January 22, 2025
tamil katturai APJ arul

நாம் செய்த குற்றம் என்ன?

corona-unmai

சிறையில் இருக்கும் கைதிக்கு கூட தெரியும் தான் செய்த குற்றமும், அதற்கு கிடைத்த தண்டனையும்.
ஆனால் இன்று வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் செய்த குற்றம் என்ன? அதற்கு பெற்றுள்ள இந்த தண்டனைக் காலம் எவ்வளவு? எனத் தெரிந்திருக்கவில்லை.
இந்தளவு கொடூர தண்டனை எதற்காக நாம் பெற்று உள்ளோம் என சிறிது அளவிலாவது சிந்தித்து பார்க்கிறோமா?
இல்லையே.
ஏதோ ஜாமீனில் வரும் நாளுக்கு காத்திருப்பது போல்
” மருந்து ” க்குகாக காத்திருக்கிறோம்.
என்ன நிலைமையிது?
என்ன அறிவு இது?
மனித இனம் பெற்றுள்ள இந்த பெருந் தண்டனைக்கு செய்த குற்றம் என்ன? என்பதை உணரும் வரை இத்தண்டனை காலமும் நீடிக்கும்.. என ஒருவேளை இருந்தால்?
ஆம்,
உண்மை அப்படி தான் இருக்கும். மனித இனத்திற்கு
தண்டனை வழங்கியது
” இயற்கையே”. நாம் செய்த குற்றங்கள், அவையாவன;
# வளங்களை அழித்தது .
# கொள்ளை அடித்தது.
# மற்ற உயிரினங்களின் உரிமையை பறித்தது
# மற்ற உயிர்களை கொன்றது
# சாதி சமயமதம் தேசம் சாத்திரம் முதலிய ஆசாரங்களினால் பொதுநோக்கம் இல்லாமல் இருந்தது
# கலை அறிவை மட்டும் மதித்து, இயற்கை குணமாகிய கருணையை மதியாது இருந்தது….
ஆம்,
மனிதன் செய்த இந்த முதன்மை குற்றங்களுக்கே இப்போது நாம் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம்.
இப்போதே உண்மை உணருவோம். எல்லாம் வல்ல இயற்கையை போற்றி வணங்குவோம் –
நம் ” இறைவனாக”.
இயற்கை வளங்களை பாதுகாப்போம் “நம் செல்வமாக”.
நம் உயிர் போல் மற்ற உயிர்களையும் பாவிப்போம்
” கருணை அறிவாக”.
உண்மை தெரிந்துக் கொள்ள பொது நோக்கம் வருவித்து கொள்வோம் – ” நெறியாக”.
ஆம்,
இங்ஙனம் நாம் முடிவு எடுத்தால் ” கொரனா ” விலிருந்து விடுபடக்கூடும் என உண்மை அப்படி இருந்தால்..? இப்படி சிந்திப்பதில் நியாயமும் ” மருந்தும்”
இதுவே என நினைப்பதில் தவறு இல்லை எனக் கருதுகிறேன்.
இங்ஙனமாக,
இயற்கையின் உண்மை விளக்கம் இன்பத்தையே இறைவனாகக் கொண்டு, கருணை ஒன்றையே சாதனமாக கொண்டு, ஆசாரங்கள் விடுத்து, சாதி பொய் என உரைத்து, எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவித்து, அவத்தைகளை நீக்கிக் கொள்ள இயற்கை இறைவனிடம் அருள் பெற நன்முயற்சி செய்யச் சொல்லும் ஓர் உண்மை பொது நெறியை (சுத்த சன்மார்க்கத்தை) கண்டவர் வள்ளலார்.
உண்மையை தெரிந்துக் கொண்டால், அவத்தைகள் விரைந்து நீங்கும். இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
அன்புடன் ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India