Watch “ஏன்?எதற்கு? தனி நெறி புதிய மார்க்கம் என வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்தை அறிவிக்க வேண்டும்? apj arul” on YouTube
எனது கோரிக்கை “மதம்” என்பதல்ல. சில பத்திரிகை, டிவியில், தனி மதம் எனத் தவறாக சொல்லப்பட்டு உள்ளது .
தனி நெறி, எனவும் 19 நூற்றாண்டில் வள்ளலாரால் தோற்றுவிக்கப்பட்ட புதிய மார்க்கம் எனவும் விளம்புகை செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
“”தனி நெறி””
இது வள்ளலாரின் சத்திய வார்த்தையே. .
தனி என்றால் வேறுப்பட்டது என்று பொருள் அல்ல. சிறப்பான பொதுவான உண்மையானது என்று பொருள் படும்.
“தனி நெறி” என்னும் வள்ளலார்
பாடல்கள் உள்ளன.
அவை:
“”தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்தனிநெறி உலகெலாம் தழைப்பக்கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்புண்ணியம் பொற்புற வயங்கஅருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
*””*”*
சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியேசிவபத அனுபவச் சிவமே
மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
மதிநிறை அமுதநல் வாய்ப்பே.
சதத்திரு நெறியே தனிநெறித் துணையேசாமியே தந்தையே தாயே
புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
பொதுநடம் புரிகின்ற பொருளே..”
“இந்த வள்ளலாரின் தனி நெறி” உலக எல்லாம் உள்ளது உள்ளபடி பரவுவதற்கே அரசிடம் கோரிக்கை.அரசு பரிசீலித்து உரிய முறையில் அறிவிப்பு இருந்தால் மற்ற உலக நாடுகள் உடனே ஏற்று தங்கள் நாட்டில் பரவ/பரப்ப அனுமதி அளிக்கும். ஒன்று சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது என்றால் அந்நெறியை திருத்தி சொல்லவோ, மாற்றிப் சொல்லவோ முடியாது.
எனவே தான் இந்த கோரிக்கை. சட்ட அங்கீகாரம் கிடைத்தால் நாம் சுத்த சன்மார்க்கம் சார்ந்தவர் என ஆவணங்களில் குறிப்பிடலாம்.
வள்ளலார் தான் நமக்கு சமரச சுத்த சன்மார்க்க கொள்கை யை 19ம் நூற்றாண்டில் வெளிப்படுத்தினார்கள். வெளிப்படுத்திய நெறி ஆதி நெறி தான்.ஆனால் நமக்கு இந்த தனிப்பதியை அறிவிப்பு மூலம் வள்ளலாரால் 1871 ல் வெளிப்படுத்தப்பட்டது , அதனால் புதிய வழி அதாவது புதிய மார்க்கம் எனலாம்.அதுவே சிறப்பாக உண்மையாக பொதுவாக உள்ளது.
இதோ திரு அகவல்;
“”பொதுவதுசிறப்பது புதியது பழையதென்றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி”‘.
அரசு அறிவித்து விட்டால் சுத்த சன்மார்க்கம் அரசால் தனி கவனம் செலுத்தப்பட்டு, நிலையங்களில் சாதி சமயமதசடங்கள் செய்யவது அனுமதிக்காது,தடுக்கப்படும்.
தெய்வ நிலையத்திற்கென தனி ஸ்கீம் அப்பொழுது தான் வகுக்கப்படும். நிலைய அறங்காவாலர்கள் சுத்த சன்மார்க்க நெறி சார்ந்தவர்களாக உள்ளூர் அன்பர்கள் நியமிக்கப் படுவார்கள். தனி நெறி அறிவித்ததால் தான் மற்ற மாநிலங்கள் அதன் அரசாங்கமே வள்ளலாரின் நெறியை அவர்கள் மொழியில் வெளிப்படுத்தி அம்மாநில பல்கலைக்கழகங்களில் பாடமாக வைப்பார்கள்.
தனி நெறி என அறிவித்தால் தான் சமய மதங்களில் சாராதது என சட்டத்தால் அறிவிக்கப்படும். இல்லையேல் உள்ள சமய மதங்களின் பிரிவாக அரசு எடுத்துக் கொள்ளும். இங்ஙனம் இந்து சமய அறநிலையத் துறை கருதி வருந்ததால் தான் சத்திய ஞான சபையில் வழிபாடு சமயமத முறையில் நடைப்பெற்றது. சமய கோவில் போல் விபூதி சூடம் ஏற்றல் மொட்டை போடுதல் அலகு குத்தல் அங்கு அனுமதிக்கப்பட்டது.பல நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையிலும், திரு நிலைய நிர்வாக அதிகாரி சிறப்பான அறிக்கை அடிப்படையிலும் திரு இணை ஆணையர் உரிய விசாரணை செய்தார்கள். சிறப்பான ஆணைகள் ஆணையரால் பிறப்பிக்கப்பட்டது. இன்று சத்திய ஞான சபையில் வள்ளலார் வகுத்த விதிப்படி விளக்கம் செய்வித்து ஜோதி காண்பிக்கப்படுகிறது. தனி நெறி என அறிவித்தால் நிலைய வருமானம் இந்த நிலையத்திற்கே பயன்படும். வள்ளலார் தோற்றுவித்த நிலைய சங்கத்தில் உறுப்பினர்களை விட தனியார் சங்கங்களில் உறுப்பினர்கள் அதிகமாக உள்ளது. அரசு கெசட்டில் தனி நெறி என வந்தால் வருங்காலத்தில் உலக மக்களுக்கு மாற்றம் செய்யப்படாத வகையில் நெறி வெளிப்படும்.
உலக இளைஞர்கள் விரைந்து அறிவர். உலகில் உண்மை பொது நெறி விரைந்து வெளிப்பட்டு பொது நோக்கம்வரும், தீவிரவாதம் ஒழியும்.
மீண்டும்,
சொல்கிறேன் தனி நெறி, புதிய மார்க்கம் என விளம்புகை வள்ளலாரின் கட்டளையே.
ஆங்கிலத்தில் இதை “separate religion ” என்று தான் சொல்ல முடியும். காரணம் இங்கு Religion என்பதற்கு பொருள் கடவுள் குறித்த நம்பிக்கை மற்றும் கடவுள் குறித்த மறுப்பும் வரும் என ஒரு வழக்கில் மேதகு உச்ச நீதிமன்றம் சொல்கிறது. சமயம் என்பதற்கு ஆங்கிலத்தில் religion என்கிறோம். ஆனால் மதத்திற்கும் religion தான்.
ஆனால் தமிழ் ஒன்றே உள்ள அனைத்திற்கும் தனி வார்த்தை கொண்டு உள்ளது.
ஆக, வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தை தனி நெறி மற்றும் புதிய மார்க்கம் என்ற கோரிக்கை வள்ளலாரின் சத்திய வார்த்தை படியே. இனி சுத்த சன்மார்க்கம் வெளிப்படும் தருணமே.
எல்லோரும் பெருமகிழ்ச்சி கொண்டு பேரின்ப வாழ்வு பெற நன்முயற்சி செய்வோம்.
உங்களின் மேலான பார்வைக்கு பணிந்து வைத்து முடித்துக் கொள்கிறேன்.
எனது, எங்கள் பணி சுத்த சன்மார்க்கப்பணியே. உங்களின் விருப்பமும் அதுவே என் அறிவோம்.
நன்றி. வணக்கம்.
உங்கள் சகோதரி இராமலெட்சுமி.
apjarul ramalakshmi
Vallalar karunai sabai
Ramalinga Adigalar Vadalur newmarga