Author: unmai

  • நாம் மனிதர்களா? — உங்கள் ஏபிஜெ அருள்.

    areyouahuman

    என்ன கேள்வி இது? என்கிறீர்களா அன்பர்களே!
    ஆம் வள்ளலாரின் சத்திய வாக்கியத்தினை வாசிக்கும் போது இப்படி தான் கேள்விக் கேட்டு நல்ல விசாரணை செய்ய தோணுகிறது.
    (வள்ளலாரின் சத்தியவாக்கியத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டுரை.
    உள்ளது உள்ளபடி)
    வள்ளலார் தனது முதல் விண்ணப்பத்தில் பக்கம் 556 ல்;

    நாம் அஞ்ஞான இருளில் ஒன்றும் தெரியாது உணர்ச்சி இன்றிக் கிடந்த காலம் போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே, இவ்வுலகினிடத்து…
    1) தாவர யோனி வர்க்கங்கள்
    2) ஊர்வன நீர் வாழ்வன யோனி வர்க்கங்கள்
    3) பறவை யோனி வர்க்கங்கள்
    4) விலங்கு யோனி வர்க்கங்கள்
    அடுத்து ….????
    என்ன பிறவி என்று நாம் நினைப்போம்.?
    மனிதப் பிறவி என்று தானே?
    அன்பர்களே அது தான் இல்லை.
    விலங்கு வர்க்கங்களுக்கு பின்பு,
    இரு பிறவி யோனி வர்க்கங்களில் பிறந்து பிறந்து இறந்து இறந்து பின்பே ஏழாவது பிறவியிலேயே மனித தேகம் வரும்..

    அந்த இரு யோனி வர்க்கங்கள் எதுவெனில்:
    —- (5) தேவ யோனி வர்க்கங்கள்
    அதன் பின்பு
    —- (6) நரக யோனி வர்க்கங்கள்
    இவர்கள் யார்?
    தேவ யோனி வர்க்கங்கள் என்பவர்கள் யார் எனில்:
    இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

    “பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர். சுரர் முதலியராகப்
    பிறந்து பிறந்து
    அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல்,
    அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைப்படுதல்
    முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து
    அத்தேவயோனி வர்க்கங்களெல்லாஞ்
    சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்;

    நரக யோனி வர்க்கங்கள் என்பவர்கள் யார் எனில்:
    இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

    ” காட்டகத்தார், கரவு செய்வார், கொலை செய்வார்
    முதலியராகப் பிறந்து பிறந்து
    பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்;”

    ஆக,
    எவர் ஒருவர் அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைப்படுதல்
    முதலிய அவத்தைகளில் உள்ளோமோ அவர்கள் தேவர்கள்.

    எவர் ஒருவர், பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளில் உள்ளோமோ அவர்கள் நரகர்கள்.

    இப்ப சொல்லுங்கள் நாம் மனிதர்களா?

    மனித தேகமே அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயர் அறிவுடையது என்கிறார் நம் வள்ளலார்.
    அன்பர்களே!
    அச்சம் கொள்ளத் தேவையில்லை. நம் வள்ளலார் இருக்க கவலை எதற்கு?
    இதோ நம் வள்ளலார் பாடலை இங்கு காண்போம்.

    ”வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு
    வழக்கம் வள்ளல்நீ மகிழ்ந்தருட் சோதி
    தருமுன் தந்தனை என்றிருக் கின்றேன்
    தந்தை நீதரல் சத்தியம் என்றே
    குருமுன் பொய்யுரை கூறலேன் இனிஇக்
    குவலை யத்திடைக் கவலையைத் தரியேன்
    திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணை
    செய்க வாழ்கநின் திருவருட் புகழே.”

    அன்பர்களே,
    நாம் இன்று,
    அலைப்படவில்லை,அகப்படவில்லை,அகங்கரிக்கவில்லை,
    அதிகரிக்கவில்லை,மறந்து, நினைந்து நிற்கவில்லை, மயக்குறவில்லை,போரிடவில்லை,கொலைப்படவில்லை.
    எனவே நாம் தேவ யோனி வர்க்கங்களை கடந்து விட்டோம்.

    நாம் இன்று
    பயப்படவில்லை, சிறைப்படவில்லை, சிதைப்படவில்லை அதணால் நாம் நரக யோனி வர்க்கங்களை கடந்து விட்டோம்.

    இன்று எல்லா வல்ல ஆண்டவரின் திருவுளத்தடைத்து இரங்கியருளி அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயரறிவுடைய இம் மனித தேகத்தை பெற்று உள்ளோம்.
    அன்பர்களே! வள்ளலார் அவர்கள் மற்றொரு இடத்தில் சொல்லியதை இங்கு நினைவு கூர்வோம்: (பக்கம்:377) அதாவது; “அறிவினது உயர்ச்சியினாலும் தாழ்ச்சியினாலும் தேவரென்றும் மனிதரென்றும் சொல்லப்பட்டதே தவிர வேறே யெந்தக் காரணத்தினாலும் அல்ல.”
    ஆம், சுத்த சன்மார்க்க ஒழுக்கம் உடையவர்கள். பக்கம் 410 ல் வள்ளலார் குறிப்பிட்டது போல் இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாக கொள்ளவில்லை. எல்லா பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டு தலைவனையே தொழுபவர்கள். எனவே நாம் மனித தேகம் எடுத்துள்ளோம் என்றுச் சொல்லுவோம். வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி மட்டுமே தழுவுகிறோம்.

    இடைவிடாது நன்முயற்சி செய்வோம். வள்ளலாரின் கட்டளைப்படி
    உலகில் காணும் சமய,மத,மார்க்கங்களில் பற்று வைக்காமல் இருப்போம். அதன் ஆச்சாரங்களில் மனம் பற்றாமல் இருப்போம். முக்கியமாக நம் அறிவு, ஒழுக்கம் ஒத்தவர்களுடன் மட்டுமே நல்ல விசாரணைச் செய்வோம்.

    காலமில்லை இன்றே காரியத்தில் இறங்குவோம்.
    வெற்றி நமதே. வள்ளலார் இருக்க அச்சமில்லை.
    ”நாம் மனிதர்களே.”
    நன்றி
    அன்புடன் உங்கள் ஏபிஜெ அருள்.

  • ”விசாரம்” என்கின்றதற்கு பொருள் – வள்ளலார். ( ஏபிஜெ அருள்.)

    nallavisaranai

    (22-10-1873 ல் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் ஆற்றிய உபதேசத்தின் அடிப்படையில்)
    விசாரம் என்கின்றதற்கு வள்ளலார் என்ன பொருள் சொல்லியுள்ளார்கள் என்பதை தெரிந்துக் கொள்வதற்கு முன்பு விசாரம் எதற்கு வேண்டும் எனக் காண்போம்.
    நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற திரைகள் அனந்தம் (பல). மேற்படி திரைகளில், அழுத்தமாயிருக்கின்ற முதல் திரை ‘பச்சைத்திரை” ஆகும். நாம் முதலில் இந்த பச்சை திரையை நீங்கிக் கொள்ள வேண்டும்.அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப்போய்விடும் என்கிறார் வள்ளலார்.. மேற்படி பச்சைத் திரையை நீங்கிக் கொள்ள நாம் செய்ய வேண்டியது ‘”விசாரம்”.
    விசாரம் என்கின்றதற்கு என்ன பொருள்?
    வி-சாரம் என்பதில் வி-சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது. அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது.
    விசாரம் செய்யும் போது அதியுஸ்ணம் உண்டாகும். அந்த உஸ்ணத்தால் தான் திரையை நம்மால் நீக்கிக்கொள்ள முடியும்.
    முன்பு காலங்களில் மேற்படி உஸ்ணம் ஏற்படுத்திக் கொள்ளக்கூடியவர்களாக இருந்தவர்கள் யோகிகள் மட்டுமே. யோகிகள் இதற்காக வனம்,மலை,முழை முதலியவற்றிற்குப் போய், நூறு, ஆயிரம் முதலிய வருசகாலம் தவம் செய்து உண்டு பண்ணிக் கொண்டார்கள்.
    மனுச தரத்தில் இவ்விசாரம் இல்லை. அதாவது நாம் செய்யக்கூடியதான வழியில் இல்லை.
    இதோ நம் தரத்தில் செய்யக்கூடிய (சுத்தசன்மார்க்க) வழியை கண்டு நமக்கு வெளிப்படுத்துகிறார் நம் வள்ளலார்.
    அ::து யாதெனில்:
    ”விசாரமே”.
    யோகியுனுடைய விசாரத்தை விட ஆண்டவரை தோத்திரம் செய்கின்றதிலும், தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஸ்ணம் உண்டாகும்.
    எவ்வாறு எனில்:
    ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்து கொண்டாவது அல்லது தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.
    மேற்படி விசாரத்தில் இடைவிடாது இருக்க வேண்டியது.
    இதில் நன்முயற்சியின் கண் பயிலுதல் வேண்டும்.
    நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது?
    நமக்கு மேல் நம்மை அதிஸ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது?
    என்று விசாரிக்க வேண்டியது என்கிறார் நம் வள்ளலார்.
    நிற்க!
    இந்த விசாரம் செய்யும் முன்பு உலகில் காணும் சமயங்களிலும்,மதங்களிலும்,இதிகாச,புராணங்களிலும் லட்சியம் கூடாது என்கிறார் வள்ளலார். மேலும், சாதி,சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களில் நாம் பற்றாமல், அவையை விட்டு ஒழித்து, சத்திய ஞான ஆசாரமாகிய பொது நோக்கத்தை வருவித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்.
    இதோ இவ்வழியில, வள்ளலார் கண்ட சுத்தசன்மார்க்க வழியில், இன்றே “விசாரம்’ செய்வோம்.

    நன்றி அன்புடன் உங்கள்: ஏபிஜெ அருள்.

  • ’இயற்கை’ என்றால் என்ன?– வள்ளலார்.(உள்ளது உள்ளபடி) – ஏபிஜெ அருள்

    வள்ளலார் மார்க்கத்தில் இயற்கை என்பதற்கு பொருள் என்ன எனப்பார்க்கும் போது, ” இயற்கை” ஒரு முக்கிய முதன்மை உண்மைப் பொருளாக உள்ளது.
    ஆம் அன்பர்களே,

    இயற்கையே இறைவன்.
    இயற்கையே சுத்த சன்மார்க்கம்.
    இயற்கையே மரணமில்லா பெருவாழ்வு.

    ஆக,
    ஏதோ ஒரு கற்பனையாக வள்ளலார் சாகா கல்வியை போதிக்கிறார் எனக் கருத வேண்டாம். சாகாமல் இருப்பது இயற்கையானதே. அதுவே உண்மை. அதுவே மனித லட்சியம் என அறிதல் வேண்டும். இந்த ”இயற்கை உண்மையை” தான் நம் வள்ளலார் சாதி,சமயம்.மதம் கடந்து செய்த நல்ல விசாரணையில் தெரிந்துக் கொண்டார்கள். அவரின் சத்திய அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும். நன்முயற்சிக்கும் இறைவனால் போதிக்கப்பட்டதே சுத்த சன்மார்க்க மரபுகளும், சாகா கல்வியும் ஆகும். இதை இறையருளால் அறிந்து, அனுபவித்தார் நம் வள்ளலார். வள்ளலாரிடமிருந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையால் இவ்வுண்மை நமக்கும் தெரியப்படுத்தப் பட்டுள்ளது. தெரியப்படுத்தப் பட்டுள்ளதை நாமும் வள்ளலார் போல் ஒழுக்கம் நிரப்பி கருணை ஒன்றையே சாதனமாகக் கொண்டு இடைவிடாது நல்ல விசாரணை செய்தால் அன்றி நமக்கு கைக்கூடாது. இதை சத்தியமாக நம்புதல் வேண்டும்.
    சாகா கல்வி ”இயற்கை குருவால்” போதிக்கப்படுவாதாக உள்ளதே அன்றி நமக்கு வேறு ஒருவராலோ அல்லது எந்த ஒரு நூல் வாயிலாகவோ கற்பதாக இல்லை. உண்மை அறிய முதலில் நாம் ஒழுக்கம் நிரப்பிக் கொள்ள வேண்டும். ஒழுக்கம் என்பது சுத்த சன்மார்க்க ஒழுக்கத்தை குறிக்கும்.
    ”இயற்கை” யை வள்ளலார் விவரிக்கும் போது:
    இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பம், இயற்கை அறிவு என்கிறார்.
    இங்கு, இயற்கை உண்மை என்றால் “ சத்திய திருவுருவம்”
    இயற்கை விளக்கம் என்றால் “சத்திய ஞானசபை’’
    இயற்கை இன்பம் என்றால் ‘” சத்திய திரு நடம்”
    ஆக, மொத்ததில் இயற்கையே, தனிப் பெருங்கருணைத் தனிப் பெரும்பதியாய தனித் தலைமைக் கடவுள்! என்கிறார் வள்ளலார்.
    மேலும் பார்க்கையில்;
    இயற்கை உண்மை நிறைவாகியுள்ளதே ’’சுத்த சிவானுபவ வெளி”
    இயற்கை விளக்கம் நிறைவாகி விளங்குவது “அருட்பெருஞ்ஜோதி சொரூபம்”
    ஆக,
    இயற்கையே (உண்மையாகவும், விளக்கமாகவும்) எங்கும் பூரணராகி விளங்குகின்றது.
    இயற்கை நம் உண்மை ஆண்டவர்.
    இயற்கையே நம் வழி (சுத்த சன்மார்க்கம்)
    இயற்கையானது சாகாமல் இருப்பதே.
    இந்த இன்பத்தை பெற நமக்கு குருவாக இருப்பதும்  ”இயற்கையே”.
    அன்பர்களே, இப்பொழுது சொல்லுங்கள், வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாக விளங்குகிறது தானே.
    ஆக, நாம் செய்ய வேண்டியது;
    எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள்களையும், மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும் எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைக ளெல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை யடைதல் கூடுமென்றும்………( நாம் நம்புதல் வேண்டும். இடைவிடாது நன்முயற்சியில் பயிலுதல் வேண்டும்.)
    அன்பர்களே, மேலே நாம் செய்த நல்ல விசாரணையும் கடவுள் அருளால் நம் அறிவில் உணர்ந்து செய்ய அருளப் பெற்றுள்ளோம்.
    தெரிந்துக்கொண்ட இந்த உண்மை, நம் சத்திய அறிவில் அறிந்து, நம் அனுபவத்தில் அனுபவிக்க அருள் செய்யுமாறு இயற்கை ஆண்டவரை துதிப்போம்.
    சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்தியச் சிறு விண்ணப்பத்தில்:
    இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கையின்பினரென்றும்,…..
    தாயினுஞ் சிறந்த தயவுடைக் கடவுளே! இயற்கையே!…..
    சமரசு சுத்த சன்மார்க்க சங்க சத்தியப் பெரு விண்ணப்பத்தில்:
    இயற்கை யுண்மை நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ வெளியில், இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ்ஜோதி சொரூபராய், இயற்கை இன்ப நிறைவாகி யோங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டுத் திருவுளக் கருணையாற் செய்தருளுகின்ற சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே!
    சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான விண்ணப்பத்தில்:
    இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞானசபைக் கண்ணே, இயற்கை உண்மை என்கின்ற சத்தியத் திருவுருவினராய், இயற்கையின்ப மென்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப்பெருங்கருணைத் தனிப் பெரும்பதியாகிய தனித் தலைமைக் கடவுளே!
    சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில்;
    உத்தர ஞானசித்திபுர மென்றும் உத்தர ஞான சிதம்பர மென்றும் திருவருளா லாக்கப்பட்ட ஆக்கச் சிறப்புப் பெயர்களும் பார்வதிபுரமென்றும் வடலூரென்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை விளக்க நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ திருவுருவைத் தரித்து, இயற்கையின்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே! தேவரீரது திருவருட் சமுகத்தில் யான் செய்து கொள்ளுகின்ற சமரசு சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்.
    சில சுத்த சன்மார்க்கப் பாடல்கள்;
    ”இயற்கையுண்மைத் தனிப்பதியே”..
    • இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
    சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே…
    • எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
    எல்லாஞ்செய் வல்லதாகி
    • இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
    இயற்கையே இன்பமாகி.

    மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல்
    உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும் என்றும் உலவாத
    திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்
    குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

    • இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்
    எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்
    • இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்
    எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்
    • இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்
    இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்
    • இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்.
    முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
    இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
    றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
    என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.
    என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்

    • ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
    உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
    ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
    ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
    • சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
    சத்தியனே உண்கின்றேன் சத்தியத்தெள் ளமுதே.
    எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
    இதுஅது எனஉரைப் பரிதாய்த்
    • தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
    தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
    பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
    புத்தமு தருத்திஎன் உளத்தே
    அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
    இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
    அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
    இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
    இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
    புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
    பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
    பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
    பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
    திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

  • ’ஒருமை’ என்பதற்கு பொருள் – வள்ளலார்

    ஒருமை என்பதற்கு என்ன பொருள்? என்பதை நாம் தெரிந்துக்கொள்ளும் முன்பு அதன் முக்கியத்துவத்தை முதலில் தெரிந்துக் கொள்ளவேண்டும்.
    ”கருணை” மட்டுமே சுத்த சன்மார்க்கத்தில் சாதனமாகும்.
    தயவு,அருள்,கருணை ஒரே பொருளையே குறிக்கும்.
    என்னை யேறாநிலை மிசை யேற்றிவிட்டது யாதெனில் தயவு.
    தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.
    அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும்.
    அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.
    அது அந்த ஒருமையினாலேதான் வந்தது.
    நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்.

    பக்கம் 414: ல் நம் வள்ளலார் ஒருமைக்கு தரும் விளக்கம் இதோ:
    ஒருமை யென்பது தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்;

    மற்ற இடத்தில்,

    தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது என்கிறார் நம் வள்ளலார்.
    (ஆங்கீரச வருடம் கார்த்திகை மாதம் 3ஆம் நாள்.)
    அன்பர்களே!
    மொத்தத்தில் உலகில் காணும் சமய,மத,மார்க்கங்களில்
    உள்ள உண்மை மற்றும் உயர்ந்த கருத்து எதுவெனில்:
    ” இதரர்களுக்கு இம்சை இல்லாது,
    அவர்கள் செய்யினும்
    தான் சகித்து அடங்கி நிற்பது.”

    அன்பர்களே! இங்ஙனம் இருப்பின் நமக்கு ஒருமையை தரும் என்கிறது மற்ற மார்க்கங்கள்.
    ஆனால்,
    சுத்தசன்மார்க்கத்தில் வள்ளலார் ஒருமைக்கு தரும் விளக்கம் பாருங்கள்;
    ஒருமை யென்பது’
    தனது அறிவு ஒழுக்கம்
    ஒத்த இடத்தில், தானே கூடும்;
    மேலே ஒருமைக்கு பொருள் காணும் பொழுது,
    தனது அறிவு+ஒழுக்கம் ஒத்த இடம் என உள்ளது.
    அன்பர்களே!
    இங்கு ”தனது அறிவு” என்பது’ அவரவர் பெற்றிருக்கும் அறிவு.
    இங்கு ’ஒழுக்கம்” என்பது;
    11.01.1872ல் வெளியிட்ட அறிவிப்பில்
    “இதில் வாசிக்க விரும்புகின்றவர்கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களாகி, நல்லறிவு, கடவுள்பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களையும், உண்மையுரைத்தல், இன் சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று, சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும்”
    நிற்க! இங்கு சொல்லப்பட்ட ‘ஒழுக்கங்கள்’ பொதுவாக எல்லா ஞானி, யோகிகளால் ஏற்கனவே கண்டறியப்பட்டவை, போதிக்கப்பட்டவை. சமயமத மார்க்கங்களில் உள்ளவை.
    இந்நிலையில் வேறு ஏதேனும் வள்ளலார் சிறப்பாக தனியாக சொல்லியுள்ளார்களா? என இங்கு நாம் கண்டறியவேண்டும். அங்ஙனம் ஏதேனும் சொல்லப்பட்டியிருந்தால் மட்டுமே வள்ளலார் கண்ட மார்க்கம் ஒரு தனி மார்க்கமாக கருத முடியும். ஏனென்றால் அவரின் தனி நெறியை வெளிப்படுத்தும் வழியும் புதியதாகவே இருக்க வேண்டும்.
    ஆம், வள்ளலார் “சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” என தனியாகவே ஓரிடத்தில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்கள். உரைநடைப்பகுதி (ஆவண எண்.4, பக்கம் 410ல்) ’’திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் (30.01.1874) வள்ளலார் சொல்லியது;இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (சுத்த) சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள் என்ற திருவார்த்தை அதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாகவுடையது கடமை”
    மற்ற ஒழுக்கங்களைத் தன்மார்க்கத்திற்கு அடிப்படையான தகுதிகளாக வைக்கிறார் வள்ளலார் என அறியமுடிகிறது. எனவே சுத்தசன்மார்க்கத்தில் “அடிப்படை தகுதி ஒழுக்கங்கள்” எனவும், “சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” எனவும் வள்ளலார் மிகத் தெளிவாக குறிப்பிட்டு உள்ளதை இங்கு உறுதி செய்யமுடிகிறது. ஆக, சுத்த சன்மார்க்கஒழுக்கம் நிரம்பிய பின்பே கடவுள் நிலையறிய முடியும் என்ற உண்மையில் நாம் பெற்றிருக்கும் அறிவு ஒத்து வந்தால் ஒருமையை நாம் பெறுவோம். அதன்பின்பு இறை தயவு நமக்கு கிட்டுவது சத்தியமே.
    இதோ சில பாடல் வரிகளை காண்போம்;
    ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
    என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.
    ####
    ஒருமை நிலையில் இருமையும் தந்த
    ஒருமையி னீர்இங்கு வாரீர்
    பெருமையி னீர்இங்கு வாரீர். வாரீர்
    ####
    உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
    ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
    இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே
    ####
    ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
    ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
    ####.
    இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
    எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
    உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
    உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே
    ####.
    தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
    தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
    சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
    தனில்உறும் அனுபவம் என்கோ
    ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
    ஓங்கிய ஒருமையே என்கோ

    உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட
    ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே.

    ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
    என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.

    ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம்
    நன்றே ஒருமையுற்று நண்ணியே –

    ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
    ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றில

    ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
    ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றில

    உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
    உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
    கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
    \கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
    சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
    தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
    இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
    என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.
    —– நல்ல விசாரணை செயதமைக்கு நன்றி; உங்கள் ஏபிஜெ அருள்.

  • சமரசம்

    Vallalar

    ’சமரசம்’ என்பதற்கு பொருள் – வள்ளலார்.

    Karunai Sabai-Salai Trust.

    உள்ளது உள்ளபடி; நன்றி: Apj Arul.

    சமரச வேத சன்மார்க்க சங்கம் என்பதற்குப் பொருள்
    :
    எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவுநூல் முடிபான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மேற்படி மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என நான்கு.ஷடாந்த சமரச சுத்த சிவ சன்மார்க்கம் என்பதில் ஷடாந்தம் என்பது யாது?

    வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் ஆக ஆறு. மேற்படி அந்தங்களின் அனுபவம் காலம் இடம் முதலிய வேறுபாடுகளால் ஏறிக் குறையும். ஆதலால், ஷடாந்தமும் வியாபகமில்லாமல் வேதாந்த சித்தாந்தத்தில் நான்கந்தமும் வியாப்பியமா யிருக்கின்றன. மேற்படி அந்தம் நான்கின் ஐக்கிய விவரம்: வேதாந்தத்தில் போதாந்த யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்த கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. இந்த ஐக்கியம் பற்றி வேதாந்த சித்தாந்தமே இப்போது அனுபவத்தில் சுத்த வேதாந்த சுத்த சித்தாந்தமாய் வழங்குகின்றன.

    இவற்றிற்கு அதீதம் ஆகிய சுத்த வேதாந்த சித்தாந்த அந்தாந்தமாகிய சமரசசுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம். மேற்குறித்த மார்க்கத்திற்குச் சமய மதங்களாகிய சன்மார்க்கங்கள் அநந்நியமாய் விளங்கும்; அந்நியமல்ல. மேற்படி சமயமத மார்க்கங்கள் எவை எனில், சமய சன்மார்க்கம் மதசன்மார்க்கம் என இரண்டு. இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கத்தின் வகை ஆறு, தொகை முப்பத்தாறு, விரிவு அறுகோடி. இதுபோல் மதத்திலும் வகை தொகை விரிவு உள்ளன. மேற்குறித்த சமய மத சன்மார்க்கங்களில் வகரவித்தை தகரவித்தையுள. அவை அவ்வச் சமயமத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி ஈசுரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களில் காலப் பிரமான பரியந்த மிருக்கும்; அதற்குமேலிரா.

    மேற்படி சமயமத சன்மார்க்கங்களில் ஷடாந்த சமரச முளதோவெனில்: உளது. யாதெனில்: வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம். இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். இதற்கு அதீதம் சுத்த சமரசம். ஆதலால், சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்க சுத்த சமரச சன்மார்க்கமாம். இது பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப்பூட்டாகச் சமரச சுத்த சன்மார்க்கமென மருவியது.

    இதன் தாத்பரியம் யாதெனில்:
    சமரசம் என்பதற்குப் பொருள் –
    எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தி னின்று மருவியது சமரசம். இதற்கு அனுபவம் குருதுரிய ஸ்தானம். சுத்த சமரச மென்பதற்கு நியாயம்: விந்து பரவிந்து இரண்டையும் மறுக்கச் சுத்தவிந்து வந்தது போலும், சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது சுத்தசிவம் போலும். சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். பூர்வத்தில் நின்ற சமயமத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம். இதன் பொருட்டு ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க மென்றே மருவியது. ஒருவாறு, ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் ஒன்று. இதன் பூர்வத்தில் சமரச சன்மார்க்கம் ஒன்று, இதன் உத்தரத்தில் சுத்த சன்மார்க்கம் ஒன்று; ஆதலால் ஷடாந்த சமரசம். ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ, அதுபோல் சுத்த சன்மார்க்கத்திற்குப் பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும் அநந்நியம்.

     

  • வள்ளலாரின் மகாபேருபதேசம் , எல்லோரும் இதை ஒருமுறை வாசிப்போம்.

    vallalarHD

    இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற – பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் – வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது – வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் – அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் – இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.

    அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையா யிருக்கின்றது இவற்றிற் பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில்: விசார மென்கின்றதற்குப் பொருள்: வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் – இதைவிடக் – கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம். ஆதலால், இவ்வுலகத்தில் வி-சாரமென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதைத் துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது. அவர்கள் பண்ணுகின்றது – துக்கமே விசாரமென்கின்றது – அது தப்பு; அவ்வர்த்தமுமன்று. சார மென்கின்றது துக்கம். விசார மென்கின்றது துக்க நிவர்த்தி. வி உபசர்க்கம். சாரமென்கின்ற துக்கத்தை நிவர்த்தித்தது வி ஆதலால், விசாரமென்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது. ஆதலால் இடைவிடாது நாம் விசார வசத்தராயிருக்க வேண்டியது. மேலும் வி – சாரமென்பது: வி விபத்து; சாரம் நீக்குதல், நடத்தல். ஆதலால் இடைவிடாது நன் முயற்சியின்கண் பயிலுதல் வேண்டும்.

    மேலும், சிலர் “இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?” என்று வினவலாம். ஆம், இஃது – தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுகின்றதுஞ் சத்தியந்தான். ஆனால், முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்: அசுத்தமாயாதிரை சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொருகூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயாதிரை. மேற் பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லக்ஷியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது. இவற்றில் – ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்றபோது, முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்ப்பாகத்திலிருக்கிற அசுத்தமாயை யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார். ஆதலால், அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடியவரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக இருக்கலாமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது. மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும்.

    மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின. ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும். கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

    இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். “தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?” என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது. முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் இயல்வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தாலு* முணர்க. மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்.

    * இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
    இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
    மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
    மகனேநீ நூலனைத்தும் சாலம்என அறிக
    செயல்அனைத்தும் அருளொளியால் காண்கஎன எனக்கே
    திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
    அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
    ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
    – திருஅருட்பா 4176

    இதுபோல் வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம் முதலியவைகளில் சொல்லியிருக்கின்ற இலக்கணங்கள் முழுவதும் குற்றமே. அவைகளில் குற்றமே சொல்லியிருக்கின்றார்கள். எவ்வாறெனில்: தொண்ணூறு தொள்ளாயிரம் என்கிற கணிதத்தின் உண்மை நான் சொன்ன பிறகு தெரிந்து கொண்டீர்களல்லவா? இப்படியே ஒன்று இரண்டு முதல் நூறு முதலான இலக்கணங்களுக்கும் உகர இறுதி வருவானேன்? ஒருவாறு சித்தர்கள் காரணப் பெயராக இட்டிருக்கிறார்கள். தொல் – நூறு தொண்ணூறென்றும், தொல் – ஆயிரம் தொள்ளாயிரமென்றும் வழங்குகின்றன. தொல் என்பது ஒன்று குறையத் தொக்கது. தொன்மை தொல்லெனப் பிரிந்தது. வழக்கத்தில் தொள்ளாயிரம் தொண்ணூறு என மருவியது. இதற்குப் பத்திடத்திற்கு ஓரிடம் குறைந்த முன் ஆயிரமென்றும், ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க. இப்படி நான் சொன்னதுபோல் சொன்னால், சிறு குழந்தைகள் கூட அறிந்து கொள்ளும்.

    இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் – அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற – திருவருட்பாவில் அடங்கியிருக்கிற – ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

    இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், “எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, “தேடியதுண்டு நினதுருவுண்மை” என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். “கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக”** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

    * மாயையாற் கலங்கி வருந்திய போதும்
    வள்ளல்உன் தன்னையே மதித்துன்
    சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
    தலைவவே றெண்ணிய துண்டோ
    தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
    துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
    நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
    நன்றருள் புரிவதுன் கடனே.
    – திருஅருட்பா 3635

    ** கருணையும் சிவமே பொருள்எனக் காணும்
    காட்சியும் பெறுகமற் றெல்லாம்
    மருள்நெறி எனநீ எனக்கறி வித்த
    வண்ணமே பெற்றிருக் கின்றேன்
    இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
    எய்திய தென்செய்வேன் எந்தாய்
    தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
    சிறுநெறி பிடித்ததொன் றிலையே.
    – திருஅருட்பா 3503

    அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள். என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்; அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட “நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று…” ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திர மல்ல. உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்: எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.

    இப்போது நீங்கள் – இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் – சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது – அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன். ஆதலால், நீங்கள் அப்படிச் செய்து கொண்டிருங்கள்.

    சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை. “தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!” என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.

    அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் – இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் – இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந் நகம் வளர்தலும் – இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள். இப்படி இடைவிடாது விசாரஞ் செய்து கொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக்குறித்து ஏளனமாக சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லக்ஷியம் செய்யக்கூடாது.

    இப்படியே “காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் – ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால் – காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா” என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பக்ஷத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? இப்படி விசாரித்துப் பிரபஞ்ச போகத்தின்கண் அலக்ஷியம் தோன்றினால், நிராசை உண்டாம், ஆதலால், சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில், மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும்படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.

    இவ் விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. இது முதல் – கொஞ்ச காலம் – சாலைக்குப் போகின்ற வரைக்கும், ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்து கொண்டிருங்கள்.

    மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்…. நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை. இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.

    இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை – தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை – எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த – உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

    என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. “சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்”* என்னும் பிரமாணத்தால் உணர்க.

    * தாயுமான சுவாமிகள் – கருணாகரக்கடவுள் – 7.

    மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

    இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.

    உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.

    எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இது ஆண்டவர் கட்டளை.

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

    பேருபதேசம் முற்றிற்று.

  • கடவுளின் உண்மை என்ன?

    கடவுளின் உண்மை என்ன?

    இந்த அத்தியாயம் மிக மிக முக்கியமான ஒன்று ஆகும். -APJ.ARUL.

    மார்க்கம் என்றால் வழி.

    சன்மார்க்கம் என்றால் சத்மார்க்கம்.
    சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம்.

    நிற்க!
    உலகில் காணும் சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்டுள்ள கர்த்தர், கடவுள், தெய்வங்கள் இவர்களின் நிலையை அறிகின்ற “வழி” என்னவாக உள்ளது?
    அம்மார்க்கங்களில் கடவுள் நிலையை கண்டு அக் கடவுள் அருளைப் பெற்றவர்களாக உள்ளவர்கள் “யோகி” களே.
    அந்த யோகிகள் எந்த வழியில் கடவுள் அருளைப் பெற்றார்கள்? என்பதே முக்கியமாக நாம் இங்கு சிந்திக்க வேண்டும்.
    அந்த வழி, “தவமே”. தவத்திற்கான இடங்கள்; வனம், மலை, முழை அதற்கு தேவைப்படும் கால அளவு; நூறு, ஆயிரம் முதலிய வருஷகாலம். மேற்படி தவத்தில் யோகிகள் செய்தது;
    # சில மந்திர வாசக பதவர்ணாதிகள் விந்து, நாத, ஓம், ஹரி, சச்சிதானந்தம், ஜோதியுள் ஜோதி, சிவாயநம, நமச் சிவாய உட்பட பல பரிபாஷைகள் மூலம்
    # தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும்,
    # தத்துவாதீதத்தைத் தியானித்தும் இடையில் ஜபித்தும்
    # கரணலயமாகச் சமாதி செய்தும்
    # தத்துவச் சேட்டைகளை அடக்க விரதமிருந்தும்
    # சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் செய்தார்கள்.
    நிற்க!
    மேற்படியான வழிவகைகளே சமய, மத சன்மார்க்கங்களில் உள்ளன. அந்தந்த யோகிகள் தங்கள் அனுபவத்தில் தெரிந்துக் கொண்ட உண்மையளவில் (அவர்களால்) பல சமய, மத சன்மார்க்கங்களை அவர்கள் ஏற்படுத்தினார்கள்.
    அச்சமய, மத மார்க்கங்களில் நம் நிலை என்ன?
    மேற்படி யோகிகளால் வெளிப்படுத்தப்பட்ட கடவுள், கர்த்தர், ஆண்டவர், தெய்வங்களை வணங்குதலே நம் நிலையாக உள்ளதே அன்றி அக்கடவுளின் நிலையறியும் உரிமையோ தகுதியோ அங்கு நமக்கு இல்லை.
    சில மார்க்கங்களில் யோகிகளையே தெய்வங்களாக, குமாரனாக, தூதுவராக ஏற்றுள்ளோம்.
    நிற்க! தவநிலையை யோகிகள் போன்று மனுஷ்ய தரத்தில் நம்மால் செய்ய முடியாது. சாதாரண மனுஷத்தரத்தில் நாம் வாழ்கிறோம்.
    அன்பர்களே!
    இறைவன் உண்டு.
    இறைவன் மிகப்பெரியவன்
    இறைவனே நம்மையும் உலகங்களையும் படைத்தான் என்ற உண்மைகள் யோகிகளால் வெளிப்படுத்தப்பட்டு அந்த இறைவனை வணங்குதல் வேண்டும் என்றுதான் நாம் பணிக்கப்பட்டுள்ளோம். யோகிகளின் அனுபவ கால அளவு கணக்கில் அடங்காது. அனுபவங்கள் பலவிதம், அவை உண்மையுடனும், திரித்தும், புனைந்தும் மற்றும் முழு கற்பனையாலும் மாற்றப்பட்டு நமக்கு பல புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் தரப்பட்டுள்ளது.
    நிற்க!
    # இங்கு நம் அறிவு எதை விரும்புகிறது? காட்டப்பட்டுள்ள இறைவனை, கடவுளை, தேவர்களை வணங்குவதிலா?
    அல்லது
    # நமக்கு மேல் அதிஷ்டிக்கின்ற கடவுளின் நிலை எப்படிப்பட்டது என்று அறியும் ஆவலிலா?
    அன்பர்களே!
    கடவுளின் உண்மை என்ன? உண்மைக் கடவுளை கண்டு அருள் பெறுவது எப்படி? என்று ஆசைப்படும் அறிவுக்கே இவ்விசாரணை மேலும் தொடரப்படுகிறது.
    ஆக, சமய, மதங்களில் இறைவனின் நிலை காண உள்ள வழி (தவ வழி) எல்லாருக்கும் (எல்லா மனிதர்களுக்கும்) ஒத்து வராது. அதில் சொல்லப்பட்டுள்ள தியானம், விரதம், மூச்சுப்பயிற்சி, மந்திரங்கள் எல்லாம் எல்லோராலும் செய்யக்கூடியதாக இல்லை. இதனால் வள்ளலார் கடவுள்நிலை குறித்து விஷேச நன்முயற்ச்சியில் தொடர்ந்து இருந்தார்கள். வள்ளலாரின் இந்த இடைவிடாத நன் முயற்ச்சியின் பயனாக அவருக்கு ஆண்டவராலேயே அறிவிக்கப்பட்ட வழியே “சுத்த சன்மார்க்கம்” ஆகும்.
    # இவ்வழி தனி வழி மட்டுமில்லை. உண்மை பொது வழியாகவும் உள்ளது.
    # இவ்வழி மற்ற எல்லா வழிகளையும் மறுக்க வந்தது என்கிறார் வள்ளலார்.
    # இவ்வழியில் எல்லா மனிதர்களாலும் பயணித்து இறையருளை பெறுவதாக உள்ளது.
    மனுஷ்யதரத்தில் அமைந்துள்ள உயர்வான “சுத்த சன்மார்க்கம்” சுத்த சன்மார்க்கத்தில் “நல்ல விசாரணை” செய்ய வேண்டும். நல்ல விசாரணை என்பது உலக விசாரம் அல்ல. பரலோக விசாரத்தையே குறிக்கும் என்கிறார் வள்ளலார்.
    ஆக, ஆறறிவு உள்ள தேகத்தைப் பெற்ற மனிதர்கள் அனைவருமே கடவுளின் உண்மை நிலையறிந்து அக்கடவுளின் அருளை பெறுதற்கான வழியை கொண்டதே சுத்த சன்மார்க்கம் ஆகும்.
    அதாவது; உஷ்ணத்தை தவம் செய்து உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் இதைவிடக் கோடிபங்கு பத்து கோடி பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.
    எதற்கு உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ள வேண்டும்?
    ஆன்மாவை தெரியவொட்டாமல் மூடி இருக்கின்ற திரையை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது.
    ஆக,
    மற்ற சமய, மத மார்க்கங்களுக்கும் சுத்த சன்மார்க்கத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் யாதெனில்;

    மற்ற சமய மத மார்க்கங்கள்
    ——————————————————-
    # இறைவனின் நிலையை காணும் வழி மனுஷ்ய தரத்தில் இல்லை

    # இறை உண்மையை தெரியவொட்டாமல் மூடி இருக்கின்ற திரைகளை விலக்கும் வழி “பொது” வழியாக இல்லை “யோகி”களின் தரத்திலே உள்ளது.

    # திரைகளை நீக்குவதற்கு வேண்டிய அதியுஷ்ணத்திற்கு” யோகிகள் தவத்தை இங்கு மேற்க்கொள்கிறார்கள்.

    # யோகிகள் வனம், மலை, முழை முதலியவற்றிற்குப் போய் நூறு, ஆயிரம் முதலிய வருஷ காலம் தவம் செய்ய வேண்டியுள்ளது.

    # காட்டப்பட்ட கடவுளை வணங்குதலும் வழிபாட்டு மற்றும் கட்டுப்பாட்டு ஆசாரங்களும் இங்கு உள்ளது.

    # ஏகதேச கர்ம சித்திகளை கற்ப னைகளாகச் சொல்லி இருக்கின்றார்கள். அவையில் லட்சியம் வைக்கப்படுகிறது.

    # பல வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்திகளை அடையலாம்.

    # பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டப்பட்டுள்ளது

    # தெய்வத்திற்கு பெயரிட்டு இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம்முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

    # வேதம், ஆகமம், புராணம் இதிகாசம் முதலிய கலைகள் உண்டு.
    ழூ தெய்வத்தைப் பற்றி புறங்கவியச் சொல்லவில்லை. ஆதலால் இறை உண்மை காண நமக்கு காலமில்லை.

    # “கருணை “ சாதனமாக சொல்லப் பட்டிருப்பினும், ஆசாரங்கள் இருப்பதால் அக்கருணை விருத்தியாகாமல் உள்ளது.

    # இங்கு முக்தி, சமாதி, மரணம் உண்டு.

    # காட்டப்பட்ட கடவுளை தொழுதலும் அக்கடவுளிடத்தில் வேண்டுதலுமே நாம் செய்கிறோம்.

    # சமய, மத மார்க்கங்கள் ஒவவொன்றும் ஒன்றிற்கு ஒன்று வேறுபட்டு உள்ளது.

    # பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்யம் இவையனைத்தும் இதன் இயல்புகள் ஆகும்.

    சுத்த சன்மார்க்கம்-
    ——————————————–

    # சுத்த சன்மார்க்கத்தில் மனுஷ்ய தரத்தில் இறைவனின் நிலையை அறிவதாக உள்ளது.

    # இறை உண்மை காணும் வழி உண்மை பொது வழியாக உள்ளது. எல்லா மனிதப் பிறவிகளுக்கும் உரியதாக உள்ளது.

    # “நல்ல விசாரணை” மட்டுமே இங்கு வழியாக உள்ளது.

    # மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தை சிந்தித்துக் கொண்டாவது அல்லது தோத்திரம் செய்து கொண்டாவது இருத்தல் போதுமானது.

    # கடவுள் உண்மை தெரிய வேண்டுமென நன்முயற்சியுடன் இருக்க வேண்டும். எந்தொரு ஆசாரமும் கிடையாது. கூடாது.

    # ஆண்டவரிடத்தில் மட்டுமே லட்சியம் வைக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்கு தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

    # கோடி கோடிப் பங்கு அதிகமாக கொடுக்கும் படியான இடம் இந்த இடம்

    # “அருள் ஒளியை காண்க” என உரைக்கப்படுகிறது.

    # ஒவ்வொருவரின் அக அனுபவத்தில்தான் இறைவனின் உண்மை வெளிப்படுவதாகவே சொல்லப்பட்டுள்ளது. எங்கும் பரிபூரணமாக விளங்கும் ஒரே மெய் பொருளாக்காட்டப் பட்டுள்ளது.

    # எந்தொரு கலையும் இங்கு இல்லை.

    # நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து இருப்பின் இப்பிறவிலேயே இறைநிலைக் கண்டு அருள் பெறலாம்.

    # கருணை விருத்திக்கு தடையாக உள்ள ஆசாரங்களை விட்டொழிக் குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    # சாகா கல்வியை தெரிவிப் பதன்றி வேறு ஒன்றுமில்லை.

    # உண்மை கடவுளின் நிலைக் காண ஒவ்வொருவரும் நல்ல விசாரணை செய்ய வேண்டும்.

    # மற்ற சமய, மத மார்க்கங்கள் யாவும் சுத்த சன்மார்கத்திற்கு அநநநியம் ஆனால் அந்நியம் அல்ல.
    # சுத்த சன்மார்க்கம். சமய, மத மார்க்கங்களின் அனுபவங்களை கடந்தது. இங்கு அக அனுபவமே உண்மை.

     

  • வள்ளலார் செய்த சத்தியம். & கடவுளை எங்ஙனம் வழிபாடு செய்தல் வேண்டும்?

    வள்ளலார் செய்த சத்தியம். & கடவுளை எங்ஙனம் வழிபாடு செய்தல் வேண்டும்?BY APJ.ARUL.

     

    Author :RAMALAKSHMI

    அன்பர்களே!
    திருஅருட்பிரகாச வள்ளலார் நம்மிடம் சத்தியம் செய்து சொல்வது என்னத் தெரியுமா?
    “வம்மின் உலகியலீர், மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர். புனைந்துரையேன், பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன். பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே. புகுந்தருணம் இது கண்டீர் நம்மவரே நான்தான் புகழ்கின்றேன் என்மொழி ஓர்பொய்மொழி எண்ணாதீர்”
    ஆக வள்ளலார் நம்மிடம் சத்தியம் செய்து அறிவித்தது; “மரணமில்லா பெருவாழ்வில் நாம் வாழ்ந்திடலாம்” என்பதைத் தான்.
    கடவுளை எங்ஙனம்
    வழிபாடு செய்தல் வேண்டும்?
    நமக்கு துணையாக எவரேனும் உண்டா?
    மேற்படி கேள்விக்கு பதில்;
    “உற்றவரும், பெற்றவரும், பிறரும், உடைமைகளும், உலகியலும், உற்றதுணை அன்றே” என்கிறார் வள்ளலார்.
    இறைநிலையை அறிய இறைவனே துணை என்பதை நாம் இங்கு சத்தியமாக அறிய வேண்டும். எனவே ஆண்டவனின் நிலையறிய அவர்தம் துணையையே தான் நாம் பக்தியோடு பணிந்து வேண்டுதல் வேண்டும்.
    வள்ளலார் கீழ்வருமாறு பக்தியோடு பணிந்து உரைக்கிறார்கள்.
    “மிகுந்த சுவைக் கரும்பே, செங்கனியே, கோந் தேனே, மெய்ப்பயனே, கைப்பொருளே, விலையறியா மணியே, தகுந்த தனிப் பெரும்பதியே, தயாநிதியே, கதியே, சத்தியமே.”
    மேலும், வள்ளலார் கீழ்வருமாறு கணிந்துளத்தே கனிந்து நினைந்துரைக்கிறார்.
    “பரம்பரமே, சிதம்பரமே, பராபரமே, வரமே, துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே, துரியமுடி அனுபவமே, சுத்த சித்தாந்த மதாய்த் தணிந்தநிலைப் பெருஞ்சுகமே, சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே” என்கிறார்கள்.
    அன்பர்களே!
    மேற்படியாக பத்தியொடு பணிந்து, கணிந்துளத்தே கனிந்து நினைத்துரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டு கொளல் ஆமே! என்கிறார் வள்ளலார்.
    நிற்க! அன்பர்களே, இந்த இடம் மிகவும் முக்கியமான இடமாகும்.
    மேலும் மிக முக்கியமாக மற்றொன்றையும் நமக்கு குறிப்பிட்டு சொல்கிறார்கள்.
    அஃது யாதெனில்;
    “கண்டதெலாம் அநித்தியமே
    கேட்டதெலாம் பழுதே
    கற்றதெலாம் பொய்யே
    நீர் களித்ததெலாம் வீணே
    உண்டதெலாம் மலமே
    உட்கொண்ட தெலாம் குறையே
    உலகியலீர் இதுவரையும் உண்மையறிந்திலிரே”
    என்கிறார் வள்ளலார். மேலும்,
    சாதியும், சமயமும், மதமும் பொய்யென (211)
    ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி (212)
    சாதியும், மதமும் சமயமும் காணா (115)
    ஆதிய நாதியா மருட்பெருஞ்ஜோதி (116) மற்றும்
    உரைநடைப் பகுதி பக்கம் 411&ல்;
    “சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயம், மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காம, குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும், கொலை, புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.”
    மேலும், எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடையாகிய சமயங்கள், மதங்கள் மார்க்கங்கள், என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்” என கடவுளிடத்தில் விண்ணப்பிக்க சொல்கிறார் வள்ளலார்.
    ஆக, அன்பர்களே,
    உண்மைக் கடவுளை கருத்தில் கருதி அக்கடவுளை உண்மை அன்பால் வழிபாடு செய்வதற்கு முன்பு, உலகில் காணும் சமய, மத, (மார்க்கங்களில்) சாதிகளில் லட்சியம் வையாது, அவற்றின் ஆசாரங்களை விட்டொழித்து பொது நோக்கத்தை வருவித்துக் கொண்டு நம்மை சுத்த சன்மார்கக நெறிக்கு தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் சத்தியமாக தெரிந்திருக்க வேண்டும்.

  • இஃது ரகசியம். எதனால் இங்கு சிலை,உருவங்கள், தலங்கள்,ஆச்சாரங்கள் இல்லை? –ஏபி ஜெ அருள்

    நம் வள்ளலார் நம்மை நேரடியாகவே ஆன்ம அறிவை கொண்டே விசாரிக்கச் சொல்கிறார்கள். என் மார்க்கம் அறிவுமார்க்கம். என் மார்க்கம் உண்மையறியும் மார்க்கம் என்கிறார் வள்ளலார்.
    எப்படி என்று ந‌ம் வள்ளலாரின் சத்திய வாக்கியத்தைக் கொண்டே பார்ப்போம்.

    இந்திரிய அறிவு:
    ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு.
    மனஅறிவு:
    அதன் நாம ரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் மனஅறிவு.
    ஜீவ அறிவு:
    அதன் பிரயோஜனத்தை யறிதல் ஜீவ அறிவு.
    ஆன்மஅறிவு:
    அந்தப் பொருளினது உண்மையை அறிதல் ஆன்மஅறிவு.
    ஞானசபை:
    ஞானசபை யென்பது ஆன்மப் பிரகாசம்.
    அந்தப் பிரகாசத்திற்குள் ளிருக்கும் பிரகாசம் கடவுள்.
    அந்த உள்ளொளியின் அசைவே நடனம்.
    இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞானசபை என்றும்,
    நடராஜர் என்றும், நடனம் என்றும் சொல்லுகிறது.
    ஆன்மாவும் ஜீவனும்
    ஆன்மா தனித்தே யிருக்கும்.
    ஜீவன் மன முதலாகிய அந்தக் கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.
    காட்சி
    பூர்வம் – புறப்புறம், இந்திரியக் காட்சி.
    பூர்வ பூர்வம் – புறம், கரணக் காட்சி.
    உத்தரம் – அகப்புறம், ஜீவக் காட்சி.
    உத்தரோத்தரம் – அகம், ஆன்மக் காட்சி.ஞான வகை:
    உபாய ஞானம் – ஜீவஅறிவு, நக்ஷத்திரப் பிரகாசம்.
    உண்மை ஞானம் – ஆன்மஅறிவு, சந்திரப் பிரகாசம்.
    அனுபவ ஞானம் – கடவுளறிவு, சூரியப் பிரகாசம்.
    உபாய ஞான மென்பது நக்ஷத்திரப் பிரகாசம்போல் தோன்றிய ஜீவஅறிவு. உண்மை ஞான மென்பது சந்திரப் பிரகாசம் போல் தோன்றிய ஆன்மஅறிவு. அனுபவ ஞான மென்பது எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள்அறிவு. ஆகையால் கடவுளை ஆன்மஅறிவைக் கொண்டு அறியவேண்டும்.
    சுத்த சன்மார்க்க சாதனம்
    சுத்த சன்மார்க்க சாதனம் 2 வகைப்படும்:
    பரோபகாரம், சத்விசாரம், பரோபகாரம் என்பது தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும் உபகாரஞ் செய்வது.
    சத்விசாரம் என்பது நேரிடாத பக்ஷத்தில் ஆன்மநேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு இருப்பது.
    கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல்,
    தன் சிறுமையைக் கடவுளிடத்தில் விண்ணப்பித்தல்.
    இந்த மார்க்கத்தால்தான் சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற வேண்டும்.

    சத்திய ஞானாசாரம்
    ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரமாசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாத்திராசாரம் முதலிய ஆசாரங்களொழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஒன்றே இது தொட்டு வழங்க வேண்டும். அதாவது, பெருந்தயவே வடிவமாக இருக்க வேண்டும்.
    அந்நியரின் தோஷம் விசாரியாமல் இருக்க வேண்டும்.
    உபாய வகையை நம்புதல் கூடாது;
    உண்மையை நம்புதல் வேண்டும்.
    இஃது ரகசியம். (இரகசியம் என்றால் உண்மை. இது சத்தியம் ஆகும்.)
    மேலும் அறிய பார்க்க:www.vallalar.org

     

    vallalar sky.jpg
  • Karunai Sabai Salai – APJ Arul

    TRUTH OF GOD

    vallalar-the-great

           On  1st February 2009, Karunai Sabai Salai is opened successfully. Portriate of His Holiness VALLALAR and Thiruvalluvar are declared opened .

    The ” DISCIPLINE” is only to be practiced in  Samarasa Sutha Sanmargam. Therefore ,the aforesaid principle of His Holiness Vallalar is taught here. The last conclusion of His Holiness  is only revealed to the  Society.  As pointedout by His HOliness , all religions, margams available in the world are declared as Main obstacles of this Sabai.

    The Karunai Sabai Salai having a “GRACE HALL” (Sabai) for conducting meetings to realize the truth of GOD as per the doctrines / principles of HIS HOLINESS VALLALAR and  another a Room (SALAI) for Anna Dhanam for only poor people.

    We, (members of Karunai Sabai – Salai) have decided and promised ourself that we will realize the truth of GOD on the base of HIS HOLINESS philosophy available in only Agaval, Peru-Ubadesam, Vinnappangals and Sutha Sanmarga Songs (called as Sixth Thirumurai). The above all are the primary and integral parts of the “Samarasa Sutha Sanmarga Sathiya Sangam”.

    We are inviting and requesting you to see our website regularly and to share with us about truth of God.

    We invite you to see our site : www.atruegod.org

    Compassion is only way to get the Grace of God

             Arutperumjothi                Arutperumjothi

             Thaniperumkarunai           Arutperumjothi