Category: tamil katturai APJ arul

கட்டுரைகள் APJ அருள்

  • ‘இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (சுத்த) சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை-Our Vallalar

    உயர்வுடையதாகிய மனித தேகத்தை பெற்றவர்களே!
    அறிவுடைய சான்றோர்களே! அன்பர்களே! சகோதரர்களே!
    வணக்கம்.

    இன்று கடவுள் குறித்த நல்ல விசாரணையை நாம் செய்யப் போகிறோம்.
    விசாரணை என்றால் அது உண்மையறிவதற்கான முயற்சியே.
    அதுவும் நல்ல விசாரணை செய்ய உள்ளோம்
    அதாவது பலனற்ற விசயத்தை பற்றி பேசி வீண்போது கழியாது, நல்ல விசயத்தைப் பற்றி பேச உள்ளோம். அந்த நல்ல விசயம் “கடவுள்”/இறைவன்/ஆண்டவர்
    கடவுள் குறித்த நல்ல விசாரணை எதுவெனில்;
    கடவுளின் உண்மை என்ன?
    உண்மை கடவுள் யார்?
    இங்கு, கடவுள் உண்டா? என்ற கேள்வி நம்மில் கிடையாது. கடவுள் உண்டு என்பதில் நம் அறிவு ஏற்கனவே ஒத்தாகிவிட்டது. ஆக கடவுள் உண்டா? என்ற அந்த அடிப்படை விசயத்திற்குச் சென்று நாம் நேரத்தை வீணாக்கி கொள்ள வேண்டாம்.
    ஆக கடவுள் உண்டு ஆனால் உண்மை கடவுள் யார்? அக்கடவுளின் நிலை என்ன? என்பதே நம் நல்ல விசாரணையின் பொருள் ஆகும்.

    அன்பர்களே!
    நம்மால்,” நம்மைப் பற்றி, நம்மை சுற்றியுள்ள புறத்தை பற்றி அறிந்துள்ளேம். அறிந்துக்கொண்டிருக்கின்றோம்.
    எவரேனும் நம்மிடம் ஏதேனும் ஒன்றைக்கொடுத்து இதை பிடியுங்கள் என்றவுடன் பிடித்துவிடுகிறோமா? அல்லது நம்மிடம் உள்ளதை கேட்டவர்களிடம் உடன் அதை கொடுத்து விடுகிறோமா? இல்லையே!
    ஆனால் இதுவே கடவுள் என்றுச் சொன்னவுடன் அதை அப்படியே ஒத்துக்கொண்டு சிறுபிள்ளையிலிருந்து வணங்க ஆரம்பித்த நாம் இன்று வரையிலும் அவற்றையே கடவுளாக துதித்து வணங்குகிறோம். அக்கடவுளின் பெயரால் அமைக்கப்பட்ட சமய மதங்களில் லட்சியம் வைத்து வளர்ந்து வருகிறோம். அச்சமய மத சடங்குகளில் பற்று வைத்து தவறாது அவைகளையும் செய்தும் வருகிறோம். நிற்க! என்றாவது ஒரு நாளாவது நாம் கும்பிட்டு வரும் கடவுள், உண்மையான கடவுள்தானா? நாம் செய்யும் சடங்குகள் மற்றும் சம்பிராதயங்கள் தேவையானதா?என நல்ல விசாரணை செய்தோமா? நமக்கு கடவுள் குறித்து எடுத்துச் சொன்ன நமது பெற்றோர், உறவினர்கள், சுற்றத்தார்கள் இவர்கள் வேறு ஏதேனும் சொன்னால் அதை அப்படியே கேட்பதில்லை. உதாரணமாக; இந்த பெண்ணை கட்டிக்கொள் என்று அன்னையோ, இந்த வேலைக்கு செல், அதைப் படி என்று தந்தையோ, அல்லது நமது உடை, உணவு, சொத்து சம்பந்தமாக நமது பெற்றோர்களோ, உறவினர்களோ அல்லது சுற்றத்தார்களோ சொன்னால் உடன் ஒத்துக்காள்வதில்லை. மேற்படி வரன், வேலை, படிப்பு, உணவு, உடை, சொத்து ஆகியவற்றை நாம் விசாரித்து அவை நம் அறிவுக்கு தெளிவுப் பெற்ற பின்பே ஒத்துக்கொள்கிறோம். அப்படித்தானே!
    அப்படித்தான் என்றால், கடவுள் குறித்த விசயத்தில் மட்டும் ஏன் நீங்கள் தெளிவுபடுத்திக்கொள்ளவில்லை. ஏனென்றால், நாம் வணங்கும் கடவுள் “சும்மா” இருக்கும் ஒரு பொருள். நாம் வணங்கி வரும் கடவுள், நம் உடை, உணவு, படிப்பு, வேலை, சொத்து, இன்பம் போன்றது போல் புலனிச்சையில் தொடர்புடையது அல்ல. பொதுவாக நாம் கடவுள் என்பது ஒரு நம்பிக்கை என்றும், அந்த நம்பிக்கையில் நம் மனம் தொடர்பு கொள்கிறது. அத்தொடர்பில் ஏதோ ஒரு திருப்தி. இது இலாபமா? என்பதை விட நம் கடவுள் நம்பிக்கையில் நட்டமில்லை. அதனால்தான் அதில் பலருக்கு விசாரணை இல்லை. சிலர் மட்டுமே முயற்சி செய்தனர். செய்கிறார்கள். தான் வணங்கும் கடவுள்கள் குறித்த உண்மையை தெரிந்துள்ளனர். தெரிந்து வருகிறார்கள்.
    எந்தவொரு சமயமும் மதமும் மார்க்கமும் நம்மை எந்தொரு தீயச்செயலையும் செய்யச்சொல்லவில்லை. அச்சமய மத மார்க்கங்களை தோற்றுவித்தவர்கள் அனைவருமே அறிவு படைத்த சான்றோர்கள். ஒழுக்கமுடையோர். அவரவர் பெற்றிருந்த ஒழுக்கம் அறிவுக்கு ஏற்றளவில் உண்மையை அறிந்திருந்தனர். அறிந்தளவே உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் சமய, மத மார்க்கங்களை ஏற்படுத்தினார்கள்.

    அன்பர்களே!
    இந்த இடம் தான் மிகவும் முக்கிய இடமாகும்.
    நம் சமய, மத மார்க்கங்களை நாம் மதிக்காமல் இருக்க முடியுமா? மதிக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் எந்தளவு உண்மையை அவை வெளிப்படுத்தி உள்ளதோ அந்தளவுக்கு மட்டுமே அவையை மதிக்க முடியும். அதே நேரத்தில் மற்றும் முழு உண்மையை அறிந்திடச் சொல்லும் நம் அறிவை மதிக்காமல் இருக்கலாமா?
    ஆனால் நம் சமய மதமார்க்கங்களில் நிர்ணயிக்கப்பட்ட நிலை என்ன? நாம் சார்ந்திருக்கும் சமய, மத, மார்க்கங்கல்ளி நமக்கு விதிக்கப்பட்ட “கட்டுப்பாட்டு ஆசாரங்கள்” நம் அறிவை கட்டுப்படுத்தி அல்லவா வைத்துள்ளது. வளரும் நம் அறிவுக்கு நம் சமய, மத மார்க்கத்தில் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதா?
    வளரும் நம் அறிவில் பல உண்மைகள் வெளிப்பட்டாலும், நாம் சார்ந்திருக்கும் சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களில் தானே கட்டுப்பட்டு வாழ்கிறோம். வாழ வைக்கப்படுகிறோம். நாம் சார்ந்திருக்கும் சாதி சமய மத மார்க்கங்களில் “விசாரணை”க்கு இடம் கொடுக்கப்படுகிறதா?
    புறத்திலே, விஞ்ஞான அடிப்படையில், எவ்வளவு கண்டுபிடிப்புகள்! அக்கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நம்மிடம் எவ்வளவு மாற்றங்கள். விஞ்ஞானத்தில் அறிவு சுதந்திரம் பெற்றுள்ள நாம் ஏன்? அகத்திலே விசாரணை செய்ய நமக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
    அன்பர்களே! “இன்று”, “இந்த இடத்தில், இப்பொழுதே பெற்றோம் “சுதந்திரம்” “அறிவு சுதந்திரம்”,
    திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் சொல்கிறார்கள்.
    என் மார்க்கம் “அறிவு மார்க்கம்’’
    மார்க்கம் என்றால் வழி
    என் மார்க்கத்தில் “அக அனுபவமே உண்மை” என்கிறார்கள்.
    “அக அனுபவம்” உண்மை அறிவினால் ஏற்படுகிறது.
    அறிவு என்றால் கருணை
    கருணை என்பது;
    எல்லா உயிர்களிடத்தும் தயவும் ஆண்டவனிடத்தில் அன்புமே!

    அன்பர்களே!
    கடவுள் அருளால் அறிவு சிறிது தோற்றுவித்த தேகமே, இந்த மனித தேகம்.
    நாம் ‘கடவுள் அம்சம்’
    கடவுள் என்பவர் ‘பேரறிவு’ ஆவார்.
    அக்கடவுள் தனிப்பெருங்கருணை’ ஆவார்.
    நாம் பெற்றுள்ள சிறிதறிவில் இந்த பேரறிவின் திறத்தை, இந்த தனிப்பெருங்கருணையின் ஆற்றலை மற்றும் உண்மை நிலையை எங்ஙனம் அறிந்திட முடியும்?
    ஒன்றின் உண்மை அறிந்திட என்ன செய்ய வேண்டும்.
    விசாரணை தானே? ஆம் விசாரணையில் தான் உண்மை தெரியவரும்.
    கடவுளின் உண்மை குறித்து விசாரணை செய்யச் சொல்லும் ஒரே மார்க்கம் திரு அருட்பிரகாச வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே!
    சுத்தம் என்பது மறுக்க வந்தது.
    பூர்வத்தில் நின்ற சமய மத சன்மார்க்கங்களை மறுப்பதே சுத்த சன்மார்க்கம் என்கிறார் வள்ளலார்.
    சுத்த சன்மார்க்கத்தில் கடவுளாக யாரை வெளிப்படுத்துகிறார் நம் வள்ளலார்.
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையா?
    ஆம் ஆனால் இல்லை.
    இங்கு ஆம் என்றால், திரு அருட்பிரகாச வள்ளலார் தான் வைத்திருந்த சமயப் பற்றினை கைவிட்டு விட்டு, தான் இயற்றிய சமய ஸ்தோத்திரத் திரு அருட்பா பாடல்களையும் விட்டு விட்டு, ‘கருணை ஒன்றையே’ சாதனமாக கைக்கொண்டு, அக்கருணை விருத்திக்கு தடையாக இருக்கும் சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களையும் ஒழித்து, இடைவிடாது மேற்க்கொண்ட நல்ல விசாரணையில் உண்மை அறிவுக்கு தென்பட்டவரே ”அருட்பெருஞ்ஜோதியாகிய தனிப்பெருங்கருணை கடவுள்” ஆகும்.
    இங்கு இல்லை என்பது;
    தான் கண்ட உண்மையை அங்ஙனமே உலகிற்கு உபதேசத்திலும், பாட்டிலும் எடுத்துக்காட்டினாலும், நம்மை கருத்தில் கருத்துச் சொல்லும் கடவுள் யார் தெரியுமா?
    எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லா பொருள்களையும், மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கம் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும், எங்கும் பூரணமாகி விளங்குகின்றஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும் அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யவேண்டும்.
    கடவுளின் நிலை அறிவதற்கு கீழ் வருமாறு கூறுகிறார்கள்.
    வள்ளலார் அவர்தம் அனுபவத்தில் கண்ட கடவுளின் நிலைகள் பற்றி பாடல்கள் மற்றும் உபதேசத்தில் சொன்னாலும், இவைகள் (கடவுள் நிலைகள்) படிப்பால் அறியக்கூடாது (முடியாது) என்கிறார். மேலும் உரைநடைப்பகுதியில் (பக்கம் 437: ஆவண எண் 4):-
    “ஒழுக்கம்” நிரம்பி, கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்திருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால் இடைவிடாது கருணை நன் முயற்சியில் பழகல் வேண்டும் என்கிறார்கள்.
    மேலே சொன்னதின் மூலம், சுத்தசன் மார்க்கத்தில் “ஒழுக்கம் நிரப்பிக்கொள்வதில்தான்” கடவுள் நிலையறிய முடியும் எனத் தெளிவாக அறியமுடிகிறது.
    ‘ஒழுக்கம்’ என்னவென்று வள்ளலார் ஏப்ரல் 1871க்கு பின்பு சொல்லியுள்ளார்களா எனப் பார்க்கும் போது 11.01.1872ல் வெளியிட்ட அறிவிப்பில் இது பற்றி காண முடிகிறது.
    ” இதில் வாசிக்க விரும்புகின்றவர்கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களாகி, நல்லறிவு, கடவுள்பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களையும், உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று, சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும்”.
    நிற்க! இங்கு சொல்லப்பட்ட ‘ஒழுக்கங்கள்’ பொதுவாக எல்லா ஞானி, யோகிகளால் ஏற்கனவே கண்டறியப்பட்டவை, போதிக்கப்பட்டவை. சமயமத மா£க்கங்களில் உள்ளவை. இந்நிலையில் வேறு ஏதேனும் வள்ளலார் சிறப்பாக தனியாக சொல்லியுள்ளார்கள? என இங்கு நாம் கண்டறியவேண்டும்.
    அங்ஙனம் ஏதேனும் சொல்லப்பட்டியிருந்தால் மட்டுமே வள்ளலார் கண்ட மார்க்கம் ஒரு தனி மார்க்கமாக கருத முடியும்
    ஏனென்றால் இவரின் தனி நெறியை வெளிப்படுத்தும் வழியும் புதியதாகவே இருக்க வேண்டும்.
    ஆம், வள்ளலார் ”சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” என தனியாகவே ஓரிடத்தில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்கள். உரைநடைப்பகுதி (ஆவண எண்.4, பக்கம் 410ல்) திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் (30.01.1874) வள்ளலார் குறிப்பிட்டது;
    ‘இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (சுத்த) சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை யாதெனில்:
    “இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுகளுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள் என்ற திருவார்த்தை அதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடைய கடமை”
    எனவே சுத்த சன்மார்க்கத்தில் “அடிப்படை தகுதி ஒழுக்கங்கள்” எனவும், “சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” எனவும் வள்ளலார் மிகத் தெளிவாக குறிப்பிட்டு உள்ளதை இங்கு உறுதி செய்ய முடிகிறது. ஆக, ஒழுக்கம் நிரம்பிய பின்பே கடவுள் நிலையறிய முடியும்.
    இதன் மூலம் வள்ளலார் ஒரு தனி வழியை (மார்க்கத்தை) கண்டு வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
    ஆக, சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலாரால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் உண்மை பொது நெறி எனப் பார்க்கும்போது;
    * உண்மை அறிவால் அறியப்படும் உண்மை கடவுள் ஒருவரே!
    * அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல் வேண்டும்.
    * கடவுளின் நிலையறிய ‘ஒழுக்கம்’ நிரப்பிக் கொள்ள வேண்டும்.
    * இவ்வுலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் லட்சியம் வைக்கக்கூடாது.
    * நம்மிடமுள்ள சாதி சமய “கட்டுப்பாட்டு ஆசாரங்களை” ஒழித்தல் வேண்டும்.
    * கடவுள் குறித்து நல்ல விசாரணை செய்தல் வேண்டும்.
    * நல்ல விசாரணை என்பது;
    உள்ளமுந்துதல்
    சிந்தித்தல்
    சிந்தித்தலே விசாரித்தல்

  • நல்ல விசாரணை “ஒருமை”

    நல்ல விசாரணை “ஒருமை”

    அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
    கருணை சபை – சாலை அறக்கட்டளை, மதுரை -யின் சார்பாக நடக்கும் நல்ல விசாரணைக்கு வந்தியிருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
    உயர்திரு. சந்திரமோகன் அய்யா, அவர்கள், திரு. தர்மலிங்கம் அவர்கள், திருமதி சிவகாமி அம்மா அவர்கள், வழக்கறிஞர் திரு.தயவுசுப்புராஜ் அவர்கள், திரு. குறிஞ்சிபாடி சுப்பிரமணியம் அவர்கள், வடலூர் விஜயராகவன்அவர்கள்,திரு. சொக்கலிங்கம், திரு. கோவர்தனன், திரு. குமாரராஜா, திருமதி. ஜெயகுருவம்மாள், அரியலூர் திரு.செங்கான் திரு. முரளிதரன், திருமதி.ஜெயலெட்சுமி மற்றும் ராஜாபாûளயம் திரு. சகாதேவ ராஜா ஆகியோரை வணங்கி வரவேற்கின்றேன்.
    கருணை சபை-சாலையின் முதல் ஆடியோ வெளியீடான “நல்ல விசாரணை” நம் அன்பர்களிடம் மிக்க பாரட்டுதலை பெற்றது. ஆம் அந்த விசாரணை மிக்க பயன் உள்ளதாகவே அமைந்தது. காரணம் அந்த விசாரணை முழுவதும் வள்ளலாரின் சத்திய வாக்கியங்களின்அடிப்படையிலேயே அமைந்தது. அதில் எந்தொரு தனிப்பட்ட விளக்கமும் அளிக்கப் படவில்லை.

    சான்றோர்களே; பெரியோர்கúள மற்றும் அன்பர்களே இன்று நாம் செய்ய உள்ள விசாரணை யாதெனில்;
    “கடவுள் நிலை” அறிவதற்கு உலகில் காணும் மார்க்கங்களில் உயர்வுடையது எது? என்ற விசாரணையே
    “சுத்த ஞானி” வள்ளலார் சொல்கிறார்கள்;

    “சமரச சுத்த சன்மார்க்கமே உயர்வுடையது”.
    இம்மார்க்கம் உலகில் உள்ள எல்லா சமய, மத மார்க்கங்களுக்கும் “உண்மைப் பொது நெறியாக” விளங்கும் என்கிறார்கள். இங்ஙனம் கூறிய கூற்றில் உள்ளவையை நாம் பெற்றியிருக்கும் ‘தனது அறிவால்’ ஒருவாறு இன்று விசாரணை செய்வோம். எல்லாம் வல்ல ஆண்டவன் துணைபுரிதல் வேண்டும்.

    இன்று நாம் பல வகைப்பட்ட சமய, மத, மார்க்கங்களளைல் பிளவு படுத்தப்பட்டு வேறுபாடுடன் வாழ்ந்து வருகிறோம். இன்று நடக்கும் பல அசம்பாவித சம்பவங்களுக்கு சமய, மத பிரிவுகúள காரணமாக உள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அவை அனைத்தும் கடவுள் குறித்தே வியம்புகின்றன. அச்சமய மத மார்க்கங்கûள தோற்றுவித்தவர்கள் தலைவர்களும், யோகிகளும், ஞானிகளுமே ஆவார்கள், அவர்கள் நல்லறிவு நல்லொழக்கம் கொண்டவர்ககள். அவரவர்கள் தங்கள் தங்கள் அறிவின்கண் அனுபவத்தின்கண் வெளிப்பட்டதின் மூலம் தோன்றியவையே இந்த பலவகைப்பட்ட சமய, மத, மார்க்கங்கள் ஆகும். ஆனால் இவையின் ஆசாரசங்கற்ப விகற்பங்களளைல் நம்மிடையே ‘பொது நோக்கத்தை’ நிலை நாட்ட முடியவில்லை இதனதன் பலவகைப்பட்ட சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசார நடவடிக்கையால் பிரிந்து வாழ்கின்றோம். மேலும் தங்களுடைய சமய, மத, மார்க்கங்கûள சாரதவர்கûள தீண்டத்தகாதவர்கள் என்றும் அல்லது பாவிகள் என்றும், அல்லது காபியர்கள்/விரோதிகள் என்றும் அழைக்கிறார்கள்.
    பல நூற்றாண்டுகளுக்கு முன்பும், ஏன் இன்றும், நம்மை மேற்படியான பல வகைப்பட்ட கடவுள் மார்க்கங்களளைல் ஒன்றுபடுத்த முடியவில்லை.காரணம் கடவுள் நிலை உண்மையாக காணவில்லை. பல்லாயிர கணக்கில் மனித உயிர்கûள இந்த சமய, மத வேறுபாட்டால் கொன்று குவித்து உள்úளளைம். கடவுள் பெயரால் கோடிக்கணக்கான அளவில் மற்ற உயிர்கûள பலி கொடுத்துள்úளளைம்.

    இந்நிலையில் நாம், வள்ளலார் கண்ட மார்க்கம் உயர்வுடையதா? எனப் பார்ப்போம். அங்ஙனம் உயர்வுடையதாக இருக்க வேண்டுமானால் கீழ்வருபவையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்
    இம்மார்க்கத்தில் வழிபாடு செய்யும் கடவுள் யார்? இக்கடவுûள எல்லாரும் ஒத்துக் கொள்ளக்கூடியதாக உள்ளதா?
    வழிபாடு முறை பொதுவாக உள்ளதா?
    கடவுள் நிலையறிவது எப்படி? எல்லாருக்கும் சாத்தியமா?
    இம்மார்க்கம் சாரதவர்கûள எங்ஙனம் இது வியம்புகிறது?
    இம்மார்க்கத்தின் நெறி எல்லோருக்கும் பொது நெறியாக இருக்கிறதா?
    இம்மார்க்கத்தினை கண்ட “வள்ளலார்” பெற்ற பயன் யாது?
    அன்பர்கúள, இதை நாம் நல்லவிசாரணை செய்தல் வேண்டும். வள்ளலாரின் ஆவணங்கள் உரைநடைப்பகுதி, அகவல், மற்றும் சுத்த சன்மார்க்கப்பாடல்கள் ஆகியவை ஆதாரமாக கொண்டு, அதிலுள்ள சத்திய வாக்கியங்கûள வாசிப்பதின் மூலம் நாம் உண்மையறிவோம். உங்கள் ஙழ்ள். அடஒ. அதமக
    நன்றி வணக்கம்
    “ஒருமை “
    தொடர் கட்டுரை பகுதி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ஆவணம் திரு.அகவல் வரிகள் 1 முதல் 168வரை மற்றும் உரைநடைப்பகுதி
    அன்பர்களே.
    வள்ளலார் கண்ட மார்க்கத்தில் சபையில் வழிபாடு செய்யப்படும் கடவுள் யார்? அச்சபை எல்லோருக்கும் பொதுவாக உள்ளதா? என தெரிதல் அவசியம் வேண்டும்.
    அகவல் வரி எண் 50-51
    “எச்சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி.”
    மேலும், வள்ளலார் தனது சத்திய சிறு விண்ணப்பத்தில் தன்மார்க்கத்தில் ‘வழிபாடு கடவுள்’ குறித்து சொல்லியது யாதெனில்
    “எல்லா அண்டங்கûளயும், எல்லா உலகங்கûளயும், எல்லா உயிர்கûளயும், எல்லாப் பொருள்கûளயும், மற்றையெல்லாவற்றையும், தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும், எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுûள உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின் கண் வெளிப்பட்டு விளங்கு மென்றும்…. “
    ஆக,
    “ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும், அக்கடவுளை 
    உண்மை அன்பால்
    கருத்தில் கருதி வழிபாடு செய்யின் …”
    என்பதின் மூலம்
    வள்ளலார் மார்க்கத்தின் சபை “பொது சபை” எனவும் வழிபாடு கடவுள் “பொது கடவுள்” எனவும் இயம்புவர் அறிஞர்கள் என்பதில் ஐய்யமில்லை.
    வள்ளலார் நெறி ‘உண்மைப் பொது நெறி’ என்பதற்கு மற்றொரு அகவல் வரிகள் 71 மற்றும் 93
    “எப்பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய்கண்டோர்
    அப்பொருள் ஆகிய அருட்பெருஞ்ஜோதி “
    “பொது அது, சிறப்பு அது, புதியது, பழையது என்று
    அது அது வாய்த் திகழ் அருட்பெருஞ்ஜோதி “
    கடவுள் வடிவம் என்ன? அதைப்பற்றி வள்ளலார் திருஅகவலில் சொல்லும் போது
    “அது சுட்டுதற்கு அரிதாம்” என்றும் (திருஅகவல் வரிஎண் 37)
    “மனம் முதலிய தத்துவங்களுக்கு எட்டாததும்” (வரி 41)
    “ஓதி நின்று உணர்ந்து உணர்தற்கு அரிதாம்” (வரி 42)
    “கற்பனை முழுவதும் கடந்தது” (வரி 5)
    “எண் தரமுடியாது” (வரி 113)
    என்கிறார்கள் மேலும் வள்ளலார், கடவுள் உண்மையை அக அனுபவத்திலே தெரியும் என்கிறார்கள்.
    இந்நிலையில், நமது புற அறிவினால் எல்லோராலும் ஒத்துக் கொள்ளக்கூடிய பொது நெறியாக வள்ளலாரின் நெறி உள்ளது.
    ஆனால் இன்று உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் கடவுளும் அதன் வடிவமும் கற்பனையால்
    சுட்டிக்காட்டியும், எண்ணிட்டும் அல்லது அவரவர் அறிவின்கண் தோன்றியவையும் தெய்வமாக
    கொள்ளப்பட்டுள்ளது. கடவுள் நிலையை கற்பனையால் பொய்யாக திணிக்கப்பட்டு உள்ளது. அக்கடவுளுக்கு
    மந்திரங்களளைல் ஓதியும் மற்றும் மனிதர்களிடையே சாதி/ வகுப்புகள் வேறுபட்ட கோட்பாடுகள்,
    வேறுப்பட்ட பல நடைமுறைகளும் உள்ளன, அவை அங்ஙனம் இருப்பதினால் தான் வள்ளலார் அகவல்
    எண் 106-ல்
    “சாதியும் மதமும் சமயமும் பொய் என
    ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி”
    என்கிறார்கள் (பக்கம் 561ல் தன் சத்திய சிறு விண்ணப்பத்தில்) தன் மார்க்கத்திற்கு மேற்ச்சொன்ன
    சமய, மத, மார்க்கங்களை எக்காலத்திற்கும் முக்கியத்தடைகளளைகும் என்கிறார்கள். மேலும் பக்கம்
    411-ல் இவையில் முற்றும் பற்றற கைவிட்டவர்களே சுத்தசன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்
    என்கிறார்கள் ஆனால் அதே நேரத்தில் ஓர் உண்மையை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும் தன்
    மார்க்கத்திற்கு மேற்படி, சமய, மார்க்கங்கள் எக்காலத்தும் முக்கியத்தடையாக அறிவித்த வள்ளலார்,
    தான் கண்ட மார்க்கத்தின் நெறியானது மேற்படி எல்லா சமங்களுக்கும், மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களும் “உண்மைப் பொது நெறியாக” விளங்கும் என்கிறார்கள். இதன் மூலம் உலகத்தார் அனைவருக்குமே பொதுநெறியாக விளங்கக் கூடிய மார்க்கத்தினையே அவர்கள் கண்டு உள்ளளைர்கள்
    கடவுளின் வடிவத்திற்கு வருவோம்
    வள்ளலார் தனது பேருஉபதேசத்தில் ( 22.10.1873)ல் சொல்லியது பக்கம் 466-ல்
    “தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள், யாதெனில்; கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள், ” தெய்வத்துக்குக் கை, கால் முதலியன இருக்குமா?” என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கùளன்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன், அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்மசித்திகûளக் கற்பனைகளளைகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருடம் எட்டு வருடம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகûள அடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக்கொண்டியிருக்கின்ற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால் நீங்கள் அடையப் போகின்ற பெரிய பிரயோஜனம் போய்விடும், அல்லது, அதில் முயற்சிசெய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவகைளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்க வேண்டியது.
    கடவுளின் வடிவம் குறித்து தனது
    அகவலில்
    எண் 57
    “பிறிவுற்று அறியாப் பெரும் பொருளளைய், என்
    அறிவுக்கு அறிவு ஆம் அருட்பெருஞ்ஜோதி”
    வரி எண் 138
    “அருள் ஒளி என்தனி அறிவினில் விரித்தே
    அருள் நெறி விளக்கு எனும் அருட்பெருஞ்ஜோதி”
    ஆக,
    கடவுளின் வடிவம்
    “நம் அறிவுக்கு அறிவில்” தெளிவதாக உள்ளது.
    அந்த அறிவு “தனி அறிவு” (சத்திய அறிவு) ஆகும். மேற்படி இந்த “தனி அறிவை” எப்படி பெறுவது? என விசாரணை செய்தல் வேண்டும.
    வள்ளலார் மிகத் தெளிவாகவே பக்கம் 438 -ல் சொல்லிவிடடார்கள்.
    திருவருள் நிலை படிப்பால் அறியக்கூடாது.
    அக அனுபவமே உண்மை.
    மேலும்
    சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் நிலையறிவது
    எப்படியெனில்,
    “ஒழுக்கம் நிரம்பி, கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால் நாம் தாழும் குணம் வரும். அத்தருணத்தில் திருவருள் சத்தி பதிந்து அறிவு விளங்கும்”.
    அகவல் வரி 143ல்
    “பிரிவு ஏது, இனி உனைப் பிடித்தனம் , உனக்கு நம்
    அறிவே வடிவு எனும் அருட்பெருஞ்ஜோதி ”
    ஆக “தனி அறிவை”
    அறிவுக்கு அறிவாகிய தனி அறிவை “விசார சங்கல்பத்தில்” பெறுவதாக உள்ளது. இச் சங்கல்பம் உண்டாகும்வரை
    “ஒழுக்கம்” நிரம்புதல் வேண்டும் என்பதே வள்ளலார் கண்ட மார்க்கத்தின் “உண்மை தனி நெறியாக” உள்ளது.
    சத்திய அறிவால் அறியப்படுகின்ற அந்த ஒரே கடவுளின் உண்மை, வடிவம், நிலை ஒழுக்கம் நிரம்புவதின் மூலமே .
    அறியமுடியும், நமது முதல் விசாரணை பகுதி 1-ல் மிகத் தெளிவாக நாம் கண்டோம்
    ஆக,
    வள்ளலார் நமக்கு காட்டிய “வழிபாடு கடவுளுக்கு” எந்தொரு வடிவமும் தரவில்லை. நம்மிடம் உள்ள உரிமை, எடுத்துக் காட்டு தகுதி அடிப்படையில் “ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும்” அக்கடவுûள உண்மையன்பால் கருத்தில் கருதவே சொல்கிறார் வள்ளலார்.நமது உரிமை அடிப்படையில் கருதிய அக்கடவுளின் நிலை, வடிவம் அறிவுக்கு அறிவாகிய “தனி அறிவி”னிலேயே தெரிவதாக உள்ளது.
    இதுவே வள்ளலார் நமக்கு காட்டிய கடவுள்
    ஆனால்,
    வள்ளலார் “தனி அறிவை” பெற்று, ஞான யோக அனுபவநிலையில் கண்ட ஆண்டவரே “தனிப்பெருங்கருணை கடவுள்” ஆகும்
    அக்கடவுûளத் தான் 18 திருநெறிகுறிப்புகளுடன் சொல்லி உள்ளளைர்கள் “இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கை இன்பின ரென்றும், நிர்க்குணரென்றும், சிற்குணரென்றும் நித்தியரென்றும், சத்தியரென்றும், ஏக ரென்றும், அநேக ரென்றும், ஆதியரென்றும், அனாதிய ரென்றும், அமல ரென்றும், அருட்பெருஞ்ஜோதிய ரென்றும், அற்புத ரென்றும், நிரதிசய ரென்றும், எல்லாம் வல்லவ ரென்றும், குறிக்கப்படுவதல் முதலிய அளவு கடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளளைற் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும், உணர்ந்தும், புணர்ந்தும், அனுபவிக்க விளங்குகின்ற தனித் தலைமைப் பெரும் பதியாகிய பெருங் கருணைக் கடவுúள…..”
    நம் வள்ளலார் துதித்தும், நினைத்தும், உணர்த்தும், புணர்ந்தும் அனுபவித்தார்கள்.
    மேலும் வள்ளலாருக்கு
    “சாகா கல்வியின்” உண்மைகள் மூன்றும்
    தெரியவந்து மரணமில்லா பெருவாழ்வு பெற்றார்கள். சுத்தமாதி முத்தேகங்கûள பெற்றவரே வள்ளலார். அவர் ஓரு சுத்தஞானி ஆவார் ஆக, கடவுள் நிலை, வடிவம் அக அனுபவத்திலேயே ‘தனி அறிவு’ பெற்றப் பின்னரே தெரியமுடியும், என்பதை நாம் தெரிந்துக் கொள்வோம்.
    அன்பர்கúள அடுத்து காண்பது
    வள்ளலார் மார்க்கத்தில் ‘தனி நெறி’ எந்த இடத்தில் வெளிப்படுவதாக உள்ளது. இந்த விசாரணையே நாம் இன்று காண்பதாக உள்úளளைம். மிக முக்கிய பகுதி இது. வள்ளலார் சொல்கிறார்கள் “தன்னை ஏறாநிலை மிசை ஏற்றியது எதுவெனில் தயவு என்னும் கருணையே” என்கிறார்கள். அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும் ஒருமையில் தான் தயவு வரும். பக்கம் 474ல் தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருûளயே குறிக்கும் என்கிறார்கள்.
    கருணை என்பது ;
    “எல்லா உயிர்களிடத்தும் தயவும்
    ஆண்டவரிடத்தில், அன்புமே “
    தயவு என்னும் கருணை = தயவு + அன்பு
    இந்த “தயவு” “ஒருமையில்” தான் வரும் என்கிறார்கள்.
    ஒருமை என்றால் என்ன?
    அன்பர்கúள இந்த ஒருமையின் பொருளில் (இந்த இடமே) “வள்ளலாரின் தனிநெறி” வெளிப்படுகிறது. ‘உண்மைப் பொதுநெறியாக’ விளங்குகிறது.
    சுத்தசன்மார்க்கம் இந்த “ஒருமையிலே”யே வெளிப்படுகிறது என்பது சத்தியம்.
    “ஒருமை” என்பது என்ன?
    இதுநாள் வரை இதற்கு கண்டு தெரிந்த வந்த பொருள் என்ன என்று தமிழ் அகராதியை பார்த்தால் தெரிய வருவது யாதெனில் ;
    நூல் பிங்கலையில் ஒருமை என்பது ஒற்றுமை மற்றும் இறையுணர்வு எனவும்
    கம்பராமயணத்தில் ஒருமை என்பது ஒற்றுமை மற்றும் இறையுணர்வு
    குறளில் ஒருமை என்பது தனிமை மற்றும் ஆலோசனை முடிவு என்றும்
    சிவப்புராணத்தில் ஒருமை என்பது ஒப்பற்றதன்மை எனவும்
    தொல்காப்பியத்தில் ஒருமை என்பது ஏகவசனம் என்றும்
    தேவாரத்தில் ஒருமை என்பது மனமொன்றுகை – யாகவும்
    தணிக்கைப்பு, நந்தியுவில் ஒருமை என்பது மோக்ஷம் – எனவும்
    கம்பரின்அயோத்தியாவில் ஒருமை என்பது மெய்ம்மை என்றும்
    398ன் குறளில் ஒருமை என்பது ஒரு பிறப்பு ஆகவும் உள்ளது.

    ஆக, உலகத்தார் இதுவரை ‘ஒருமைக்கு’ கொண்ட பொருள் மேற்படியாக தனிமை, முடிவு, ஒரேத் தன்மை, ஒப்பற்ற தன்மை ஏகவசனம், மனம் ஒன்றுகை, மோஷம், மெய்மை ஒரு பிறப்பு ஆக உள்ளது.
    ஆனால் அன்பர்கúள வள்ளலார் தரும் விளக்கம் என்ன?
    “ஒருமை”
    பக்கம் 414-ல் சொல்கிறார்கள்; “ஒருமை என்பது யாதெனில்; “தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடும். மற்ற இடத்தில், “தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது’ என்கிறார் வள்ளலார்.
    இங்குள்ள சிறப்பான தனிப்பொருûள எடுத்துக் கொள்வோம்.
    அது ‘ஒருமை’ என்பது
    “தனது அறிவு, ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடும்”.
    ஒருமை = தனது அறிவு + ஒழுக்கமும்
    ‘தனது அறிவு’ என்பது அவரவர் பெற்றியிருக்கும் அறிவே ஐய்க்ண்ஸ்ண்க்ன்ஹப் ஓய்ர்ஜ்ப்ங்க்ஞ்ங் இங்ஙனமாக பொதுநெறி கொண்டு எந்த மார்க்கமும் இதுநாள்வரை இவ்வுலகத்தில் தோன்றவில்லை.
    நல்ல விசாரணைக்கு செல்வோம்.
    ஆக ‘தனது அறிவு’, (அவரவர் பெற்றியிருக்கும் அறிவுடன்) என்பதுடன் ஒழுக்கம் சேர்ந்து, அவை இரண்டும் ஒத்த இடத்தில் (ஙங்ழ்ஞ்ங் டப்ஹஸ்ரீங்) ஒருமை தானாக கூடும். இந்த ஒருமையை பெற்றால் ‘கருணை’ வந்து விடும்.
    கருணை வந்தால் ஏறாநிலைமிசை ஏறி மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் ஆகிய அவத்தைகûள நீக்கி பேரின்ப வாழ்வை பெற்று விடலாம்.
    அடுத்து முடிவாக காண்பது
    வள்ளலார் மார்க்கமே உயர்வுடையது. எங்ஙனம்?
    அன்பர்கúள,
    ஒன்று உயர்வாக கருதப்பட வேண்டுமானால்
    அது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்
    அது எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்
    மார்க்கத்தினை ஏற்படுத்தியவர் தன் நிலைப்பற்றி சொல்லியதை கவனத்தில் கொள்ள வேண்டும்
    அம்மார்க்கத்தினை சாராதவர்கûளயும் வேறுபாடு இன்றி பார்த்திருக்க வேண்டும்
    மார்க்கத்தினை கண்டவர், வென்றியிருக்க வேண்டும் அவ்வழி மூலமே இந்த ஐந்தும் பெற்றியிருக்கும் எதுவோ அதுவே உயர்வுடையதாகும். நல்ல விசாரணை செய்வோம்.

    உலகில் காணும் சமய மத மார்க்கங்கûள பார்க்கும் பொழுது
    அம்மார்க்கங்கûள சாராதவர்கûள மற்றும் அதில் காட்டப்படும் அக்கடவுள், கர்த்தர், ஞானி, தலைவர் ஆகியோரை நம்பாதவர்ûள
    தீண்டத்தகாதவர்கள் என்றும்
    பாவிகள் என்றும்
    காப்யர்கள் என்றும்
    சாத்தான்கள் , எதிரிகள், கூட்டம் என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சுத்த சன்மார்க்கத்தில் சொல்லப்படுவது என்ன தெரியுமா? பக்குவம், அபக்குவம், பக்குவாபக்குவம்
    அபக்குவர்களின் நடவடிக்கைகளுக்கு அவர்களின் அஞ்ஞானமும், அறியாமையுமே காரணம் என்கிறார் வள்ளலார்.
    எவரையும் வேறுபட்டு, நினையாது இயற்கையின் உண்மையிலேயே காண்கிறார் வள்ளலார். பக்கம் 471-ல் ‘ஒழுக்கம் வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களளையிருந்தாலும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்தல் வேண்டும்’ என்று வள்ளலார் சொல்லியிருப்பதின் மூலம் அவர் மார்க்கம் “பொது மார்க்கம்” என அறிதல் வேண்டும்.
    இம்மார்க்கத்தின் லட்சியம்
    “ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையே”.
    பக்கம் 550ல் தன் மார்க்கத்தின் நெறி எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாக விளங்கும் என்கிறார்கள்.
    ஆக, வள்ளலார் மார்க்கத்தில்
    கடவுள் யார்? என்பதிலும்
    அக்கடவுளின் வடிவம் என்ன? என்பதிலும்
    அக்கடவுளின் நிலையறியும் வழி எது? என்பதிலும்
    அக்கடவுளின் அருள் யாருக்கு கிட்டும்? என்பதிலும்
    பொதுநோக்கம் கொண்டுள்ளது.
    இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பமாக வள்ளலார் கடவுள் உண்மையை காண்கிறார் வள்ளலார் எனவே சுத்த சன்மார்க்கமே உயர்வுடையது என்பதை நம் புற அறிவினாலும் மற்றும் அனுபவத்தினாலும் உறுதியாக கூறலாம்.
    மீண்டும் ஒருமுறை சுத்தசன்மார்க்கமே உயர்வுடையது என உறுதிப்படுத்துவோம்.
    வள்ளலாரின் சுத்த சன்னமார்க்கம்
    உண்மைப் பொது நெறியில்…..
    1. வழிபாடு கடவுள் (ஆதாரம் சத்திய சிறுவிண்ணப்பம் பக்கம் 559 )
    ‘எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும், அக்கடவுûள உண்மை அன்பால் கருத்தில் கருதி வாழிபாடு செய்தல்’…..
    2. கடவுள் வடிவம் (ஆதாரம் அகவல் வரிகள்) “உண்மைக்கடவுளின் வடிவம்
    அறிவுக்கு அறிவாம் தனி அறிவில் தெரிவதாக உள்ளது’. சத்திய அறிவை “ஒழுக்கம்” நிரப்புவதின் மூலம் பெறலாம். ஆதலால் கருணையை, இடைவிடாது நன்முயற்சியில் பழகல் வேண்டும்.
    3. கடவுள் நிலையறிய
    (பக்கம் 438 உபதேசக் குறிப்பு )
    “ஒழுக்கம் நிரம்பி கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால், நாம் தாழும் குணம் வரும் அத்தருணத்தில் திருவருள் சத்தி பதிந்து அறிவு விளங்கும்”.
    4. இம்மார்க்கத்தை சார்ந்தவர் சாராதவர்கள் பயன்பெற்றவர்கள் எங்ஙனம் அழைக்கப்படுகிறது.
    பக்குவிகள்
    அபக்குவிகள்
    பக்குவாபக்குவிகள் என்றே அழைக்கப்பட்டு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையை லட்சியமாக கொண்டுள்ளது.
    5. வள்ளலாரின் நெறி வெளிப்படும் “ஒருமை” இடத்தில் பொது நோக்கம் உள்ளதா?
    ஆதாரம் 414ம் பக்கம்
    சுத்த சன்மார்க்க நெறி வெளிப்படும்
    இடம் – உரிமை கருணை / ஒருமை / கருணை வருவதற்கு ஏதுவான உரிமை இருத்தல் வேண்டும். உரிமை = தகுதி உடையவர்கள் “கருணை” என்பது எல்லா உயிர்களிடத்திலும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்புமே) தயவு என்னும் கருணை “ஒருமையிலேயே” வரும். ஒருமை என்பது ‘தனது அறிவு ஒழுக்கம் ஒத்தயிடத்தில் தானே கூடும்’ இந்த தனது அறிவு, என்பது அவரவர் பெற்றியிருக்கும் அறிவே. இதன் மூலம் அறிவது யாதெனில் ;
    இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களளையிருந்தாலும், அவர்களிடம் ஒழுக்கம் சேர்ந்து ஒத்து வருகின்றயிடத்தில் “கருணை” வரும் என்பதை சத்தியமாக அறிதல் வேண்டும். பக்கம் 418ல் சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கûள ஒழித்து ‘பொதுநோக்கம்’ வரும் போது ஆண்டவர் அருள் கிட்டுவதாக உள்ளது என்பதே வள்ளலார் சொல்லிய உண்மையாகும்
    முடிவாக சுத்த சன்மார்க்க ஒழுக்கங்கள் எவை எனக்காணும் பொழுது வள்ளலாரின் விண்ணப்பங்கள் மூலம் தெரிவது., “தூய்மையுடைமை, அன்புடைமை, வாய்மைக்கூறல், இன்சொற்கள்” முதலியவை ஆகும். பக்கம் 547-ல் மிகத்தெளிவாக குறிப்பிட்டு உள்ளளைர்கள். அவை நல்லறிவு, கடவுள், பக்தி, உயிரிரக்கம்,பொதுநோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்ககளையும் உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செயற்கை ஒழுக்ககளையும் பெற்று சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களளைகியிருத்தல் வேண்டும்.
    மேலும் வள்ளலார் திருக்கதவு திருகாப்பிட்டு கொள்ளும் முந்தின இரவில் சொல்லியதை ஒருமுறை வாசிக்கின்றேன்.
    (பக்கம் 410 உரைநடைப்பகுதி )
    “இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை.
    யாதெனில்;
    இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளளைக கொள்ளளைதீர்கள்
    எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்”.
    நல்ல விசாரணை முற்றும் வாசிப்புக்கு வாய்ப்பு அளித்த APJ. ARUL அம்மா அவர்களுக்கு நன்றி.

    எனது அன்பு சகோதர சகோதரிகúள, இன்றைய சூழ்நிலையில்,
    உலக தீவிரவாதம்,
    உலக புவிவெப்பம்,
    உலக வறுமை, ஆகிய அனைத்திற்கும் ஒரே தீர்வு, ஒரே வழி “வள்ளலாரின் உண்மைப் பொதுநெறியே” ,
    சாதி, சமய, மத, இன, நிறம், வாழ்வு நிலை, தேசம் முதலியவை உட்பட “கட்டுப்பாட்டு ஆசாரங்கûள” விட்டொழித்து, சத்திய ஞான ஆசாரமாகிய பொதுநோக்கம் நாம் பெறுதல் வேண்டும்.
    கடவுளின் உண்மையை பெட்டியில் போட்டு பூட்டிய அந்த பூட்டை உடைக்கும் நாள் வந்துவிட்டது. இன்று நாம் உடைத்தோம் உண்மையை தெரிந்து கொண்டோம்.

    அன்பர்களே,
    உங்கள் கால்பாதம் தொட்டு வணங்கி வேண்டிக் கொள்கின்றோம். வள்ளலாரை அவர்தம் “முடிவான தனிநெறியிலேயே” வெளிப்படுத்துங்கள். அவரால் லட்சியம் வையாது கைவிடப்பட்ட சமயத்தில் வைத்து வெளிப்படுத்தாதீர்கள்.

    வள்ளலாரின் சுத்த சன்மார்க்க உண்மையை வெளிப்படுத்தும் சத்திய வாக்கியங்கள் எல்லோருக்கும் “உள்ளது உள்ளபடியே” வாசித்து காட்டுங்கள்.

    சுத்தமாதி ஞானி வள்ளலாரே,
    நீங்கள் சொல்லிய சுத்தசன்மார்க்க ஒழுக்கத்தினை இன்று, இந்த நேரத்தில், நாங்கள் தெரிந்து கொண்டோம்.
    உலகில் காணும் சமய, மதங்களில் லட்சியம் வையாது, ஆசாரங்கûள விட்டு ஒழித்து பொதுநோக்கம் கொண்டு ஒழுக்கம் நிரப்பி எல்லாம் வல்ல அந்த ஒரே தலைவனாகிய இறைவனை சத்திய அறிவால் தெரிந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வை நீங்கள் பெற்றதுபோல் பெறுவோம்.
    இது சத்தியம்
    இது சத்தியம்
    இது சத்தியம்
    முற்றும்.

    வணக்கத்துடன்
    APJ. ARUL

  • வெளிப்படையான விசாரணை — ஏபிஜெ அருள்

    வெளிப்படையான விசாரணை — ஏபிஜெ அருள்

    வள்ளலார் தனி தேகம் ஒளி வடிவம் பெற்று நம் பார்வையிலிருந்து விலகிய ஆண்டு ஜனவரி 1874.
    இன்று ஜூன் 2017.
    143 வருடங்கள் மேல் ஆகிவிட்டது.

    வள்ளலார் தனி வழியில் கடவுள் அருளைப் பெற்று மரணத்தை வென்றார்கள். அவ்வழியில் எல்லோரும் பெறுவதாக உள்ளது.இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
    ஆனால் தான் சொல்ல வந்த உண்மையை எவரும் தெரிந்துக் கொள்ளவில்லை என்றார்கள். நிலையத்திலும் வழிபாடுகள் சமயத்தின் அடிப்படையிலேயே நடந்து வந்தது.

    நீதிமன்றம் நாடி 20 க்கும் மேற்பட்ட வழக்குகளிட்டு தற்சமயம் சமயவழிபாடுகள் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரையிலும் வள்ளலாரின் தனி நெறியை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்துவதில் முரண்பாடுகள் நீடிக்கிறது.

    காரணம்:

    1.வள்ளலாரின் நெறி ஒரு புதிய தனி நெறியாகும்.

    2.சமயத்தின் மீது பற்றை விடாமல் வள்ளலாரையும் முந்தய பற்று சமயத்திலேயே காட்டுவது.

    3.வள்ளலார் பெயரை பயன்படுத்தி சங்கம் ஆரம்பித்து அன்னதானம் இட்டு தன் அறிவாலேயே கருத்தை அனுபவத்தை சொல்பவர்கள்.

    4. தவம்,மூச்சுபயிறசி, சாதாரண யோகம்,விரதம் இவையில் வள்ளலாரை சேர்ப்பது.

    இப்படி பல முரணான வழியில் அறியாமையிலும், தெரிந்தே வல்லப தன்மையிலும் வள்ளலாரையும் அவர்தம் முடிபான நெறியையும் வெளிப்படுத்தப்பட்டது.

    கடந்த வருடங்களில் பல பெரியவர்கள் வள்ளலார் பெயரில் சங்கங்கள் அமைத்து பணியாற்றினார்கள். பல நூல்கள் இயற்றினார்கள். சமுதாயத்தில் நல்லவர்களாகயிருந்து பெயர் பெற்றிருந்தார்கள். ஆனால் வள்ளலார் பெற்ற பயனை பெறவில்லை. இறந்தார்கள்.

    இன்றும் பல பெரியவர்கள் உள்ளனர். அதில் பலர்
    பெரியவர்களே.
    மார்க்கத்தின் தகுதியான கொலை புலை தவிர்த்தவர்களே இவர்கள்.
    ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகவே விளக்கம் தருகிறார்கள். மற்றவரை குற்றம் சுமத்துகிறோம்.

    எது எப்படியாயினும் 143 வருடங்கள் ஆகிவிட்டது

    வள்ளலாரை போல் யார் பயன் பெற்றார்கள்? இல்லையே!

    அப்படி எனில் இன்றும் அவர் சொன்ன உண்மையை தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

    கடவுளின் உண்மையை இது வரை யாரும் வெளிப்படுத்தவில்லை.

    தான் கண்ட உண்மை கடவுள் சமய மதங்களில் சொல்லப்பட்டவை இல்லை என்கிறார்வள்ளலார்.

    இனி எவரேனும் வள்ளலார் பெயரில் சங்கம் வைத்ததை பார்த்தால் அவர்களை கீழ் வருபவை கொண்டு காணுங்கள்.

    1.சமய கடவுளர் சமய சடங்குகளில் பற்றுக் கொணடியிருத்தல்.
    2. சாதி சாத்திரங்களில் பற்று.
    3.கோபம் காமம் தடுத்துக் கொள்ளதவர்கள்.
    4.கொலை புலை தவிர்க்காதவர்கள்.
    5.மற்றவர்களிடத்திலிருந்து வசூலித்து அன்னதானம் ஏழை அநாதை என்றில்லாமல் எல்லோருக்குமே போட்டு அதை மட்டுமே
    தொழிலாக பார்ப்பவர்
    6.வள்ளலார் நெறி என்று கூறி ஆதாரம் காட்டாமல் தன் அறிவாலே அனுபவத்தால் பேசுவது.
    7.ஏதேனும் முறையில் சடங்களை வழிபாடு செய்பவர்கள்.
    8. வள்ளலார் பெயரில் பயிற்சி வகுப்பு, அதில் சமய முறையில் தியானம, யோக முறை செய்பவர்கள்.

    மேற்படி யாவருமே வள்ளலார் நெறியில் சுத்த சன்மார்க்கத்தார் என்று சொல்ல முடியாது என்பதே உண்மையாகும்.

    இவர்களை கொண்டு வள்ளலார் நெறி தெரிந்து கொள்ள முடியுமா?

    நீங்களே சொல்லுங்கள் நியாயத்தை!

    இவர்களிடத்தில் வள்ளலார் போல் ஏன் ஒளி தேகம் அடையவில்லை என கேட்பது சரியா?

    அப்படி எனில் நீ? என கேட்க கூடும்.

    என் பணி புறமாக அமைந்து விட்டது. வள்ளலாரை முடிபான நெறியிலேயே காட்டவும் அதற்கான நடவடிக்கை என சென்று விட்டது காலங்கள்.ஆம் காலம் வீணாகி விட்டது. ஆனால் வள்ளலார் சொல்லிய உண்மை என்ன? என்பதை ஆதாரத்துடனே வெளிப்படுத்தும் செயலை என் தோழிகள்,சகோதரர்கள் மற்றும் கணவர் உதவி மூலம் உண்மையாக செய்து வந்துள்ளேன். இன்றே இப்பொழுதே தெரிந்ததில் விசாரம் மேற்க்கொள்ளப் போகிறேன்.
    வள்ளலார் நெறி என்ன?
    வழிபாடு என்ன?
    வள்ளலார் சாகா கல்வி சாத்தியமா?? என்பது குறித்து தொடருவோம். —என்றும் உண்மையுடன்:
    ஏபிஜெ அருள் வள்ளலாரின் நெறி எல்லோருக்கும் பொதுவாகவும் உண்மையாகவும் எங்ஙனம் உள்ளது என்று நாம் உண்மை அன்பால் விசாரித்து பயன் பெறுவோம் – விசாரம் தொடரும் – நன்றி
    apjarul1@gmail.com.

  • நாலும் தெரிந்த மாதிரி பேசுகிறாய்? – அந்த நான்கு உண்மைகள் எவை? ஏபிஜெ அருள்.

    நாலும் தெரிந்த மாதிரி பேசுகிறாய்? – அந்த நான்கு உண்மைகள் எவை? ஏபிஜெ அருள்.

    அன்பர்களே!
    நாம் நண்பர்களுடனோ அல்லது மற்றவர்களுடனோ பேசும் போது மாற்றுக் கருத்து ஏற்பட்டால் உடனே நம்மை பார்த்தோ அல்லது நாம் அவர்களை பார்த்தோ கேட்பது;
    நாலும் தெரிந்த மாதிரி பேசுகிறாய்? நாலும் தெரிந்தவர் யார்?
    தெரிந்தோ அல்லது தெரியாமலோ இப்படி சொல்கிறோம். ஆனால் உண்மையில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியதும் நான்கு தான்.

    அஃது யாதெனில்;
    1. சாகாத கல்வியே கல்வி
    2. ஒன்றே சிவம்தான் என அறிந்த அறிவு.
    3. மலம் 5 ம் வெல்லும் வல்லபம்.
    4. வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும் விளையவிளைவித்த தொழில்.

    இந்த நான்கு உண்மைகள் சுத்த சன்மார்க்கத்தின் மரபுகள்.
    இதை ஆண்டவரே வள்ளலாருக்கு உரைத்தார்கள். இதோ அது குறித்த பாடல்: எண்; 1369.

    சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
    தான்என அறிந்தஅறிவே
    தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
    தனித்தபூ ரணவல்லபம்
    வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
    விளையவிளை வித்ததொழிலே
    மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
    வியந்தடைந் துலகம்எல்லாம்
    மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
    வானவர மேஇன்பமாம்
    மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
    மரபென் றுரைத்தகுருவே
    தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
    தேற்றிஅருள் செய்தசிவமே
    சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
    தெய்வநட ராஜபதியே.

    இங்கு குறிப்பிட்டுள்ள 5 மலங்கள் எவை என்றால்;
    1.ஆணவம்.
    2.கன்மம்
    3.மாயை
    4.மாமாயை
    5.திரோதாயி
    இங்கு நூல்களின் உதவியால் இவை குறித்து இயன்றவரை பார்ப்போம்;
    காரிருள்-செருக்கு (இதணால் கோபம்/குரோதம்) – (அஞ்ஞானம்) – இயற்கையானது.
    கன்மம் என்பது;
    வெவ்வியவினை செயல்/தொழில் – பயனை விரும்பிச் செய்யும் சாத்திரப்படியான சடங்கு- செயற்கையானது
    மாயை என்பது
    மயக்கம் – வஞ்சக மனம் ( & தந்திரம்,ஏமாற்றம்) – இயற்கையில் செயற்கையானது
    மாமாயை என்பது;
    சுத்தமாயை –பொய்த்தோற்றம்- பிரபஞ்ச பொருள்களின் பொய்த்தோற்றம்
    திரோதாயி என்பது;
    மறைக்கை (திரை)- உலக அனுபவங்களை கொடுத்து உண்மையை மறைத்தல்.
    வேகாத கால் ஆதி (முதலிய) கண்டு….
    சாகாதலை, போகபுனல் வேகாத கால் குறித்து காணுதல் வேண்டும்.
    அன்பர்களே!
    எவர் ஒருவர் தானென்னும் அபிமானம் இல்லாமல் கோபம், குரோதம் கொள்ளாமல், சாத்திரத்தின் அடிப்படையில் அமையப்பெற்ற சமயமத சடங்குகளில் லட்சியம் வையாமல், வஞ்சக மனமில்லாமல், உலகப்பொருள்களின் போலித்தோற்ற மறைப்பை நீக்கி கொண்டவர்கள், உலக அனுபவங்களை கொடுத்து உண்மையை மறைத்துக் கொண்டுள்ள திரைகளை நீக்கி கொண்டவர்கள் 5 மலங்களையும் வென்றவர் ஆவார்.
    அடுத்து எவர் ஒருவரிடம் உண்மை இரக்கம் உண்மை அன்பு உண்மை அருள் அமையப் பெறுகிறதோ அவரிடம் சாகா கல்வியை தெரிவிக்கும் சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் இம்மூன்றும் ஞான யோகக் காட்சியில் பதிந்து அனுபவம் பெறுவர்.
    ஒழுக்கம் நிரப்பி, சாகாத கல்வியே கல்வி என்றும், சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே என்றும் உண்மையை அறிய சொல்லும் சுத்தசன்மார்க்கத்தை தழுபவர் எவரோ அவரே
    “” நாலும் தெரிந்தவர்கள்” ஆவார்கள்

    நன்றியுடன் அன்புடன் உங்கள் ஏபிஜெ அருள்.

  • சுத்த சன்மார்க்க உண்மைகளும் -கைவிடப்படவேண்டிய லட்சியங்களும்

    சுத்த சன்மார்க்க உண்மைகளும் -கைவிடப்படவேண்டிய லட்சியங்களும் – APJ. ARUL

    Saturday, July 17, 2010 at 07:01 am 1133 hits Karunai Sabai-Salai Trust.

     

    உண்மை

    சத்திய அறிவால் அறியப்படுகின்ற ஓர் உண்மைக்கடவுள் ஒருவரே. 
    – வள்ளலார்.

    கைவிட வேண்டியவை

    சமயங்களில் குறித்த தெய்வங்கள் தத்துவசித்தி விகற்பங்கள் என்று தெரிந்து,

    அவையில் லட்சியத்தை கைவிடவேண்டும். 

    உண்மை

    கடவுளின் உண்மை அக அனுபவமே….

    தயவு என்னும் கருணையே சுத்த சன்மார்க்கத்தின் ஒரே சாதனம் 
    – வள்ளலார்.

    கைவிடப்பட வேண்டியவை

    சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆகமங்கள், புராணங்கள்,சாத்திரங்கள்

    முதலியவைகùளல்லாம் தத்துவசித்தி கற்பனை கலைகள்.

    எனவே அவையை அனுட்டியாமல் இருக்க வேண்டும்.
    – வள்ளலார் (விண்ணப்பம்)

     

    உண்மை

    சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் நிலையறிய, ஒழுக்கம் நிரம்பி

    கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால்

    நாம் தாழும் குணம். அத்தருணத்தில் திருவருட்சத்தி பதிந்து

    அறிவு விளங்கும்.

    ஆதலால் இடைவிடாது ‘கருணை’ நன்முயற்சியில் பழகல் வேண்டும்

    – வள்ளலார்.

    கைவிடப்பட வேண்டியவை

    சமய சாதனங்களை கைவிடல் வேண்டும்.

    தத்துவங்கûள உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதாதீதத்தைத்

    தியானித்தும், இடையில் ஜபித்தும், கரனாலயமாகச் சமாதி செய்தும்

    போன்றவை சமய சாதனங்கள். சாத்தியர்களுக்கு

    (சுத்த சன்மார்க்கிகளுக்கு) இவை வேண்டுவதில்லை 
    – வள்ளலார் (உபதேசம்)

    உண்மை

    சுத்த சன்மார்க்கத்தில் ஆண்டவர் கட்டûளயிட்டு

    முதற்சாதனமாக தந்த திருமந்திரம்

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    கைவிடப்பட வேண்டியவை:

    காரண மாத்திரமாய் விளங்கா நின்ற விந்து நாத முதலியனவும்,

    காரிய காரண மாத்திரமாய் விளங்கா நின்ற அம், அங், சிங், வங், மங், சிவா, வசி,ஓம் முதலியவும்.

    காரிய மாத்திரமாய் விளங்கா நின்ற ஹரி, சச்சிதானந்தம், பரிபூரணம்ஜோதியுட்ஜோதி, சிவயவசி, சிவயநம, நமசிவய, நாராயணாய நம, சரவணபவாய நம முதலியவைபரிபாஷையாம்.

    மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும்,

    இவை போன்ற வேறுவகைத் தொழிற்பட்டுப் பிரயாசை எடுப்பது வியர்த்தம்(பயனின்மை).

     

    உண்மை:

    சாகாத்தலை

    வேகாக்கால்

    போகாப்புனல்

    – மூன்றும் பரமார்க்கமாகிய ஞான யோகக் காட்சியில்

    உண்டாகும் யோக அனுபவங்களின் உண்மைப்பொருள்.

    சுத்த சன்மார்க்கத்திற்கு உபாய வகைகளான அபரமார்க்கக் காட்சி கூடாது.

    பரமார்த்தமாகிய “அக அனுபவமே” உண்மை.

    உபாய வகையை நம்புதல் கூடாது; உண்மையை நம்புதல் வேண்டும். -வள்ளலார்.

    கைவிடப்பட வேண்டியவை:

    உபாய வகையில், உபாசனாதி மார்க்கமாய் வழிபடுதல் நம் கொள்கை அல்ல.

    சமய மத மார்க்கங்கùளல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்கு செல்லகீழ்படிகளளைதலால்,

    அவற்றில் ஐக்கியமென்பது இல்லை.

    – வள்ளலார்

     

    உண்மை:

    சர்வசித்தியையுடைய கடவுள் ஒருவரே. உண்மையன்பால் வழிபாடு செய்து

    பூரண சித்தியை பெற வேண்டுமென்றும் கொள்ள வேண்டுவது

    சுத்த சன்மார்க்கச் சங்கத்தவர்களுடைய கொள்கை- வள்ளலார்

    கைவிடப்பட வேண்டியவை:

    ஒரு சித்தியுடையவர் பிரம்மன்

    இரு சித்தியுடையவர் விஷ்ணு

    மூன்று சித்தியுடைய தொழில் உடையவர் ருத்திரன்

    இதுபோன்ற மற்றையர்களும்.

     

    உண்மை:

    மேற்குறித்த மூவரால் ஏற்படுத்திய தத்துவசித்திக் கற்பனைகளளைகிய

    சமய, மத மார்க்கங்கûள அனுஷ்டிப்பது அவசியமல்ல – வள்ளலார்.

    சாகாதவனே சன்மார்க்கி.

    நித்திய வாழ்வை தரவல்லவர்.

    சர்வ சித்தியுடைய தனித்தலைமைப்பதி “பெருங்கருணை”யே – வள்ளலார்.

    கைவிடப்பட வேண்டியவை:

    சமயத் தேவர்கûள வழிபாடு செய்து அற்ப சித்தியை பெற்று

    அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏற வேண்டியவைகûள

    ஏறிப் பூரணசித்தியடையாமல் தடைப்பட்டு நிற்றலை கைவிட வேண்டும்.

     

    Sutha Sanmarga Principles

  • வள்ளலார் சைவ சமய ஞானியா? அல்லது நாத்திகவாதியா?

    வள்ளலார் சைவ சமய ஞானியா? அல்லது நாத்திகவாதியா?—-APJ. ARUL.

    Saturday, July 17, 2010 at 07:14 am 1214 hits Karunai Sabai-Salai Trust.

     

    ஆரம்ப காலங்களில் வள்ளலார் சமய கடவுளர்களை துதித்து பாடிய சமயசோத்திர

    பாடல்கள் அடிப்படையில் அவரை

    அக்குறிப்பிட்ட “சமயம் சார்ந்த ஆன்மீக வாதியாக” வைத்துபார்க்கின்றனர் பலர்.

    வள்ளலார் தனது முடிபான நெறியால் உலகில் காணும் சமயம்மதமார்ககங்களில்

    லட்சியம் வையாதீர்கள் என்று கூறி சாதிசமயம் பொய் என்றுசொன்னதினால் அவரை நாத்திக வாதியாக காட்டுகின்றனர் சிலர்.

    ஆனால் உண்மையை எவரும் வெளிப்படுத்த வில்லை.

    இதற்கு காரணம் அவர்களின் அறியாமைஅஞ்ஞானம் ஆகும்.அறியாமையால் அவரவர் 

    அறிவின்கண் அறிந்தவரை அவரை வெளிப்படுத்துகின்றனர்அல்லதுஅஞ்ஞானத்தினால் திரித்து கூறி சூது செய்கின்றனர்.

    உண்மை எதுவெனில்,

    வள்ளலாரின் ஆரம்பக் காலத்திய சமயப்பாடல்களளைல் அவரை அச்சமயஞானியாக 

    காட்டுவதும் தவறுசமயமதம் பொய் என்றதினால் நாத்திக் கொள்கையுடைவர் என்றுகாட்டுவதும் தவறு.

    அச்சமய சோத்திர பாடல்களை பாடியதால் அச்சமய ஞானியும் இல்லை,

    சமயத்தை தள்ளியதால் நாத்திகரும் இல்லை.

    ஒரு உண்மைப் பொது நெறி கண்டு அதன் பயனாகிய

    மரணமில்லா பெருவாழ்வு” பெற்ற சுத்த ஞானி ஆவார்.

    வள்ளலாரை ஒரு சைவ சமய ஞானி என்பவர்களே!

    வள்ளலார் அச்சமயப்பற்றை கைவிட்டுவிட்டார்.

    மேலும் அவர் சொல்லியது :

    நீங்கள் என்னைப்போல் கைவிட்டுவிட்டால் ஏறாநிலைமிசை ஏறலாம் என்கிறார்கள்.

    -என் மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடை இந்த சமயமத மார்க்கங்கள்.

     சமய கடவுளர் அனைவரும் தத்துவசித்தி கற்பனைகளளைகும்.

     அச்சமயப்பற்றுதான் என்ன இந்த நிலையில் துளைக்கி விட்டது என்றாலோ அது தூக்கி விடவில்லை என்று தன் திரு அகவல்சத்திய விண்ணப்பங்கள்அறிவிப்புகள்பாடல்கள் மூலம்வள்ளலார் குறிப்பிட்டு உள்ளதற்கு உங்கள் பதில் என்ன?

    சமயம்மதம் சாடியதால் வள்ளலாரை சீர்த்திருத்தம் செய்த ஒரு நாத்திகர் என்றுகூறும் நாத்திகர்களே!

    -சத்திய அறிவால் அறியப்படுகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டு என்கிறார் வள்ளலார்.

     இறையருளலால் மரணம்பிணிமூப்புபயம்துன்பம் முதலிய அவத்தைகள்எல்லாம் 

    தவிர்க்கலாம்.

     நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு” என்கிறார் வள்ளலார்.

    இவைக்கு உங்கள் பதில் என்ன?

    அன்பர்களே,

    1. வள்ளலார்மார்க்கம் கடவுள் நம்பிக்கை கொண்டுஉண்மை கடவுளை கண்டமார்க்கம்.
    2. வள்ளலார்தன் மார்க்கத்தில் கண்ட கடவுள் சமயமத மார்க்கங்களில் காட்டியகடவுள்  இல்லை.
    3. தயவுஎன்னும் கருணை மூலமே இறையருள் பெறும் மார்க்கம்.
    4. தயவைவிருத்தி பண்ண தடையாகயிருக்கும் உலகில் காணும் சமயசாதிகட்டுப்பாட்டு ஆசாரங்களை ஒழித்து சத்திய ஞான ஆசாரமாகியபொதுநோக்கம் கொண்ட     மார்க்கம்.
    5. கடவுள்நிலையறிய “ஒழுக்கம்” நிரப்புதல் வேண்டும் எனச் சொல்லும் மார்க்கம்.
    6. தத்துவங்களை உபாசித்தும் அர்சித்தும்தியானித்தும் அத்தத்துவ அற்ப  சித்திப்பயனை பெற முயற்சிக்காமல் எல்லாம் வல்ல சர்வ சித்தியுடைய கடவுளின் அருள்பெற்று பூரண சித்தியால் மரணமில்லா பெருவாழ்வு பெறுவதே சுத்தசன்மார்க்கம்.

    இங்ஙனமாக விளங்கும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி எல்லாசமயங்களுக்கும்எல்லா மதங்களுக்கும்எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொதுநெறியாக விளங்கும் என்பதை தெரிந்திடல் வேண்டும்.

  • வாய்ப்பினை தவறவிடாதீர்கள் தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள் !

    வாய்ப்பினை தவறவிடாதீர்கள்
    தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள் !

    –ஏபிஜெ அருள்

    ஒரு புதிய மற்றும் பொது மார்க்கம்
    தெரிவிக்கப்பட்ட நாள் சித்திரை-1

     

    சித்திரை நாளில் தான் அதாவது சித்திரை 1 – 12 ம் நாள் 1871 ல் தான் நம் வள்ளலார் சுத்த சன்மார்க்கத்தை உலகிற்கு தெரிவித்த நாள் – இனிய இந்த சித்திரை முதல் நாளை கொண்டாடுவோம். வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க வழியில் உண்மை கடவுள் குறித்து நல்ல விசாரணையை தொடர்ந்து செய்வோம் என உறுதி ஏற்போம்
    வள்ளலாரால் கண்டு வெளிப்படுத்த 
    ஓர் உண்மை பொது மார்க்கமே ”சுத்த சன்மார்க்கம்” –
    இம்மார்க்கத்தில் கடவுளின் உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது – இக்கடவுள் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட கடவுளர், தேவர், கர்த்தர், இவர்களில் ஒருவர் அல்ல

    – புதிய மற்றும் தனி மெய்ப்பொருளாகிய ஒன்றெனும் ஒன்றாகிய ”உண்மை கடவுள்” ஆவார்

    – இம்மார்க்கத்தில் ஆச்சாரங்களுக்கு தடை – கருணை ஒன்றே சாதனம்

    – பொது நோக்கத்தை வருவித்துக் கொள்ளவேண்டும்

    – கடவுளின் உண்மை குறித்து நல்ல விசாரணை செய்தல் வேண்டும்

    – கடவுளின் அருளால் மரணம் தவிர்த்து பேரின்ப பெருவாழ்வில் வாழ்வதாக உள்ளது

    – எல்லா உயிர்களும் தம் உயிர் போல் பாவிப்பதும் மற்றும் சாகா கல்வியே கல்வி என்பதும் இம்மார்க்கத்தின் முக்கிய கொள்கையாகும்

    –திருவருட்பிரகாச வள்ளலார் இவ்வழியில் உண்மை கடவுளை அறிந்து அக்கடவுளின் அருளால் மரணத்தை தவிர்த்து தன் தேகத்தை தனி வடிவமாகிய ஒளி தேகமாக மாற்றிக்கொண்டார்கள்

    – இப்பெருவாழ்வை சுத்த சன்மார்க்க வழியில் எல்லோரும் பெற முடியும் என்று ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையில் தமிழ் மொழியில் சத்தியமிட்டு தெரிவித்த நாளே இந்த சித்திரை முதல் நாள் -ஆனால் 22-10-1873 ல் திருவருட்பிரகாச வள்ளலார் அறிவித்தது;
    உண்மை சொல்ல வந்தனனே என்று
    உண்மை சொல்லப் புகுந்தாலும்
    தெரிந்துக் கொள்வாரில்லை என்றார்கள்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே! 
    — அன்புடன் ஏபிஜெ அருள் – கருணை சபை – மதுரை
    kindly visit::: www.atruegod.org

     

  • வள்ளலார் சொல்லியிருப்பவை உண்மையா?

    வள்ளலார் சொல்லியிருப்பவை உண்மையா? — ஏபிஜெ அருள்

    வள்ளலாரின் புதிய தனி நெறியில் வெளிப்படும் ”பெருங்கருணை” உண்மைக் கடவுள் மற்றும் அருளால் கிடைக்கக் கூடிய ”மரணமில்லா பெருவாழ்வு” பற்றியும் எல்லோருக்கும் தெரிவிக்க முடியும் அல்லது எல்லோராலும் இந்த உண்மையை தெரிந்துக் கொள்ள முடியும் – எல்லோரும் தெரிந்து கொள்ளும் படி அமைந்திருப்பது கடவுளின் கருணையே –
    ஆனால் நெறியின் உண்மையை, சாகா கல்வியை எவரால் அறிந்து கொள்ள முடியும் என்றால், ”பொது நோக்கம் உடையவர்கள்” இந்த நெறியை உண்மை அன்பால் உள்ளத்தில் கருதினால் உண்மை கடவுளை அறிய முடியும் என்பதை சத்தியமிட்டு சொல்கிறார் வள்ளலார்-
    பொதுவுணர் உணரும் போதலால் பிரித்தே
    அது எனில் தோன்றா தருட்பெருஞ் ஜோதி 
     – அகவல் 121-122

    பதவிக்கு, மேல்படிப்புக்கு, புறத்தில் தகுதியை நாம் நிர்ணயித்து உள்ளோம்- அதுபோல் கருணை கடவுளின் உண்மை அறிய ஒழுக்கம் என்கிற தகுதி வேண்டும் என அறிவில் நமக்கு படவில்லை?
    ஒரு தடவை பெரிய பதவியில் உள்ள சான்றோர்கள் வீற்றியிருந்த இடத்தில் இருந்த சமயத்தில், என்னிடத்தில் மதிப்புமிக்க அவர்களில் ஒருவர்;
    “அப்படி என்ன புதியதாக தனியாக வள்ளலார் சொல்லிவிட்டார்- அது பற்றி எங்களிடம் விளக்கு என்றார்கள்”
    இங்கு வீற்றியிருக்கும் நீங்கள் எல்லோருமே மனித சமுதாயத்தில் அக்கறை உள்ளவர்கள் – மனிதர்களுள் எவ்வித வேறுபாடும் பார்க்க கூடாது என்பதில் சேர்ந்தே பணியாற்றுகிறீர்கள்- நல்ல நண்பர்கள்- ஆனால்; நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனி சமயத்தில் பற்று வைத்துள்ளீர்கள்- தங்களின் சமயங்களில் வெளிப்பட்டுள்ள கடவுளர் வேறுப்பட்டுள்ளனர்- சடங்குகள்,ஆச்சாரங்கள் வேறுப்படுள்ளன- கொள்கை தனித்தனி- வேறுப்பட்டு விளங்கினாலும் மனிதர்கள் ஒற்றுமையாக இருந்து இன்பமாக வாழ வேணும் என்பதில் ஒருமித்த கருத்தில் இருப்பவர்கள் – ஆனால் கடவுள் விசயத்தில், கொள்கையில் வேறுப்பட்டுள்ளீர்கள்– நல்ல நண்பர்களாக இருந்தாலும் தங்களிடத்தில் உள்ள இந்த கடவுள் வேறுப்பட்ட கொள்கை குறித்து ஒரு தடவை கூட உங்களுக்குள் ஒரு நல்ல விசாரணை செய்யவில்லையே- 
    “நம்மிடமுள்ள இந்த வேறுபாட்டில் எது உண்மையாக இருக்கும்? ஏன் நம்மிடம் ஒருமித்த கொள்கை இல்லை- உலகை படைத்தது எந்த கடவுள்? கடவுளின் உண்மை என்ன? உண்மையறிவது தானே சத்தியறிவுஏன் இது வரை ஒருமித்த கருத்துக்கள் உடைய நாம் நல்ல விசாரணை செய்யவில்லை? என்று உங்களிடம் ஏன் இதுவரை இந்த எண்ணம் தோன்றவில்லை?” 
    என அவர்களிடம் நான் பணிந்து சமர்பித்து மேலும் கீழ்வருமாறு தொடர்ந்தேன்:
    “என் மார்க்கம் உண்மையறியும் அறிவு மார்க்கம்” நம் நிலை என்ன? நமக்கு மேல் அனுட்டிக்கும் கடவுளின் நிலை என்ன? என நல்ல விசாரணை செய்ய சொல்லுகிறார் – திருவருட்பிரகாச வள்ளலார்- அக அனுபவமே உண்மை என்கிறார்- என்றேன் –
    ஆம், வள்ளலாரின் நெறி ஓர் உண்மை பொது நெறியே என்பதை தெரிந்துக்கொண்டோம் என்றார்கள்- அந்த வார்த்தையை கேட்டவுடன் தாங்கள் அனைவரும் தெரிந்துக் கொண்டமைக்கு எனது நன்றி என்று காலில் விழுந்தேன் – அவர்கள் அனைவரும் எழுந்தனர்- எழுந்தனர்-
    ஆக,
    தெரிந்து கொள்வது,
    அறிந்து கொள்வது;
    அனுபவிப்பது,

    என உள்ளதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்-
    தெரிந்து கொள்ள எல்லோராலும் முடியும்-
    அறிந்துக் கொள்ள கருணையும், பொது நோக்கமும் வேண்டும்-
    அனுபவிப்பது ஆண்டவன் அருளால் மட்டுமே முடியும் அந்த அருளை பெற வள்ளலார் காட்டும் வழியில் வழிபாடு செய்தல் வேண்டும்-
    நன்றி :: அன்புடன் ஏபிஜெ அருள், கருணை சபை, மதுரை-107

  • கடவுளா? கடவுள்களா? உண்மையில் கடவுள் எத்தனை பேர் ? வள்ளலார் கண்ட கடவுள் உண்மை என்ன?

    கடவுளா? கடவுள்களா?
    உண்மையில் கடவுள் எத்தனை பேர் ? 
    வள்ளலார் கண்ட கடவுள் உண்மை என்ன? – ஏபிஜெ அருள்

    நல்ல நண்பர்களாக இருப்போம் – ஆனால் சாதியில், சமயத்தில் வேறுப்பட்டு இருப்போம் – எல்லாவற்றையும் நமக்குள் பேசி விசாரித்து முடிவு எடுப்போம் – ஆனால் நமக்குள் வேறுப்பட்டியிருக்கும் கடவுளரில் எந்த கடவுள் உண்மை எனவோ ? அல்லது கடவுளின் உண்மை என்ன? எனவோ விசாரிக்க முன் வந்ததில்லை அப்படித்தானே? இது (மிகப்) பெரியவர்களாக இருந்தாலும் அல்லது தாழ்ந்த தரத்தில் இருந்தாலும் இப்படிதான் – அப்படித்தானே?

    எல்லாம் அறிந்து வருகிறோம் – அறிவால், அறிவியலால், அன்பால், நாம் உண்மையை தெரிந்து, அறிந்து வருகிறோம் –

    எந்தொரு பெரிய பதவியில் இருந்தாலும், பெரிய படிப்பு படித்திருந்தாலும், பொருளாதாரத்தில் உயர்ந்திருந்தாலும், அல்லது மேற்படியானவையில் மிகவும் தாழ்ந்த தரத்தில் இருந்தாலும் சாதி, சமயம் என வரும் போது எந்தொரு மாற்றமும் மனிதர்களிடத்தில் ஏற்படாமல் சாதியில், சமயத்தில் தான் வைத்திருக்கும் பிடியை தளர்த்திக் கொள்ள முடியாதளவு பற்றும் ஆச்சாரமும் உடையவனாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை நாம் ஒவ்வொருவரும் முதலில் அறிய வேண்டும்-

    படிப்பு, பதவி, தொழில், இடம், வீடு, மனைவி, இன்பம் முதலியவையில் அது சரி இதுதான் சரி என விசாரித்து நல்லதை தேர்ந்தெடுக்கும் மனிதா உனக்கு பிறப்பால் தீர்மானிக்கப்படும் சாதியை, சமயத்தை மாற்றவோ, விடவோ உரிமையில்லை என்பதை ஏன் சிந்திக்க வில்லை? – உன்னை கட்டுபடுத்தியுள்ள இந்த ஆச்சாரங்களை ஏன் விட்டொழிக்கவில்லை? சாதியை, சமயத்தை பற்றி சிந்திக்க உரிமை தராத ஆச்சாரத்தை ஒழிக்க அறிவில்லாத போது, கடவுள் உண்மை குறித்த விசாரணை செய்ய ஆசை எழுவது எங்ஙனம்?

    இதற்கு எது காரணம்? 
    ஆச்சாரத்தை கடமை, ஆண்டவர் கட்டளை என போதிக்கப்பட்டதே காரணம்?
    கடவுளை அறிவாலும் ஒழுக்கத்தாலும் அறியக் கூடியவர் என போதிக்கப்படவில்லை – கடவுள்(கள்) இவரே என காட்டப்பட்டுள்ளது-

    நீங்கள் ஒவ்வொருவருமே இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் – 
    அதாவது;
    நாம், நமக்கு கடவுள் என அறிமுகப்படுத்தப்பட்ட கடவுளை போற்றி, பணிந்து, வணங்கி, வேண்டி வருகிறோம் – 
    மீண்டும் ஒருமுறை படித்து பார்க்கவும் – நாம், நமக்கு கடவுள் என அறிமுகப்படுத்தப்பட்ட கடவுளை போற்றி, பணிந்து, வணங்கி, வேண்டி வருகிறோம் – அப்படித்தானே !
    நம்மில் யாராவது நாம் செல்லும் கோயில் அல்லது புனித இடத்தில் என்றாவது ஒரு நாளாவது நாம் வணங்கும் கடவுள் குறித்த உண்மையை விசாரித்து உள்ளோமா?
    கடவுள் உண்மையில் இப்படித்தான் இருப்பாரா? வணங்கும் முறை சரிதானா? ஒருவரா? அல்லது இருவரா? பலரா? இன்று இந்த உண்மையை தெரிந்து கொள்ளாமல் அடுத்த வேலை எதுவும் கிடையாது என முடிவு எடுத்துள்ளோமா?
    அல்லது; வணங்கும் கடவுளை நேரில் கண்டு, பேச வேண்டும் இன்று இதற்கு முயற்சி செய்ய வேண்டும் என நினைத்து ஆசைப்பட்டோமா?
    இல்லை – இல்லை – இல்லை – என்பதே உண்மை உண்மை உண்மை –

    அதற்கு காரணம் என்ன?
    நமக்கு இங்ஙனம் செய்ய சொல்லிதரப்படவுமில்லை – நம்மிடம் இங்ஙனமாக ஆசைக்கொள்ள அறிவும் எழவில்லை – அப்படித்தானே!

    ஆக, சொல்லப்பட்டதை அப்படியே நம்ப வேண்டும், விசாரணைக்கு இடமில்லை என்பதின் பெயரே “ கட்டுப்பாட்டு ஆச்சாரங்கள்” என்கிறார் வள்ளலார் – இந்த கட்டுப்பாட்டு ஆச்சாரங்களே எல்லோரிடமும் இயற்கையாகவே உள்ள கருணையை விருத்தி செய்ய தடையாக உள்ளது என்ற உண்மையை கண்டுபிடித்து உலகிற்கு வெளிப்படுத்துகிறார் வள்ளலார் – இதுவே வள்ளலார் கண்ட உண்மை – இந்த உண்மையை தான் வள்ளலார் சொல்லி வந்தார்கள்- ஆனால் முடிபாக சொல்லியது யாதெனில்:
    உண்மை சொல்ல வந்தனனே என்று
    உண்மை சொல்ல புகுந்தாலும்
    தெரிந்துக் கொள்வாரில்லை – வள்ளலார்

    வள்ளலார் சாதி சமய கட்டுப்பாட்டு ஆச்சாரங்களை விட்டொழித்து, கருணையால் கண்ட உண்மை இதோ கீழே:

    ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்

     உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்

     அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்

     ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்

     என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்

     யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்

     ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே

     ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
    தெய்வம் ஒன்றே ! ஒன்றேனும் ஒன்றே !! என நாம் சத்தியமாக அறிதல் வேண்டும் –
    கடவுள் ஒன்று என்றும், இல்லை கடவுள் இருவர் என்பதும், இல்லை ஒன்று இரண்டுமானவர் என்பதும் அல்லது அப்படி இப்படி என்பதும் இல்லை என அறிதல் வேண்டும் –
    இந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் அவரவர் அறிவால் அக அனுபவத்தில் உணருவதாக உள்ளது என்கிறார் வள்ளலார் –
    அன்பர்களே! கடவுளின் நிலையை ஒவ்வொருவரும் காண ஆசை கொள்வதே உண்மை அறிவு ஆகும் என்கிறார்கள் –
    இதோ இன்னும் சிலப்பாடல்கள்:
      அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்

     அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்

     மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை

     மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்

     துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்

     துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்

     உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி

     ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

     

    அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்

     ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே

     கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்

     கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்

     கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்

     கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்

     ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்

     ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

     

    பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்

     பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான

     ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்

     இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்

     நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்

     நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்

     ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே

     ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

     

    இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்

     இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்

     பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்

     பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்

     விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி

     விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்

     உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே

     ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

     

    ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்

     அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்

     பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்

     பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ

     டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்

     இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த

     ஊற்றமதாம் சமரசா னந்தசபை தனிலே

     ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

     

     வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்

     வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்

     புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே

     புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி

     மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்

     விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி

     உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே

     ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

     

    இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்

     ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்

     செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்

     திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்

     வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்

     மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்

     உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே

     ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

     

    என் மார்க்கம் உண்மையறியும் மார்க்கம் –
    என் மார்க்கம் அறிவு மார்க்கம்-
    என் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை – என்கிறார் வள்ளலார்-
    இது நல்ல விசாரணை தானே ? நன்றி அன்புடன் உங்கள் ஏபிஜெ அருள்

     

  • ’ஒருமை’ என்பதற்கு வள்ளலார் தரும் தனி பொருள்

    ’ஒருமை’ என்பதற்கு வள்ளலார் தரும் தனி பொருள்

    – ஏபிஜெ அருள்

    ஒருமை என்பதற்கு என்ன பொருள்? என்பதை நாம் தெரிந்துக்கொள்ளும் முன்பு அதன் முக்கியத்துவத்தை முதலில் தெரிந்துக் கொள்ளவேண்டும்.
    ”கருணை” மட்டுமே சுத்த சன்மார்க்கத்தில் சாதனமாகும்.
    தயவு,அருள்,கருணை ஒரே பொருளையே குறிக்கும்.
    என்னை யேறாநிலை மிசை யேற்றிவிட்டது யாதெனில் தயவு.
    தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.
    அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும்.
    அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.
    அது அந்த ஒருமையினாலேதான் வந்தது.
    நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்.

    பக்கம் 414: ல் நம் வள்ளலார் ஒருமைக்கு தரும் விளக்கம் இதோ:
    ஒருமை யென்பது தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்; மற்ற இடத்தில்,
    தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது என்கிறார் நம் வள்ளலார்.
    (ஆங்கீரச வருடம் கார்த்திகை மாதம் 3ஆம் நாள்.)
    அன்பர்களே!
    மொத்தத்தில் உலகில் காணும் சமய,மத,மார்க்கங்களில்
    உள்ள உண்மை மற்றும் உயர்ந்த கருத்து எதுவெனில்:
    ” இதரர்களுக்கு இம்சை இல்லாது,
    அவர்கள் செய்யினும்
    தான் சகித்து அடங்கி நிற்பது.”

    அன்பர்களே! இங்ஙனம் இருப்பின் நமக்கு ஒருமையை தரும் என்கிறது மற்ற மார்க்கங்கள்.
    ஆனால்,
    சுத்தசன்மார்க்கத்தில் வள்ளலார் ஒருமைக்கு தரும் விளக்கம் பாருங்கள்;
    ஒருமை யென்பது’
    தனது அறிவு ஒழுக்கம்
    ஒத்த இடத்தில், தானே கூடும்;
    மேலே ஒருமைக்கு பொருள் காணும் பொழுது,
    தனது அறிவு+ஒழுக்கம் ஒத்த இடம் என உள்ளது.
    அன்பர்களே!
    இங்கு ”தனது அறிவு” என்பது’ அவரவர் பெற்றிருக்கும் அறிவு.
    இங்கு ’ஒழுக்கம்” என்பது;
    11.01.1872ல் வெளியிட்ட அறிவிப்பில்
    “இதில் வாசிக்க விரும்புகின்றவர்கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களாகி, நல்லறிவு, கடவுள்பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களையும், உண்மையுரைத்தல், இன் சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று, சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும்”
    நிற்க! இங்கு சொல்லப்பட்ட ‘ஒழுக்கங்கள்’ பொதுவாக எல்லா ஞானி, யோகிகளால் ஏற்கனவே கண்டறியப்பட்டவை, போதிக்கப்பட்டவை. சமயமத மார்க்கங்களில் உள்ளவை.
    இந்நிலையில் வேறு ஏதேனும் வள்ளலார் சிறப்பாக தனியாக சொல்லியுள்ளார்களா? என இங்கு நாம் கண்டறியவேண்டும். அங்ஙனம் ஏதேனும் சொல்லப்பட்டியிருந்தால் மட்டுமே வள்ளலார் கண்ட மார்க்கம் ஒரு தனி மார்க்கமாக கருத முடியும். ஏனென்றால் அவரின் தனி நெறியை வெளிப்படுத்தும் வழியும் புதியதாகவே இருக்க வேண்டும்.
    ஆம், வள்ளலார் “சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” என தனியாகவே ஓரிடத்தில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்கள். உரைநடைப்பகுதி (ஆவண எண்.4, பக்கம் 410ல்) ’’திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் (30.01.1874) வள்ளலார் சொல்லியது; “இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (சுத்த) சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள் என்ற திருவார்த்தை அதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாகவுடையது கடமை”
    மற்ற ஒழுக்கங்களைத் தன்மார்க்கத்திற்கு அடிப்படையான தகுதிகளாக வைக்கிறார் வள்ளலார் என அறியமுடிகிறது. எனவே சுத்தசன்மார்க்கத்தில் “அடிப்படை தகுதி ஒழுக்கங்கள்” எனவும், “சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” எனவும் வள்ளலார் மிகத் தெளிவாக குறிப்பிட்டு உள்ளதை இங்கு உறுதி செய்யமுடிகிறது. ஆக, சுத்த சன்மார்க்கஒழுக்கம் நிரம்பிய பின்பே கடவுள் நிலையறிய முடியும் என்ற உண்மையில் நாம் பெற்றிருக்கும் அறிவு ஒத்து வந்தால் ஒருமையை நாம் பெறுவோம். அதன்பின்பு இறை தயவு நமக்கு கிட்டுவது சத்தியமே.
    இதோ சில பாடல் வரிகளை காண்போம்;
    ####
    ஒருமை நிலையில் இருமையும் தந்த
    ஒருமையி னீர்இங்கு வாரீர்
    பெருமையி னீர்இங்கு வாரீர். வாரீர்
    ####
    உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
    ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
    இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே
    ####
    ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
    ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
    ####.
    இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
    எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
    உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
    உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே
    ####.
    தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
    தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
    சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
    தனில்உறும் அனுபவம் என்கோ
    ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
    ஓங்கிய ஒருமையே என்கோ

    உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட
    ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே.

    ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
    என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.

    ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம்
    நன்றே ஒருமையுற்று நண்ணியே –

    ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
    ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றில

    ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
    ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றில
    உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
    உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
    கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
    கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
    சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
    தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
    இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
    என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.

    —– நல்ல விசாரணை செயதமைக்கு நன்றி; உங்கள் ஏபிஜெ அருள்