Category: tamil katturai APJ arul

கட்டுரைகள் APJ அருள்

  • தூங்குபவரை எழுப்பி விடலாம். தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது

    ஊர் பக்கத்திலிருந்த வள்ளலார் சபைக்கு நான் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒருவரிடம் வள்ளலார் குறித்து விளக்கும் படி எனது தோழி கேட்டுக் கொண்டாள். அவரிடம் நான் பேச ஆரம்பித்தேன். அய்யா வள்ளலார் சமய பற்றை கைவிட்டுவிட்டார். உடனே அவர் என்னத்தை விட்டுவிட்டார்? அதற்கு நான்: ஆரம்ப காலத்திலிருந்த சமய பற்றை என்றேன். உடனே அவர்: என்ன சமயப் பற்றை? அய்யா… என்றேன். அதற்கு என்ன அய்யா?என்றார். அதாவது…. என்றேன். என்ன அதாவது ? என்றார். எனது தோழியை பார்த்தேன். அப்பொழது தான் புரிந்தது நம்மை மாட்ட வைத்துள்ளார்கள் என்று.
    என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற பெரியோரின் வாக்கு ஞாபகத்துக்கு வந்தது.
    நான் அவரிடம் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தேன். அய்யா, வள்ளலார் ஆரம்ப காலத்தில் சைவ சமயத்தில் பற்றுக்கொண்டு இருந்தார்கள். சமயப் பற்றுடன் இருந்தாலும், எந்தொரு சமய ஆச்சாரத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவே இல்லை. காரணம் தனக்கு வெளிப்படுத்திய,/காட்டிய கடவுள் நிலையையும் கடந்து ஓர் உண்மை இருப்பதாக உணர்ந்தார்கள். ஓர் புதிய வழியில் இது குறித்து விசாரணை செய்ய தொடங்கி விட்டார். இடைவிடாத நன்முயற்சியில் இறங்கிய அவருக்கு ஆண்டவர் உண்மையை, வெட்ட வெளிச்சமாக அவருக்கு காட்டினார். தான் சென்ற வழியில் எல்லாரும் சென்று தன் போல் எல்லாரும் பயன் பெறுதல் பொருட்டு அதற்கு சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டு வெளிப்படுத்தினார்கள். அவ்வழி தனி வழி புதிய வழியாக மட்டுமில்லை உணமை பொது வழியாகவும் உள்ளது.
    திருவருட்பாவில் உள்ள சமய ஸ்தோத்திரப்பாடல்களில் லட்சியம் வையாதீர்கள் என்று கட்டளை பிறப்பித்தார்கள்.
    சமயத்தில் பற்று வைத்திருந்த காலத்திலிருந்தே உண்மைக் கடவுளின் நிலை குறித்து விசாரணையை தொடங்கினாலும் நமக்கு உலகிற்கு வெளிப்படையாக 12-04-1871 ல் ஓர் அறிவிப்பு மூலம் பிரகடனம் செய்தார்கள். (அறிவிப்பை வாசித்து உணர்க.) உண்மைக் கடவுளின் நிலை குறித்தே எல்லா சமய,மத,மார்க்கங்களும் சொல்ல/காண/வெளிப்படுத்த தான் முயல்கின்றன. எல்லா ஞானிகளும், யோகிகளும், தெய்வங்களும், கர்த்தரும், தங்கள், தங்கள் அனுபவங்களை குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதியை தான் நம் வள்ளலார் கண்டு வெளிப்படுத்தினார்கள். எந்தொரு சமய,மத வழியை,ஆச்சாரங்களை பின் பற்றாமல் ஓர் உண்மை பொது வழியில் (சுத்த சன்மார்க்க வழி) தான் கடவுள் உண்மையை கண்டார்கள் அருள் பெற்றார்கள்.
    அவரை மதித்து அவர் அருகில் அமர்ந்து பணிவுடன் சமர்பித்துக்கொண்டிருந்த என்னை குறிக்கிட்டு: “ அப்படின்னா என் கேள்விகளுக்கு பதில் சொல்லு பார்க்கலாம்” என்றார்.
    கேள்வி 1. வள்ளலார் விபூதி பூசியிருந்தாரா இல்லையா? மற்றவர்களுக்கு கொடுத்து நோய் போக்கினாரா இல்லையா?
    கேள்வி 2. வள்ளலார் சிவம், சிவ சிவ என்பது சைவசமய கடவுள் இல்லாமல் வேறு ஏது?
    கேள்வி 3. நடராஜர் என்கிறாரே!
    கேள்வி 4. திருசிற்றம்பலம் என்பது சைவசமய வார்த்தை தானே?
    கேள்வி 5. சிவகாமவல்லி என்பது யாரை?
    கேள்வி 6: கடித்தில் சிதம்பரம் என்கிறாரே?
    கேள்வி 7: சமயதலங்களுக்கு சென்று வழிப்பட்டாரா இல்லையா?
    கேள்வி 8: கல்பட்டு அய்யா, வேலாயுத முதலியார் மற்றும் ரத்ன ஓதுவார் இவர்களின் அறிக்கைகள் இப்படி உள்ளதே?,
    கேள்வி 9: சத்திய ஞாசபையில் சபாபதி சிவாச்சாரியார் முதல் பல நூற்றாண்டுகள் வரை வழிபாடுகள் ஆகமவிதிப்படி தானே நடந்த்து.
    கேள்வி 10. வள்ளலார் சமயக்கடவுள்கள்,(கணபதி,முருகன், பரம், பைரவர் உட்பட) பற்றி சொல்லியுள்ளார்களே? தைப்பூசத்தை தானே தேர்ந்து எடுத்துள்ளார்.?
    அய்யா உங்கள் கேள்விகளுக்கு என்னால் என அனுபவத்தில் பதில் தர இயலாது
    அய்யாவின் சத்திய வாக்கியத்தை மற்றும் அகராதி கொண்டுதான் என்னால் பதில் தருவேன் என்றேன்.நான் பதில் அளித்து விட்டால் நான் கேட்பதை தரவேண்டும் என்றேன். என்ன வேண்டும் என்றார். பதில் கொடுத்து பெற்றுக்கொள்கிறேன் என்றேன்.
    ம்ம்ம்ம்.. பதில் சொல்லு.. பதில் சொல்லு…என்று பக்கத்திலிருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீரை எடுத்து குடித்து விட்டு எனக்கும் குடிக்க தண்ணீர் கொடுத்தார். வாங்கி குடித்து விட்டு நன்றி கூறினேன். இருக்கட்டும் இருக்கட்டும் பதில் சொல்லு… என்றார்.
    கேள்வி 1. வள்ளலார் விபூதி பூசியிருந்தாரா இல்லையா? மற்றவர்களுக்கு கொடுத்து நோய் போக்கினாரா இல்லையா?
    பதில் : வள்ளலார் விபூதி அணிந்திருந்தார்கள். மற்றவர்களுக்கும் விபூதி கொடுத்தார்கள். மறுக்கவில்லை.
    கருங்குழியிலிருந்து வடலூர்க்கு சென்று உரைகிறார்கள். உண்மை கடவுள் குறித்து விசாரணையில் எப்போதிலிருந்து இருந்தார்கள் என்பதை வெளிப்படையாக அன்பர்கள் உணர முடியாவிட்டாலும், வடலூரிலிருந்து மேட்டுக்குப்பம் சென்று உரையத்தொடங்கிய காலத்திலிருந்து (1870 லிருந்து) வள்ளலார் தன்னை முழுமையாக சமய பற்றிலிருந்து விலக்கிக் கொள்கிறார்கள். விபூதி அணியவில்லை. கொடுக்கவும் இல்லை. மிகத்தெளிவாக 12-04-1871 ல் ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார்கள். நீங்களே படியுங்கள் என்று உரை நடைப்பகுதி பக்கம் 547 யை எடுத்து கொடுத்தேன். அதன் பின்பு 22-10-1874ல் ஆற்றிய மகாபேருபதேசத்தை எடுத்து கொடுத்தேன். கைப்பட எழுதிய விண்ணப்பத்தினை (பக்கம் 556) (சமயப்பற்றை விட்ட செய்தியை) எடுத்து கொடுத்தேன். பாடல்கள் எடுத்துக் கொடுத்தேன்.
    சரி….சரி…. அடுத்த கேள்விக்கு பதில் சொல்லு…
    கேள்வி 2. வள்ளலார் சிவம், சிவ சிவ என்பது சைவசமய கடவுள் இல்லாமல் வேறு ஏது?
    சென்னைப் பல்கலைகழகம் வெளியிட்ட தமிழ் அகராதி வால்யூம்/பக்கம் எடுத்து காண்பித்தேன்.
    சிவம் : நன்மை என்றும் சித்துருவாகி சுயம் பிரகாசமாய் நிற்கும் சிவலொரூபம் (திரு 51.1)
    தூய அறிவுருவாக இருக்கும் இறைவன், கடவுள் என்று பொருள் என இருந்தது.
    சிவ சிவ என்பதற்கு ”ஓர் இரக்க குறிப்பு”.
    சிவஞானம் என்பதற்கு பதியுணர்வு என்கிறது அகராதிகள்.
    அய்யா கேள்வி 3க்கு செல்லவா?
    ம்ம்ம்..ம்ம்.. போ..போ..
    கேள்வி 3,4,5 & 6 நடராஜர் என்கிறாரே! திருசிற்றம்பலம் என்பது சைவசமய வார்த்தை தானே?. சிவகாமவல்லி என்பது யாரை? கடித்தில் சிதம்பரம் என்கிறாரே?
    சமயத்தார்கள் ” வாயு பகவான் “ என்றதினால் வாயு என்றச்சொல்லை எவரும் பயன்படுத்த கூடாது என்பதை சொல்லமுடியாதோ அது போல் நடராஜரும். நடம் என்பது கூத்து நடமாடுதல் ராஜர் என்பது மிகச்சிறந்தவன். நடமாடுதல் என்பது பரவியிருத்தல். ஆக, எங்கும் பரவியிருந்து எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டே ஒருமைத் திரு நடச்செய்கையை செய்யும் மிகச்சிறந்தவனை “ நடராஜர்’ என்று திருக்குறிப்புத் திருவார்த்தைகளால் குறிக்காமல் எப்படி வேறு மாதிரி குறிப்பிட முடியும்? நீங்களே சொல்லுங்களேன் அய்யா?
    கேள்வி 4. திருசிற்றம்பலம் என்பது சைவசமய வார்த்தை தானே?
    மேலே சொன்னமாதிரி தான். திருச்சிற்றம்பலம் என்பது “ சிற்சபை”. சிற்சபை என்ன என்பதை பக்கம் 346 உட்பட பலப்பாடல்களில் வள்ளலார் விளக்குகிறார்கள். நம் சரவணானந்தா அய்யா அவர்கள் சொல்கிறார்கள்; சிதம்பரம் என்றால், சித் + அம்பரம் = ஞான ஆகாசம் நம் பதியின், அருள் ஞானம் விளங்கும் அக ஆகாசமே சுட்டப்படுவதாம்.
    சிவத்தின் ஆற்றலை அல்லது சிவத்தின் தன்மையை உணரும் ஆற்றலை சிவகாமி ஆகும். வல்லி என்பது கல்யாணம் எனப்படும். சிவகாம வல்லி மணவாளா. சமய ஸ்தோத்திரப்பாடல்களில் பயன்படுத்திய சிவகாம வல்லி வார்த்தையையே வேறுவகையாக பொருள் கொண்டிருப்பதை தக்க ஆசிரியர்க் கொண்டு அறியலாம். அல்லது நாமே ஊன்றி பாடும் போது அறியலாம். பொது பெயர்களையே வல்லவர்கள் கற்பனைகளுக்கும், த்த்துவங்களுக்கு கொடுத்து, உண்மையை மறைத்துள்ளார்கள் என்கிறார் வள்ளலார்.
    திண்டுக்கள் தயவு அய்யா சொல்கிறார்கள்;.
    “…புனைப்பெயர்கள் எல்லாம் பொருள் தெரிந்தே ஆக்கப்பட வேண்டும். முன்னோர் கற்பித்தனவாகக் கொண்டு ஓதல் சிறப்பன்றாம்….”” .
    கேள்வி 7: சமயதலங்களுக்கு சென்று வழிப்பட்டாரா இல்லையா?
    ஆரம்ப காலங்களில் சமய தலங்களுக்கு சென்றார்கள். அத்தெய்வங்களை பற்றி ஸ்தோத்திரங்கள் பல பாடியுள்ளார்கள்
    சுத்தசன்மார்க்க வழியில் செல்லும் வரை இங்ஙனம் நடைப்பெற்றது. அதன்பின்பு அதாவது 1870 க்கு பின்பு எந்தொரு தலங்களுக்கும் செல்லவே இல்லை. சமய ஸ்தோத்திரம் எதுவும் பாடவில்லை.
    கேள்வி 8: கல்பட்டு அய்யா, வேலாயுத முதலியார் மற்றும் ரத்ன ஓதுவார் இவர்களின் அறிக்கைகள் இப்படி உள்ளதே?,
    திருவருட்பிராகச வள்ளலார் என்னச் சொன்னார்கள்? எனப் பார்க்க வேண்டுமே அன்றி அருகில் இருந்தவர்களின் சொல்கள், செய்கைகள் வள்ளலாரின் சொல்கள் செய்கைகள் ஆகாது. இவர்கள் கூட வள்ளலாரின் முடிபான நெறியை அறிந்தவர்களாக இல்லை என்பதே உண்மை. அதற்கு வள்ளலாரின் சத்திய வாக்கியமே சான்று: “உண்மைச் சொல்ல வந்தனனே என்றுச் சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை.”
    கேள்வி 9: சத்திய ஞாசபையில் சபாபதி சிவாச்சாரியார் முதல் பல நூற்றாண்டுகள் வரை வழிபாடுகள் ஆகமவிதிப்படி தானே நடந்த்து.
    இன்று இவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. குத்து விளக்கு, லிங்கம், சிலைகள், பூசை கருவிகள், எல்லாம், அகற்றப்பட்டுவிட்டது நிலையத்தார்களால். இதுவரை வள்ளலாரின் நெறி படி நிலையம் நடைப்பெறவில்லை என்பதை அற நிலையத்துறையே ஒத்துக்கொண்டது. ஆணயையும் பிறப்பித்துள்ளார்கள்.
    கேள்வி 10. வள்ளலார் சமயக்கடவுள்கள்,(கணபதி,முருகன், பரம், பைரவர் உட்பட) பற்றி சொல்லியுள்ளார்களே? தைப்பூசத்தை தானே தேர்ந்து எடுத்துள்ளார்.?
    அய்யா அவைகள் சிறு குழந்தைக்கு கூட புரியும் படியுள்ளது. எல்லாமே தத்துவங்களே என்கிறார்கள். த்த்துவ சம்மாரமே என்கிறார்கள். உண்மைக் கடவுளுக்கு மனிதன் போல் மூக்கு, வாய் கை, கால்கள் கிடையாது என்று. இவைகளை படித்தாலே தெரிந்துவிடும். தை மாசம் குறிப்பிட்ட சமயத்தார்களூக்கு உரியது போல் சொல்கீறீர்கள். இயற்கையின் உண்மைகள் எல்லா உயிர்களுக்குமே சொந்தம். அதன் விளக்கங்கள், சிறப்புகள், எவர் அறிந்தாலும் எல்லோருக்குமே. முடிபாக சொல்ல வேண்டுமானால் முடிபான உண்மை பொது நெறி அறிய 1871 க்கு பின் உள்ளவைகளே போதுமானது ஆகும். எல்லாம் தெரிந்து, அறிந்து, அனுபவிக்க இவைகளே போதுமானது ஆகும். வள்ளலாரின் குரு ஆண்டவரே! நமக்கும் குரு ஆண்டவரே! இந்த உண்மை அறிய, அனுபவிக்க என்றும் விலகாது நமக்கு துணை நிற்பவர் நம் திருவருட்பிரகாச வள்ளலார்.
    பணிவுடன் சொல்லி நிமிர்ந்தேன். கைகட்டி வாய் பொத்தி குறிப்பால் வரையப்பட்ட வள்ளலாரின் படம் முன்பு நின்றிருந்தார்.
    சபையின் ஸ்தாபகர் சத்தமாக கூறினார்: “ சாப்பாடு ரெடி வாருங்கள் “
    எல்லோருமே விரைவாக எழுந்திருந்தோம். வேற்றுமையின்றி ஒத்துவர்களாக பக்கம் பக்கம் அமர்ந்திருந்தோம். பச்சை விரிக்கப்பட்ட்து. வெண்மை போடப்பட்ட்து. மஞ்சள் ஊற்றப்பட்ட்து. அனைத்து கலரும் வைக்கப்பட்ட்து. கண் ஒளிப்பெற்றது. மனம் மகிழ்ந்தது. ஜீவன் திருப்தி கொண்டது. ஆனால் ஆன்ம அறிவு (உண்மை அறிய )வெளிப்பட்டமாதிரி தெரியவில்லை எனக்கு. எனக்கு மட்டுமே.
    நல்ல விசாரணைக்கு வித்திட்ட அவரை தேடினேன். பிசியாக இருந்தைக் கண்டேன். நானும் பிசியானேன். (இன்சொல்லாடல் வேண்டும்).அவரின் ஆதரவை பரிசாக கேட்க காத்திருப்பேன். நன்றி. என்றும் உங்களின் ஆதரவில் ஏபிஜெ அருள்..
  • சாதி, சமயம், மதம் பொய் என்ற வள்ளலாரின் நெறி

    சாதி, சமயம், மதம் பொய் என்ற வள்ளலாரின் நெறி எங்ஙனம் எல்லோருக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது ?— Apj Arul
    அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் – இது ஒரு நல்ல விசாரணையாகவே கருதுகிறேன் – இவ்விசாரணை நம் பகுதியிலேயே செய்யப்படுகிறது – அன்பர்களே !
    உலகில் எத்தனையோ மார்க்கங்கள் (சமயங்கள்/மதங்கள்) உள்ளன – அதனை நிறுவியவர்கள் ”மெய்யறிவு உடையவர்கள்” என்கிறார் வள்ளலார் –மேற்படியான சமய, மத நூல்களின் சரத்தை நம் அறிவில் அறிய வேண்டின் நாம் எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டும் என நமக்கு தெரியாது – அவ்வளவு பெரிய விசயம் – திருமூலர், மாணிக்கவாசகர், பெரியாழ்வார், தாயுமானவர், என இங்கும், – மகான் தேவர் இயேசு, – மகான் இறை தூதர் நபிகள் நாயகம் ஸல் – புத்தர் – மகாவீர் – குருநானக் இன்னும் பல கடவுளர், தேவர், யோகிகள், ஞானிகள் உள்ளனர் –
    நமது பிறப்பிடம் அதாவது பெற்றோர் சார்ந்த சமய கொள்கையை தான் நாம் ஏற்று வாழ்கிறோம் – மிக மிக குறைந்த அளவு சதவீத மனிதர்கள் தான் தனது ஆரம்ப சமய மத கோட்பாட்டை மாற்றிக் கொள்கிறார்கள் – அம்மாற்றத்திற்கும் பல காரணங்கள் உள்ளது – நிற்க !
    அன்பர்களே !
    மேற்படி சமய, மத, மார்க்கங்களை நிறுவிய, கடவுளர், தெய்வம், தலைவர் ஞானி,யோகி, கர்த்தர் ஆகிய இவர்கள் மீது மனிதர் அனைவருக்கும் பக்தி உண்டு – பக்தி இல்லாவிடிலும் மதிப்பு, மரியாதை உண்டு – ஏனென்றால் எல்லோருமே நமக்கு மேல் நம்மை அனுஸ்டிக்கும் கடவுள் குறித்தே சொல்கிறார்கள் – கடவுள் இவரே, அவர் இங்ஙனமாக உள்ளார் என வெளிப்படுத்துவதில் தான் வேறுபடுகிறார்கள் –
    அதே போல் மேற்படி மார்க்கங்களில் பற்று ஏற்படுவதற்கு உள்ள பல வகை வழிபாடு சாதனங்களிலும் இவைகள் மாறுபாடு கொண்டுள்ளது – வெளிப்படுத்திய வழியில் முழு நம்பிக்கையை ஏற்படுத்தி, கருத்தில் ஆழமாக பதிய வைக்கும் அளவுக்கு, கலைகள் பல சொல்லப்பட்டு, அதன் கட்டுப்பாட்டில் நாம் வைக்கப்பட்டுள்ளோம் அல்லது நமக்கு ஓதப்படுகிறது
    அன்பர்களே !
    நாம் பற்று வைத்திருக்கும் சமய, மத, கோட்பாடு / வழிபாடு நமது அன்றாட நடவடிக்கையில் ஒன்றாக அமைந்து விட்டது – அதன் கட்டுப்பாட்டு ஆச்சார அடிப்படையிலேயே வழிபாடு, பழக்க வழக்கங்கள், நம் மனதில் பற்றி விடுகிறது – எந்தொரு காலத்திலும், எதற்காகவும் நாம் வைத்திருக்கும் பற்றை யாரிடமும் விட்டு கொடுக்காத அளவு கருத்தில் பதிந்து விடுகிறது – நாமும் நம் பற்றை விசாரணைக்கு உட்படுத்தியதும் இல்லை –
    ஆம் அன்பர்களே ! நாம் வணங்கும் கடவுள், தலைவர்கள் குறித்து ஏன் விசாரணை செய்ய வேண்டும் ? 💡  சொல்லப் பட்டவை அனைத்தும் தலைவர்களும் நல்ல விசயத்தை தானே சொல்லியுள்ளார்கள் ! அதனால் தான் நாம் அவை குறித்து விசாரம் செய்யவில்லை – ஆச்சாரங்கள் மீதும் எந்தொரு விசாரமும் கிடையாது – ஆச்சாரங்கள் அனைத்தும் கட்டுபாட்டு விதிகளை பெற்றுள்ளது –இந்த நேரத்தில், இந்த இடத்தில், இங்ஙனமாக மட்டிலும் சடங்குகள் செய்ய சொல்லும் கட்டுபாட்டு விதியை பெற்றுள்ளோம்–
    நீங்களே சொல்லுங்கள் ? ➡  நாம் கொண்டியிருக்கும் கொள்கையின் உண்மை என்ன ? நம் நிலை என்ன ? நம்மை அனுஸ்டிக்கும் கடவுளின் நிலை என்ன? இப்படியாகவா நாம் தினமும் வழிப்பாட்டில் துதித்து, நினைந்து, உணர்கின்றோம்? இல்லையே!

    நமக்கு இவரே கடவுள் ? அவரை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும் – தியானத்தில் நமது கடவுளையே தியானிக்கிறோம் – அவ்வளவு தான் – மற்ற எந்தொரு விசாரத்திற்கும் வழி வகை இல்லை –ஆக, கடவுள் குறித்தே எல்லா சமய, மதங்கள் போதித்தாலும் மேற்படி கட்டுப்பாட்டு ஆச்சார அடிப்படையிலேயே நமக்குள் பற்றும், மற்ற சமய, மத, மார்க்கங்களிலிருந்தும் வேறுப்பட்டு, கொள்கை அளவில் எதிராக நிற்கின்றோம் 😳 
    நமது இச்சைகளை நிறைவேற்றுவதற்கும் அன்றாட தேவைகளுக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் இவை போன்றவைகளுக்காக மட்டும் நமக்குள் / மனிதர்களுக்குள் ஒத்து போய் புலனிச்சை செய்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம் – ஆனால் மேற்படி கடவுள் கொள்கையில் சமரசமோ அல்லது இணைதலோ ஏற்படவில்லை காரணம் ஒவ்வொன்றிலும் உள்ள கட்டுபாட்டு ஆச்சாரங்களே ஆகும் –
    இந்த உண்மையை தான் வள்ளலார் கண்டு வெளிப்படுத்துகிறார்கள்கடவுளின் அருள் பெற கருணை வேண்டும் என்ற வாசகத்தை எல்லா சமய,மத,மார்க்கங்கள் பெற்றிருந்தாலும், அதில் எந்தொரு உரிமையையும் நாம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை – முடியாது – ஏனென்றால் ஒவ்வொரு மார்க்கத்திலும் இருக்கும் ஆச்சார கட்டுப்பாடுகள் நம்மை நம் அறிவை கொண்டு கடவுளின் நிலையை விசாரிக்க அனுமதிக்கவில்லை –
    இவரே கடவுள் இதுவே வழிபாடு இதுவே முடிவு என்கிறது நாம் சார்ந்திருக்கும் மார்க்கங்கள் யாவும் – அதை அங்ஙனமே எவ்வித விசாரமின்றி ஒத்துக் கொண்டு அதன் வழி நடக்கிறோம் – அங்ஙனம் அவ்வழியில் நடக்கும் போது அந்த சமய,மத,மார்க்க தலைவர்களால், ஞானிகளால், யோகிகளால், கடவுளரால், தேவரால், கர்த்தர்களால் பெறப்பட்ட பயனையே அவ்வழி சார்ந்தோர் பெறமுடியுமே அன்றி அதற்கு மேல் பெறமுடியாது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை –
    நிற்க ! இங்கு கடவுளின் கருணை எது ? என நாம் கேட்க கூடும் – இந்த இடம் தான் நம் அறிவின் அளவும் அது மேலும் விருத்தியாகும் இடமும் ஆகும் – கடவுள் கருணையை பெற நாம் தான் நன்முயற்சி செய்தாக வேண்டும் – கடவுளின் வழி திறந்தே உள்ளது – கடவுள் உண்மை நிலை காண எந்தொரு தடையுமில்லை –நாம் சார்ந்துள்ள சமய,மத,மார்க்கங்களின் ஆச்சார வகைகளே நமக்கு தடை ஏற்படுத்துகின்றன என இங்கு சத்தியமாக அறிதல் வேண்டும்

    அன்பர்களே !
    இந்த பிரபஞ்சத்தின் உண்மைகள் அதாவது பிரபஞ்சத்தின் வெளிப்பாடுகள் அதில் உள்ளவைகளான அண்டங்கள், உலகங்கள், உயிர்கள், பொருள்கள், இன்னும் பலவற்றையும் நாம் அறிந்திருக்கவில்லை ஆனால் இவை படைத்த இறைவன் இவரே என்று எங்ஙனம் முடிவு செய்துள்ளது நமது மார்க்கங்கள்? நான் சொல்வது நாம் இன்று சார்ந்திருக்கும் சமய,மத,மார்க்கங்களை சுட்டி காட்டுகிறேன் – இப்படி கூற காரணம், உண்மையை ( நம் மற்றும் கடவுளின் உண்மையை ) கற்பனை திரைகளால் அறியாமலும் வல்லப தன்மையாலும் மறைக்கப்பட்டுள்ளது – உண்மை என்றுமே இருந்தது இருக்கிறது இருக்கும் – அதுவே கடவுள் –
    உண்மையறிந்தவனுக்கு ஏது அவத்தைகள்? – நமக்கு வெளிப்படுத்தியுள்ள சமய,மத,மார்க்கங்கள் அனைத்துமே உண்மை நோக்கிய பயணமே அன்றி உண்மையின் எல்லை இல்லை என அறிதல் வேண்டும் – அதனதன் தலைவர்கள், ஞானிகள், கர்த்தர்கள், யோகிகள், கடவுளர், தேவர்கள் எந்தளவு சென்றுள்ளார்களோ அந்தளவு மட்டுமே பயனை பெறமுடியுமே அன்றி முழு பயனை அடையவே முடியாது என அறிக – பல சித்திகள் மற்றும் நெடுங்காலம் வாழுதல் போன்றவை நம் மார்க்க நெறியை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் – ஆனால் அதுவா பெரும் பயன்? –எந்தொரு மார்க்கத்தை சார்ந்திருந்தாலும் நம் எல்லாருக்கும் துன்பம்,பயம்,மூப்பு, பிணி, மரணம் பொதுவாகவே வருகிறது – ஏன், அந்த மார்க்கத்தின் தலைவர், யோகி, ஞானி,கடவுளர், தேவர்களுக்கு மரணம் இறுதியாக உள்ளது – எல்லோருமே செத்து அல்லாவா ஒழிந்தனர் அல்லது முக்தி, சாமாதி என்ற அமைப்பில் ஒடுங்கியல்லவா போயினர் என்கிறார் வள்ளலார் இதுவா கடவுளின் உண்மையருள்? இதுவா பெரும் பயன்?
    துன்பம், பயம், மூப்பு, பிணி, மரணம் போன்றவை மனிதன் (உயிர்கள்) பெறும் அவத்தைகள் ஆகும் – இந்த அவத்தைகளை போக்கி கொள்வதே நம் முயற்சி – பிறந்த நாம் , ’மரணமில்லாமல் வாழ்வதே சிறப்பு’ என அறிதலே உயர் அறிவாகும் – அந்த உயரறிவை நோக்கியே நம் அறிவு வளர்ச்சியடைகிறது – அதுவே இயற்கை அமைப்பு – இதற்கு பல லட்ச பிறவிகள் வேண்டியுள்ளது – இயற்கையை விதியை வெல்ல முடியாது என்பதே இது வரை கண்ட ஆய்வு முடிவு – வாழும் வரை பிறருக்கு உதவுவதும் அல்லது பிறர் துன்பம் செய்தாலும் சகித்து அடங்கியிருப்பதே ஒருமை (உண்மையின் மேன்மை) என்கிறது நமது முன் மார்க்கங்கள் – ஆனால் இதுவல்ல உண்மையின் முடிவு – அவத்தைகளை நீக்கிக் கொண்டு மரணமில்லா பெருவாழ்வு பெறுதலே உண்மையின் மேன்மை – இவ்வின்பம் சத்திய அறிவால் மட்டுமே பெற முடியும் – இந்த பெருவாழ்வு கடவுளின் அருளாலே கிடைக்கிறது – எவர் ஒருவர் கடவுள் நிலை குறித்த நல்ல விசாரணை செய்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அருள் கிட்டுவதாக உள்ளது – என் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை என்கிறார்கள்
    ஆனால் நாம் சார்ந்திருக்கும் மார்க்கத்தில் கடவுளின் உண்மை குறித்து விசாரிக்க நாம் அனுமதிக்கப் படுகிறோமா ? அனுமதியில்லை – இவரே கடவுள், இதுவே சாதனம், இதுவே முடிவு என்கிறார்கள் – உலகில் வெளிப்பட்டுள்ள எல்லா சமய,மத,மார்க்கங்களிலும் நரகம், சொர்க்கம் உள்ளது – அவை மரணத்திற்கு பின் உள்ள அமைப்புகளாகும் என்கிறார்கள் – இங்ஙனம் இருக்க, ”மரணம் தவிர்த்தல்” என்ற உண்மை அவையில் எங்கு வெளிப்பட்டுள்ளதாக சொல்லமுடியும்? – வள்ளலார் என் மார்க்கத்தில் நரகம்,சொர்க்கம் என்பதில் எந்தொரு விசாரமில்லை என்கிறார் – சாகாதவனே சுத்த சன்மார்க்கி என்கிறார்கள் 
    அன்பர்களே !
    மனிதன் பிரிந்து பல சமய,மத,மார்க்கங்களை சார்ந்து உள்ளான் – நாம் எந்தொரு மார்க்கத்தில் இருந்தாலும் எல்லா மார்க்கத்தார்கள் என்ன என்ன பெறுகிறார்களோ அவையை தான் எல்லோரும் பெறுகிறோம் – எல்லோருக்குமே துன்பம்,பயம்,மூப்பு,பிணி,மரணம் வந்து சேருகிறது

    எல்லா மார்க்கத்திலும் நல்லவர்கள், அறிவு சான்றோர்கள், நீண்ட வாழ்வு பெறுபவர்கள் இருக்கிறார்கள் – அப்படியெனில் மார்க்கங்களிடையே வேறுபட்டிருக்கும் கடவுள் கொள்கை இதற்கு காரணமில்லை – நல்லவர்,அறிவு சான்றோர் ஆகுவதற்கும் நீண்ட வாழ்வு பெறுவதற்கும் ஒழுக்க நெறியும், அன்பும், அவரவர் தத்துவங்களை (உடலை) பராமரித்தலுமே போதுமானதாக உள்ளது என அறிக! – அன்பு, ஒழுக்கம் மேற்படி அனைத்து மார்க்கங்களிலும் உள்ளது என அறிதல் வேண்டும் –ஆனால், இதுவல்ல சுத்த சன்மார்க்க கொள்கை முடிபான முடிபு நோக்கி செல்கிறது – இதுவரை வெளிப்பட்டவையை உள்ளடக்கி மேலும் நல்ல விசாரணை இங்கு மேற்கொள்ளப்படுகிறது –நாம் மேலும் படிகள் ஏற கீழ்ப்படிகளாக முன் மார்க்கங்கள் உள்ளது என்கிறார் வள்ளலார் – சுத்த சன்மார்க்கத்திற்கு மற்ற மார்க்கங்கள் யாவும் அநந்நியம்- அந்நியமல்ல – இம்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல – சமயமத அனுபவங்களை கடந்தது என்கிறார் வள்ளலார் – உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் உண்மை கடவுளை குறித்ததே தவிர வேறில்லை – உபாசனாதி வழியாய் வழிபடுவது கொள்கை அல்ல – என் மார்க்கம் உண்மையறிம் அறிவு மார்க்கம் என்கிறார் வள்ளலார் – உண்மையறிய யாருக்கும் யாதொரு தடையுமில்லை – உண்மையறிதலே லட்சியமாக கொள்ள வேண்டும் – அதுவே உண்மையறிவு ஆகும் 

    அன்பர்களே ! சமய,மத,மார்க்கங்களிலும் உண்மைகள் உரைக்கப்பட்டுள்ளது ஆனால் முழு உண்மை அவையில் உரைக்கவில்லை – முழு உண்மை உரைக்காததால் தான் சமயம்,மதம் பொய் என்கிறார் வள்ளலார் – நாம் ஒருவருக்கு 1000/- கொடுத்திருந்தோம் சில காலங்கள் கழித்து பணம் வாங்கியவர் நம்மிடம் வாங்கியது 900/- என்கிறார் – அவர் மறதியால் அல்லது வேறு காரணத்திற்காக சொன்னாலும் அவர் பொய் சொல்கிறார் அல்லது தவறாக சொல்கிறார் என்று தானே சொல்வோம் –
    நம் வீட்டு பிள்ளைகளை புறப் படிப்பில் 100/100 வாங்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லும் நாம், நாம் கொண்டியிருக்கும் கொள்கையில் உண்மை முழுமையாக இருக்க வேண்டும் என ஏன் சிந்திக்கவில்லை ? பெரிய படிப்பை படிக்க வைக்கும், நாம் சாகாகல்வி குறித்து ஏன் படிக்கவில்லை? – நன்றாக படித்து பெரிய பதவிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தும் நாம், கடவுள் அருளால் பெறக்கூடிய பெரும் பயனில் (மரணம் தவிர்த்தல்) ஏனில்லை அறிவு? இவை நம்மிடம் இல்லாமல் போனதற்கு இரு காரணங்களே ஆகும் – ஒன்று கொள்கை, மற்றொன்று காலம் – நமது சமய,மத,மார்க்கங்களில் நமக்கு ஏது விசாரணைக்கு அனுமதி? – நமது சமய,மத,மார்க்கங்களின் கட்டுபாட்டு ஆச்சாரங்களில் பற்று கொண்ட பின்பு நமக்கு ஏது காலம்? எனவே தான் அவையில் லட்சியம் வைக்காதீர்கள் என்று கட்டளையிடுகிறார் வள்ளலார் –

    அன்பர்களே !
    அச்சம் வேண்டாம் – நேற்று வரை கொண்டிருந்த லட்சியத்தை கைவிட்டு மற்றொரு லட்சியத்தில் –?? அஞ்ச வேண்டாம் – சுத்த சன்மார்க்கம் ஓர் உண்மை பொது மார்க்கம் – இங்கு உண்மை கடவுள் நிலை கண்டு அக்கடவுளின் அருள் பெற்று பேரின்ப பெருவாழ்வை பெறுவதே லட்சியம் – நமது முன்னோர்களை தொடர்ந்து தான் இந்த விசாரணை செய்கிறோம் என அறிக – இங்கு வெளிப்படும் நமது உண்மை கடவுள், நமது ஞானிகள், யோகிகள், தலைவர்கள், தேவர், கடவுளர், கர்த்தர் ஆகிய இவர்கள் எதிர்பார்த்தின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதியை தான் குறிப்பிடுகிறார் நம் வள்ளலார் – எனவே தான் அஞ்ச வேண்டாம் என்கிறார் வள்ளலார் –

    அன்பர்களே !
    இது வரை நாம் லட்சியம் கொண்டியிருந்த சமயங்கள், மதங்கள் குறித்து சற்று உற்று நோக்குங்கள் – அவையில் நம் பிண்ட லட்சணத்தை தான் கடவுளாக காட்டியுள்ளதை காணலாம் – இதை அண்டத்தில் காட்டி, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுசனுக்கு அமைப்பது போல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லி யிருக்கின்றார்கள் – அடுத்து உண்மை கடவுளை நோக்கி விசாரணம் செய்து கொண்டிருந்த நம் தலைவர்களை, ஞானிகளை, யோகிகளை நாம் வணங்கும் கடவுளாக ஆக்கி கொண்டுள்ளோம் – இதுவே உண்மை – நம்புங்கள் என சொல்லவில்லை – நீங்களே உற்று நோக்குங்கள் என்றுதான் சொல்லுகிறோம் – , நாம் நம் நிலை மற்றும் கடவுள் நிலை காண ஒவ்வொருவரும் அவரவர் அறிவால் வள்ளலார் மார்க்கத்தில் நல்ல விசாரணை செய்தே ஆக வேண்டும் – கருணை ஒன்றே சாதனமாக உள்ளது – சாதனம் என்றால் பயிற்சி – கருணை என்றால் எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்பும் என்கிறார் வள்ளலார் – நம் நிலை காணும் போது எல்லா உயிர்களிடத்தும் நமக்கு தயவு ஏற்படும் – அதே போல் கடவுள் நிலை காணும் போது அக்கடவுளிடத்தில் அன்பு வந்து விடும் – அதன் பின்பு அருள் பெறுவதற்கு ஏது தடை? – இங்ஙனமாக வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறி உள்ளது –
    ஆனால் இதற்கு என்ன வேண்டும்? ஆசை வேண்டும் – எனவே தான் வள்ளலார் ”ஆசை உண்டேல் வம்மீன்” என்றும் ”ஆசை உடையவர்கள்” காலம் தாழ்த்தாது விரைந்து வாரீர் என்கிறார்கள் –

    நல்ல விசாரணை தொடரும்…

    – ஏபிஜெ அருள் – கருணை சபை மதுரை

  • ச.கா – சு.கா – APJ. அருள்

    சன்மார்க்கம்ச.கா

    சுத்தசன்மார்க்கம்சு.கா

    ஆசிரியர்:APJ. அருள்,நிறுவநர் – கருணை சபை-சாலை,உத்தங்குடி, மதுரை

    முன்னுரை:

    அன்பர்களே வணக்கம் தங்களின் மேலானப் பார்வைக்கு வள்ளலாரின் தனிநெறி பாகம் 1, பாகம் 2, சமர்ப்பிக்கப்பட்டது. அவை தொடர்ந்து இந்நூலின் வாயிலாக தங்கள் முன்பு பணிவுடன் வள்ளலாரின் சத்தியத்தை (தனிநெறி பாகம் 3) சமர்ப்பிக்கின்றேன்.

    பாகம் 1-ல்

    1. சுத்த சன்மார்க்க காலம் வெளிப்பட்ட ஆண்டு ஏப்ரல் 1871 ஆகும் என்பதை முதன்முதலில் வெளிப்படுத்தியது.
    2. சுத்த சன்மார்க்கத்தில் முதன்மையான மற்றும் முக்கிய பகுதிகள், மற்றும் முக்கியத் தடைகள்
    3. வள்ளலாரின் முடிபான தனி நெறிப்பாடல்களின் தொகுப்பை ஆறாவது திருமுறை என்று அழையாது, “சமரச சுத்த சன்மார்க்க திருஅருட்பா பாடல்கள்“ என்று அழைத்தல் கூடும்

    பாகம் 2-ல்

    வள்ளலாரின் சமரச சுத்தசன்மார்க்கத்தில் “திருவருள்” நிலையறிவது எப்படியெனில் என்று வள்ளற்பெருமான் எங்ஙனம் நேரிடையாக கூறியுள்ளளைர், சுத்தசன்மார்க்கத்தில் ஒழுக்கங்கள் எவை? கருணை, ஒருமை பற்றிய விளக்கம், ஆதாரங்களுடன் கோடிட்டு காண்பிக்கப்பட்டது.

    இந்த பாகம் 3ல் விசாரம் செய்வது எதுவெனில்;

    (ஆதாரம் : திருஅருட்பா உரைநடைப்பகுதி – தெய்வநிலைய வெளியீடு-2008)

    வள்ளலார் தன் மார்க்கத்திற்கு எவையை? எக்காலத்தும் முக்கியத் தடைகளளைக அறிவித்தார் என்பதை பற்றிய விசாரம். சுத்தசன்மார்க்கத்தை மட்டுமே அனுஷ்டிக்கிறவர்கள் வள்ளலார் அமைத்த கட்டளைப் படியே செயல்படக்கூடும். அந்நிலையிலேயே “கடவுள் உண்மை” பதிந்து அறிவு விளங்குவதாக உள்ளது. அன்பர்களே, இந்நுளைலில் அக அனுபவ விளக்கமோ அல்லது பொருள் விளக்கமோ தரப்படவில்லை. உள்ளதை உள்ளபடியே கோடிட்டு மட்டும் காட்டப்படுகிறது.

    ஓர் ஆசிரியர் தனது மாணவனிடம் கீழ்வரும் கேள்வியை கேட்கிறார்

    கேள்வி : 5 + 4 = ?

    மாணவன் பதில் : 7 (ஏழு)

    இங்கு, மாணவனின் பதில் “தவறு” என்று தான் ஆசிரியர் கூறுவார். மாணவர் “ஐந்து” உடன் “நான்கை” கூட்டும் போது ஐந்தைவிட கூடுதலாக வரும் என்று மாணவன் அறிந்திருக்கிறான் என்று ஆசிரியர் மகிழ்ந்தாலும், மாணவரின் “ஏழு” என்ற தவறான பதிலுக்கு மதிப்பெண் தரமாட்டார். அதுபோல் தான் உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் “இறைவனைப் பற்றியும், அக்கடவுளின் அருளை பெறுவது பற்றியும் வியம்பி இருந்தாலும் அத்திருவருள் பற்றிய முழு உண்மையை அவை வியம்பவில்லை.” அதனால் அவற்றை பொய் என்கிறார் வள்ளலார்.

    அதே நேரத்தில் சமய, மத, மார்க்கங்களில் இருந்த, இருக்கின்ற பெரியோர்களே நல்லறிவு கொண்டோர், மெய்யறிவு படைத்தோர் என்றும் கூறுகிறார் வள்ளலார். அந்த நல்லறிவு, மெய்யறிவு கொண்டோர்களும் அறிந்திடாத “உண்மையை” தனக்கு கடவுள் காட்டியதாக கூறுவதே வள்ளலாரின் சிறப்பு.

    மேலும், தான் கண்ட “உண்மை”யானது உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களுக்கும் பொதுநெறியாகி விளங்கும் என்கிறார் வள்ளலார்.(பக்கம் 550).

    “எது” எல்லோருக்கும் பொதுவாகவும், எல்லோரும் ஒத்துக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளதோ அதுவே “உண்மை”. “அந்த உண்மையை” கண்டவர் வள்ளலார்.

    வள்ளலார் சொல்ல வந்த உண்மை என்ன?

    தனது பேருபதேசத்தில் (22.10.1873) குறிப்பிட்டது …..

    “உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை

    சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.’’

    அந்த உண்மை என்ன?

    வள்ளற் பெருமான் பெற்ற அறிவினால் தெரிந்த அனுபவத்தில் கண்ட ’’கடவுளின் உண்மை’’ இதுநாள் வரை எந்ததொரு சமய, மத, மார்க்கங்களிலும் காணாத சத்தியம் ஆகும். சமய, மத, மார்க்கம் சார்ந்த நல்லறிவு கொண்டோர்களுக்கும், மற்றும் ஆன்மநேய ஒருமைபாட்டுரிமையில் அந்த சத்தியத்தை “சத்திய ஞான சபை“ அமைத்து ஒருவாறு புறத்திலே நமக்கும் விளக்கினார்கள்.

    அங்ஙனம் “உண்மை“ விளக்கினாலும் அன்றைய மக்களின் நிலைப்பற்றி வள்ளலார் குறிப்பிடுகையில்; (ஆதாரம் : பேருஉபதேசம்)

    “தெய்வத்தை தெரிந்து கொள்ளளைது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கெள்ளளைததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால் ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்ததினுடைய ருசிதெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தன் மேல் இச்சை போகாது அதுபோல், தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது, ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் மென்கிற முக்கிய லட்சுயத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்“ என்கிறார்கள். வள்ளலார் ஒரு வருடத்திற்கு மேலாக, இறுதி வரையில் சத்திய ஞான சபையை பூட்டியே வைத்திருந்தார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்….. ’’

    பக்கம் 560: (திருஅருட்பா உரைநடைப்பகுதி) சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்: “எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே, இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள், என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்….. ”

    நிற்க

    சமயங்கள், மதங்கள், மார்க்கங்களை தான் கண்ட மார்க்கத்திற்கு தடைகள் என்று கூறினார்கள். அதுவும் முக்கியத்தடைகள் எனவும் மேலும் எக்காலத்திற்கும் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளளைர்கள். மேலும், பக்கம் 570:- சத்திய பெருவிண்ணப்பத்தில்:- “வாலிபப் பருவந் தோன்றியபோதே, சைவம், வைணவம், சமணம், பவுத்த முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும், அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும், தத்துவசித்தி விகற்பங்கùளன்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகùளல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகùளன்றும், உள்ளபடியே எனக்கறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமற்றடை செய்வித்தருளினீர்.“ மேலும் வள்ளலார் தனது சுத்த சன்மார்க்கப் பாடல்களில் (6வது திருமுறை) சமயம், மதம் மார்க்கங்களை பற்றி குறிப்பிடுகையில் …….

    பாடல் சுத்தசன்மார்க்கப் பாடல்கள்

    எண்

    64 மான மேலிடச் சாதியே மதமே

    வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன் …..

    …. அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.

    72 சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்

    சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்.

    185 கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்

    கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே

    நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்

    நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ……

    186 வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்

    விளம்புநெறிஇதிகாசம் விதித்தநெறி முழுதும்

    ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

    உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே

    ஏதமற உணர்ந்தனன் வீண் போதுகழிப் பதற்கோர்

    எள்ளளவும் எண்ணம்இலேன் என்னோடுநீ புணர்ந்தே

    தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்

    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

    187 கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

    கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

    மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்

    வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே …..

    202 சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்

    புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்

    பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்

    உரியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.

    220 மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி

    மன்னிய வடிவளித் தறிஞர் …..

    306 கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம்

    மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்

    இருள்நெறி மாயை வினைகளளைல் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்

    தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.

    336 இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற் கரியபே ரின்பம்

    தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் தயாநிதி தனிப்பெருந் தந்தை

    அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப்பொதுவில் ஐயர்தாம்வருகின்ற சமயம்

    சமயம்இப் போதென்றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம்அறியும்.

    353 இச்சாதி சமயவிகற் பங்கùளலாம் தவிர்ந்தே

    எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்…..

    363 சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்

    நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும்

    ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதிஎன் றறிந்தேன்

    ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான் உரைப்பதென் அடிக்கடி உனக்கே.

    411 கருங்களிறு போல்மதத்தால் கண்செருக்கி வீணே

    காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்

    ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருள் வடிவாய்

    உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்

    பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்

    பிறர்அறியா வகைபெரிதும் பெறுதும்என உள்ளே

    மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ

    மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

    415 அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா

    தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்

    புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளளைக்கி அருளளைம்

    பொருள்அளிக்கப் பெற்றனன்

    417 அடிபிடித்துத் திரிகின்ற மறைகள் எலாம் காணா

    அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக் ….

    430 புல்லவா மனத்தேன் என்னினும் சமயம் புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்

    சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர் செப்பனத் தாயினும் நினையேன்

    கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன் கனகமா மன்றிலே நடிக்கும்

    நல்லவா எல்லாம் வல்லவா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

    452 கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன் கோடுறு குரங்கினிற் குதித்தே

    அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம் அறிந்தவன் போல்பிறர்க் குரைத்தேன்

    மலைவுறு சமய வலைஅகப் பட்டே மயங்கிய மதியினேன் நல்லோர்

    நலையல எனவே திரிந்தேனன் எனினும் நம்பினேன் கைவிடேல் எனையே.

    474 தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே

    சிவமாலை அணிந்தனை அச் சிறுவயதில் இந்த

    உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்

    ஒடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ

    495 இருளளைன மலம்அறுத் திகபரங் கண்டே

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ

    மருளளைன பற்பல மார்க்கங்கள் எல்லாம்

    வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்

    தெருளளைன சுத்தசன் மார்க்கம தொன்றே

    சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

    அருளளைனவீதியில் ஆடச்செய் தீரே

    அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

    496 இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை

    இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

    மருட்சாதி சமயங்கள் மதங்களளைச் சிரம

    வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

    தெருட்சாறும் சுத்தசன் மார்க்கநன் னீதி

    சிறந்து விளங்கஒர் சிற்சபை காட்டும்

    அருட்ஜோதி வீதியில் ஆடச்செய் தீரே

    அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே

    514 பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்

    புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்

    சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய

    தனித்தலைமைத் தந்தையரே

    518 என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங் கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம்

    மன்னே அயனும் திருமா லவனும் மதித்தற் கரிய பெரிய பொருளே

    544 மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே

    மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே

    துதிக்கும் அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே

    சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.

    559 சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றி

    தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே

    ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்

    ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே

    ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்

    ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே

    சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்

    தூயநடத் தரசேஎன் சொல்லும் அணிந் தருளே.

    579 …… பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்

    பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே

    பெற்றியுளளைர் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்

    பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.

    585 வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்

    வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே

    தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்

    திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழி ஏற் றருளே.

    588 மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய

    முடியாத முடிவெல்லாம் முன்னியஒர் தினத்தே

    ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்

    அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே

    601 மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்

    மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்

    பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்

    பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த

    விதம்ஒன்றும் தெரியாதே மயங்கிய என் தனக்கே

    வெட்டவெளி யாஅறிவித் திட்ட அருள் இறையே

    சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்

    தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும் அணிந் தருளே.

    620 கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்

    கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்

    கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்

    காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்

    பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே

    பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே

    தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்

    தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

    621 நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

    நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளை யாட்டே

    மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

    விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே

    கால்வருணங் கலையாதே வீணில் அலை யாதே

    காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே

    மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற

    வயங்குநடந் தரசேஎன் மாலைஅணிந் தருளே.

    623 இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்

    இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்

    மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்

    மகனேநீ நூல் அனைத்தும் சாலம்என அறிக

    செயல் அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே

    திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே

    அயல் அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற

    ஆடுகின்ற அரசே என் அலங்கல் அளிந்திருளே.

    624 தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்

    சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்

    ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்

    உலகறிவே தாகமத்தைப் பொய்எனக் கண் டுணர்வாய்

    ஆன்றதிரு அருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே

    ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே

    ஏன்றதிரு வழுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே

    இலங்குநடத் தரசேஎன் இசையும் அணிந் தருளே.

    625 நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்

    நவில் அருகர் புத்தர் முதல் மதத்தலைவர் எல்லாம்

    வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து

    வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே

    தேன்முகந்துண் டவர் எனவே விளையாடா நின்ற

    சிறுபிள்ளைளக் கூடடம்என அருட்பெருஞ்ஜோ தியினால்

    தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே

    சபையில்நடத் தரசேஎன் சாற்றும் அணிந் தருளே.

    633 எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்

    ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே

    மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து

    வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து

    சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்

    துலங்கு அருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்

    சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே

    சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

    638 மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள் மன்னுருத் திரர்கள் முதலா

    ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங் குறுபெருந் தொழில்பல இயற்றி

    இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்.

    அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ அவன்தனை மறுப்பவர் யாரே.

    639 தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித் தனித்தனி மறைகள் ஆ கமங்கள்

    உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா ஒருதனிப் பெரும்பதி உவந்தே

    புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள் பொறுத்தருட் பூரண வடிவாய்

    என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையைத் தடுப்பவர் யாரே.

    657 குற்றமெலாம் குணமாக் கொள்ளும்

    குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை

    எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே

    ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

    689 மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த

    மருந்தைமா மந்திரந் தன்னை

    இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட

    இறைவனைக் கண்டுகொண் டேனே.

    705 சமயமும் மதமும் கடந்ததோர் ஞான

    சபைநடம் புரிகின்ற தனியைத் …………

    717 உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள் உலப்பிலா அண்டத்தின் பகுதி

    அலகுகாண் பரிய பெரியகூட் டத்த அவைஎலாம் புறத்திறைச் சார்பில்

    விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற் றிருந்தென விருந்தன மிடைந்தே

    இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத் தென்பர்வான் திருவடி நிலையே.

    718 தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா யேச்சுரன் சதாசிவன் விந்து

    நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி நவில்பர சிவம் எனும் இவர்கள்

    இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும் இடதுகாற் கடைவிரல் நகத்தின்

    கடையுறு துகள் என் றறிந்தனன் அதன்மேற் கண்டனன் திருவடி நிலையே.

    719 அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால் அரன்மயேச் சுரன்சதா சிவன்வான் படர்தரு விந்து பிரணவப்பிரமம் பரைபரம் பரன்எனும்இவர்கள்

    சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும் துணையடிப் பாதுகைப் புறத்தே

    இடர்கெட வயங்கு துகள் என அறிந்தே ஏத்துவன் திருவடி நிலையே

    720 இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால் பிரமன்ஈ சானனே முதலாம்

    மகத்துழல் சமய வானவர் மன்றின் மலரடிப் பாதுகைப் புறத்தும்

    புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்

    செகத் தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில் தெரிந்தனன் திருவடிநிலையே.

    736 சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்

    விடுவித்தென் தன்னை ஞான

    நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க

    நிலைதனிலே நிறுத்தி னானைப்

    பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்

    பராபரனைப் பதிஅ னாதி

    ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்ஜோ

    தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

    774 தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ

    சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந் தனில்உறும் அனுபவம் என்கோ

    796 அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே

    அம்மேஎன் அபபாஎன் ஐயாஎன் அரசே

    மனந்தருவா தனைதவிர்த்தோர்

    927 மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு

    வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்

    கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே

    கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்

    பதம்பிடித் தவர் எல்லாம் அம்பலப் பாட்டே

    பாடினார் ஆடினர் பரவிநிற் கின்றார்

    இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ்ஜோதி

    என்னைய னேபள்ளி யெழுந்தருள் வாயே.

    945 நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் நெடுநாள் முயன்று வருந்திநின்று

    வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்

    பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை

    ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.

    961 தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்

    சேர்கதி பலபல செப்புகின் றாரும்

    பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்

    பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்

    மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்

    மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்

    எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

    எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.

    978 ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில் உற்றகள் பனைகளும் தவிர்ந்தேன்

    பாடல்செய்மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்ததிங்குண்டோ.

    995 மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவாக்

    கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்

    பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் பரிந்தெனை அழிவிலா நல்ல

    பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே.

    996 குலத்திலே சமயக் குழியிலே நரகக் குழியிலே குமைந்துவீண் பொழுது

    நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து நிற்கின்றார்

    978 ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில் உற்றஎன் பனைகளும் தவிர்ந்தேன்

    வாடல்செய்மனத்தால் கலங்கினேன் எனிலும் மன்றினை மறந்ததிங்குண்டோ.

    1005 சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக

    ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.

    1006 துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்

    கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.

    1014 எக்கரையும் காணாதே இருட்கடலில் கிடந்தேனை எடுத்தாட் கொண்டு

    அக்கரைசேர்த் தருùளனுமோர் சர்க்கரையும் எனக்களித்தான் அந்தோ அந்தோ

    1112 மருளளைத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்

    மருண்டனவே என்னடி என் மனவாக்கின் அளவோ….

    1154 அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை

    வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார்

    விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி

    1161 மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர் அங் கவர்பால்

    இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்

    இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.

    1272 குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே

    நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே

    1364 வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய

    மாமதியின் அழுதநிறைவே

    1387 பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

    பவநெறி இதுவரை பரவிய திதனால்

    சென்னெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

    செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

    புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

    புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்

    தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே

    தனிநட ராஜஎன் சற்குரு மணியே

    1395 சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே

    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.

    1473 சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

    சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

    ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

    அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழ கலவே

    நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான

    நிருத்தமிடும் தனித்தலைவர்ஒருத்தர் அவர் தாமே

    வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய

    மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே.

    1477 எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்

    எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று

    கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்

    கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்

    ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்

    அழியும்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்

    உய்வகை என் தனித்தந்தை வருகின்ற தருணம்

    உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.

    1501 ஆரணமும் ஆகமழும் ஆங்காங் குரைக்கின்ற

    காரணமும் காரியமும் காட்டுவித்தான் – தாரணியில்

    கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத்

    துண்டேன் அமுதம் உவந்து

    1502 துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ

    சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் – என்மார்க்கம்

    நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்

    மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.

    1503 பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே

    சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே – சொன்மார்க்கத்

    தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்

    கொல்லா நெறி அருளைக் கொண்டு.

    1504 சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப

    நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் ஓதுகின்ற

    பேயாட்ட மெல்லாம் பிதிரிந்தொழிந்த வேபிறர்தம்

    வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

    1511 சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி

    நேத்திரங்கள் போல்காட்ட நேராவே – நேத்திரங்கள்

    சிற்றம் பலவன் திருவருள்சீர் வண்ணமென்றே

    உற்றிங் கறிந்தேன் உவந்து.

    1512 வேதாக மங்கùளன்று வீண்வாதம் ஆடுகின்றீர்

    வேதாக மத்தின்விளைவறியீர் – சூதாகச்

    சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

    என்ன பயனோ இவை.

    1541 திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்

    சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

    வருநெறியில் எனையாட்கொண்ட டருளமுதம் அளித்து

    வல்லபசத் திகùளல்லாம் வழங்கியஓர் வள்ளல்

    பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

    பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

    கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

    கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.

    1544 சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்தம் எல்லாம்

    தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்

    நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்

    நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை

    அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்

    ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்

    சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்

    சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.

    1546 முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்

    முடுகி அழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே

    இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்

    எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்

    துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்

    தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்

    பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்

    படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.

    1549 குறித்துரைக்கின் றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

    கோணும்மணக் குரங்காலே நாணுகின்ற உலகீர்

    வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

    மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்

    பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்

    புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்

    செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்

    சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.

    1571 முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன

    மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது

    பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின

    என்னுளத் தருட்பெருஞ் ஜோதியார் எய்தவே.

    1582 இயங்காளிபுலிகரடி எனப் பெயர்கேட் டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில்

    சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம் தழுதழுத்துத்தளர்ந்தேன் இந்தப்

    பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள் எங்குளர்காண் பதியே என்னை

    வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப்பிள்ளை என மதித்தி டாயே.

    1591 கிழக்குவெளுத் ததுகருணை அருட்ஜோதி உதயம்

    கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே

    சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்

    சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக

    வழக்கு வெளுத் ததுபலவாம்பொய்ந்நூல்கற் றவர்தம்

    மனம்வெளுத் ததுசிவமே பொருள் எனும் சன் மார்க்க

    முழுநெறியில் பரநாத முரசு முழங் கியதே.

    1626 சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற

    தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக்

    காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்துள் கடுகடுத்தே

    நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே.

    1705 கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே

    பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார்

    விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற

    தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே.

    1734 சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது

    தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்

    என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்

    எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்

    புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே

    புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்

    தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே

    தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே

    1735 ஆதியும்நடுவும் அந்தமும் இல்லா

    அருட்பெருஞ் ஜோதிஎன் உளத்தே

    நீதியில் கலந்து நிறைந்தது நானும்

    நித்தியன் ஆயினேன் உலகீர்

    சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே

    சத்தியச் சுத்தசன் மார்க்க

    வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை

    விளம்பினேன் வம்மினோ விரைந்தே.

    1802 சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே

    சாற்றப் புகினும் சாலா அருளின் பெருமை உன்ன வே

    அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே

    அனந்தத்தொன்றென் றுரைத்துஞ்சாலாநின்பொன் னடியிலே.

    எனக்கும் உனக்கும்

    1824 வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே

    வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே

    நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்ட தே

    நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே.

    எனக்கும் உனக்கும்

    1919 எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர்

    இச்சம யம்இங்கு வாரீர்

    மெய்ச்சம யந்தந்தீர் வாரீர்.

    1984 சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்

    சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ

    விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா

    வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்

    பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்

    பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்

    அதுஇது என்னாமல் ஆடேடி பந்து

    அருட்பெருஞ் ஜோதிகண் டாடேடி பந்து.

    2076 தருநெறி எல்லாம்உள் வாங்கும் – சுத்த

    சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்

    திருநெறிக் கேசென்று பாரீர் – திருச்

    சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

    2077 எம்பொருள் எம்பொருள் என்றே – சொல்லும்

    எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே

    செம்பொருள் என்பது பாரீர் – திருச்

    சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

    2078 சைவ முதலாக நாட்டும் – பல

    சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்

    தெய்வம் இதுவந்து பாரீர் – திருச்

    சிற்றம் பலத்தே திருநட ஜோதி

    2113 மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது

    வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது

    கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது

    கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது.

    2114 குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று

    குதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று

    வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது

    விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்ததுஇதுநல்ல

    2141 எச்சம யத்தும் இலங்கிய பாதம்

    எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்

    அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்

    ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம்.

    2177 சாதி சமயச் சழக்கெலாம் அற்றது

    சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது

    2213 சாதி சமயச் சழங்கைவிட் டேன்அருட்

    ஜோதியைக் கண்டேன டி – அக்கச்சி

    ஜோதியைக் கண்டேனடி.

    2294 சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்

    சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்

    அருட்பெருஞ்ஜோதி அகவல்

    வரிகள் அகவல்

    1-2 அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

    அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

    5-6 ஆகம முடிமேல் ஆரண முடிமேல்

    ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

    21-22 ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை

    யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி

    29-30 சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்

    அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

    51-52 சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்

    ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி

    61-62 சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்

    அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி

    115-116 சாதியு மதமுஞ் சமயமுங் காணா

    ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி

    211-212 சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென

    ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி

    293-294 சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த

    அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி

    1317-1318 தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா

    வாழ்வெனக் களித்த வளரொளி மணியே

    1327-1328 மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

    கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே

    1543-1544 வேதமு மாகம விரிவும் பரம்பர

    நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே

    1553-1556 சமரச சத்தியச் சபையி னடம்புரி

    சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே

    சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே

    அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி

    1567-1568 சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்

    சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்

    இங்ஙனமாக வள்ளற் பெருமான் தெரிவித்தப்பிற்கு, கட்டளையிட்டப்பிறகு அவர்தம் நெறியை அனுஷ்டிக்கிறவர்கள் சமய, மத, மார்க்கங்கள் மீது பற்று உடையவர்களளைக இருத்தல் கூடாது.

    அன்பர்கள், வள்ளற்பொருமான் ஏன் சமய, மத, மார்க்கங்கள் எக்காலத்தும் முக்கியதடைகளளைக அறிவித்தார்கள்? வள்ளலார் “கடவுளின் உண்மை” எவ்வறாக கண்டார்கள்? திருஅருட்பா உரைநடைப் பகுதி பக்கம் 556-ல்:- “சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்:- “இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கை இன்பினரென்றும், நிர்க்குணரென்றும், சிற்குணரென்றும் நித்தியரென்றும், சத்தியரென்றும், ஏகரென்றும், அநேகரென்றும், ஆதியரென்றும், அனாதியரென்றும், அமலரென்றும் அருட்பெருஞ்ஜோதிரென்றும் அற்புத ரென்றும், நிரதிசயரென்றும், “எல்லாமானவரென்றும் எல்லாமுடையவரென்றும் எல்லாம் வல்லவரென்றும்” குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளளைற் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும், உணர்ந்தும், புணர்ந்தும் அனுபவிக்க விளங்குகின்ற தனித்தலைமைப் பெரும் பதியாகிய “பெருங்கருணைக் கடவுள்.”

    மேலே “அருட்பெருஞ்ஜோதி“ உட்பட 18 திருக்குறிப்புத் திருவார்த்தைகளளைல் குறிப்பிட்டு சுத்த சன்மார்க்கத்தில் காணும் கடவுள் “பெருங்கருணை”. இந்த சத்தியக் கடவுள் பற்றி தனது அறிவிப்பு 12.4.1871ல் (பக்கம் 547) குறிப்பிடுகையில்:- “இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத்தேவர்களும், எல்லாக்கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பாக்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி.” என்கிறார்கள். வள்ளற்பெருமான் சத்திய அறிவால் அறியப்படட உண்மைக் கடவுள் “ஒருவரே”. ஆதாரம்:- சபை விளம்பரம் நாள் 25.11.1872:- “ஆண்டவர் ஒருவர் உள்ளளைர் என்றும், அவர் பொதுப்பட உலகத்திலுள்ளளைர் யாவரும் சுத்த சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற்பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றார்”.

    அந்த, “ஒருவராகிய” உண்மைக் கடவுள்.

    எல்லா அண்டங்களையும்,

    எல்லா உலகங்களையும்,

    எல்லா உயிர்களையும்,

    எல்லா பொருள்களையும்,

    மற்றை எல்லாவற்றையும்

    தோற்றுவித்து, விளக்கம் செய்வித்து, துரிசு நீக்குவித்து பக்குவம் வருவித்து, பலன் தருவித்து விளங்குகிறார். ஆக, மேற்படி எல்லா அண்டங்கள், உலகங்கள், உயிர்கள், பொருள்கள் மற்றை அனைத்தும் இல்லா நிலையில், தோற்றுவிப்பதற்கு முன் இருந்த, இருக்கின்ற, இருக்கக் கூடிய, மெய்ப் பொருளே “கடவுள்” ஆகும். சத்திய அறிவால் அறியப்படுகின்ற இக்கடவுள் (ஒருவரே) அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்து, சுத்த மெய்யறிவென்னும் பூரணப்பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.”

    வள்ளலார் பேருபதேசத்தில் மேலும் குறிப்பிடுகையில்; தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில் கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். தெய்வத்துக்குக் கை, கால் முதலியன இருக்குமா? என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கùளன்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால் ஆதியிலே கடவுளின் உண்மையை மறைத்தவன் ஒர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை அவைகளில் ஏகதேச கர்மசித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்திகள் அடையலாம். அதற்காக அவற்றில் லட்சியம் வைத்தால், ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கின்ற லட்சியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லட்சியம் போய் விட்டால் நீங்கள் அடையப்போகின்ற பெரிய பிரயோஜனம்போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து அவ்வளவு காலம் உழைத்து அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும் ஆகையால், அவைகளில் லட்சியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது.

    இதுபோல், சைவம், வைணவம், முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குமூஉக் குறியாகக் குறித்திருக்கின்றதே அன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது. ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானு பவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கு எல்லாம் சாஷி நானேயிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவு வென்று அளவு சொல்லமுடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும். அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களளை அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாஷிவேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற திருவருட்பாலில் அடங்கியிருக்கிற ஸ்தோததிரங்களே போதும்.அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்த தென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

    இப்போது ஆண்டவர் என்னை ஏறாதநிலைமேல் ஏற்றயிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களளை? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலே, அந்த லட்சியம் தூக்கி விடவில்லை.

    என்னை யேறாநிலைமிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

    அந்தத் தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப் போல் ஒருமையுடனிருங்கள்” என்கிறார் வள்ளற்பெருமான்.

    ஆக, கடவுளின் உண்மையை குழித்தோண்டி புதைத்துவிட்டு- சூதுவினால் தோன்றியதே வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கற்பனைகள். அவை உண்மை உரைக்காது தெய்வத்தை புறங்கவிய கூறவில்லை. அவை தத்துவ சித்திவிகற்பங்களளைகிய சமயங்களின் தோற்றங்கள் என்கிறார் வள்ளலார்..

    வேதம், ஆகமம் புராணம் இதிகாசம் இவையில் இருப்பவைகள்

    சமய, மதங்களில் (சைவம், வைணவம், வேதாந்தம் சிந்தாந்தம்) இருப்பவைகள்

    சுத்த சன்மார்க்கத்தில் இருப்பது.

    வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் இவையில் இருப்பவைகள்

    சமய, மதங்களில் (சைவம், வைணவம், வேதாந்தம் சிந்தாந்தம்) இருப்பவைகள்

    சுத்த சன்மார்க்கத்தில்

    இருப்பது.

    தெய்வம் இன்னபடி என்றும் தெய்வத்தின் உண்மை இன்னதென்றும் கூறவில்லை

    இவைகளில் புறங்கவிய தெய்வத்தைப்பற்றிகூறாது குழு உக்குறியாக குறிப்பித்தல்

    பெருங்கருணை கடவுளளைக கண்டது

    அவைக்கு கைலாசபதி, வைகுண்டபதி சத்தியலோகாதிபதி என்று பெயர்கள் இட்டனர்.

    அற்பபிரயோஜனம் பெறக்கூடுமேயன்றி

    தயவு என்னும் “கருணையே”

    தெய்வத்திற்கு இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் அமைத்திருத்தல்

    ஒப்பற்ற வாழ்வு கிட்டாது

    இறையருள் பெறுவதற்கு சாதனம் “கருணையே”

    கை, கால், முதலியன இருக்கும் தெய்வங்களுக்குரிய அமைத்து காட்டப்படுதல்.

    அற்பசித்திகளை பெறக்கூடியதாக மட்டுமே உள்ளது.

    கருணை வருவதற்கு ஒருமை வேண்டும் ஒருமைக்கு ஒழுக்கம்.

    அருட்பெருவெளியில் எங்கும் பூரணராகி அகத்தும் புறத்தும் நீக்கமற நிறைந்திருக்கும் பெருஞ்ஜோதியாகிய கடவுள் “பெருங்கருணை”. அருள் அனுவில் அருளால் தோன்றுவித்த தோன்றிய உயிர்களிடத்தில் தெய்வஅம்சமாகிய கருணையும் இருக்கும். ஒழுக்கம், அறிவினால் இடைவிடாது நன்முயற்ச்சியில் கருணை சுத்தமாதி மூன்று தேகங்கள் பெறலாம் (ஆதாரம் பக் 394).

    இந்நிலையில், ஒருவராகிய பெருங்கருணைக் கடவுள் ஒன்றாகவும் இரண்டாகவும் காண்பது எந்நிலையில் சரியாகும்.? எங்கும் நீக்கமற நிறைத்திருக்கும் இத்திருவருள் ஒரு குறிப்பிட்ட பெயரிட்டு இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் அமைக்கின்ற சமய, மத, மார்க்கங்கள் பொய் என்றுதானே கூறவேண்டும்.

    மேலும், தன் சமய, மத, மார்க்கங்கள் அனுஷ்ட்டிக்காதவர்கள் /எதிரானவர்கள் கொல்லச் சொல்வதும், பிறர் உயிர்களை தன்னுயிராக பாவிக்கச் சொல்லாத மார்க்கங்களையும் பொய் என்றுதானே கூறமுடியும். மேலும் வள்ளற் பெருமான் கூறுகையில் அவைகளில் ஏகதேச கர்மசித்திகளைக் கற்பனைகளைச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருஷம், எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்தகளை அடையலாம் அதற்காக அவற்றில் லட்சியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் லட்சியம் போய்விடும் என்கிறார்…. ஆகையால், அவைகளில் லட்சியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது என்கிறார் வள்ளலார்.

    முடிவுரை:

    அன்பர்களே,

    சுத்தசன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கியத் தடைகளளைவன உலகில் காணும் சமய, மத மார்க்கங்கள் என்று வள்ள பெருமான் குறிப்பிட்டாலும், சத்திய ஞான சபை விளம்பரம் 25.11.1872-ல்

    “எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப்பொது நெறியாகி விளங்குவது சுத்த சன்மார்க்கம் ஆகும்” என்கிறார் பெருமான்.

    ஆம்,

    வள்ளற்பெருமான் கடவுளின் அருளை பெறுவதற்கான சத்தியவழியை (சுத்தசன்மார்க்கத்தை) கண்டார்கள் அந்த சுத்த சன்மார்க்கத்தில் திருவருள் நிலையறிவது எப்படி எனில் என வள்ளலர் கூறுகையில் (பக்கம் 438ல்)

    “ஒழுக்கம் நிரம்பி, கருணையே வடிவாக நிற்கும் ‘விசார சங்கல்பம்’ உண்டானால், நாம் தாழுங்குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சக்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும்.”

    “ஒழுக்கம் நிரம்பி சங்கல்பம் உண்டானால் தான் கடவுளின் உண்மை வெளிப்படும்” என்கிறார்கள். கடவுளின் அருளை பெறுவதற்கு கருணையே சாதனம் என்கிறார். அக்கருணைக்கு ஒருமை வேண்டும். ஒருமை என்பது “தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்; மற்ற இடத்தில், தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது.”

    ஒழுக்கம் நிரப்பிக் கொள்ளுதலே பெருநெறியாக, சத்திய வழியாக வள்ளலாரால் கண்டறியப்பட்டது. இது “உண்மை பொதுநெறி” என்று அனைவராலும் ஒப்புக் கொள்ளக் கூடியதே.

    சமரச சுத்தசன்மார்க்க சத்திய சங்கத்தில் “ஒழுக்கம் பயிலுதலே” உள்ளது. சுத்த சன்மார்க்கி என்பவர் ஒழுக்கம் நிரம்பியவர் மற்றும் சத்திய அறிவு பெற்றவர் ஆவார். அதற்கு இடைவிடாது கருணை நன்முயற்சி பழகல் வேண்டும் என்கிறார் வள்ளலார். அதன் விபரம் கடவுள் நிலையும், ஒழுக்கமும் என்ற பாகம்-2ல் காணுங்கள்.

    அன்பர்களே!

    கால்பாதங்கள் தொட்டு வணங்கி வேண்டுவது “வள்ளலாரின் தனிநெறியை” மறுப்பதற்கோ, சாராமல் இருப்பதற்கோ உரிமையுண்டு. ஆனால் அத்தனிநெறியை திரித்து கூறுவது மிகப்பெரிய பாவம் மற்றும் சட்டப்படி குற்றமும் ஆகும். சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற்ற ஞானி “வள்ளலார்”. உலகில் எல்லா அறிஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவ மேதைகள், அவரவர்களின் முடிவான இறுதியாக சொல்லிய கருத்துக்கள், அறிவிப்புகள், போதனைகள் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கும் போது வள்ளலாரின் முடிவான நெறியை, இறுதியாகச் சொல்லிய உண்மையை உள்ளபடியே வெளிப்படுத்தாமலும் அல்லது மறைத்து திரித்துக் கூறுவது அறியாமையிலா? அல்லது அறிந்தும் செய்யும் சூதுவினாலா? இதற்கு பதில் உங்களின் ஒழுக்கத்திற்கும் அறிவிற்கும் விட்டுவிடுகிறேன்

     

  • யார் சொல்றதுதான் இங்கு உண்மை?? (யானை கதை)– ஏபிஜெ. அருள்.

    elephant-1 elephant

    ஓர் வேண்டுகோள்:
    எனது பணி, கருணை சபையின் பணி, என் குடும்பம், என்னை சுற்றியுள்ள அன்பர்களின் குடும்பங்கள் அனைத்துமே, அனைவரிடத்திலுமே ஒரே குறிக்கோள் தான். அது யாதெனில்; வள்ளலாரின் நெறியானது எந்த ஒரு சமய,மத,மார்க்கத்தின் கீழும் இருப்பது அல்ல அவர்தம் நெறி ஒரு தனி நெறி, அவர் தம் மார்க்கத்தின் சாதனம் புதியது, அவர்தம் மார்க்க பயன் புதியது அது மட்டுமில்லைமிகப்பெரியது என்பதை தான் இந்த உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோளே அன்றி வேறு ஒன்றுமில்லை. வள்ளலார் கண்டது உண்மை கடவுள், பொது வழி, பெரிய பயன் என்றுச் சொல்ல வேண்டுமானால் அது எந்தொரு சமய,மத,மார்க்கத்தின் கடவுளையோ, அதன் ஆச்சாரங்களையோ, அவை தரும் பலன் போலவோ இருக்க முடியாது. கூடாது.

    அப்படித்தானே!!!

    ஆம் என்றால், —-, —–, எப்படி நம் கடவுளாக கருதமுடியும்?
    ஆம் என்றால், —-, —-, யை எப்படி நாம் அணிந்துக் கொள்ள முடியும்?
    ( –, —, யை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். எதுக்கு பிறர் வம்பு..comments..)
    ஆம் என்றால், சொர்க்கம், நரகம் குறித்து நமக்கு ஏது விசாரணை?

    பல முறை சொல்லியாச்சு. எவரையும் தாழ்வாக பார்க்கவில்லை. பார்க்கவும் முடியாது. பிறர் குற்றம் விசாரியாதிருத்தல் வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளை. வள்ளலாரின் நெறியே சிறந்தது. உயர்ந்தது என்று கூட சொல்ல முயற்சிக்கவில்லை. காரணம், அனுபவம் நான் ( நாங்கள்) பெறவில்லை என்பதே.
    ஆனால் அதே நேரத்தில்……
    வள்ளலாரின் முடிபான நெறியை மறைத்து, அவரால் கைவிடப்பட்ட சமய நெறியிலேயும், அச்சமய அடையாளத்துடனும் அவரைக் காட்டுவது மிக மிக தவறே ஆகும். இதை சுட்டிக்காட்ட பெரிய அறிவு தேவைப்படவில்லை.இந்த அடிப்படையிலேயே எங்களின் பணி கடந்த 11 வருடங்களாக நடைப்பெற்று வருகிறது. நெருங்கிய அன்பர்கள் சிலருக்கே என்ன என்ன பணிகளை மேற்க்கொண்டுள்ளோம், எத்தனையில் சிறப்பான ஆணைகள் பெற்றுள்ளோம் என்பதை அறிவர். இந்த விசயத்தை எங்களை உயர்த்திக்கொள்ள சொல்லவில்லை எங்கள் பணியில் சுய நலம், அறியாமை,பொய், குரோதம் இல்லை என்பதற்கே. இந்த விளக்கம் கூட இங்கு தரப்பட்டதற்க்கு காரணமே எங்களை பல்லாயிரம் பேர்கள் பாராட்டி வந்தாலும், சிலர் அதுவும் 4,5 பேர்கள் புரியாமல் இருப்பதை கருத்தில் ஆன்ம நேயத்துடன் எடுத்துக் கொண்டு, அவர்களையும் நம்மவர்களாக ஆக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையே என்னிடத்தில் உண்மையாக உள்ளது. அவர்களும் எங்களின் அன்புக்குரியவரகளாக ஆகும் நாள் வெகு தூரமில்லை. வள்ளலார் எனக்கு துணை புரிவார்கள். உண்மை ஆண்டவரும் அருள் புரிவார். எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே. நன்றி.– ஏபிஜெ. அருள்.)

    ஆம். நல்ல விசாரணைக்கு வருவோம்.

    யார் சொல்றது தான் இங்கு உண்மை? (யானை கதை)

    ஆண்டவர் நம்மை பல பிறவிகள் எடுக்க வைத்து உயர் அறிவை பெறுதற்குறிய இந்த மனித தேகத்தில் செலுத்தியுள்ளார்கள்.
    நிற்க! இந்த மனித தேகத்தில் நமக்கு சிறிதறிவு மட்டுமே தோற்றி விடுத்துள்ளார் ஆண்டவர் என்பதை நாம் தெரித்துக்கொள்ள வேண்டும். இந்த சிறிதறிவை தான் நல்ல விசாரணையில், இந்த பிறவிலேயே சத்திய அறிவாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த மனித தேகத்திலேயே பல லட்ச பிறவிகள் எடுத்த பின்பே சத்திய அறிவை பெற முடியுமென்பதே இயற்கை. நம் ஆன்மிக சான்றோர்கள் கூறும் உண்மை. இந்த பிறவிலேயே (எந்த தாழ்ந்த தரத்தில் இருந்தாலும்) சத்திய அறிவை பெறக்கூடிய வழியை கண்டுபிடித்தவரே நம் வள்ளலார். அந்த வழியின் பெயரே “சுத்த சன்மார்க்கம்” ஆகும். இந்த வழி போல் எந்த மார்க்கத்திலும் இல்லை.
    சரி ஒரு யானை கதைக்கு வருவோம். ( ஒரு பெரிய மகான் சொன்னது தான். நம் வள்ளலாரும் ஒரு பாட்டில் சொல்லியுள்ளார்கள்.).
    நான்கு குருடர்கள் ஒரு யானையை பிடித்திருந்தனர். அவர்கள் பிடித்திருந்த பகுதியை வைத்து பேசிக் கொள்கிறார்கள். காலை பிடித்திருந்த ஒருவன் “யானை தூண் போல் உள்ளது” என்றான். யானையின் காதை பிடித்திருந்த 2ம் நபர்; “ இல்லை இல்லை யானை சோலகு போல் உள்ளது” என்றான். வாலை பிடித்திருந்த 3ம் நபர்; “ இல்லை. யானை குச்சி போலுள்ளது” என்றான். துதிக்கையை பிடித்திருந்த 4 ம் நபர்; “இல்லவே இல்லை யானை உலக்கை போலுள்ளது” என்றான். இவர்கள் இடத்திற்கு வந்து இவர்கள் பேசியதை கேட்ட கண் பார்வை உடைய 5ம் நபர் அவர்களிடம்; நீங்கள் அனைவரும் சொல்லியது முழு உண்மையல்ல என்று கூறி யானையின் ”முழு வடிவத்தையும்” அதன் உண்மை நிலையையும் அவர்களுக்கு விளக்கினார்.
    அன்பர்களே!
    அந்த 4 பேர்கள் சொல்வதில் பொய் இல்லை. அதே நேரத்தில் 4 பேர்களும் முழு உண்மை உரைக்கவில்லை. காலை பிடித்தவர் யானை தூண் போல் உள்ளது என்பதில், அவர் என்ன பொய் சொல்லிவிட்டார்?. அவர் பிடித்தளவில், அவர்க்கு இருந்த அறிவில் அறிந்தளவில், நண்பர்களுக்கு நல்ல
    எண்ணத்தில் தானே வியம்பினார்? ஆனால் அவர் முழு உண்மையவா உரைத்தார்? அவரை குறைச் சொல்ல முடியாது. அதே நேரத்தில் அவர் கூற்றை சத்திய அறிவில் ஒத்துக் கொள்ள முடியாது.
    இது போல் தான் சமயங்களை, மார்க்கங்களை உருவாக்கிய நம் சான்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்கள் அவர்களுக்கு தெரிந்த வண்ணம்,அறிந்த வண்ணம் நமக்கு நல்லெண்ணத்தில் தான் தெரியப்படுத்தினார்கள். ஆனால் இன்று சுத்த சன்மார்க்க வழியில் உண்மைக் கடவுளின் நிலையானது, ”எங்கும் பரிபூரணராக ஒளி வடிவில்” உள்ளது என்று தெரிய வந்தப் பிறகு,எங்ஙனம் கடவுளை பல வடிவத்தில் காட்டப்பட்டுள்ளதில் நாம் லட்சியம் வைக்க முடியும்?
    அன்பர்களே!
    யானையிடத்தில் அவன் கண்ட கால் உள்ளது. ஆனால் கால் யானையாகாது
    யானையே முழு உண்மை. அதன் கால் அதன் அம்சம்.
    இந்த நோக்கிலே தான் வள்ளலார் சொல்லிய உண்மையை தெரிதல் வேண்டும். அவர் பாடிய பாடல்களையும் ஊற்று நோக்க வேண்டும்.
    என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
    என் மார்க்கத்தில் உண்மையறிதலே, என்கிறார் வள்ளலார்.
    (ஆதாரம்:
    வள்ளலார் அவர் கைப்பட எழுதி வெளியிட்ட அறிவிப்பு நாள் 21-04-1871.)

    ஆறாம் திருமுறை –

    அனுபவ மாலை –

    எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
    இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
    கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
    கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
    நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
    ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
    செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
    சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.


    நன்றி.– ஏபிஜெ. அருள்.  

  • நாம் மனிதர்களா? — உங்கள் ஏபிஜெ அருள்.

    areyouahuman

    என்ன கேள்வி இது? என்கிறீர்களா அன்பர்களே!
    ஆம் வள்ளலாரின் சத்திய வாக்கியத்தினை வாசிக்கும் போது இப்படி தான் கேள்விக் கேட்டு நல்ல விசாரணை செய்ய தோணுகிறது.
    (வள்ளலாரின் சத்தியவாக்கியத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டுரை.
    உள்ளது உள்ளபடி)
    வள்ளலார் தனது முதல் விண்ணப்பத்தில் பக்கம் 556 ல்;

    நாம் அஞ்ஞான இருளில் ஒன்றும் தெரியாது உணர்ச்சி இன்றிக் கிடந்த காலம் போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே, இவ்வுலகினிடத்து…
    1) தாவர யோனி வர்க்கங்கள்
    2) ஊர்வன நீர் வாழ்வன யோனி வர்க்கங்கள்
    3) பறவை யோனி வர்க்கங்கள்
    4) விலங்கு யோனி வர்க்கங்கள்
    அடுத்து ….????
    என்ன பிறவி என்று நாம் நினைப்போம்.?
    மனிதப் பிறவி என்று தானே?
    அன்பர்களே அது தான் இல்லை.
    விலங்கு வர்க்கங்களுக்கு பின்பு,
    இரு பிறவி யோனி வர்க்கங்களில் பிறந்து பிறந்து இறந்து இறந்து பின்பே ஏழாவது பிறவியிலேயே மனித தேகம் வரும்..

    அந்த இரு யோனி வர்க்கங்கள் எதுவெனில்:
    —- (5) தேவ யோனி வர்க்கங்கள்
    அதன் பின்பு
    —- (6) நரக யோனி வர்க்கங்கள்
    இவர்கள் யார்?
    தேவ யோனி வர்க்கங்கள் என்பவர்கள் யார் எனில்:
    இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

    “பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர். சுரர் முதலியராகப்
    பிறந்து பிறந்து
    அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல்,
    அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைப்படுதல்
    முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து
    அத்தேவயோனி வர்க்கங்களெல்லாஞ்
    சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்;

    நரக யோனி வர்க்கங்கள் என்பவர்கள் யார் எனில்:
    இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

    ” காட்டகத்தார், கரவு செய்வார், கொலை செய்வார்
    முதலியராகப் பிறந்து பிறந்து
    பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்;”

    ஆக,
    எவர் ஒருவர் அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைப்படுதல்
    முதலிய அவத்தைகளில் உள்ளோமோ அவர்கள் தேவர்கள்.

    எவர் ஒருவர், பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளில் உள்ளோமோ அவர்கள் நரகர்கள்.

    இப்ப சொல்லுங்கள் நாம் மனிதர்களா?

    மனித தேகமே அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயர் அறிவுடையது என்கிறார் நம் வள்ளலார்.
    அன்பர்களே!
    அச்சம் கொள்ளத் தேவையில்லை. நம் வள்ளலார் இருக்க கவலை எதற்கு?
    இதோ நம் வள்ளலார் பாடலை இங்கு காண்போம்.

    ”வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு
    வழக்கம் வள்ளல்நீ மகிழ்ந்தருட் சோதி
    தருமுன் தந்தனை என்றிருக் கின்றேன்
    தந்தை நீதரல் சத்தியம் என்றே
    குருமுன் பொய்யுரை கூறலேன் இனிஇக்
    குவலை யத்திடைக் கவலையைத் தரியேன்
    திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணை
    செய்க வாழ்கநின் திருவருட் புகழே.”

    அன்பர்களே,
    நாம் இன்று,
    அலைப்படவில்லை,அகப்படவில்லை,அகங்கரிக்கவில்லை,
    அதிகரிக்கவில்லை,மறந்து, நினைந்து நிற்கவில்லை, மயக்குறவில்லை,போரிடவில்லை,கொலைப்படவில்லை.
    எனவே நாம் தேவ யோனி வர்க்கங்களை கடந்து விட்டோம்.

    நாம் இன்று
    பயப்படவில்லை, சிறைப்படவில்லை, சிதைப்படவில்லை அதணால் நாம் நரக யோனி வர்க்கங்களை கடந்து விட்டோம்.

    இன்று எல்லா வல்ல ஆண்டவரின் திருவுளத்தடைத்து இரங்கியருளி அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயரறிவுடைய இம் மனித தேகத்தை பெற்று உள்ளோம்.
    அன்பர்களே! வள்ளலார் அவர்கள் மற்றொரு இடத்தில் சொல்லியதை இங்கு நினைவு கூர்வோம்: (பக்கம்:377) அதாவது; “அறிவினது உயர்ச்சியினாலும் தாழ்ச்சியினாலும் தேவரென்றும் மனிதரென்றும் சொல்லப்பட்டதே தவிர வேறே யெந்தக் காரணத்தினாலும் அல்ல.”
    ஆம், சுத்த சன்மார்க்க ஒழுக்கம் உடையவர்கள். பக்கம் 410 ல் வள்ளலார் குறிப்பிட்டது போல் இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாக கொள்ளவில்லை. எல்லா பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டு தலைவனையே தொழுபவர்கள். எனவே நாம் மனித தேகம் எடுத்துள்ளோம் என்றுச் சொல்லுவோம். வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி மட்டுமே தழுவுகிறோம்.

    இடைவிடாது நன்முயற்சி செய்வோம். வள்ளலாரின் கட்டளைப்படி
    உலகில் காணும் சமய,மத,மார்க்கங்களில் பற்று வைக்காமல் இருப்போம். அதன் ஆச்சாரங்களில் மனம் பற்றாமல் இருப்போம். முக்கியமாக நம் அறிவு, ஒழுக்கம் ஒத்தவர்களுடன் மட்டுமே நல்ல விசாரணைச் செய்வோம்.

    காலமில்லை இன்றே காரியத்தில் இறங்குவோம்.
    வெற்றி நமதே. வள்ளலார் இருக்க அச்சமில்லை.
    ”நாம் மனிதர்களே.”
    நன்றி
    அன்புடன் உங்கள் ஏபிஜெ அருள்.

  • ”விசாரம்” என்கின்றதற்கு பொருள் – வள்ளலார். ( ஏபிஜெ அருள்.)

    nallavisaranai

    (22-10-1873 ல் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் ஆற்றிய உபதேசத்தின் அடிப்படையில்)
    விசாரம் என்கின்றதற்கு வள்ளலார் என்ன பொருள் சொல்லியுள்ளார்கள் என்பதை தெரிந்துக் கொள்வதற்கு முன்பு விசாரம் எதற்கு வேண்டும் எனக் காண்போம்.
    நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற திரைகள் அனந்தம் (பல). மேற்படி திரைகளில், அழுத்தமாயிருக்கின்ற முதல் திரை ‘பச்சைத்திரை” ஆகும். நாம் முதலில் இந்த பச்சை திரையை நீங்கிக் கொள்ள வேண்டும்.அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப்போய்விடும் என்கிறார் வள்ளலார்.. மேற்படி பச்சைத் திரையை நீங்கிக் கொள்ள நாம் செய்ய வேண்டியது ‘”விசாரம்”.
    விசாரம் என்கின்றதற்கு என்ன பொருள்?
    வி-சாரம் என்பதில் வி-சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது. அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது.
    விசாரம் செய்யும் போது அதியுஸ்ணம் உண்டாகும். அந்த உஸ்ணத்தால் தான் திரையை நம்மால் நீக்கிக்கொள்ள முடியும்.
    முன்பு காலங்களில் மேற்படி உஸ்ணம் ஏற்படுத்திக் கொள்ளக்கூடியவர்களாக இருந்தவர்கள் யோகிகள் மட்டுமே. யோகிகள் இதற்காக வனம்,மலை,முழை முதலியவற்றிற்குப் போய், நூறு, ஆயிரம் முதலிய வருசகாலம் தவம் செய்து உண்டு பண்ணிக் கொண்டார்கள்.
    மனுச தரத்தில் இவ்விசாரம் இல்லை. அதாவது நாம் செய்யக்கூடியதான வழியில் இல்லை.
    இதோ நம் தரத்தில் செய்யக்கூடிய (சுத்தசன்மார்க்க) வழியை கண்டு நமக்கு வெளிப்படுத்துகிறார் நம் வள்ளலார்.
    அ::து யாதெனில்:
    ”விசாரமே”.
    யோகியுனுடைய விசாரத்தை விட ஆண்டவரை தோத்திரம் செய்கின்றதிலும், தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஸ்ணம் உண்டாகும்.
    எவ்வாறு எனில்:
    ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்து கொண்டாவது அல்லது தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.
    மேற்படி விசாரத்தில் இடைவிடாது இருக்க வேண்டியது.
    இதில் நன்முயற்சியின் கண் பயிலுதல் வேண்டும்.
    நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது?
    நமக்கு மேல் நம்மை அதிஸ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது?
    என்று விசாரிக்க வேண்டியது என்கிறார் நம் வள்ளலார்.
    நிற்க!
    இந்த விசாரம் செய்யும் முன்பு உலகில் காணும் சமயங்களிலும்,மதங்களிலும்,இதிகாச,புராணங்களிலும் லட்சியம் கூடாது என்கிறார் வள்ளலார். மேலும், சாதி,சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களில் நாம் பற்றாமல், அவையை விட்டு ஒழித்து, சத்திய ஞான ஆசாரமாகிய பொது நோக்கத்தை வருவித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்.
    இதோ இவ்வழியில, வள்ளலார் கண்ட சுத்தசன்மார்க்க வழியில், இன்றே “விசாரம்’ செய்வோம்.

    நன்றி அன்புடன் உங்கள்: ஏபிஜெ அருள்.

  • ’இயற்கை’ என்றால் என்ன?– வள்ளலார்.(உள்ளது உள்ளபடி) – ஏபிஜெ அருள்

    வள்ளலார் மார்க்கத்தில் இயற்கை என்பதற்கு பொருள் என்ன எனப்பார்க்கும் போது, ” இயற்கை” ஒரு முக்கிய முதன்மை உண்மைப் பொருளாக உள்ளது.
    ஆம் அன்பர்களே,

    இயற்கையே இறைவன்.
    இயற்கையே சுத்த சன்மார்க்கம்.
    இயற்கையே மரணமில்லா பெருவாழ்வு.

    ஆக,
    ஏதோ ஒரு கற்பனையாக வள்ளலார் சாகா கல்வியை போதிக்கிறார் எனக் கருத வேண்டாம். சாகாமல் இருப்பது இயற்கையானதே. அதுவே உண்மை. அதுவே மனித லட்சியம் என அறிதல் வேண்டும். இந்த ”இயற்கை உண்மையை” தான் நம் வள்ளலார் சாதி,சமயம்.மதம் கடந்து செய்த நல்ல விசாரணையில் தெரிந்துக் கொண்டார்கள். அவரின் சத்திய அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும். நன்முயற்சிக்கும் இறைவனால் போதிக்கப்பட்டதே சுத்த சன்மார்க்க மரபுகளும், சாகா கல்வியும் ஆகும். இதை இறையருளால் அறிந்து, அனுபவித்தார் நம் வள்ளலார். வள்ளலாரிடமிருந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையால் இவ்வுண்மை நமக்கும் தெரியப்படுத்தப் பட்டுள்ளது. தெரியப்படுத்தப் பட்டுள்ளதை நாமும் வள்ளலார் போல் ஒழுக்கம் நிரப்பி கருணை ஒன்றையே சாதனமாகக் கொண்டு இடைவிடாது நல்ல விசாரணை செய்தால் அன்றி நமக்கு கைக்கூடாது. இதை சத்தியமாக நம்புதல் வேண்டும்.
    சாகா கல்வி ”இயற்கை குருவால்” போதிக்கப்படுவாதாக உள்ளதே அன்றி நமக்கு வேறு ஒருவராலோ அல்லது எந்த ஒரு நூல் வாயிலாகவோ கற்பதாக இல்லை. உண்மை அறிய முதலில் நாம் ஒழுக்கம் நிரப்பிக் கொள்ள வேண்டும். ஒழுக்கம் என்பது சுத்த சன்மார்க்க ஒழுக்கத்தை குறிக்கும்.
    ”இயற்கை” யை வள்ளலார் விவரிக்கும் போது:
    இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பம், இயற்கை அறிவு என்கிறார்.
    இங்கு, இயற்கை உண்மை என்றால் “ சத்திய திருவுருவம்”
    இயற்கை விளக்கம் என்றால் “சத்திய ஞானசபை’’
    இயற்கை இன்பம் என்றால் ‘” சத்திய திரு நடம்”
    ஆக, மொத்ததில் இயற்கையே, தனிப் பெருங்கருணைத் தனிப் பெரும்பதியாய தனித் தலைமைக் கடவுள்! என்கிறார் வள்ளலார்.
    மேலும் பார்க்கையில்;
    இயற்கை உண்மை நிறைவாகியுள்ளதே ’’சுத்த சிவானுபவ வெளி”
    இயற்கை விளக்கம் நிறைவாகி விளங்குவது “அருட்பெருஞ்ஜோதி சொரூபம்”
    ஆக,
    இயற்கையே (உண்மையாகவும், விளக்கமாகவும்) எங்கும் பூரணராகி விளங்குகின்றது.
    இயற்கை நம் உண்மை ஆண்டவர்.
    இயற்கையே நம் வழி (சுத்த சன்மார்க்கம்)
    இயற்கையானது சாகாமல் இருப்பதே.
    இந்த இன்பத்தை பெற நமக்கு குருவாக இருப்பதும்  ”இயற்கையே”.
    அன்பர்களே, இப்பொழுது சொல்லுங்கள், வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாக விளங்குகிறது தானே.
    ஆக, நாம் செய்ய வேண்டியது;
    எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள்களையும், மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும் எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைக ளெல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை யடைதல் கூடுமென்றும்………( நாம் நம்புதல் வேண்டும். இடைவிடாது நன்முயற்சியில் பயிலுதல் வேண்டும்.)
    அன்பர்களே, மேலே நாம் செய்த நல்ல விசாரணையும் கடவுள் அருளால் நம் அறிவில் உணர்ந்து செய்ய அருளப் பெற்றுள்ளோம்.
    தெரிந்துக்கொண்ட இந்த உண்மை, நம் சத்திய அறிவில் அறிந்து, நம் அனுபவத்தில் அனுபவிக்க அருள் செய்யுமாறு இயற்கை ஆண்டவரை துதிப்போம்.
    சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்தியச் சிறு விண்ணப்பத்தில்:
    இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கையின்பினரென்றும்,…..
    தாயினுஞ் சிறந்த தயவுடைக் கடவுளே! இயற்கையே!…..
    சமரசு சுத்த சன்மார்க்க சங்க சத்தியப் பெரு விண்ணப்பத்தில்:
    இயற்கை யுண்மை நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ வெளியில், இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ்ஜோதி சொரூபராய், இயற்கை இன்ப நிறைவாகி யோங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டுத் திருவுளக் கருணையாற் செய்தருளுகின்ற சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே!
    சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான விண்ணப்பத்தில்:
    இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞானசபைக் கண்ணே, இயற்கை உண்மை என்கின்ற சத்தியத் திருவுருவினராய், இயற்கையின்ப மென்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப்பெருங்கருணைத் தனிப் பெரும்பதியாகிய தனித் தலைமைக் கடவுளே!
    சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில்;
    உத்தர ஞானசித்திபுர மென்றும் உத்தர ஞான சிதம்பர மென்றும் திருவருளா லாக்கப்பட்ட ஆக்கச் சிறப்புப் பெயர்களும் பார்வதிபுரமென்றும் வடலூரென்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை விளக்க நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ திருவுருவைத் தரித்து, இயற்கையின்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே! தேவரீரது திருவருட் சமுகத்தில் யான் செய்து கொள்ளுகின்ற சமரசு சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்.
    சில சுத்த சன்மார்க்கப் பாடல்கள்;
    ”இயற்கையுண்மைத் தனிப்பதியே”..
    • இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
    சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே…
    • எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
    எல்லாஞ்செய் வல்லதாகி
    • இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
    இயற்கையே இன்பமாகி.

    மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல்
    உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும் என்றும் உலவாத
    திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்
    குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

    • இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்
    எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்
    • இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்
    எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்
    • இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்
    இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்
    • இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்.
    முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
    இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
    றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
    என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.
    என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்

    • ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
    உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
    ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
    ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
    • சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
    சத்தியனே உண்கின்றேன் சத்தியத்தெள் ளமுதே.
    எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
    இதுஅது எனஉரைப் பரிதாய்த்
    • தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
    தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
    பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
    புத்தமு தருத்திஎன் உளத்தே
    அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
    இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
    அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
    இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
    இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
    புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
    பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
    பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
    பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
    திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

  • ’ஒருமை’ என்பதற்கு பொருள் – வள்ளலார்

    ஒருமை என்பதற்கு என்ன பொருள்? என்பதை நாம் தெரிந்துக்கொள்ளும் முன்பு அதன் முக்கியத்துவத்தை முதலில் தெரிந்துக் கொள்ளவேண்டும்.
    ”கருணை” மட்டுமே சுத்த சன்மார்க்கத்தில் சாதனமாகும்.
    தயவு,அருள்,கருணை ஒரே பொருளையே குறிக்கும்.
    என்னை யேறாநிலை மிசை யேற்றிவிட்டது யாதெனில் தயவு.
    தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.
    அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும்.
    அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.
    அது அந்த ஒருமையினாலேதான் வந்தது.
    நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்.

    பக்கம் 414: ல் நம் வள்ளலார் ஒருமைக்கு தரும் விளக்கம் இதோ:
    ஒருமை யென்பது தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்;

    மற்ற இடத்தில்,

    தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது என்கிறார் நம் வள்ளலார்.
    (ஆங்கீரச வருடம் கார்த்திகை மாதம் 3ஆம் நாள்.)
    அன்பர்களே!
    மொத்தத்தில் உலகில் காணும் சமய,மத,மார்க்கங்களில்
    உள்ள உண்மை மற்றும் உயர்ந்த கருத்து எதுவெனில்:
    ” இதரர்களுக்கு இம்சை இல்லாது,
    அவர்கள் செய்யினும்
    தான் சகித்து அடங்கி நிற்பது.”

    அன்பர்களே! இங்ஙனம் இருப்பின் நமக்கு ஒருமையை தரும் என்கிறது மற்ற மார்க்கங்கள்.
    ஆனால்,
    சுத்தசன்மார்க்கத்தில் வள்ளலார் ஒருமைக்கு தரும் விளக்கம் பாருங்கள்;
    ஒருமை யென்பது’
    தனது அறிவு ஒழுக்கம்
    ஒத்த இடத்தில், தானே கூடும்;
    மேலே ஒருமைக்கு பொருள் காணும் பொழுது,
    தனது அறிவு+ஒழுக்கம் ஒத்த இடம் என உள்ளது.
    அன்பர்களே!
    இங்கு ”தனது அறிவு” என்பது’ அவரவர் பெற்றிருக்கும் அறிவு.
    இங்கு ’ஒழுக்கம்” என்பது;
    11.01.1872ல் வெளியிட்ட அறிவிப்பில்
    “இதில் வாசிக்க விரும்புகின்றவர்கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களாகி, நல்லறிவு, கடவுள்பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களையும், உண்மையுரைத்தல், இன் சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று, சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும்”
    நிற்க! இங்கு சொல்லப்பட்ட ‘ஒழுக்கங்கள்’ பொதுவாக எல்லா ஞானி, யோகிகளால் ஏற்கனவே கண்டறியப்பட்டவை, போதிக்கப்பட்டவை. சமயமத மார்க்கங்களில் உள்ளவை.
    இந்நிலையில் வேறு ஏதேனும் வள்ளலார் சிறப்பாக தனியாக சொல்லியுள்ளார்களா? என இங்கு நாம் கண்டறியவேண்டும். அங்ஙனம் ஏதேனும் சொல்லப்பட்டியிருந்தால் மட்டுமே வள்ளலார் கண்ட மார்க்கம் ஒரு தனி மார்க்கமாக கருத முடியும். ஏனென்றால் அவரின் தனி நெறியை வெளிப்படுத்தும் வழியும் புதியதாகவே இருக்க வேண்டும்.
    ஆம், வள்ளலார் “சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” என தனியாகவே ஓரிடத்தில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்கள். உரைநடைப்பகுதி (ஆவண எண்.4, பக்கம் 410ல்) ’’திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் (30.01.1874) வள்ளலார் சொல்லியது;இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (சுத்த) சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள் என்ற திருவார்த்தை அதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாகவுடையது கடமை”
    மற்ற ஒழுக்கங்களைத் தன்மார்க்கத்திற்கு அடிப்படையான தகுதிகளாக வைக்கிறார் வள்ளலார் என அறியமுடிகிறது. எனவே சுத்தசன்மார்க்கத்தில் “அடிப்படை தகுதி ஒழுக்கங்கள்” எனவும், “சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” எனவும் வள்ளலார் மிகத் தெளிவாக குறிப்பிட்டு உள்ளதை இங்கு உறுதி செய்யமுடிகிறது. ஆக, சுத்த சன்மார்க்கஒழுக்கம் நிரம்பிய பின்பே கடவுள் நிலையறிய முடியும் என்ற உண்மையில் நாம் பெற்றிருக்கும் அறிவு ஒத்து வந்தால் ஒருமையை நாம் பெறுவோம். அதன்பின்பு இறை தயவு நமக்கு கிட்டுவது சத்தியமே.
    இதோ சில பாடல் வரிகளை காண்போம்;
    ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
    என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.
    ####
    ஒருமை நிலையில் இருமையும் தந்த
    ஒருமையி னீர்இங்கு வாரீர்
    பெருமையி னீர்இங்கு வாரீர். வாரீர்
    ####
    உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
    ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
    இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே
    ####
    ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
    ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
    ####.
    இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
    எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
    உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
    உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே
    ####.
    தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
    தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
    சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
    தனில்உறும் அனுபவம் என்கோ
    ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
    ஓங்கிய ஒருமையே என்கோ

    உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட
    ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே.

    ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
    என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.

    ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம்
    நன்றே ஒருமையுற்று நண்ணியே –

    ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
    ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றில

    ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
    ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றில

    உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
    உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
    கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
    \கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
    சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
    தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
    இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
    என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.
    —– நல்ல விசாரணை செயதமைக்கு நன்றி; உங்கள் ஏபிஜெ அருள்.

  • சமரசம்

    Vallalar

    ’சமரசம்’ என்பதற்கு பொருள் – வள்ளலார்.

    Karunai Sabai-Salai Trust.

    உள்ளது உள்ளபடி; நன்றி: Apj Arul.

    சமரச வேத சன்மார்க்க சங்கம் என்பதற்குப் பொருள்
    :
    எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவுநூல் முடிபான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மேற்படி மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என நான்கு.ஷடாந்த சமரச சுத்த சிவ சன்மார்க்கம் என்பதில் ஷடாந்தம் என்பது யாது?

    வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் ஆக ஆறு. மேற்படி அந்தங்களின் அனுபவம் காலம் இடம் முதலிய வேறுபாடுகளால் ஏறிக் குறையும். ஆதலால், ஷடாந்தமும் வியாபகமில்லாமல் வேதாந்த சித்தாந்தத்தில் நான்கந்தமும் வியாப்பியமா யிருக்கின்றன. மேற்படி அந்தம் நான்கின் ஐக்கிய விவரம்: வேதாந்தத்தில் போதாந்த யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்த கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. இந்த ஐக்கியம் பற்றி வேதாந்த சித்தாந்தமே இப்போது அனுபவத்தில் சுத்த வேதாந்த சுத்த சித்தாந்தமாய் வழங்குகின்றன.

    இவற்றிற்கு அதீதம் ஆகிய சுத்த வேதாந்த சித்தாந்த அந்தாந்தமாகிய சமரசசுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம். மேற்குறித்த மார்க்கத்திற்குச் சமய மதங்களாகிய சன்மார்க்கங்கள் அநந்நியமாய் விளங்கும்; அந்நியமல்ல. மேற்படி சமயமத மார்க்கங்கள் எவை எனில், சமய சன்மார்க்கம் மதசன்மார்க்கம் என இரண்டு. இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கத்தின் வகை ஆறு, தொகை முப்பத்தாறு, விரிவு அறுகோடி. இதுபோல் மதத்திலும் வகை தொகை விரிவு உள்ளன. மேற்குறித்த சமய மத சன்மார்க்கங்களில் வகரவித்தை தகரவித்தையுள. அவை அவ்வச் சமயமத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி ஈசுரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களில் காலப் பிரமான பரியந்த மிருக்கும்; அதற்குமேலிரா.

    மேற்படி சமயமத சன்மார்க்கங்களில் ஷடாந்த சமரச முளதோவெனில்: உளது. யாதெனில்: வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம். இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். இதற்கு அதீதம் சுத்த சமரசம். ஆதலால், சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்க சுத்த சமரச சன்மார்க்கமாம். இது பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப்பூட்டாகச் சமரச சுத்த சன்மார்க்கமென மருவியது.

    இதன் தாத்பரியம் யாதெனில்:
    சமரசம் என்பதற்குப் பொருள் –
    எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தி னின்று மருவியது சமரசம். இதற்கு அனுபவம் குருதுரிய ஸ்தானம். சுத்த சமரச மென்பதற்கு நியாயம்: விந்து பரவிந்து இரண்டையும் மறுக்கச் சுத்தவிந்து வந்தது போலும், சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது சுத்தசிவம் போலும். சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். பூர்வத்தில் நின்ற சமயமத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம். இதன் பொருட்டு ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க மென்றே மருவியது. ஒருவாறு, ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் ஒன்று. இதன் பூர்வத்தில் சமரச சன்மார்க்கம் ஒன்று, இதன் உத்தரத்தில் சுத்த சன்மார்க்கம் ஒன்று; ஆதலால் ஷடாந்த சமரசம். ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ, அதுபோல் சுத்த சன்மார்க்கத்திற்குப் பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும் அநந்நியம்.

     

  • வள்ளலாரின் மகாபேருபதேசம் , எல்லோரும் இதை ஒருமுறை வாசிப்போம்.

    vallalarHD

    இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற – பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் – வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது – வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் – அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் – இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.

    அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையா யிருக்கின்றது இவற்றிற் பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில்: விசார மென்கின்றதற்குப் பொருள்: வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் – இதைவிடக் – கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம். ஆதலால், இவ்வுலகத்தில் வி-சாரமென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதைத் துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது. அவர்கள் பண்ணுகின்றது – துக்கமே விசாரமென்கின்றது – அது தப்பு; அவ்வர்த்தமுமன்று. சார மென்கின்றது துக்கம். விசார மென்கின்றது துக்க நிவர்த்தி. வி உபசர்க்கம். சாரமென்கின்ற துக்கத்தை நிவர்த்தித்தது வி ஆதலால், விசாரமென்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது. ஆதலால் இடைவிடாது நாம் விசார வசத்தராயிருக்க வேண்டியது. மேலும் வி – சாரமென்பது: வி விபத்து; சாரம் நீக்குதல், நடத்தல். ஆதலால் இடைவிடாது நன் முயற்சியின்கண் பயிலுதல் வேண்டும்.

    மேலும், சிலர் “இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?” என்று வினவலாம். ஆம், இஃது – தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுகின்றதுஞ் சத்தியந்தான். ஆனால், முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்: அசுத்தமாயாதிரை சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொருகூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயாதிரை. மேற் பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லக்ஷியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது. இவற்றில் – ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்றபோது, முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்ப்பாகத்திலிருக்கிற அசுத்தமாயை யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார். ஆதலால், அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடியவரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக இருக்கலாமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது. மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும்.

    மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின. ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும். கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

    இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். “தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?” என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது. முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் இயல்வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தாலு* முணர்க. மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்.

    * இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
    இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
    மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
    மகனேநீ நூலனைத்தும் சாலம்என அறிக
    செயல்அனைத்தும் அருளொளியால் காண்கஎன எனக்கே
    திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
    அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
    ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
    – திருஅருட்பா 4176

    இதுபோல் வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம் முதலியவைகளில் சொல்லியிருக்கின்ற இலக்கணங்கள் முழுவதும் குற்றமே. அவைகளில் குற்றமே சொல்லியிருக்கின்றார்கள். எவ்வாறெனில்: தொண்ணூறு தொள்ளாயிரம் என்கிற கணிதத்தின் உண்மை நான் சொன்ன பிறகு தெரிந்து கொண்டீர்களல்லவா? இப்படியே ஒன்று இரண்டு முதல் நூறு முதலான இலக்கணங்களுக்கும் உகர இறுதி வருவானேன்? ஒருவாறு சித்தர்கள் காரணப் பெயராக இட்டிருக்கிறார்கள். தொல் – நூறு தொண்ணூறென்றும், தொல் – ஆயிரம் தொள்ளாயிரமென்றும் வழங்குகின்றன. தொல் என்பது ஒன்று குறையத் தொக்கது. தொன்மை தொல்லெனப் பிரிந்தது. வழக்கத்தில் தொள்ளாயிரம் தொண்ணூறு என மருவியது. இதற்குப் பத்திடத்திற்கு ஓரிடம் குறைந்த முன் ஆயிரமென்றும், ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க. இப்படி நான் சொன்னதுபோல் சொன்னால், சிறு குழந்தைகள் கூட அறிந்து கொள்ளும்.

    இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் – அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற – திருவருட்பாவில் அடங்கியிருக்கிற – ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

    இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், “எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, “தேடியதுண்டு நினதுருவுண்மை” என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். “கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக”** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

    * மாயையாற் கலங்கி வருந்திய போதும்
    வள்ளல்உன் தன்னையே மதித்துன்
    சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
    தலைவவே றெண்ணிய துண்டோ
    தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
    துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
    நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
    நன்றருள் புரிவதுன் கடனே.
    – திருஅருட்பா 3635

    ** கருணையும் சிவமே பொருள்எனக் காணும்
    காட்சியும் பெறுகமற் றெல்லாம்
    மருள்நெறி எனநீ எனக்கறி வித்த
    வண்ணமே பெற்றிருக் கின்றேன்
    இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
    எய்திய தென்செய்வேன் எந்தாய்
    தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
    சிறுநெறி பிடித்ததொன் றிலையே.
    – திருஅருட்பா 3503

    அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள். என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்; அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட “நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று…” ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திர மல்ல. உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்: எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.

    இப்போது நீங்கள் – இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் – சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது – அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன். ஆதலால், நீங்கள் அப்படிச் செய்து கொண்டிருங்கள்.

    சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை. “தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!” என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.

    அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் – இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் – இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந் நகம் வளர்தலும் – இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள். இப்படி இடைவிடாது விசாரஞ் செய்து கொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக்குறித்து ஏளனமாக சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லக்ஷியம் செய்யக்கூடாது.

    இப்படியே “காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் – ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால் – காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா” என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பக்ஷத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? இப்படி விசாரித்துப் பிரபஞ்ச போகத்தின்கண் அலக்ஷியம் தோன்றினால், நிராசை உண்டாம், ஆதலால், சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில், மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும்படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.

    இவ் விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. இது முதல் – கொஞ்ச காலம் – சாலைக்குப் போகின்ற வரைக்கும், ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்து கொண்டிருங்கள்.

    மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்…. நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை. இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.

    இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை – தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை – எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த – உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

    என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. “சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்”* என்னும் பிரமாணத்தால் உணர்க.

    * தாயுமான சுவாமிகள் – கருணாகரக்கடவுள் – 7.

    மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

    இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.

    உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.

    எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இது ஆண்டவர் கட்டளை.

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

    பேருபதேசம் முற்றிற்று.