Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cm-answers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6114 AN EXTRACT OF SWAMI RAMALINGAM LIFE (வடலூர் இராமலிங்க சுவாமிகளின் வரலாற்றுச் சுருக்கம்) – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
AN EXTRACT OF SWAMI RAMALINGAM LIFE(PUBLISHED IN SOUTH ARCOT DISTRICT GAZETTE-1878 SOUTH ARCOT MANUAL By J.H.GARSTIN, I.C.S.COLLECTOR OF S.A.DISTRICT, FIRST EDITION. 1678 SECOND EDITION, 1906 AS SOUTH ARCOT GAZETTEER By W.FRANCIS, I.C.S.COLLECTOR OF SOUTH ARCOT DISTRICT PAGES 316 &317 PARVATIPURAM A VILLAGE OF 1,189 INHABITANTS LYING 23 MILES SOUTH WEST OF CUDDALORE ON THE VRIDHACHALAM ROAD. THE PLACE IS CONNECTED WITH ONE RAMALINGA PARDESI, A SOMEWHAT CURIOUS EXAMPLE OF A LATER DAY SAINT WHO HAS BEEN ALMOST DEIFIED By HIS FOLLOWERS
BORN IN 1823 IN THE CHIDAMBARAM TALUK OF VELLALA PARENTS IN HUMBLE CIRCUMSTANCES, HE DEVELOPED. WHILE STILL LITTLE MORE THAN A Boy,AN UNDENIABLE TALENT FOR VERSIFICATION AND HIS POEMS BROUGHT HIM INTO NOTIE. THEY DEALT WITH RELIGIOUS MATTERS;SOME OF THEM,LIKE THOSE OF THE FAMOUS SAIVITE SAINTS OF OLD WERE COMPOSED IN EULOGY OF THE MERITS OF THE DEITIES OF CERTAIN SHRINES SUCH As THE TEMPLES IN TIRUTTANI IN NORTH ARCOT AND TIRUVOTTIYUR NEAR MADRAS:OTHERS TOOK FOR THEIR SUBJECT THE BEAUTIES OF THE HIGHER LIFE.IT WAS THESE THAT LED To HIS BECOMING GRADUALLY REGARDED AS A SPIRITUAL GUIDE AND TEACHER. AFTER VISITING MANY OF THE WELL-KNOWN SACRED PLACES OF THE SOUTH. HE FINALLY SETTLED AT KARUNGULI. THE NEXT VILLAGE TO PARVATHIPURAM. AT ITS HEIGHT HIS INFLUENCE MUST HAVE BEEN VERY REAL, HIS ADMIRERS AND DISCIPLES, WHO INCLUDED EVEN LEVEL-HEADED GOVERNMENT OFFICIALS, ARE SAID TO HAVE CHANGED THEIR RESIDENCES AND GONE TO LIVE WHERE THEY COULD BE CONSTANTLY NEAR HIM. ABOUT 1872,THE CURIOUS OCTAGON-SHAPED SABHA WITH THE DOMED ROOF WHICH IS To BE SEEN AT VADALUR, A HAMLET OF PARVATHIPURAM. WAS ERECTED BY HIM FROM SUBSCRIPTIONS. IT IS SAID THAT THE SPOT WAS CHOSEN BECAUSE FROM IT ARE VISIBLE THE FOUR GREAT TOWERS OF NATARAJA’S SHRINE AT CHIDAMBARAM. IT IS NOT AN ORDINARY TEMPLE, THE DETAIL OF THE WORSHIP IN IT BEING UNUSUAL RAMALINGA PARADES SEEMS TO HAVE PERSUADED His DISCIPLES THAT THEY WOULD RISE AGAIN FROM THE DEAD AND HE CONSEQUENTLY URGED THAT BURIAL WAS PREFERABLE To CREMATION.EVEN BRAHMINS ARE SAID To HAVE BEEN BURIED IN THIS BELIEF AND PEOPLE WHO DIED IN OTHER VILLAGES WERE IN SEVERAL CASES BROUGHT TO VADALUR AND INTERRED THERE. IN 1874 HE LOCKED HIMSELF IN A ROOM STILL IN EXISTENCE IN METTUKUPPAM(HAMLET OF KARUNGULI)WHICH HE USED FOR SAMADHI OR MYSTIC MEDITATION INSTRUCTED HIS DISCIPLES NOT TO OPEN IT FOR SOMETIME. HE HAS NEVER BEEN SEEN SINCE AND THE ROOM IS STILL LOCKED. IT IS HELD BY THOSE WHO STILL BELIEVE IN HIM THAT HE WAS MIRACULOUSLY MADE ONE WITH HIS GOD AND THAT IN THE FULLNESS OF TIME HE WILL REAPPEAR To THE FAITHFUL WHATEVER MAY BE THOUGHT OF HIS CLAIMS TO BE A RELIGIOUS LEADER, IT IS GENERALLY ADMITTED BY THOSE WHO ARE JUDGES OF SUCH MATTERS THAT HIS POEMS, MANY OF WHICH HAVE BEEN PUBLISHED,STAND ON A HIGH PLANE, AND HIS STORY IS WORTH NOTING AS AN INDICATION OF THE DIRECTIONS WHICH RELIGIOUS FERVOUR MAY STILL TAKE
I ATTAINED EVER INDESTRUCTIBLE DEATHLESS BODY, AS GRANTED BY THE APPEAL TO ARUTPERUN JOTHI.
தமிழ் மொழிபெயர்ப்பு:
வடலூர் இராமலிங்க சுவாமிகளின் வரலாற்றுச் சுருக்கம்
– தென்னாற்காடு மாவட்ட அரசு ஆணை வெளியீடு 1878)
தென்னாற்காடு மாவட்ட அரசு ஆணை வெளியீடு 1878 ஆம் ஆண்டில் வெளியானது J.N.கார்ஸ்மன் 1.கே. தென்னாற்காடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வெளியிடப்பட்ட தென்னாற்காடு மாவட்ட இதழ் (முதல் வெளியீடு 1878)
இரண்டாம் பதிப்பானது 1906-ல் அ.பிரான்சிஸ் தென்னாற்காடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வெளியிடப்பட்ட தென்னாற்காடு மாவட்ட அரசு ஆணை பக்கம் 316, 317-ல் வெளியானது.
பார்வதிபுரம் மேற்படி இவ்வூரானது விருத்தாசலம் நெடுஞ்சாலையில் கடலூரிலிருந்து தென்மேற்கில் 23 மைலில் அமைந்துள்ளது சுமார் 1189 மக்களைக் கொண்டது (அப்போதையமக்கட்தொகை) மேற்படி இவ்வூனரானது இராமலிங்க சுவாமிகளுக்குத் தொடர்புடையதாகும்.
இவர் தற்கால அருளாளர்கள் வரிசையில் ஓர் அற்புதமான முன்னோடியாவார் மேலும் அருடைய அடியவர்கள் (அபிமானிகள்) அவரைக்கடவுளாக மதித்தார்கள்
இவர் சிதம்பரம் தாலுக்கா மருதூரில் 1823ல் வேளாளர் குடும்பத்தில் பிறந்து எளிய சூழ்நிலையில் வாழ்ந்தார் அவர் சிறுவயதிலேயே பாடல்களை இயற்றக்கூடிய அற்புதமான ஆற்றலைப் பெற்றிருந்தார் அவருடைய பாடல்களே அவரைப் பிரசித்திப் பெற்றவராய்
வெளிக்காட்டியது அப்பாடல்கள் அனைத்தும் அருள் நெறியை போதிப்பனவாகவே இருந்தன. ஒருசிலப் பாடல்கள் பண்டைய சைவ சமய அருளாளர்களால்
‘பிரசித்தமாகப் பாடப்பட்ட (தேவாரம் திருவாசகம் போன்றவை) சைவத்தலங்களாகிய சென்னைக்கு அருகிலுள்ள திருத்தணி, திருவொற்றியூர் முதலியவற்றில் கோயில் கொண்டிருக்கும் தெய்வங்களின் அருட்புகழைப் பற்றியதாகும் இன்னும் மற்ற பாடல்கள் மேலான அருளனுபவ வாழ்க்கையின் விளக்கங்களைக் கொண்டனவாகும் இப்பாடல்களே அவரைக் காலப்போக்கில் அருளியல் வழிகாட்டியாகவும் அருட்குருவாகவும் கருதும்படிச் செய்தன, அவர் தெற்கிலுள்ள பிரசித்தமான பல திருத்தளங்களைத் தரிசித்து வழிபட்டபின் பார்வதிபுரத்திற்கு அருகிலுள்ள கருங்குழியில் நிரந்தரமாக உறையத் தொடங்கினார் உண்மையாக இவருடைய செல்வாக்கு உச்ச நிலைக்கு சென்றதற்குச் சான்று அவரைப் போற்றி வாழ்ந்தவர்களும் அவருடைய அடியவர்களும் மேலான தரத்திலிருந்து அரசு உயர்அதிகாரிகளும் அவரை எப்போதும் பிரியாமல் உடன் இருப்பதற்காகவே தங்களுடைய இருப்பிடத்தை அவருடைய நெருங்கிய சமீபத்தில் அமைத்துக்கொண்டனர் என்பதாம். சுமார்1872-ல் பார்வதிபுரம் எனும் வடலூரில் ஓர் அற்புதமான எண் கோணவடிவில் ஞானசபையை மேல் கவிழ்ந்த செப்புத் தகட்டினால் கூடாரம் போன்ற கூரையுடன் அன்பர்களின் முயற்சியால் அமைத்தார். இங்கிருந்து பார்த்தால் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் நான்கு கோபுரங்களும் தெரியும்
என்பதற்காகவே இவ்விடம் தேர்ந்தெடுக்கபட்டது என்று கூறப்படுகிறது.
இது ஒர் சாதாரணக் கோயில் அல்ல. ஏனெனில் அதன் வழிபாட்டு முறைகள் வழக்கமான வழிபாட்டு
முறைக்கு அப்பாற்பட்டது.மேலும் இராமலிங்க சுவாமிகள் தம்முடைய அடியவர்களுக்கு உபதேசித்ததாவது இறந்தவர்கள் திரும்பவும் எழுந்து நம்முடன் இருக்கப்பார்ப்போம் ஆகையால் இறந்தவர்களை எரிக்காமல் சமாதியில் வைக்கவேண்டும் என்றார். இதை மீண்டும் வலியுறுத்தினார் இந்தநம்பிக்கையில் பல பிராமணர்களும் கூட இறந்தவர்களை எரிக்காமல் புதைக்கத் தொடங்கினார்கள் மற்ற கிராமங்களில் இறந்தவர்களை எரிக்காமல் வடலூருக்குக் கொண்டுவந்து சமாதிவைத்தார்கள்.இராமலிங்கசுவாமிகள் 1874 மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் உள்ள ஓர் அறையில் திருக்காப்பிட்டுக்கொண்டார். அவ்வறையில் அவர் சிவானுபவ நிஷ்டையில் இருப்பது.
வழக்கம் அதனால் தன்னுடைய தொண்டர்களை இவ்வறையை கொஞ்சகாலம் திறக்க வேண்டாம்
என்று கட்டளை இட்டார்.அதன் பிறகு அங்கு அவ்வறையில் அவர் காணப்படவில்லை அவர் தன்னுடைய ஆண்டவராகிய அருட்பெருஞ்சோதியுடன் அற்புதமாகக்கலந்துவிட்டார்என்றும்
பக்குவப்பட்ட காலத்தில் மீண்டும் அன்பர்களுக்கு வெளிப்பட்டு அருள்புரிவார் என்றும் ,
சொல்லப்படுகிறது. இராமலிங்கசுவாமிகள் அருளாளர்கள்மரபில் திருக்கூட்டத்தலைவர் என்று அவரே உரிமை
கொண்டாடுவது பற்றிய சிந்தனை எப்படியாயினும் சரியே அவரால் பாடப்பட்டு வெளியிடப்பட்ட பல பாடல்களைப் படித்துணர்ந்து அதன் தரத்தின் உண்மையையறிந்த உயர் நீதியுடைய பெரியோர்கள் பலரும் பொதுவாகவே இவ்வுண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். அன்றியும் இயல்பாகவே , அப்பாடல்கள் மிக உயர்ந்ததரத்திலும் மேலான தன்மையையும் உடையனவாகும், இது மேலும் வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் சரித்திரமானது இனிவருங்கால அருள்நெறி வளர்ச்சிக்கு வழிகாட்டும் என்பது மதிப்புடன் குறிப்பிடத்தக்கதாகும்.