Author: unmai

  • சத்திய ஞான சபை” வழக்கில் ஆணையரின் ஆணை விபரம்

    சத்திய ஞான சபை” வழக்கில் ஆணையரின் ஆணை விபரம்

    Karunai Sabai-Salai Trust.

    சுத்தமாதி மூன்று தேகங்கள் பெற்ற ஞானி வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கு முற்றிலும் வேறுபாடான முறையில் 132 வருடங்களாக சமய அடிப்படையில் விகரகங்களை வைத்து சமய வழிபாடு செய்து வந்த “சமய பூசாரி”யை வெளியேற்றிய சிறப்புமிகு ஆணையரின் ஆணையின் முழு விபரம் வெளிப்படுத்துவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். —MRS. APJ. ARUL AND M/S karunai Sabai Salai Trust, Madurai.

    இந்த சிறப்புமிகு வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்தி சத்தியத்தை நிலைநாட்ட திருவருள் காரியப்பட்டது “ஓர் அன்பரிடம்”. இன்று வரை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பிடாத அந்த அன்பர்க்கு இந்நாளில் நமது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம். மேலும் இதற்கு உற்ற துணையாகவும், வேண்டிய போராட்டங்களை நல்ல நிலையில் ஏற்படுத்தி வழி நடத்திய “அனைத்து அன்பர்களும்” “வடலூர் வாழ் மக்களுக்கும்” திரு ஆணையர் & மேதகு தமிழக அரசாங்கத்திற்கும் எங்களது நன்றிகளை நாங்கள் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
    இந்த சிறப்புமிகு வரலாற்று ஆணையை வெளியிட உதவியாக இருக்கும் ஜ்ஜ்ஜ்.ஸ்ஹப்ப்ஹப்ஹழ்ள்ல்ஹஸ்ரீங்.ஸ்ரீர்ம் க்கு நன்றிகள் மற்றும் ஙழ்ள். அடஒ. அதமக அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்.

     

    இங்ஙனம்

    Ø திரு. எ. சுப்பிரமணியம், குறிஞ்சிபாடி
    Ø திரு. அ. செங்கான்
    Ø திரு. சந்திரமோகன் அய்யா அவர்கள், மதுரை
    Ø திரு. ஓ.ந. சகாதேவராஜா, இராஜபாளையம்
    Ø திரு. தர்மலிங்கம், இராமநாதபுரம்
    Ø திரு. அண்ணாமலை, விழுப்புரம்
    Ø திரு. பாலசுப்பிரமணியம், நெல்லை
    Ø திரு. பி.இரா. விஜயராகவன், வடலூர்
    Ø திரு. சுப்புராஜ், தூத்துக்குடி
    Ø திரு. முரளிதரன், திண்டுக்கல்
    Ø திரு. தாயுமானவர், குமரி

    வெளியீடு
    வள்ளலார் பேரவை, 228-2, மாடசாமி கோவில் தெரு, இராஜபாளையம்

    வெளியீட்டாளர் நோக்கம்

    Ø வள்ளலாரின் உண்மை பொதுநெறி “உள்ளது உள்ளபடியே” வெளிப்படுத்துதல் வேண்டும்.
    Ø அந்த சுத்திய நெறியை அறியாமையிலோ அல்லது அபக்குவிகளால் வேண்டுமென்று திரித்து கூறுவதினாலோ, வள்ளலாரின் உண்மை தெரியாமல் ஆகிவிடும்.
    Ø அச்செயலை தடுக்க நமக்கு உரிமையுண்டு என்பதை அறிய வேண்டும்.
    Ø வள்ளலாரின் உண்மை “உள்ளது உள்ளபடியே” உலகத்தார் அறிய வேண்டுமெனில், 
    Ø “மூலம்” மாற்றப்படாமல் பாதுகாக்க வேண்டும்.
    Ø முரணாக நடைபெறும் செயலை உடனே சட்டத்தின் துணை கொண்டு தடுக்கும் அறிவு வேண்டும்.
    Ø வரலாற்றினை திரித்து கூறுபவர்களை உலகிற்கு அடையாளம் காட்டுதல் வேண்டும்.
    Ø இந்த “கடமை”யிலேயே இந்த ஆணை விபரம் தரப்படுகிறது.

    ஆணையாளர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, 
    சென்னை 600 034 முன்பாக

    திங்கட்கிழமை, 30ம் தேதி, ஏப்ரல் மாதம், இரண்டாயிரத்து ஏழு
    சர்வஜித் ஆண்டு, சித்திரை மாதம் 17-ம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2038

    முன்னிலை : திரு. த. பிச்சாண்டி, இ.ஆ.ப.,
    சிறப்பு ஆணையர் மற்றும் ஆணையர்.

    சீராய்வு மனு 72 / 2006

    திரு. சபாநாதஒளி சிவாச்சாரியார் மனுதாரர்

    மற்றும்

    1. இணை ஆணையர்,
      இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை,
      விழுப்புரம்.
    2. திரு. ஜி. சுப்ரமணியன்,
      குறிஞ்சிப்பாடி,
      கடலுôர் மாவட்டம். எதிர்மனுதாரர்

    அருள்மிகு சத்தியஞான சபை, வடலூர்,
    கடலூர் மாவட்டம் குறித்து

    இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, விழுப்புரம், இணை ஆணையர் செ.மு.ந.க. 1426/2006 அ.2 நாள் 18.09.2006 மற்றும் செ.மு.ந.க. 1971/2006 அ.2 நாள் 18.09.2006ல் மேற்படி சபையின் பூஜை முறைகள் குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்திரவிற்கு எதிராக இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப் பிரிவு 21ல் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு.

    சீராய்வு மனு 72/2006ன் ஆணை

    1. இந்து சமய அறநிலையத் துறை, விழுப்புரம் மண்டல இணை ஆணையாளர் தனது 18.09.2006 நாளிட்ட ந.க.எண். 1971/2006 ஆ.2ல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டப் பிரிவு 21ன் கீழ் திரு. சபாநாதஒளி சிவாச்சாரியார் என்பவர் இந்த சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கின் விவரம் சுருக்கமாகக் கீழே தரப்பட்டுள்ளது.
    2. கடலூர் மாவட்டம் வடலூர் அருள்மிகு வள்ளலார் தெய்வ நிலையம் என்பது வள்ளலார் ஜோதியாய் மறைந்த சித்தி வளாகம், அவர் உருவாக்கி வழிபட்ட சத்திய ஞான சபை, அவர் துவக்கி இன்றும் நடந்து வரும் தருமசாலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இது, இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டப் பிரிவு 46 (ண்ண்ண்)ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு சமய நிறுவனமாகும். பரம்பரை அல்லாத அறங்காவலர் குழுவும், துறையின் செயல் அலுவலரும் இதன் நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றனர்.
    3. திரு. சுப்பிரமணியன் என்பவர் சென்னை, உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம் இணை ஆணையருக்கு அளித்த 07.06.2006ம் நாளிட்ட மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், சத்திய ஞான சபையில் தற்போது நடைபெற்று வரும் பூஜை முறைகள் வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானவை என்றும், அவற்றை மாற்றி அமைக்கத் தீர்வு காண வேண்டுமென்றும் நீதிப் பேராணை மனுத் தாக்கல் செய்தார். நீதிப் பேரணை மனு மீது மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் 17.07.2006 அன்று பிறப்பித்த தீர்ப்பில் மேற்குறிப்பிட்ட 07.06.2006 நாளிட்ட மனு மீது விரைவில் நடவடிக்கை எடுத்து முடிவெடுக்க வேண்டும் எனக் காலக்கெடு விதித்தது.
    4. இதையடுத்து, விழுப்புரம் மண்டல இணை ஆணையாளர் முறைப்படி விசாரணை நடத்தி, சத்திய ஞான சபையில் வள்ளலார் 18.07.1872 அன்று ஏற்படுத்திய வழிமுறைகளின்படியான ஜோதி வழிப்பாட்டிற்கு மாறாக, வேறு பூஜை முறைகளைக் கடைப்பிடிக்கக் கூடாது என்றும், குறிப்பாக விக்ரக வழிபாடு சத்திய ஞான சபையில் செய்யக்கூடாது என்றும் 18.09.2006 அன்று பொதுவான ஆணைகள் பிறப்பித்தார். இந்த ஆணை எதிராகத்தான் திரு. சபாநாதஒளி சிவாச்சாரியார் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
    5. திரு. சுப்ரமணியம் அளித்த மனுவில், வடலூரில் ஏற்படுத்திய ஞானசபையானது – சாதி, மதம் கடந்த, உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற ஏற்றத் தாழ்வு அற்ற, கொலை, புலால் தவிர்த்தவர்கள், மனித நேயமும், அன்பு உள்ளமும் கொண்டவர்கள் கூடி, அருவரும் உருவரும் இல்லாத ஜோதி தீப வடிவமாக இருக்கின்ற இறைவனை தரிசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இடம் என்றும், இதில் பூஜை முறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளலாரே 18.07.1872 நாளிட்ட பெரு விண்ணப்பத்தில் சபை வழிகாட்டி விதிகளை வெளியிட்டுள்ளார் என்றும், ஆனால் தற்போது வள்ளலாரின் விதிமுறைகளுக்கு முழு மாறாக, விக்கிரகங்கள், சடங்குகள் முதலியன சத்திய ஞான சபைக்குள் புகுத்தப்பட்டுள்ளன என்றும், ஜோதி தீபம் காட்டுவதற்கு முன்பு, வழக்கத்திற்கு மாறாக மற்ற சமயக் கோயில்களில் உள்ளவாறு கோயில் மணி அடிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு திரை விலகும்போதும் கற்பூரச் சுடர் காட்டப்படுவதாகவும், ஜோதி தீபம் தெரியும்போது அதை முற்றிலும் மறைக்கும் நோக்கத்துடன் கற்பூரச் சுடர் மேலே தூக்கிக் காட்டப்படுவதாகவும், திரு. சபாநாதஒளி சிவாச்சாரியார் ஞான சபைக்குள் சென்று லிங்கம் வைத்து பூசை செய்வதாகவும், பிரதோஷ நாளன்று சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து மக்களுக்கு விபூதி, நைவேத்யம் முதலியன கொடுப்பதாகவும், எனவே வள்ளலார் பெருமான் அருளிச் சென்ற சபை வழிபாட்டு விதி 18.07.1872 (வள்ளலார் தெய்வ நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள திருவருட்பா உரைநடைப்பகுதி பக்கம் 551) மற்றும் சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி 25.11.1872 (வள்ளலார் தெய்வ நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள திருவருட்பா உரை நடைப்பகுதி பக்கம் 553) வழிகாட்டுதல்களின்படியும், கொள்கைகளின்படியும், ஞான சபையையும், தரும சாலையையும் நடத்துவதற்கு தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டுமென வேண்டியிருந்தனர்.
    6. சீராய்வு மனுதாரர் தம் மனுவில் பின்வரும் முக்கிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    Ø விழுப்புரம் மண்டல இணை ஆணையாளர் இவ்வழக்கு தொடர்பான விசாரணையின்போது சிவில் நீதிமன்ற நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டார்.
    Ø எதிர் மனுதாரர் தன் தரப்பு வாதத்துக்கு சான்றுகள் எதையும் விசாரணையின்போது சமர்ப்பிக்கவில்லை.
    Ø 18.07.1872ம் நாளிட்ட விதிமுறைகள் என்று சொல்லப்படுபவற்றை வள்ளலார்தான் வழங்கினார் என்பதை எதிர் மனுதாரர் தரப்பில் நிரூபிக்கவில்லை. மேலும், வள்ளலார் வாழ்ந்த காலத்திலேயே இந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை இணை ஆணையர் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டார்.
    Ø வள்ளலாரின் முதல் சீடரான தொழுதாவூர் வேலாயுதம் முதலியார் முதல் வள்ளலாரின் கடைசி சீடரான ந.ங. கந்தசாமி பிள்ளை வரை எவரும் தாங்கள் எழுதியவற்றில் வள்ளலாரின் 18.07.1872 நாளிட்ட விதிமுறைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
    Ø வள்ளலார், சிவபெருமான் தனக்கு ஜோதி வடிவமாய் தரிசனம் கொடுத்தமைக்கு அடையாளமாக கண்ணாடியையும், ஜோதியையும் பிரதிஷ்டை செய்யும்படி ஆரூர் சபாபதி சிவாச்சாரியாரிடம் கூறினார். இவை வள்ளலார் உயிருடன் இருக்கும்போதே 25.01.1872 அன்று ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டன. மேலும், வள்ளலார் பெருமான் அவர்கள் ஆரூர் சபாபதி சிவாச்சாரியரிடம் ஸ்படிக லிங்கம் உள்ளிட்ட பல பூஜை பொருட்களை ஒப்படைத்து சைவ ஆகப்படி பூஜை செய்யும்படி கேட்டுக் கொண்டபடி இன்றுவரை அதன்படியே பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
    Ø வள்ளலார் தான் வாழ்ந்த காலத்தில் சைவ வழிபாட்டைப் பின்பற்றினார். தனது நெற்றியில் விபூதி அணிந்ததுடன் மற்றவர்களுக்கும் விபூதி வழங்கி, அவர்களின் நோயை குணப்படுத்தினார்; தனது பாடல்கள் பலவற்றில் சிவனின் பல அம்சங்களைப் புகழ்ந்து பாடியுள்ளார்; அவரது கடிதங்கள் பலவற்றின் வாயிலாகவும் அவரது சிவபக்தி நன்கு புலப்படுகிறது.
    Ø வள்ளலார், மறை ஞான சம்பந்தரின் ஓலைச் சுவடிகளைத் தம்மிடம் வைத்திருந்து, அதற்கு பாத பூஜை செய்து வந்ததும், தம் கடிதங்கள் எல்லாவற்றிலும் உ. சிவமயம், திருச்சிற்றம்பலம் என்று எழுதி வந்ததும் அவர் சைவ சமயத்தைப் பின்பற்றினார் என்பதற்கு சான்றுகள்.
    Ø வள்ளலார் இந்து மதத்துக்கு எதிராக எதையும் செய்யவில்லை; அவர் சொன்னதெல்லாம் இந்து மதத்தின் ஒரு பிரிவேயாகும்.
    Ø ஆறாம் திருமுறையில் இந்து மதக் கோட்பாட்டுக்கு எதிராக உள்ள பகுதிகளை வெளியிட வேண்டாம் என்று வள்ளலாரே குறிப்பிட்டுள்ளார்.
    Ø திருவண்ணாமலையிலும் ஜோதி தரிசனம் உள்ளது. தில்லை நடராஜர் ஆலயத்திலும் திரைக்கு பின் அருவ வழிபாடு நடைபெறுகிறது. இவை சைவ சமயத்துக்குப் புறம்பானவை என்று சொல்ல முடியாது.

    1. எதிர் மனுதாரர் சமர்ப்பித்த பொதுவான எதிருரையில் பின்வரும் முக்கிய கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார்கள் ;

    Ø வள்ளலார் பெருமான் தான் கண்ட சுத்த சன்மார்க்கத்துக்கு தனிப்பெயர், தனிக்கொள்கை, தனிக்கொடி, தனி இடம் ஏற்படுத்தி அவற்றிற்கான திருமந்திரம், சபை, சாலை வழிபாட்டு விதிகள், கட்டளைகள், நூல்கள், உரைகள், பாடல்கள் முதலிய எல்லாவற்றையுமே வழங்கியுள்ளார். இதனை மற்ற மதங்களுடன் ஒப்பிட இயலாது.

    Ø சுத்த சன்மார்க்கம் என்பது மதம், சமயம் கடந்ததோர் கொள்கையாகும். வள்ளலாரின் ஆறாவது திருமுறை, விண்ணப்பங்கள், வழிபாட்டு விதிகள், அருட்பெருஞ்ஜோதி அகவல், பேருபதேசம் ஆகியவை சமரச சுத்த சன்மார்க்கத்தின் முக்கியமான பிரிக்க முடியாத பகுதிகள் (டழ்ண்ம்ஹழ்ஹ் ஹய்க் ஐய்ற்ங்ஞ்ழ்ஹற்ங்க் டஹழ்ற்ள்) ஆகும். இவற்றைத் தவிர, ஆரம்ப காலத்தில் வள்ளலார் இயற்றிய ஐந்து திருமுறைகளையும் அவர் பின்னாளில் பின்பற்றவில்லை. இது குறித்து வள்ளல் பெருமானே தனது பேருபதேசத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

    Ø வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் உள்ள கருத்துக்களே மக்களிடம், அனைத்து நாட்டவர்களிடம், மிகுந்த விழிப்புணர்ச்சியையும், உலகத்தார் அனைவரையுமே ஒரு குடையின் கீழ் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை கொண்டு இறைவனின் உண்மையை ஐயம், திரிபு, மயக்கம் இன்றி அனுபவத்தில் காண வழிவகை செய்கிறது. இந்தக் கருத்துக்களை அறிந்தே, விருப்பம் கொண்டு, நம் நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும், கிறித்துவ, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களும், வடலூருக்கு சன்மார்க்கம் பற்றி அறிய வருகின்றனர். சத்திய ஞான சபை வழிபாடு, சமயம் சார்ந்ததாக இருப்பின் அவர்களின் இத்தகைய வருகை இருக்காது.

    Ø வள்ளலாரின் கோட்பாடுகள் எந்தவொரு சமயத்தையும் சாராத ஒரு தனிப்பட்ட தத்துவத்தை உள்ளடக்கிய தனித்தன்மை வாய்ந்த லட்சியத்தை, இறைவனைக் கொண்டது ஆகும்.

    Ø வள்ளலார் தான் கைப்பட எழுதிய ‘அருட்பெருஞ்ஜோதி அகவலின்’ மூலப் பிரதி இன்றும் தருமச் சாலையில் உள்ளது. வள்ளலாரின் தத்துவங்களின் சாரமே அகவல் ஆகும். வள்ளலார் சமயம் சாராத உன்னத தனித்தன்மையான கொள்கையைக் கொண்டவர் என்பது இந்த ‘அருட் பெருஞ்ஜோதி அகவல்’ மூலம் விளங்கும்.

    Ø சத்திய ஞான சபை, வள்ளலார் சைவ சமயத்தை சார்ந்திருந்த போது கட்டியது அல்ல. இந்த சபை வள்ளலார் பெருமான் தன் சித்தியில் கண்ட அக உண்மையே. அகமாகிய ஆன்மப் பிரகாசமே – ஞான சபை. அந்தப் பிரகாகத்துக்குள்ளிருக்கும் பிரகாசம் – கடவுள். அந்த உள்ளொளியின் அசைவு நடனம். இதுதான் ஞானப் பிரகாச நடனமென்றும், அசைவுற்றதே நடராஜ நடனமென்றும், ஆனந்த நடனமென்றும், வள்ளலார் நெறி சொல்கிறது. பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டும் சமயவாதிகளின் பால் லட்சியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துள்ள லட்சியம் போய்விடும் என்றார் வள்ளலார்.

    Ø சத்திய ஞான சபையின் ஒவ்வொரு அமைப்பும், சபை சுற்றி கிடக்கும் திருச்சங்கிலி முதல் உள்ளே வைத்திருக்கும் ஜோதி வரை ஒவ்வொன்றும் அக உண்மையாகும். உள்ளே அமைந்திருக்கும் படிகள், திரைகள், கட்டடத்தின் உயரம், அகலம் போன்ற அளவுகள் எல்லாம் வள்ளலார் சித்தியில் கண்ட அக உண்மையே. இவற்றிடையே வேறு ஏதேனும் (பித்தளை விளக்கு, சிலைகள் முதலியன) புகுத்தி வைக்கப்பட்டால் அது வள்ளலார் கண்ட அக உண்மையை அழிப்பதாகவே அமையும். சீராய்வு மனுதாரர் சத்திய ஞான சபையை கோயிலாக, மடமாக, சாதாரண கட்டடமாக உலகத்தார்க்குக் காட்ட திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். 

    Ø ஞான சபையின் உள்ளே தற்சமயம் சீராய்வு மனுதாரர் செய்யும் சடங்கு நடவடிக்கைகள், வைத்திருக்கும் விக்கிரகங்கள், நிலைக் கண்ணாடி, பித்தளை விளக்குகள், சிறு தெய்வ உருவங்கள் அனைத்தும் வள்ளலாரின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபாடானது. வள்ளலாரின் மதம் சாராத தனிக் கொள்கைக்கு முற்றிலும் வேறுபாடான உருவ வழிபாட்டினை சத்திய ஞான சபையில் புகுத்த வேண்டும் என்பது சீராய்வு மனுதாரரின் தீய எண்ணமாகும்.

    Ø சீராய்வு மனுதாரர் குறிப்பிட்டுள்ள சிவன், ஆகம விதிகள், பூஜைகள், லிங்கங்கள் இவை அனைத்துமே இந்து சமயத்தின் நியதி முறைகள். இவை சன்மார்க்கத்திற்கு சிறிதும் பொருந்தாது. சீராய்வு மனுதாரர் சொல்லியிருக்கும் பட்டியல் உண்மையானதல்ல. இதை மட்டுமே வைத்து வள்ளலாரின் கோட்பாட்டை மாற்ற முயற்சி செய்வது தடுக்கப்பட வேண்டும்.
    Ø சிராய்வு மனுதாரர் குறிப்பிடும் வேலாயுத முதலியாரும், கந்தசாமி பிள்ளையும் இருவரும் ஆறாம் திருமுறையை வெளியிட்டுள்ளனர். வள்ளலாரின் தமக்கையார் குடும்பத்தாரின், அருட்பெருஞ்ஜோதி அச்சகத்தின் வெளியீட்டிலும் சத்திய ஞான சபை வழிபாட்டு விதிமுறைகள் அடங்கியுள்ளன.

    Ø வள்ளலார் தன் கடிதங்களில் குறிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற சொல் சைவ சமயக் குறியீடாகக் கொள்ளக் கூடாது. சிற்றம்பலம் என்ற வார்த்தை பொதுவான பண்புடைய ஒரு பெயர்ச் சொல்லே. ‘உ’, ‘சிவமயம்’ என்ற வார்த்தைகளை வள்ளலார் சித்தி பெற்ற பின்பு எங்கும் பயன்படுத்தவில்லை. 

    Ø சீராய்வு மனுதாரர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையிலிருந்து எவ்வித சம்பளமும் பெற்று வருபவர் அல்ல. துறையின் மூலமாக முறையாகப் பணி அமர்த்தப்பட்டவர் அல்ல.

    Ø உரிய கால அவகாசம் கொடுத்து, முறைப்படி தொடர்புடைய அனைவருக்கும் அறிவிப்பு கொடுத்து, விசாரணை நடத்தி ஆவணங்களின் அடிப்படையில் விழுப்புரம் மண்டல இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவு நியாயமானதாகும்; அதை உறுதி செய்திட வேண்டும்.

     

    1. சீராய்வு மனுதாரரின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த எழுத்துப் பூர்வமான வாதுரையில் கீழ்கண்ட கூடுதல் கருத்துரைகள் தெரிவித்துள்ளனர் :

    Ø விழுப்புரம், இணை ஆணையரின் விசாரணையின்போது, எதிர் மனுதாரர் அளித்த மனுக்கள் பற்றிய விவரங்கள் சீராய்வு மனுதாரருக்குத் தெரிவிக்கப்படவில்லை.
    Ø விழுப்புரம், இணை ஆணையர், தான் பிறப்பித்த ஆணை, இந்து சமய அறநிலையச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. எதிர் மனுதாரர் சொல்வதுபோல் சட்டப் பிரிவு 25ல் இணை ஆணையருக்கு அதிகாரம் இல்லை.

    Ø வள்ளலார், ஆறாம் திருமுறையை தன் வாழ்நாளில் வெளியிடவில்லை. மேலும் கி.பி. 1872க்கும் 1936க்கும் இடையில் வள்ளலாரின் 18.07.1872 நாளிட்ட வழிபாட்டு முறைகள் தான் கடைப்பிடிக்கப்பட்டதா என்பதற்கு எதிர் மனுதாரர்கள் ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்கவில்லை.

    Ø வள்ளலார் தெய்வ நிலையங்கள் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட நிர்வாகத் திட்டத்தின் ஷரத்துக்களில் இந்த வழிபாட்டு முறை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.

    Ø சபாநாதஒளி சிவாச்சாரியாரின் முன்னோடியான ஆரூர் சபாபதி சிவாச்சாரியாரிடம் வள்ளலார் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். சைவ முறைப்படி பூஜைகள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் சிவாச்சாரியாரை இங்கு வள்ளலார் அமர்த்தியிருந்தார்.

    Ø வள்ளலார் தன் காலத்திலேயே ஆகம சாஸ்திர முறைப்படிதான் சத்திய ஞான சபையில் வழிபாடுகள் நடத்தினார். இதன்படியே இன்றும் பூஜைகள் தொடர்ந்து வருகின்றன.

    1. சீராய்வு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் திரு. எம்.சி. சுவாமி, திரு. அய்யாத்துரை ஆகியோரும், எதிர் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் திரு. வி. பாரதிதாசன், திரு. எம். சரவணகுமார், திரு. கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோரும் வாதிட்டனர். இரு தரப்பிலும் வள்ளலார் மற்றும் அவரது எழுத்துக்கள் தொடர்புடைய சில ஆவணங்களைத் தாக்கல் செய்தனர். சீராய்வு மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்களின் வாதங்களையும், தொடர்புடைய ஆவணங்களையும் நான் கவனமாகப் பரிசீலித்தேன்.
    2. சீராய்வு செய்யக்கோரும் ஆணையை விழுப்புரம் மண்டல இணை ஆணையாளர் எந்த சட்டப் பிரிவின் கீழ் பிறப்பித்துள்ளார். அத்தகைய ஆணையைப் பிறப்பிக்க, அவருக்கு அதிகாரம் உள்ளதா என்பது முதலில் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் 17.07.2006 நாளிட்ட ஆணையில் சத்ய ஞான சபை பிரச்சினை தொடர்பாகக் கொடுக்கப்பட்ட மனுவினை ஒரு காலக் கெடுவுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று விழுப்புரம் இணை ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே இணை ஆணையர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்பதை அவரது ஆணையிலிருந்து அறிய முடிகிறது.
    3. இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப் பிரிவு 28 (1)ல் ஒரு சமய நிறுவனத்தின் அறங்காவலர் அந்த நிறுவனத்துக்கான டிரஸ்டில் உள்ள உட்கூறுகளின்படியும், அதன் வழக்கப்படியும் அந்த சமய நிறுவனத்தின் காரியங்களை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப் பிரிவு 27ல், இந்த சட்டத்தின் பல்வேறு ஷரத்துக்களின்படி அரசோ, ஆணையாளரோ, கூடுதல் ஆணையாளரோ, இணை, துணை அல்லது உதவி ஆணையாளரோ ஒரு சமய நிறுவனத்தின் அறங்காவலருக்கு இடும் கட்டளைகளை ஏற்று செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சமய நிறுவனத்தில் ஏதேனும் ஒரு நடைமுறை பழக்க வழக்கம் பற்றிய பிரச்சனை எழுந்தால், அது பற்றி முடிவு செய்ய இணை ஆணையாளருக்கு சட்டப் பிரிவு 63 (ங்)ல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சீராய்வு மனு தொடர்பான விசாரணை எந்த அதிகாரத்தின் அடிப்படையில் என்று குறிப்பாகத் தெரிவிக்காவிட்டாலும், இணை ஆணையர் தனது ஆணையில் சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இணை ஆணையாளர் மேலே குறிப்பிட்டபடி சென்னை உயர் நீதிமன்றத்தின் திட்டவட்டமான ஆணையின்படியும், சட்டப் பிரிவு 28, 27 மற்றும் 63 ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுமே அவர் விசாரணையை நடத்தி ஆணை வெளியிட்டதாகக் கருத வேண்டியுள்ளது. தன் ஆணையில் சட்டப்பிரிவு பற்றி குறிப்பிடாததாலேயே அவரது ஆணை சட்டப்படி தவறானது என்று கருத முடியாது.
    4. சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி, வடலூர் சத்திய ஞான சபையில் நடைபெறும் பூஜை முறைகள் அதன் நிறுவனரான வள்ளலார் பெருமான் ஏற்படுத்திய நடைமுறைப்படிதான் நடத்தப்படுகின்றனவா என்பது பற்றிய விசாரணையை விழுப்புரம், மண்டல இணை ஆணையர், வள்ளலார் தெய்வ நிலைய செயல் அலுவலர் மற்றும் தக்கார் உள்பட தொடர்புடைய அனைவருக்கும் முறைப்படி அறிவிப்பு கொடுத்து நடத்தியுள்ளார். சீராய்வு மனுதாரருக்கு, 13.07.2006ம் தேதிய விசாரணைக்கு ஆஜராகும்படி 06.07.2006ம் தேதிய குறிப்பின் மூலமும், 03.08.2006ம் தேதிய விசாரணைக்கு ஆஜராகும்படி 20.07.2006ம் தேதிய குறிப்பின் மூலமும், 20.08.2006 விசாரணைக்கு ஆஜராகும்படி 10.08.2006ம் தேதிய குறிப்பின் மூலமும், 18.09.2006ம் தேதிய விசாரணைக்கு ஆஜராகும்படி 05.09.2006ம் தேதிய குறிப்பின் மூலமும் இணை ஆணையர் அறிவிப்பு அனுப்பிள்ளார். அதில், 20.07.2006 மன்றும் 10.08.2006ம் தேதிய குறிப்புகள் பெறப்பட்டமைக்கு சீராய்வு மனுதாரர் ஒப்புதலும் அனுப்பியுள்ளார். இறுதியாக 18.09.2006ல் விசாரணைக்கு ஆஜராகி, சீராய்வு மனுதாரர் இணை ஆணையர் முன் ஆவணங்களைத் தாக்கல் செய்து வாக்குமூலமும் கொடுத்துள்ளார். விசாரணை நடைமுறையில் ஏதேனும் மாற்றம் வேண்டும் என்று மனுதாரர் சார்பில் முறையீடு ஏதும் அப்போது செய்யப்படவில்லை. ஆவணங்களைப் பார்க்கும்போது, இணை ஆணையர் தொடர்புடைய அனைவருக்கும் போதிய வாய்ப்பு கொடுத்து, இந்த விசாரணையை முறைப்படி நடத்தியுள்ளதாகவே நான் முடிவுக்கு வருகிறேன்.
    5. மேலும், தற்போது என் முன்பு நடந்து முடிந்துள்ள சீராய்வு மனு மீதான விசாரணையில் சீராய்வு மனுதாரருக்கு எல்லா வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. அவரும் பிரச்சினை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பார்வையிட்டு, தன் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதுரை உட்பட எல்லா ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளார். சீராய்வு மனுதாரரின் வழக்கறிஞர் வாதங்களும் முழுமையாகக் கேட்கப்பட்டுள்ளன. இணை ஆணையாளர் நடத்திய விசாரணை சட்டபூர்வமானது தான் என்று நான் குறிப்பிட்டுள்ள நிலையில், மேலே உள்ளவற்றையும் கருத்தில் கொண்டு, வழக்குப் பிரச்சினையின் நியாயங்கள் பற்றிய ஆய்வுக்கு செல்வது பொருத்தமானது என்று கருதுகிறேன்.
    6. வள்ளலார் பெருமான், தான் நிறுவிய சத்திய ஞான சபையை ஒரு சிவன் கோவிலாகக் கருதி, சைவ ஆகமப்படியான வழிபாட்டு முறையை தான் பின்பற்றி வந்தார் என்றும், அத்தகைய வழிபாட்டு முறையை திரு. சபாபதி சிவாச்சாரியார் முதல் தம் முன்னோர்கள் தான் பூசகர்களாக இருந்து நடத்தி வந்தார்கள் என்றும் சீராய்வு மனுதாரரின் பொதுவான வாதம். இதற்கு முக்கிய சான்றுகளாக அவர் தரப்பில் காட்டப்படுவது பின்வருவனவாகும்.
      1) அவரது கடிதங்களில் ‘உ’ ‘சிவமயம்’ என்றும், ‘சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை’ என்றும் தவறாமல் குறிப்பிட்டு வந்தார்.
      2) சத்திய ஞான சபை சிதம்பரம் சிற்சபையின் மற்றொரு பரிணாமமே தவிர வேறொன்றுமில்லை.
      3) ஆறாம் திருமுறையிலும் சிவனைப் பற்றியும், சிவன் வழிபாட்டைப் பற்றியும், தில்லை சிற்சபையைப் பற்றியும் வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்.
      4) சபாபதி சிவாச்சாரியிடம் வள்ளலார் தம் வாழ்நாளில் ஒப்புவித்த பூசை பொருட்களில் சிவலிங்கமும், துôப, தீப, நிலைக் கண்ணாடியும் அடங்கும்.
      5) சத்திய ஞான சபை துவக்கப்பட்ட காலத்தில் எவ்விதப் பூசை முறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவோ, அதே பூசை முறைகள் தான் இப்பொழுதும் நடத்தப்படுகின்றன.
      மேலே குறிப்பிட்டுள்ள வாதுரைகள் அனைத்துக்கும் எதிர் மனுதாரர் தரப்பில் விரிவான மறுப்புரைகள் தரப்பட்டுள்ளன.
    7. வடலுôர், அருள்மிகு வள்ளலார் தெய்வ நிலையம் என்ற அமைப்பில் ஒரு பகுதியான சத்திய ஞான சபையை வள்ளலார் பெருமான் அவர்கள் உருவாக்கினார் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். இந்த சத்திய ஞான சபையில் வள்ளலார் காலத்திலோ அல்லது அதற்குப் பின்போ சிவ ஆகமத்தின்படிதான் வழிபாடு இருந்தது என்பதை நிரூபிக்க சீராய்வு மனுதாரர் சார்பில் திட்டவட்டமான ஆதாரம் எதுவும் தரப்படவில்லை. சிற்சில வருடங்களில் நடைபெற்ற தைப்பூச விழாக்களின் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள நடராஜர் படமும், அனுக்ஞை போன்ற வாசகங்களும் மட்டுமே சத்திய ஞான சபையில் சைவ ஆகமப்படியான சிவ உருவ வழிபாடு நடந்தமைக்கான சான்றுகள் எனக்கொள்ள இயலாது. மேலும், இந்தப் பத்திரிக்கைகள் சீராய்வு மனுதாரரும், அவரது முன்னோரும் தன்னிச்சையாக அச்சிட்டவையாகும். சைவாகமப்படியான, சிவ உருவ வழிபாட்டு முறைகள் முற்றிலும் வேறானவை. இந்த அழைப்பிதழ்களில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைக் கூட வள்ளலார் நிறுவிய சன்மார்க்க நெறியினர் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர்.
    8. சத்திய ஞான சபையை நிறுவுங் காலத்தில் சிவ ஆகமப்படியான வழிபாட்டினை வள்ளலார் அவர்கள் கடைப்பிடித்திருப்பாரேயானால், சத்திய ஞான சபையை, சைவ ஆகம விதிகளின்படி, ஒரு சைவத் திருக்கோயிலாக அமைத்திருப்பார். சைவ ஆகம விதிகளின்படி ஒரு கோயில் அமைக்கப்பட்டால், அந்த அமைப்பில் கருவறையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். திருக்கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் போன்ற அமைப்புகள் இருக்கும்; மேலும், சிவலிங்கத்திற்கு முன்பாக நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இதுபோன்ற அமைப்பு எதுவும் சத்ய ஞான சபையில் இல்லை. சைவாகமப்படியான எந்த அமைப்புமில்லாமல், முற்றிலும் வித்தியாசமான ஒரு வழிபாட்டுத்தலமாக சத்திய ஞான சபையை வள்ளல் பெருமான் நிறுவியுள்ளார். இப்படி முற்றிலும் மாறுபட்ட அமைப்பாக, சைவாகமங்களுக்கு அப்பாற்பட்டு அமைந்த இவ்வழிபாட்டுத்தலத்தை சைவாகமத்தின்படி அமைக்கப்பட்ட சிவன் கோயிலாகக் கற்பித்து, அங்கு உருவ வழிபாடு, பிரதோஷ பூஜை, அபிஷேகம் முதலியன செய்வதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.
    9. அடுத்து, ஆறாம் திருமுறையை வள்ளலார் தாம் வாழ்ந்த காலத்தில் பதிப்பிக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி, ஆறாம் திருமுறையில் உள்ளவற்றை வள்ளலார் ஏற்கவில்லை என்று சீராய்வு மனுதாரர் கூறுகிறார். பண்டைத் தமிழ் இலக்கியங்களை, அவற்றை எழுதியவர்களே பதிப்பித்து வெளியிட்டதாக வரலாற்றுச் சான்றுகள் இல்லை. மாறாக, அவை கையெழுத்துப் பிரதிகளாகவோ அல்லது ஓலைச் சுவடிகளாகவோ கிடைக்கப்பெற்று, பிற்காலத்தில், தமிழ் அறிஞர்களால் படி எடுக்கப்பட்டு, அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு வெளியிடப்பட்ட பிரதிகளே இன்று நமக்கு காணக் கிடைக்கின்றன. ஒரு புத்தகத்தை எழுதியவரே அதைப் பதிப்பிக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி அந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்களை அவர் ஏற்கவில்லை என்று கூற முடியாது. அதே போல், வள்ளலார் எழுதிய ஆறாம் திருமுறை அவர் காலத்தில் பதிப்பிக்கப்படவில்லை என்பதாலேயே, ஆறாம் திருமுறையில் உள்ள கருத்துக்களை அவர் ஏற்கவில்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.
    10. சத்திய ஞான சபை வழிபாட்டு முறைகளைப் பற்றி வள்ளலார் பெருமான் 18.07.1872 அன்று வெளியிட்ட அறிவிக்கை, ஆறாம் திருமுறையிலுள்ள அருட்பெருஞ்ஜோதி அகவல் முதலிய பாடல்கள், உரைநடைப் பகுதி, கடிதங்கள் ஆகியவற்றை எதிர் மனுதாரர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தொடக்க காலத்தில் பதிப்பிக்கப்பட்ட ஆறாந்திருமுறைகளில் இப்பகுதிகளில் பல இல்லை என்றும், எனவே, இவற்றை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படும் வழிபாட்டு முறைகளை ஏற்கக் கூடாது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. திருவருட்பா ஆறாந் திருமுறை வள்ளலார் ஜோதியாய் மறைந்து சில வருடங்களுக்குப் பின்பு பதிப்பிக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆறாம் திருமுறை பதிப்புகளுள் பழமையானவை என்று சொல்லத்தக்கவை. 1885ஆம் ஆண்டில் திரிசிரபுரம் லோகநாத செட்டியாரால் வெளியிடப்பட்ட பதிப்பும், 1896ஆம் ஆண்டில் பிருங்கிமாநகரம் ராமசாமி முதலியாரால் வெளியிடப்பட்ட பதிப்பும், 1924ஆம் ஆண்டில் ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்ட பதிப்பும், 1931-32ஆம் ஆண்டில் ஏ. பாலகிருஷ்ணப்பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்ட பதிப்பும், 1932ஆம் ஆண்டில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரால் வெளியிடப்பட்ட பதிப்பும் ஆகும். எல்லாப் பதிப்புகளிலும் அருட்பெருஞ்ஜோதி அகவல் உள்ளதையும், இது வள்ளலார் பெருமானின் திருக்கரத்தாலேயே எழுதி அருளப் பெற்றது என்பதையும் மறுக்க முடியாது.
    11. அதேபோல, வள்ளலாரின் உபதேசப் பகுதி, திருமுகப் (கடிதங்கள்) பகுதி முதலியனவும் இந்தப் பழம் பதிப்புகளில் இருந்தன என்பதை திரு. பாலகிருஷ்ணப் பிள்ளை அவர்களின் பதிப்பையும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் பதிப்பையும், பின்னாளில் வள்ளலார் தெய்வ நிலையம் வெளியிட்ட பதிப்பின் முன்னுரையையும் பார்த்தால் தெரிய வரும். உபதேசப் பகுதிகள் அனைத்தும் வள்ளலார் காலத்தில் வாழ்ந்த அவர்தம் சீடர்களும், மற்றவர்களும் அவ்வப்போது வள்ளலார் ஆற்றிய உபதேசங்களைக் கேட்டு எழுதி வைத்த குறிப்புகளாகும். இக்குறிப்புகளில் உள்ள செய்திகளும், வள்ளலார் தம் கைப்பட எழுதிய அருட்பாக்களில் உள்ள செய்திகளும் ஒன்றுக்கொன்று இசைந்து இருத்தலே இவை வள்ளலார் பெருமானாரால் சொல்லப்பட்டவை என்பதற்கு சான்றாகும். திருமுகங்கள் / கட்டளைகள் பெரும்பாலும் வள்ளலார் தம் கைப்பட எழுதியவையாகும். இவையனைத்தும் 1900ஆம் ஆண்டு வாக்கிலேயே வெளிவந்துவிட்டன எனினும், 1920-1930 வாக்கில் முறைப்படி பதிப்பிக்கப்பட்டுள்ளன. தற்காலம் வெளிவரும் பதிப்புகள் அனைத்திலும் இவை அனைத்தும் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் புறக்கணிக்கவோ, இவற்றில் உள்ள செய்திகளை உண்மையில்லை என்று ஒதுக்கவோ முடியாது. அவ்வாறு மறுப்பதற்கான ஆதாரம் எதையும் சீராய்வு மனுதாரர் தரப்பில் வைக்கவில்லை.
    12. ஆறாம் திருமுறையில் உள்ள சில பாடல் பகுதிகளைத் தங்களுக்கு ஆதாரமாக சீராய்வு மனுதாரர் தனது சீராய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, “நினைத்து, நினைத்து” என்ற பாடல் முதலான 28 பாடல்களை, வள்ளலார் சிவ வழிபாட்டில் வைத்திருந்த நம்பிக்கையை மாற்றவில்லை என்பதற்கு ஆதாரமாக சீராய்வு மனுதாரர் சுட்டிக்காட்டி உள்ளார். சீராய்வு மனுதாரர் குறிப்பிடும் பாடல்கள் திருவருட்பா ஆறாந்திருமுறையில் 110. ஞானசரியை என்ற பகுதியில் உள்ளன. இப்பாடல்களில் “சிவன்” என்றும் “சிற்சபை” என்றும் சொற்றொடர்கள் ஆங்காங்கே வருவது சிவாலயத்தையும், சைவ சமயத்தையுந்தான் குறிக்கிறது என்பது சீராய்வு மனுதாரரின் கருத்தாக இருக்கலாம். இவ்விரு சொற்றொடர்களைக் கொண்டே வள்ளலார் சைவாகமப்படியான சிவன் வழிபாட்டை, தான் சமரச சன்மார்க்க சங்கம் நிறுவிய பின்பும் ஏற்றுக் கொண்டார் என வாதிடுவது பொருத்தமற்றது. வள்ளலார் பெருமான் “சிவன்” என்று தமது ஆறாம் திருமுறைப் பாடல்களில் குறிப்பிடுவதெல்லாம் பொதுவான இறைவனைத்தான்; சிற்சபை என்று குறிப்பிடுவது இறைவன் ஒளி நடம்புரியும் சபையைத் தான். இதைத் தன் ஞானத்தால் அறிந்து, அதை வெளிப்படுத்தும் இடமாக சத்திய ஞானசபையை பெருமான் நிறுவியுள்ளார். “கடவுள் பற்றி இதுவரை நாம் கண்டதும், கொண்டதும் எல்லாம் அனைத்தும் நிலையற்றவை; உண்மைக்குப் புறம்பானவை” என்று கூறி, தான் கண்ட உண்மையை இப்பாடல்களில் வள்ளலார் எடுத்துக் கூறுகிறார். இவ்வகையில், ஞானசரியை என்ற தலைப்பில் உள்ள பாடல்களில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் சீராய்வு மனுதாரரின் வாதத்துக்கு எதிராகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, பின்வரும் இரு பாடல்களில் உள்ளவற்றைக் கூறலாம்.
      “கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
      கற்றதெலாம் பொய்யே நீர் களித்ததெலாம் வீணே
      உண்டதெலாம் மலமேயுட் கொண்டதெலாம் குறையே
      உலகியலீர் இதுவரை உண்மையறிந் திலீரே!” – பாடல் 4

    “முயன்றுலகில் பயனடையா மூடமத மனைத்தும்
    முடுகியழிந் திடவும்ஒரு மோசமில்லாதே
    இயன்றஒரு சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும்
    எம் இறைவன் எழுந்தருள இது தருணம் கண்டீர்” – பாடல் 17

    21) சீராய்வு மனுதாரர் சொல்வது போல, வள்ளலார் அவர்கள் அருளிச் செய்த திருவருட்பா ஆறாவது திருமுறையில் சிவ வழிபாட்டை வலியுறுத்தவில்லை. மாறாக, உருவ வழிபாட்டை விலக்கி, சன்மார்க்க நெறியையே வலியுறுத்தியுள்ளார். ஆறாம் திருமுறையில் உள்ள அவர் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் முதலிய பாடல்களும், அவர் எழுதி வெளியிட்ட பல கடிதங்களும், கட்டளைகளும், அவர் உபதேசம் செய்ததைக் கேட்டு அக்கால அன்பர் எழுதி வைத்த குறிப்புகளும் இதற்கு சான்றாக பெருமளவில் காணக் கிடைக்கின்றன. இவற்றை நாம் ஒதுக்கிவிட முடியாது. உருவ வழிபாட்டிலிருந்து விலகி, ஜோதி வழிபாட்டை வலியுறுத்தியது ஆறாம் திருமுறையில் உள்ள கீழ்க்கண்ட பகுதிகளின் மூலம் தெளிவாய் தெரிய வருகிறது. (1932 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருவருட்பா ஆறாவது திருமுறை – சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு)

    அ) வள்ளலார் வெளியிட்ட “அற்புதப் பத்திரிக்கையில்” (பக்கம் 555-557) வள்ளலார் அவர்கள் “எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெருஞ்சுகத்தையும் பெருஞ்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள், தாமே திருவுள்ளம் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய இலட்சியமாகிய உண்மை விளக்கஞ்செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தாலியற்றுவித்து, இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம், அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளை எல்லாம் விளங்க, யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் எனும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி அருட்பெருஞ்சோதியராய் வீற்றிருக்கின்றார்” என்றும், “சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்றும், பூரணம் பொது வெளியில், அறிவாரறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆ) வள்ளலார் அவர்களால் வெளியிடப்பட்ட உண்மைப் பத்திரிக்கையில், (பக்கம் 558) “இப்போது வருகிற நமது கடவுள் இதற்குமுன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாக சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டு கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுள், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார். இதே உண்மைப் பத்திரிகை 1932ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பாலகிருஷ்ணப்பிள்ளை அவர்களின் பதிப்பிலும் ‘சன்மார்க்கப் பெரும்பதி வருகை’ என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

    இ) வள்ளலார் அவர்களால் வழங்கப்பட்ட உபதேசத்தில் (பக்கம் 572 – 573)இதற்கு மேற்பட நாம் நாமும், பார்த்தும், கேட்டும் இலட்சியம் வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் இலட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால் அவைகளில் ஒன்றிலாவது குழுஉக்குறி யன்னியில் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள்என்றும், “இதுபோல், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும இலட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில்.தெய்வத்தைப் பற்றி குழுஉக்குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். 
    இது தவிர வள்ளலாரின் உபதேசப் பகுதிகளிலும் அவர் சைவ, வைணவ நெறிகளிலிருந்து விலகி அன்பை முன்னிலைப் படுத்திய சமரச சன்மார்க்கம் கண்டதை தெளிவுபடுத்தியுள்ளார். 

    22. வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவியது 1865 ஆம் ஆண்டிலாகும். அதன் பின்பும் அதன் நடைமுறைகளிலும், பெயரிலும், அமைப்பிலும் பல்வேறு மாற்றங்களை அவர் செய்து வந்திருக்கிறார். சமரச வேத சன்மார்க்க சங்கம் என்று 1865ல் துவக்கியதை பின்னர் 1872ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் எனப் பெயர் மாற்றி அறிவித்துள்ளார். இதே ஆண்டில் தான் அடிகளார் சத்திய ஞான சபையை நிறுவியுள்ளார். சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவிய 1865க்கும், 1872க்கும் இடையில் வள்ளலாரின் பாடற் கருத்துக்களில் அவரது முந்தைய கொள்கை அடிப்படையில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. இம்மாற்றங்கள் அனைத்தும் இறைவன் உருவமற்ற ஜோதிமயமானவர் என்ற நிலையை நோக்கிய படித்தளங்களாகவே அமைந்துள்ளன. தன் வழியைப் பின்பற்றும் சன்மார்க்க நெறி அன்பர்களை, மெதுவாக, கவனமாக அவர் சத்திய ஞான சபை வழிபாட்டு நெறிமுறைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். சரியான ஒரு கட்டத்தில் சத்திய ஞான சபையினை நிறுவி அங்கு முற்றிலும் உருவ வழிபாடு இல்லாத, ஜோதி வழிபாட்டைத் துவக்கியிருக்கிறார். உண்மை நிலை இவ்வாறிருக்க, முற்காலப் பாடல்களில் உள்ள ‘ சிவ’, ‘ சிற்சபை’ என்ற பொதுவான வார்த்தைகளை மட்டும் வைத்து வள்ளலார் சைவாகம ரீதியான உருவ வழிபாட்டில் தன் இறுதிக் காலத்திலும் நிலைத்திருந்தார் எனக் கூறுவது வியப்புக்குரியது.

    1. மனுதாரர் சபாநாத ஒளி சிவாச்சாரியாரின் முன்னோடியான ஆடுர் சபாபதி சிவாச்சாரியாரை வள்ளலார் அவர்கள் சைவ முறைப்படி பூஜைகள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தம்மிடம் அமர்த்தியிருந்தார் என்று சீராய்வு மனுதாரரால் குறிப்பிட்டுள்ளது ஏற்கத்தக்கதாக இல்லை. சபாபதி சிவாச்சாரியார் 1869ல் தான் வள்ளல் பெருமானிடம் வந்து சேர்ந்தார் என்பது வரலாறு. அதற்கு முன்பு சபாபதி சிவாச்சரியார் வள்ளலாருக்குப் பழக்கமானவர் என்றாலும், வள்ளலாரிடம் வந்து நிரந்தரமாகத் தங்கியது 1869 முதல்தான். வள்ளலார் ஒரு மகான். தம் எழுத்துக்கள் அனைத்திலும் ஓர் அதீதப் பணிவை, எளிமையை அவர் காட்டியுள்ளார். அதே பணிவைத்தான் அவர், தான் சபாபதி சிவாச்சாரியாருக்கு 1868ல் எழுதிய கடிதத்திலும் வெளிப்படுத்தியுள்ளார். இக்கடித வாசகங்களைக் கொண்டு, சபாபதி சிவாச்சாரியார் வள்ளலாருக்கும் மேலான மகான் என்றும, அவர் சொன்னபடியெல்லாம் தான் வள்ளலார் நடந்தார் என்றும், அவரை வைத்து சத்திய ஞான சபையில் வள்ளலார் சிவகாமி பூஜையை செய்து வந்தார் என்றும் சொல்ல முயல்வது முற்றிலும் உண்மைக்கு மாறானவை. விசாரணையின்போது சமர்ப்பித்த அறங்காவலர் பட்டியலைப் பார்க்கும் போது, முதலியார், ஐயர், சிவாச்சாரியார், ரெட்டியார், செட்டியார் மற்றும் பல்வேறு வகுப்பினைச் சேர்ந்தவர்கள் சத்திய ஞான சபையின் அறங்காவலர்களாக, பல்வேறு காலங்களில் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அந்த அடிப்படையிலேயே, சீராய்வு மனுதாரரின் முன்னோர்கள் அறங்காவலர் குழுவில் பங்கேற்றிருக்கலாம். இதனால் மட்டுமே சத்ய ஞான சபையில் சிவ வழிபாடு நடைபெற்று வந்தது என்று கூற இயலாது. மனுதாரர் அளித்துள்ள ஆவணங்களில், அவர் சத்திய ஞான சபையில் அர்ச்சகராக முறைப்படி நியமிக்கப்பட்டதற்கோ, பணியாற்றியதற்கோ ஆதாரம் இல்லை.
    2. சத்திய ஞான சபை கட்டடம் கட்டும் பணி 1871ல் துவங்கப்பட்டு, 1872ல் முடிவடைந்து, சத்திய ஞான சபையின் முதல் தைப்பூச விழா 25.1.1872 அன்று நடைபெற்றிருக்கிறது. அதே நாளன்று தான் சபையைப் பற்றிய விளம்பரம் ஒன்றை பெருமான் வெளியிட்டிருக்கிறார். பின்னர் 18.4.1872 அன்று அருட்பெருஞ்ஜோதி அகவலை அடிகளார் அருளினார் “ அருட்பெருஞ்ஜோதி அகவற் பாவானது வள்ளல் பெருமானுக்கு அருட்தரிசனம் உண்டாகும் காலையில் அருளிச் செய்த தென உணரப்பட்டேன்” என்று பெருமானோடு பழகியவர்களுள் ஒருவரான ஆனந்த நாத சண்முக சரணாலய சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். இத்தகு சிறப்பு மிக்க அருட்பெருஞ் ஜோதி அகவலில் “திரை விளக்கம்” என்ற தலைப்பில் அடிகள் தெரிவித்துள்ளவாறுதான் சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் செய்யும் முறையை பெருமான் வகுத்துள்ளார் என்பது தெளிவு.
    3. சத்திய ஞான சபையில் நாள்தோறும் வழிபாடு நடைபெற்று வந்தாலும், பெருமானது கெள்கையின்படி நடைபெறவில்லை எனத் தெரிகிறது. எனவே சபைக்குரிய வழிபாட்டு விதிகளை பெருமான் 18.7.1872 அன்று வகுத்தருளினார் ‘ஞானசபை விளக்க விபவ பத்திரிக்கை’ என்ற அந்த அறிவிக்கையில்தான் பெருமான் சத்திய ஞான சபை வழிபாட்டு விதிமுறைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிக்கைப் பத்திரிக்கை வள்ளலாரால் வெளியிடப்பட்டதன்று என்பது சீராய்வு மனுதாரரின் வாதம். இதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் எதையும் அவர் அளிக்கவில்லை. இந்த விளம்பரம் ‘ஞானசபை விளக்க விபவ பத்திரிக்கை’ என்று பாலகிருஷ்ணபிள்ளை பதிப்பிலும் (1932),சமரச சுத்த சன்மார்க்க சங்கப் பதிப்பிலும் (1932) வந்துள்ளது. இந்தப் பத்திரிகை பற்றி பாலகிருஷ்ணப்பிள்ளை ‘ஞானசபைக் கதவை நேர்ந்த காலத்தில் திறந்து, நேர்ந்தவர்களுக்குக் காட்டி மரியாதையில்லாது இருந்ததைப் பற்றி ஸ்ரீ சங்க பிரபுக்களில் ஒருவராகிய உத்தரவாதமுடைய ஆறுமுக முதலியார் சன்னிதானத்தில் விண்ணப்பித்துக் கொண்டதற்கு வெளியான பத்திரிகை என்பது ஒர் பிரததியில் கண்ட இத் தெய்வத் திருமுக வரலாறாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார். வள்ளலார் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த பெரியோர்களின் கூற்றுக்கள், அறுவகைச் சமய நெறிகளினின்று விலகி, சாதி பேதமற்ற சமரச சத்திய சன்மார்க்க சங்கத்தை வள்ளலார் நிறுவியதன் நோக்கம், முதலிய அனைத்தையும் நோக்கினால் 18.7.1872 நாளிட்ட, அவர் கைப்பட எழுதிய சபை நடைமுறை விதிகள் அறிவிக்கை உண்மையானதே என்பது புலனாகும். வள்ளல் பெருமானாரின் முதல் ஐந்து திருமுறைகளும் சமயத்துக்குட்பட்ட சொருப தோத்திரமாயும், ஆறாவது திருமுறை சமயாதீத பரவஸ்துவின் இலக்கணத்தை உள்ளடக்கி நிற்கும் தோத்திரப் பாக்களாயும் அமைந்த நிலையில், அதிலும் ஆகம சாஸ்திர முறைப்படி சத்ய ஞான சபை அமைக்கப்படாத நிலையில், அங்கு ஆகம சாஸ்திரப்படி பூஜைகள் நடைபெற்று வந்துள்ளன என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.
    4. சீராய்வு மனுதாரர் தன் மனுவில், திரு. சபாபதி சிவாச்சாரியாரிடம், வள்ளல் பெருமான் ஒரு நிலைக் கண்ணாடியையும், தீபத்தையும் கொடுத்து,தற்போது நடைபெற்று வருவது போன்ற பூஜையைத் தொடங்கி வைத்தார் எனக் குறிப்பிட்டு, அதற்கு சான்றாக வள்ளல் பெருமான் தம் கைப்பட எழுதிக் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். இதையே விழுப்புரம் இணை ஆணையர் முன்பு விசாரணையின் போதும் ஒரு சான்றாவணமாக தாக்கல் செய்துள்ளார். இந்த சான்றாவணத்தில் வருடம், தேதி, நாள் , கிழமை முதலிய எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், இதில் உள்ள திரு. சபாபதி விசாச்சாரியாரின் கையொப்பமும், வள்ளலாரின் கையொப்பமும், அவர்களுடையது தான் என்பது நிரூபிக்கப்படவில்லை. இதனால் ஆவணத்தின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்படவில்லை என்றும் விழுப்புரம் இணை ஆணையர் தன் ஆணையில் குறிப்பிட்டுள்ளார். விழுப்புரம் இணை ஆணையரது உத்தரவில் இந்த ஆவணம் குறித்து குறிப்பிட்டுள்ள கருத்துக்களை மறுப்பதற்கு ஆதாரம் எதையும் சீராய்வு மனுதாரர் தற்போதும் தாக்கல் செய்யவில்லை. மேலும், அவர் தாக்கல் செய்துள்ள சான்றாவணத்தில் ஸ்படிக லிங்கமும் இடம் பெறவில்லை அதில் உள்ள இராமலிங்க அடிகளாரின் கையொப்பமும் மற்ற ஆவணங்களோடு ஒப்பிடும்போது மாறுபாடுகிறது.
    5. சீராய்வு மனுதாரர் குறிப்பிடும் உ. “ சிவமயம்” சொற்கள் சிவ வழிபாட்டை வலியுறுத்தும் என்பதை எதிர் மனுதாரர்கள் மறுத்துள்ளனர். மேலும் மேற்கண்ட வார்த்தைகளை வள்ளலார் சித்தி பெற்ற பின்பு பயன்படுத்தவில்லை என்றும் எதிர் மனுதாரர்கள் வாதிக்கின்றனர். மேலும், மேற்கண்ட சொற்களைப் பயன்படுத்துவதனாலேயே சத்ய ஞான சபையில் சிவ வழிபாட்டு முறை உள்ளதாகக் கூற இயலாது. ஏற்கனவே தெரிவித்தபடி சை ஆகமப்படி உருவாக்கப்பட்ட கோயில் வேறு சத்திய ஞான சபை முற்றிலும் வேறுபாடான அமைப்புள்ளது.
    6. மேலும், விழுப்புரம் இணை ஆணையாளர் தமது உத்தரவின் மூலம், வள்ளலார் தெய்வ நிலையங்களை இந்து சமய அறநிலைய சட்டத்தின் ஆளுகையிலிருந்து எடுத்துவிட்டதாகவும் சீராய்வு மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இதனை எந்த அடிப்படையில் மனுதாரர் குறிப்பிடுகின்றார் எனத் தெரியவில்லை. மனுதாரர் உருவ வழிபாடு உள்ள நிறுவனங்களே இந்து சமய அறநிலைய சட்டத்தின் கீழ் வரும் என்று அவர் கருதி அதன் அடிப்படையில் மேற்கண்டவாறு கூறியிருக்கலாமெனத் தெரிகிறது. சட்டப்பிரிவு 6 (20) ல் திருக்கோயில் என்ற சொல் வரையறுக்கப்பட்டுள்ளது. அதில், திருக்கோயில் என்பது “பொது மத வழிபாடு’’ நடைபெறும் இடம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உருவ வழிபாடு கட்டாயமாக்கப்படவில்லை. உருவ வழிபாடு இல்லாவிட்டாலும், பொது வழிபாடு இருக்குமேயாயின், அந்த வழிபாட்டுத்தலம் இந்து சமய அறநிலைய சட்டத்தின் கீழ் வருமென உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவாக்கியுள்ளது. இதனடிப்படையில் தான் வள்ளலார் தெய்வ நிலையங்களை இந்து சமய அறநிலையத்துறை சட்டத்துக்குட்படுத்தி இந்து சமய அறநிலைய வாரியம் தன் 12.2.1935 நாளிட்ட ஆணையில் அறிவித்துள்ளதும், இதன் நிர்வாகத்துக்கு 28.9.1953 அன்று திருத்தப்பட்ட திட்டம் வகுக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, சீராய்வு மனுதாரரின் வாதம் ஏற்கத்தக்கதல்ல.
    7. வள்ளலார் பெருமானுடன் நெருங்கிப் பழகி அவரது முதல் சீடனாக விளங்கிய தொழுதாவூர் வேலாயுத முதலியார் அவர்கள் 1882 ஆம் ஆண்டு பட்ங்ர்ள்ர்ல்ட்ண்ஸ்ரீஹப் நர்ஸ்ரீண்ங்ற்ஹ் யாருக்கு அளித்த வாக்குமூலத்தில் வள்ளலாரைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
      அவர் சாதி வேற்றுமையை கண்டித்துப் பேசியதால் அனைவரது பெரும் பாராட்டிற்கு உரியவராக இல்லை. ஆயினும், எல்லா சாதியாரும் பெருந்திரளாக அவரை சூழ்ந்திருந்தனர்.

      “ இயற்கைக்கு மேம்பட்ட எதையும் அவர் ஒப்புவிப்பதில்லை. தனது மார்க்கம் அறிவியலை அடிப்படையாகக் கொண்டது என்று இடையறாது வற்புறுத்தியுள்ளார்.” அவர் போதித்தவற்றுள் சில பின்வருமாறு …………….
      5, மக்களால் ‘ கடவுள்’ என்று சொல்லப்படுவது உண்மையில் எல்லா உயிர்களிடத்தும் காட்டும் அன்பே, இவ்வன்பே இயற்கை முழுவதையும் ஒளியாக இயங்கச் செய்கிறது. 
      6. மக்கள் தமக்குள்ளே மறைந்து கிடக்கும் தெய்வீக சக்தியை உணர்ந்து கைவரப்பெற்றால், பூமியின் ஈர்ப்பாற்றல் முதலிய இயற்கை நியதிகளையும் மாற்றும் அரிய சக்திகளையும் பெறக் கூடும்.

    8. இராமலிங்க அடிகளார் 19 ஆம் நூற்றாண்டில் அவதரித்த ஒரு மிகப் பெரிய ஞானி ஆவார். அவர் புத்தருக்கு அடுத்தபடியாக சமயத்துக்கென்றே ஒரு சங்கத்தை நிறுவிய தகைமையாளர். சாதி, பேதமின்றி, ஏற்றத்தாழ்வு, இல்லாத எல்லா உயிர்களிடத்தும் அன்பை முன்னிலைப்படுத்திய ஒரு கொள்கையை அடிப்படையாக வைத்து அதையே தனது அமைப்பாக அறிவித்தார். வள்ளல் பெருமான் கடந்து வந்த ஞானத் தேடல் எனும் பாதை மிக நீண்டதாகும். இப்பாதையின் ஒவ்வொரு கட்டமும் இறைவனை அடைய விரும்பும் மனிதனின் குறிப்பிட்ட நிலையைப் பிரதிபலிப்பதாகும். சத்ய ஞான சபையை நிறுவும் காலம் வரை வள்ளலார் சைவ சமயத்தின் இயல்பான கொள்கையை மக்களுக்கு எடுத்தோதி வந்தார். உருவ வழிபாட்டைக் கடைப்பிடிப்பதால் சாதி, இன பேதத்தை அகற்ற முடியவில்லை என்ற காரணத்தால். பரிபக்குவம் பெற்ற சமரச சன்மார்க்கியர்க்கென ஜோதி வழிபாட்டை எடுத்துக் காட்டி அதற்கென சத்திய ஞான சபையை வள்ளல் பெருமான் நிறுவினார். அருட்பெருஞ்ஜோதி அகவல் வள்ளலாராலேயே எழுதப்பட்டது. இதில் வரும்

      “ சமயம் கடந்த தனிப் பொருள் வெளியாய்
      அமையும் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி ”
      “ சாதியும் மதமும் சமயமும் காணா 
      ஆதி அநாதியாய் அருட்பெருஞ்ஜோதி ”
      “ முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும் 
      ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி ”
      சாதியும் மதமும் சமயமும் பொய் என 
      ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி ”
      சமயம் குல முதல் சார்பெலாம் விடுத்த 
      அமயன் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி”
      வேதமும் ஆகம விரிவும் பரம்பர 
      நாதமும் கடந்த ஞான மெய்க் கனலே ”
      – எனும் பாக்களும். 
      – அனுபவ மாலையில் வரும் 
      சாதி சமயங்களிலே வீதிபல வகுத்த 
      சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்றெனவே 
      ஆதியில் என் உளத்திருந்தே அறிவித்தபடியே 
      அன்பால் இன்றுண்மை நிலை அறிவிக்க அறிந்தேன்”
      என்பதும் இங்கு நோக்கத்தக்கவை.

    9. அருட்பெருஞ் ஜோதி தரிசனம் கிடைத்த பின்பு அருட்பெருட் ஜோதி ஆண்டவர் வெளிப்படுத்திய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தும் வண்ணம் சத்ய ஞான சபையை நிறுவினார். சத்திய ஞான சபை எந்த சைவ ஆகமத்திலும் உட்படாத, முற்றிலும் தனித்துவம் வாய்ந்த ஒரு வழிபாட்டு மையமாக இருக்க வேண்டுமென்று அவர் விரும்பி அதை அவ்வாறே படைத்தார். அதற்கென சிறப்பு வழிபாட்டு முறைகளையும் வகுத்துக் கொடுத்தார். ஆறாம் திருமுறையில உள்ள கருத்துக்கள் அனைத்தும் உருவ வழிபாட்டை வலியுறுத்துபவனவாகும். ஆறாம் திருமுறையானது வள்ளலார் வாக்கின்படி சமரச சுத்த சன்மார்க்கம் பெற வேண்டிய சாதகர்களுக்கே உரித்தனவாகும். இந்த ஆறாவது திருமுறையைக் கையாள்பவர்கள் வள்ளற் பொருமான் காட்டியுள்ளபடி புனிதமுறும் சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பட்டு உரிமையைப் பெற்று, ஜீவ காருண்யத்தையே தெய்வ வழிபாடாகக் கொண்ட சமரச நன்னிலை எய்திய பக்குவ நிலை உடையவர்களேயாவார். இவையெல்லாம் வரலாற்றுச் செய்திகள், இவ்வரலாற்று உண்மைகளை சீராய்வு மனுதாரர் மறைக்க முயல்வது வள்ளலார் பெருமானுக்கு அவர் செய்யும் நன்றியாகாது.
    10. எனவே, வள்ளலார் பெருமான் அருளிச் ùன்ற 18.7.1872 ல் ஏற்படுத்தப்பட்ட சபை வழிபாட்டு விதியில் சொல்லியபடி அதாவது ஜோதி தீபம் தகரக் கண்ணாடியில்தான் காட்ட வேண்டும் என்றும், எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி காட்ட வேண்டும் என்றும், ஜோதி தீபம் காட்டும் போது, மக்கள் அமைதியாக நின்று சத்தம் செய்யாமல், அருட்பெருஞ்ஜோதி தாரக மந்திரத்தை ஒதவேண்டும் என்றும், உபதேசங்களில் வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்றும், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். என்றும் வள்ளலார் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி இணை ஆணையர், பிறப்பித்துள்ள 18.9.2006 நாளிட்ட உத்தரவு சட்டப்படியும், உண்மையின் அடிப்படையிலும் சரியானதே என்றும்., அதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் உத்தரவிடப்படுகிறது. சத்திய ஞான சபை வள்ளலாரால் உருவாக்கப்பட்டது. அவர் வகுத்த சட்டதிட்ட நெறிமுறைகளின்படிதான் இந்த சபை நடத்தப்படவேண்டும். சத்திய ஞான சபை உள்ளிட்ட வள்ளலார் தெய்வநிலையங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சமய நிறுவனமாகும். இதன் நிர்வாகத்தையும், பூசை முறைகளையும் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இதன் அறங்காவலர்களையும், செயல் அலுவலரையுமே சேரும். சத்திய ஞான சபையில் மேலே தெரிவித்தபடி வள்ளலார் வகுத்து 18.7.1872 அன்று அறிவித்த வழிபாட்டு முறைகள் படிதான் இங்கு இனி வழிபாடுகள் நடைபெறவேண்டும். இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அறங்காவலர் குழு மற்றும் செயல் அலுவலரின் தலையாய கடமையாகும். இந்நிலையில் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்து ஆணையிடப்படுகின்றன.

    ஓம் த. பிச்சாண்டி, 
    சிறப்பு ஆணையர் மற்றும் ஆணையர் . 
    இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை
    சென்னை

    (என்னால் சுருக்கெழுத்தருக்கு பகரப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது).

  • நடந்ததை மறப்போம். இனி உண்மை அறிவோம்- ஏபிஜெ அருள்

    நடந்ததை மறப்போம். இனி உண்மை அறிவோம். — ஏபிஜெ அருள்.

    கால்பாதங்கள் தொட்டு வணங்கி வேண்டுவது “வள்ளலாரின் தனிநெறியை” மறுப்பதற்கோ, சாராமல் இருப்பதற்கோ எவருக்கும் உரிமையுண்டு. ஆனால் அத்தனிநெறியை திரித்துக் கூறுவது மிகப்பெரிய பாவம் மற்றும் சட்டப்படி குற்றமும் ஆகும்.

    இறவாத வரம் பெற்ற சுத்த ஞானி “வள்ளலாரின்” முடிபான மார்க்கத்தின் நெறியில் அவரை வெளிப்படுத்தல் வேண்டும். உலகில் எல்லா அறிஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவ மேதைகள், அவரவர்களின் முடிவான , இறுதியாக சொல்லிய கருத்துக்களை, அறிவிப்புகளை, போதனைகளை மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கும் போது வள்ளலாரின் முடிவான நெறியை, இறுதியாகச் சொல்லிய உண்மையை உள்ளபடியே வெளிப்படுத்தாமலும் அல்லது மறைத்து அவரால் கைவிடப்பட்ட முந்தய சமய நெறியிலேயே காட்டுவதும், புதிய தனி நெறியை திரித்துக் கூறுவதும் அறியாமையிலா? அல்லது அறிந்தும் செய்யும் சூதுவினாலா? இதற்கு பதில் உங்களின் ஒழுக்கத்திற்கும் அறிவிற்கும் விட்டுவிடுகிறேன்.

    இது வரை நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் இனி உண்மை தெரிந்துக் கொள்வதிலும் அதை உரைத்தலே நம் தகுதியாக்கி வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்க உண்மையை கீழ்வருமாறு தெரிந்துக் கொண்டு நமக்கும் நம் சுற்றத்தாருக்கும் உலகத்துக்கும் உள்ளது உள்ளபடியாக வெளிப்படுத்துவோம்.

    எவரேனும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தை ஒரு வார்த்தையில் சொல்லுங்க என்றால் உடனே சொல்லுங்க; 
    “சாகா கல்வி” என்று.

    இரண்டு வார்தையில் சொல்லுங்க என்றால், சொல்லுங்க;
    “சாகா கல்வி” & “உண்மை கடவுள்”

    மூன்று வார்தையில் சொல்லுங்க என்றால் சொல்லுங்க;
    1. “சாகா கல்வி” 
    2. “உண்மை கடவுள்” &
    3.”சுத்தசன்மார்க்க ஒழுக்கம்”

    நான்கு வார்தையில் சொல்லுங்க என்றால், சொல்லுங்க;
    1. “சாகா கல்வி” 
    2. “உண்மை கடவுள்” &
    3.”சுத்தசன்மார்க்க ஒழுக்கம்”
    4. “நன்முயற்சி”

    ஐந்து வார்தையில் சொல்லுங்க என்றால் சொல்லுங்க;
    1. “சாகா கல்வி” 
    2. “உண்மை கடவுள்” &
    3.”சுத்தசன்மார்க்க ஒழுக்கம்”
    4. “நன்முயற்சி”
    5. “ஆசை”
    (மேற்படி உண்மை குறித்த விளக்கம் காண வள்ளலாரின் உரைநடையிலும், web:: atruegod.org லும்,‌
    திருச்சியில் அக்டோபர் 5 ல் திரு சண்முகம் cell +919443422906 அய்யா நடத்தும் நம்மவர் கூட்டத்தில் திருமிகு ஏபிஜெ அருள் அறிமுகப்படுத்தும் “சுத்த மெய்ஞான யோகப்பயிற்சி” நிகழ்ச்சி யில் தெரிந்து கொள்ளலாம்)
    மொத்தத்தில் 
    1. “சாகா கல்வி” 
    2. “உண்மை கடவுள்” &
    3.”சுத்தசன்மார்க்க ஒழுக்கம்”
    4. “நன்முயற்சி”
    5. “ஆசை”
    மேற்படி ஐந்தின் மூலம் வள்ளலார் பெற்ற வலம்பெறும் இறவாத வாழ்வை பெறலாம். இதுவரை காலத்தை வீணாக்கி விட்டோம். 
    இதோ அக்டோபர் ஐந்து வள்ளலாரின் பிறந்த நாளை கூட்டம்,மாநாடு,என பல விழாவை பல ஊர்களில் நாம் கொண்டாட உள்ளோம். இந்நிலையில் ஓர் உறுதிமொழி எடுப்போம். அஃது;
    வள்ளலார் அய்யாவே,
    நீங்கள் சொல்லிய உண்மையை இன்று தெரிந்துக் கொண்டாம். இனி சாதி சமயமதங்களில் லட்சியம் வையாது சுத்த சன்மார்க்க நெறியிலேயே பயின்று உண்மை கடவுள் நிலை கண்டு அக்கடவுளின் அருளால் சாகாகல்வி கற்று பேரின்ப பெருவாழ்வில் வாழ நன்முயற்சி செய்வோம்.
    இது சத்தியம்.
    இது சத்தியம்.
    இது சத்தியம்.
    அன்பர்களே!
    ஏபிஜெ அருளாகிய நான் இன்று எனது சத்தியத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
    நீங்களும் சிந்தித்து உங்கள் அறிவில் வள்ளலார் சொல்லிய சாகா கல்வியில் ஆசை உண்டெனில் இங்கு உங்கள் சத்தியத்தை பெயர், ஊர், செல் நம்பரை,கொடுத்து “சாகா கல்வி நல்ல விசாரணை மையத்தில்” பதிவு செய்யுங்கள். இனி வள்ளலாரின் கட்டளைபடி ஒத்த அறிவு, ஒழுக்கமுடைய நம்மவர்களுடன் நல்ல விசாரம் தொடரும்.
    “எல்லாம் செயல் கூடும்
    என் ஆணை அம்பலத்தே.”
    —- ஏபிஜெ அருள் 8778874134
    apjarul1@gmail.com

  • சுத்தசன்மார்க்க கூட்டத்திற்கு சாதிசமயமதத்தார்களை அழைக்கலாமா?அழைத்தால் எவ்வாறு அழைப்பது?

     

    சுத்தசன்மார்க்க கூட்டத்திற்கு சாதிசமயமதத்தார்களை அழைக்கலாமா?அழைத்தால் எவ்வாறு அழைப்பது? 
    — ஏபிஜெ அருள்.
    நமது வள்ளலார் சொல்கிறார்கள்;
    — “வம்மீன் உலகியலீர்”
    — “… எப்பாரும் எப்பதமும் எங்கணு நான் சென்றே எந்தை நினது அருட்புகழை இயம்பிடல் வேண்டும்..”
    — “…உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக்கொட்டேன்..”
    — “…இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர் 
    களாயிருந்தாலும் ..நீங்களும் நல் ஒழுக்கத்திற்கு வருவதோடு கூட மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது.”
    இங்ஙனம் வள்ளலாரின் சத்திய வார்த்தைகள் ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை அடிப்படையில் இருக்கும் போது, மற்ற சாதிசமயமதங்கள் சார்ந்த சகோதரர்களை நமது கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கலாம் . 
    அழைக்கவும் வேண்டும்.
    நிற்க!
    ஆனால் எதற்காக இங்ஙனம் செய்கிறோம்? செய்ய வேண்டும்?
    “உண்மையை “
    தெரிந்து கொள்வதற்கே. தெரிந்துக்கொண்டு, உண்மை அறிவு அனுபவ ஆனந்த இன்பம் அடைவதற்கே.
    ஆக, இது வரை அறிந்திடாத மெய் நெறியை (சுத்தசன்மார்க்கத்தை) கடைப்பிடிக்க வைத்து, மெய்பொருள் (கடவுள் உண்மை) நன்கு உணரவே அழைக்கிறோம் (தெரியாமல் இருக்கும் எல்லோரையுமே நானும் உட்பட.).
    ஆனால் உலகிற்கு சாதி சமய மதம் பொய்யே என்ற வள்ளலாரை வெளிப்படுத்துங்கள் என்றும் அவர்தம் புதிய தனி நெறி குறித்து வியம்புங்கள் என விழாவிற்கு வந்த சாதி சமய மதத்தில் லட்சியம் கொண்ட அன்பர்களை சொற்பொழிவு ஆற்றச் சொன்னால் எப்படி இருக்கும்? வள்ளலார் வெளிப்படுத்திய உண்மையை உள்ளபடி உரைப்பார்களா? நிற்க! ஏன் வள்ளலாரை இரக்கம் அன்பில் வெளிப்படுத்தி பேசட்டுமே என நீங்கள் சொல்லக்கூடும். இந்த மாதிரி கூட்டத்தை சமய மதத்தார்கள் கூட்டி செய்தால் சரி. (வள்ளலாருக்கு சமய மத அன்பர்களும் ஏன் கடவுள் மறுப்பாளர்களும் பல விழாக்கள் எடுக்கிறார்கள். நம்மவர்களையும் அழைக்கிறார்கள். அது வேறு) ஆனால் சுத்த சன்மார்க்க கூட்டம் விழா எனப் பெயரிட்டு செய்யும் விழாவில் வள்ளலார் கண்ட கொள்கையை/உண்மையை தான் சொல்ல வேண்டும். இதோ வள்ளலாரே சொல்கிறார்கள்;
    “அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தடைவித்திட….வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.”
    நிற்க! 
    வள்ளலார் வெளிப்படுத்தியதும் ஒரே ஒரு உண்மையை தான்.
    அது ;”” சாகாகல்வி””. 
    (இது குறித்து தனி கட்டுரை வந்துள்ளது.)
    இதோ வள்ளலார் சொல்கிறார்கள்;
    ” என் மார்க்கத்தில் சாகாகல்வியை தவிர வேறு ஒன்றுமில்லை.”
    — சகாகல்வி என்றால் ‘இறவாதவரம்.’
    — இதற்கு கடவுள் அருள் வேண்டும்.
    — அருள் பெற கடவுள் உண்மை நிலை உணரவேண்டும்.
    — உள்ளபடி உணர உண்மை வழியை (மெய்நெறி) காண வேண்டும்.
    — உண்மை வழியில் கருணை ஒன்றே சாதனம். 
    — இந்த கருணை நம்மிடம் விருத்தியாகாமல் தடை செய்யும் சாதி சமய ஆச்சாரங்களை விட்டொழிக்க வேண்டும் என்கிறார்.
    வள்ளலார் தெளிவாக 28 பாசுரத்தில் சொல்கிறார்கள்;
    “கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
    கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
    உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
    உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே!..”
    இங்ஙணமாக வள்ளலாரின் சத்தியவாக்கியங்கள் இருக்கும் போது,
    சாதி சமய மதத்தார்கள் எங்ஙனம் மேடையில் இந்த சுத்த சன்மார்க்க உண்மையை தெரிவிப்பார்கள்?. 
    இவை அனைத்தும் உலகத்தார்களுக்கு புதியது தனித்தன்மையானது. கண்டிப்பாக நல்ல தேடுதல் உள்ளவர்கள் எந்த நிலையில் இருப்பினும் வள்ளலாரின் கொள்கை தெரிய வரும் போது மிக ஆவலுடன் விரைந்து விசாரிப்பார்கள். காரணம் வள்ளலாரே சொல்கிறார்கள்;
    “எல்லா சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும்
    உண்மை பொது நெறியாக விளங்குவது சுத்த சன்மார்க்கம்.”
    எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்க சொல்வது, சுத்தசன்மார்க்கம் மட்டுமில்லை. எல்லா ஞானிகளும் பல சமய மதங்களும் தான் என்பதை நாம் இங்கு உணர வேண்டும். இதோ வள்ளலாரே சொல்கிறார்கள்; ” கொல்லாமை, சாந்தம், ஜுவகாருண்யம்.. ஆகியவை சமய சன்மார்க்கத்தின் இயல்புகள்” என்கிறார்கள். சுத்த சன்மார்க்கம் மற்ற சமயமத மார்க்க உண்மைகளை படிகளாக்கி கொண்டு, உண்மையை உள்ளது உள்ளபடியாக உணரச் சொல்கிறது. இதோ வள்ளலாரே சொல்கிறார்கள்; “என்மார்க்கம் உண்மை அறியும் அறிவு மார்க்கம்”.
    ஆக, சுத்தசன்மார்க்க கூட்டமத்திற்கு எல்லோரையும் அழைப்போம், நானும் நீங்களும் போவோம். எதற்கு? உண்மையை தெரிந்து கொள்வதற்கே. மேடையில் இறவாத வரம் பெற்ற வள்ளலாரின் வழியை (நெறியை) வாசிக்கப்படல் வேண்டும். மெய் நெறி தெரிந்து கொண்டவர்கள் மேலும் உண்மையை அறிய,அனுபவிக்க “ஆசை” கொண்டால் இடைவிடாது விசாரணை செய்யலாம்.இதோ வள்ளலார் சொல்கிறார்கள்;
    “நீங்கள் ஒருமித்தாவது,அல்லது தனித்தனியாவது,உங்கள் அறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது..நல்ல விசாரணையில் இருங்கள்.” தனது பாசுரத்தில்;
    “விண்டதனால் என்இனிநீர் 
    சமரசசன் மார்க்க மெய்ந் நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே எண்டகு சிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
    இறவாத வரம்பெறலாமே
    இன்பமுற லாமே.” என்கிறார் வள்ளலார்.
    ஆக, 
    1) நம்மவர்கள் கூட்டம் வைத்தால் அதில் எல்லோரையும் அழைத்து, வள்ளலார் கண்ட உண்மையை நாம் சொல்லுவோம். வள்ளலார் கட்டளைப்படி வாசிப்போம்.
    அடுத்து, 
    2) நன்முயற்சி விசாரம் (நெறியில் செல்ல ஆசை ) வைத்தால் வள்ளலார் கட்டளைபடி நம் அறிவு ஒழுக்கத்துக்கு ஒத்தவர்களை மட்டுமே அழைத்து நல்ல விசாரம் செய்வோம்.
    அடுத்து
    3)வள்ளலாரை அன்பு இரக்கம் ஒழுக்கம் ஜுவகாருண்யம் முதலியவற்றில் போற்றி கூட்டம் ஒன்றை மற்ற அன்பர்கள் வைத்து அழைத்தால் கலந்து கொள்ளலாம். (அங்கு வள்ளலாரை முந்தைய சமய லட்சியத்தில் வெளிப்படுத்தினால் அவர்கள் அனுமதியுடன் அக்கூட்டத்திலேயே, வள்ளலார் தான் வைத்திருந்த சமயப்பற்றை கைவிட்டு விட்டு ஒரு புதிய தனி மார்க்கத்தை நிறுவினார்கள் என அழுத்தமாக பதிவு செய்யலாம்)

    — அன்புடன் ஏபிஜெ அருள்.

  • சமயம்,மதம் பொய் — வள்ளலார் ஏன்?எதற்கு?எப்படி?

     

    சமயம்,மதம் பொய் — வள்ளலார்
    ஏன்?எதற்கு?எப்படி? — ஏபிஜெ அருள்.

    சுத்தசன்மார்க்கம் என்றாலே “மரணமில்லா பெருவாழ்வை” பெற்றுத்தரும் வழி என்கிறார் வள்ளலார். நான் மிகைப்படுத்தியோ, பொய்யாகவோ இதை கூறவில்லை என்கிறார் வள்ளலார்.
    இந்த உண்மையை, அதாவது, மனிதன் கடவுள் அருளால் தெரியவரும் சாகா கல்வியால் , மரணத்தை வென்று, என்றும் அழிவில்லாத தனி வடிவத்தில் வாழலாம் என்ற உண்மையை உரைக்காது போன சமயமத மார்க்கங்களை பொய் என்கிறார் வள்ளலார்.
    எனவே தான் சுத்த சன்மார்க்கம் என்பது சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது என்றும், அதே போல், சுத்தசிவம் என்பது சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது என்கிறார் வள்ளலார். மேலும், வள்ளலார் சமயசன்மார்க்கத்தை பற்றி குறிப்பிடும் போது கொல்லாமை, பொறுமை,சாந்தம்,அடக்கம்,இந்திரி நிக்கிரகம்,ஜீவகாருண்யம் இவை சமய சன்மார்க்கத்தின் இயல்புகளாக உள்ளது என்கிறார் வள்ளலார். ஆனால் சுத்தசன்மார்க்கமோ இதன் அனுபவங்களை கடந்தது. பூரண சித்தியை அடைவதே சுத்தசன்மார்க்க கொள்கை என்கிறார். மேலும், சமயமத சன்மார்க்கங்களில் தத்துவங்களின் (கடவுளர்) காலப் பிரமாண பரிந்தயம் இருக்கும்.அதற்கு மேலிரா. எனவே முழு உண்மை உரைக்காததும் பூரண சித்தியை தராத இவைகளில் லட்சியம் வையாதீர்கள் என வள்ளலார் கட்டளை இடுகிறார்கள்.
    மேலும், கடவுளின் அருளுக்கு கருணை வேண்டும். ஆனால் இந்த கருணை நம்மிடம் விருத்தியாகமல் தடை செய்வது சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களே என்ற உண்மையை வள்ளலார் கண்டு வெளிப்படுத்துகிறார்.
    இதன் அடிப்படையிலேயே வள்ளலார், உள்ளது உள்ளபடியாக கடவுள் உண்மையை உரைக்காத சமய மதங்களை பொய் என்கிறார் என்று அறிய வேண்டும். சமயமதம் பொய் என்றவுடன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இம்மார்க்கத்தை வேறு கோணத்தில் பார்த்து வள்ளலாரை பாராட்டுகிறார்கள். ஆனால், அதே வள்ளலார் சொல்கிறார்கள்; ” நாத்திகம் பேசுவோர் நாக்கு முடநாக்கு “ என்கிறார். அதே போல் வள்ளலாரை அவர்தம் தனி நெறியில் காட்டாமல் அடிப்படை தகுதியிலேயே இரக்கம் கொல்லாமை ஜீவகாருண்யம் இவையில் மட்டும் காட்டுவதினால் தனி நெறி வெளிப்படாமல் போகிறது. இதில் என்ன தவறு என்பீர்கள்? இதனால் ஆசாரத்தில் பற்றுடையவர்களும் வள்ளலார் கொள்கை சார்ந்தவராக சொல்லிக் கொள்வது இதனால் தான்.
    வள்ளலார் தான் கண்ட நெறி எல்லோருக்கும் பொதுவாக உள்ளது என்று சொல்லும் அதே நேரத்தில், என் மார்க்கத்தார் யார் என்றால், அவர் , சாதி சமய மத மார்க்கத்தில் முற்றும் பற்றற கைவிட்டவர்களாகவும், ஆசரங்களை விட்டொழித்தவர்களாகவும் , இருக்க வேண்டும் என தகுதிகளை வள்ளலார் வகுத்துள்ளார்கள்.
    இதன் அடிப்படையிலேயே கீழ்வருமாறு வள்ளலார் கூறுகிறார்;
    என் மார்க்கத்தில் சமய மத மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதனவல்ல.
    ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ,அதுபோல் சுத்த சன்மார்க்கத்திற்கு சமயமத மார்க்கங்கள் யாவும் அநந்நியம்.
    மேலும், உண்மையை மண்ணைப் போட்டு மறைத்த வேதம்,ஆகமம்,புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம்

    இதேபோல் மனுசனுக்கு அமைப்பது போல் தெய்வத்துக்கு கை கால் முதலியன அமைத்து கற்பனையானதாகவும், மேலும், பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டுகின்ற சைவம், வைணம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார் வள்ளலார்.
    ஆக,
    தெய்வத்தின் உண்மை என்ன? என்ற விசாரமும், 
    அவத்தைகளாகிய துன்பம்,பயம்,மூப்பு, பிணி நீக்கி மரணம் தவிர்த்து பேரின்ப வாழ்வுக்கு ஆண்டவரின் அருள் பெறும் வழியே வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் ஆகும்.
    இது 19 ம் நூற்றாண்டில் வெளிப்பட்ட
    புதிய மார்க்கம். தனி நெறி. உண்மை பொது வழி என உணர்க!.

    அன்புடன் ஏபிஜெ அருள் கருணை சபை மதுரை.
    apjarul1@gmail.com

    8778874134

    நன்றி.

    விரிவாக உபதேச குறிப்புகள் பாடல்கள் முலம் காணலாம்.

  • மற்ற சமய, மத மார்க்கங்களுக்கும்  சுத்த சன்மார்க்கத்துக்கும்   முக்கிய வேறுபாடுகள் யாதெனில்…

    மற்ற சமய, மத மார்க்கங்களுக்கும் 
    சுத்த சன்மார்க்கத்துக்கும்  
    முக்கிய வேறுபாடுகள் யாதெனில்… ஏபிஜெ அருள்.
    மார்க்கம் என்றால் வழி.
    நிற்க!

    உலகில் காணும் சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்டுள்ள கர்த்தர், கடவுள், தெய்வங்கள் இவர்களின் நிலையை அறிகின்ற “வழி” என்னவாக உள்ளது?

    அம்மார்க்கங்களில் கடவுள் நிலையை கண்டு அக் கடவுள் அருளைப் பெற்றவர்களாக உள்ளவர்கள் “யோகி” களே.
    அந்த யோகிகள் எந்த வழியில் கடவுள் அருளைப் பெற்றார்கள்? என்பதே முக்கியமாக நாம் இங்கு சிந்திக்க வேண்டும்.
    அந்த வழி, “தவமே”. தவத்திற்கான இடங்கள்; வனம், மலை, முழை அதற்கு தேவைப்படும் கால அளவு; நூறு, ஆயிரம் முதலிய வருஷகாலம். மேற்படி தவத்தில் யோகிகள் செய்தது;
    # சில மந்திர வாசக பதவர்ணாதிகள் விந்து, நாத, ஓம், ஹரி, சச்சிதானந்தம், ஜோதியுள் ஜோதி, சிவாயநம, நமச் சிவாய உட்பட பல பரிபாஷைகள் மூலம்
    # தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும்,
    # தத்துவாதீதத்தைத் தியானித்தும் இடையில் ஜபித்தும்
    # கரணலயமாகச் சமாதி செய்தும்
    # தத்துவச் சேட்டைகளை அடக்க விரதமிருந்தும்
    # சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் செய்தார்கள்.
    நிற்க!
    மேற்படியான வழிவகைகளே சமய, மத சன்மார்க்கங்களில் உள்ளன. அந்தந்த யோகிகள் தங்கள் அனுபவத்தில் தெரிந்துக் கொண்ட உண்மையளவில் (அவர்களால்) பல சமய, மத சன்மார்க்கங்களை அவர்கள் ஏற்படுத்தினார்கள்.
    அச்சமய, மத மார்க்கங்களில் நம் நிலை என்ன?
    மேற்படி யோகிகளால் வெளிப்படுத்தப்பட்ட கடவுள், கர்த்தர், ஆண்டவர், தெய்வங்களை வணங்குதலே நம் நிலையாக உள்ளதே அன்றி அக்கடவுளின் நிலையறியும் உரிமையோ தகுதியோ அங்கு நமக்கு இல்லை.
    சில மார்க்கங்களில் யோகிகளையே தெய்வங்களாக, குமாரனாக, தூதுவராக ஏற்றுள்ளோம்.
    நிற்க! தவநிலையை யோகிகள் போன்று மனுஷ்ய தரத்தில் நம்மால் செய்ய முடியாது. சாதாரண மனுஷத்தரத்தில் நாம் வாழ்கிறோம்.
    அன்பர்களே!
    இறைவன் உண்டு.
    இறைவன் மிகப்பெரியவன்
    இறைவனே நம்மையும் உலகங்களையும் படைத்தான் என்ற உண்மைகள் யோகிகளால் வெளிப்படுத்தப்பட்டு அந்த இறைவனை வணங்குதல் வேண்டும் என்றுதான் நாம் பணிக்கப்பட்டுள்ளோம். யோகிகளின் அனுபவ கால அளவு கணக்கில் அடங்காது. அனுபவங்கள் பலவிதம், அவை உண்மையுடனும், திரித்தும், புனைந்தும் மற்றும் முழு கற்பனையாலும் மாற்றப்பட்டு நமக்கு பல புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் தரப்பட்டுள்ளது.
    நிற்க!
    # இங்கு நம் அறிவு எதை விரும்புகிறது? காட்டப்பட்டுள்ள இறைவனை, கடவுளை, தேவர்களை வணங்குவதிலா?
    அல்லது
    # நமக்கு மேல் அதிஷ்டிக்கின்ற கடவுளின் நிலை எப்படிப்பட்டது என்று அறியும் ஆவலிலா?
    அன்பர்களே!
    கடவுளின் உண்மை என்ன? உண்மைக் கடவுளை கண்டு அருள் பெறுவது எப்படி? என்று ஆசைப்படும் அறிவுக்கே இவ்விசாரணை மேலும் தொடரப்படுகிறது.
    ஆக, சமய, மதங்களில் இறைவனின் நிலை காண உள்ள வழி (தவ வழி) எல்லாருக்கும் (எல்லா மனிதர்களுக்கும்) ஒத்து வராது. அதில் சொல்லப்பட்டுள்ள தியானம், விரதம், மூச்சுப்பயிற்சி, மந்திரங்கள் எல்லாம் எல்லோராலும் செய்யக்கூடியதாக இல்லை. இதனால் வள்ளலார் கடவுள்நிலை குறித்து விஷேச நன்முயற்ச்சியில் தொடர்ந்து இருந்தார்கள். வள்ளலாரின் இந்த இடைவிடாத நன் முயற்ச்சியின் பயனாக அவருக்கு ஆண்டவராலேயே அறிவிக்கப்பட்ட வழியே “சுத்த சன்மார்க்கம்” ஆகும்.
    # இவ்வழி தனி வழி மட்டுமில்லை. உண்மை பொது வழியாகவும் உள்ளது.
    # இவ்வழி மற்ற எல்லா வழிகளையும் மறுக்க வந்தது என்கிறார் வள்ளலார்.
    # இவ்வழியில் எல்லா மனிதர்களாலும் பயணித்து இறையருளை பெறுவதாக உள்ளது.
    மனுஷ்யதரத்தில் அமைந்துள்ள உயர்வான “சுத்த சன்மார்க்கம்” சுத்த சன்மார்க்கத்தில் “நல்ல விசாரணை” செய்ய வேண்டும். நல்ல விசாரணை என்பது உலக விசாரம் அல்ல. பரலோக விசாரத்தையே குறிக்கும் என்கிறார் வள்ளலார்.
    ஆக, ஆறறிவு உள்ள தேகத்தைப் பெற்ற மனிதர்கள் அனைவருமே கடவுளின் உண்மை நிலையறிந்து அக்கடவுளின் அருளை பெறுதற்கான வழியை கொண்டதே சுத்த சன்மார்க்கம் ஆகும்.
    அதாவது; உஷ்ணத்தை தவம் செய்து உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் இதைவிடக் கோடிபங்கு பத்து கோடி பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.
    எதற்கு உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ள வேண்டும்?
    ஆன்மாவை தெரியவொட்டாமல் மூடி இருக்கின்ற திரையை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது.
    ஆக,
    மற்ற சமய, மத மார்க்கங்களுக்கும் சுத்த சன்மார்க்கத்துக்கும்

       முக்கிய வேறுபாடுகள் யாதெனில்;
    ——————————————————
    மற்ற சமய மத மார்க்கங்கள்::
    ——————————————————-
    # இறைவனின் நிலையை காணும் வழி மனுஷ்ய தரத்தில் இல்லை
    # இறை உண்மையை தெரியவொட்டாமல் மூடி இருக்கின்ற திரைகளை விலக்கும் வழி “பொது” வழியாக இல்லை “யோகி”களின் தரத்திலே உள்ளது.
    # திரைகளை நீக்குவதற்கு வேண்டிய அதியுஷ்ணத்திற்கு” யோகிகள் தவத்தை இங்கு மேற்க்கொள்கிறார்கள்.
    # யோகிகள் வனம், மலை, முழை முதலியவற்றிற்குப் போய் நூறு, ஆயிரம் முதலிய வருஷ காலம் தவம் செய்ய வேண்டியுள்ளது.
    # காட்டப்பட்ட கடவுளை வணங்குதலும் வழிபாட்டு மற்றும் கட்டுப்பாட்டு ஆசாரங்களும் இங்கு உள்ளது.
    # ஏகதேச கர்ம சித்திகளை கற்ப னைகளாகச் சொல்லி இருக்கின்றார்கள். அவையில் லட்சியம் வைக்கப்படுகிறது.
    # பல வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்திகளை அடையலாம்.
    # பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டப்பட்டுள்ளது
    # தெய்வத்திற்கு பெயரிட்டு இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம்முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.
    # வேதம், ஆகமம், புராணம் இதிகாசம் முதலிய கலைகள் உண்டு.
    ழூ தெய்வத்தைப் பற்றி புறங்கவியச் சொல்லவில்லை. ஆதலால் இறை உண்மை காண நமக்கு காலமில்லை.
    # “கருணை “ சாதனமாக சொல்லப் பட்டிருப்பினும், ஆசாரங்கள் இருப்பதால் அக்கருணை விருத்தியாகாமல் உள்ளது.
    # இங்கு முக்தி, சமாதி, மரணம் உண்டு.
    # காட்டப்பட்ட கடவுளை தொழுதலும் அக்கடவுளிடத்தில் வேண்டுதலுமே நாம் செய்கிறோம்.
    # சமய, மத மார்க்கங்கள் ஒவவொன்றும் ஒன்றிற்கு ஒன்று வேறுபட்டு உள்ளது.
    # பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்யம் இவையனைத்தும் இதன் இயல்புகள் ஆகும்.
    —————————————–
    சுத்த சன்மார்க்கம்-
    ——————————————–
    # சுத்த சன்மார்க்கத்தில் மனுஷ்ய தரத்தில் இறைவனின் நிலையை அறிவதாக உள்ளது.
    # இறை உண்மை காணும் வழி உண்மை பொது வழியாக உள்ளது. எல்லா மனிதப் பிறவிகளுக்கும் உரியதாக உள்ளது.
    # “நல்ல விசாரணை” மட்டுமே இங்கு வழியாக உள்ளது.
    # மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தை சிந்தித்துக் கொண்டாவது அல்லது தோத்திரம் செய்து கொண்டாவது இருத்தல் போதுமானது.
    # கடவுள் உண்மை தெரிய வேண்டுமென நன்முயற்சியுடன் இருக்க வேண்டும். எந்தொரு ஆசாரமும் கிடையாது. கூடாது.
    # ஆண்டவரிடத்தில் மட்டுமே லட்சியம் வைக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்கு தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
    # கோடி கோடிப் பங்கு அதிகமாக கொடுக்கும் படியான இடம் இந்த இடம்
    # “அருள் ஒளியை காண்க” என உரைக்கப்படுகிறது.
    # ஒவ்வொருவரின் அக அனுபவத்தில்தான் இறைவனின் உண்மை வெளிப்படுவதாகவே சொல்லப்பட்டுள்ளது. எங்கும் பரிபூரணமாக விளங்கும் ஒரே மெய் பொருளாக்காட்டப் பட்டுள்ளது.
    # எந்தொரு கலையும் இங்கு இல்லை.
    # நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து இருப்பின் இப்பிறவிலேயே இறைநிலைக் கண்டு அருள் பெறலாம்.
    # கருணை விருத்திக்கு தடையாக உள்ள ஆசாரங்களை விட்டொழிக் குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    # சாகா கல்வியை தெரிவிப் பதன்றி வேறு ஒன்றுமில்லை.
    # உண்மை கடவுளின் நிலைக் காண ஒவ்வொருவரும் நல்ல விசாரணை செய்ய வேண்டும்.
    # மற்ற சமய, மத மார்க்கங்கள் யாவும் சுத்த சன்மார்கத்திற்கு அநநநியம் ஆனால் அந்நியம் அல்ல.
    # சுத்த சன்மார்க்கம். சமய, மத மார்க்கங்களின் அனுபவங்களை கடந்தது. இங்கு அக அனுபவமே உண்மை. நனறி:: ஏபிஜெ அருள்.
  • ஆண்டவரே ஏதற்காக உன்னை நான் வாழ்த்தி வணங்க வேண்டும்?

    ஆண்டவரே ஏதற்காக உன்னை
    நான் வாழ்த்தி வணங்க வேண்டும்?
    —— ஏபிஜெ அருள்.

    நீ என்னை தோற்றுவித்ததினாலா? தோற்றுவித்தது உன் முடிவு, உன் செயல். அதற்கு நான் ஏன் உன்னை வாழ்த்தி வணங்க வேண்டும்?
    நீ எனக்கு விளக்கம் கொடுத்து அறியாமையை நீக்குவித்தாயே அதனால்
    உன்னை வாழ்த்தி வணங்க வேண்டுமா?
    அது தோற்றுவித்த நீயே எனக்கு செய்ய வேண்டிய கடமை.
    நீ எனக்கு பக்குவம் பலன் கொடுத்தாயே அதற்காக நான் உன்னை வாழ்த்தி வணங்க வேண்டுமா?
    இச்செயலால் உன் கருணையை நீ வெளிப்படுத்துகிறாய். இதற்கு என்னிடமிருந்து உனக்கு வாழ்த்தையும் வணக்கத்தையும் எதிர்பார்க்க மாட்டாய்.

    ஆக,
    என்னை தோற்றுவித்து, விளக்கம் செய்வித்து,துரிசு நீக்குவித்து,பக்குவம் வருவித்து பலன் கொடுக்கும் இவை அனைத்தும் உன் முடிவு உன் செயல் உன் நடனம். ஆனால்,
    என்னை படைத்த நீ பல கோடி அண்டங்கள், உலகங்கள், உயிர்கள், பொருள்கள் மற்ற எல்லாவற்றையும் படைத்துள்ளாய். அவை அடங்கிய வெளியை இயற்கையை என்னால் முழுவதும் என் அறிவால் தெரிந்து அறிந்து அனுபவிக்க முடியவில்லையே? தோற்றுவித்த எனக்கு துன்பம், பயம், மூப்பு,பிணி கொடுத்து இறுதியில் மரணத்தையும் கொடுத்துள்ளாய். அவத்தைகள் சம்மதம் இல்லாவிட்டாலும் அவையை நீக்கி கொள்ள வழி தெரியாமல் இதுவரை ஒன்றும் பேசாமல் என் மூத்தோர்கள் இருந்து, இறந்து விட்டனர். ஆனால் இன்று நான் இதிலிருந்து விடுபட என் வள்ளலார் அய்யா எனக்கு வழி காட்டியுள்ளார்கள். என் ஆசான் வள்ளலார் என்னிடம் ஆண்டவராகிய உங்கள் உண்மையை உள்ளது உள்ளபடி உரைத்து விட்டார்கள்.
    உண்மை கடவுள் அருளால் மட்டுமே அண்ட திறங்கள் இயற்கையை முழுவதும் காண முடியும். கடவுளின் உண்மை நிலை காணும் போது தான் அக்கடவுளால் சாகா கல்வி கற்று தரப்படுகிறது. இவை பெற்றிட சுத்தசன்மார்க்கமே உண்மை வழி.
    திருவருளே!
    இயற்கை உண்மைகள் வெளிப்பட,
    இறவாத வாழ்வில் வைத்திட,
    இறைவா உன்னை பணிந்து தணிந்து
    வள்ளலார் கண்ட
    உண்மை பொது வழியில்
    வாழ்த்துகிறேன்
    வணங்குகிறேன்.
    அன்புடன்:: ஏபிஜெ அருள் 06-09-2017
    கருணை சபை மதுரை.

  • மரணமில்லா பெருவாழ்வு பெற்றவள்ளலார் இப்பொழுது எங்கே??? வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் ???

    மரணமில்லா பெருவாழ்வு பெற்றவள்ளலார் இப்பொழுது எங்கே??? வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் ???   

    தைப்பூசம் 2017 ல் திருமதி ஏபிஜெ அருள் @ இராமலெட்சுமி வெளியிட்ட கட்டுரை;

      மதிப்பிற்குரிய பெரியவர்கள், சான்றோர்கள் அன்பிற்குரிய சகோதர சகோதரிகள், மற்றும் அனைவருக்கும் எனது மற்றும் மதுரை கருணை சபை சாலை சார்பாக வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் –

      திருவருட்பிரகாச வள்ளலார், இடைவிடாது நல்ல விசாரணை செய்து, உண்மை கடவுளை கண்டு, அருள் பெற்று, “மரணமில்லா பெருவாழ்வு” பெற்றார்கள் – தான் பெற்ற இந்த பேரின்பவாழ்வை எல்லோரும் பெறும் பொருட்டு ஒரு மார்க்கத்தை நிறுவினார்கள் – அந்த மார்க்கத்தின் பெயர் “சுத்த சன்மார்க்கம்” – என் மார்க்கம் இறப்பையொழிக்கும் மார்க்கம் – என் மார்க்கத்தில் “சாகா கல்வியை” தவிர வேறு ஒன்றுமில்லை – சாகாதவனே சுத்த சன்மார்க்கி என்கிறார் நம் வள்ளலார் – 

    இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும் – அப்படித்தானே – 

    எந்த உண்மை எல்லோருக்கும் தெரியும்? சொல்லுங்கள் –

    • ஆண்டவரை ஜோதி சொரூபமாக வள்ளலார் தரிசித்தார்கள்
    • நமது வள்ளலார் மரணமில்லா பெருவாழ்வு பெற்றார்கள் 
    • கடவுளின் அருளால் அவர்தம் தேகம் “ஒளிவடிவமாக” மாறியது 

    அன்பர்களே !

    வள்ளலார் தனக்கு ஒளி வடிவம் கிடைத்த பின்பும், நம்மோடு நம் பார்வையில் தெரியும் படியாக இரண்டரை வருட காலமாக இங்கு இருந்து வந்தார்கள் – எதற்காக?

    தனக்கு கிடைத்த இந்த பேரின்ப பெருவாழ்வு, எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையில் தெரிவிப்பதற்காகவே – தான் சென்ற வழியை மற்றும் கடைப்பிடித்த வழிபாட்டை, அப்படியே உலகத்தார்க்கு உள்ளது படியாக உரைத்தார்கள் – 

    ஆனால் நடந்தது என்ன? இதோ வள்ளலார் அவர்களே சொல்கிறார்கள் கேளுங்கள் –

     “உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை”

    எப்படி நம் முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்?

    ஏன் அவர்களை சொல்வானேன்? 

    இன்று நாமும் வள்ளலார் சொல்ல வந்த உண்மையை தெரிந்துக் கொண்டோமா?

    இல்லை என்பதே உண்மை- தெரிந்து கொண்டியிருந்தால் நமக்கு ஏது அவத்தைகள் வரும்? பிணி, மூப்பு நாம் பெற்றுக் கொண்டியிருக்கிறோம் –

    இன்று நான் தெரிந்து கொள்ள ஆசை கொண்டுள்ளேன் – நீங்கள்?

    நாம் கண்டிப்பாக நம் வள்ளலார் சொன்ன உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? பதில் சொல்லுங்கள் –

    மரணத்தை தவிர்த்து கொண்ட நம் வள்ளலார் இப்போது எங்கே?  திருவருட்பிரகாச வள்ளலாரை இப்பொழுது இங்கே, நீங்கள் காண ஆசை கொண்டு உள்ளீர்களா? இல்லையா? 

    ஆம் என ஆசை உள்ளவர்கள், சற்று நிமிந்து உட்காருங்கள் –

    திருமந்திரத்தை சொல்லி நம் வள்ளலாரை அழைப்போம் –

    அருட்பெருஞ்ஜோதி    அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி

    அருட்பெருஞ்ஜோதி    அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி

    திருவருட்பிரகாச வள்ளலாரே ! எங்கள் ஆசானே !

    உண்மை கடவுளின் சொரூபத்தை கண்ட சுத்த ஞானியே !

    ஆண்டவரின் அருளை பெற்ற வள்ளலாரே! 

    மரணத்தை தவிர்த்து கொண்ட சுத்த சன்மார்க்கியே !

    நீங்கள் இன்று வெளிப்பட வேண்டும் – இது சத்தியம் – இது சத்தியம் –உங்களை காண ஆசை உள்ளவர்களாக உள்ளோம் – 

    நீங்கள் சொல்லும் உண்மையை தெரிந்து கொள்ள தயாராக உள்ளோம் – இது உண்மை – 

    ஆண்டவர் உங்களுக்கு உரைத்த அந்த நான்கு மரபுகளை தெரிந்து கொள்ள ஆசை உள்ளவர்களாக உள்ளோம் –

    எங்கள் அய்யாவே ! எங்கள் ஆசானே ! எங்களை மன்னியுங்கள் – 

    இதுகாறும் வீண்காலம் கழித்து கொண்டியிருந்த எங்களை, மன்னித்து, உண்மை கடவுளின் உண்மை குறித்து எங்களுக்கு அறிவியுங்கள் – 

    இதோ இடைவிடாது நீங்கள் சொல்லிய வண்ணம் எங்கள் அறிவு ஒழுக்கம் ஒத்தவர்களுடன் நல்ல விசாரணைக்கு தயாராகி விட்டோம் – திருவருட்பிரகாச வள்ளலாரே !

    எங்களுடனிருந்து, எங்களுக்கு சத்திய அறிவு வெளிப்பட உதவிட வேணுமாய் பிரார்த்திக்கின்றோம் –

    அருட்பெருஞ்ஜோதி    அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி

    அன்பர்களே ! 

    உண்மை நோக்கி நல்ல விசாரணை செய்வோம் –

    உண்மை கடவுளின் சொரூபத்தை கண்ட நம் வள்ளலார்க்கு இன்பமும், வியப்பும் ஏற்பட்டது- 

     “இன்பம்” என்பது; கடவுளை கண்டது

     “வியப்பு” எதனால் ஏற்பட்டது ? 

     இப்போது, தான் கண்டு கொண்டியிருக்கும் கடவுள் 

     “அருட்பெருஞ்ஜோதியாகிய தனிப்பெருங்கருணை கடவுள்” இதுவரை உலகில் வெளிப்பட்டிருந்த சமய, மத, மார்க்கங்களில் சொல்லப்பட்டியிருக்கவில்லை – எனபதே வள்ளலாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி – 

    அன்பர்களே, இது குறித்து 12-04-1871 ல் ஒரு கடிதத்தில் அறிவித்துள்ளார் வள்ளலார் – 

    அன்பர்களே ! நாம் இன்று இப்பொழுதே வள்ளலாரை காண வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது “ஒன்றே ஒன்று” தான் 

    அது அவர் சொன்ன உண்மையை

    தெரிந்து, அறிந்து, அனுபவிக்க வேண்டும் –

    அவர் கண்ட கடவுளை மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும் 

    வள்ளலார் சொன்னபடி வழிபாடு செய்ய வேண்டும் 

    நமக்கு சாதனம் ”கருணை” மட்டுமே !

    அன்பர்களே !

    – இங்கு இருக்கும் நம் எல்லோரிடமும் கருணை உள்ளது-

    – கருணை ஒன்றையே இதுநாள் வரை கொண்டு   பிரார்த்திக்கிறோம்- அப்படிதானே !

    ஆனால், வள்ளலாரையோ ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே ? 

    அது ஏன்?

    அதற்கு காரணம் என்ன தெரியுமா அன்பர்களே !

    நம்மிடம் கருணை உள்ளது – ஆனால்;

    நம் கருணை விருத்தியாகமலே உள்ளதை முதலில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும் –

     அதற்கு என்ன காரணம் ?

    அக்கருணை நம்மிடம் விருத்தியாகமல் தடை செய்வது நம்மிடம் உள்ள “ஆசாரங்களே” காரணம் என்கிறார் வள்ளலார்வள்ளலார் நமக்கு சுட்டி காட்டியுள்ள ஆசாரங்கள் “13” ஆகும் –

    இவையை விட்டொழித்தே ஆக வேண்டும் என்கிறார்கள்-

    அன்பர்களே ! உங்களிடம் கேட்கிறேன் –

    சத்திய ஞான சபைக்குள் எல்லோரும் உள்ளே சென்று விட முடியாது – உள்ளே புகுதல் வேண்டுமானால் நம்மிடம் என்ன தகுதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? 

     “கொலை புலை தவிர்த்தவர்களாக” இருக்க வேண்டும் என்று வள்ளலார் கட்டளையிட்டுள்ளார்கள் – அப்படிதானே? 

    ஆக, நம்மிடம் அடிப்படை தகுதியாக ஜீவகாருண்யம் உள்ளது – ஜீவகாருண்யம் உள்ளவர்களே ஞான சபைக்குள் செல்ல முடியும்-

    அன்பர்களே !

    உள்ளே சென்ற பிறகு எது குறித்து விசாரணை செய்ய வேண்டும்? அதே ஜீவகாருண்யம் குறித்தா? இல்லை –

    ஆண்டவரின் நிலை காணவே நாம் நன்முயற்சி செய்ய வேண்டும் – அதற்கு, “உள்ளழுந்தி, சிந்தித்து, சிந்தித்தலை விசாரிக்க” வேண்டும் என்கிறார் நம் வள்ளலார் – 

    இதற்கு பெயர் ”விசார சங்கல்பம்” ஆகும் –

    இதுவே, “வள்ளலார் சொல்லிய உண்மை” ஆகும்-

    என் மார்க்கம் உண்மையறியும் மார்க்கம் – என் மார்க்கம் அறிவு மார்க்கம் – என் மார்க்கத்தில் அக அனுபவே உண்மை – என்கிறார்கள் –

    இப்பொழுது சொல்லுங்கள்;

     “நாம் வள்ளலாரை காண வேண்டுமானால்,

    ::::::அவர் நம்மிடம் சொல்ல வந்ததை தெரிந்து கொண்டோம் என்று அவரிடம் தெரிவிக்க வேண்டும்::::::

    இங்ஙனம் தெரிவிப்பவர்க்கு வள்ளலார் வெளிப்படுவார் 

    இது சத்தியம் – இது சத்தியம் – இது சத்தியம் –

    மீண்டும் ஒரு முறை வள்ளலார் சொல்லிய உண்மை குறித்து காண்போம் –

    ஒன்று;

    கருணை விருத்தியாகாமல் செய்யும் ஆசாரங்களாகிய சாதி,குலம்,ஆசிரமம்,லோகம்,தேசம்,கிரியை,சமயம்,மதம்,மரபு, கலாசாரம்,சாதனம்,அந்தாசாரம்,சாஸ்திரம் முதலிய ஆசாரங்கள் நம்மிடமிருந்து ஒழிந்து போக வேண்டும் – 

    இரண்டாவது;

    ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்ய வேண்டும் –

    மூன்றாவது;

    அத்தெய்வத்தை நினைந்தும் உணர்ந்தும் நமது குறையை ஊன்றியும் இவ்வண்ணமாக இடைவிடாது விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டும் என்கிற விசார சங்கல்பத்துடன் முயற்சியுடனிருத்தல் வேண்டும்-

      நமது இந்த நன்முயற்சி உண்மையாக தூய்மையாக இருக்குமே யானால் திருவருட்பிரகாச வள்ளலார் நேரில் வந்து நமக்கு துணை புரிவது சத்தியம் – சத்தியம் – சத்தியம் என நம்புதல் வேண்டும் –

    நான் “சுத்த சன்மார்க்க நெறி ஒன்றையே” சார்ந்து,

    குரோதம் காமத்தை ஞான அறிவினால் தடுத்து கொண்டு, ஆசாரத்தை ஒழித்து தலைவனையே தொழுது கொண்டியிருக்கிறேன்

    — என்று நாம் சொல்வோமானால் இன்றே இப்பொழுதே சபை முன்பு அமருங்கள் ஆண்டவர் உண்மை தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்கு துணை புரிய திருஅருட்பிரகாச வள்ளலாரே நீங்கள் வரவேண்டும் என அடம் பிடித்து உட்காருவோம் கண்ணீர் விட்டு நெகிழ்ந்து வேண்டுவோம் – 

    இது உண்மையாயின் நான் பெறுவேன் – பெறுகின்றேன் – பெற்றேன் –

    என்னை அடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை – பெறுவீர்கள் – பெறுகின்றீர்கள்  – பெற்றீர்கள் –

    அஞ்ச வேண்டாம் –

    அருட்பெருஞ்ஜோதி    அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி

  • ‘இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (சுத்த) சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை-Our Vallalar

    உயர்வுடையதாகிய மனித தேகத்தை பெற்றவர்களே!
    அறிவுடைய சான்றோர்களே! அன்பர்களே! சகோதரர்களே!
    வணக்கம்.

    இன்று கடவுள் குறித்த நல்ல விசாரணையை நாம் செய்யப் போகிறோம்.
    விசாரணை என்றால் அது உண்மையறிவதற்கான முயற்சியே.
    அதுவும் நல்ல விசாரணை செய்ய உள்ளோம்
    அதாவது பலனற்ற விசயத்தை பற்றி பேசி வீண்போது கழியாது, நல்ல விசயத்தைப் பற்றி பேச உள்ளோம். அந்த நல்ல விசயம் “கடவுள்”/இறைவன்/ஆண்டவர்
    கடவுள் குறித்த நல்ல விசாரணை எதுவெனில்;
    கடவுளின் உண்மை என்ன?
    உண்மை கடவுள் யார்?
    இங்கு, கடவுள் உண்டா? என்ற கேள்வி நம்மில் கிடையாது. கடவுள் உண்டு என்பதில் நம் அறிவு ஏற்கனவே ஒத்தாகிவிட்டது. ஆக கடவுள் உண்டா? என்ற அந்த அடிப்படை விசயத்திற்குச் சென்று நாம் நேரத்தை வீணாக்கி கொள்ள வேண்டாம்.
    ஆக கடவுள் உண்டு ஆனால் உண்மை கடவுள் யார்? அக்கடவுளின் நிலை என்ன? என்பதே நம் நல்ல விசாரணையின் பொருள் ஆகும்.

    அன்பர்களே!
    நம்மால்,” நம்மைப் பற்றி, நம்மை சுற்றியுள்ள புறத்தை பற்றி அறிந்துள்ளேம். அறிந்துக்கொண்டிருக்கின்றோம்.
    எவரேனும் நம்மிடம் ஏதேனும் ஒன்றைக்கொடுத்து இதை பிடியுங்கள் என்றவுடன் பிடித்துவிடுகிறோமா? அல்லது நம்மிடம் உள்ளதை கேட்டவர்களிடம் உடன் அதை கொடுத்து விடுகிறோமா? இல்லையே!
    ஆனால் இதுவே கடவுள் என்றுச் சொன்னவுடன் அதை அப்படியே ஒத்துக்கொண்டு சிறுபிள்ளையிலிருந்து வணங்க ஆரம்பித்த நாம் இன்று வரையிலும் அவற்றையே கடவுளாக துதித்து வணங்குகிறோம். அக்கடவுளின் பெயரால் அமைக்கப்பட்ட சமய மதங்களில் லட்சியம் வைத்து வளர்ந்து வருகிறோம். அச்சமய மத சடங்குகளில் பற்று வைத்து தவறாது அவைகளையும் செய்தும் வருகிறோம். நிற்க! என்றாவது ஒரு நாளாவது நாம் கும்பிட்டு வரும் கடவுள், உண்மையான கடவுள்தானா? நாம் செய்யும் சடங்குகள் மற்றும் சம்பிராதயங்கள் தேவையானதா?என நல்ல விசாரணை செய்தோமா? நமக்கு கடவுள் குறித்து எடுத்துச் சொன்ன நமது பெற்றோர், உறவினர்கள், சுற்றத்தார்கள் இவர்கள் வேறு ஏதேனும் சொன்னால் அதை அப்படியே கேட்பதில்லை. உதாரணமாக; இந்த பெண்ணை கட்டிக்கொள் என்று அன்னையோ, இந்த வேலைக்கு செல், அதைப் படி என்று தந்தையோ, அல்லது நமது உடை, உணவு, சொத்து சம்பந்தமாக நமது பெற்றோர்களோ, உறவினர்களோ அல்லது சுற்றத்தார்களோ சொன்னால் உடன் ஒத்துக்காள்வதில்லை. மேற்படி வரன், வேலை, படிப்பு, உணவு, உடை, சொத்து ஆகியவற்றை நாம் விசாரித்து அவை நம் அறிவுக்கு தெளிவுப் பெற்ற பின்பே ஒத்துக்கொள்கிறோம். அப்படித்தானே!
    அப்படித்தான் என்றால், கடவுள் குறித்த விசயத்தில் மட்டும் ஏன் நீங்கள் தெளிவுபடுத்திக்கொள்ளவில்லை. ஏனென்றால், நாம் வணங்கும் கடவுள் “சும்மா” இருக்கும் ஒரு பொருள். நாம் வணங்கி வரும் கடவுள், நம் உடை, உணவு, படிப்பு, வேலை, சொத்து, இன்பம் போன்றது போல் புலனிச்சையில் தொடர்புடையது அல்ல. பொதுவாக நாம் கடவுள் என்பது ஒரு நம்பிக்கை என்றும், அந்த நம்பிக்கையில் நம் மனம் தொடர்பு கொள்கிறது. அத்தொடர்பில் ஏதோ ஒரு திருப்தி. இது இலாபமா? என்பதை விட நம் கடவுள் நம்பிக்கையில் நட்டமில்லை. அதனால்தான் அதில் பலருக்கு விசாரணை இல்லை. சிலர் மட்டுமே முயற்சி செய்தனர். செய்கிறார்கள். தான் வணங்கும் கடவுள்கள் குறித்த உண்மையை தெரிந்துள்ளனர். தெரிந்து வருகிறார்கள்.
    எந்தவொரு சமயமும் மதமும் மார்க்கமும் நம்மை எந்தொரு தீயச்செயலையும் செய்யச்சொல்லவில்லை. அச்சமய மத மார்க்கங்களை தோற்றுவித்தவர்கள் அனைவருமே அறிவு படைத்த சான்றோர்கள். ஒழுக்கமுடையோர். அவரவர் பெற்றிருந்த ஒழுக்கம் அறிவுக்கு ஏற்றளவில் உண்மையை அறிந்திருந்தனர். அறிந்தளவே உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் சமய, மத மார்க்கங்களை ஏற்படுத்தினார்கள்.

    அன்பர்களே!
    இந்த இடம் தான் மிகவும் முக்கிய இடமாகும்.
    நம் சமய, மத மார்க்கங்களை நாம் மதிக்காமல் இருக்க முடியுமா? மதிக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் எந்தளவு உண்மையை அவை வெளிப்படுத்தி உள்ளதோ அந்தளவுக்கு மட்டுமே அவையை மதிக்க முடியும். அதே நேரத்தில் மற்றும் முழு உண்மையை அறிந்திடச் சொல்லும் நம் அறிவை மதிக்காமல் இருக்கலாமா?
    ஆனால் நம் சமய மதமார்க்கங்களில் நிர்ணயிக்கப்பட்ட நிலை என்ன? நாம் சார்ந்திருக்கும் சமய, மத, மார்க்கங்கல்ளி நமக்கு விதிக்கப்பட்ட “கட்டுப்பாட்டு ஆசாரங்கள்” நம் அறிவை கட்டுப்படுத்தி அல்லவா வைத்துள்ளது. வளரும் நம் அறிவுக்கு நம் சமய, மத மார்க்கத்தில் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதா?
    வளரும் நம் அறிவில் பல உண்மைகள் வெளிப்பட்டாலும், நாம் சார்ந்திருக்கும் சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களில் தானே கட்டுப்பட்டு வாழ்கிறோம். வாழ வைக்கப்படுகிறோம். நாம் சார்ந்திருக்கும் சாதி சமய மத மார்க்கங்களில் “விசாரணை”க்கு இடம் கொடுக்கப்படுகிறதா?
    புறத்திலே, விஞ்ஞான அடிப்படையில், எவ்வளவு கண்டுபிடிப்புகள்! அக்கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நம்மிடம் எவ்வளவு மாற்றங்கள். விஞ்ஞானத்தில் அறிவு சுதந்திரம் பெற்றுள்ள நாம் ஏன்? அகத்திலே விசாரணை செய்ய நமக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
    அன்பர்களே! “இன்று”, “இந்த இடத்தில், இப்பொழுதே பெற்றோம் “சுதந்திரம்” “அறிவு சுதந்திரம்”,
    திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் சொல்கிறார்கள்.
    என் மார்க்கம் “அறிவு மார்க்கம்’’
    மார்க்கம் என்றால் வழி
    என் மார்க்கத்தில் “அக அனுபவமே உண்மை” என்கிறார்கள்.
    “அக அனுபவம்” உண்மை அறிவினால் ஏற்படுகிறது.
    அறிவு என்றால் கருணை
    கருணை என்பது;
    எல்லா உயிர்களிடத்தும் தயவும் ஆண்டவனிடத்தில் அன்புமே!

    அன்பர்களே!
    கடவுள் அருளால் அறிவு சிறிது தோற்றுவித்த தேகமே, இந்த மனித தேகம்.
    நாம் ‘கடவுள் அம்சம்’
    கடவுள் என்பவர் ‘பேரறிவு’ ஆவார்.
    அக்கடவுள் தனிப்பெருங்கருணை’ ஆவார்.
    நாம் பெற்றுள்ள சிறிதறிவில் இந்த பேரறிவின் திறத்தை, இந்த தனிப்பெருங்கருணையின் ஆற்றலை மற்றும் உண்மை நிலையை எங்ஙனம் அறிந்திட முடியும்?
    ஒன்றின் உண்மை அறிந்திட என்ன செய்ய வேண்டும்.
    விசாரணை தானே? ஆம் விசாரணையில் தான் உண்மை தெரியவரும்.
    கடவுளின் உண்மை குறித்து விசாரணை செய்யச் சொல்லும் ஒரே மார்க்கம் திரு அருட்பிரகாச வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே!
    சுத்தம் என்பது மறுக்க வந்தது.
    பூர்வத்தில் நின்ற சமய மத சன்மார்க்கங்களை மறுப்பதே சுத்த சன்மார்க்கம் என்கிறார் வள்ளலார்.
    சுத்த சன்மார்க்கத்தில் கடவுளாக யாரை வெளிப்படுத்துகிறார் நம் வள்ளலார்.
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையா?
    ஆம் ஆனால் இல்லை.
    இங்கு ஆம் என்றால், திரு அருட்பிரகாச வள்ளலார் தான் வைத்திருந்த சமயப் பற்றினை கைவிட்டு விட்டு, தான் இயற்றிய சமய ஸ்தோத்திரத் திரு அருட்பா பாடல்களையும் விட்டு விட்டு, ‘கருணை ஒன்றையே’ சாதனமாக கைக்கொண்டு, அக்கருணை விருத்திக்கு தடையாக இருக்கும் சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களையும் ஒழித்து, இடைவிடாது மேற்க்கொண்ட நல்ல விசாரணையில் உண்மை அறிவுக்கு தென்பட்டவரே ”அருட்பெருஞ்ஜோதியாகிய தனிப்பெருங்கருணை கடவுள்” ஆகும்.
    இங்கு இல்லை என்பது;
    தான் கண்ட உண்மையை அங்ஙனமே உலகிற்கு உபதேசத்திலும், பாட்டிலும் எடுத்துக்காட்டினாலும், நம்மை கருத்தில் கருத்துச் சொல்லும் கடவுள் யார் தெரியுமா?
    எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லா பொருள்களையும், மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கம் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும், எங்கும் பூரணமாகி விளங்குகின்றஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும் அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யவேண்டும்.
    கடவுளின் நிலை அறிவதற்கு கீழ் வருமாறு கூறுகிறார்கள்.
    வள்ளலார் அவர்தம் அனுபவத்தில் கண்ட கடவுளின் நிலைகள் பற்றி பாடல்கள் மற்றும் உபதேசத்தில் சொன்னாலும், இவைகள் (கடவுள் நிலைகள்) படிப்பால் அறியக்கூடாது (முடியாது) என்கிறார். மேலும் உரைநடைப்பகுதியில் (பக்கம் 437: ஆவண எண் 4):-
    “ஒழுக்கம்” நிரம்பி, கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்திருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால் இடைவிடாது கருணை நன் முயற்சியில் பழகல் வேண்டும் என்கிறார்கள்.
    மேலே சொன்னதின் மூலம், சுத்தசன் மார்க்கத்தில் “ஒழுக்கம் நிரப்பிக்கொள்வதில்தான்” கடவுள் நிலையறிய முடியும் எனத் தெளிவாக அறியமுடிகிறது.
    ‘ஒழுக்கம்’ என்னவென்று வள்ளலார் ஏப்ரல் 1871க்கு பின்பு சொல்லியுள்ளார்களா எனப் பார்க்கும் போது 11.01.1872ல் வெளியிட்ட அறிவிப்பில் இது பற்றி காண முடிகிறது.
    ” இதில் வாசிக்க விரும்புகின்றவர்கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களாகி, நல்லறிவு, கடவுள்பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களையும், உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று, சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும்”.
    நிற்க! இங்கு சொல்லப்பட்ட ‘ஒழுக்கங்கள்’ பொதுவாக எல்லா ஞானி, யோகிகளால் ஏற்கனவே கண்டறியப்பட்டவை, போதிக்கப்பட்டவை. சமயமத மா£க்கங்களில் உள்ளவை. இந்நிலையில் வேறு ஏதேனும் வள்ளலார் சிறப்பாக தனியாக சொல்லியுள்ளார்கள? என இங்கு நாம் கண்டறியவேண்டும்.
    அங்ஙனம் ஏதேனும் சொல்லப்பட்டியிருந்தால் மட்டுமே வள்ளலார் கண்ட மார்க்கம் ஒரு தனி மார்க்கமாக கருத முடியும்
    ஏனென்றால் இவரின் தனி நெறியை வெளிப்படுத்தும் வழியும் புதியதாகவே இருக்க வேண்டும்.
    ஆம், வள்ளலார் ”சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” என தனியாகவே ஓரிடத்தில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்கள். உரைநடைப்பகுதி (ஆவண எண்.4, பக்கம் 410ல்) திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் (30.01.1874) வள்ளலார் குறிப்பிட்டது;
    ‘இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (சுத்த) சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை யாதெனில்:
    “இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுகளுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள் என்ற திருவார்த்தை அதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடைய கடமை”
    எனவே சுத்த சன்மார்க்கத்தில் “அடிப்படை தகுதி ஒழுக்கங்கள்” எனவும், “சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” எனவும் வள்ளலார் மிகத் தெளிவாக குறிப்பிட்டு உள்ளதை இங்கு உறுதி செய்ய முடிகிறது. ஆக, ஒழுக்கம் நிரம்பிய பின்பே கடவுள் நிலையறிய முடியும்.
    இதன் மூலம் வள்ளலார் ஒரு தனி வழியை (மார்க்கத்தை) கண்டு வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
    ஆக, சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலாரால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் உண்மை பொது நெறி எனப் பார்க்கும்போது;
    * உண்மை அறிவால் அறியப்படும் உண்மை கடவுள் ஒருவரே!
    * அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல் வேண்டும்.
    * கடவுளின் நிலையறிய ‘ஒழுக்கம்’ நிரப்பிக் கொள்ள வேண்டும்.
    * இவ்வுலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் லட்சியம் வைக்கக்கூடாது.
    * நம்மிடமுள்ள சாதி சமய “கட்டுப்பாட்டு ஆசாரங்களை” ஒழித்தல் வேண்டும்.
    * கடவுள் குறித்து நல்ல விசாரணை செய்தல் வேண்டும்.
    * நல்ல விசாரணை என்பது;
    உள்ளமுந்துதல்
    சிந்தித்தல்
    சிந்தித்தலே விசாரித்தல்

  • நல்ல விசாரணை “ஒருமை”

    நல்ல விசாரணை “ஒருமை”

    அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
    கருணை சபை – சாலை அறக்கட்டளை, மதுரை -யின் சார்பாக நடக்கும் நல்ல விசாரணைக்கு வந்தியிருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
    உயர்திரு. சந்திரமோகன் அய்யா, அவர்கள், திரு. தர்மலிங்கம் அவர்கள், திருமதி சிவகாமி அம்மா அவர்கள், வழக்கறிஞர் திரு.தயவுசுப்புராஜ் அவர்கள், திரு. குறிஞ்சிபாடி சுப்பிரமணியம் அவர்கள், வடலூர் விஜயராகவன்அவர்கள்,திரு. சொக்கலிங்கம், திரு. கோவர்தனன், திரு. குமாரராஜா, திருமதி. ஜெயகுருவம்மாள், அரியலூர் திரு.செங்கான் திரு. முரளிதரன், திருமதி.ஜெயலெட்சுமி மற்றும் ராஜாபாûளயம் திரு. சகாதேவ ராஜா ஆகியோரை வணங்கி வரவேற்கின்றேன்.
    கருணை சபை-சாலையின் முதல் ஆடியோ வெளியீடான “நல்ல விசாரணை” நம் அன்பர்களிடம் மிக்க பாரட்டுதலை பெற்றது. ஆம் அந்த விசாரணை மிக்க பயன் உள்ளதாகவே அமைந்தது. காரணம் அந்த விசாரணை முழுவதும் வள்ளலாரின் சத்திய வாக்கியங்களின்அடிப்படையிலேயே அமைந்தது. அதில் எந்தொரு தனிப்பட்ட விளக்கமும் அளிக்கப் படவில்லை.

    சான்றோர்களே; பெரியோர்கúள மற்றும் அன்பர்களே இன்று நாம் செய்ய உள்ள விசாரணை யாதெனில்;
    “கடவுள் நிலை” அறிவதற்கு உலகில் காணும் மார்க்கங்களில் உயர்வுடையது எது? என்ற விசாரணையே
    “சுத்த ஞானி” வள்ளலார் சொல்கிறார்கள்;

    “சமரச சுத்த சன்மார்க்கமே உயர்வுடையது”.
    இம்மார்க்கம் உலகில் உள்ள எல்லா சமய, மத மார்க்கங்களுக்கும் “உண்மைப் பொது நெறியாக” விளங்கும் என்கிறார்கள். இங்ஙனம் கூறிய கூற்றில் உள்ளவையை நாம் பெற்றியிருக்கும் ‘தனது அறிவால்’ ஒருவாறு இன்று விசாரணை செய்வோம். எல்லாம் வல்ல ஆண்டவன் துணைபுரிதல் வேண்டும்.

    இன்று நாம் பல வகைப்பட்ட சமய, மத, மார்க்கங்களளைல் பிளவு படுத்தப்பட்டு வேறுபாடுடன் வாழ்ந்து வருகிறோம். இன்று நடக்கும் பல அசம்பாவித சம்பவங்களுக்கு சமய, மத பிரிவுகúள காரணமாக உள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அவை அனைத்தும் கடவுள் குறித்தே வியம்புகின்றன. அச்சமய மத மார்க்கங்கûள தோற்றுவித்தவர்கள் தலைவர்களும், யோகிகளும், ஞானிகளுமே ஆவார்கள், அவர்கள் நல்லறிவு நல்லொழக்கம் கொண்டவர்ககள். அவரவர்கள் தங்கள் தங்கள் அறிவின்கண் அனுபவத்தின்கண் வெளிப்பட்டதின் மூலம் தோன்றியவையே இந்த பலவகைப்பட்ட சமய, மத, மார்க்கங்கள் ஆகும். ஆனால் இவையின் ஆசாரசங்கற்ப விகற்பங்களளைல் நம்மிடையே ‘பொது நோக்கத்தை’ நிலை நாட்ட முடியவில்லை இதனதன் பலவகைப்பட்ட சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசார நடவடிக்கையால் பிரிந்து வாழ்கின்றோம். மேலும் தங்களுடைய சமய, மத, மார்க்கங்கûள சாரதவர்கûள தீண்டத்தகாதவர்கள் என்றும் அல்லது பாவிகள் என்றும், அல்லது காபியர்கள்/விரோதிகள் என்றும் அழைக்கிறார்கள்.
    பல நூற்றாண்டுகளுக்கு முன்பும், ஏன் இன்றும், நம்மை மேற்படியான பல வகைப்பட்ட கடவுள் மார்க்கங்களளைல் ஒன்றுபடுத்த முடியவில்லை.காரணம் கடவுள் நிலை உண்மையாக காணவில்லை. பல்லாயிர கணக்கில் மனித உயிர்கûள இந்த சமய, மத வேறுபாட்டால் கொன்று குவித்து உள்úளளைம். கடவுள் பெயரால் கோடிக்கணக்கான அளவில் மற்ற உயிர்கûள பலி கொடுத்துள்úளளைம்.

    இந்நிலையில் நாம், வள்ளலார் கண்ட மார்க்கம் உயர்வுடையதா? எனப் பார்ப்போம். அங்ஙனம் உயர்வுடையதாக இருக்க வேண்டுமானால் கீழ்வருபவையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்
    இம்மார்க்கத்தில் வழிபாடு செய்யும் கடவுள் யார்? இக்கடவுûள எல்லாரும் ஒத்துக் கொள்ளக்கூடியதாக உள்ளதா?
    வழிபாடு முறை பொதுவாக உள்ளதா?
    கடவுள் நிலையறிவது எப்படி? எல்லாருக்கும் சாத்தியமா?
    இம்மார்க்கம் சாரதவர்கûள எங்ஙனம் இது வியம்புகிறது?
    இம்மார்க்கத்தின் நெறி எல்லோருக்கும் பொது நெறியாக இருக்கிறதா?
    இம்மார்க்கத்தினை கண்ட “வள்ளலார்” பெற்ற பயன் யாது?
    அன்பர்கúள, இதை நாம் நல்லவிசாரணை செய்தல் வேண்டும். வள்ளலாரின் ஆவணங்கள் உரைநடைப்பகுதி, அகவல், மற்றும் சுத்த சன்மார்க்கப்பாடல்கள் ஆகியவை ஆதாரமாக கொண்டு, அதிலுள்ள சத்திய வாக்கியங்கûள வாசிப்பதின் மூலம் நாம் உண்மையறிவோம். உங்கள் ஙழ்ள். அடஒ. அதமக
    நன்றி வணக்கம்
    “ஒருமை “
    தொடர் கட்டுரை பகுதி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ஆவணம் திரு.அகவல் வரிகள் 1 முதல் 168வரை மற்றும் உரைநடைப்பகுதி
    அன்பர்களே.
    வள்ளலார் கண்ட மார்க்கத்தில் சபையில் வழிபாடு செய்யப்படும் கடவுள் யார்? அச்சபை எல்லோருக்கும் பொதுவாக உள்ளதா? என தெரிதல் அவசியம் வேண்டும்.
    அகவல் வரி எண் 50-51
    “எச்சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி.”
    மேலும், வள்ளலார் தனது சத்திய சிறு விண்ணப்பத்தில் தன்மார்க்கத்தில் ‘வழிபாடு கடவுள்’ குறித்து சொல்லியது யாதெனில்
    “எல்லா அண்டங்கûளயும், எல்லா உலகங்கûளயும், எல்லா உயிர்கûளயும், எல்லாப் பொருள்கûளயும், மற்றையெல்லாவற்றையும், தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும், எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுûள உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின் கண் வெளிப்பட்டு விளங்கு மென்றும்…. “
    ஆக,
    “ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும், அக்கடவுளை 
    உண்மை அன்பால்
    கருத்தில் கருதி வழிபாடு செய்யின் …”
    என்பதின் மூலம்
    வள்ளலார் மார்க்கத்தின் சபை “பொது சபை” எனவும் வழிபாடு கடவுள் “பொது கடவுள்” எனவும் இயம்புவர் அறிஞர்கள் என்பதில் ஐய்யமில்லை.
    வள்ளலார் நெறி ‘உண்மைப் பொது நெறி’ என்பதற்கு மற்றொரு அகவல் வரிகள் 71 மற்றும் 93
    “எப்பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய்கண்டோர்
    அப்பொருள் ஆகிய அருட்பெருஞ்ஜோதி “
    “பொது அது, சிறப்பு அது, புதியது, பழையது என்று
    அது அது வாய்த் திகழ் அருட்பெருஞ்ஜோதி “
    கடவுள் வடிவம் என்ன? அதைப்பற்றி வள்ளலார் திருஅகவலில் சொல்லும் போது
    “அது சுட்டுதற்கு அரிதாம்” என்றும் (திருஅகவல் வரிஎண் 37)
    “மனம் முதலிய தத்துவங்களுக்கு எட்டாததும்” (வரி 41)
    “ஓதி நின்று உணர்ந்து உணர்தற்கு அரிதாம்” (வரி 42)
    “கற்பனை முழுவதும் கடந்தது” (வரி 5)
    “எண் தரமுடியாது” (வரி 113)
    என்கிறார்கள் மேலும் வள்ளலார், கடவுள் உண்மையை அக அனுபவத்திலே தெரியும் என்கிறார்கள்.
    இந்நிலையில், நமது புற அறிவினால் எல்லோராலும் ஒத்துக் கொள்ளக்கூடிய பொது நெறியாக வள்ளலாரின் நெறி உள்ளது.
    ஆனால் இன்று உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் கடவுளும் அதன் வடிவமும் கற்பனையால்
    சுட்டிக்காட்டியும், எண்ணிட்டும் அல்லது அவரவர் அறிவின்கண் தோன்றியவையும் தெய்வமாக
    கொள்ளப்பட்டுள்ளது. கடவுள் நிலையை கற்பனையால் பொய்யாக திணிக்கப்பட்டு உள்ளது. அக்கடவுளுக்கு
    மந்திரங்களளைல் ஓதியும் மற்றும் மனிதர்களிடையே சாதி/ வகுப்புகள் வேறுபட்ட கோட்பாடுகள்,
    வேறுப்பட்ட பல நடைமுறைகளும் உள்ளன, அவை அங்ஙனம் இருப்பதினால் தான் வள்ளலார் அகவல்
    எண் 106-ல்
    “சாதியும் மதமும் சமயமும் பொய் என
    ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி”
    என்கிறார்கள் (பக்கம் 561ல் தன் சத்திய சிறு விண்ணப்பத்தில்) தன் மார்க்கத்திற்கு மேற்ச்சொன்ன
    சமய, மத, மார்க்கங்களை எக்காலத்திற்கும் முக்கியத்தடைகளளைகும் என்கிறார்கள். மேலும் பக்கம்
    411-ல் இவையில் முற்றும் பற்றற கைவிட்டவர்களே சுத்தசன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்
    என்கிறார்கள் ஆனால் அதே நேரத்தில் ஓர் உண்மையை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும் தன்
    மார்க்கத்திற்கு மேற்படி, சமய, மார்க்கங்கள் எக்காலத்தும் முக்கியத்தடையாக அறிவித்த வள்ளலார்,
    தான் கண்ட மார்க்கத்தின் நெறியானது மேற்படி எல்லா சமங்களுக்கும், மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களும் “உண்மைப் பொது நெறியாக” விளங்கும் என்கிறார்கள். இதன் மூலம் உலகத்தார் அனைவருக்குமே பொதுநெறியாக விளங்கக் கூடிய மார்க்கத்தினையே அவர்கள் கண்டு உள்ளளைர்கள்
    கடவுளின் வடிவத்திற்கு வருவோம்
    வள்ளலார் தனது பேருஉபதேசத்தில் ( 22.10.1873)ல் சொல்லியது பக்கம் 466-ல்
    “தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள், யாதெனில்; கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள், ” தெய்வத்துக்குக் கை, கால் முதலியன இருக்குமா?” என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கùளன்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன், அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்மசித்திகûளக் கற்பனைகளளைகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருடம் எட்டு வருடம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகûள அடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக்கொண்டியிருக்கின்ற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால் நீங்கள் அடையப் போகின்ற பெரிய பிரயோஜனம் போய்விடும், அல்லது, அதில் முயற்சிசெய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவகைளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்க வேண்டியது.
    கடவுளின் வடிவம் குறித்து தனது
    அகவலில்
    எண் 57
    “பிறிவுற்று அறியாப் பெரும் பொருளளைய், என்
    அறிவுக்கு அறிவு ஆம் அருட்பெருஞ்ஜோதி”
    வரி எண் 138
    “அருள் ஒளி என்தனி அறிவினில் விரித்தே
    அருள் நெறி விளக்கு எனும் அருட்பெருஞ்ஜோதி”
    ஆக,
    கடவுளின் வடிவம்
    “நம் அறிவுக்கு அறிவில்” தெளிவதாக உள்ளது.
    அந்த அறிவு “தனி அறிவு” (சத்திய அறிவு) ஆகும். மேற்படி இந்த “தனி அறிவை” எப்படி பெறுவது? என விசாரணை செய்தல் வேண்டும.
    வள்ளலார் மிகத் தெளிவாகவே பக்கம் 438 -ல் சொல்லிவிடடார்கள்.
    திருவருள் நிலை படிப்பால் அறியக்கூடாது.
    அக அனுபவமே உண்மை.
    மேலும்
    சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் நிலையறிவது
    எப்படியெனில்,
    “ஒழுக்கம் நிரம்பி, கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால் நாம் தாழும் குணம் வரும். அத்தருணத்தில் திருவருள் சத்தி பதிந்து அறிவு விளங்கும்”.
    அகவல் வரி 143ல்
    “பிரிவு ஏது, இனி உனைப் பிடித்தனம் , உனக்கு நம்
    அறிவே வடிவு எனும் அருட்பெருஞ்ஜோதி ”
    ஆக “தனி அறிவை”
    அறிவுக்கு அறிவாகிய தனி அறிவை “விசார சங்கல்பத்தில்” பெறுவதாக உள்ளது. இச் சங்கல்பம் உண்டாகும்வரை
    “ஒழுக்கம்” நிரம்புதல் வேண்டும் என்பதே வள்ளலார் கண்ட மார்க்கத்தின் “உண்மை தனி நெறியாக” உள்ளது.
    சத்திய அறிவால் அறியப்படுகின்ற அந்த ஒரே கடவுளின் உண்மை, வடிவம், நிலை ஒழுக்கம் நிரம்புவதின் மூலமே .
    அறியமுடியும், நமது முதல் விசாரணை பகுதி 1-ல் மிகத் தெளிவாக நாம் கண்டோம்
    ஆக,
    வள்ளலார் நமக்கு காட்டிய “வழிபாடு கடவுளுக்கு” எந்தொரு வடிவமும் தரவில்லை. நம்மிடம் உள்ள உரிமை, எடுத்துக் காட்டு தகுதி அடிப்படையில் “ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும்” அக்கடவுûள உண்மையன்பால் கருத்தில் கருதவே சொல்கிறார் வள்ளலார்.நமது உரிமை அடிப்படையில் கருதிய அக்கடவுளின் நிலை, வடிவம் அறிவுக்கு அறிவாகிய “தனி அறிவி”னிலேயே தெரிவதாக உள்ளது.
    இதுவே வள்ளலார் நமக்கு காட்டிய கடவுள்
    ஆனால்,
    வள்ளலார் “தனி அறிவை” பெற்று, ஞான யோக அனுபவநிலையில் கண்ட ஆண்டவரே “தனிப்பெருங்கருணை கடவுள்” ஆகும்
    அக்கடவுûளத் தான் 18 திருநெறிகுறிப்புகளுடன் சொல்லி உள்ளளைர்கள் “இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கை இன்பின ரென்றும், நிர்க்குணரென்றும், சிற்குணரென்றும் நித்தியரென்றும், சத்தியரென்றும், ஏக ரென்றும், அநேக ரென்றும், ஆதியரென்றும், அனாதிய ரென்றும், அமல ரென்றும், அருட்பெருஞ்ஜோதிய ரென்றும், அற்புத ரென்றும், நிரதிசய ரென்றும், எல்லாம் வல்லவ ரென்றும், குறிக்கப்படுவதல் முதலிய அளவு கடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளளைற் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும், உணர்ந்தும், புணர்ந்தும், அனுபவிக்க விளங்குகின்ற தனித் தலைமைப் பெரும் பதியாகிய பெருங் கருணைக் கடவுúள…..”
    நம் வள்ளலார் துதித்தும், நினைத்தும், உணர்த்தும், புணர்ந்தும் அனுபவித்தார்கள்.
    மேலும் வள்ளலாருக்கு
    “சாகா கல்வியின்” உண்மைகள் மூன்றும்
    தெரியவந்து மரணமில்லா பெருவாழ்வு பெற்றார்கள். சுத்தமாதி முத்தேகங்கûள பெற்றவரே வள்ளலார். அவர் ஓரு சுத்தஞானி ஆவார் ஆக, கடவுள் நிலை, வடிவம் அக அனுபவத்திலேயே ‘தனி அறிவு’ பெற்றப் பின்னரே தெரியமுடியும், என்பதை நாம் தெரிந்துக் கொள்வோம்.
    அன்பர்கúள அடுத்து காண்பது
    வள்ளலார் மார்க்கத்தில் ‘தனி நெறி’ எந்த இடத்தில் வெளிப்படுவதாக உள்ளது. இந்த விசாரணையே நாம் இன்று காண்பதாக உள்úளளைம். மிக முக்கிய பகுதி இது. வள்ளலார் சொல்கிறார்கள் “தன்னை ஏறாநிலை மிசை ஏற்றியது எதுவெனில் தயவு என்னும் கருணையே” என்கிறார்கள். அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும் ஒருமையில் தான் தயவு வரும். பக்கம் 474ல் தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருûளயே குறிக்கும் என்கிறார்கள்.
    கருணை என்பது ;
    “எல்லா உயிர்களிடத்தும் தயவும்
    ஆண்டவரிடத்தில், அன்புமே “
    தயவு என்னும் கருணை = தயவு + அன்பு
    இந்த “தயவு” “ஒருமையில்” தான் வரும் என்கிறார்கள்.
    ஒருமை என்றால் என்ன?
    அன்பர்கúள இந்த ஒருமையின் பொருளில் (இந்த இடமே) “வள்ளலாரின் தனிநெறி” வெளிப்படுகிறது. ‘உண்மைப் பொதுநெறியாக’ விளங்குகிறது.
    சுத்தசன்மார்க்கம் இந்த “ஒருமையிலே”யே வெளிப்படுகிறது என்பது சத்தியம்.
    “ஒருமை” என்பது என்ன?
    இதுநாள் வரை இதற்கு கண்டு தெரிந்த வந்த பொருள் என்ன என்று தமிழ் அகராதியை பார்த்தால் தெரிய வருவது யாதெனில் ;
    நூல் பிங்கலையில் ஒருமை என்பது ஒற்றுமை மற்றும் இறையுணர்வு எனவும்
    கம்பராமயணத்தில் ஒருமை என்பது ஒற்றுமை மற்றும் இறையுணர்வு
    குறளில் ஒருமை என்பது தனிமை மற்றும் ஆலோசனை முடிவு என்றும்
    சிவப்புராணத்தில் ஒருமை என்பது ஒப்பற்றதன்மை எனவும்
    தொல்காப்பியத்தில் ஒருமை என்பது ஏகவசனம் என்றும்
    தேவாரத்தில் ஒருமை என்பது மனமொன்றுகை – யாகவும்
    தணிக்கைப்பு, நந்தியுவில் ஒருமை என்பது மோக்ஷம் – எனவும்
    கம்பரின்அயோத்தியாவில் ஒருமை என்பது மெய்ம்மை என்றும்
    398ன் குறளில் ஒருமை என்பது ஒரு பிறப்பு ஆகவும் உள்ளது.

    ஆக, உலகத்தார் இதுவரை ‘ஒருமைக்கு’ கொண்ட பொருள் மேற்படியாக தனிமை, முடிவு, ஒரேத் தன்மை, ஒப்பற்ற தன்மை ஏகவசனம், மனம் ஒன்றுகை, மோஷம், மெய்மை ஒரு பிறப்பு ஆக உள்ளது.
    ஆனால் அன்பர்கúள வள்ளலார் தரும் விளக்கம் என்ன?
    “ஒருமை”
    பக்கம் 414-ல் சொல்கிறார்கள்; “ஒருமை என்பது யாதெனில்; “தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடும். மற்ற இடத்தில், “தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது’ என்கிறார் வள்ளலார்.
    இங்குள்ள சிறப்பான தனிப்பொருûள எடுத்துக் கொள்வோம்.
    அது ‘ஒருமை’ என்பது
    “தனது அறிவு, ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடும்”.
    ஒருமை = தனது அறிவு + ஒழுக்கமும்
    ‘தனது அறிவு’ என்பது அவரவர் பெற்றியிருக்கும் அறிவே ஐய்க்ண்ஸ்ண்க்ன்ஹப் ஓய்ர்ஜ்ப்ங்க்ஞ்ங் இங்ஙனமாக பொதுநெறி கொண்டு எந்த மார்க்கமும் இதுநாள்வரை இவ்வுலகத்தில் தோன்றவில்லை.
    நல்ல விசாரணைக்கு செல்வோம்.
    ஆக ‘தனது அறிவு’, (அவரவர் பெற்றியிருக்கும் அறிவுடன்) என்பதுடன் ஒழுக்கம் சேர்ந்து, அவை இரண்டும் ஒத்த இடத்தில் (ஙங்ழ்ஞ்ங் டப்ஹஸ்ரீங்) ஒருமை தானாக கூடும். இந்த ஒருமையை பெற்றால் ‘கருணை’ வந்து விடும்.
    கருணை வந்தால் ஏறாநிலைமிசை ஏறி மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் ஆகிய அவத்தைகûள நீக்கி பேரின்ப வாழ்வை பெற்று விடலாம்.
    அடுத்து முடிவாக காண்பது
    வள்ளலார் மார்க்கமே உயர்வுடையது. எங்ஙனம்?
    அன்பர்கúள,
    ஒன்று உயர்வாக கருதப்பட வேண்டுமானால்
    அது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்
    அது எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்
    மார்க்கத்தினை ஏற்படுத்தியவர் தன் நிலைப்பற்றி சொல்லியதை கவனத்தில் கொள்ள வேண்டும்
    அம்மார்க்கத்தினை சாராதவர்கûளயும் வேறுபாடு இன்றி பார்த்திருக்க வேண்டும்
    மார்க்கத்தினை கண்டவர், வென்றியிருக்க வேண்டும் அவ்வழி மூலமே இந்த ஐந்தும் பெற்றியிருக்கும் எதுவோ அதுவே உயர்வுடையதாகும். நல்ல விசாரணை செய்வோம்.

    உலகில் காணும் சமய மத மார்க்கங்கûள பார்க்கும் பொழுது
    அம்மார்க்கங்கûள சாராதவர்கûள மற்றும் அதில் காட்டப்படும் அக்கடவுள், கர்த்தர், ஞானி, தலைவர் ஆகியோரை நம்பாதவர்ûள
    தீண்டத்தகாதவர்கள் என்றும்
    பாவிகள் என்றும்
    காப்யர்கள் என்றும்
    சாத்தான்கள் , எதிரிகள், கூட்டம் என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சுத்த சன்மார்க்கத்தில் சொல்லப்படுவது என்ன தெரியுமா? பக்குவம், அபக்குவம், பக்குவாபக்குவம்
    அபக்குவர்களின் நடவடிக்கைகளுக்கு அவர்களின் அஞ்ஞானமும், அறியாமையுமே காரணம் என்கிறார் வள்ளலார்.
    எவரையும் வேறுபட்டு, நினையாது இயற்கையின் உண்மையிலேயே காண்கிறார் வள்ளலார். பக்கம் 471-ல் ‘ஒழுக்கம் வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களளையிருந்தாலும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்தல் வேண்டும்’ என்று வள்ளலார் சொல்லியிருப்பதின் மூலம் அவர் மார்க்கம் “பொது மார்க்கம்” என அறிதல் வேண்டும்.
    இம்மார்க்கத்தின் லட்சியம்
    “ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையே”.
    பக்கம் 550ல் தன் மார்க்கத்தின் நெறி எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாக விளங்கும் என்கிறார்கள்.
    ஆக, வள்ளலார் மார்க்கத்தில்
    கடவுள் யார்? என்பதிலும்
    அக்கடவுளின் வடிவம் என்ன? என்பதிலும்
    அக்கடவுளின் நிலையறியும் வழி எது? என்பதிலும்
    அக்கடவுளின் அருள் யாருக்கு கிட்டும்? என்பதிலும்
    பொதுநோக்கம் கொண்டுள்ளது.
    இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பமாக வள்ளலார் கடவுள் உண்மையை காண்கிறார் வள்ளலார் எனவே சுத்த சன்மார்க்கமே உயர்வுடையது என்பதை நம் புற அறிவினாலும் மற்றும் அனுபவத்தினாலும் உறுதியாக கூறலாம்.
    மீண்டும் ஒருமுறை சுத்தசன்மார்க்கமே உயர்வுடையது என உறுதிப்படுத்துவோம்.
    வள்ளலாரின் சுத்த சன்னமார்க்கம்
    உண்மைப் பொது நெறியில்…..
    1. வழிபாடு கடவுள் (ஆதாரம் சத்திய சிறுவிண்ணப்பம் பக்கம் 559 )
    ‘எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும், அக்கடவுûள உண்மை அன்பால் கருத்தில் கருதி வாழிபாடு செய்தல்’…..
    2. கடவுள் வடிவம் (ஆதாரம் அகவல் வரிகள்) “உண்மைக்கடவுளின் வடிவம்
    அறிவுக்கு அறிவாம் தனி அறிவில் தெரிவதாக உள்ளது’. சத்திய அறிவை “ஒழுக்கம்” நிரப்புவதின் மூலம் பெறலாம். ஆதலால் கருணையை, இடைவிடாது நன்முயற்சியில் பழகல் வேண்டும்.
    3. கடவுள் நிலையறிய
    (பக்கம் 438 உபதேசக் குறிப்பு )
    “ஒழுக்கம் நிரம்பி கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால், நாம் தாழும் குணம் வரும் அத்தருணத்தில் திருவருள் சத்தி பதிந்து அறிவு விளங்கும்”.
    4. இம்மார்க்கத்தை சார்ந்தவர் சாராதவர்கள் பயன்பெற்றவர்கள் எங்ஙனம் அழைக்கப்படுகிறது.
    பக்குவிகள்
    அபக்குவிகள்
    பக்குவாபக்குவிகள் என்றே அழைக்கப்பட்டு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையை லட்சியமாக கொண்டுள்ளது.
    5. வள்ளலாரின் நெறி வெளிப்படும் “ஒருமை” இடத்தில் பொது நோக்கம் உள்ளதா?
    ஆதாரம் 414ம் பக்கம்
    சுத்த சன்மார்க்க நெறி வெளிப்படும்
    இடம் – உரிமை கருணை / ஒருமை / கருணை வருவதற்கு ஏதுவான உரிமை இருத்தல் வேண்டும். உரிமை = தகுதி உடையவர்கள் “கருணை” என்பது எல்லா உயிர்களிடத்திலும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்புமே) தயவு என்னும் கருணை “ஒருமையிலேயே” வரும். ஒருமை என்பது ‘தனது அறிவு ஒழுக்கம் ஒத்தயிடத்தில் தானே கூடும்’ இந்த தனது அறிவு, என்பது அவரவர் பெற்றியிருக்கும் அறிவே. இதன் மூலம் அறிவது யாதெனில் ;
    இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களளையிருந்தாலும், அவர்களிடம் ஒழுக்கம் சேர்ந்து ஒத்து வருகின்றயிடத்தில் “கருணை” வரும் என்பதை சத்தியமாக அறிதல் வேண்டும். பக்கம் 418ல் சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கûள ஒழித்து ‘பொதுநோக்கம்’ வரும் போது ஆண்டவர் அருள் கிட்டுவதாக உள்ளது என்பதே வள்ளலார் சொல்லிய உண்மையாகும்
    முடிவாக சுத்த சன்மார்க்க ஒழுக்கங்கள் எவை எனக்காணும் பொழுது வள்ளலாரின் விண்ணப்பங்கள் மூலம் தெரிவது., “தூய்மையுடைமை, அன்புடைமை, வாய்மைக்கூறல், இன்சொற்கள்” முதலியவை ஆகும். பக்கம் 547-ல் மிகத்தெளிவாக குறிப்பிட்டு உள்ளளைர்கள். அவை நல்லறிவு, கடவுள், பக்தி, உயிரிரக்கம்,பொதுநோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்ககளையும் உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செயற்கை ஒழுக்ககளையும் பெற்று சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களளைகியிருத்தல் வேண்டும்.
    மேலும் வள்ளலார் திருக்கதவு திருகாப்பிட்டு கொள்ளும் முந்தின இரவில் சொல்லியதை ஒருமுறை வாசிக்கின்றேன்.
    (பக்கம் 410 உரைநடைப்பகுதி )
    “இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை.
    யாதெனில்;
    இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளளைக கொள்ளளைதீர்கள்
    எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்”.
    நல்ல விசாரணை முற்றும் வாசிப்புக்கு வாய்ப்பு அளித்த APJ. ARUL அம்மா அவர்களுக்கு நன்றி.

    எனது அன்பு சகோதர சகோதரிகúள, இன்றைய சூழ்நிலையில்,
    உலக தீவிரவாதம்,
    உலக புவிவெப்பம்,
    உலக வறுமை, ஆகிய அனைத்திற்கும் ஒரே தீர்வு, ஒரே வழி “வள்ளலாரின் உண்மைப் பொதுநெறியே” ,
    சாதி, சமய, மத, இன, நிறம், வாழ்வு நிலை, தேசம் முதலியவை உட்பட “கட்டுப்பாட்டு ஆசாரங்கûள” விட்டொழித்து, சத்திய ஞான ஆசாரமாகிய பொதுநோக்கம் நாம் பெறுதல் வேண்டும்.
    கடவுளின் உண்மையை பெட்டியில் போட்டு பூட்டிய அந்த பூட்டை உடைக்கும் நாள் வந்துவிட்டது. இன்று நாம் உடைத்தோம் உண்மையை தெரிந்து கொண்டோம்.

    அன்பர்களே,
    உங்கள் கால்பாதம் தொட்டு வணங்கி வேண்டிக் கொள்கின்றோம். வள்ளலாரை அவர்தம் “முடிவான தனிநெறியிலேயே” வெளிப்படுத்துங்கள். அவரால் லட்சியம் வையாது கைவிடப்பட்ட சமயத்தில் வைத்து வெளிப்படுத்தாதீர்கள்.

    வள்ளலாரின் சுத்த சன்மார்க்க உண்மையை வெளிப்படுத்தும் சத்திய வாக்கியங்கள் எல்லோருக்கும் “உள்ளது உள்ளபடியே” வாசித்து காட்டுங்கள்.

    சுத்தமாதி ஞானி வள்ளலாரே,
    நீங்கள் சொல்லிய சுத்தசன்மார்க்க ஒழுக்கத்தினை இன்று, இந்த நேரத்தில், நாங்கள் தெரிந்து கொண்டோம்.
    உலகில் காணும் சமய, மதங்களில் லட்சியம் வையாது, ஆசாரங்கûள விட்டு ஒழித்து பொதுநோக்கம் கொண்டு ஒழுக்கம் நிரப்பி எல்லாம் வல்ல அந்த ஒரே தலைவனாகிய இறைவனை சத்திய அறிவால் தெரிந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வை நீங்கள் பெற்றதுபோல் பெறுவோம்.
    இது சத்தியம்
    இது சத்தியம்
    இது சத்தியம்
    முற்றும்.

    வணக்கத்துடன்
    APJ. ARUL

  • வெளிப்படையான விசாரணை — ஏபிஜெ அருள்

    வெளிப்படையான விசாரணை — ஏபிஜெ அருள்

    வள்ளலார் தனி தேகம் ஒளி வடிவம் பெற்று நம் பார்வையிலிருந்து விலகிய ஆண்டு ஜனவரி 1874.
    இன்று ஜூன் 2017.
    143 வருடங்கள் மேல் ஆகிவிட்டது.

    வள்ளலார் தனி வழியில் கடவுள் அருளைப் பெற்று மரணத்தை வென்றார்கள். அவ்வழியில் எல்லோரும் பெறுவதாக உள்ளது.இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
    ஆனால் தான் சொல்ல வந்த உண்மையை எவரும் தெரிந்துக் கொள்ளவில்லை என்றார்கள். நிலையத்திலும் வழிபாடுகள் சமயத்தின் அடிப்படையிலேயே நடந்து வந்தது.

    நீதிமன்றம் நாடி 20 க்கும் மேற்பட்ட வழக்குகளிட்டு தற்சமயம் சமயவழிபாடுகள் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரையிலும் வள்ளலாரின் தனி நெறியை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்துவதில் முரண்பாடுகள் நீடிக்கிறது.

    காரணம்:

    1.வள்ளலாரின் நெறி ஒரு புதிய தனி நெறியாகும்.

    2.சமயத்தின் மீது பற்றை விடாமல் வள்ளலாரையும் முந்தய பற்று சமயத்திலேயே காட்டுவது.

    3.வள்ளலார் பெயரை பயன்படுத்தி சங்கம் ஆரம்பித்து அன்னதானம் இட்டு தன் அறிவாலேயே கருத்தை அனுபவத்தை சொல்பவர்கள்.

    4. தவம்,மூச்சுபயிறசி, சாதாரண யோகம்,விரதம் இவையில் வள்ளலாரை சேர்ப்பது.

    இப்படி பல முரணான வழியில் அறியாமையிலும், தெரிந்தே வல்லப தன்மையிலும் வள்ளலாரையும் அவர்தம் முடிபான நெறியையும் வெளிப்படுத்தப்பட்டது.

    கடந்த வருடங்களில் பல பெரியவர்கள் வள்ளலார் பெயரில் சங்கங்கள் அமைத்து பணியாற்றினார்கள். பல நூல்கள் இயற்றினார்கள். சமுதாயத்தில் நல்லவர்களாகயிருந்து பெயர் பெற்றிருந்தார்கள். ஆனால் வள்ளலார் பெற்ற பயனை பெறவில்லை. இறந்தார்கள்.

    இன்றும் பல பெரியவர்கள் உள்ளனர். அதில் பலர்
    பெரியவர்களே.
    மார்க்கத்தின் தகுதியான கொலை புலை தவிர்த்தவர்களே இவர்கள்.
    ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகவே விளக்கம் தருகிறார்கள். மற்றவரை குற்றம் சுமத்துகிறோம்.

    எது எப்படியாயினும் 143 வருடங்கள் ஆகிவிட்டது

    வள்ளலாரை போல் யார் பயன் பெற்றார்கள்? இல்லையே!

    அப்படி எனில் இன்றும் அவர் சொன்ன உண்மையை தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

    கடவுளின் உண்மையை இது வரை யாரும் வெளிப்படுத்தவில்லை.

    தான் கண்ட உண்மை கடவுள் சமய மதங்களில் சொல்லப்பட்டவை இல்லை என்கிறார்வள்ளலார்.

    இனி எவரேனும் வள்ளலார் பெயரில் சங்கம் வைத்ததை பார்த்தால் அவர்களை கீழ் வருபவை கொண்டு காணுங்கள்.

    1.சமய கடவுளர் சமய சடங்குகளில் பற்றுக் கொணடியிருத்தல்.
    2. சாதி சாத்திரங்களில் பற்று.
    3.கோபம் காமம் தடுத்துக் கொள்ளதவர்கள்.
    4.கொலை புலை தவிர்க்காதவர்கள்.
    5.மற்றவர்களிடத்திலிருந்து வசூலித்து அன்னதானம் ஏழை அநாதை என்றில்லாமல் எல்லோருக்குமே போட்டு அதை மட்டுமே
    தொழிலாக பார்ப்பவர்
    6.வள்ளலார் நெறி என்று கூறி ஆதாரம் காட்டாமல் தன் அறிவாலே அனுபவத்தால் பேசுவது.
    7.ஏதேனும் முறையில் சடங்களை வழிபாடு செய்பவர்கள்.
    8. வள்ளலார் பெயரில் பயிற்சி வகுப்பு, அதில் சமய முறையில் தியானம, யோக முறை செய்பவர்கள்.

    மேற்படி யாவருமே வள்ளலார் நெறியில் சுத்த சன்மார்க்கத்தார் என்று சொல்ல முடியாது என்பதே உண்மையாகும்.

    இவர்களை கொண்டு வள்ளலார் நெறி தெரிந்து கொள்ள முடியுமா?

    நீங்களே சொல்லுங்கள் நியாயத்தை!

    இவர்களிடத்தில் வள்ளலார் போல் ஏன் ஒளி தேகம் அடையவில்லை என கேட்பது சரியா?

    அப்படி எனில் நீ? என கேட்க கூடும்.

    என் பணி புறமாக அமைந்து விட்டது. வள்ளலாரை முடிபான நெறியிலேயே காட்டவும் அதற்கான நடவடிக்கை என சென்று விட்டது காலங்கள்.ஆம் காலம் வீணாகி விட்டது. ஆனால் வள்ளலார் சொல்லிய உண்மை என்ன? என்பதை ஆதாரத்துடனே வெளிப்படுத்தும் செயலை என் தோழிகள்,சகோதரர்கள் மற்றும் கணவர் உதவி மூலம் உண்மையாக செய்து வந்துள்ளேன். இன்றே இப்பொழுதே தெரிந்ததில் விசாரம் மேற்க்கொள்ளப் போகிறேன்.
    வள்ளலார் நெறி என்ன?
    வழிபாடு என்ன?
    வள்ளலார் சாகா கல்வி சாத்தியமா?? என்பது குறித்து தொடருவோம். —என்றும் உண்மையுடன்:
    ஏபிஜெ அருள் வள்ளலாரின் நெறி எல்லோருக்கும் பொதுவாகவும் உண்மையாகவும் எங்ஙனம் உள்ளது என்று நாம் உண்மை அன்பால் விசாரித்து பயன் பெறுவோம் – விசாரம் தொடரும் – நன்றி
    apjarul1@gmail.com.