சமயங்களும் பிற மார்க்கங்களும் பயன்தரப் போவதில்லை என்று வள்ளல் உணர்த்திய மெய்நெறியின்வழி விளக்கினீர்கள். அப்படியென்றால் ஆண்டவர் வருவிக்கவுற்ற ஞான சித்தராகிய வள்ளலை ஏன் பக்தி நெறிகளை வாழ்வில் கடந்து வரும்படி செய்தார்? விளக்கம் தருக. ??« Back to Previous Page
விசாரம்::: (ஏபிஜெ):
பலர் இங்ஙனமாகவே கேட்கிறார்கள். வள்ளலார் நம்மை போல் மனிதரே.
பிறவிகளால் ஆன்ம பக்குவமும்,பிறந்த குடும்பத்தால் சைவ சமயம் தழுவலும். ஆரம்பத்தில் அவரிடமிருந்த அளவிலா கடவுள் பக்தி அவர் சார்ந்த சைவ சமயத்தில் மிக்கப்பற்றுக் கொண்டவராக்கியது.
அச்சமயம் மட்டுமில்லாமல் எல்லா மார்க்க நெறி உண்மையையும் கண்டார்கள்.அவரிடமிருந்த உண்மை தேடலுக்கு இவை எவையும் விடை தரவில்லை. அவர் தேடலில் சுதந்திரம் அவர் பற்றுக்கொண்டியிருந்த சமய கொள்கை இடம் தரவில்லை. சுதந்திரமாக தேடலை தொடர சமயத்தை கைவிட்டார்கள். இப்படி யாரும் செய்யவில்லை.
முன் வரவில்லை.சமயப்பற்றை விட்ட வள்ளலாரின் விசாரணை சுதந்திரமாக தொடர்ந்தது.அதன் பயன் புதிய தனி உண்மை கடவுள் நிலை கண்டார்கள். பொது உண்மை வெளிப்பட்டது. இந்த முயற்சி வள்ளலாரின் அறிவால் (ஆசையால்) ஏற்பட்ட ஒன்று.
உண்மை கடவுளை கண்ட வள்ளலார், ஆண்டவரிடம் வேண்டினார்;- 'என்னைப்போல் எல்லோரும் பெற வேண்டும்'.
கடவுள் தன் கருணையை போல் வள்ளலார் பெற்றிருப்பதை கண்டார். கடவுள் தன் நிலையில் அவரை வைத்து அருளினார்.
உன் ஆசை நிறைவேற்ற நீயே இருப்பாய் என்றதே ""வருவிக்கவுற்றது"" ஆகும். 2 1/2 வருடகாலம் இந்த உண்மையை (நெறி) நம்மிடமிருந்து சொல்லிவந்தார்கள்.
ஆனால் நமக்கு ....??
ஆம் அன்று தெரிந்து கொள்வாரில்லை.
அதனால் 30/1/1873 ,
தான் அருளால் பெற்றிருந்த சுத்த தேகத்தில் வெளிப்பட்டார்கள்.
எவர் ஒருவர்;
'அய்யா நீங்கள் சொன்ன உண்மை தெரிந்து அறிய ஆசை எனச் சொல்வேர்களானால், வள்ளலார் அய்யா நேரில் வந்து நம் பயிற்சிக்கு உதவிடுவார்.
இது சத்தியம். இதுவே உண்மை . நம்புவோம்.
நல்ல விசாரணை தொடரட்டும்.
ஊதூது சங்கே...
---அன்புடன் ஏபிஜெ அருள்.மதுரை.
|
Please log in to post questions/answers: