Category: tamil katturai APJ arul

கட்டுரைகள் APJ அருள்

  • கடவுள் என் செய்யும்?

    கடவுள் என் செய்யும்?
    — ஏபிஜெ அருள்.
    நாடுகளிடையே;
    போர்கள் கூடாது.
    செருக்கு கூடாது.
    அதிகாரம் கூடாது.
    மனிதர்களிடையே;
    மயக்கம், சுயநலம், திகைப்பு கூடாது.
    இவை செய்யும்
    ” தேவர்கள் அறிவு” நம்மிடையே ஒழிய வேண்டும்.
    அடுத்து,
    சிறை செல்லும் செய்கை கூடாது.
    பயம் கூடாது.
    திருட்டு,கொலை செய்யும் “நரகர் குணம்” நமக்கு கூடாது.

    உயர்ந்த அறிவாகிய
    “கருணை ” நம்மிடம் விருத்தியாக நன்முயற்சி செய்தல் வேண்டும்.
    நாம் யார்? நமக்கு மேல் அனுஷ்டிக்கும் இயற்கையின் திறம் (உண்மை இறைவனின் நிலை) என்ன என நல்ல விசாரணை அறிவு வழியில் செய்யச் சொல்லும் “ஆறாவது அறிவை” பெருக்க வேண்டும்.
    இந்த “ஆறாவது அறிவாகிய” உள்ளத் தெளிவு நம்மிடையே வராமல் தடுப்பவை, சாதி சமயமும் அதன் கட்டுப்பாட்டு ஆசாரங்கள் என்கிறார் வள்ளலார். பொது நோக்கம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை லட்சியமாக கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார். இந்த அறிவு மனித தேகம் உடையோர் பெறுகிறார்கள் என்கிறார்.
    இதுவே அவர் கண்ட “சுத்த சன்மார்க்கம்”.
    சமயம்,சாதி இவை தேவர் நரகர் குணம் குறித்தே உள்ளது.
    சுயநலம், செருக்கு மயக்கம் இவையால் போர்கள், கொலைகள், இவை சரி என்றால் நம்மை கொல்லும் கொடிய நோய்கள், இயற்கை சீற்றங்கள் இருக்க தானே செய்யும்.

    இங்கு
    கடவுள் என் செய்யும்?

    மனிதனாக இருப்போம்.
    கருணை கொள்வோம். அன்பால் எல்லா உயிர்களிடமும் தயவும், அண்ட திறங்கள் (இறை உண்மை நிலை) காண ஆசைக் கொள்ளும் நன்முயற்சி கொள்வோம். உண்மை அறிவால் உண்மை அன்பால்
    உண்மை கடவுளின் அருளால் பேரின்ப வாழ்வை நான் பெற்றேன். என்னைப் போல் நீங்கள் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை. இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
    வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் சாதி,கற்பனை, கலைகள்,ஆசாரம்,சாத்திரம்,போர், பலி, இவையில்லை. பொது நோக்கம், அறிவு, கருணை, இன்பம் இவையே உள்ளது.
    19 ம் நூற்றாண்ட்டில், சமயப் பற்றை கைவிட்டு விட்டு, மிகப் பெரிய நன்முயற்சி செய்து, இரக்கத்தால் தவம் கொண்டு, உண்மை கடவுளை கண்டு, அருளால் கண்ட உண்மை பொது வழியே ” சுத்த சன்மார்க்கம்”. இம்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடையாக சமய,மத மார்க்கங்களை அறிவிக்கிறார்.
    இம்மார்க்க வழியில் மட்டுமே “அவத்தைகளை” நீக்கிக் கொள்ள முடியும் மேலும் உண்மை கடவுளின் சொரூபம் கண்டு அருள் பெற முடியும் என்ற வள்ளலாரின் சத்திய வாக்கியத்தில் நம்பிக்கை கொண்டோர்
    பார்க்க:

    www.atruegod.org

    https://youtu.be/pUMeJgQDREU

  • ” கொரோனா” நீ நல்லவரா? கெட்டவரா?

    corona-post

    ” கொரோனா”
    நீ நல்லவரா? கெட்டவரா?
    — apj arul
    # உன் வரவால் மனித இனம் பிரிக்கும் சில சமயமத மூடப் போதனைகள் அடங்கிற்று.
    # ஆனா, உன்னால் பாதித்தவர், நல்லவரை தொட்டாலும் அந்த நல்லவரையும் தாக்குகிறாய்.
    # ஆறறிவு எங்கள் தேகம் பெற்றிருந்தாலும், கை சுத்தம் இட சுத்தம் எங்களுக்கு கற்றுக் கொடுத்தாய்.
    # மருத்துவர் ஆலோசனை படி, தனிமைப்படுத்தி, பொறுத்துக் கொண்டால் நீ விலகிடும் குணம் படைத்தவன்
    # ஆனா, பாதித்தவர்களில் 2% பேரை கொன்றாலும் நீ கொலைக்காரன் தானே?
    # பணக்காரப் பொருளாதாரத்தை சீரழித்து விட்டாய். ஏழைகளின் அன்றாடப் பிழைப்பையும் சேர்த்து அல்லவா கெடுத்து வருகிறாய்.
    # எந்த மருந்துக்கும் கட்டுப்டாத ஆணவக்காரானாய் உள்ளாய்.
    # இயற்கையை பாதுகாக்காத உலக மனித இனத்திற்கு பாடம் புகட்டி “உண்மை அறிதல்” க்கு வித்திட்டாய்.
    # பயம் எற்படுத்தி, சிக்கனம், சுகாதாரம், நல்ல உணவு, ஒற்றுமை எங்களுக்கு தெரிய வைத்தாய்.
    # ஆனா, ஆதரவு அற்றவர்களையும் நீ பாரபட்சமின்றி தாக்குகிறாய்.
    # எங்களிடம் உள்ள
    சாதி வெறிப் பார்வை,
    உன்னிடம் இல்லை.

    ஏ கோரானாவே நீ நல்லவரா? கெட்டவனா?

    குறள் வழியில்;

    ” குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

    மிகைநாடி மிக்க கொளல்”

    ஆம்,

    – எங்களை திருத்திக் கொள்ள போதியளவு அறிவு இயற்கை எல்லோருக்குமே கொடுத்துள்ளது.
    – எங்களின் மூட நம்பிக்கை, சாதி மத வெறி, சுகாதார கேடு, இயற்கை சீரழித்தல் இவை எங்கள் ஞான அறிவால் புரிந்து இனி நல்ல வழியில் நடந்துக் கொள்ள முடியும்.
    — இதை சாக்காக வைத்து உள்ளே நுழைந்தாய். இனி எங்களில் ஒருவரை கூட இழக்க விட மாட்டோம்.

    – நீ உருவாக்கப் பட்டவனா? உருவானவனா? எப்படி இருந்தாலும் நீ கெட்டவன்.

    நீ அடங்கு எனச் சொல்ல முடியாது.
    எங்கள் இன மருத்துவர் அறிவால் விரைவில் நீ அடக்கப்படுபவாய்.
    எங்கள் நன்முயற்சில் விரைவில் எங்கும் இல்லாமலே போவாய்.

    உண்மைஅன்பு உண்மை அறிவு உண்மை இரக்கம் எங்களை இனி வழி நடத்தும். எல்லாம் வல்ல “இயற்கை திறம்” இனி துணைப் புரியும்.

    நன்றி: ஏபிஜெ அருள்,
    இது சத்தியம். இது சத்தியம்.

  • வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்

    vallalar-margam-web-link

    வள்ளலாரையும், அவர்தம் மார்க்கம் “சுத்த சன்மார்க்கம்” ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

    1)இம்மார்க்கம் புதியது.

    2) தனி நெறி கொண்டது.

    3) மற்ற சமயமத கடவுள் இல்லை. ஒருவராகிய தனி கடவுள்.

    4) வள்ளலார் உண்மை கடவுள் அருளால் ” மரணத்தை ” தவிர்த்துவிட்டு ஒளி தேகம் பெற்றார்.

    5) எல்லாருக்கான உண்மை பொது வழி.

    அன்பர்களே!

    இன்றைய சூழல்; இயற்கை சீற்றமோ, இயற்கையை நாம் புரியாததினாலோ, இயற்கை நமக்கு புரிய வைக்கிறதோ, தெரியவில்லை, இந்த “கொரோனா ” பரவி இன்று மனித இனத்தையே அழிக்க உள்ளதோ? என அஞ்சி உள்ளோம். மூடத்தை போதித்து வந்த சமயமத பிரச்சார போலிகளை, சாதி வெறிகளை இந்த கோரானா கைகட்டி வாய் பொத்தி நிற்க வைத்து விட்டது. இந்நிலையில் நம் குழப்பமான சூழ்நிலைக்கு பதில்? ….? நம் அறிவு ஒன்றே துணை. அதையும் தாண்டி உள்ள இயற்கை திறம் என்ன?, உண்மை கடவுள் யார்? என சிந்திக்க வைத்துள்ளது? ஆனால், எவர் ஒருவர் உண்மை (கடவுள்) நிலை அறிய, இயற்கை திறம் இவை, தன் அறிவு கொண்டு அறிய ஆசைப் படுபவர்களுக்கு மட்டுமே இந்த ” சுத்த சன்மார்க்கம் ” உள்ளது. வாருங்கள் (விருப்பம் உள்ளவர்கள் மட்டும்) நல்ல விசாரணையை வள்ளலார் வழியில் இன்றே செய்திடுவோம்.

    நன்றி: ஏபிஜெ அருள்.

  • “தமிழ் ஒன்றே தீர்வு” “மனிதர் எல்லாம் தமிழர் ஆகட்டும்”

    tamil-only solution

    “தமிழ் ஒன்றே தீர்வு”
    “மனிதர் எல்லாம் தமிழர் ஆகட்டும்”
    — அபெஜோ. அருள்.

    “எளிய தமிழ்” ஒன்றே தீர்வு,
    உலகில் விரைந்து வெளிப்படட்டும்,

    “மனிதரெல்லாம்
    தமிழர்” ஆகட்டும்.

    ஆம்,
    ஏற்பட்டுள்ள ‘குழப்பம்’ தீர உண்மை ஆன்மீகம் தெரிந்திருக்க வேண்டும்.

    ஏற்பட்டுள்ள ‘சீர் கேடுகள்’ ஒழிய உண்மை அறம் பயில வேண்டும்.

    ஏற்பட்டுள்ள ‘சச்சரவு ஓய’ உண்மை கடவுள் அறிந்து கொள்ள வேண்டும்.

    இதற்கெல்லாம்
    ஒரே தீர்வு
    ” தமிழே ”

    ஆம்,

    உண்மை ஆன்மீகம் தெரிந்துக் கொள்ள “திருமந்திரமும்”,

    உண்மை அறம் செய்ய
    ” திருக்குறளும் “,

    உண்மை கடவுளை கண்டு அருள் பெற
    ” திருவருட்பா 6 ம் திருமுறையும் “

    தந்தது தமிழே.

    உலகில் தமிழ் விரைந்து வெளிப்படட்டும்,

    “மனிதர் எல்லாம் தமிழர்” ஆகட்டும்.
    நன்றி: ஏபிஜெ அருள்.

  • கொரோனா வைரஸும் – புலால் உண்ணாமையும்


    இப்போது சைனாவில் வந்த வைரஸ் மட்டுமல்ல. நம் நாட்டிலும் வந்த சில நோய்களுக்கும், உலக சுற்றுச்சூழல் மாசுக்கும் காரணம் மற்ற உயிர்களை கொல்வதும், புலால் உணவுமே என்பது இன்று ஆய்வுகள் சொல்லும் உண்மை.
    அவரவர் உணவு உரிமை சட்டப்படியும் உள்ளது. இதையும் மறுப்பதற்கில்லை.
    ஆனால்,
    எல்லா உயிர்களும் இயற்கையின் தோற்றம்.
    இந்த இயற்கை சமூகத்தில் மனிதன் எந்த உரிமை கொண்டு வாழ்கிறானோ, அதே உரிமை மற்ற உயிர்களுக்கும் கொடுக்க வேண்டுமா இல்லையா? ஆரம்பத்தில் இரக்கம் குறித்து நம்மிடம் எழாமல் இருந்திருக்கலாம்.
    ஆனால், வளர வளர ‘உண்மை இரக்கம்’ குறித்து விசாரணை
    நம்மிடம் ஏற்பட வேண்டும். பருவம் பக்குவம் வளரும் போது, பாவம் மற்ற உயிர்களும் நம்மை போல்தான், அவைகளை கொல்லும் போது வலி, துன்பம் ஏற்பட்டு துடித்து சாகுகின்றன எனத் தெரிந்து கொண்டோமா?
    இயற்கை படைப்பில், மனித ஆகாரத்திற்கு பல ஆயிர உணவு வகைகள் சத்தாக, ருசியாக,திருப்தியாக உள்ள போது, உணவு மற்றும் நம் மற்ற தேவைகளுக்காக பிற உயிர்களை கொல்வது தேவையற்றது என்ற உண்மையை குறித்து சிந்திப்பது தவறு என்று எந்த சகோதர, சகோதரிகளும் சொல்ல மாட்டார்கள்.
    இரக்கம் அன்பு கருணை இவை மனிதராகிய நாம் மனிதர்களிடத்தில் வைத்து வருவதை, இனி நாம் எல்லா உயிர்களிடத்தும் வைக்க முதலில் ஆசைப்படுவோம்.
    நன்றி ::: ஏபிஜெ அருள்.
    “இரக்கம்” குறித்து நம் கருத்தில் கருத,
    வள்ளுவரின்
    ” கொல்லாமை”
    வள்ளலாரின்
    ” ஜீவகாருண்யம்”
    காந்தியின்
    ” சத்திய சோதனை ”
    நமக்கு உதவுகின்றன.
    — கருணை சபை சாலை மதுரை.

  • கோரானாவும் , கடவுளும்

    கோரானாவும் , கடவுளும் — ஏபிஜெ அருள்
    உலகின் பல்வேறு சமய மதங்கள் மார்க்கங்கள் இருக்கிறது.
    அந்த சமயமதம் இந்த சமயமதம் ஏன் எல்லா சமய மதங்களும் தங்களின் புனித‌ தலங்களுக்கு வருவதை தவிர்க்குமாறு சொல்லிவிட்டன.
    இன்று பரவியுள்ள “கோரானா வைரஸ்”
    என்பதின் மீது உள்ள பயம், கட்டுப்படுத்தும் விதத்தில் எல்லா சமய மதத் தலைவர்களும்
    தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், புனித ஆலயங்கள் உள்ளே கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன. ஏன் இன்னும் சொல்லப்போனால் சில புனித தலத்தில்
    அந்த கடவுளர் மீதே கிருமி நாசினி அடிக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
    நிற்க! இங்கு நாம் கருத்தில் எடுப்பது யாதெனில்; புனித ஆலயங்களின் சந்நியாசிகள்,
    தலைவர்கள், அதிகாரிகள் இவர்கள் பொது மக்களை மற்றும் பக்த கோடிகளை நோக்கி விட்ட
    அறிவிப்பில் சொல்லப்பட்டவை:
    1. இருமல், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்கவும்.
    2. வரும் பக்த கோடிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தியே
    புனித தலத்திற்குள் அனுமதிக்கப் படுகிறார்கள்.
    நிற்க! எல்லாம் வல்ல இறைவன்!
    கடவுளே மிகப்பெரியவன்!
    நான் உன் பயம் பாவம் போக்குவேன்!
    என்கிற திருவாக்கியத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி வரும் சமயமதங்களே!
    சந்நியாசிகளே, தலைவர்களே, குருமார்களே! ஒரு வைரஸ் தாக்குதலில் உங்கள் அறிவை,
    ஒழுக்கத்தை பயன்படுத்திய நீங்கள் ஏன்? மற்ற‌ நேரங்களில் இதை
    ( அறிவை, ஒழுக்கத்தை) மறந்தீர்கள். ஆம், ” புனித தலங்களுக்கு வரும் பொதுமக்களே,
    பக்தகோடிகளே! நீங்கள் இரக்கம், பொது நோக்கம்,நேர்மை உள்ளவர்களாக இருந்து வந்து ஆண்டவன் அருள் பெருக!
    நேர்மையான முறையில் சம்பாதித்த பணத்தையே உண்டியலில் போடவும்.
    இது ஆண்டவன் கட்டளை – என இதுபோல் ஏன் நீங்கள் இதுவரை வெளிப்படுத்தப் படவில்லை.
    குறைந்தபட்சம் அறிவிப்பு பலகையிலாவது வைக்கலாமே!
    நிற்க! திருவருட்பிரகாச வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியில்; ” கடவுளின் அருள் பெற
    ஒழுக்கம் நிரப்பிக் கொள்ள வேண்டும்” எனவும் என் மார்க்கம்உண்மையறியும் அறிவு மார்க்கம்,
    கருணை ஒன்றே சாதனம் என்கிறது. அதே போல் சத்திய ஞான சபையில் ” கொலை புலை தவிர்த்தோர்
    உள்ளே புகுதல் வேண்டும்” என அறிவிப்பு உள்ளது.
    புனித தலங்களில் அன்பு, பொது நோக்கம் உள்ளோர் உள்ளே வந்து இறைவனை தரிசித்து அருள் பெறுக!
    எனவும் நேர்மை வழியில் சம்பாதித்த‌ பணம் மற்றும் பொருளை மட்டுமே காணிக்கையாகப் பெறப்படும்.
    இது ஆண்டவர் கட்டளை, என போர்டு வைக்கப்படுமா? “வைரஸ்” க்கு பயந்த நாம் “ஆண்டவனு”க்கு பயப்பட வேண்டாமா?
    ” வைரஸ்” க்கு எடுத்த நடவடிக்கை, ” நேர்மை பக்தி” க்கு கொடுக்க வேண்டாமா?
    :::: ஏபிஜெ. அருள்.
    கை கால் சுத்தம் நல்ல உணவு பாதுகாப்பு இவையால் வைரஸ் தாக்குதலிருந்து தப்பித்து ஆரோக்கிய வாழ்வில் வாழலாம்.
    இரக்கம், ஒழுக்கம், நல்ல விசாராணை இவையால் உண்மை கடவுளை கண்டு தரிசித்து அருள் பெற்று பேரின்ப பெரு வாழ்வில் வாழலாம்.
    நன்றி : கருணை சபை சாலை.
    வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் குறித்து தெரிந்துக் கொள்ள ::
    www.youtube.com/karunaisabaisalai
    www.atruegod.org

  • “உண்மையை” தெரிந்துக் கொள்ளும் நேரம்

    உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.—-வள்ளலார்

    “கடவுள் உண்மையை” தெரிந்துக் கொள்ளும் நேரம் — ஏபிஜெ அருள்
    இதுவே தருணம் என்று சின்னம் பிடி — வள்ளலார்.
    # நாத்திகம் சொல்கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
    # சாதி சமயம் மதம் பொய்
    ஆம், 19 ம் நூற்றாண்டில் வெளிப்படுத்திய உண்மை வெளிப்படும் நல்ல தருணம் இதுவே.

    ஒன்று,
    கடவுள் இல்லை என்போர் நாக்கு முடை நாக்கு என்கிறார்.
    மற்றொன்று;
    சாதி பொய் பொய்யே எனவும்
    வெளிப்பட்டுள்ள சமயமத மார்க்க‌ங்களில் கடவுளின் உண்மை நிலை உரைக்கவில்லை அதனால் சமயம் மதம் பொய் என்கிறார் வள்ளலார்.

    இதோ வள்ளலார் பாடல் வரிகள்:

    “நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
    நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்குசெல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு”

    இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
    இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
    மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
    வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
    தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
    சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
    அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
    அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

    “சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
    ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி”

    ஆம்,
    இன்று ஏற்பட்டுள்ள‌ சூழ்நிலையை சரி செய்ய வேண்டுமானால்
    ” உண்மை அறியவதன் மூலமே” சரி செய்ய முடியும் .
    ஆம்
    வள்ளலார் 19ம் நூற்றாண்டில் அந்த உண்மையை நம்மிடம் தெரியப்படுத்தினார். அன்று எவரும் தெரிந்துக் கொள்ள முன் வரவில்லை. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள‌அசாதாரண சூழ்நிலை மக்கள் ஒற்றுமையாக இன்பமாக வாழும் நிலையை பாதிப்பாக உள்ளது. இந்த நிலைக்கு நாம் எல்லோருமே காரணம்.
    சாதிகள், ஏற்றத் தாழ்வுகள்,அறியாமை இவை ஒழிக்கும் ” சாதனம்” குறித்து இன்று நாம் தெரிந்துக் கொள்ளும் காலம் இதுவே. ஆம், இரக்கம் மட்டுமே கடவுள் அருளை பெற்றுத் தரும் சாதனம்.
    இந்த இரக்கம் என்ற கருணையை நம்மிடையே விரைந்து வெளிப்பட‌ தடுப்பவை எவை என்ற உண்மையை வள்ளலார் கண்டு வெளிப்படுத்தியுள்ளார்கள்.
    அது இந்த “சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களே” என்கிறார்.
    சத்தியத்தை அறியும் அறிவே உயர்ந்த அறிவு. உயர்ந்த அறிவை பெறும் தேகத்தை பெற்றவனே மனிதன்.இந்த உயர்ந்த அறிவு என்பது நம் நிலை என்ன? நம்மை அனுஸ்டிக்கும் இறைவன் (இயற்கை) நிலை என்ன? என விசாரணை மேற்கொள்வதே.
    இதுவரை இருந்த மார்க்கங்கள் இரண்டு.
    1) சமய சன்மார்க்கம்
    2) மத சன்மார்க்கம்.
    இனி உலகத்தாரிடத்தில் வெளிப்படுகின்ற 3 வது மார்க்கம்
    ” சுத்த சன்மார்க்கம்”
    உலகத்தார்களே!
    நீங்கள் உண்மை அறிந்துக் கொள்ளுங்கள் அனுபவிக்க வாருங்கள் எனச் சொல்லவில்லை “சுத்த சன்மார்க்கத்தை
    தெரிந்துக் கொள்ளுங்கள்” .
    கடவுள் மறுப்பாளர்களே!
    நீங்கள் கடவுளை நம்புங்கள் எனச் சொல்லவில்லை ” இயற்கை” குறித்து, எல்லா உயிர்களிடமும் உள்ள ஒரு ஓளி அம்சத்தை குறித்து, விசாரியுங்கள்.
    நாம் பெற்றிருக்கும் அறிவில் ” முழு உண்மை” தெரிந்துக் கொண்டு உள்ளோம் என்பது எப்படி சரி? கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்பதில் நாம் ஏற்புடையவர்களே. காரணம் இந்த உண்மை நம் அறிவில் சரியெனப் படுகிறது. எங்கும் பரந்து விரிந்து மனிதனால் அளவிட முடியாத‌ இயற்கையை குறித்த விசாரணையும் ” நல்ல விசாரணையே” அப்படித்தானே!
    இந்த இயற்கை உண்மை விளக்கத்தை இன்பத்தை
    ” இறைவன்”
    எனும் வள்ளலாரின் தனி நெறியை எங்ஙனம் மறுக்க முடியும்.
    நிற்க!
    சாதி சமய மத மார்க்க மற்றும் நாத்திகம் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருக்குமே உண்மை பொது நெறியாக விளங்கும் வள்ளலார் கண்ட ” சுத்த சன்மார்க்கம்” ஆகும்.

    # உண்மை அறிய ஆசை உள்ளவர்கள்,
    # எல்லா உயிர்களையும் தம் உயிர் போல பாவிக்கும் உண்மை இரக்கம் கொண்டவர்கள்,
    # மனிதரிடத்தில் பொது நோக்கம் வரத் தடுக்கும் சாதி பொய்யே என அறிந்தவர்கள்
    # சாத்திரங்கள் ஆச்சாரங்கள் இவையால் எந்தொரு பயனுமில்லை என அறிவில் பட்டவர்கள்,
    # இயற்கையின் உண்மை விளக்கம் இன்பமாகிய இறைவனை ஒழுக்கத்தால் அகத்திலே கண்டு அருள் பெற நல்ல விசாரணை செய்வதே வழிபாடு மற்றும் உண்மை அறிவு எனத் தெரிந்துக் கொண்டவர்கள் ,
    # அவத்தைகளை நீக்கி சாகா வாழ்வு பெற உள்ள வழி என்ன? அதை ஆண்டவரிடத்திலேயே கேட்பது என முடிவு கொண்டவர்கள்
    — இவர்களுக்கு
    ” உண்மை கடவுள்” வெளிப்படுவது சத்தியம் சத்தியமே என்ற வள்ளலாரின் தனி நெறி உயர்ந்த நெறியே.

    உண்மை கடவுளின் நிலை கண்டு அக்கடவுளின் அருளால் அவத்தைகளை நீக்கி மரணம் தவிர்த்து தனி வடிவமாகிய ஒளி தேகம் பெறலாம் என்ற வள்ளலாரின் சத்திய வாக்கியம் குறித்து விசாரம் இனி செய்வோம்.
    நன்றி:: ஏபிஜெ அருள்

  • தமிழுக்கு வந்தனம்! வந்தனம்!

    தமிழுக்கு வந்தனம்! வந்தனம்!
    __ஏபிஜெ அருள்
    “கீழடியில்”
    மதம் சமயம் சார்ந்தவை கிடைக்கவில்லை. சமய வழிபாடு சம்மந்தமான எதுவும் இல்லை. ஆனால்,
    “தமிழ் மண்” வாழ் மக்களின் சமுதாயம் எழுத்தறிவு, விளையாட்டு, வாணிபம் இவற்றில் சிறந்து விளங்கி உள்ளதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
    நிற்க! கவனிக்க!!
    சமயத்தால் இன்று நாம் பெற்றுள்ள;
    # பல்வேறு சாதிகள்
    # புராண கற்பனை கடவுள்கள்
    # கட்டுப்பாட்டு ஆசாரங்கள்

    எதுவும் தமிழ் விளங்கிய புனித தலத்தில் இல்லை, இல்லை என்பதை சத்தியமாக தெரிந்துக் கொள்ளுங்கள்.
    ஒழுக்கம், அன்பு, கருணை இவைக்கு சொந்தமே ஆதி மொழியாம் தமிழ் தோன்றிய இம்மண்.
    இந்த உண்மையை தான் வள்ளலார் 19ம் நூற்றாண்டில் கண்டு ” சாதி சமயம் மதம் பொய்” கடவுளின் அருளை பெற்று தரும் கருணை விருத்திக்கு இந்த சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் தடையாக உள்ளது என்றார். ஆனால், நாம், ஞானி சொன்னதை தெரிந்துக் கொள்ள முன் வரவில்லை.
    நீங்கள் கேட்க கூடும் தமிழ் காட்டும் கடவுள் கொள்கை என்ன?
    # இயற்கை – உண்மை, விளக்கம் இவற்றைப் போற்றி வணங்குதல்
    # நம்மை வழி நடத்திய நம் முன்னோர்களை நினைந்து வணங்குதல்
    # ஒழுக்கம்,கருணை பொது நோக்கம் கொண்ட பண்பாடுகள்
    # உண்மை கடவுள் குறித்த விசாரம் மற்றும் ஒழுக்கம்க, இவையே தமிழ் தந்த அறிவு.

    திருக்குறள் திருமந்திரம் கண்டு தெளிக.
    ( திருமந்திரத்தில் “யானை முகத்தானை” போன்ற இடைச்செருகல் பாடல்கள் பலநூறு உள்ளதை கருத்தில் கொள்க)
    நம்மை 2020 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள சாதி சமய மதங்களை விட்டு விட்டு உண்மை கடவுளை நோக்கி நாம் செய்து வந்த நல்ல விசாரத்தை மீண்டும் தொடருவோம்.
    ஒழுக்கம் அன்புக்கு “திருக்குறள்”
    கடவுள் பக்திக்கு” திருமந்திரம்”.
    கடவுள் உண்மை நிலை காண வள்ளலாரின்
    “சுத்த சன்மார்க்கம்”

    தமிழே ஆதி இறை மொழி!
    தமிழ் மண்ணே புனித இடம்!
    தமிழ் உண்மைக்கு வழிகாட்டி!
    தமிழ் இனிது! தமிழ் பொது!
    தமிழை நாம் கற்போம்- அத்
    தமிழ் நம் மூச்சாகும் இது சத்தியம்.
    தமிழனாய் வாழ்வோம்.
    நன்றி: ஏபிஜெ அருள்.
    தமிழுக்கு வந்தனம்! வந்தனம்!I
    அன்பு அறிவு இன்பம் தரும்
    ஆதி மொழி “தமிழ்”.
    ஆண்டவனை எளிதில்
    அறிய உதவும் மொழி “தமிழ்”

  • உள்ளே – வெளியே வள்ளலார் சொல்லும் “தயவு”

    உள்ளே – வெளியே வள்ளலார் சொல்லும் “தயவு”
    —- ஏபிஜெ அருள்.
    வள்ளலார் உண்மை கடவுளை கண்டார். சமய, மத மார்க்கங்களை ஏற்படுத்தியவர்கள் தங்கள் தங்கள் அனுபவங்களைத் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதியின் “சர்வ சித்தியின்” முழு உண்மையை அகத்திலே தெரிந்து அறிந்து அனுபவம் பெற்றேன் என்கிறார் வள்ளலார். முழு உண்மை அனுபவமே ” பூரண சித்தி” ஆகும். 
    பூரண சித்தியை வள்ளலார் பெற்றார். பூரண சித்தியை பெற வள்ளலார் பயன்படுத்திய வழியின் பெயரே ” சுத்த சன்மார்க்கம்”. அவ்வழியில் அவர் சாதனமாக கொண்டது ” தயவு”. தயவு என்னும் கருணை மட்டுமே.
    (நம்) தயவை கொண்டு (கடவுள்) தயவை பெறுகின்ற வழிபாட்டை தவிர வேறு ஒன்றுமில்லை சுத்த சன்மார்க்கத்தில். இதுவே வள்ளலார் கண்ட உண்மை.
    தயவு இரு வகைப்படும் என்கிறார் வள்ளலார்.
    1. கடவுள் தயவு
    2. ஜீவ தயவு.
    இதோ வள்ளலாரின் விளக்கம்:

    # கடவுள்தயை யென்பது;

    இறந்தவுயிரை யெழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக பக்ஷி ஊர்வன வாதிகளுக்கு ஆகாரம் கொடுத்தல், கால சக்கிரத்தின்படி சோமன் சூரியன் அக்கினிப் பிரகாசங்களை அளவு மீறாமல் நடத்தி வைத்தல் முதலியன. இவற்றை விரிக்கில் பெருகும்.

    # ஜீவதயை யென்பது;

    தன் சத்தியளவு உயிர்க்கு உபகரித்தல், ஆன்ம நேய தயா விசாரத்தோடு இருத்தல்.
    ஆக,
    வெளியே —
    நம் வழிபாடு (சாதனம்) எதுவெனில்;
    ” எல்லா உயிர்களிடத்தும் தயவும்”,
    உள்ளே —
    நம் வழிபாடு (சாதனம்) எதுவெனில்;
    ” ஆண்டவரிடத்தில் அன்பும்”

    வெளியே நாம் செய்யும் தயவினால் நமக்கு பக்குவம் ஏற்படுகிறது. பக்குவிகளுக்கே ஆண்டவர் அனுக்கிரகிக்கிறார்.
    இந்த அனுக்கிரத்தலே “அருள்” ஆகும். இந்த அருள் அனுபவம் அகத்திலே பெறுவதாக உள்ளது.
    அன்பர்களே!
    ” எல்லா உயிர்களிடத்தும் தயவும்” என்னும் சாதனம் எளிதல்ல.
    அது அறிவு,அன்பு, இரக்கம் சம்பந்தப்பட்டதாக உள்ளது. மேற்படி யானவற்றில் நாம் உண்மையாக பயிலுதல் வேண்டும்.
    முதலில் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் உணர்வை வருவித்துக் கொள்ளும் நற்குணத்தை பெறுதல் வேண்டும். நற்குணத்தை கொண்டு நற்செய்கைகள் செய்ய வேண்டும். இதுவே சுத்த சன்மார்க்க “சத்திய ஞான ஆசாரம்” ஆகும். இவ்வாசாரத்தால் பொது நோக்கம் வரும். பொது நோக்கம் வந்தால் தயவு விருத்தியாகும். தயவு விருத்தியில் தான் கடவுள் அருள் பெறமுடியும் என்கிறார் வள்ளலார். இங்ஙனம் ஜீவதயவு பெற்ற பக்குவிகளே உள்ளே செல்ல (அக அனுபவம் பெற ) தகுதி பெற்றவர்கள். 
    இவ்வளவு முயற்சியும் வள்ளலார் செய்ய தூண்டியது ஆசை எதுவெனில்; “ஆண்டவரின் முழு விளக்கம் தெரிந்து கொள்ளவும், மரணம் தவிர்த்து வாழும் வரம் ஆண்டவரிடம் பெறவும்”.
    இங்ஙனம்”ஆசை” உண்டேல் வம்மீன் என்கிறார் வள்ளலார்.
    நன்றி ஏபிஜெ அருள்.

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
    தனிப்பெருங்கருணை 
    அருட்பெருஞ்ஜோதி.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
    __ apj arul.

  • கேள்விக்கு என்ன பதில்?

    கேள்விக்கு என்ன பதில்?
    வள்ளலார் சொன்னதை தெரிந்துக் கொள்வோம்.
    கீழே உள்ளவையை தெரிந்துக் கொண்டுவிட்டால் சுத்த சன்மார்க்க நெறி அறிந்துவிடலாம்.
    (வள்ளலார் சொன்னதை வைத்து மட்டுமே பதில் காண வேண்டும்)
    1) வள்ளலாரின் சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருந்தது எது?
    2) சமயங்கள் பல. முக்கிய ஐந்து சமயப் பெயர்களை கூறுக. மதம் எவை?
    2) எவை எல்லாம் வள்ளலாரை அனுட்டியாதபடி தடை செய்வித்து அருளீனார் ஆண்டவர்?
    3) சுத்த சன்மார்க்கத்தில் கடவுளாக யாரை சொல்கிறார் வள்ளலார்?
    வழிபாடு செய்யும் இடம்? சாதனம் எது?
    4) சுத்த சன்மார்க்க நெறியை எத்தனை வருடமாக சொல்வதாக சொன்னார் வள்ளலார்?
    5) சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாக வள்ளலார் அறிவித்தவை எவை?
    6) நம்மிடம் உள்ள தயவு நம்மிடம் விருத்தியாகமல் தடுப்பவை எவை என வள்ளலார் சொன்னார்கள்?
    7) சத்திய ஞான சபை நிறுவி விட்டு வள்ளலார், கடவுளிடத்தில் வேண்டியது என்ன?
    8) 1873 ம் வருடம் கார்த்திகை மாதத்தில், உண்மை தெரியாது நாம் (மனிதர்கள்) இருந்ததாக சொல்லி, நமது தெய்வபாவனைக்கு வள்ளலார் அருளிய சென்ற பாடல்கள் எது?
    9) மற்ற சமயமத மார்க்கக் கடவுளர் அருளாத எதை, உண்மை கடவுள் தமக்கு அருளியதாக சொல்கிறார் வள்ளலார்?
    10) தனது மார்க்கத்திற்கு தனிப் பெயர் கொடுத்துள்ளாரா? கொள்கை என எதையாவது சொல்லி உள்ளாரா?
    11) 12/04/1871 ல் வள்ளலார் தெரிவித்தவை என்ன?
    12) கடைசி நாள் திருஅறைக்குள் செல்வதற்கு முன்பு இரவு மணி 12 க்கு நம்மிடையே என்ன உரையாற்றினார்? எதை நாம் தெரிந்து கொள்ளவில்லை என்கிறார்?
    13) சுத்த சன்மார்க்க கொடி, சுத்த சன்மார்க்க மந்திரம், சுத்த சன்மார்க்க லட்சியம் மற்றும் எந்த இரண்டைப் பற்றி விசாரமில்லை போன்ற இவை குறித்து எந்த ஆவணத்தில் உள்ளது?
    14) நம்மிடம் ஒழிந்து போக வேண்டிய ஆசாரங்களாக எவை என குறிப்பிடுகிறார் வள்ளலார்?
    15) தான் கண்ட கடவுளை வள்ளலார் எங்ஙனம் அழைத்தார்? அந்த ஒரே கடவுளை குறிக்கும் மற்ற திருக்குறிப்பு திருவார்த்தைகள் எவை?
    16) சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் யார் என்று சொல்கிறார்கள்? யாரை சுத்த சன்மார்க்கி என அழைக்கிறார்?
    அன்பர்களே,
    மேற்படி சொல்லப்பட்ட பதினாறும் தெரிந்து கொண்டவர்கள் சுத்த சன்மார்க்கத்தை அறிவர். அறிந்தவர்கள் உள்ளத்தில் ஆண்டவர் உண்மை வெளிப்படுவது சத்தியம்.
    நன்றி : ஏபிஜெ அருள்.
    மேலும் அறிய::
    www.atruegod.org