உண்மை உணர உற்ற தருணம் இதுவே. பொருளாதார கொள்கையை மற்றும் கடவுள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இதுவே
உண்மை உணர உற்ற தருணம் இதுவே. பொருளாதார கொள்கையை மற்றும் கடவுள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இதுவே.
— ஏபிஜெ அருள்.
இன்று வந்து உள்ள சூழலுக்கு யார்,எது காரணம்?
வள்ளலாரின்
திருஅகவல்:
” எங்கெங் கிருந்துயிர் ஏதேது வேண்டினும்
அங்கங் கிருந்தருள் அருட்பெருஞ்ஜோதி”
— எங்கு எங்கு எல்லாம் உயிர்கள் உள்ளனவோ, அவ்வுயிர்கள் எல்லாம் எது தனக்கு வேண்டும் என்று எதை எதை எண்ணியதோ, அவை அனைத்தையும் அங்கு அங்கே கிடைக்குமாறு அருள் செய்து உள்ளது அருட்பெருஞ்ஜோதி.—
ஆம்,
உயிர் வாழ தேவையானதை அவ்உயிர்கள் வாழும் இடத்திலேயே இருக்கின்ற இயற்கை திறத்தை இன்று நாம் சத்தியமாக உணர்ந்தே ஆக வேண்டும். இந்த இயற்கை இயலை நம் குழந்தைகளுக்கு இன்றே தெரியப் படுத்த வேண்டும். இன்று இங்கு ஒன்று தயாரிக்கிறோம் என்றால் அதன் மூலப்பொருள் மற்ற நாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறோம். இதில் அம்மூலப்பொருள் இங்கும் இருக்கும். நாம் தெரிந்திருக்கவில்லை. தேடவில்லை. மற்ற இச்சையிலேயே இருக்கிறோம். மூலப்பொருள் இருந்தும் அந்த நாடு தயாரிக்க முன்வரவில்லை. இது போல எல்லாம் அறிக! நாம் உயிர் வாழ அதுவும் அன்பாக, ஆரோக்கியமாக, இனிமையாக, ஈனமின்றி உயிர் வாழ, நமக்கு தேவையான அனைத்தும் நம் பகுதியிலேயே கிடைக்கிறது என்ற உண்மையை தான்
இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலை நமக்கு கற்று தந்துள்ளது. ஆனால் , ஆடம்பர வாழ்க்கை, புலன்களின் இச்சை, ஆணவ மேலாண்மை இவைக்கே நாடுகளிடையே வணிகம் மற்றும் போர். இயற்கை சார்ந்து வாழும் மனிதர்க்கு ( உ.ம். கிராமவாசிகள், ஏழைகள்) அறிவும் அருளும். ஆம், இவர்களுக்கு தேவையில்லை நாம் செய்யும் நாடுகளிடையே வாணிகமும், நடத்தும் போரும். அதிகாரவர்க்கம் பணக்காரர்களுக்குதான் இவை. ஆனால் மேற்படி வணிகம், போர் இவற்றால் ஏற்பட்ட பாதிப்பு எல்லோருக்குமே.
இது எப்படி நியாயமாகும்?
ஆம், நாட்டின்
பொருளாதார கொள்கையை மாற்றியே ஆக வேண்டும். தவறு செய்பவர்கள் திருத்திக் கொள்ளவேண்டும். முடியாது என்றால் பொருளாதார நிபுணர்கள் முன் வரவேண்டும் கிராமம், ஏழைகள் இவர்களுக்கான பொருளாதார கொள்கை திட்டத்திற்கு. புதிய பொருளாதார புரட்சிக்கு.
அடுத்து,
சமய,மத,இனப் போராட்டம், போர். மேற்படி போரால், சண்டையால் இவை விரும்பாதவர்கள், அன்பு உள்ளங்களையும் பாதிக்கிறதே, மரணமும் ஏற்படுகிறதே.போரும் கொலையும் சாதியும் கலையும் உள்ளது தானே நாம் இன்று பற்று வைத்திருக்கும் சமய மதங்கள்.
எவராலும் இதை மறுக்க முடியாது.
திரு அகவல்:
“எம்மதம் எம்இறை என்ப உயிர்திரள்
அம்மதம் என்றருள் அருட்பெருஞ்ஜோதி”.
” எங்களது மதம் எங்களது இறைவன் என்று அவர்கள் வேறு பிரித்துக் கூறி கொண்டிருப்பது அவர்களுக்குள் உள்ள அகங்காரம் ஒன்றாலேயே என்று தெரிவித்து அருளிய அருட்பெருஞ்ஜோதி.”
எனவே, நமக்கு ஏற்படும் அவத்தைகள் விலக, எந்த சாதி சமய மதப் பெயரால் கொலையும், போரும், நடைப்பெறுகிறதோ, மேலும், நமக்கு மயக்கமும் கட்டுப்பாடும் ஏற்படுத்தும் அந்த சாதி சமய மதத்தில் நாம் பற்று வைக்காமல் விட்டு விட வேண்டும். அவர்கள் கொலையும், போரும், சடங்குசம்பிரதாயங்களும், நமக்காகவே மக்களுக்காக செய்கிறோம் என்பது பொய்யாகிவிடும். சாதி சமயப்பற்றை விட்ட நாம் உண்மை சாருவோம். கொல்லா நெறி, கருணை கொள்கை, இயற்கையே இறைவன் எனும் போது, நாம் “நஷ்டம் அடையோம்” என்ற வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் தெரிந்து சாருவோம்.
ஆம்,
கிராமம், ஏழைகள் இவர்களுக்கான புதிய பொருளாதார கொள்கை தோன்றட்டும்.
பொதுநோக்கம் ஆன்ம நேயம் இயற்கை இறை கொள்கையாக கொண்ட வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் இனி விளங்கட்டும்.
#அன்புடன் ஏபிஜெ அருள். #
— Apjarul, Karunai sabai Salai.?