January 22, 2025
tamil katturai APJ arul

சுத்த சன்மார்க்கத்தில் “கடவுள்”

உலகில் உள்ள அனைத்து மார்க்கங்களும் வெவ்வேறு, ஒன்றுபடாத, கடவுள் குறித்த நெறியை கொண்டு உள்ளது. அதில் நம்பிக்கை உள்ளவர்கள் இதில் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். (Vice-versa).
19 ம் நூற்றாண்டில் வள்ளலார் இரக்கம் விட்டு (இரக்கம் மட்டுமே கொண்டு), கடவுள் உண்மை வெளிப்பட வேண்டி, உள்ளழுந்தி
ஒரு புதிய வழியில் (வழி என்றால் மார்க்கம்) கண்ணீர் கால்வழி ஓடும் அளவு, நினைந்து, உணர்ந்து, நெகிழுந்து துதித்து, இடைவிடாது முயற்சி செய்தார்கள். 
__ என் தனி வழியில்,
கடவுளை கடவுள் உண்மையை கடவுள் சொரூபத்தை உள்ளபடி உணர்ந்தேன் என்கிறார். __
அகத்தும் புறத்தும் எங்கும் பரிபூரணமாக விளங்கும் ஆண்டவரை, 
அகத்திலே, சிற்சபையிலே, திருச்சிற்றம்பலத்திலே, உள்ளத்திலே உணர்ந்தேன் என்கிறார் வள்ளலார்.
இந்த “அக அனுபவமே” வள்ளலார் பெற்ற “கடவுள் உண்மை”. 
இந்த உண்மை சொரூபம் சமயமதங்களில் சொல்லப்பட்டவை அல்ல. ஆனால் சமயசாதத்திர புராணங்களில் சொல்லப்பட்ட அந்த கடவுள் கர்த்தர் தேவர் யோகி ஞானி இவர்கள் எதிர்பார்த்துக் கொண்டியிருந்த தனிப்பதியை தான் கண்டேன் என்கிறார் வள்ளலார்.
இங்ஙனம் ஒவ்வொருவரும் அவரவர் உள் விளங்குகின்ற சிற்சபையில் அமர்ந்து இருக்கின்ற ஆண்டவரின் அருட்சோதி கண்டு களிப்படையலாம் என்கிறார். அருட் ஜோதி தெரியவிடாது மறைக்கும் திரைகளை சத்திய ஞான சபையில் காட்டி விளக்கம் தருகிறார். இது சத்தியம் என்று வெளிப்படுத்தி தன் வழிக்கு ” சுத்த சன்மார்க்கம்” என்று பெயரிட்டு அழைக்கிறார் வள்ளலார்.
ஆக, கடவுளுக்கான 
புற வழிபாடு, 
புறத்திலே கடவுள் நிலையம், புறத்தில் விளங்குபவை மூலம் கடவுளை காணல் இங்கு கிடையாது.
மொத்தத்தில் ,
உபாசனை மார்க்கமாய் வழிபடுவது சுத்த சன்மார்க்க கொள்கை அல்ல என்கிறார் வள்ளலார்.
ஆம், இங்கு தனித்தலைவன் லட்சியமே கொள்கை. 
(உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற்குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை – காரணம் கடவுள் ஒருவரே! ஒன்றெனும் ஒன்று. ஆனால் “உபாசனை” கொள்கை அல்ல. இங்கு கொள்கை அழியா உரு பெறுதலே. ஆக, உபாசனை வழிபாட்டால் சாகா வரம் பெறமுடியாது.)
# சத்திய அறிவால் அறியப்படும் கடவுள் ஒருவரே.
# கடவுள் இல்லை எனச் சொல்வோர் நாக்கு முட நாக்கு.
# எங்கும் பரிபூரணமாக விளங்கும் ஆண்டவரை அக சபையிலே கருணயால் உணர்ந்து கண்டு களிப்பதே சுத்த சன்மார்க்கம்.
# கடவுள் அருள் என்பது அழிவிலா உருவை (சாகா வரம்) பெறுவதே.
அப்படி எனில்,
புறத்திலே வள்ளலார் கட்டிய சத்திய ஞான சபையின் வழிபாடு…??
தனக்கு அகத்திலே கிடைத்த அற்புத
# அறிவு, 
# குணங்கள்,
# கேள்விகள்
# செயல்கள்
# காட்சிகள்
# அனுபவங்கள்
இவை அனைத்தும்,
நாமும் பெற( இது தான் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை) தான் சென்ற வழியை அங்ஙனமே நமக்கு உரைக்கிறார் வள்ளலார். 
எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது தன் வழி( சுத்த சன்மார்க்கம்) என்கிறார்.
இந்த உண்மையை (அகத்திலே உள்ளத்திலே கடவுளை உணரும் உண்மை) புறத்திலே விளக்கம் செய்விக்க கடவுள் சம்மதத்தால், இயற்றுவிக்கப்பட்ட சபையே சத்திய ஞான சபை. இங்கு, வள்ளலார்க்குள் வெளிப்பட்ட பெருங்களிப்பை நாமும் பெற, அதற்காக நம்மிடம்,
தான் பின்பற்றிய வழி குறித்து, செய்த நன்முயற்சி குறித்து, மேற்படியால் பெற்ற சத்திய அறிவால் அறிந்த கடவுள் உண்மையை, அக்கடவுளை கண்டு செய்த அன்பை, இவை குறித்து நமக்கு விளக்கம் செய்வித்து, சத்திய ஞான சபையில் காட்டினார். இவ்விளக்கம் பெற்று தென்திசை நோக்கி, கடவுள் உண்மை வெளிப்பட, உள்ளழுந்தி நல்ல விசாரம் செய்ய வேண்டும்.
அப்படி எனில் புறத்தில் நாம் என்ன செய்தல் கூடும், என்றால்,
புறத்தில் நாம் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் உணர்வை வருவிக்கும் பயிற்சி. தயவு என்ற தகுதி.
அதாவது;
புறத்தில்
“எல்லா உயிர்களிடத்தும் தயவும்”
அகத்தில்
“ஆண்டவரிடத்தில் அன்பும்”
இந்த இரு சத்திய வாக்கியங்கள் “கருணை” என்றழைக்கிறார் வள்ளலார்.
இந்த “கருணை” ஒன்றே சாதனம் என்கிறார் வள்ளலார்.
எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்கும் இந்த
தனி நெறியை
காட்டும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்” புதிய மார்க்கமே”.
இந்த புதிய மார்க்க வழியில் நாம் இடைவிடாது முயற்சி செய்வோம்.எலோரிடமும் தெரியப்படுத்துவோம். நம் பணியில் மேதகு அரசு, நம் தெய்வ நிலைய அதிகாரிகளும் ஈடுபட வேணுமாய் வேண்டியும், எல்லோருடன் ஒற்றுமையுடன், நம் மார்க்க லட்சியமாகிய ஆன்ம நேயத்துடன் பயணிப்போம்.
(மேதகு அரசு, மதிப்பிற்குரிய அதிகாரிகள் இவர்கள் அனுமதிக்கப்பட்டவர்களே. 


ஆதாரம்:

வள்ளலார் July 1872 ல் வகுத்த விதியில் குறிப்பிட்டுள்ளது “ஆஸ்தான காவல் உத்தரவாதியாய் இருக்கின்றவர் கையில் (சாவியை) ஒப்புவித்தல் வேண்டும் என்கிறார் நம் வள்ளலார். இப்போது மக்களின் காவல், அரசே). நன்றி.

unmai

Channai,Tamilnadu,India