Category: tamil katturai APJ arul

கட்டுரைகள் APJ அருள்

  • நாம் செய்த குற்றம் என்ன?

    corona-unmai

    சிறையில் இருக்கும் கைதிக்கு கூட தெரியும் தான் செய்த குற்றமும், அதற்கு கிடைத்த தண்டனையும்.
    ஆனால் இன்று வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் செய்த குற்றம் என்ன? அதற்கு பெற்றுள்ள இந்த தண்டனைக் காலம் எவ்வளவு? எனத் தெரிந்திருக்கவில்லை.
    இந்தளவு கொடூர தண்டனை எதற்காக நாம் பெற்று உள்ளோம் என சிறிது அளவிலாவது சிந்தித்து பார்க்கிறோமா?
    இல்லையே.
    ஏதோ ஜாமீனில் வரும் நாளுக்கு காத்திருப்பது போல்
    ” மருந்து ” க்குகாக காத்திருக்கிறோம்.
    என்ன நிலைமையிது?
    என்ன அறிவு இது?
    மனித இனம் பெற்றுள்ள இந்த பெருந் தண்டனைக்கு செய்த குற்றம் என்ன? என்பதை உணரும் வரை இத்தண்டனை காலமும் நீடிக்கும்.. என ஒருவேளை இருந்தால்?
    ஆம்,
    உண்மை அப்படி தான் இருக்கும். மனித இனத்திற்கு
    தண்டனை வழங்கியது
    ” இயற்கையே”. நாம் செய்த குற்றங்கள், அவையாவன;
    # வளங்களை அழித்தது .
    # கொள்ளை அடித்தது.
    # மற்ற உயிரினங்களின் உரிமையை பறித்தது
    # மற்ற உயிர்களை கொன்றது
    # சாதி சமயமதம் தேசம் சாத்திரம் முதலிய ஆசாரங்களினால் பொதுநோக்கம் இல்லாமல் இருந்தது
    # கலை அறிவை மட்டும் மதித்து, இயற்கை குணமாகிய கருணையை மதியாது இருந்தது….
    ஆம்,
    மனிதன் செய்த இந்த முதன்மை குற்றங்களுக்கே இப்போது நாம் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம்.
    இப்போதே உண்மை உணருவோம். எல்லாம் வல்ல இயற்கையை போற்றி வணங்குவோம் –
    நம் ” இறைவனாக”.
    இயற்கை வளங்களை பாதுகாப்போம் “நம் செல்வமாக”.
    நம் உயிர் போல் மற்ற உயிர்களையும் பாவிப்போம்
    ” கருணை அறிவாக”.
    உண்மை தெரிந்துக் கொள்ள பொது நோக்கம் வருவித்து கொள்வோம் – ” நெறியாக”.
    ஆம்,
    இங்ஙனம் நாம் முடிவு எடுத்தால் ” கொரனா ” விலிருந்து விடுபடக்கூடும் என உண்மை அப்படி இருந்தால்..? இப்படி சிந்திப்பதில் நியாயமும் ” மருந்தும்”
    இதுவே என நினைப்பதில் தவறு இல்லை எனக் கருதுகிறேன்.
    இங்ஙனமாக,
    இயற்கையின் உண்மை விளக்கம் இன்பத்தையே இறைவனாகக் கொண்டு, கருணை ஒன்றையே சாதனமாக கொண்டு, ஆசாரங்கள் விடுத்து, சாதி பொய் என உரைத்து, எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவித்து, அவத்தைகளை நீக்கிக் கொள்ள இயற்கை இறைவனிடம் அருள் பெற நன்முயற்சி செய்யச் சொல்லும் ஓர் உண்மை பொது நெறியை (சுத்த சன்மார்க்கத்தை) கண்டவர் வள்ளலார்.
    உண்மையை தெரிந்துக் கொண்டால், அவத்தைகள் விரைந்து நீங்கும். இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
    அன்புடன் ஏபிஜெ அருள்.

  • ” சிவம் ” என்பது எல்லாருக்குமான ஒரு பொது தமிழ் சொல்

    sivam-common-word

    ” சிவம் ”
    என்பது எல்லாருக்குமான ஒரு பொது தமிழ் சொல்.
    எந்தொரு குறிப்பிட்ட சமய மத மார்க்கத்திற்கு மட்டும் பாத்தியப்பட்டச் சொல் கிடையாது. முடியாது.

    ” சிவம் “
    என்பதற்கு தமிழ் அகராதி தரும் பொருள் காண்க:-

    பொதுவில்:

    “நன்மை”

    Goodness,
    Prosperity and
    Auspiciousness.

    ஆன்மீகத்தில்:
    முத்தி – final deliverance
    அறிவுரு
    சுயம்பிரகாசம்
    Pure Intelligence, Highest state – “GOD”.

    மற்றவை;

    1.யோகம் 27 ல் ஒன்று
    2. குறுணி
    3.தத்துவங்களில் ஒன்று.

    ஆக,
    “சிவம்”
    என்பது மிகவும் சிறப்பாக, பொதுச் சொல்லாக, பயன்படுத்தக் கூடியச் சொல் ஆகும்.

    காரணம்;

    சாதி சமய மதம் பொய் பொய்யே என்ற வள்ளலார் தன் சுத்த சன்மார்க்கத்தில் இயற்கையின் உண்மை விளக்கம் இன்பம் இவையே இறைவனாக காட்டுகிறார்கள். அறிவின் வடிவம் ஆதிஅந்தமில்லா ஜோதியாகிய அருளே “ஆண்டவர்” என்கிறார்கள்.
    ஆக,
    அறிவு ஒளி,
    இயற்கை,
    அருள்,

    – இவையே

    ஆண்டவரின்;

    – நிலை
    – உண்மை
    – அனுபவம்

    என்கிறார் வள்ளலார்.

    இந்த உண்மை பொது கடவுளை
    ” மெய்ச் சிவம் ”
    ” சுத்த சிவம் ”
    ” சிவபதி”
    என பலவாறு அழைக்கிறார் வள்ளலார்.

    ஆக,
    நன்மை எதுவோ அதை சிவம் எனலாம்.

    ஆன்மீக நம்பிக்கையில்,
    உயர்ந்த அறிவு ஒளியாகிய சுயப்பிரகாச மேன்மை வஸ்துவை
    ” சிவம் ” என்கிறது தமிழ்.

    மற்றொரு உண்மை
    இங்கு உள்ளது.

    தமிழ் மொழி,
    யாரை கடவுள் என்று காட்டுகிறது என்றால்
    “உயர்ந்தது”
    ” உயர்ந்த அறிவு ”
    ” முடிபானது ”
    ” சுயப்பிரகாச ஒளி சொரூபம் ”
    என்ற பொருளையே கடவுளுக்கு தந்துள்ளது தமிழ்.

    இந்த மொத்தத்தையும் இயற்கையில் கண்டார் வள்ளலார்.

    அதனால் தான்,
    வள்ளலார் தெளிவாக சொன்னார்கள்;

    சிவானுபவத்தை எளிதில் நல்கும்
    ” தமிழ் ”

    ஆக,
    நாத்திகத்தார், ஆத்திகத்தார்,
    மற்ற எல்லோருக்குமானது
    ” சிவம் “.

    பொதுவில்,
    நன்மை செய்பவர், அவருக்கு பெயர் ” சிவம்”

    நம்பிக்கையில்,
    சுயப்பிரகாசமாகிய அறிவுருவாகிய ஜோதி சொரூபம் அது கடவுள்.
    இக்கடவுளின் பெயர் சிவம்.
    நன்றி:
    – ஏபிஜெ அருள்.
    வாழ்க சிவம்!
    வாழ்க தமிழ்!

  • ” கொரானா ” விற்கான – இரு மருந்து. Corona Medicine

    cure-corona

    cure-corona1

    ” கோரானா ” விற்கான
    ‘இரு மருந்து’
    – கருணை சபை சாலை.

  • ” சும்மா ” தானே இருக்கிறாய் ? சிந்தித்தால் என்ன?

    unmai-visaram

    ” சும்மா ” தானே இருக்கிறாய் ?
    சிந்தித்தால் என்ன?
    — இ.
    ஆம், ” கோரானா நோய் ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே இருப்பவன் நான்.

    தூக்கம் கலைந்து எழுந்து, கடவுளை வணங்கி, டிபனை வயிற்றில் நிரப்பி, சந்தோசமா டிவியில் சினிமா, சீரியல், நண்பர்களிடம் செல்லில் பேசி, இடையில் கொடுக்க ப்பட்ட நொறுக்கு தீனிகள், மீதி படம், சூப்பர் சாப்பாடு, ஒரு குட்டி தூக்கம், அதை கலைக்க டீ, வடை, மீண்டும் டிவி, செல், புத்தகம் படித்து, சுவையான இரவு டிபன், டிவி, உறக்கம் வந்ததால் உறங்கச் சென்று, இங்ஙனம், இங்ஙனம் மட்டுமே நாள்கள் கடந்து செல்கிறது.

    நேற்று இரவு வசூலில் சாதனை படைத்த படத்தை மீண்டும் பார்த்து தூங்கச் சென்றேன்.

    ஒரு குரல்…

    ” சும்மா தானே இருக்கிறாய்.

    கொஞ்சம் சிந்தித்தால்தான் என்ன? ”

    யாரு என்றேன்?….

    ” யாராய் இருந்தால் என்ன, பதில் சொல்லு…”

    — என்றது குரல்.

    சும்மா நான்.. இருக்கலியே…என்றேன்.

    “அடச்.. சீ…

    சிந்தித்தாயா… சிறிதாவது”

    — என்றது குரல்.

    குரலுக்குரியவரை பார்க்க திரும்பினேன்… கட்டிலிருந்து கீழே விழுந்ததில், தெரிந்துக் கொண்டேன் ” கனவு ” என்று.

    ஆனால் அந்த வார்த்தைகள்.

    தினம் நான் செய்த வேலைகள்..??

    காலை எழுந்தேன். கடவுளை வணங்கினேன்.

    — இதில் என்ன சிந்திக்க வேண்டும்?

    அடுத்து,

    சாப்பாடு, டிவி யில் செய்தி, படங்கள் சீரியல்கள்.

    — இதில் என்ன சிந்திக்க வேண்டும்?

    அன்றைய இரவு வந்தது…..

    படம் பார்த்ததால், மனம் பாதித்து, தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு..,
    அதிகாலையே எழுப்பப் பட்டேன்.

    எழுந்து,

    நான் தினம் வணங்கும் தெய்வப் படத்தை கண்டேன்.

    உற்று நோக்கினேன். இந்த உலகில் எத்தனையோ சமயமதங்கள்,மார்க்கங்கள் உளது. அதில் பல்வேறு கடவுளர்…..
    ஆம்,
    தனிமையும், பொழுதும் என்னை உள்ளழுந்தி சிந்திக்க வைத்தது. என் அறிவை இன்று தான் உணர்ந்தேன். என்னுள் ஒரு விசாரம் தானாகத் தொடங்கியது.

    ……….

    எனக்கு காட்டப்பட்ட கடவுளரிடத்தில் நம்பிக்கை கொண்டு தினம் வணங்கி வந்தேன்.

    ஆனால்,

    கடவுளை பற்றி நான் சிந்திக்கவே இல்லையே ?

    உலகில் எண்ணிலடங்கா சமயமத மார்க்கங்கள். அவற்றில் பல கடவுளர்.
    இந்த கடவுளர் மத்தியில்
    உண்மை கடவுள் யார்? அக்கடவுளின் உண்மை என்ன?
    சாதி சமயங்களில் நான் வைத்த பற்று, கொடுக்கும் காணிக்கை, பலி,
    செய்யும் வழிபாடு, சடங்கு சம்பிரதாயம்,
    இவை சரியா? நான் வணங்கிவரும் கடவுளின் உண்மை தன்மை என்ன?

    இதற்கு ஏன் ஆசைப் படவில்லை இது நாள் வரை?

    எது என்னை தடுத்தது?

    அமைதியாக ஆழ்ந்தேன்.

    ………

    “எனது அன்றாட நிகழ்வுகள்”

    # டிவி #

    (சில (டிவி-) நிகழ்ச்சிகளை தவிர)

    திரையில் காட்டப்பட்டதில் அனைத்துமே காதல், ஆடல் பாடல், குரோதம், காமம், சாதி, சமயமதம், அதிகார வர்க்கம், அரசியல்,வறுமை, இவையில் ( காட்டப்பட்ட காட்சியால்) ஏக்கம், பக்தி,கோபம், வெறி, தவிப்பு, வருத்தம் இவையாவும் என்னுள் பதிந்து நினைவில் நீடிக்கிறது. திரைகாட்சி தானே இது.

    ஆனால், கதாநாயகன் வந்து சரி செய்தது போக,

    என்னுள் காமம்,பக்தி, சாதி சமயம், அரசியல் வெறி, குரோதம் இவை பதிந்து தங்கியது எப்படி?

    ……..

    நான் தெய்வப் பற்று கொண்டிருந்தாலும்,

    இன்று என்னுள்…,

    உண்மை கடவுள்,
    கடவுளின் உண்மை நிலை, என் நிலை,
    என்னை சுற்றியிருக்கும் இயற்கையின் திறங்கள்,

    – இவை குறித்து நான் தெரிந்து கொள்ள, காண இப்ப ஆசை வந்தது.

    இது நாள் வரை “சும்மா” இருந்து விட்டேனே!

    இப்ப என் நினைவுக்கு வருகிறது, வள்ளுவரின் குறள்:

    ” எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு ”

    அப்படியெனில்,
    கண்ணால் கண்டது?
    காதால் கேட்டது?

    இதற்கு குறள் பதில்..?

    ” எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு ”

    ஆமாம்..
    எங்க தாத்தா எனக்கு சொன்ன பழமொழி ஞாபகம் இப்ப வருது…

    “கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்; தீர விசாரிப்பதே மெய்”

    வள்ளலாரும் இதை தான்
    சுட்டி காட்டினாரா?
    பாடல் நினைவுக்கு வருகிறது. அந்த பாடல்:

    ” கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

    கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

    உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

    உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

    விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

    மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

    எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

    இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.”

    சரி…
    சிந்திக்க யார் துணை நாட?

    இன்று இந்த சிந்தனையை செய்தது நான் தானே!

    பதில் கிடைத்ததும் என்னிடம் தானே!.

    ஆம்,

    ” நோய்க்கும் மனித செயலே காரணம். அந்நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பவனும் மனிதனே.”

    எல்லாம் என்னிடமே.

    இது எல்லோரிடத்திலும். எல்லோரிடத்திலும் அகம் ஒரே மாதிரி.

    அப்படி என்றால் கொடுத்தவர் ஒருவரே!
    ஆனால்,
    மனிதன் வெளிப்படுத்தும் தன்மையில் பல்வேறாக உள்ளதே?

    அது அவரவர் பெற்ற அறிவு அடிப்படையில்! இது புறம்.

    ஆனால், அகம் ஒன்றே..?

    நாம் பெற்ற அறிவில் சிந்தித்து, விசாரம் செய்தால் அக அறிவு தோன்றும். ஆக, “அறிவை விருத்தி செய்தல், விருத்திக்கு விசாரம் செய்தல்”

    இதுவே,

    மனிதன் மட்டும் பெற்றிருக்கும் ஆறாம் அறிவு ஆகும்.

    ஆகா, நான் சிந்திக்க ஆரம்பித்து விட்டேனே!

    இதுவரை இந்த சிந்தனையை என்னிடம் தடுத்தது எது?

    கற்பனை திரை காட்சிகள், காம, குரோதம், பொய்யான சாதி, கருணையின்மை, தீர்மானமாக கொண்ட கட்டுப்பாட்டு சமய ஆசாரம், இவையே.

    “விட்டு விட்டேன்” அவற்றை இந்த நிமிடம் முதல்.

    ஆகா..,

    அருமை…அருமை..

    மீண்டும் ஆழ்வோம் சிந்தனையில்….
    உண்மை உணரும் வரை.

    …….

    அது.. என்ன சத்தம்….??

    ” ஏங்க.. உங்களத்தானே, என்ன செய்றீங்க…,
    ” சும்மா ” தானே இருந்தீங்க, பால் வாங்கி வைத்திருக்கலாமே..எதுவும் செய்ய மாட்டாராம்,
    ஆனா..
    உடனே காப்பி கேட்பீங்க, அப்பறம் டிவி, செல்லு, டிபன்,அப்பறம் தூக்கம்..
    அடச்.. சீ.. ”

    அதற்கு நான்:

    ” இல்லம்மா.. சிந்திஞ்சிட்டு இருந்தேன்….”

    ” என்னது?.. நான் தான் பார்த்தேனே..”சும்மா” இருந்துட்டு சிந்திஞ்சிட்டு இருந்தாராம் … சரி.. இன்னிக்கு நீங்க வேலையை பாருங்க.. நானும் உங்கள மாதிரி கொஞ்ச சிந்திக்கிறேன்…”

    ….!!! ???

    நன்றி:

    நா.இ., மதுரை.

    ஆமாம் நாம் சிந்தித்ததை “சும்மா ” என்றாலே?

    ” சும்மா ” ன்னா என்ன? சாரி..சாரி.. “சும்மா”

    முடிந்தது.
    ( ஆனால் விசாரம் தொடங்கியது) — N.E.

    # கோரானா
    பணியில் அயராது உழைத்து வரும் கருணையாளர்கள் அனைவருக்கும், எங்கள் அன்பரின் இக்கட்டுரையை சமர்ப்பித்து, நன்றியுடன் வணங்குகிறோம்.
    ? ஏபிஜெ அருள்,
    கருணை சபை சாலை, மதுரை.

  • “புருவமத்தி” என்பது எந்த இடத்தை குறிக்கிறது?

    puruva-maththi

    ” புருவமத்தி என்பது எது?
    எங்குள்ளது?
    தெரிந்தவர்கள் பதிவு செய்யலாமே.

    காரணம்,
    ” புருவமத்தி கண்ணே ” நம்முடைய கரணத்தை செலுத்த வேண்டும்.”
    ” … புருவமத்தியில் நிற்க செய்தல் ”
    என வள்ளலாரின் உபதேசக்குறிப்பில் உள்ளது. (இரண்டரை அங்குல இடைவெளியில்)
    கோசம், தொப்புள், மார்பு,கண்டம்,அண்ணாக்கு,
    புருவமத்தி… எனச் சொல்லப்பட்டதில் புருவமத்தி தவிர மற்றவையின் இடம் சரியாக புரிந்துக் கொள்ள முடிகிறது.
    ஆனால், உண்ணாக்கு மேல் இரண்டரை அங்குலத்தில் புருவமத்தி உள்ளதாக இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் ” புருவமத்தி” என்பது எதைக் குறிக்கிறது?
    மற்றும்,
    சுத்த சன்மார்க்க நெறியில்
    புருவமத்தி பயிற்சி உண்டா?
    இல்லை என்றால் வள்ளலார் செய்ய சொல்லும் நன்முயற்சி எது?
    சான்றோர்கள் விளக்கம் அளித்து விசாரம் செய்யுமாறு பணிவுடன் அழைக்கிறேன்.
    ? நன்றி. ஏபிஜெ அருள்.
    விசாரத்திற்கு உதவும் வகையில் தொடர்புடைய
    ” சுத்த சன்மார்க்கப்
    பாடல்கள் “  கீழே தரப்பட்டுள்ளது.

    #6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
    விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை
    அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
    #6-044 ஆறாம் திருமுறை / திருவடி நிலை
    தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
    யேச்சுரன் சதாசிவன் விந்து
    நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
    நவில்பர சிவம்எனும் இவர்கள்
    இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
    இடதுகாற் கடைவிரல் நகத்தின்
    கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
    கண்டனன் திருவடி நிலையே.
    #6-044 ஆறாம் திருமுறை / திருவடி நிலை
    அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
    அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
    படர்தரு விந்து பிரணவப் பிரமம்
    பரைபரம் பரன்எனும் இவர்கள்
    சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
    துணையடிப் பாதுகைப் புறத்தே
    இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
    ஏத்துவன் திருவடி நிலையே.
    #6-080 ஆறாம் திருமுறை / திருவடிப் பெருமை
    நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம்
    நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம்
    ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம்
    இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே
    ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம்
    அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம்
    ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின்
    உண்மைசொல வல்லவரார் உரையார்என் தோழி.
    #6-080 ஆறாம் திருமுறை / திருவடிப் பெருமை
    பரவியஐங் கருவினிலே பருவசத்தி வயத்தே
    பரைஅதிட்டித் திடநாத விந்துமயக் கத்தே
    விரவியதத் துவஅணுக்கள் ஒன்றோடொன் றாய்ஒன்றி
    விளங்கஅவற் றடிநடுவீ றிவற்றினில்மூ விதமாய்
    உரவியலுற் றுயிர்இயக்கி அறிவைஅறி வித்தே
    ஓங்குதிரு அம்பலத்தில் ஒளிநடனம் புரியும்
    தரவியலிற் றிதுஎனயார் தெரிந்துரைப்பார் சிறிய
    தமியள்உரைத் திடுந்தரமோ சாற்றாய்என் தோழி.
    #6-097 ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை
    பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும்
    பகுதியும் காலம்முதலாப்
    பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த
    பரமாதி நாதம்வரையும்
    சீராய பரவிந்து பரநாத முந்தனது
    திகழங்கம் என்றுரைப்பத்
    திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு
    தெய்வமே என்றும்அழியா
    ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே
    உயர்தந்தை யேஎன்உள்ளே
    உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே
    உவப்பேஎன் னுடையஉயிரே
    ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த
    அரசே அருட்சோதியே
    அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை
    அமுதநட ராஜபதியே.
    #6-118 ஆறாம் திருமுறை / சிவசிவ ஜோதி
    விந்து ஒளிநடு ஜோதி – பர
    விந்து ஒளிக்குள் விளங்கிய ஜோதி
    நம்துயர் தீர்த்தருள் ஜோதி – பர
    நாதாந்த நாட்டுக்கு நாயக ஜோதி. சிவசிவ
    #6-129 ஆறாம் திருமுறை / அருட்காட்சி
     மயில் – விந்து. குயில் – நாதம்.
      அருட்பெருஞ்ஜோதி அகவல்
    கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே
    அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
    புகலரு மகண்ட பூரண நடுவால்
    அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
    காமப் புடைப்புயிர் கண்டொட ராவகை
    ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
    சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
    அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
    சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
    அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
    இன்புறச் சிறியே னெண்ணுதோ றெண்ணுதோ
    றன்பொடென் கண்ணுறு மருட்சிவ பதியே
    உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது
    குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே
    எண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங்
    கண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே
    பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்
    சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே
    விண்பத மனைத்து மேற்பத முழுவதுங்
    கண்பெற நடத்துங் ககனமா மணியே
    அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக்
    கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே
    சாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே
    ஏலவே நாவுக் கினியகற் கண்டே
    என்மனக் கண்ணே என்னருட் கண்ணே
    என்னிரு கண்ணே யென்கணுண் மணியே
    உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
    கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட
    பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
    என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே
    #6-003 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்சோதி அட்டகம்
    கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
    கருவினால் பகுதியின் கருவால்
    எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
    இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
    விண்முதல் பரையால் பராபர அறிவால்
    விளங்குவ தரிதென உணர்ந்தோர்
    அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
    #6-003 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்சோதி அட்டகம்
    நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே
    நண்ணியும் கண்ணுறா தந்தோ
    திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித்
    திரும்பின எனில்அதன் இயலை
    இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும்
    இசைத்திடு வேம்என நாவை
    அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
    #6-003 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்சோதி அட்டகம்
    தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
    தத்துவா தீதமேல் நிலையில்
    சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
    சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
    ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
    ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
    றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
     6-006 ஆறாம் திருமுறை / ஆற்றாமை
    பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் பணம்பறித் துழல்கின்ற படிறேன்
    எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை இயற்றுவேன் எட்டியேஅனையேன்
    மணமிலா மலரிற் பூத்தனன் இருகால் மாடெனத் திரிந்துழல் கின்றேன்
    குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
     கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
    கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
    அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
    அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
    மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
    வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
    சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
    தனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
     மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்
    கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்
    எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
    நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.
     கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் காட்சியைக் கண்டபோ தெல்லாம்
    வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
    நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
    பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் படுத்ததும் ஐயநீ அறிவாய்.
    தற்போத இழப்பு
    கருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே
    காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
    ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
    உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
    பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
    பிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே
    மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
    மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
     புண்படா உடம்பும் புரைபடா மனமும்
    பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
    கண்படா திரவும் பகலும்நின் தனையே
    கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்
    உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
    உலகரை நம்பிலேன் எனது
    நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே
    நம்பினேன் கைவிடேல் எனையே.
     கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே
    கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே
    சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த்
    தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள்
    தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து
    தானாகி நானாடத் தருணம்இது தானே
    குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்
    குருவேஎன் குற்றமெலாம் குணமாகக்கொண் டவனே.
    : பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே
    பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக்
    கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத
    கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத
    மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்
    மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும்
    மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
    மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
    : மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
    விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
    முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
    முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
    என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
    என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
    பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
    பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.
    : இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
    மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
    வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
    தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
    சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
    அருளான வீதியில் ஆடச்செய் தீரே
    அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
    : திருநடப் புகழ்ச்சி:
    பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
    படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
    அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
    அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
    தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
    தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
    துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
    சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
    இறை இன்பக் குழைவு
    கருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்
    கனியில் கனிந்தன் புருவான கருத்தில் கிடைத்த கருத்தேமெய்
    அருள்நன் னிலையில்318 அதுஅதுவாய் அறிவிற் கிடைத்த அறிவேஎன்
    அகத்தும் புறத்தும் ஒளிநிறைவித் தமர்ந்த குருவே ஐம்பூத
    வருண முதலா அவைகடந்த வரைப்பாய் விளங்கு மணிமன்றில்
    வயங்கு சுடரே எல்லாஞ்செய் வல்ல குருவே என்னுளத்தே
    தருண நடஞ்செய் அரசேஎன் தாயே என்னைத் தந்தாயே
    தனித்த தலைமைப் பதியேஇத் தருணம் வாய்த்த தருணமதே.
    கருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க்
    காட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே
    எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல்
    ஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே
    இருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன்
    இதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்­ராய்
    அருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான்
    அதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.-
    திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
    சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும்
    அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும்
    அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும்
    பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
    பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம்
    கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால்
    கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே
     கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும்
    கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில்
    ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி
    உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித்
    தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த
    தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும்
    காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால்
    கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
    எண்ணலைவே றிரங்கலைநின் எண்ணமெலாம்
    தருகின்றோம் இன்னே என்றென்
    கண்நிரம்ப ஒளிகாட்டிக் கருத்தில்அமர்ந்
    திருக்கின்ற கருத்தன் தன்னைப்
    புண்ணியனை உளத்தூறும் புத்தமுதை
    மெய்இன்பப் பொருளை என்றன்
    அண்ணலைசிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
    தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
    : கருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க்
    காட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே
    எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல்
    ஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே
    இருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன்
    இதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்­ராய்
    அருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான்
    அதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.
    மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே
    வான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன்
    முன்செய்து கொண்டதும் இங்ஙனங் கண்டீர்
    மூவகை யாம்உடல் ஆதியை நுமது
    பொன்செய்து கொண்ட பொதுவினில் ஆடும்
    பொன்னடி காணப் பொருந்திக் கொடுத்தேன்
    என்செய்து கொண்டாலும் செய்துகொள் கிற்பீர்
    எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
    ஏகா நினக்கடிமை ஏற்று.
     துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொதுவில்
    ஜோதித் திருநடம் நான்காணல் வேண்டும்
    கரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி
    காணாது போய்ப்பழி290 பூண்பாயோ தோழி.
    : பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
    பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
    தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ
    சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
    திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்
    திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
    சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே
    திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே.
    தோலைக் கருதித் தினந்தோறும் சுழன்று சுழன்று மயங்கும்அந்த
    வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும் அடக்கி ஞான மெய்ந்நெறியில்
    கோலைத் தொலைத்துக் கண்விளக்கம் கொடுத்து மேலும் வேகாத
    காலைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
    : என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
    இதயத்தி லேதயவிலே
    என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே
    என்இயற் குணம்அதனிலே
    இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே
    என்செவிப் புலன்இசையிலே
    என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
    என்அனு பவந்தன்னிலே
    தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
    தானே கலந்துமுழுதும்
    தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல்
    ததும்பிநிறை கின்றஅமுதே
    துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத
    சுகமே சுகாதீதமே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
    என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம்
    ஏதாக முடியுமோஎன்
    றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின்
    றேங்கிய இராவில்ஒருநாள்
    மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே
    வெளிநின் றணைத்தென்உள்ளே
    மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே
    வீற்றிருக் கின்றகுருவே
    நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட
    நல்குரவி னோன்அடைந்த
    நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே
    நான்கண்டு கொண்டமகிழ்வே
    வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை
    வலியவந் தாண்டபரமே
    மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
    வல்லநட ராஜபதியே.
  • சித்திரை-1 ” சுத்த சன்மார்க்க தினம் ” “150 வருட” துவக்கம்.

    chithirai1

    சித்திரை-1
    ” சுத்த சன்மார்க்க தினம் ”
    “150 வருட” துவக்கம்.
    — ஏபிஜெ அருள்.

    12-04-1871 சித்திரை- 1 ல் ,
    சுத்த சன்மார்க்கத்தில் வருகிற கடவுள் யார்? இனி பேதங்கள் போய் உண்மை வழி விளங்கும் என ஒரு திருமுகம் வாயிலாக உலகத்தார் அனைவருக்கும் அறிவித்தார் வள்ளலார்.
    இனிய தமிழ் நாளில் உண்மை பொது நெறி வெளிப்பட்டு 14-04-2020 இன்று “150 வது” வருட துவக்கம். ஆனால் இதுவே நல்ல தருணம். சமய சாத்திர சாதி ஆசார பேதங்கள் போய் சுத்த சன்மார்க்க நெறி விளங்கும். இது உண்மை கடவுள் சம்மதம் என்கிறார் வள்ளலார்.
    இனிய தமிழ் திரு நாள்
    வாழ்க தமிழ் !
    பரவட்டும் உண்மை பொது நெறி !
    அன்புடன்,
    ?ஏபிஜெ அருள்

  • உண்மை உணர உற்ற தருணம் இதுவே. பொருளாதார கொள்கையை மற்றும் கடவுள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இதுவே

    unmai-porulatharam

    உண்மை உணர உற்ற தருணம் இதுவே. பொருளாதார கொள்கையை மற்றும் கடவுள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இதுவே.
    — ஏபிஜெ அருள்.
    இன்று வந்து உள்ள சூழலுக்கு யார்,எது காரணம்?

    வள்ளலாரின்
    திருஅகவல்:

    ” எங்கெங் கிருந்துயிர் ஏதேது வேண்டினும்
    அங்கங் கிருந்தருள் அருட்பெருஞ்ஜோதி”

    — எங்கு எங்கு எல்லாம் உயிர்கள் உள்ளனவோ, அவ்வுயிர்கள் எல்லாம் எது தனக்கு வேண்டும் என்று எதை எதை எண்ணியதோ, அவை அனைத்தையும் அங்கு அங்கே கிடைக்குமாறு அருள் செய்து உள்ளது அருட்பெருஞ்ஜோதி.—
    ஆம்,
    உயிர் வாழ தேவையானதை அவ்உயிர்கள் வாழும் இடத்திலேயே இருக்கின்ற இயற்கை திறத்தை இன்று நாம் சத்தியமாக உணர்ந்தே ஆக வேண்டும். இந்த இயற்கை இயலை நம் குழந்தைகளுக்கு இன்றே தெரியப் படுத்த வேண்டும். இன்று இங்கு ஒன்று தயாரிக்கிறோம் என்றால் அதன் மூலப்பொருள் மற்ற நாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறோம். இதில் அம்மூலப்பொருள் இங்கும் இருக்கும். நாம் தெரிந்திருக்கவில்லை. தேடவில்லை. மற்ற இச்சையிலேயே இருக்கிறோம். மூலப்பொருள் இருந்தும் அந்த நாடு தயாரிக்க முன்வரவில்லை. இது போல எல்லாம் அறிக! நாம் உயிர் வாழ அதுவும் அன்பாக, ஆரோக்கியமாக, இனிமையாக, ஈனமின்றி உயிர் வாழ, நமக்கு தேவையான அனைத்தும் நம் பகுதியிலேயே கிடைக்கிறது என்ற உண்மையை தான்
    இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலை நமக்கு கற்று தந்துள்ளது. ஆனால் , ஆடம்பர வாழ்க்கை, புலன்களின் இச்சை, ஆணவ மேலாண்மை இவைக்கே நாடுகளிடையே வணிகம் மற்றும் போர். இயற்கை சார்ந்து வாழும் மனிதர்க்கு ( உ.ம். கிராமவாசிகள், ஏழைகள்) அறிவும் அருளும். ஆம், இவர்களுக்கு தேவையில்லை நாம் செய்யும் நாடுகளிடையே வாணிகமும், நடத்தும் போரும். அதிகாரவர்க்கம் பணக்காரர்களுக்குதான் இவை. ஆனால் மேற்படி வணிகம், போர் இவற்றால் ஏற்பட்ட பாதிப்பு எல்லோருக்குமே.
    இது எப்படி நியாயமாகும்?
    ஆம், நாட்டின்
    பொருளாதார கொள்கையை மாற்றியே ஆக வேண்டும். தவறு செய்பவர்கள் திருத்திக் கொள்ளவேண்டும். முடியாது என்றால் பொருளாதார நிபுணர்கள் முன் வரவேண்டும் கிராமம், ஏழைகள் இவர்களுக்கான பொருளாதார கொள்கை திட்டத்திற்கு. புதிய பொருளாதார புரட்சிக்கு.
    அடுத்து,
    சமய,மத,இனப் போராட்டம், போர். மேற்படி போரால், சண்டையால் இவை விரும்பாதவர்கள், அன்பு உள்ளங்களையும் பாதிக்கிறதே, மரணமும் ஏற்படுகிறதே.போரும் கொலையும் சாதியும் கலையும் உள்ளது தானே நாம் இன்று பற்று வைத்திருக்கும் சமய மதங்கள்.
    எவராலும் இதை மறுக்க முடியாது.

    திரு அகவல்:

    “எம்மதம் எம்இறை என்ப உயிர்திரள்
    அம்மதம் என்றருள் அருட்பெருஞ்ஜோதி”.

    ” எங்களது மதம் எங்களது இறைவன் என்று அவர்கள் வேறு பிரித்துக் கூறி கொண்டிருப்பது அவர்களுக்குள் உள்ள அகங்காரம் ஒன்றாலேயே என்று தெரிவித்து அருளிய அருட்பெருஞ்ஜோதி.”

    எனவே, நமக்கு ஏற்படும் அவத்தைகள் விலக, எந்த சாதி சமய மதப் பெயரால் கொலையும், போரும், நடைப்பெறுகிறதோ, மேலும், நமக்கு மயக்கமும் கட்டுப்பாடும் ஏற்படுத்தும் அந்த சாதி சமய மதத்தில் நாம் பற்று வைக்காமல் விட்டு விட வேண்டும். அவர்கள் கொலையும், போரும், சடங்குசம்பிரதாயங்களும், நமக்காகவே மக்களுக்காக செய்கிறோம் என்பது பொய்யாகிவிடும். சாதி சமயப்பற்றை விட்ட நாம் உண்மை சாருவோம். கொல்லா நெறி, கருணை கொள்கை, இயற்கையே இறைவன் எனும் போது, நாம் “நஷ்டம் அடையோம்” என்ற வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் தெரிந்து சாருவோம்.
    ஆம்,
    கிராமம், ஏழைகள் இவர்களுக்கான புதிய பொருளாதார கொள்கை தோன்றட்டும்.
    பொதுநோக்கம் ஆன்ம நேயம் இயற்கை இறை கொள்கையாக கொண்ட வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் இனி விளங்கட்டும்.

    #அன்புடன் ஏபிஜெ அருள். #

    — Apjarul, Karunai sabai Salai.?

  • வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்

    ” வள்ளலார் – சுத்த சன்மார்க்கம் “

    வள்ளலாரையும், அவர்தம் மார்க்கம் “சுத்த சன்மார்க்கம்” ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

    1)இம்மார்க்கம் புதியது.

    2) தனி நெறி கொண்டது.

    3) மற்ற சமயமத கடவுள் இல்லை. ஒருவராகிய தனி கடவுள்.

    4) வள்ளலார் உண்மை கடவுள் அருளால் ” மரணத்தை ” தவிர்த்துவிட்டு ஒளி தேகம் பெற்றார்.

    5) எல்லாருக்கான உண்மை பொது வழி. அன்பர்களே! இன்றைய சூழல்; இயற்கை சீற்றமோ, இயற்கையை நாம் புரியாததினாலோ, இயற்கை நமக்கு புரிய வைக்கிறதோ, தெரியவில்லை,

    இந்த “கோரானா ” பரவி இன்று மனித இனத்தையே அழிக்க உள்ளதோ? என அஞ்சி உள்ளோம். மூடத்தை போதித்து வந்த சமயமத பிரச்சார போலிகளை, சாதி வெறிகளை இந்த கோரானா கைகட்டி வாய் பொத்தி நிற்க வைத்து விட்டது. இந்நிலையில் நம் குழப்பமான சூழ்நிலைக்கு பதில்? ….? நம் அறிவு ஒன்றே துணை. அதையும் தாண்டி உள்ள இயற்கை திறம் என்ன?, உண்மை கடவுள் யார்? என சிந்திக்க வைத்துள்ளது? ஆனால், எவர் ஒருவர் உண்மை (கடவுள்) நிலை அறிய, இயற்கை திறம் இவை, தன் அறிவு கொண்டு அறிய ஆசைப் படுபவர்களுக்கு மட்டுமே இந்த ” சுத்த சன்மார்க்கம் ” உள்ளது. வாருங்கள் (விருப்பம் உள்ளவர்கள் மட்டும்) நல்ல விசாரணையை வள்ளலார் வழியில் இன்றே செய்திடுவோம்.

    நன்றி: ஏபிஜெ அருள்.

  • கொரானாவின் உண்மை # கடவுளின் உண்மை

    கொரானாவின் உண்மை # கடவுளின் உண்மை

    https://youtu.be/PDbkCgBcVcE

    உண்மை கடவுளை தேட வைத்த கோரானா. நம் சுயநலத்திற்காக அனைத்தையும் அழித்து வந்தோம். மலைகள்,கணிமம்,மணல்,தாதுப் பொருள், எரிபொருள் முதலிய பொருள்களை கொள்ளைக் கொண்டோம். மேலும், காடுகள் அழித்து கோடி உயிரினங்களை கொன்றோம். சாதி சமய மதப் பெயரால் போர்கள் தீவிரவாதம் மற்றும் பதவிக்கான கொலைகள் தொண்டுக்கு லஞ்சம் காமப்படங்களால் கற்பழிப்பு செய்கைகள், காலதாமத முடிவுகள், இவையான பொதுநோக்கமற்ற செயல் செய்தது நாமாகிய மனித இனமே. ஆனால், இன்று நம் நிலை? நாம் செய்த கொடுமையால் தப்பிக்க வழியில்லை. நடந்தது நடந்தவையாக போகட்டும். அறிவால் மீளுவோம். அன்பால் வெற்றி பெறுவோம். எல்லாம் வல்ல இயற்கையை வணங்குவோம்.

    — கருணை சபை சாலையில் நல்ல விசாரணை 25-03-2020.

  • மகாமந்திரம் – உண்மை பொது மந்திரம்

    மகாமந்திரம் – உண்மை பொது மந்திரம்