Author: unmai

  • இறவாமை என்பது உண்மையா?

    இறவாமை என்பது உண்மையா? –ஏபிஜெ அருள்.

    என் மார்க்கம் இறப்பை ஓழிக்கும் மார்க்கம்.என் மார்க்கத்தில் சாகா கல்வி தவிர வேறுஒன்றுமில்லை என்கிறார் வள்ளலார்.
    இது சரியா?தப்பா?
    உண்மையா?பெய்யா?
    என்பதை விட இங்ஙனமாக வள்ளலார் என்ற ஞானி சொல்லி உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தப்படுகிறது.
    இது குறித்து அறிய வள்ளலார் உபதேசம், பாடல்கள்,விண்ணப்பம் உள்ளது. இது குறித்து நல்ல விசாரணை செய்ய யாதொரு தடையும் எவருக்கும் இல்லை.
    மற்ற மார்க்கங்களில் சொர்க்கம்,நரகம் குறித்து சொல்லப்பட்டுள்ளது என அறிக.
    இங்கு சொர்க்கம் நரகம் பற்றி விசாரமில்லை என்கிறார் -வள்ளலார்.

  • வள்ளலார் முடிபாக சொன்னது இது தான்

    வள்ளலார் முடிபாக சொன்னது இது தான். — ஏபிஜெ அருள்.

    22/10/1873 ல் வள்ளலார் சொன்னது; 
    “உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.”
    30/01/1874ல் சொன்னது;
    ” இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (சுத்த)சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை.
    நிற்க! ஆக
    வள்ளலார் சொல்ல வந்ததை 
    தெரிந்து கொள்ளாதவர்களாக (முயற்சிக்காதவர்களாக) இருந்தோம்.
    இந்நிலையில் வள்ளலார் மீண்டும் நம்மிடம் கீழ்வருமாறு சொல்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். 
    அது;
    சித்திவளாகத்தில் உள்ளிருந்த விளக்கை திருமாளிகைப் புறத்தில் வைத்து,

          “இதைத் தடைபடாது ஆராதியுங்கள். இந்த கதவைச் சாத்திவிடப் போகின்றேன். இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர் தீப முன்னிலையில் விளங்குகின்றப் படியால் உங்களுடைய காலத்தை வீணிற்கழிக்காமல், “நினைந்து நினைந்து” என்னும் தொடக்கமுடைய 28 பாசுர மடங்கிய பாடலிற் கண்டபடி தெய்வ பாவணையை இந்தத் தீபத்திற் செய்யுங்கள். நானிப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்.’”

     

    அன்பர்களே!
    வள்ளலார் சொல்ல வந்த உண்மை, 
    சுத்த சன்மார்க்க நெறி, கடவுள் அருள்
    எல்லாம் இந்த “நினைந்து நினைந்து” என்னும் தொடக்கமுடைய 28 பாசுரப் பாடல்களில் தான் உள்ளது என்பதை சத்தியமாக இன்று அறிந்து உணர்வோம். 
    எவர்க்கெல்லாம் வள்ளலார் சொல்ல வந்த உண்மை, உண்மை கடவுளின் நிலை, பேரின்ப பெருவாழ்வு பற்றி தெரிந்து கொள்ள “ஆசை” உள்ளவர்கள் இன்றே 28 பாசுரப்பாடல்களை வாசிப்போம் பாடுவோம் கடவுள் அருளை பெறுவோம்.
    அன்புடன்:
    ஏபிஜெ அருள்.

    28 பாசுரப்பாடல்களுக்கு (ஞான சரியை என்ற தலைப்பில் ஆறாம் திருமுறையில்)
    http://www.atruegod.org/vallalar/ இதை கிளிக் செய்து காண்க

  • ஏமாறுதல் இருக்கும் வரை  ஏமாற்றுதல் இருக்கும்

    ஏமாறுதல் இருக்கும் வரை ஏமாற்றுதல் இருக்கும். – apjarul.

    கடந்தமுறை வடலூர் சென்றிருந்த போது பல “இளைஞர்கள்”
    (வயது 25 to35) வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்தில் முழுமையாக ஈடுபட்டிருப்பதை பார்க்க முடிந்தது. அவர்களில் சிலரிடம் நாங்கள் பேசக்கூடிய சூழல் ஏற்பட்டது. அதில் ஒருவர் வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு முழுமையாக ஈடுபடலாம் என உள்ளேன் என்றார். அவரிடம் தாங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? வருமானம் என்ன? என கேட்டோம்.அதற்கு வேலையெல்லாம் இல்லைய்யா? இங்கு வந்திட்டேன். அன்னதானம் செய்து ஜூவகாருண்யத் தொண்டு செய்யப் போகிறேன் என்றார். அவரிடம் எந்த சபையயில் பணி செய்ய போகிறீர்கள் என்றதுக்கு தனியாக என்றார். அவரை பார்த்தால் வசதி படைத்தவராக தெரியவில்லை. இருப்பினும் உங்கள் வீடு, வசதி குறித்து கேட்டதுக்கு, அவர் வீடு குடும்பம் குறித்து கூறாமல், தனக்கு வசதி கிடையாது என்றார். பணம் வசூல் செய்து ஜூவகாருண்ய பணி செய்ய வள்ளலார் கட்டளை என்றாரே பார்க்கலாம்.
    எதற்காக இங்கு இது குறித்து பேசுகிறோம் என்றால், அன்னதானம் ஜூவகாருண்யம் என்ற பெயரில் பலர் இறங்கி உள்ளனர்.ஏற்கனவே பல சபை சங்கங்கள் இப்பணியில் இருக்கின்றன. அங்கு பல வயதானவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அங்கு பணி செய்ய இது போன்ற இளைஞர்கள் செல்லாமல், தனியாக இவர்கள் கலெக்சன் பண்ணி செய்ய முற்படுவது தவறே ஆகும். இன்று வயதான ஏழைகள் பலர் (வயது 70 க்கும் மேல்) உழைத்து கஞ்சிக்காவது சம்பாதித்து பிழைக்கிறார்கள். பழ வியபாரி பாட்டிகள், மூடை தூக்கும் வயதான தாத்தாக்கள், சோப்பு சீப்பு விற்கும் கண் தெரியாதவர்கள் என நாம் தினம் பார்க்கிறோம். ஏழையாக இருந்தாலும் பெரிய படிப்பு படித்து, உழைத்து நாலு பேருக்கு உதவிட முயலும் இவர்கள் மத்தியில் எந்தொரு படிப்பு,உழைப்பு இல்லாமல் வள்ளலார் பெயரைச் சொல்லி வரும் இந்த இளைஞர்களை நினைத்து பார்க்கமுடியவில்லை. உழைத்து வருமானம் செய்ய வேண்டிய வயதில் அந்த எண்ணமில்லாத இந்த இளைஞர்களை எண்ணி வருத்தப்படுவதா? இல்லை, இவர்களுக்கு அன்னதானம் ஜூவகாருண்ய பணிக்கு பணம் கொடுத்து ஊக்குவிக்கும் மனிதர்களை குறித்து கோபப்படுவதா?
    இனி இது போன்று வருபவர்களிடம் கூறுங்கள்;
    வள்ளலார் ஆன்மீகவாதி மட்டுமில்லை
    முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர், வள்ளலார் ஒரு சித்த மருத்துவர், வள்ளலார் ஒரு பதிப்பாசிரியர், நூலாசிரியர், வள்ளலார் ஒரு அருட்கவிஞர் இன்னும் பல. அறிவு அன்பு சொல் செயல்கள் பணிகள் எல்லாவற்றிலும் இருந்து தான் ஒரு அருட்ஞானியாக உயர்ந்தார் என்று சொல்லுங்கள். முற்றிலும் கைவிடப்பட்ட அநாதைகளுக்கு அன்னமிடுவதே ஆன்ம லாபம் என அறிக. அன்னதானம் மட்டுமில்லை அநாதைகளின் மற்ற தேவைக்கும் நாம் உதவிட வேண்டும். தருமசாலையில் ஏழைகளின் பசியை நீக்கி இறை உண்மையை அவர்களுக்கும் தெரிவிக்கவே சபையும் அருகில் உள்ளது. அன்னதானம், ஜூவகாருண்ய பணி,சுத்த சன்மார்க்க நெறி பரப்பும் பணி என்று சொல்லி வருபவர்களின் உண்மை தன்மை அறிவதும் முக்கியம். அவர்களின் விபரம்,சுத்த சன்மார்க்கம் குறித்த அவர்களின் அறிவு இவை நாம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். (எல்லோரையும் இப்படியாக நினைத்து விடமுடியாது என்பதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்).எப்படி இருந்தாலும்,படிப்பு, (இங்கு படிப்பு என்றால் ஸ்கூல் செல்வது மட்டுமில்லை பள்ளி செல்லாமலும் ஒன்றை குறித்து தெரிந்து கொள்ளுதலும் படிப்பே) ஆக படிப்பு, உழைப்பு இல்லாதவர்களுக்கு சுத்த சன்மார்க்க தகுதி வராது.
    “ஏமாறுதல் இருக்கும் வரை ஏமாற்றுதல் இருக்கும்.” 
    நிலையத்திடமே நாம் நன்கொடைகள் வழங்கிடுவோம்.
    கோடிகள் கணக்கில் உள்ளது. டன் கணக்கில் அரிசி பருப்பு உள்ளது. அன்னதானம் மற்றும் ஜூவகாருண்ய பணிகள் விரிவாக்கி பணியாட்களை அமர்த்தி மற்றும் நம் சேவையையும் வழங்கி, நிலையம் சிறப்பாக செயல்பட ஆதரவும், அங்ஙனம் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைப்பதே நம் கடமையாகும்.

    — அன்படன் ஏபிஜெ அருள்.

  • வள்ளலாரின் “சத்திய சிறு விண்ணப்பம்” அசல் ஆவணம்

    அற்புதம் அற்புதமே!
    ஆம் வள்ளலாரின் “சத்திய சிறு விண்ணப்பம்” அசல் ஆவணம் சென்னை தனியாரின் ஆவண காப்பகத்தில் இருப்பதை அறிந்து அங்கு நண்பர் ரவியுடன் சென்றேன். விண்ணப்பத்தினை கண்டவுடன் அழுதேன்.நண்பரும் கண்கலங்கி அதை தொட்டு வணங்கினார்.
    ஆவண காப்பக உரிமையாளரிடம் இது மிகப்பெரிய பொக்கிஷம் பாதுகாத்து வையுங்கள் என்று வணங்கி வேண்டினோம். அதன் ஸ்கேன் காப்பியை தான் இங்கு தரப்பட்டுள்ளது.
    அன்புடன் ஏபிஜெ அருள்.

    https://drive.google.com/file/d/0B4qEUtt6h2B_Y1ZldHhGdnBONzA/view

       

  • நான் மனிதன் இல்லையா? இன்னும் மனிதப் பிறவியே தோன்றவில்லையா?

    நான் மனிதன் இல்லையா?
    இன்னும் மனிதப் பிறவியே தோன்றவில்லையா? —ஏபிஜெ அருள்.

    என்ன கேள்வி இது? என்கிறீர்களா அன்பர்களே!
    ஆம், நம் ஞானிகள் குறிப்பாக வள்ளலாரின் சத்திய வாக்கியத்தினை வாசிக்கும் போது இப்படி தான் கேள்விக் கேட்டு நல்ல விசாரணை செய்யத் தோணுகிறது.
    வள்ளலார் தனது முதல் விண்ணப்பத்தில் பக்கம் 556 ல்;
    ” நாம் அஞ்ஞான இருளில் ஒன்றும் தெரியாது உணர்ச்சி இன்றிக் கிடந்த காலம் போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே, இவ்வுலகினிடத்து…
    1) தாவர யோனி வர்க்கங்கள்,
    2) ஊர்வன, நீர் வாழ்வன முதலிய யோனி வர்க்கங்கள்,
    3) பறவை யோனி வர்க்கங்கள்,
    4) விலங்கு யோனி வர்க்கங்களில்
    சென்று சென்று பிறந்து பிறந்து இறந்து இறந்து அலுப்படைந்தோம். விலங்கு பிறவிக்கு அடுத்து என்ன பிறவி என்று நாம் நினைப்போம்.?
    மனிதப் பிறவி என்று தானே!!
    அன்பர்களே அது தான் இல்லை.
    விலங்கு வர்க்கங்களுக்கு பின்பு,
    இரு பிறவி யோனி வர்க்கங்களில் பிறந்து பிறந்து இறந்து இறந்து பின்பே ஏழாவது பிறவியிலேயே மனித தேகம் வரும்..
    அந்த இரு யோனி வர்க்கங்கள் எதுவெனில்:
    —- (5) தேவ யோனி வர்க்கங்கள்
    அதன் பின்பு
    —- (6) நரக யோனி வர்க்கங்கள்
    இவர்கள் யார்?
    தேவ யோனி வர்க்கங்கள் என்பவர்கள் யார் எனில்:
    இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

    “பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர். சுரர் முதலியராகப்
    பிறந்து பிறந்து
    அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல்,
    அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைப்படுதல்
    முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து
    அத்தேவயோனி வர்க்கங்களெல்லாஞ்
    சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்;
    அடுத்து,
    நரக யோனி வர்க்கங்கள். இவர்கள் யார் எனில்:
    இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

    ” காட்டகத்தார், கரவு செய்வார், கொலை செய்வார்”முதலியராகப் பிறந்து பிறந்து
    பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்;”
    ஆக,
    எவர் ஒருவர் அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைப்படுதல் முதலிய அவத்தைகளில் உள்ளோமோ அவர்கள் தேவர்கள்.
    எவர் ஒருவர், பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளில் உள்ளோமோ அவர்கள் நரகர்கள்.
    இப்படி பார்க்கையில் நான் மனித பிறவியில் வந்துள்ளனா??
    எனது நாடு பக்கத்து நாடு போர் அச்சம் மற்றும் கற்பனையான சினிமா, விளையாட்டு போன்றவற்றில் மயக்கம் சிற்றின்பத்தில் நினைவு, எனக்கு சொல்லப்பட்ட கலைகளில், புனித நூலில்,புராணங்களில் போர் இவையிலே என் வாழ்க்கை.அப்படி எனில் நான் தேவப்பிறவி. அல்லது கொலை கொள்ளை மறைந்து வாழுதல் போன்ற அரசியலில் ஆட்சி முறையில் என் வாழ்க்கை என்றால் நான் நரகப் பிறவியில் உள்ளேன் என்கிறார் வள்ளலார். இந்த இரு அதாவது தேவர்,நரகர் பிறவிகளில் சென்று சென்று பிறந்து பிறந்து அதன் பின்பே மனிதப்பிறவிக்கு.இதுவே இயற்கை. கடவுள் படைத்துள்ள அமைப்பு ஆகும்.
    மனித தேகமே அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயர் அறிவுடையது என்கிறார் நம் வள்ளலார்.
    அன்பர்களே!
    அச்சம் கொள்ளத் தேவையில்லை. நம் வள்ளலார் இருக்க கவலை எதற்கு?
    இதோ நம் வள்ளலார் பாடலை இங்கு காண்போம்.

    ”வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு வழக்கம் வள்ளல்நீ மகிழ்ந்தருட் சோதி
    தருமுன் தந்தனை என்றிருக் கின்றேன். தந்தை நீதரல் சத்தியம் என்றே குருமுன் பொய்யுரை கூறலேன் இனி இக்குவலை யத்திடைக் கவலையைத் தரியேன்
    திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணை செய்க வாழ்கநின் திருவருட் புகழே.”

    அன்பர்களே,
    நாம் இன்று,
    அலைப்படவில்லை,அகப்படவில்லை,
    அகங்கரிக்கவில்லை,அதிகரிக்கவில்லை,மறந்து, நினைந்து நிற்கவில்லை, மயக்குறவில்லை,போரிடவில்லை,
    கொலைப்படவில்லை.
    எனவே நாம் தேவ யோனி வர்க்கங்களை கடந்து விட்டோம்.

    நாம் இன்று
    பயப்படவில்லை, சிறைப்படவில்லை, சிதைப்படவில்லை அதனால் நாம் நரக யோனி வர்க்கங்களை கடந்து விட்டோம்.
    இன்று எல்லா வல்ல ஆண்டவரின் திருவுளத்தடைத்து இரங்கியருளி அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயரறிவுடைய இம் மனித தேகத்தை பெற்று உள்ளோம். ஆம்,அன்பர்களே! வள்ளலார் அவர்கள் மற்றொரு இடத்தில் சொல்லியதை இங்கு நினைவு கூர்வோம்: (பக்கம்:377) அதாவது; “அறிவினது உயர்ச்சியினாலும் தாழ்ச்சியினாலும் தேவரென்றும் மனிதரென்றும் சொல்லப்பட்டதே தவிர வேறே யெந்தக் காரணத்தினாலும் அல்ல.”
    ஆம், சுத்த சன்மார்க்க ஒழுக்கம் உடையவர்கள் பக்கம் 410 ல் வள்ளலார் குறிப்பிட்டது போல் இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாக கொள்ளவில்லை. எல்லா பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டு தலைவனையே தொழுபவர்கள். எனவே நாம் மனித தேகம் எடுத்துள்ளோம் என்றுச் சொல்லுவோம்.
    கருணை என்ற உயர்ந்த அறிவை பெற்று
    இடைவிடாது நன்முயற்சி செய்வோம். வள்ளலாரின் கட்டளைப்படி
    ஆச்சாரங்களில் மனம் பற்றாமல் இருந்து கடவுளையே நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து கண்ணீர் விட்டு தொழுவோம்.
    காலமில்லை இன்றே காரியத்தில் இறங்குவோம். வெற்றி நமதே. வள்ளலார் இருக்க அச்சமில்லை.
    ”நான்(நாம்) மனிதர்களே.”

    நன்றி
    அன்புடன் உங்கள் ஏபிஜெ அருள்.
    கருணை சபை சாலை,மதுரை.

  • வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்திற்கு முன்பும் பின்பும்

    வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்திற்கு முன்பும் பின்பும். — ஏபிஜெ அருள்.

    ஆம். உலகில் காணும் சமய மத மார்க்கங்கள் அனைத்திலுமே சொல்லப்பட்ட நெறியின் சரத்தை ஒருவாறு என்னவென்று பார்த்தால் ;
    ” மற்றவர்களுக்கு துன்பம் கொடுக்காமல் இருப்பது. மேலும் நமக்கு எவரேனும் துன்பம் கொடுத்தாலும் மன்னித்தோ அல்லது பொறுத்துக் கொள்வது”.
    இதுவே இதுவரை வெளிப்பட்டுள்ளதில் நல்ல மேன்மையானது.
    இதுவே சமய மதத்தின் படி ஒருமையாகும்.
    இதை விட பெரிய விசயம் என்ன இருக்கு?
    ஆனால் , இதை விட மேன்மையானதையே வள்ளலார் தன் மார்க்கத்தில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.அது;
    “” உண்மையறிதல்”‘ என் மார்க்கம் உண்மையறியும் அறிவு மார்க்கம் என்கிறார் வள்ளலார்.
    இது சரின்னு படுபவர்களையே, உண்மையறிய ஆசை படுபவர்களையே வாருங்கள் என அழைக்கிறார். உண்மையறிய பற்றிய பற்றை ஆசாரத்தை விட்டு கடவுளையே தொழுதல்.
    இதுவே வள்ளலார் சொல்லும் ஒருமையாகும். படிக்க பக்கம் 414 உ.ந.ப.

    அன்புடன் ஏபிஜெ அருள்.

  • மனசாட்சியோடு சொல்லுங்கள் — ஏபிஜெ அருள்.

    மனசாட்சியோடு சொல்லுங்கள்.– ஏபிஜெ அருள்.
    வள்ளலார் ” சுத்த சன்மார்க்கம் ” என்ற புதிய தனி வழியை கண்டு உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்கள். வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல்,
    சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன?
    சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் யார்?
    வழிபாடு எப்படி? என விளக்கியுள்ளார்கள்
    சங்கம், சாலை, சபை, கொடி கொடுத்துள்ளார்கள்.
    தனது மார்க்கத்தாருக்கு தகுதிகள் இவை என பட்டியல் கொடுத்துள்ளார்கள்.
    சுத்த சன்மார்க்க கொள்கை வகுத்துள்ளார்கள். மார்க்கத்திற்கு எக்காலத்துக்கும் முக்கிய தடையாக உள்ளவற்றை சுட்டி காட்டி உள்ளார்கள்.
    சங்கத்தார்கள் எவையில் லட்சியம் வைக்கக்கூடாது என குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள். அன்னதானம் எதுவென்றும் கருணை,ஒருமை,சமரசம்,சுத்த சன்மார்க்க ஓழுக்கம் என்பவையின் பொருள் என்ன என விளக்கியுள்ளார்கள். தனது மார்க்கத்திற்கும் மற்ற சமய மத மார்க்கங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கி உள்ளார்கள். இவ்வளவும் விளக்கமாக வள்ளலாரால் விளக்கப்பட்டு வெளிப்படுத்திப் பிறகும், மேற்படி முடிபான எல்லாவற்றையும் மறைத்து வள்ளலாரை ஆரம்ப காலத்து சமயத்திலேயே வெளிப்படுத்தியும், கைவிடப்பட்ட ஸ்தோத்திரப்பாடலை பாடியும், சமய அடையாளங்களில் காட்டியும் செய்வது என்ன செயலோ??
    இப்படி ஒரு துரோக செயல்கள் செய்து அடையும் லாபம் என்ன? ஆயிரமாயிரம் ஆண்டுகள் முன்பு தோன்றிய சமய மத மார்க்கங்களில் ஏதேனும் ஒன்றையே நாம் நம்பிக்கை வைத்து தழுவி வருகிறோம். பல ஆயிரமாண்டுகளுக்கு பின்பு ஒரு புதிய மார்க்கம் 19ம் நூற்றாண்டில் தோன்றியுள்ளதை உங்கள் தவறான் செயலால் மறைப்பது சரியா?
    மன சாட்சியோடு சொல்லுங்கள். எல்லோருமே சரி என்றுச் சொல்லக் கூடிய உண்மை பொது நெறி கொண்டிருக்கும் சுத்த சன்மார்க்கத்தை உள்ளது உள்ளபடியாக வெளிப்படுவதை தடை செய்யாதீர்கள். இன்று நமக்கு சரின்னு படாதது பின்னாளில் சரின்னு படலாம்.அதனால் எதையும் மாற்றாமல் உள்ளது உள்ளபடியாக இருக்கப்பட வைக்க வேண்டும்.

    இளைஞர்களே விரைந்து வாருங்கள்!
    பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு உண்மையறியாதுஉளறி உள்ளார்கள்.(இன்றும் உளறுகிறார்கள்) ஒன்றையும் நம்ப வேண்டாம் என இங்ஙனமாக சொல்பவர் வள்ளலாரே.
    நம்மை நம்மிலிருந்தும் மற்ற உயிர்களிடமிருந்தும் வேறுப்படுத்தும் முழு உண்மை உரைக்காத சாதி சமய மத மார்க்கங்களை பொய் என தெரிந்து, உண்மை கடவுளை சத்திய அறிவால் விசாரணை செய்யச் சொல்லும்
    சுத்த சன்மார்க்கத்தை அறிய வாருங்கள்.
    அச்சம்,ஆணவம்,போர்,கொலை,
    கொள்ளை,பொய்,கற்பனை,அறிவின்மை,அவத்தைகள் இவையே நமக்கு தரும் சாதியை சமயத்தை மதத்தை கைவிட்டு விட்டு அறிவால் எது உண்மை ? கடவுளின் நிலை என்ன? என நல்ல விசாரணை செய்ய சொல்லும் வள்ளலார் மார்க்கம் சாருவோம். இங்ஙனமாக நாம் தெரிய அறிய அனுபவிக்க மட்டுமே கூடுவோம். எல்லோரும் இந்த உண்மையறிய பொதுவாக உள்ள வழியே சுத்த சன்மார்க்கம் ஆகும். “இங்ஙனமாக” “ஆசை உண்டேல் ” வம்மீன் என்று தான் வள்ளலார் அழைக்கிறாரே அன்றி வேறில்லை.
    என் மார்க்கம் “அறிவு மார்க்கம்” என்கிறார்.
    மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் வள்ளலார் என்ற பெயரிலும் சுத்த சன்மார்க்கம் என்ற பெயரிலும் சங்கம் சபை வைத்து கூட்டம் நடத்திபழைய நெறிலும் சமயமதங்களில் பற்று வைத்தும் வேறுப்பட்ட கொள்கை உள்ளவர்கள் மூலமாக கொள்கையை (??) விளக்குவதும் சரியா? எங்ஙனம் நெறியை அவர்கள் சரி என்பார்கள்? சரி என்றால் இந்த நெறியை கடைப்பிடிக்க வரவில்லை.?
    கைவிட்ட சமய பற்றிலேயே வள்ளலாரை வெளிப்படுத்துவதும் சரியா?
    வள்ளலார் சொல்லும் உண்மைகள்;
    * காலமில்லை.
    * உன் அறிவும் ஒழுக்கமும் ஒத்தவர்களுடன்
    * உண்மை கடவுளின் நிலையறிதல்
    * பொது நோக்கம், நல்ல விசாரணை (ஒழுக்கத்துடன்,கண்ணீரால்.. , )
    * கடவுள் அருளால் சாகா கல்வி
    * பேரின்ப பெருவாழ்வு
    * இவை நம்மிடம் கூட எந்த ஒரு ஆசாரப் பற்றில்லாமல் இருத்தல் என்ற கட்டளையை கருத்தில் ஏற்றல்.
    இதுவே சுத்த சன்மார்க்கம்-வள்ளலார்.
    நன்றி: கருணை சபை மதுரை.
    அன்புடன் தாழ்மையுடன் ஏபிஜெ அருள்.

  • வள்ளலார் ஆன்ம நேயத்தால், தான் சென்ற வழியை(வழி என்றால் மார்க்கம்) நமக்கு வெளிப்படுத்தினார்கள்

    வள்ளலார் தான் கண்ட கடவுளை எல்லோரும் தெரிந்து அறிந்து அனுபவிக்க வேண்டும் என்று ஆன்ம நேயத்தால், தான் சென்ற வழியை(வழி என்றால் மார்க்கம்) நமக்கு வெளிப்படுத்தினார்கள்.
    சுத்த சன்மார்க்க சாதனம் கொண்டு ஆண்டவரின் நிலை கண்டு அருள் பெறாமல் வள்ளலாரை தெய்வமாக பார்க்கிறோம். உண்மை கடவுளை என்னை போல் நீங்களும் கண்டால் தான், எனக்கு கிடைத்த பேரின்பம் போல் உங்களுக்கும கிடைக்குமே அன்றி வேறு வகையில் கூடாது (முடியாது).—என்கிறார் வள்ளலார்.
    அன்பர்களே, இந்த உண்மை உணர வேண்டும். வள்ளலார் கடவுளின் உண்மையை பல ஆண்டுகள் செலவழித்து பெரும் முயற்சியால் கண்டார்கள்.அந்த உண்மையை எளிதாக நாம் தெரிந்து கொள்ள முன் வராமல் அவரையே தெய்வம் என்றோம் எனச்சொல்லி 22-10-1874 ல் பரிதாபம் அடைந்ததாக வள்ளலாரே தெரிவித்துள்ளார்கள். வள்ளலாரை தெய்வமாகவே கருதியவர்கள் சுத்த சன்மார்க்க பயனை அடையவில்லை என்பதே வரலாற்றின் உண்மை. வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்க நெறியே முக்கியம். அந்நெறி ஒன்றையேபிடித்து பயணிக்கும் போது நம்முடன் விலகாது துணை நிற்பவரே வள்ளலார். திருவருட்பிரகாச வள்ளலார் வழியில் அவர் துணைக் கொண்டு அவராலேயே நாம் தரிக்க போவது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை.
    பேரின்ப பெருவாழ்வை தான் பெற்றது போல் இந்த பிறவிலேயே மனிதர் பெறுதல் வேண்டும் என்பதே வள்ளலாரின் லட்சியம்.
    இந்த உண்மையை தான் வள்ளலார் சொன்னார்கள்.
    அன்புடன் :: ஏபிஜெ அருள் கருணை சபை. மதுரை.

  • “பின்பு வந்ததைப்பட வேண்டும்” — வள்ளலார்

    “பின்பு வந்ததைப்பட வேண்டும்.” — வள்ளலார்.

    திருவருட்பிரகாச வள்ளலார் தனது தேடுதலுக்கு, சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் தடையாக இருப்பதை அறிந்து தெளிந்தார்கள். எனவே தான் தான் வைத்திருந்த சமயப்பற்றை முற்றிலும் பற்றற கைவிட்டு கடவுளின் உண்மை குறித்து நல்ல விசாரணையை ஒரு தனி புது வழியில் செய்தார்கள். அவ்வழியே சுத்தசன்மார்க்கம் ஆகும். இதுவே உண்மை கடவுள் அறிய உதவும் பொது வழி ஆகவும் விளங்குகிறது. எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக உள்ளது சுத்த சன்மார்க்க நெறி என்கிறார் வள்ளலார். அதே நேரத்தில் உலகில் காணும் சமய மத மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களே சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள் என்கிறார் வள்ளலார்.
    இங்ஙனமாக வள்ளலாரின் முடிபான கொள்கை விளங்கும் போது வள்ளலாரை அவரால் கைவிடப்பட்ட சமயத்திலேயே வெளிக்காட்டுவதும்,சமய மதப்ப்பற்றுக் கொண்டோரை,சாதி தலைவர்களை,சினிமாக்காரர்களை,அரசியல்வாதிகளை இவர்களை மேடையில் ஏற்றி வள்ளலாரின் நெறி பற்றி பேச சொன்னால், அவர்களும் அதாவது சாதி தலைவர் சாதி பொய் என்றவர் வள்ளலார் என்றோ அல்லது சமய மதத்தலைவர் சமயம் மதம் பொய் என்றோ அல்லது சினிமாக்காரர் ஒழுக்கமே பிரதானம், கலை கற்பனை கூடாது என்றோ அல்லது அரசியல்வாதி கருணை வேண்டும் அன்பு வேண்டும் புலை கொலை கூடவே கூடாது என்று வள்ளலார் சொன்னார் என அவர்களால் எப்படி பேச முடியும்? அல்லது அவர்களை மேடையில் நாமலே வரவழைத்து சாதி சமய மதங்கள் பொய் என்றோ புலை கொலை கூடவே கூடாது என்றோ இடம் பொருள் தெரியாமல் சொல்வது சரியாகுமா? ஆக, மொத்தத்தில் இவர்களை அழைத்து அவர்களும் வள்ளலாரை முந்தய சமயப்பற்றிலேயே காட்டியும் நெறியை தவறாக எடுத்துக் கூறுவதை நாம் கேட்டும் அல்லது நாம் உண்மையை எடுத்து கூறும் போது அவர்கள் மனம் புண்படுவதை தேவையில்லாமல் நாம் செய்வதும் எந்தவிதத்தில் நியாயம்? எதற்காக இப்படி? இவை தேவையா? நம்மாலேயே இன்னும் சரியாக அறியப்படாமல் இருக்கும் போது நமக்குள் ஒரு நல்ல விசாரணைக்கு தான் ஏற்பாடு செய்ய வேண்டும். நாமலே பல முறை கூட வேண்டியுள்ளது உண்மை அறிய. இதுவே வள்ளலாரின் நேரிடையான கட்டளையாகும்.ஆனால் ,அதே நேரத்தில் அவர்கள், ஏன், அனைவருமே வள்ளலார் சொன்னது என்ன ? எனத்தெரியும் பொருட்டும் எவரும் இங்கு வருவதற்கு யாதொரு தடையுமில்லை.(அல்லது) ஒன்றில்/ சிலவற்றில் வள்ளலார் சொல்லியது மட்டும் பிடித்துள்ளது என்று வள்ளலாரை (புகைப்படம்) எவரும் வைத்துக்கொள்வதற்கும் அல்லது அவர்கள் அந்த பிடித்த விசயத்திற்கு மட்டும் விழா எவரும் எடுப்பதற்கும் உரிமை உள்ளது. இதில் நாம் தலையிடவில்லை.கூடாது. ஏன் அதில் நாம் கலந்தும் கொள்ளலாம்.
    ஆனால் வள்ளலாரின் மார்க்கத்தார்கள் (எனச்சொல்லி) வள்ளலாரை சமய நெறியிலும் சமய ஸ்தோத்திர பாடல்களிலும் பாடி காட்டி, தனி நெறியை மறைக்கும் செயல், அச்செயலைத் தான் கூடாது என்றும் , முடியாது என்கிறோம். அப்படி நடப்பது மிகவும் வேதனையான விசயமாக உள்ளது. வள்ளலார் தனது முந்தய சமயப்பற்றை கைவிட்டு விட்டேன் என்ற பிறகும், அவரே பாடியிருந்தாலும் திருவருட்பாவில் உள்ள சமய ஸ்தோத்திர பாடல்களில் லட்சியம் வையாதீர்கள் என்று பின்பு அவரே சொன்னப் பிறகும், வள்ளலார் பெயரிலேயே சபை நிறுவி கூட்டம்,மாநாடு நடத்தி வள்ளலாரை சமயம் சார்ந்து காட்டியும், முடிபான புதிய தனி நெறியை மறைப்பது எந்ந விதத்தில் நியாயம்? அறியாது செய்தாலும்,அறிந்தே செய்தாலும் தவறு தவறே மற்றும் குற்றமே ஆகும். கருணையை வெளிப்படுத்தும் வள்ளலார் கண்டிக்கவும் செய்கிறார். இதோ (9-3-1872):: ” சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என் மேல் பழியில்லை. சொல்லி விட்டேன். பின்பு வந்ததைப்பட வேண்டும்.” இப்படி சொன்னவர் வள்ளலார்.
    இதோ திருவள்ளுவரின் குறள்::
    * செய்தக்க அல்ல செயக்கெடும்செய்தக்க
    செய்யாமை யானும் கெடும். ஒருவர் தனது நிலைமைக்குத் தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாது விடுவதாலும் கேடு அடைவான்.
    ** ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
    போற்றினும் பொத்துப் படும்.
    தகுந்த வழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக இருந்து காத்தலும் முடியாமல் தவறிவிடும்.
    இதற்கு மேல் விளக்கவும் வேண்டவும் முடியாது.
    தொடர்ந்து வள்ளலாரை அவரால் லட்சியம் வையாது கைவிடப்பட்ட சமய நெறிலும் ஸ்தோத்திரப்பாடலிலும் பாடி வெளிப்படுத்தினால் மிகப்பெரிய பாவத்தை செய்தவர்களாகவும், பின் வள்ளலாரின் கண்டிப்புக்கு ஆளாகி வந்ததைப்பட நேரிடும்.
    வள்ளலார் கண்டது
    ஒரு புதிய தனி உண்மை பொது
    நெறி ஆகும்.உள்ளது உள்ளபடியாக உலகில் வெளிப்பட வேண்டும். எல்லா நெறியுமே நல்லது செய்யுங்கள் என உரைக்கிறது.வள்ளலார் நெறி உண்மையை உரைக்கிறது.
    பணிவுடன்: ஏபிஜெ அருள்.

  • வாழ்வோம் வலமுடன்

    வாழ்வோம் வலமுடன் – ஏபிஜெ அருள்.

    ஆம், இதுவே சுத்த சன்மார்க்கம். சுத்த சன்மார்க்க உண்மையாகிய “அக அனுபவம்” பெறுவதற்கான முயற்சியை ஏற்படுத்தும் சத்திய வார்த்தையே “வாழ்வோம் வலமுடன்”.
    திருவடி புகழ்ச்சியில் 10 வது பாடலை எனக்கு எனது நண்பர் சுப்பிரமணியம் பாடிக் காட்டினார்.
    பணம் பதவி பகட்டு பெற்ற வளமான வாழ்வை பெறுவதல்ல நம் லட்சியம்.உண்மை கடவளின் நிலை கண்டு அக்கடவுளின் அருளால் இறவாத வாழ்வை பெறுதலே வலம் பெறும் வாழ்வாகும். அந்த முயற்சி செய்ய தூண்டும் பொருட்டு இனி சொல்வோம் “” வாழ்வோம் வலமுடன்””.

    வளமுடன் வாழ்க என்ற உலகியற்கண் பொன்,பெண்,மண் இச்சை பற்றை ஏற்படுத்தாது, பொது உணர்வு ஏற்பட்டு கருணை நன்முயற்சி பெறவைக்கும் சத்திய வார்த்தையே ” வாழ்வோம் வலமுடன்”.

    இனி நம்மவர்கள் இந்த சத்திய வார்த்தையை தொடர்ந்து சொல்வோம்.
    வலமான வாழ்வாம்

    “மரணமில்லா பெருவாழ்வில்”
    வாழ, வள்ளலார் வழியில், இறையருளை வாழ்த்தி, வணங்குவோம்.

    அன்புடன்:: ஏபிஜெ அருள்.9487417834 apjarul1@gmail.com

    குறிப்பு :

    “வலம்” என்ற சொல்லை தான் வள்ளலார் பயன்படுத்தி உள்ளார்கள். வலம் என்றால் வெற்றி,மேலிடம்,வன்மை அதாவது Victory,High place,Strength ஆகும். வள்ளலார் சொல்கிறார்கள்; இப்போது ஆண்டவர் என்னை “ஏறாத நிலைமேல்” ஏற்றியிருக்கின்றார் என்றார்கள். இறவாத வாழ்வே மேலிடம்.அதுவே சுத்த சன்மார்க்க வலிமை,வெற்றி ஆகும்.
    பாடல் வரி: “.. வலம்பெறு மிறாத வாழ்வில்வைத் திடவே வாழ்த்துகின்றே முன்னர் வணங்கிநிற் கின்றோம்..”
    ஆக,
    இனி சொல்வோம்::
    ” வாழ்வோம் வலமுடன்”
    நன்றி– ஏபிஜெ அருள்.