Category: tamil katturai APJ arul

கட்டுரைகள் APJ அருள்

  • ”சமயங்கள் பொய்” – எங்ஙனம் வள்ளலாரின் கூற்று சரியாகும்?

    ”சமயங்கள் பொய்” –
    எங்ஙனம் வள்ளலாரின் கூற்று சரியாகும்? – ஏபிஜெ அருள்

    சாதி,சமயம் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி என்றும் சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடைகளாக சமய,மத முதலிய மார்க்கங்கள் உள்ளன என்றும் சொல்லுகிறார் வள்ளலார்-
    அதே நேரத்தில் சமயங்களின் குண இயல்பாவது எவை என வள்ளலார் கூறும் போது கொல்லாமை, பொறுமை,சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்ணியம் ஆகும்- இவை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம் ஆகும்-
    மதங்களில் முக்கிய அனுபவமாக சோகம், சிவோகம், தத்வமசி, சிவத்துவமசி உள்ளது என்கிறார் வள்ளலார்-
    மேற்படியான சமயமத சன்மார்க்கங்கள் யாவும் சுத்த சன்மார்க்கத்திற்கு அநந்நியம் (அந்நியமல்ல) என்கிறார் வள்ளலார்- மேலும் கூறுகையில், சுத்தசன்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல என்கிறார் வள்ளலார்-
    இங்ஙனம் மேற்படியாக சமய,மதங்களை பெருமையாக விவரித்த வள்ளலார் எங்ஙனம் சமய,மதங்களை பொய் எனவும், அவையில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார்??இதுவே இன்று விசாரணை ஆகும்-
    ஒரு கணக்கு வாத்தியார் மாணவர்களிடம் கீழ்வருமாறு கணக்கு கேள்வியை கேட்டார்:
    கேள்வி : 5 + 4 எவ்வளவு ?
    இதற்கு ஒரு மாணவன் 5+4 = 8 என்று விடை எழுதினான் –
    அதற்கு கணக்கு வாத்தியார் தப்பு என்று அடித்து விட்டார் மார்க் எதுவும் கொடுக்கவில்லை- இதை கண்ட மாணவனின் தந்தையார் மிக கோபமாக வாத்தியாரிடம் வந்து; ஏய் வாத்தி ! என் பையன் போட்ட கணக்கிற்கு ஏன் மதிப்பெண் தரவில்லை? என்றார்- வாத்தியார் நிதானமாக சொன்னார்: விடை தவறு என்றார்- அதற்கு எப்படி தவறாகும் என்றார் பையனின் தந்தை தொடர்ந்து அவரே ஏய் வாத்தி; நீர் சொன்னது கூட்டல் கணக்கு என் பையன் 5 யை விட கூட்டி சொல்லி இருக்கானா இல்லையா? அடுத்து 9 என்ற விடைக்கு அருகில் வந்தான இல்லையா? இப்படி 5 யை விடகூட்டி விடை அருகில் வந்த என் பையனுக்கு மார்க் எதுவும் கொடுக்காமல் மொத்தமா அடித்து விட்டாய்? என்றார் தந்தை- இங்கு கணக்கு வாத்தியார் செய்தது சரியா? தவறா?
    அதுபோல்;
    இறைவன் அருள் என்றாலே துன்பம், பயம், மூப்பு, பிணி, மரணம் போக்கி கொள்வதே என்பது வள்ளலாரின் கணக்கு –
    இங்ஙனம் தராத ஒரு நெறியை பொய் என்கிறார் வள்ளலார் –
    (இங்கு உலகில் காணும் எல்லா மார்க்கமும் மரணத்தை ஒத்து கொள்கின்றன என்பதையும் மரணத்திற்கு பின் சொர்க்கம் நரகத்தில் நம்பிக்கை உள்ளவை என கருத்தில் கொள்க)
    கருணை ஒன்றே சுத்த சன்மார்க்க பயனாகிய மரணமில்லா பெருவாழ்வை பெற்று தரும் ஒரே சாதனம் என்கிறார் வள்ளலார்- அந்த கருணை விருத்திக்கு தடையாக சாதி,சமய ஆச்சாரங்கள் உள்ளன என்பதே வள்ளலார் கண்ட உண்மையாகும் –னவே சமயங்களில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார் வள்ளலார் –
    சமய,மதங்களில் சொல்லப்பட்டுள்ள வழிகளில் (சாதனங்களில்) சாதரண மனிதர்கள் பயணிக்கவோ, செயல்படுத்தவோ முடியாது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை- கடவுளை வணங்குவது என்பது எல்லோராலும் முடியும் சொல்லப்பட்ட சாதன்ங்கள்/ ஆச்சாரங்களால் அருள் பெறுவது எளிதாக இல்லை மற்றும் காலமும் நமக்கில்லை என்பதே சமயங்களில் உள்ளது என்கிறார் வள்ளலார் – அதணாலே அங்கு மரணம், மூப்பு, பிணி தவிர்த்து கொள்ளலாம் என்ற சிந்தனையே அதன் தலைவர், ஞானி, யோகிகளுக்கு ஏற்படவில்லை அல்லது அவர்களின் மரணம் தவிர்த்து கொள்வது அவர்களின் தேடலாக இருந்தது எனலாம்- ஆக, மொத்தத்தில் முழு உண்மையை உரைக்காத அல்லது முழு அருளை பெற்று தராததினால் தான் சமயங்களை பொய் என்கிறார் வள்ளலார்-
    இதுவே உண்மை-
    உலகில் எத்தனையோ சமய மத மார்க்கங்கள் உள்ளது – ஒன்றொடு ஒன்று சேர முடியாமல் தான் உள்ளது – ஆனால் எல்லா சமய,மத,மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக தன் சுத்த சன்மார்க்க நெறி விளங்குகிறது என்கிறார் வள்ளலார்
    படித்து நாம் தெரிந்து கொள்ளலாமே ! அது உண்மை நெறியா? அல்லது பத்தோடு பதினென்றா ? என்பதை அவரவர் தானே படித்து அறிய முடியும்?
    நமக்கு வேண்டியது உண்மையும் மற்றும் சாகாமல் பேரின்ப வாழ்வில் வாழ்வதும் தானே! அது வள்ளலார் சொன்னால் என்ன? எந்த மார்க்கம் சொன்னால் என்ன?-
    இன்றே படிப்போம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை

     

    – அன்புடன் ஏபிஜெ அருள், கருணை சபை, மதுரை-

  • “ கருணை “ பற்றி வள்ளலார் தரும் தனி விளக்கம்- வள்ளலார் தரும் விளக்கங்கள் புதிய மற்றும் தனித்தன்மையுடையது

    “ கருணை “ பற்றி வள்ளலார் தரும் தனி விளக்கம்- வள்ளலார் தரும் விளக்கங்கள் புதிய மற்றும் தனித்தன்மையுடையது – ஏபிஜெ அருள்

    “வள்ளலார் மார்க்கம் என்றாலே கருணை என எல்லோரும் அறிவோம்ஆனால் கருணைக்கு வள்ளலார் கொடுத்துள்ள விளக்கம் தனிப் பொருளாகும்இதுவரை யாரும் மேற்படியாக விளக்கம் தராததினால் புதியதாகவும் உள்ளதை காணலாம் – 
    கருணை என்றால் பொதுவாக நாம் அறிந்திருப்பது; மனிதர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவுதலும், மேலும் உயர்வாக பொருள் கொண்டால்; உலகில் உள்ள எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ளுதலும், அவை துக்கப்படும் போது உருக்கம் கொள்வதும் கருணையாகும்-அப்படித்தானே –
    ஆனால் வள்ளலார் கருணைக்கு தரும் விளக்கம் யாதெனில்;
    “கருணை” என்பது; எல்லா உயிர்களிடத்தும் தயவும், 
    ஆண்டவரிடத்தில் அன்புமே” என்கிறார்கள் –
    சுத்த சன்மார்க்கத்தின் சாதனமும் இதுவே-

    கருணை யில் முதல் பகுதி; 
    எல்லா உயிர்களிடத்தும் தயவும் என உள்ளது எங்ஙனம் உலகில் உள்ள உயிர்களிடத்தும் தயவு காட்ட முடியும்? தயவு, கருணை, அருள் இம்மூன்றும் ஒரு பொருளையே குறிக்கும் என்கிறார் நம் வள்ளலார் – 
    என் மார்க்கத்தில் “ஆன்ம அறிவு” கொண்டியிருக்க வேண்டும் என்கிறார்கள்- 
    ஆன்ம அறிவு என்றால் என்ன என வள்ளலார் கூறும் போது; ஒரு பொருளினது உண்மையை அறிதல் ஆன்ம அறிவு என்கிறார்கள்

    – எனவே உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் கடவுள் சமுகத்தின் அணுக்களே என்ற உண்மையை நாம் முதலில் அறிதல் வேண்டும்இந்த ஆன்ம நேயத்தால் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கின்ற உணர்வை வருவித்து கொண்டாலே போதுமானது- அதன் பின்பு அவரவரின் கருணை விருத்திக்கு ஏற்ப உயிர்களுக்கு உபகாரம் இருக்கும்-

    கருணையில் இரண்டாவது பகுதி; 
    ஆண்டவரிடத்தில் அன்பு  – எப்படி ஏற்படுத்திக் கொள்ள? அன்பு என்றால் என்ன? அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்ம உருக்கம் – கடவுளின் நிலை குறித்து உள்ளழுந்தி சிந்தித்திக்க தொடங்குவதிலே கடவுளின் அன்பை பெற்று விடலாம் – வள்ளலார் தன் மார்க்கத்தில் கடவுளை எங்ஙனம் அறிய முடியும்? என வியம்பும் போது; ஒழுக்கம் நிரப்பிக்கொண்டு, நினைந்து,உணர்ந்து, நெகிழ்ந்து அன்பு நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் நம்மிடம் என்று ஏற்படுதோ அந்த கணமே கடவுளின் உண்மையை உள்ளத்தில் உணரலாம்- அருள் கிட்டும்- பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் என்கிறார் நம் வள்ளலார்-

    இது வரை நான் வீண்காலம் கழித்து விட்டேன்இதோ நான் ஒழுக்கம் நிரப்பி, நல்ல விசாரணை செய்யப் போகிறேன் – எல்லாம் வல்ல என் ஆசான் வள்ளலார் என்னுடன் இருந்து உண்மை கடவுளின் நிலைக் காண உதவிடுவார்கள் – இது சத்தியம் – ஏபிஜெ அருள்-
    (“என்னை இந்த ஏறாத நிலை மேல் ஏற்றிவிட்டது கருணையே – அந்த கருணைக்கு ஒருமை வரவேண்டும் – ஒருமையில் தான் கருணை வரும்”- அடுத்து, ஒருமை என்றால் என்ன என வள்ளலார் சொல்லியிருப்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்

     

    –நன்றி ஏபிஜெ அருள், மதுரை கருணை சபை-)

  • புதிய தனி கடவுள் “சுத்த சிவம்”

    புதிய தனி கடவுள் “சுத்த சிவம்”

    இக்கடவுள் சமய,மத,மார்க்கங்களில் சொல்லப்பட்ட கடவுள் இல்லை –இக்கடவுளை தான் தான் கண்டதாக சொல்லுகிறார் வள்ளலார் –
    உலகில் பல சமய,மத,மார்க்கங்களில் பல கடவுள்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளது – அவரவர் நம்பிக்கை கொண்டு வழிப்பட்டு வருகிறார்கள் – சில மார்க்கங்கள் புதியதாக தோன்றினாலும் அதில் சமய, மதங்களில் வெளிப்பட்டுள்ள கடவுளரை தான் சுட்டி காட்டியுள்ளார்கள் –
    ஆனால், வள்ளலார் தன் சுத்த சன்மார்க்கத்தில் வருகிறகடவுள் இதற்கு முன் சமய, சாத்திரப் புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல என்கிறார் வள்ளலார்
    உலகில் பல வேறுப்பட்ட கடவுளர்கள், தேவர்கள் சமயங்களில், புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது – ஒரு மார்க்கக் கடவுளரை மற்றொரு மார்க்கத்தார்கள் ஏற்பதில்லை – மேற்படி சமய,மதங்களில் கடவுளரை உருவமாக, அல்லது அருவமாக அல்லது உருஅருவமாக காட்டப்பட்டுள்ளது –
    வள்ளலார் தன் வழியில் (மார்க்கத்தில்) கண்ட “உண்மை பொது” கடவுளரைப் பற்றி குறிப்பிடும் போது, கீழ் வருமாறு விள்ளக்குகிறார்கள் :
    ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
    உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
    அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
    ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
    என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
    யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
    ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
    ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

    எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
    இதுஅது எனஉரைப் பரிதாய்த்
    தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
    தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
    பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
    புத்தமு தருத்திஎன் உளத்தே
    அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

    • சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
      தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
      என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
      எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
      புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
      புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
      தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
      தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.

    வள்ளலார் குறிப்பிடும் கடவுள் பொதுவாகவும், அறிஞர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகவும் இருப்பதை பாருங்கள் – எது எல்லோராலும் ஒத்து கொள்ளப்படுகிறதோ அதுவே இறைவன் வீற்றியிருக்கும் இடமாகும் என்பதில் என்ன சந்தேகம்?
    மேலும் மற்ற மார்க்கங்களில் சொல்லப்பட்டுள்ள ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள், கடவுளர், தேவர்,அடியார், யோகி,ஞானி முதலிய இவர்கள் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி யை தான் கண்டதாக வள்ளலார் சொல்லுகிறார்கள்இந்த உண்மை கடவுளை கண்டு அருள் பெற்றால் மரணம்,பிணி,மூப்பு,பயம், துன்பம் முதலிய அவத்தைகள் நீங்கும் என்கிறார்கள் – உண்மை கடவுளின் அருள் பெற யாருக்கும் யாதொரு தடையுமில்லை – அஞ்ச வேண்டாம் என்கிறார் வள்ளலார் –
    இன்றே அறிந்திடுவோம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தையும் அதில் வருகிற உண்மை கடவுளாகிய் சுத்த சிவத்தையும் –
    நன்றி வணக்கம் :::: ஏபிஜெ அருள் ::::::

     

  • நம் தாண்டவம், ஆட்டம், நாட்டியம் ஆண்டவன் அருளை பெற்றுத் தருமா?

    நம் தாண்டவம், ஆட்டம், நாட்டியம் ஆண்டவன் அருளை பெற்றுத் தருமா?

    இங்கு என்ன விசாரணை செய்யப் போகிறோம் என்றால் ஆண்டவன் அருள் பெறுவதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சாதனம் என்ன என்பதே!
    ஆண்டவன் அருள் பெறுவதற்கு ஆண்டவரின் நிலை காண வேண்டும் என்கிறார் வள்ளலார் – ஆண்டவர் நம்மிடம் எங்கு உள்ளார்? எந்நிலையில் வீற்றியிருக்கிறார்? என வள்ளலார் வியம்பும் போது;
    ஞானசபை யென்பது ஆன்மப் பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்குள் ளிருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவே நடனம். இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞானசபை என்றும், நடராஜர் என்றும், நடனம் என்றும் சொல்லுகிறது-

    ஆக, ஆண்டவரின் நடனத்தை நாம் காணுதல் வேண்டும் –

    அதற்கு நாம் எந்த சாதனத்தை கைக்கொள்ள வேண்டும்?

    சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம்.
    மேலும், மற்றொரு இடத்தில்;
    பத்தி என்பது மனநெகிழ்ச்சி மனவுருக்கம். அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்மவுருக்கம். ஈசுவரபத்தி என்பது எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதல். ஜீவகாருண்யமுண்டானால் அருள் உண்டாகும்; அருள் உண்டானால் அன்புண்டாகும்; அன்புண்டானால் சிவானுபவம் உண்டாகும். அந்தக்கரண சுத்தியின் பிரயோஜனம் பத்தியை விளைவிப்பது.
    மேலும்;
    சுத்த சிவநிலை அறிவது எப்படியெனில்:
    “ ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்ப முண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்தருணத்தில் திருவருட்சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது நன்முயற்சியில் பழகல் வேண்டும்.” என்கிறார் வள்ளலார்-
    இங்குள்ள சங்கல்பத்தின் பொருள் என்ன எனப் பார்க்கும் போது;
    சங்கல்பத்தின் பொருளும் விரிவும் யாதெனில்:- விரிவாவது ஐந்து: நிர்விகல்பம், சவிகல்பம், சங்கல்பம், விகல்பம், கல்பம். இவற்றுள் நிர்விகல்பமாவது கடவுளறிவு. மேற்படி அறிவின் வியாபகமே சவிகல்பம். சங்கல்ப மென்பது கரணம் யாதொன்றிலும் பற்றாமல் சுத்தமாயிருந்த காலத்தில் தோன்றிய அசைவே சங்கல்பம்; ஒன்றிலும் பற்றாது அசைந்த மேலசைவென்னும் புடைபெயர்ச்சியே சங்கல்பம். நாம் நஷ்டமடையோம் என்று உள்ளழுந்திய பிரக்ஞையே சங்கல்பம். விகல்ப மென்பது பிரம சதாசிவ கால அளவைக் குறிக்கிறது. இதில் பலவாக விரிந்த அனுசந்தானங்கள் கல்பம். உள்ளழுந்தல், அதைச் சிந்தித்தல் சிந்தித்தலை விசாரித்தல் இம்மூன்றுமே சங்கல்ப விகல்ப கல்பம்.
    ஆக, மொத்தத்தில்;
    ஒழுக்கம் நிரப்பிக் கொள்ளுதல்
    எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவித்தல்
    கரணம் யாதொன்றிலும் பற்றாமல் இருத்தல்
    உள்ளழுந்துதல், சிந்தித்துதல் சிந்தித்தலே விசாரித்தல்
    இவையானவையில் நெகிழ்ந்து, உருகி இருப்பதிலேயே கடவுளின் நிலை அறிதல் முடியும்-
    இப்பொழுது நீங்களே சொல்லுங்கள், நாம் ஆடுவதினாலும், மற்றவர்களை ஆடச் சொவ்வதினாலும், ஆண்டவனின் நடனத்தை காண முடியாது அல்லது காண வைக்க முடியாது தானே!
    ஆண்டவனின் அசைவாகிய நடனம் காண,
    ஒழுக்கம் நிரப்பி, இடைவிடாது நன்முயற்சியில் நினைந்து ,உணர்ந்து, நெகிழ்ந்து உள்ளழுந்தி உள்ளத்தில் காண்போம் – அருள் பெறுவோம் – பேரின்ப பெருவாழ்வில் வாழ்வோம்-
    ஏபிஜெ அருள் – கருணை சபை-சாலை, மதுரை-

  • கடவுள் — கடவுள் — என்கிறார்களே யார் தான் அந்த கடவுள் ???

    கடவுள் — கடவுள் — என்கிறார்களே யார் தான் அந்த கடவுள் ???

    – இந்த கடவுளே கடவுள் என்கிறார் இந்த ஆத்திகர் –
    அவர் சொல்லும் கடவுள் கடவுள் இல்லை, எங்கள் கடவுளே கடவுள் என்கிறார் அந்த ஆத்திகர் –
    இவர்கள் சொல்லும் கடவுளர் கிடையாது – எந்த கடவுளும் கிடையாது என்கிறார்கள் நாத்திகர்கள் –
    கண்ணுக்கு புலப்படாத ஒன்றின் மேல் எனக்கு கவலையில்லை, மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களை போக்கி இன்பமாக இருக்க முயற்சிப்பதே சரி என்கிறார்கள் சில மார்க்கத்தினர் –
    (எதைப்பற்றியும் சிந்தனை இல்லாதவர்களும் இங்கு உண்டு- ஆனால் அது குறித்து இங்கு விசாரணை வேண்டாம் அவர்களுடனும் இங்கு விசாரணை இல்லை)
    இதில் எது உண்மை? எதை நம்புவது?
    தான் பிறந்த குடும்பம் எந்த சமய, மத, மார்க்கத்தை தழுவி வருகிறதோ, அம்மார்க்கத்தின் கடவுளரை அல்லது நெறியை பின் பற்றி கடைசி வரை வருபவர்களின் சதவிதமே 97% மேல் உள்ளதை எவரும் மறுக்க முடி;யாது- அப்படித்தானே?
    மிக குறைந்த சதவிகிதத்தனரே ஆத்திக எண்ணத்திலிருந்து நாத்திகத்திற்கும், நாத்திக எண்ணத்திலிருந்து ஆத்திக எண்ணத்திற்கும் மாறுகிறார்கள் –
    அதே போல் மிகச் சில எண்ணிக்கையிலே மார்க்கம் விட்டு மார்க்கம் மாறுகிறார்கள் –
    மேற்படியான மாற்றத்திற்கு கூட எந்தொரு விசாரணையும் அறிவு பூர்வமாக செய்து அதில் ஒரு முடிவை எடுத்து மாறினார்களா என்றால் அது கிடையாது- ஏதோ ஒரு செளகரித்திற்காக அல்லது பலனுக்காக அல்லது அங்குள்ள சடங்கின் மேல் விருப்பம் கொண்டோ அல்லது வேறு ஒரு காரணத்தின் அடிப்படையில் தான் மாறியுள்ளதை காணலாம் – அப்படித்தானே? –
    நிற்க!
    எல்லா சமய, மத, மார்க்கங்களும் நல்ல விசயங்களே வியம்புகிறது – அல்லது எந்தொரு மார்க்கமும் தீயதை செய் என கூறவில்லை என்போமா -மனிதர்களின் இச்சைகளை பூர்த்தி செய்வது, நல்லது நடக்க வேண்டுமானால் சடங்குகள் செய் எனச் சொல்வது – மனம் அடங்க பயிற்சி – காருண்யம், அன்பு,இரக்கம்,சாந்தம், என்பவைகளும் உள்ளது – இவைகள் குறித்து வியம்புவதில் மார்க்கங்களுக்குள் அளவு மாறுகிறது- மேலும், வெளிப்படுத்தப்பட்ட கடவுளை வணங்க வைக்கப் படுகிறோம் – மற்றவையில் நம்பிக்கை வைக்க கூடாது என்றும் கட்டளை உள்ளது –
    நிற்க!
    இதில் எது உண்மை? கண்டிப்பாக எல்லாமே உண்மையாக முடியாது – அப்படித்தானே ? அப்படியானால் எது உண்மை?
    இதில் எழும் கேள்விகள் மூன்று –
    1- கடவுள் உண்டா? இல்லையா?
    2- கடவுள் உண்டு என்றால் உண்மை கடவுள் யார்?
    3- கடவுள் இல்லை என்றால் மனிதனின் விசாரணை அறிவு எதை குறித்து?

    இவையே இங்கு தீர்மானிக்கப்படவேண்டியது ! அப்படித்தானே !
    ஆம் என்பவர்களுடன் விசாரணை மேலும் தொடர்வோம் –
    1) கடவுள் உண்டா? இல்லையா?
    எதை நினைத்து இங்கு “கடவுள்” என்கிறோம்? என்ற கேள்விக்கு முதலில் பதில் காணவேண்டும் – அப்படித்தானே?
    – சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்ட கடவுள் உண்டா இல்லையா?
    – பொதுவாக கடவுள் உண்டா இல்லையா?
    இங்கு சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்ட கடவுள் உண்டா இல்லையா? என்ற விசாரணை தலைப்பு 2 ல் செய்து கொள்வோம்? கடவுள் உண்டா ? இல்லையா? என்ற பொதுவான ஒரு விசாரணை இது – குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஆத்திகமா? நாத்திகமா? என்று முடிவு செய்ய வேண்டும் –
    (இங்கு நாம் விசாரணை செய்யும் போது நாம் பற்றுக்கொண்டுள்ள அல்லது நம்மை பற்றியுள்ள நம்பிக்கையை சற்று தள்ளி வைத்து, வள்ளுவர் குறளில் சொல்லிய அதாவது எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்ற அடிப்படையில் செல்கிறோம் என்று கவனத்தில் கொள்வோம் – அப்படிதானே – ஆம் என்பவர்களுடன் விசாரணை தொடர்கிறது)
    ஆக, ஆத்திகமா? நாத்திகமா? என்று முடிவு செய்ய வேண்டும்-
    ஆத்திகம் என்பது என்ன? அதன் விளக்கம் நாம் சமய, மத, மார்க்கங்களை கடந்து தான் காண வேண்டும் – இது முக்கியம் என கருதுகிறேன் – காரணம் நாம் கொண்டியிருக்கும் சமய,மத,மார்க்க கடவுளரை குறித்து தலைப்பு 2ல் காண உள்ளோம் – அதனால் தான் இங்கு பொதுவாக சமய, மத, மார்க்கங்களை கடந்த விசாரணை வேண்டும் என்றேன் –
    ஆத்திகம் என்பது;
    நாம் யார்? நம் நிலை என்ன? நமக்கு மேல் நம்மை அனுஸ்டிக்கும் ஆண்டவரின் நிலை என்ன? என்ற விசாரணையின் முடிவு செய்த ஒன்றில் நம்பிக்கை எனலாமா?
    நாத்திகம் என்றால் என்ன?
    மேற்படி செய்த விசாரணையின் முடிவை மறுப்பவர்கள் எனலாமா?
    இந்த மேற்படி விளக்கத்தின் அடிப்படையிலேயே ஆத்திகர் என்றும் நாத்திகர் என்றும் உலகில் பெயரிட்டு அழைக்கிறார்கள் என்பதே 99% சதவித பொருளாக உள்ளது – அப்படித்தானே?
    ஆனால்; மற்றொரு அறிவு விசாரணையில் ஆத்திகம், நாத்திகம் வேறு கோணத்தில் செல்கிறது – அது என்ன?
    ஆத்திகம் என்பது; ஒரு சக்தி அல்லது பல சத்திகள் உள்ளது என்றும்; நாத்திகம் என்பது; அப்படி எதுவும் இல்லை என்று மறுப்பதும் என உள்ளது-
    ஆக, பொதுவாக ஒரளவுக்கு நாம் முடிவு செய்வோம் – அது ஒன்றை விசாரித்து அல்லது ஏதேனும் வழியில் முடிவு செய்து மேற்படி விசாரித்ததில்,முடிவு செய்ததில் நம்பிக்கை வைப்பதை ஆத்திகம் என்றும், அதை மறுப்பது நாத்திகம் என்று கொள்வோம் இந்த விசாரணையில் –
    ஆக, சக்தி ஒன்று அல்லது சத்திகள் பல இருந்து இந்த அண்டங்களை, உலகங்களை,உயிர்களை,பொருள்களை தோற்றுவித்து,வாழ்வித்து,குற்றம் நீக்குவித்து,பக்குவம் வருவித்து,,விளக்கம் செய்வித்து வருகிறது– அந்த சக்தியை, சத்தர்களை ஆண்டவர் என்றும் தெய்வங்கள் என்றும் சொல்கிறோம் –
    அல்லது இப்படி காண்போம் –
    நாம் உள்ளோம் நாம் இயங்குகிறோம்
    நம்மை சுற்றி மற்றவை உள்ளது அவை இயங்குகிறது
    இங்கு உள்ளதின் நிலை என்ன? நம்மை சுற்றி உள்ளதின் நிலை என்ன?
    மொத்ததில் நாம், நம்மை சுற்றி உள்ளதை இயற்கை என்போமா?
    இயற்கை உண்மை (உள்ளது) இயற்கை விளக்கம் (இயக்கம்) மீது நம்பிக்கை வைத்து அதையே கடவுளாக வணங்கும் கொள்கை இங்கு ஆத்திகம் என வைத்துக் கொள்வோம் –
    அதனை அறிவது கடவுளின் நிலை அறிவது என்றும்;
    அதன் நிலையறிவதில் நமக்கு இன்பம் கிடைப்பதாக உள்ளது அருள் என்றும்;
    இயற்கையின் உண்மை அறிந்த பயனால் பல நன்மைகள், இன்பங்களை பெறுவதாக உள்ளது என்பதே; இங்கு ஆத்திகம் என்போம் –
    இங்ஙனம் ஆத்திகத்திற்கு பொருள் இங்கு கொள்ளப்படுகிறது என்றால் இந்த ஆத்திக நம்பிக்கையில் என்ன தவறு? – என்ன பொய்? – என்ன அறியாமை? இதை எங்ஙனம் மறுக்கும் விசாராணை வரும்?
    சக்தி என்றால் என்ன? இயக்கத்தின் காரணம் ஆகும்-
    எதை இயக்குகிறது? உள்ளதை இயக்குகிறது –

    இயற்கை என்றால் என்ன?
    உள்ளதும் இயக்கமும் –
    உள்ளதும் இயக்கமும் என்பது ஒன்றா இரண்டா? என்றால்;
    இது மிகப்பெரிய விசாரணையில் காண வேண்டிய ஓர் உண்மையாகும் –
    (அது தனி விசாரணையில் பார்ப்போம்)
    ஆக,ஆண்டவர் யார்?
    உள்ளதும் இயக்கமாகிய அவரே “ஆண்டவர்” என இங்கு இந்த விசாரணையில் முடிவு செய்யப்படுகிறது –
    இதில் என்ன மறுப்பு? மறுப்பு இருந்தால் அது இந்த முடிவின் எதிராக உள்ள நாத்திகம் ஆகும் – அப்படித்தானே –

    உள்ளது என்பதில் என்ன மறுப்பு? இயக்கம் என்பதில் என்ன மறுப்பு?
    உள்ளது இயக்கமாகிய இயற்கையில் என்ன மறுப்பு?
    ஆக, நாம் செய்த இந்த விசாரணையில்,
    “ இயற்கை உண்மை, இயற்கை விளக்கமே” ஆண்டவர் என்கிறோம் –
    இந்த ஆண்டவர் உண்டு என்று அறிந்து அறிவு பெற்றவர்களாக நாம் அனைவருமே உள்ளோம் – அப்படித்தானே – ஆக, இந்த கடவுள் கொள்கையில் நாத்திகம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனலாம் – இங்ஙனமாக கேள்வி ஒன்றுக்கு ஆண்டவர் உண்டு என்ற பதில் காணப்படுகிறது- இங்கு வெளிப்பட்ட “ உண்மை ஆண்டவராகிய இயற்கை உண்மை,விளக்கம்” குறித்து நல்ல விசாரணை செய்வதே மனித வாழ்வின் லட்சியம் என்றும் அதுவே உண்மையறிவு எனவும் இங்கு முடிவு எட்டப்படுகிறது –
    இல்லை – மறுப்பு உள்ளது என்ற சொல்லவும் உரிமை உண்டு –
    அவர்கள் உரிமையை மதிக்கிறோம் – மேலும் தொடரும் இவ்விசாரணை அவர்களுடன் இல்லை –
    கேள்வி 2 மற்றும் 3 ற்கான விசாரணை நம் அறிவு நம்பிக்கை ஒத்தவர்களுடன் தொடரும் —

    நன்றி அன்புடன் ஏபிஜெ அருள்

  • மரணமில்லா பெருவாழ்வு பெற்ற வள்ளலார் இப்பொழுது எங்கே??? வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் ???

          

     

    மரணமில்லா பெருவாழ்வு பெற்ற வள்ளலார் இப்பொழுது எங்கே??? வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் ???

    தைப்பூசம் 2017 ல் திருமதி ஏபிஜெ அருள் @ இராமலெட்சுமி வெளியிட்ட கட்டுரை;

    மதிப்பிற்குரிய பெரியவர்கள், சான்றோர்கள் அன்பிற்குரிய சகோதர சகோதரிகள், மற்றும் அனைவருக்கும் எனது மற்றும் மதுரை கருணை சபை சாலை சார்பாக வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் –

    திருவருட்பிரகாச வள்ளலார், இடைவிடாது நல்ல விசாரணை செய்து, உண்மை கடவுளை கண்டு, அருள் பெற்று, “மரணமில்லா பெருவாழ்வு” பெற்றார்கள் – தான் பெற்ற இந்த பேரின்பவாழ்வை எல்லோரும் பெறும் பொருட்டு ஒரு மார்க்கத்தை நிறுவினார்கள் – அந்த மார்க்கத்தின் பெயர் “சுத்த சன்மார்க்கம்” – என் மார்க்கம் இறப்பையொழிக்கும் மார்க்கம் – என் மார்க்கத்தில் “சாகா கல்வியை” தவிர வேறு ஒன்றுமில்லை – சாகாதவனே சுத்த சன்மார்க்கி என்கிறார் நம் வள்ளலார்

    இந்த உண்மை எல்லோருக்கு தெரியும் – அப்படித்தானே –

    எந்த உண்மை எல்லோருக்கும் தெரியும்? சொல்லுங்கள் –

    • ஆண்டவரை ஜோதி சொரூபமாக வள்ளலார் தரிசித்தார்கள்
    • நமது வள்ளலார் மரணமில்லா பெருவாழ்வு பெற்றார்கள் 
    • கடவுளின் அருளால் அவர்தம் தேகம் “ஒளிவடிவமாக” மாறியது –

    அன்பர்களே !
    வள்ளலார் தனக்கு ஒளி வடிவம் கிடைத்த பின்பும், நம்மோடு நம் பார்வையில் தெரியும் படியாக இரண்டரை வருட காலமாக இங்கு இருந்து வந்தார்கள் – எதற்காக?

    தனக்கு கிடைத்த இந்த பேரின்ப பெருவாழ்வு, எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையில் தெரிவிப்பதற்காகவே – தான் சென்ற வழியை மற்றும் கடைப்பிடித்த வழிபாட்டை, அப்படியே உலகத்தார்க்கு உள்ளது படியாக உரைத்தார்கள் –

    ஆனால் நடந்தது என்ன? இதோ வள்ளலார் அவர்களே சொல்கிறார்கள் கேளுங்கள் –

    “உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை”

    எப்படி நம் முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்?
    ஏன் அவர்களை சொல்வானேன்?
    இன்று நாமும் வள்ளலார் சொல்ல வந்த உண்மையை தெரிந்துக் கொண்டோமா?
    இல்லை என்பதே உண்மை- தெரிந்து கொண்டியிருந்தால் நமக்கு ஏது அவத்தைகள் வரும்? பிணி, மூப்பு நாம் பெற்றுக் கொண்டியிருக்கிறோம் –

    இன்று நான் தெரிந்து கொள்ள ஆசை கொண்டுள்ளேன் – நீங்கள்?

    நாம் கண்டிப்பாக நம் வள்ளலார் சொன்ன உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? பதில் சொல்லுங்கள் –

    மரணத்தை தவிர்த்து கொண்ட நம் வள்ளலார் இப்போது எங்கே? திருவருட்பிரகாச வள்ளலாரை இப்பொழுது இங்கே, நீங்கள் காண ஆசை கொண்டு உள்ளீர்களா? இல்லையா?

    ஆம் என ஆசை உள்ளவர்கள், சற்று நிமிந்து உட்காருங்கள் –

    திருமந்திரத்தை சொல்லி நம் வள்ளலாரை அழைப்போம் –

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    திருவருட்பிரகாச வள்ளலாரே ! எங்கள் ஆசானே !
    உண்மை கடவுளின் சொரூபத்தை கண்ட சுத்த ஞானியே !
    ஆண்டவரின் அருளை பெற்ற வள்ளலாரே!
    மரணத்தை தவிர்த்து கொண்ட சுத்த சன்மார்க்கியே !

    நீங்கள் இன்று வெளிப்பட வேண்டும் – இது சத்தியம் – இது சத்தியம் –

    உங்களை காண ஆசை உள்ளவர்களாக உள்ளோம் –
    நீங்கள் சொல்லும் உண்மையை தெரிந்து கொள்ள தயாராக உள்ளோம் – இது உண்மை –

    ஆண்டவர் உங்களுக்கு உரைத்த அந்த நான்கு மரபுகளை தெரிந்து கொள்ள ஆசை உள்ளவர்களாக உள்ளோம் –

    எங்கள் அய்யாவே ! எங்கள் ஆசானே !

    எங்களை மன்னியுங்கள் –

    இதுகாறும் வீண்காலம் கழித்து கொண்டியிருந்த எங்களை, மன்னித்து, உண்மை கடவுளின் உண்மை குறித்து எங்களுக்கு அறிவியுங்கள் –

    இதோ இடைவிடாது நீங்கள் சொல்லிய வண்ணம் எங்கள் அறிவு ஒழுக்கம் ஒத்தவர்களுடன் நல்ல விசாரணைக்கு தயாராகி விட்டோம் – திருவருட்பிரகாச வள்ளலாரே !
    எங்களுடனிருந்து, எங்களுக்கு சத்திய அறிவு வெளிப்பட உதவிட வேணுமாய் பிரார்த்திக்கின்றோம் –

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    அன்பர்களே !
    உண்மை நோக்கி நல்ல விசாரணை செய்வோம் –

    உண்மை கடவுளின் சொரூபத்தை கண்ட நம் வள்ளலார்க்கு இன்பமும், வியப்பும் ஏற்பட்டது-

    “இன்பம்” என்பது; கடவுளை கண்டது
    “வியப்பு” எதனால் ஏற்பட்டது ?

    இப்போது, தான் கண்டு கொண்டியிருக்கும் கடவுள்
    “அருட்பெருஞ்ஜோதியாகி தனிப்பெருங்கருணை கடவுள்” இதுவரை உலகில் வெளிப்பட்டிருந்த சமய, மத, மார்க்கங்களில் சொல்லப்பட்டியிருக்கவில்லை – என்பதே வள்ளலாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி –

    அன்பர்களே, இது குறித்து 12-04-1871 ல் ஒரு கடிதத்தில் அறிவித்துள்ளார் வள்ளலார் –

    அன்பர்களே ! நாம் இன்று இப்பொழுதே வள்ளலாரை காண வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது “ஒன்றே ஒன்று” தான்

    அது அவர் சொன்ன உண்மையை
    தெரிந்து, அறிந்து, அனுபவிக்க வேண்டும் –
    அவர் கண்ட கடவுளை மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும் –

    வள்ளலார் சொன்னபடி வழிபாடு செய்ய வேண்டும் –

    நமக்கு சாதனம் ”கருணை” மட்டுமே !

    அன்பர்களே !
    – இங்கு இருக்கும் நம் எல்லோரிடமும் கருணை உள்ளது-
    – கருணை ஒன்றையே இதுநாள் வரை கொண்டு பிரார்த்திக்கிறோம்- அப்படிதானே !

    ஆனால், வள்ளலாரையோ ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே ?
    அது ஏன்?
    அதற்கு காரணம் என்ன தெரியுமா அன்பர்களே !
    நம்மிடம் கருணை உள்ளது – ஆனால்;
    நம் கருணை விருத்தியாகமலே உள்ளதை முதலில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும் –
    அதற்கு என்ன காரணம் ?

    அக்கருணை நம்மிடம் விருத்தியாகமல் தடை செய்வது நம்மிடம் உள்ள “ஆசாரங்களே” காரணம் என்கிறார் வள்ளலார் – வள்ளலார் நமக்கு சுட்டி காட்டியுள்ள ஆசாரங்கள் “13” ஆகும் –
    இவையை விட்டொழித்தே ஆக வேண்டும் என்கிறார்கள்-

    அன்பர்களே ! உங்களிடம் கேட்கிறேன் –

    சத்திய ஞான சபைக்குள் எல்லோரும் உள்ளே சென்று விட முடியாது – உள்ளே புகுதல் வேண்டுமானால் நம்மிடம் என்ன தகுதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?
    “கொலை புலை தவிர்த்தவர்களாக” இருக்க வேண்டும் என்று வள்ளலார் கட்டளையிட்டுள்ளார்கள் – அப்படிதானே?

    ஆக, நம்மிடம் அடிப்படை தகுதியாக ஜீவகாருண்யம் உள்ளது – ஜீவகாருண்யம் உள்ளவர்களே ஞான சபைக்குள் செல்ல முடியும்-
    அன்பர்களே !
    உள்ளே சென்ற பிறகு எது குறித்து விசாரணை செய்ய வேண்டும்? அதே ஜீவகாருண்யம் குறித்தா? இல்லைஆண்டவரின் நிலை காணவே நாம் நன்முயற்சி செய்ய வேண்டும்அதற்கு, “உள்ளழுந்தி, சிந்தித்து, சிந்தித்தலை விசாரிக்க” வேண்டும் என்கிறார் நம் வள்ளலார் –
    இதற்கு பெயர் ”விசார சங்கல்பம்” ஆகும் –

    இதுவே, “வள்ளலார் சொல்லிய உண்மை” ஆகும்-
    என் மார்க்கம் உண்மையறியும் மார்க்கம்என் மார்க்கம் அறிவு மார்க்கம்என் மார்க்கத்தில் அக அனுபவே உண்மைஎன்கிறார்கள் –

    இப்பொழுது சொல்லுங்கள்;
    “நாம் வள்ளலாரை காண வேண்டுமானால்,
    ::::::அவர் நம்மிடம் சொல்ல வந்ததை தெரிந்து கொண்டோம் என்று அவரிடம் தெரிவிக்க வேண்டும்::::::

    இங்ஙனம் தெரிவிப்பவர்க்கு வள்ளலார் வெளிப்படுவார்
    இது சத்தியம் – இது சத்தியம் – இது சத்தியம் –

    மீண்டும் ஒரு முறை வள்ளலார் சொல்லிய உண்மை குறித்து காண்போம் –

    ஒன்று;
    கருணை விருத்தியாகாமல் செய்யும் ஆசாரங்களாகிய சாதி,குலம்,ஆசிரமம்,லோகம்,தேசம்,கிரியை,சமயம்,மதம்,மரபு, கலாசாரம்,சாதனம்,அந்தாசாரம்,சாஸ்திரம் முதலிய ஆசாரங்கள் நம்மிடமிருந்து ஒழிந்து போக வேண்டும் –

    இரண்டாவது;
    ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்ய வேண்டும் –

    மூன்றாவது;
    அத்தெய்வத்தை நினைந்தும் உணர்ந்தும்
    நமது குறையை ஊன்றியும் இவ்வண்ணமாக இடைவிடாது விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டும் என்கிற விசார சங்கல்பத்துடன் முயற்சியுடனிருத்தல் வேண்டும்-

    நமது இந்த நன்முயற்சி உண்மையாக தூய்மையாக இருக்குமே யானால் திருவருட்பிரகாச வள்ளலார் நேரில் வந்து நமக்கு துணை புரிவது சத்தியம் – சத்தியம் – சத்தியம் என நம்புதல் வேண்டும் –
    நான் “சுத்த சன்மார்க்க நெறி ஒன்றையே” சார்ந்து,
    குரோதம் காமத்தை ஞான அறிவினால் தடுத்து கொண்டு, ஆசாரத்தை ஒழித்து தலைவனையே தொழுது கொண்டியிருக்கிறேன்
    — என்று நாம் சொல்வோமானால் இன்றே இப்பொழுதே சபை முன்பு அமருங்கள் ஆண்டவர் உண்மை தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்கு துணை புரிய திருஅருட்பிரகாச வள்ளலாரே நீங்கள் வரவேண்டும் என அடம் பிடித்து உட்காருவோம் கண்ணீர் விட்டு நெகிழ்ந்து வேண்டுவோம் –
    இது உண்மையாயின் நான் பெறுவேன் – பெறுகின்றேன் – பெற்றேன் –
    என்னை அடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை – பெறுவீர்கள் – பெறுகின்றீர்கள் – பெற்றீர்கள் –
    அஞ்ச வேண்டாம் –

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    —-திருமதி ஏபிஜெ அருள்- கருணை சபை சாலை – 09-02-2017[தைபூசம் வடலூர்]

     

    Top of Form

  • சுத்த சன்மார்க்கத்தார்கள் எதற்காக சமய லட்சியத்தை கைவிடவேண்டும்?

    சுத்த சன்மார்க்கத்தார்கள் எதற்காக சமய லட்சியத்தை கைவிடவேண்டும்?

    சுத்த சன்மார்க்கத்தின் ஒரே சாதனம் “தயவு” என்னும் கருணையேஇறையருள்  கிடைக்க 

    இந்த ‘தயவு’ விருத்தியாக வேண்டும் என்கிறார் வள்ளலார்.

    தயவு விருத்திக்கு தடையாக சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் உள்ளன.அவையை ஒழித்தால்தான் “பொதுநோக்கம்” வரும்.

    இந்த “பொது நோக்கம்” சுத்த சன்மார்க்கத்தின் “சத்திய ஞானாசாரம்” ஆகும்.

    சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் எவை என தெரிதல் வேண்டும்.அவையாவன.

    ஜாதி, குலம், ஆசிரமம், லோக, தேச, கிரிய, சமய, மத, மரபு, கல, சாதன, அந்த, சாஸ்திர ஆசாரங்கள் ஆகும். தயவு விருத்திக்கு இவைகள் தடையாக உள்ளன. இவை அனைத்தும் உலகில் காணும் சமய, மதங்களில் உள்ளன.

    சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் ஒழித்தல் வேண்டும்.

     

    அற்பசித்தி – பூரண சித்தி

    சமய, மத மார்க்கங்களில் காணப்படும் கர்த்தார், கடவுளர், சமயத் தேவர்களை வழிபாடு செய்தால் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏறவேண்டியவைள்ஏறிப் பூரண சித்தியை அடையாமல் தடைபட்டு விடும். எனவேதான் சமயதேவர்கள்வழிபாடு செய்வது அவசியமில்லை. இது சத்தியம், இது சத்தியம்,இது சத்தியம், என்கிறார் வள்ளலார்.

     

    சமய மதங்களில் ஐக்கியம் என்பதேயில்லை.

    சுத்த சன்மார்க்கத்தில் சொல்லப்படுவது சாகாத கல்வியே.

    பயன் : பூரண சித்தியைப் பெறுவதே. நித்திய வாழ்வை பெறுவதே நமதுமார்க்கத்தின் கொள்கை, முடிபு.

    இந்த “நித்திய வாழ்வை” சர்வசித்தி உடைய நித்தியரால்தான் தரமுடியும். அவரே பெரும் பதியாகிய ஒரே கடவுள் “பெருங்கருணை”கடவுள் ஆகும் என்கிறார் வள்ளலார். சமயக்கடவுளர் “உண்மை கடவுளுக்கு” கோடி கோடிபங்கு தாழ்ந்த தரத்தில் உள்ளனர் என்பதை அறிந்திடல் வேண்டும்.

    எனவே இந்த சமய மதங்களில் ஐக்கியம் என்பதே இல்லை.

    இந்த உண்மையை சுட்டிக் காட்டுவதினால் எதற்கு சமயத்தார் மனம் எங்ஙனம்புண்படும்?

    பண்படத்தான் செய்யும். இந்த கவலை நமக்கு கூடாது. வள்ளலார்சொல்கிறார்:-

    சுத்த சன்மார்க்கம் உண்மை தெரிவிக்கிற மார்க்கம்.

    வாச்சியலட்சியஉண்மை அனுபவம்

    மிக சுருக்கமாக காண்போம்.

    சன்மார்க்கங்கள் மூன்று :-

    1. சமயசன்மார்க்கம்.
    2. மதசன்மார்ககம்
    3. சுத்தசன்மார்க்கம்.
    4. சமயசன்மார்க்கத்தின் பொருள் :

    “குணத்தினது லட்சியத்தை அனுசந்தானம் செய்வது.” குணம் என்பது யாது?சத்துவ குணம்.

    இதனியல்பாவன :

    கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஆன்மஇயற்கைக் குணமாகிய ஜீவகாருணியம். இது சத்துவகுணத்தின் வாச்சியார்த்தம்.இவ்வண்ணம் “வாச்சியானுபவம்” பெற்று சொரூப அனுபவமாகிய சாதனமே சமயசன்மார்க்கம்.

    1. மதசன்மார்க்கத்தின் பொருள் :

    “நிர்க்குண லட்சியம்” செய்வது.

    நிர்குணமாவது பூர்வகுணமாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று”லட்சியானுபவம்” பெறுதல். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாதல், புத்திரானாதல்,சிநேகனாதல், கடவுúளதானாதல். இது சத்துவகுண லட்சியார்த்தமாகிய மத சன்மார்க்கமுடிவு.

    1. சுத்தசன்மார்க்கம் :

    குண, நிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின்அனுபவமல்லாதது சுத்த சன்மார்க்கம்.

    மேற்குறித்த சமய, மத அனுபவங்கûள கடந்தது. இம்மார்க்கத்திற்குமேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவேயன்றி இல்லாதனவல்ல. இது சத்தென்னும்பொருளின் உண்மையைத் தெரிவிக்கிற மார்க்கம்.

    சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தா, மூர்த்திகள், ஈஸ்வரன், பிரமம், சிவம்முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஒழிய அதற்குமேல் இரா.இவை தத்துவ சம்மாரங்கúள. புராணங்களினிருதயமெல்லாம் தத்துவ சம்மாரமே. இதன்உணமை சுத்த சன்மார்க்கத்தில் விவரமாய் வெளியாகும்.

    ஆக,

    சமய சன்மார்க்கம் : வாச்சியானுபவம்

    மத சன்மார்க்கம் : லட்சியானுபவம்

    சுத்த சன்மார்க்கம் : உண்மையறிதல்

    பயன்

    சுத்த சன்மார்க்கத்தில் “அக அனுபவமே” உண்மை.

    “கடவுள் நிலையறிய “ஒழுக்கம்” நிரப்புதல் வேண்டும்.

    சமய, மத சன்மார்க்கத்தின் பயன் “அற்ப சித்திகள்” பெறுதல்.

    சுத்த சன்மார்க்கத்தின் “பூரணசித்தி” பெறுதல். பூரண சித்தியே நித்தியவாழ்வைத் தரும்.

    எனவேதான் வள்ளலார்,

    சமய, மத மார்க்கங்கள்முற்றும் பற்றற கைவிட்டவர்கள்”சுத்தசன்மார்க்கத்தார்கள் ஆவார்கள். இது வள்ளலாரின் கட்டளை.

    சத்திய வாக்கியம்

    வள்ளலாரின் நெறி

    எல்லா சமயத்தார்களுக்கும்

    எல்லா மதத்தார்களுக்கும்

    எல்லா மார்க்கத்தார்களுக்கும்

    “உண்மைப் பொது நெறி” யாக விளங்கும் என்கிறார் வள்ளலார்.

    இங்ஙனமாக உண்மையை கண்ட வள்ளலாருக்கு ஒரு குறிப்பிட்ட சமயஅடையாளமான விபூதி பூசிய கோலத்தில் காட்டினால் எங்ஙனம் உண்மை பொதுநெறியாக விளங்கும்?

    கிரியாசாரம், சாதி ஆசாரம், ஆசிரம ஆசாரம், மேலும் பல கொண்டுள்ளசமயத்தை எப்படி ஏற்கமுடியும்.

    சமயத்தின் மீது லட்சியம் கைவிட்டுவிட்டால்தான் (விட்ட பிறகே) சுத்தசன்மார்க்க உண்மை பொது நெறி விளங்கும் என்பதை நாம் உணர வேண்டாமா?

    “இங்கு இருக்கின்ற ஒன்றையும் பொருளளைகக் கொள்ளளைதீர்கள்” என்பதுவள்ளலாரின் சுத்த சன்மார்க்க சத்திய வாக்கியமாகும்.

    வள்ளலார் சமய ஞானியாநாத்திகரா?

    வள்ளலார் தான் கைப்பட எழுதிய விண்ணப்பங்களில் :

    “சுத்த சன்மார்க்கத்தின் எக்காலத்தும் முக்கிய தடையாகிய சமய, மத,மார்க்கங்கள் ….. என வள்ளலார் குறிப்பிட்டு உள்ளார்கள்.

    எக்காலத்தும் முக்கியத்தடையாக சமயம், மதம் உள்ளது என வள்ளலார் மிகத்தெளிவாக சொல்லிய பிறகு வள்ளலாரை சைவ சமய ஞானியாக காட்டுவதும், நாத்திகராககாட்டுவதும் அறியாமையே. அபக்குவிகள் ஆவார்கள்.

    அழுகிய காய்கறிகûள நாம் உபயோகிப்பதில்லை.

    ஊசிய பண்டங்கûள நாம் உண்பதில்லை.

    நான்குமால் பார்க்காமல் சொத்தை வாங்குவதில்லை.

    கிழிந்த உடையை நாம் அணிவதில்லை.

    உடைந்த பண்டத்தில் சமைப்பதில்லை.

    கற்பனையில் சேர்த்த வரவில், செலவு செய்யமுடியாது.

    கூட்டிய குப்பையை மீண்டும் வீட்டில் போடுவதில்லை.

    இங்ஙனமாக ‘புலன் அறிவில்’ தெளிவாக உள்ள நாம் ‘ஆன்ம அறிவில்’ ஏன்அபக்குவமாக உள்úளளைம்.

    வள்ளலார் சமய, மதங்கûளப் பற்றி தனது திருஅகவலில், பாடல்களில்கீழ்வருமாறு குறிப்பிட்டு

     உள்ளார்கள்.

    அவை பொய், கற்பனை, வீண், குப்பை, குழப்பம், வீண்வாதம், திரிபுநிலை,மயக்கம் இன்னும்பல.

    இங்ஙனம் அவர் சமயம் பற்றி கண்ட உண்மையை எதற்காக நாம்வெளிப்படுத்தக்கூடாது. எதற்காக மற்ற சமயத்தார்களுக்காக அவ்வுண்மையைசொல்லாமல் இருக்க வேண்டும்? அவர் கண்டது பொது நெறி.

    அவரையும், அவர்தம் நிலையங்கûளயும் குறிப்பிட்ட சமய கோலத்தில்காட்டினால் மற்ற மார்க்கத்தார்கள் எங்ஙனம் உண்மையறிய அங்கு வருவர்?

    சைவ சமயம் சார்ந்த பெரியவர் ஞானி கிருபானந்த வாரியார்,நாத்திகவாதியான பெரியார் தந்தை ஈ.வெ.ராமசாமியும், இஸ்லாம் சார்ந்த சதாவதானிசெய்குதம்பி பாவலரும், கிறிஸ்த்துவ சகோதர சகோதரிகளும் உண்மை அறிய வந்தஇடமே சுத்த சன்மார்க்க நிலையங்கள்.

    ஏன் எதற்காக வந்தார்கள்?

    சாதி, சமய, மதங்கûள “பொய்” எனக்கூறியவரே வள்ளலார் எனத் தெரியாமலா?

    திரு அகவலில் மிகத் தெளிவாக உள்ளது.

    “சாதியும், சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி”

    ஆனால் கடந்த சில ஆண்டுகளளைக நடைபெற்ற செயல்கள் என்ன?

    மிக முக்கியமாக நாம் ஒன்று அறிய வேண்டும். சுத்த சன்மார்க்கத்தார்கள்,

    உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் முற்றும் பற்றற கைவிட வேண்டும்.

    அப்பொழுது தான்

    நம் சுத்த சன்மார்க்க நெறி எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாக விளங்கும்.

    ஆனால், 01.02.1874 முதல் 27.06.2010 உலக செம்மொழி மாநாடு கருத்தரங்கம்வரை வள்ளலாரை சமயத்திலேயே அல்லது சமயம் தவிர்த்த நாத்திகராகவே காட்டமுயற்சிக்கிறோம். அவர்தம் தனி நெறியில் இல்லை. இதற்கு நம் முயற்சி என்ன?

    “தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள்” – வள்ளலார்,

    “தனித்தலைவன் லட்சியம் தவிர உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும்மேற்குறித்த தலைவனை குறித்ததே தவிர வேறில்லை.” என்றதின் மூலம்,

    “உபாசனை” மூலம் வழிபடுதல் சரியாகாது. அவ்வழிபாடு மூலம் கடவுள் அருள்பெறுவதற்கு நமக்கு காலமில்லை. அவை மூலம் அற்ப சித்தி பெறலாம். இவை மீதுலட்சியம் வைத்தால் பூரண சித்தி பெற முடியாது என்பதே வள்ளலார் கண்ட உண்மை.

    மேலும், வள்ளலார், விண்ணப்பத்தில் :- “அவ்வாலிபப் பருவம் தோன்றியபோதே,சைவம், வைணவம், சமணம், பவுத்த முதலாகப் பலப் பெயர் கொண்டு பலபட விரிந்தஅளவிறந்த சமயங்களும், அச்சமயங்களில் குறித்த சாதனங்களும், தெய்வங்களும்,கதிகளும், தத்துவசித்தி விகற்பங்கùளன்றும் அச்சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள்,ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகùளல்லாம் தத்துவசித்திகற்பனைக் கலைகள் என்றும் உள்ளபடியே எனகறிவித்து அச்சமய ஆசாரங்கûளச் சிறிதும்அனுட்டியாமற்றடை செய்வித்தருளினீர். இதன் மூலம் அறிவது, வள்ளலார் வாலிபபருவத்தில் சைவ சமயத்தில் இருந்ததாக நாம் அறிய வந்தாலும், எந்தொரு அச்சமயஆசாரங்கûள அவர் அனுட்டிக்கவில்லை என்பதே உண்மை. “நன்முயற்சியுடனே”தொடர்ந்து இருந்து வந்ததினால் ‘உண்மைக் கடவுûள’ கண்டார்கள். ‘உண்மைக் கடவுûள’காண அவர் இருந்த சமயமே காரணமா என்றால், அதற்கு வள்ளலார் சொல்லியது;

    “நான் அப்படி அந்த சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்தநிலையில் துIக்கி விட்டதென்றாலோ, அந்த லட்சியம் துIக்கி விடவில்லை.”

    “என்னை இந்த இடத்துக்கு துIக்கிவிட்டது யாதெனில்; தயவு; தயவு என்னும்கருணையே என்னை துIக்கி விட்டது” என மிக தெளிவாகவே குறிப்பிட்டதை நாம் உணரவேண்டும்.

    சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கúள சித்தாந்தம், போதாந்தம்,நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் போன்ற மதங்கள் என வள்ளலார் சொல்லியதை நாம்நம்ப வேண்டும்.

    MOST RESPECTFULLY SUBMITTED FOR KIND PERUSAL AND CONSIDERATION.— APJ. ARUL.

     

     

  • மிகப்பெரிய அற்புதம் நடந்த நாள்

    30 January- இன்று மிகப்பெரிய அற்புதம் நடந்த நாள்

    1874 ம் ஆண்டு ஜனவரி 30 இரவு 12 மணி

    ஆம், திருவருட்பிரகாச வள்ளலார் தான் பெற்ற பேரின்ப பெருவாழ்வில் வாழ சித்தி வளாக திரு அறையில் சென்று திருக்காப்பிட்டு கொண்ட நாள் –
    இதோ அன்று வள்ளலார் திருகதவு சென்று காப்பிட்டு கொண்ட இரவில் வெளியிட்ட அறிவிப்பு:
    இதை தடைபடாது ஆராதியுங்கள் – இந்த கதவைச் சாத்திவிடப் போகின்றேன் – இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல், நினைந்து நினைந்து” என்னும் தொடக்கமுடைய 28 பாசுர மடங்கிய பாடலிற் கண்டபடி தெய்வபாவணையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் – நானிப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன் – இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் “
    மேலும்,
    திருக்கதவந் திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் “இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்” என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடையது கடமை.


    அன்பர்களே மிகப் பெரிய விசயம் கடந்த 19ம் நூற்றாண்டில் நடந்து உள்ளது – இது குறித்த உண்மையில் நல்ல விசாரணை செய்ய இந்த நாடும் நாமும் முன் வரவில்லை என்பது எவ்வளவு வேதனைக்குரிய விசயம் – ஏன் முக்கியம் கொடுக்கவில்லை என்றால் தான் கண்ட கடவுள் உண்மை உலகில் காணும் சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்ட கடவுளரோ தெய்வமோ இல்லை என்பதினால் ஆன்மிக பெரியவர்கள் இது குறித்து வெளியிட முன் வரவில்லை – அதே போல் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் நாக்கு முட நாக்கு என்று சொன்னதனால் நாத்திகர்களும் இதை வெளிப்படுத்த முன் வரவில்லை – ஆனால் வள்ளலார் நெறி எல்லா சமயங்களும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது என்ற உண்மை வெளிப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை – இதன் உண்மை குறித்து விசாரணை செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும் – நன்றி : அன்புடன் ஏபிஜெ அருள் கருணை சபை –

  • சமய, மதங்களுக்கும் வள்ளலாரின் மார்க்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

    சமயமதங்களுக்கும் வள்ளலாரின் மார்க்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன

    எல்லா சமய மதங்களிலும் அதனதன் கடவுளர்தெய்வம்இவர்களே என வெளிப்படுத்தி அக்கடவுளரை/தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்ய பணிக்கப்பட்டுள்ளனர்.

    ஆனால்,

     சுத்தசன்மார்க்கத்தில் ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார்இங்ஙனமாக இருந்து,  தான் கண்ட கடவுள் பெருங்கருணை கடவுள் (அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்என்கிறார்கள்ஒவ்வொருவரும் கடவுள் நிலை காண நன்முயற்சி செய்ய வேண்டும் – தன் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை என்கிறார்கள்.

    ஆனால்,

          சமயமத மார்க்கங்களில் கடவுள் அருள் பெறுவதற்கு சாதனமாக பல சடங்குசம்பிராதயங்கள்சாத்திரங்கள்,முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் உள்ளனசமயமத மார்க்கங்களில் முக்திசமாதியில் பலன் முடிகிறது நீண்ட ஆயுள் கைக்கூடுகிறது மரணத்திற்கு பின்பு நரகம்சொர்க்கம் என்றெல்லாம் உண்டு.

     

    சுத்த சன் மார்க்கத்தில் சுவர்க்க நரகம் பற்றி விசாரமில்லை என்கிறார் வள்ளலார்முக்தி அடைதல் என்பதில் லட்சியம் கொண்டுதடைப்பட்டு நிற்றல்போல் நில்லாமல்பூரண சித்தியைப் பெறுவதே சுத்த சன்மார்க்கத்தின் கொள்கைஇதை ஆண்டவரே தெரிவித்தார் என்கிறார் வள்ளலார்தன் மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியை தெரிவிப்பதேயன்றி வேறில்லை என்கிறார் வள்ளலார்.

    சுத்த சன்மார்க்கத்தில் கடவுளின் உண்மையைத் தெரிவிக்கிற மார்க்கம். மற்றவைகளிலிருந்து

    அதீதமாக விளங்கும் மார்க்கம். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஸ்டைகூடல்

    என்னும் நான்கும் கடந்து ஆருடராக நிற்பதால் சாதனமொன்றும் வேண்டுவதில்லை

    மேற்படி சாத்தியர்களே சுத்ததேகிகள்.

     ஆனால்சமயங்களில் அதனதன் கடவுள்தெய்வங்களை அறிய சாத்திரங்கள்புராணங்கள்இதிகாசங்கள் முதலிய கலைகள் உள்ளனமேலும் பல உபாயங்கள் உள்ளன.

    சுத்தசன்மார்க்கிகள் எந்தொரு கலைகளிலும் லட்சியம் வைக்காமல் தலைவனையே தொழுதல் வேண்டும் தலைவனை தொழுவதே தொழிலாக உள்ளது கடமை என்கிறார் வள்ளலார்இங்கு உபாய வகைகளான அபரமார்க்கக் காட்சி கூடாது.பரமார்க்கமாகிய அக அனுபவமே உண்மையாகும்இங்கு கடவுள் நிலையை படிப்பால் அறிய முடியாதுஎல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டு தலைவனையே தொழுதல் வேண்டும்உண்மையை நம்புதல் வேண்டும் என்கிறார் வள்ளலார் 

    சமயங்களில் மதங்களில் புராணங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுளர், தெய்வங்கள், ஏற்பாட்டுகர்த்தர்கள், யோகி, ஞானி, மூர்த்திகள், இவர்கள் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடிஎழுத்தருளுகின்ற தனித்தலைமைப் பதியை தான் வள்ளலார் கண்டதாக சொல்கிறார்கள்.

    ஆனால்

    சமய,மதங்களில் அதன் கொள்கையறிய பல ”நூல்களும்”,

    கொள்கையில் பிடித்தம் ஏற்பட பல ”சாத்திரங்களும்”,

    கடவுள்,தேவர்களை போற்றி வணங்க ”தோத்திரங்களும்”,

    வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம், போன்ற ”கலைகளும்”,

    உள்ளன – ஆண்டவரை வேண்டி தவம் இருந்தவர்கள் பலர் – அவர்கள் மேற்கொண்ட வழி தான் பல சமயங்களாகும் – அந்தந்தச் சமயங்களில் இவர்களையே தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து வருகிறார்கள் –

     

    வள்ளலாரின் கட்டளையும் விண்ணப்பமும்:

    ” இங்கு இருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்-

    எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத்

    தலைவனையே தொழுவீர்கள் “

     

     “சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடைகளாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள்”

     

     “ எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே ! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம், முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும் – “

    ஆனால்,

    சமயங்களில் தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதத்தைத் தியானித்தும், இடையில் ஜபித்தும், கரணலயமாகச் சாமாதிசெய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்க விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சுடக்கியும் சாதர்கள் மேற்குறித்த வண்ணம் செய்வார்கள்-

    மொத்ததில்;-

     சுத்தசன்மார்க்கத்தில் அடிப்படை ஒழுக்கம் பெற்ற தகுதியுடையவர்கள் மற்ற எதிலும் பற்று இல்லாமல் ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கொண்டு உள்ளழுந்தி,சிந்தித்து, சிந்தித்தலை விசாரிக்கும் சங்கற்பத்தை ஒவ்வொருவரும் பெற்று ஆண்டவரை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து இடைவிடாதிருந்தால் ஆண்டவரே எல்லா உண்மைகளையும் நமக்கு உரைப்பார் – உண்மை அறிந்தவர்களே அருள் பெற்றவர்கள் ஆவார்கள் – அருளால் பெறப்படும் பயன் மரணமில்லா பெருவாழ்வு ஆகும்-

     

    ஆனால்,

    சமயங்களில் சத்துவகுண இயல்பாகிய, கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்யம் மேற்படி உண்மையை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம்-

    அடுத்து மதம்;

    சமயாதீத மாவது மதம் – இங்கு நிர்க்குணம் அதாவது முன்னே சொன்ன சத்துவ குணத்தினை பெற்று லட்சிய அனுபவம் பெறுதல் யாதெனில்; கடவுளுக்கு அடிமையாதல், புத்திரானாதல், சிநேகனாதல், கடவுளேதானாதல் இதுவே மதம்-

    முடிபாக,

    சுத்த சன்மார்க்கத்தில்:  ஒரு கோடி அறுபது லட்ச அனுபவங்களின் அனைத்து உண்மையையும் சுத்த சன்மார்க்கத்தில் ஆண்டவரே தெரிவிப்பார் – ஆண்டவர் உண்மையை தெரிவிக்க வேண்டும் என நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து அன்பு நிறைந்த கண்ணீரால் விண்ணப்பம் செய்து நன்முயற்சி செய்தலே சுத்த சன்மார்க்கம்-

    ஆனால்;

    சூல்வண்டி (400 வண்டிச் சுமை ஒரு சூல்வண்டி) ஆயிரங்கொண்ட நூல்கள் கொண்டதே சமய மத மார்க்கங்கள் – இதற்கு ஆயிரம் ஜென்மம் எடுக்க வேண்டியதாக உள்ளது – கலைகளின் உண்மையை சொல்லி கொண்டே வரும் மார்க்கமே சமய, மத மார்க்கங்கள் –

     

    இதோ வள்ளலார் அழைக்கிறார் —

    இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழித்து கொண்டிராதீர்கள் –

    சமயமதங்களில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும்- எனவே ஆண்டவர் இடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது-

    ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருசம் எட்டு வருசம் பிராயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளை அடையலாம்- ஆனால் ஆண்டவரிடத்தில் லட்சியம் வைத்தால் பெரிய பிரயோஜனத்தை பெறலாம்-

    சமயங்கள்,மதங்கள்,கலைகள் இவற்றில் பயிலுவோமானால் நமக்கு காலமில்லை

    லாபத்தை பெற அறிவு வேண்டும் – அறிவு என்பது உண்மை அறிதல் – உண்மை அனந்த கோடி – காலமில்லை – இந்த பிறவிலேயே நமக்கு ஆண்டவரே உண்மை தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு நன்முயற்சியில் 19 ம் நூற்றாண்டில் ஒருவர் இறங்கி அருள் பெற்று மரணம் தவிர்த்து பேரின்ப பெருவாழ்வு பெற்றார்கள் – இப்படி ஒரு புதிய தனி வழியை கண்டுபிடித்தவர் வள்ளலார் – அவ்வழியின் பெயர் சுத்த சன்மார்க்கம் – என்னை போல் நீங்களும் பெற வேண்டும் என ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையில் தெரிவித்தார்கள் –

    ஆக,

    சமய,மத,மார்க்கங்கள் என்பதிலிருந்து கடந்து தனி நெறியாக விளங்குகிறது சுத்த சன்மார்க்கம்-

    சுத்த சன்மார்க்கம் என்பது சன்மார்க்கம், சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது- சுத்த சிவம் என்பது சிவம், பரசிவம் இரண்டையும் மறுத்தது என்கிறார் திருவருட்பிரகாச வள்ளலார் 

     

    —-நன்றி வணக்கம் ஏபிஜெ அருள் – கருணை சபை சாலை –

     

     

  • ”அவசரம். சீக்கிரம் வா.”– ஏபிஜெ. அருள்

    நான் ஒரு வழக்கறிஞர்.
    காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து பேப்ரின் செய்திகளை படித்தேன்.
    நாட்டு நடப்புகளை அறிந்ததால் களைப்பு ஏற்பட்டது.
    செல் ரிங் அடித்தது. கேஸ் விசயமாக பார்டி பேசுவார்கள் என எண்ணி எடுக்காமல் உட்கார்ந்து விட்டேன். மீண்டும் தொடர்ந்து அடிக்க, சென்று எடுத்தேன். எனது தோழன்.
    ”என்னடா என்ன விசயம்?” என கேட்டேன்.
    “ அவசரம் சீக்கிரம் வா” என்றான்.
    விசயத்தை சொல்லு என்றேன்.
    வேதாச்சலம் வந்திருக்காரு. அதான் எனக்கு வீடு விற்றாரே. அந்த வேதாச்சலம் தான் என்றான்.
    “நல்ல மனிதர் தானே. என்ன பிரச்சனை” என்றேன்.
    நீ நேரே வா. அவர் சொல்லறத கேட்டா கோபம் கோபமாக வருகிறது.
    சரிப்பா நீயே கோபப்படலாமா? வள்ளலார் மார்க்கத்தை சேர்ந்தவன். பொறுமையாக இரு என்றேன் அவனிடம்.
    அவன் பேசறத நீ கேட்டுப் பாரு அப்பறம் புரியும் என்றான் என் நண்பன்.
    சரி வரேன் என்று கூறி கிளம்பிவிட்டேன்.
    (வண்டி ஓட்டும் பொழுது என்னவாக இருக்கும்? என்ற சிந்தனையே. வேதாச்சலம் நல்ல மனிதர் தானே. பிரச்சனை பண்ணக்கூடிய ஆளில்லையே. தன் வீட்டை ஒரு நல்ல மனிதருக்குதான் கொடுப்பேன் என்றுக்கூறினார். அதணால் தான் எனது நண்பரை அறிமுகப்படுத்தி இந்த வீட்டை அவனுக்கு விற்கச் செய்தேன். என்ன பிரச்சனை????? ஒன்றுமே புரிய மாட்டேன்கிறதே.)
    இதோ வீடு வந்து விட்டது.
    வாங்க வேதாச்சலம் அய்யா, நலமா? ஏன் வீட்டுக்கு வெளியேவே உட்கார்ந்து விட்டீர்கள். உள்ளே வாங்க என்றேன்.
    இல்லப்பா உன் நண்பனிடம் நியாயம் இல்லை என்றார்.
    சரி அமைதியா இருங்க விசாரிக்கிறேன் என்று உள்ளே சென்றேன்.
    என் நண்பனிடம் விசயம் என்ன? என்றேன்.
    ””சொல்றேன் கேளு. உனக்கும் தலையே சுத்தும்.என்னிடம் வந்து, இது என் வீடு நீங்க இருக்கீறீங்கன்னாரு? ஏதோ விளையாடுறாரு என நினைச்சா… சீரியசா தான் சொல்றேன் என்கிறாரு.
    என்னய்யா விளையாடுறீங்களா? இந்த பாருங்க நீங்க 2013 ல் எழுதி கொடுத்த பத்திரம் என்றேன்.
    அது இருக்கட்டும். இந்த நான் வைத்திருக்கும் பத்திரத்தைப் பாரு என்றார். வாங்கி பார்த்தேன். அது 2000 ல் அவர் இந்த வீட்டை கிரையம் வாங்கிய பத்திரம். அய்யா இதுக்கு பின்பு உங்களிடம் நான் இந்த வீட்டை கிரையம் வாங்கி விட்டேன். கடைசியாக இந்நாள் வரை எனது பத்திரமே செல்லும் என்றேன். அதற்கு திரும்பவும் அவர்: தம்பி எனது பத்திரத்தை பாருன்னு 2000 த்தில் எழுதியுள்ள பத்திரத்தையே காட்டி, யார் பெயரில் வீடு உள்ளது.? என் பெயரில் தானே!!! என்கிறான்.
    மீண்டும் நான்:: “ அய்யா, அதற்கு பின்பு நான் கிரையம் செய்து உள்ளனே….என்றேன். காதிலேயே வாங்காமல் அது இருக்கட்டும் மீண்டும்; “இந்த பத்திரத்தை பாரு” என்கிறார்??? அதனால் தான் உன்னை கூப்பிட்டேன். நீயே கேளு.””
    வெளியே வந்து என்ன அய்யா, ஏன் இப்படி? என்றேன்.
    என்ன இப்படி என்றார்?
    என்ன அய்யா என்னிடமேவா?? என்று சற்று சத்தமாக கேட்டேன்.
    தம்பீ, உன் நண்பன் செய்தால் சரி. நான் செய்தால் தவறா? என்றார்.
    என்ன அய்யா விளக்கமாகச் சொல்லுங்கள் என்றேன்.
    “உன் நண்பரின் கட்டுரையை நெட்டில் படித்தேன். அதில் வள்ளலாரை அவரால் முற்றிலும் கைவிடப்பட்ட அவரின் முந்தைய சமயப் பற்றில் வெளிப்படுத்தியிருந்தார். வள்ளலார் முதலில் ஓர் சமயத்தில் பற்று வைத்திருந்தார். அதன் திருஅடையாளமாக இருக்கும் திரு நீறை பூசியிருந்தார்கள். எல்லாருக்கும் கொடுத்தார்கள்.பலருக்கு கொடுத்து ஆசீர்வதித்துள்ளார்.
    அதன் பின்பு, தான் வைத்திருந்த சமயப்பற்று, சாத்திர ஆச்சாரங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, ஓர் புதிய மார்க்கத்தை கண்டார்கள். ஆனால் உன் நண்பரோ வள்ளலாரை அவர்தம் முந்தையப் பற்றுலேயே வெளிப்படுத்தி வருகிறார். யாரெனும் கேட்டால் இதுவும் வள்ளலார் தானே சொல்லியுள்ளார் என பதில் சொல்கிறார்.வெளிப்படுத்தும் செயலை தவறு எனச் சுட்டிக் காட்டுவதற்கே இப்படி நடித்தேன். சொந்த விசயத்துக்கு ஒரு நியாயம். வள்ளலாருக்கு ஒரு நியாயமா? எனது பத்திரத்திற்கு பின்பு ஏற்படுத்திய அவர் பத்திரம் அவருக்கு வேணும்.ஆனால் வள்ளலார் பின்பு ஏற்படுத்திய புதிய நெறி வேண்டாமோ??
    வள்ளலாரை அவரின் முடிபான நெறியில் காட்டாமல் பழைய கைவிடப்பட்ட நெறியில் வெளிப்படுத்துவது என்ன நியாயம் என்கிறேன்?
    “”நீங்களே சொல்லுங்க.””
    திகைத்து நின்றேன்.
    இதை விட உனக்கு விளக்க முடியாதுப்பா என நண்பனிடம் கூறினேன். நான் வாரேனு கிளம்பி விட்டேன்.
    சிறிது தூரம் சென்று திரும்பி பார்த்தேன்.
    வேதாச்சல அய்யாவின் கைகளை என் நண்பன் பற்றிக் கொண்டிருந்தான்.
    உண்மை வெளிப்பட்டே தீரும். உண்மையை உணர்ந்தே ஆக வேண்டும்.