்டு அதன் பின்பு தான், பாடல்களில் ஜோதி என்றும் அருட்பெருஞ்ஜோதி என்றும் அழைத்திருப்பார் வள்ளலார். சன்மார்க்கம் என்று ஒருவர் சொன்னால் சொல்பவர் சார்ந்து பார்க்க வேண்டும். அவர் சமய சன்மார்க்கமா, மத சன்மார்க்கமா அல்லது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமா என்று. அது போல் தான் அருட்பெருஞ்ஜோதி.
    “சுத்த” அருட்பெருஞ்ஜோதி எனச்சுட்டும் பாடல்:
    உலகப்பேறு
    பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர்
    முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்
    சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர்
    சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே.
     
    சுத்த ஜோதி எனச் சுட்டும் சிவசிவ ஜோதி பாடல் :
    சிவமய மாம்சுத்த ஜோதி – சுத்த
    சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
    உவமையில் லாப்பெருஞ் சோதி – என
    துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
     
    சமயப்பற்று இருந்தாலும் உண்மை நிலையை காண இடைவிடாது நன்முயற்சி செய்தார் அல்லவா. அதில் அவர் கண்ட பொது உண்மை கடவுளின் சொரூபம் தான் அருட்பெருஞ்ஜோதி ஆகும். இந்த சொரூபத்தை அகத்திலே மட்டும் தான் கண்டு அனுபவிக்க முடியும் என்கிறார் வள்ளலார். கவனிக்க:
                 எங்கும் பரிபூரணமாக நிரம்பி விளங்கும் ஒளியை புறத்தில் காண முடியாது என்ற உண்மை வள்ளலாருக்கு முன்பே சமய மத ஞானிகளால் வெளிப்பட்டிருக்கிறது.
                 ஆண்டவரின் திருக்காட்சியை அகத்தில் தான் உணர முடியும் என்பதும்  வள்ளலாருக்கு முன்பே சமய மத ஞானிகளால் வெளிப்பட்டிருக்கிறது.
                 உலக சமய சன்மார்க்கங்களில் உயரிய மார்க்கமே சைவ சமயம். நிற்க!
    அகத்தில் இறைவனை கண்டு தரிசிக்க ஞானிகள் முயற்சிக்கும் போது ஏற்படுத்திக் கொண்ட மார்க்கம் (வழிகள்) பல. சில மார்க்கங்கள் இறைவனின் அடி, முடி காண முடியவில்லை என்றும் சில மார்க்கங்கள்  இறைவனின் திருக்காட்சி (பார்த்தளவில்) இங்கனமே என்றும், இன்னும் பல முடிபுகளை உலக மார்க்கங்கள் தெரிவித்துள்ளது. இதுவே அந்தந்த மார்க்கங்களின் அந்தம் எனப்படுகிறது.முக்கிய அந்தங்கள் ஆறாகும். 
    ஆக, அக அனுபவத்தை பெறுவதற்கான வழி முறையில் மற்றும் பெற்றுக் கொண்ட அனுபவங்களிலும் தான் சன்மார்க்கங்கள் வேறுபடுகிறது என்பதை முதலில் உறுதி செய்துக்கொண்டு தான், வள்ளலார் வழி குறித்த விசாரணைக்கு செல்ல வேண்டும்.
    இந்நிலையில் வள்ளலார் சமயம் தாண்டி செய்த அவரின் உண்மை நிலை குறித்த தேடுதலில் அருளால் அவர் கண்ட மெய் வழி எதுவெனில்;
    ஆண்டவரே வந்து உண்மை தெரிவிப்பதாக உள்ளது. ஆண்டவரின் அருளைப் பெறுவதற்கு எந்தொரு கட்டுப்பாட்டு ஆசாரமில்லாத கருணையை மட்டுமே சாதனமாகக் கொண்டு, ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் நம் கருத்தில் கருதி,  இடைவிடாது கருணை நன்முயற்சியில் வழிபாடு செய்யும் வழியை கண்டு அதில் பயணித்தார். அவ்வழியில் கண்ணீர் விட்டு தொழுது இரங்கி நின்றார்,வென்றார், நித்தியவாழ்வு பெற்றார் என்கிறது சுத்த சன்மார்க்கம்.
    இப்ப சொல்லுங்க; ஆண்டவரே வந்து உண்மை தெரிவிப்பதாக உள்ளது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார் தானே. இதற்கு சுத்த சன்மார்க்க ஒழுக்கத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்பதையும் எல்லோரும் ஏற்றுக் கொள்வார் தானே. எல்லோரும் ஏற்றுக்கொள்ளுவது என்பது தானே பொது ஆகும். ஆண்டவரே வந்து தெரிவித்தால் அது பூரணம் தானே. அது உண்மை தானே. இந்த நெறி உண்மை பொது நெறி தானே.
    அவ்வளவு தான் சுத்த சன்மார்க்கம். இதுவே சுத்த மெய்ஞ்ஞான யோகா. இது ஞானிகள் தரத்தில் இல்லை. எல்லோரும் பெறக்கூடிய சாதாரண தரத்தில் உள்ளது.
    இப்ப சொல்லுங்க இது மாணிக்க வாசகப் பெருமான் சொன்ன அரும்பெரும் சோதியா? உலக சமய மத ஆசார வழியா?
     
    கருணை – பெருங்கருணை
    சமய மத சன்மார்க்கங்களில் வெளிப்பட்டுள்ள கருணையையோ, பெருங்கருணை யையோ வள்ளலார் அங்ஙனமே எடுத்துக் கொள்ளவில்லை. அதை உள்வாங்கி, கடந்து வள்ளலார் கண்ட உண்மை அறிவு, உண்மை இரக்கம் உண்மை இன்பமாகிய சத்திய சொல்லே “தனிப்பெருங்கருணை” ஆகும். விசாரம் செய்வோம் உறுதிப்படுத்த.
                 வள்ளலார் நன்முயற்சியில் பயன்படுத்திய ஒரே சாதனம் “கருணை”.
                 வள்ளலார் நன்முயற்சியில் கண்ட உண்மை கடவுள் “தனிப்பெருங்கருணை”
     
    சுத்த சன்மார்க்கத்தில் சொல்லப்படும் கருணை: சமய மத சன்மார்க்கத்தில் பயன்படுத்தப்படும் கருணை போன்றது அல்ல இது சத்தியம்.
    வள்ளலார் கருணைக்கு தரும் பொருள் புதிய பொருள் எனலாம். வள்ளலார் கருணையை அறிவாக பார்க்கிறார். இந்த அறிவு புறத்திலும் அகத்திலும் எங்கும் நிறைந்துள்ள உண்மை அறிவு ஆகும். கருணைக்கு வள்ளலார் தரும் பொருள்;
    “கருணை என்பது’ எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் தயவும்,
    சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் விசாரம் அகத்தில் மட்டுமே. புறத்தில் எந்தொரு கடவுள் வழிபாடும், மந்திரம், தவம், விரதம் போன்ற எந்தொரு பயிற்சி முறைகளும்   கிடையாது. ஆனால், நமது அக வழிபாட்டுக்கு தகுதியை உருவாக்கிக் கொள்வது புறத்தில்தான் உள்ளது. ஆம், புறத்தில் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் உணர்வை வருவித்தலும், எல்லா உயிர்களிடத்து தயவு செயலுமே நம்மை அக விசாரத்திற்கு தகுதியை ஏற்படுத்திக் கொடுக்கும். இல்லையேல் அக விசாரம் கைக் கூடாது, ஆண்டவர் அருளும் கிட்டாது. இது சத்தியம் ஆகும்.
    ஆக, புறத்தில் எல்லா உயிர்களிடத்தும் தயவும், அகத்தில் ஆண்டவரிடத்தில் அன்பும் என்பதே கருணை ஆகும். (இதுஇயற்கை மற்றும் அறிவியல் சார்ந்த விளக்கம் ஆகும்)
    வள்ளலாருக்கு முன்பே, மேற்படி சொல்லப்படும் வழி நமது முன்னோர் சமய மத  ஞானிகளும் வியம்பி உள்ளனர் என்றாலும் அவர்களால் நீடித்த வாழ்வை தான் அவர்களின் முயற்சியில் பெறமுடிந்தது. அதற்கு காரணம், கருணை சாதனத்தை சமய ஞானிகள் கையாண்ட முறை வேறு. வள்ளலார் கருணை சாதனத்தை கையாண்ட முறை வேறு. அதற்குமுன் நாம் ஒன்றைத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
    சைவ நெறியில் சிவனின் அருளைப் பெறுவதற்கு வகுக்கப்பட்டுள்ள ஆகமங்கள் மொத்தம் 28 சிவாகமங்கள் உள்ளன. அவையாவன; சிவபேத ஆகமங்கள் (10) ஆகும்.
    காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம, அசிதம், தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சம, சுப்பிரபேதம் போன்றவை மற்றும் ருத்ரபேத ஆகமங்கள் (18 ஆகும்.: வீரம், நாசம், கிரணம், வாதுலம், சௌமியம், சாரோகியம், பரமேஸ்வரம், கிரீடம், சித்தம், அம்சுகம், சுப்பிரபதம், விசயம், நிஸ்வாசம, சுவாயம்புவம், தாளம், அர்ஜுனம், நிக்குவாம், சூட்சுமம் ஆகும். இவை சைவ சமயத்தின் ஆசாரங்கள் ஆகும். ஆக, இறை முயற்சில் கருணையுடன் இந்த ஆசாரங்கள் இவர்களுக்கு கட்டளையாக்கப் பட்டுள்ளது.
     
    ஆனால், வள்ளலார் ஓர் உண்மையை அருளால் கண்டார்கள். அதுவே சுத்த சன்மார்க்கத்தின் முதன்மையான மற்றும் முக்கிய பகுதியாகும். அதுஎதுவெனில்;
    கருணை நம்மிடையே விருத்தியாவதற்கு தடையாகவுள்ள பதின்மூன்று கட்டுப்பாட்டு ஆசாரங்களை கண்டு பிடிக்கிறார் வள்ளலார். இந்த பதின்மூன்று ஆசார வகைகளை விட்டு ஒழித்து, உண்மை அறிவைப் பெற்று, பொது நோக்கம் வருவித்துக் கொண்டால் தன் உண்மை கடவுளின் அருள் கிட்டும் என்கிறார் வள்ளலார். சுத்த சன்மார்க்கத்தார்கள் விட்டொழிக்க வேண்டிய ஆசாரங்கள் அவையாவன;
    ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள்.
    ஆக, விட்டொழிக்க வேண்டிய மேற்படி பதின்மூன்று சாதி சமய கட்டுப்பாட்டு ஆசார வகைகளும், உண்மை அறிவால், பொது நோக்கம் கொண்டு செய்யப்பட வேண்டிய விசாரத்தில் பயன்படுத்தும் சாதனம்  “கருணை” ஆகும் என்கிறது சுதசன்மார்க்கம்..
    இப்ப சொல்லுங்க, இது சேக்கிழார் மகான் சொன்ன கருணையா? சமய சன்மார்க்கச் சாதனமா?
    கடவுளின் நிலையை நம் ஞானிகள் பலவாறு திருக்குறிப்புகளால் வருணித்துள்ளனர் என்று தனது முதல் விண்ணப்பத்தில் வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்கள். அதன் ஒரு திருக்குறிப்புத்தான் “அருட்பெருஞ்ஜோதி” என்கிறார். வள்ளலார் தனது தனி (பொது) வழியில் கண்ட கடவுளை “தனிப்பெருங்கருணை” என்றுப் பெயரிட்டு அழைக்கிறார்.
    சுத்த சன்மார்க்கத்தின் மகாமந்திரம் வள்ளலாருக்கு அவர் விரும்பிய மரணமில்லா பெருவாழ்வை அருளியது. இந்த உண்மை பொது நெறியில் மட்டுமே சாகா வரம் பெற முடியும். நான் பெற்றேன் இது சத்தியம் இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
    ஆறாம் திருமுறை / அனுபவ மாலை
    எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
    இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
    கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
    கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
    நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
    ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
    செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
    சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
     
    எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியே சுத்த சன்மார்க்கம்:
     
    அன்பர்களே, இரு ஆயிர ஆண்டுகளுக்கு முன்பு உலக ஞானிகள் பல தவ யோக நிலையில் கடவுள் மற்றும் இயற்கைப் பற்றிய குறிப்புகளை தந்துள்ளது எவ்வளவு சிறப்பு மற்றும் அறிவு செயல் ஆகும். அதன் வழியில் தொடர்ந்து உண்மை குறித்த விசாரத்தில் வள்ளலார் புதியது காண்கிறார்கள். அவர் கண்டது உண்மையாகவும் உலக உயிர்களுக்கே  பொதுவாகவும் உள்ளது. அவர் கண்ட வழிபாடு ஆகட்டும், வள்ளலார் தான் அனுபவத்தில் கண்ட உண்மை கடவுளும் ஆகட்டும் இவை எல்லா சமய மத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறி மற்றும் உண்மை பதி என்கிறார். ஆம், இதை எல்லோரும் ஒத்துக் கொள்ளுவர் இது சத்தியம் எனலாம். இதோ:
     
    ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி
    சைவ முதலாக நாட்டும் – பல
    சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
    தெய்வம் இதுவந்து பாரீர் – திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
     
    இவரே கடவுள் இல்லை இல்லை அவரே கடவுள் என்று ஒவ்வொரு சமயங்களும், மதங்களும், மார்க்கங்களும் வியம்புகின்ற தனித்தனி கடவுளர் எல்லாமும் ஏற்று அவை மட்டுமல்ல மற்றவையையும் கொண்டு மற்றும் அவை அல்லாதனாவாயும் சொல்லப்பட்டு, ஒன்றேனும் ஒன்றாகிய ஒரு மெய்ப்பொருளே உண்மை கடவுளாக உள்ளது என்கிறது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம். இது அக அனுபவமே என்கிறது.
     
    தோழிக் குரிமை கிளத்தல்
    பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
    பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
    தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ
    சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
    திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்
    திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
    சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே
    திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே. 
     
    அதாவது,  உலக சமய மத மார்க்கங்களில் அவற்றின் கடவுள் கொள்கையில் அவர்கள் முடிபாக உரைத்து உள்ளதை அந்தம் என்பார்கள். அவை ஆறு அந்தங்கள் ஆகும். வள்ளலார் இவற்றில் சமரசம் காண்கிறார்கள். ஆம் வள்ளலார் கண்டது சமரச சன்மார்க்கமே. இதோ சமரசம் என்பதற்கு வள்ளலார் தரும் விளக்கம்.
     
    சமரசமென்பது யாது?  எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தில் நின்று மருவியதால் சமரசமாயிற்று. இதற்கு நியாயம்:
     
                 விந்து பரவிந்து இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த விந்துவானது போலும்:
                 சிவம் பரசிவம் இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த சிவமானது போலும்;
                 சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இவ்விரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம்.
                 ஆகவே ஷடாந்த சமரசசுத்த சன்மார்க்க மென்று மருவியது.
     
    ஆம் வள்ளலாருக்கு முன்பு வெளிப்பட்டிருந்த ஆறு அந்தங்களை வள்ளலார் சமரசம் செய்கிறார்கள். அதாவது ஐக்கியப்படுத்துகிறார்கள். ஐக்கியப்படுத்தும் முறைகளை காண வள்ளலாரின் உரைநடைப்பகுதி காண்க. ஆக,
     
    ஆறு அந்தங்களும் ஒன்றாக ஒளிரும் இடமே சமரசம்;
    ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
                 அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
                 அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
                 தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
                 செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
                 பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
                 போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
                 மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
                 வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
     
    இந்த சமரச ஒருமையில் தான் உலகம் ஓங்கும் என்கிறார் வள்ளலார்.
    ஆறாம் திருமுறை / திருப்பள்ளி எழுச்சி
    ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
    ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
    பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
    பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
    தெள்ளமுதம்தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
    எந்தாய் கருணை இது.
     
    இன்னும் பல உபதேசங்களை வள்ளலார் அருளியுள்ளார்கள். அவற்றில் ஒன்று;
     
    சமயத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல. மேற்குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏறவேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல், இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெற வேண்டுவது (சுத்த) சன்மார்க்கக் கொள்கை. மேலும் தனித்தலைவன் லக்ஷியந் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை யல்ல. உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை.
    ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி
    எம்பொருள் எம்பொருள் என்றே – சொல்லும்
    எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
    செம்பொருள் என்பது பாரீர் – திருச்
    சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
    ஆறாம் திருமுறை / அனுபவ மாலை
    சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
    தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
    உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
    ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
    அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
    ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
    பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
    பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
    ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
    ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை
    யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி
    ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை
    உருவாய் அருவாய் உருவரு வாய்அவை
    ஒன்றுமல் லீர்இங்கு வாரீர்
    என்றும்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்
    ஆறாம் திருமுறை / திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை
    ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
    உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
    அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
    ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
    என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
    யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
    ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
    ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
    அனுபவ மாலை
    துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம
    சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன்
    குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம்
    குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன்
    குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம்
    கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர்
    மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து
    வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி.           
    திருவடி நிலை
    அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
    அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
    படர்தரு விந்து பிரணவப் பிரமம்
    பரைபரம் பரன்எனும் இவர்கள்
    சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
    துணையடிப் பாதுகைப் புறத்தே
    இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
    ஏத்துவன் திருவடி நிலையே.
     
    ஆக, தத்துவங்களை கடந்த மார்க்கம்:
    ஆறாம் திருமுறை / இனித்த வாழ்வருள் எனல்
    தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
    சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா
     
    சமயம் மதம் இவை பொய் என வள்ளலார் சொல்லக் காரணம் என்ன?
    வள்ளலார் உண்மை கடவுள் நிலை குறித்து தொடர்ந்து விசாரம் செய்கிறார்கள். ஆம் தான் பற்றுக்கொண்டுள்ள சைவ சமயத்திலேயே முடிவாக இருந்து விடாமல் உண்மையின் பூரணக் காட்சியை கண்ணால் கண்டு களிக்க நன்முயற்சி செய்தார்கள்.
    நிற்க! நீங்கள் கேட்க கூடும். அவர் பற்று வைத்திருந்த சைவ நெறியில் உயர்ந்த ஞானிகளே (திருமூலர், தாயுமானவர் போன்றோர்) முடிபாக கொண்டு சைவ நெறியை  காட்டி, சிவத்தை வணங்கி வந்த போது, வள்ளலாருக்கு ஏன் இப்படியொரு தேடுதல்?
    தாசமார்க்கம், சற்புத்திர மார்க்கங்களில் கற்பனை வடிவங்களும், வீண் மந்திர ஆசாரங்களும் எனக் கண்டார் வள்ளலார். சகமார்க்கத்தில் சாதாரண யோக பயிற்சிகள் கடவுளின் உண்மையை காட்டாது என்கிறார். சன்மார்க்கத்தில் சமயமும் மதமும் உண்மையை புறம் கவியச் சொல்லவில்லை என்றும், உரைத்தவை உண்மையின் ஏகதேசமே, அதனால் சமய மதங்களை பொய் என்கிறார். நிற்க!
    ஆம், வள்ளலாருக்கு ஒரு அதிதீவிர விருப்பம் ஏற்பட்டது அது எதுவெனில்; மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவததைகளை நீக்கிக்கொண்டு எக்காலத்திலும் அழியாத நித்திய தேகத்தில் வாழ விருப்பம் கொண்டதே.
    ஆக, உண்மையின் பூரணக் காட்சியை கண்ணால் கண்டு களிக்கவும், நித்திய தேகத்தை பெற்று பேரின்ப பெருவாழ்வில் வாழவும் வள்ளலார் விருப்பம் கொண்டார். தன் விருப்பத்தை நிறைவேற்றும் வழியை தேட ஆரம்பித்தார்.
    அந்த வழி, தான் பற்று வைத்திருந்த சைவ நெறி உட்பட எந்தொரு சமய மதங்களில்  இல்லை என்றும், சமய மத ஞானிகள் அவர்கள் முயற்சியில் நீடித்த வாழ்வை தான் பெற்று இருந்தனர் எனக் கண்டார் வள்ளலார். தான் விரும்பிய மரணம் தவிர்த்து வாழுவதற்கான வரத்தை ஆண்டவரே தருவதாகவுள்ளது என்றும், அதனால்  ஆண்டவரை நேரில் கண்டே, நாம் வரம் பெற வேண்டி உள்ளதையும் அருளால் அறிவிக்கத் தெரிந்துக் கொண்டார் வள்ளலார்.
    ஆக, சமயமத மார்க்கங்கள் நல்காத ஒரு வரத்தை தான் வள்ளலார் சுத்த சன்மார்க்க தனிச் சாதனம் ஆசாரமில்லா கருணையில் பெற்றுத் திகழ்கிறார் எனலாம்.
     
    மரணம் நீக்கும் மாமருந்து நல்குவது இந்த சமரசத்திலே, இங்கு மட்டுமே.
     
    ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு
    மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
    மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
    சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
    சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
    எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
    இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
    பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
    பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.
    ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு
    கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
    கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
    உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
    உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
    விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
    மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
    எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
    இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
    ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு
    சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
    திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
    ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
    உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
    வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
    மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
    சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
    தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.
     
    ஜீவகாருண்யம் மற்றும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை:
     
    அடுத்து; மடாதிபதி அடிகள் ஆற்றிய உரையில் ஜீவகாருண்யம் மற்றும் ஆன்ம நேயம் இவைகள் அடிகள் சாந்தலிங்கம் மகானிடமிருந்து பெற்றார் வள்ளலார். ஆம், இது சரியே எனலாம். வள்ளலார் சொல்கிறார்கள்; சமய சன்மார்க்கங்களின் இயல்புகளாக உள்ளவை எவையெனில்; கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரியநிக்கிரகம், ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருண்யம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இவ்வண்ணம் வாச்சியானுபவம் பெற்றுச் சொரூபானுபவமாகிய சாதனமே சமய சன்மார்க்கம்.
     
    ஒருவர் எந்தொரு சமயம் மத மார்க்கங்களில் இருந்தாலும் எந்தொரு கடவுள் கொள்கையில் பற்றுக் கொண்டிருந்தாலும் அவர்களிடத்தில் இருக்க வேண்டிய இயல்புகளே ஜீவகாருண்யம் மற்றும் ஆன்மநேயம் ஆகும். இதை அவர்கள் கட்டாயப் படுத்தவில்லை, ஆனால், ஆசாரங்கள் கட்டாயம். இது வேதனை மற்றும் வேடிக்கை.
    வள்ளலார் அடிப்படை ஒழுக்கங்களை சமயத்தில் பெற்றார் என்பது சரியே. ஆனால் வள்ளலார் கண்ட உண்மை கடவுள், உண்மை கடவுளின் அருளாகிய சாகா வரம் மற்றும் பூரண சித்திகள் இவையெல்லாம் வள்ளலாரின் தனி நெறி உண்மை பொது வழி மூலமே என உணர்க. வாரீர் வாரீர் வடலூருக்கே.  —  நன்றி APJ அருள்.
     
    வள்ளலார் மார்க்கத்தார் பெற்றுக்கொள்ள வேண்டியது சந்நியாச துறவு நிலை என்பதற்கான மறுப்பு உரை. இதை பணிவுடன் தெரிவிப்பது
    எனது கடமை மற்றும் அருளால் கட்டாயம்.
     
    வள்ளலார் உபதேசித்தது: சமாதிப் பழக்கம் பழக்கமல்ல. சகஜ பழக்கமே.
     
    ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
    முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
    அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
     
    பரிபாஷை – இவை பலனின்மை: 
    அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அக்ஷர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாஷையாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது. பாவனாதீதாதீதம், குணாதீதாதீதம், வாச்சியாதீதாதீதம், லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கப் பொருளாகிய அருட்பெருஞ் சோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனி வெளிப்படும்.
    சந்நியாசமும் காவி உடையும்
    மூன்றாசைகளில் விசேஷம் பற்றுள்ளவர்களாகித் தயவில்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்படி குற்றமற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை. சந்நியாசி காவி வேஷ்டி போடுவதற்கு நியாயம்; தயவில்லாத கடின சித்தர்களாகையால் தத்துவாபாசமுள்ளது; தத்துவத்தைச் செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக்குறி அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி. வெற்றியான பிறகு அடைவது தயவு. ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை. தயவு வெள்ளையென்பதற்கு நியாயம்; தயவென்பது சத்துவம், சத்துவமென்பது சுத்தம், சுத்தமென்பது நிர்மலம், நிர்மலமென்பது வெள்ளைவருணம், வெள்ளை என்பது ஞானம், ஞானமென்பது அருள், அருளென்பது தயவு, தயவென்பது காருண்யம்.
     
    நன்றி, பெரும்மதிப்புகுரிய சமய சன்மார்க்கச் சொன்றோர்களே, தாங்கள் இவ்வாறு கூறியது வள்ளலாரின் உண்மை பொது நெறி குறித்த நல்ல அறிவு  விசாரத்திற்கே. எல்லாம் தெரிந்தே நடக்கிறது. அருள்செயலே. இனி சுத்த சன்மார்க்க காலமே..
     
    உங்கள் ஆசியுடன் பணிந்து மற்றும்
    அருளால் உறுதியுடன் :
    APJ அருள்@ N. ELANGO
  • சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலார் கண்டது சமய கடவுளா? தனி கடவுளா? பெரும்மதிப்பிற்குரிய சமய சான்றோர்கள் விழாவில் வள்ளலாரைப்பற்றி சொல்வது உண்மையா? — APJ அருள்

    நம் அன்பர்களால் சில நாட்களுக்கு முன்பு ஒரு சுத்த சன்மார்க்க மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது.

    அம்மாநாட்டிற்கு சைவ சமயப் பணியில் தங்களை முழுதும் ஈடுபடுத்திக்கொண்டு வருகின்ற பெரும் மதிப்பிற்குரிய மடாதிபதிகள் ஆதினங்கள் இவர்களை விழா நடத்துநர் அழைத்திருக்கிறார். அழைப்பின் பேரில் கலந்துகொண்டு, விழாவில் அருளாசி உரை வழங்கும் போது, ஒரு மடாதிபதி சுவாமிகள் கீழ்வருமாறு சொன்னார்கள்;

    “…….. ஒரு காலத்துல சொல்லுவாங்க, இராமகிருஷ்ணருக்கு சிறப்பான முறையில் நல்ல ஒரு சீடராக விவேகானந்தர் அமைந்தார். அதன் காரணாமாக இராமகிருஷ்ணரின் கருத்துக்கள் உலகமெங்கும் சென்று சேர்ந்தன. அதே போல தான், இரண்டு நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.. ஆனாலும், .வள்ளலாரின் கருத்துக்களை .. அன்னம்பாலிப்பது மூலம் .. சமய வகுப்புகள் நடத்துவது மூலம் சீரிய தொண்டை ஆற்றிக்கொண்டு உள்ளீர்கள். பாராட்டுக்குரியது ..

    மாணிக்க வாசகரிடமிருந்து “அரும்பெருட்ஜோதி”யையும், சேக்கிழாரிடமிருந்து “கருணை”யையும், வள்ளலார் எடுத்துக்கொண்டு “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” உருவாகியுள்ளார். அதுவே இங்கு மந்திரமாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

    வள்ளலார் திருஞானசம்பந்தரை ஞான குருவாக கொண்டார். முருகப் பெருமானிடம் அளவில்லாத ஈடுபாடுக் கொண்டிருந்தவர் தான் வள்ளற்பெருந்தகை…..

    மேலும், சாந்தலிங்கப் பொருமான் கொலை மறுத்தல் பற்றி ஒரு நூலிலே தந்துள்ளார்கள். அதை வள்ளலார் அவர்கள் ஜீவகாருண்யம் என்ற அடிப்படையில் சேர்த்தார்கள். அதே மாதிரி, அவிரோத உந்தி யில் சாந்தலிங்க அடிகள் சொன்ன’ நமக்குள் ஒருமைப்பாடு இருக்க வேண்டும், என்றதை, ஆன்ம நேய ஒருமைப்பாடு என்று வள்ளலார் தந்திருக்கின்றார்கள்…..” ஜீவகாருண்யம், ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை இன்றைய சூழ்நிலைக்கு உலகிற்கு தேவை…என்றார்கள்.

    நிற்க! …. ஆக,🤔

    ஜீவகாருண்யம், ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை, சுத்த சன்மார்க்கத்தின் மகாமந்திரத்திற்கான அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இவற்றையெல்லாம் வள்ளலார், முறையே…சாந்தலிங்க பெருமான், மாணிக்கவாசகர், சேக்கிழார் இவர்களிடமிருந்து பெற்றவையே, என்றார்.

    இவற்றை நாம் (அதாவது சமய வகுப்புகள் எடுத்து) உலக மக்களிடம் எடுத்துச் சென்று சேர்க்க வேண்டும் என்று மாநாட்டை வாழ்த்தினார்??? அய்யா.

    அன்பர்களே! மேற்படி அய்யா மடாதிபதி அவர்கள் சொன்னது தான் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் என்றால்,

    Ø சுத்த சன்மார்க்க நெறி எப்படி தனி நெறியாகும்?

    Ø எல்லா சமய மத மார்க்கங்களுக்கும் வள்ளலார் சொன்ன நெறி எப்படி உண்மை பொது நெறி ஆகும்?

    அதனால் தான், படித்து படித்து சொன்னோம் வள்ளலார் சுத்த சன்மார்க்க மாநாடு எனப்பெயரிட்டு நடத்தும் போது, சமய மற்றும் மத சன்மார்க்க நெறியை பரப்பும் தொண்டுகளை செய்கின்ற பெரும்பதிப்பிற்குரிய மடாதிபதிகள், ஆதினங்கள், ஜீயர்கள் இவர்களை நாம் அழைத்தால், அவர்கள் வள்ளலாரை, அவரால் கைவிடப்பட்ட சமயத்திலேயே, ஆகமங்களிலேயே வள்ளலாரை மீண்டும் காட்டி உரை நிகழ்த்தி சென்று விடுவார்கள்.

    அதே போல் தீவிர கடவுள் மறுப்பாளர்கள் இவர்களை அழைத்தால், வள்ளலாரை வேதாகமத்தினர் எரித்து விட்டனர் என்பர்.

    அன்பர்களே,

    நாத்திகத்திலும் அதன் சான்றோர்கள் மனித சமூகத்தின் உயர்வே முக்கியம் என்கின்றார்கள்.

    அதே போல்,

    எல்லா சமய மத மார்க்கங்களும் கடவுள் பற்றியே வியம்புகின்றன. அவை நல்லதையே போதிக்கின்றன.

    இவற்றையெல்லாம் நாம் மதிக்கிறோம். மதிக்க வேண்டும். இது வேறு.

    ஒருவேளை எல்லோரையும் அழைக்க ஆசை என்றால்;

    அனைத்து சமய மத மார்க்க நல்லிணக்க மாநாடு என்று பெயரிட்டு நடத்தினால், எல்லோரையும் அழைத்து மகிழலாம்.

    ஆனால் சுத்த சன்மார்க்க மாநாடு என்று போட்டுவிட்டு மேற்படியானவர்களை அழைத்தால் குழப்பங்களும் கூச்சலும் தான் மிஞ்சும். நெறிக்கு வியர்த்துத்தம்.

    இன்னொரு மதிப்பிற்குரிய சந்நியாசி அய்யா அவர்கள் அதே விழாவில் சொன்னார்கள்;

    நான் இதுவரை 451 பேருக்கு சந்நியாச துறவு நிலை (தீட்சை?) வழங்கி உள்ளோம். அதில் உங்கள் சன்மார்க்கி ஒருவரே பெற்றுள்ளார்? 😡. வள்ளலார் சித்தாந்தம் படி நீங்கள் சந்நியாசம் துறவு நிலை பெற வேண்டும், என்று உபதேசித்து சென்று விட்டார்.

    👉நமக்கு சந்நியாசம் உண்டா? 👉தீட்சை,உண்டா? 👉துறவுறம் பற்றி வள்ளலார் என்னச் சொல்லியுள்ளார்? 👉இதை பற்றி இவர்கள் சிந்தித்தார்களா?

    மொத்தத்தில்; பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார் கண்ட உண்மை பொது நெறி உள்ளது உள்ளபடியாக தீவிர சமய சான்றோர்களால் வெளிப்படாது என்கிறோம்.
    அவர்களின் பற்று நெறியை தான் பேசுவார்கள்.

    வள்ளலார் முடிபாகச் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. 👇👇

    உண்மை சொல்ல வந்தனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை. மேலும் சொல்கிறார் வள்ளலார்;

    இதுகாறும் என்னோடு பழகியும் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் இன்னதொன்று தெரிந்துக்கொள்ளவில்லையே, என்கிறார்கள்.

    👉வள்ளலார் சொல்ல வந்த அந்த உண்மை என்ன?

    👉சுத்த சன்மார்க்கத்தின் ஒழுக்க நெறி என்னவென்று வள்ளலார் சொல்கிறார்கள்?

    இவைகளைப் பற்றியே நமது வள்ளலார் சுத்த சன்மார்க்க மாநாடுகளில் பேசப்பட வேண்டும். கருத்தரங்கள் மூலமாக, சொற்பொழிவுகள் மூலமாக, பாடல்கள் மூலமாக, விண்ணப்பங்கள் வாசிப்புகள் மூலமாக🙏

    மதிப்பிற்குரிய மடாதிபதிகள் சொன்னது போன்று தான் சுத்த சன்மார்க்கம் கொள்கை களை பெற்று உள்ளதா?

    வள்ளலாரின் மகா மந்திரத்தின் தனிச் சிறப்பு என்ன?

    சமய சன்மார்க்கக்கடவுளை தான் வள்ளலார் கண்டாரா?

    வள்ளலாரின் தனி மற்றும் பொது நெறி என்ன?

    அடுத்த விசாரத்தில் காண்போம். ஆதாரங்களுடன் உறுதியாக மற்றும் உண்மையாக அருள் துணையுடன்.

    அன்புடன் ஏபிஜே அருள்.

    எல்லாம் எல்லோரும் கடவுளின் அம்சங்களே!
    உயிர் இறக்கம் கொண்டவர்கள் நம்ம அவர்களே!
    🙏🙏