கோரானாவும் , கடவுளும்
கோரானாவும் , கடவுளும் — ஏபிஜெ அருள்
உலகின் பல்வேறு சமய மதங்கள் மார்க்கங்கள் இருக்கிறது.
அந்த சமயமதம் இந்த சமயமதம் ஏன் எல்லா சமய மதங்களும் தங்களின் புனித தலங்களுக்கு வருவதை தவிர்க்குமாறு சொல்லிவிட்டன.
இன்று பரவியுள்ள “கோரானா வைரஸ்”
என்பதின் மீது உள்ள பயம், கட்டுப்படுத்தும் விதத்தில் எல்லா சமய மதத் தலைவர்களும்
தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், புனித ஆலயங்கள் உள்ளே கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன. ஏன் இன்னும் சொல்லப்போனால் சில புனித தலத்தில்
அந்த கடவுளர் மீதே கிருமி நாசினி அடிக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
நிற்க! இங்கு நாம் கருத்தில் எடுப்பது யாதெனில்; புனித ஆலயங்களின் சந்நியாசிகள்,
தலைவர்கள், அதிகாரிகள் இவர்கள் பொது மக்களை மற்றும் பக்த கோடிகளை நோக்கி விட்ட
அறிவிப்பில் சொல்லப்பட்டவை:
1. இருமல், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்கவும்.
2. வரும் பக்த கோடிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தியே
புனித தலத்திற்குள் அனுமதிக்கப் படுகிறார்கள்.
நிற்க! எல்லாம் வல்ல இறைவன்!
கடவுளே மிகப்பெரியவன்!
நான் உன் பயம் பாவம் போக்குவேன்!
என்கிற திருவாக்கியத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி வரும் சமயமதங்களே!
சந்நியாசிகளே, தலைவர்களே, குருமார்களே! ஒரு வைரஸ் தாக்குதலில் உங்கள் அறிவை,
ஒழுக்கத்தை பயன்படுத்திய நீங்கள் ஏன்? மற்ற நேரங்களில் இதை
( அறிவை, ஒழுக்கத்தை) மறந்தீர்கள். ஆம், ” புனித தலங்களுக்கு வரும் பொதுமக்களே,
பக்தகோடிகளே! நீங்கள் இரக்கம், பொது நோக்கம்,நேர்மை உள்ளவர்களாக இருந்து வந்து ஆண்டவன் அருள் பெருக!
நேர்மையான முறையில் சம்பாதித்த பணத்தையே உண்டியலில் போடவும்.
இது ஆண்டவன் கட்டளை – என இதுபோல் ஏன் நீங்கள் இதுவரை வெளிப்படுத்தப் படவில்லை.
குறைந்தபட்சம் அறிவிப்பு பலகையிலாவது வைக்கலாமே!
நிற்க! திருவருட்பிரகாச வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியில்; ” கடவுளின் அருள் பெற
ஒழுக்கம் நிரப்பிக் கொள்ள வேண்டும்” எனவும் என் மார்க்கம்உண்மையறியும் அறிவு மார்க்கம்,
கருணை ஒன்றே சாதனம் என்கிறது. அதே போல் சத்திய ஞான சபையில் ” கொலை புலை தவிர்த்தோர்
உள்ளே புகுதல் வேண்டும்” என அறிவிப்பு உள்ளது.
புனித தலங்களில் அன்பு, பொது நோக்கம் உள்ளோர் உள்ளே வந்து இறைவனை தரிசித்து அருள் பெறுக!
எனவும் நேர்மை வழியில் சம்பாதித்த பணம் மற்றும் பொருளை மட்டுமே காணிக்கையாகப் பெறப்படும்.
இது ஆண்டவர் கட்டளை, என போர்டு வைக்கப்படுமா? “வைரஸ்” க்கு பயந்த நாம் “ஆண்டவனு”க்கு பயப்பட வேண்டாமா?
” வைரஸ்” க்கு எடுத்த நடவடிக்கை, ” நேர்மை பக்தி” க்கு கொடுக்க வேண்டாமா?
:::: ஏபிஜெ. அருள்.
கை கால் சுத்தம் நல்ல உணவு பாதுகாப்பு இவையால் வைரஸ் தாக்குதலிருந்து தப்பித்து ஆரோக்கிய வாழ்வில் வாழலாம்.
இரக்கம், ஒழுக்கம், நல்ல விசாராணை இவையால் உண்மை கடவுளை கண்டு தரிசித்து அருள் பெற்று பேரின்ப பெரு வாழ்வில் வாழலாம்.
நன்றி : கருணை சபை சாலை.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் குறித்து தெரிந்துக் கொள்ள ::
www.youtube.com/karunaisabaisalai
www.atruegod.org