January 22, 2025
tamil katturai APJ arul

வள்ளலார் எதை புதியதாக, தனியாக, சிறப்பாக, பொதுவாக சொன்னார்கள்?

வள்ளலார் எதை புதியதாக, தனியாக, சிறப்பாக, பொதுவாக சொன்னார்கள்? –: ஏபிஜெ அருள்.
வெளிப்படுத்திய கடவுள்கள் ஒவ்வொரு சமய,மத,மார்க்கங்களில் வேறுப்பட்டியிருந்தாலும்,
எல்லா சமய,மத,மார்க்கங்களும் நல்லதையே போதித்து எல்லாம் வல்ல அவரவர் இறைவனையே துதிக்கின்றன. 
இந்நிலையில் வள்ளலார் எதை புதியதாக, தனியாக, சிறப்பாக, பொதுவாக சொன்னார்கள்?
அதாவது இதுவரை வெளிப்பட்ட உயர்ந்த கொள்கையானது எதுவெனில் எனப் பார்க்கவும் போது,
‌” பிறருக்கு துன்பம் கொடுக்காமலும், பிறர் செய்யின் பொறுத்து சகித்து அடங்கி இருப்பது” எனலாம்.
இங்கு சிந்தித்து பாருங்கள். இந்த நல்ல நெறியை விட மேலாக என்ன சொல்ல முடியும்?
ஆம், வள்ளலாருக்கு முன்பு வரை சமய,மதங்களில் வெளிப்பட்ட கருத்து சாரம் இதுவே.
வள்ளலார் இந்த கருத்தை விட மேன்மையான ஒன்றை, தன் கடவுள் கொள்கையில் வெளிப்படுத்தினார்கள்.
அது என்ன?
அதாவது வெளிப்பட்டியிருந்த சமய மார்க்கங்களின் இயல்புகள் கொல்லாமை,பொறுமை,சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்யம் எனலாம். 
இதே போல் மதங்களில் கடவுளுக்கு அடிமையாதல், புத்திரனாக, சிநேகிதனாக முடிவாக கடவுளே தானாக பாவித்தல்.
ஆனால் இந்த இயல்புகளை விட (அனுபவங்களை விட) உயர்வானதை வள்ளலார் சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படுத்தினார்கள்.
அது என்ன?
அன்பர்களே!
சன்மார்க்கத்தில் /இறை நம்பிக்கையில் வள்ளலார் வெளிப்படுத்தியது :;
” உண்மை அறிதல்”
அதாவது;
நம் நிலை என்ன? என்பது போன்ற (நான் யார்?) விசாரத்தை சமயமதங்களில் காணலாம். ஆனால் வள்ளலார் செய்ய சொல்லும் நல்ல விசாரணை::
“நம் நிலை என்ன? நமக்கு மேல் நம்மை அனுஷ்டிக்கும் தெய்வத்தின் நிலை என்ன? “
ஆம், இங்கு வழிபாடே நல்ல விசாரணையே;
அது;
கடவுள் நிலை காண்பதே!
ஆம், 
உண்மை கடவுள் யார்?
அக்கடவுளின் நிலை என்ன?
என விசாரிக்க சொல்கிறார்.
என் மார்க்கம் “உண்மை அறியும் மார்க்கம்” என்கிறார் வள்ளலார்.
ஆக,
# கடவுளின் முழு சொரூபத்தை உள்ளத்திலே கண்டு களித்து,
# உண்மை அனைத்தும் ஆண்டவரால் உணர்த்தப்பட்டு,
# அக்கடவுள் அருளால் மரணம் தவிர்த்து, பேரின்ப பெருவாழ்வில் வாழ ஆசைப்படுதல்”.

இந்த “ஆசை உண்டேல்” 
வம்மீன் என அழைக்கிறார்
வள்ளலார்.
“சாகாதவனே சுத்த சன்மார்க்கி” என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆக,
உண்மை அறிதல்,
சாகாவரம் பெறுதல்,
இந்த இரண்டும் முறையே, நெறியாக, அருளாக, கண்டு, பெற்று வெளிப்படுத்தினார் வள்ளலார்.
இந்த புதிய தனி நெறி சுத்த சன்மார்க்கம் எனப்படும்.
மேலும்,
உலகில் வெளிப்பட்டுள்ள அனைத்து சமயமத மார்க்கங்களின் நெறிகள் (கடவுள் யார் என்பதிலும், வடிவம்,எண்ணிக்கை, சாதனம், வழிபாடு..) ஒன்றோடு ஒன்று வேறுப்பட்டு உள்ளதை மறுக்க முடியாது.
ஆனால் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும்,
எல்லா மார்க்கங்களுக்கும்
உண்மை பொது நெறியாக உள்ளது.
மற்ற சன்மார்க்கத்தோடு ஒப்பிடும் போது;
” அல்லாதனவன்றி இல்லாதவனல்ல”
மேலும்
“முன்னே தோன்றிய சன்மார்க்கங்கள் யாவும் அநந்நியம் (அந்நியமல்ல)” என்கிறார் வள்ளலார்.

‌முன்னே சமயமதங்களில் தவம்,மூச்சு பயிற்சி,மந்திர தந்திரம்,யோகம்,விரதம் முதலியவைகளால் சித்திகள் அடைந்து, அதன் பயனாக நீடுழி (பல நூறு வருடங்கள்) வாழும் சித்தி பெற்று, முடிவில் ஒடுங்கி ஒழியும் நிலையாகிய. முக்தி,சமாதியே முடிவாக கருதப்பட்டு, பெறமுடிந்தது. 
இந்த பயன் பூரண சித்தியாகாது எனவும், உண்மை ஆண்டவனின் அருள் இதுவல்ல எனவும் வள்ளலாரின் அறிவு விசாரம் செய்தது. பூரண சித்தியை பெற முடியாத இந்த சமய மதத்தின் மீது பற்றை விட்டு விட்டு, 
சமய மதங்கள் முடிவாக சொன்ன “உணர்ந்து ஓதுவதற்கு அரியவன்” ஆகிய இறைவனிடமே சரண் அடைந்து, எந்தவொரு சாதனமும் இல்லாமல், ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தார்.உண்மை கடவுளின் நிலை காண ஆசை கொண்டு, நினைந்து,உணர்ந்து,நெகிழ்ந்து அன்பினால் கண்ணீர் பெருகி வேண்டி பணிந்து நின்றார்.
(இங்கு வள்ளலார் தகுதி ஒழுங்களுடன், எந்தவொரு வெளிப்பட்ட கடவுள் மற்றும் நெறியை கருதாது, கற்றுக்கொண்ட வேத ஆகம சாத்திரக் கல்வியை கைவிட்டு, உண்மை அனைத்தும் உண்மை கடவுளே உரைக்க கூடும் என்ற சத்தியம் தெரிந்து, மேலும், கடவுள் அருளால் அவத்தைகள் நீக்கி மரணமில்லா பெருவாழ்வை பெறும் லட்சியத்தில் ஆசை வைத்திருந்தார் வள்ளலார்).
இங்ஙனம்,
புதியதாகவும், தனிநெறியாகவும், சிறப்பாகவும் மற்றும்
எல்லா சமயங்களுக்கும், 
எல்லா மதங்களுக்கும்,
எல்லா மார்க்கங்களுக்கும் 
உண்மை பொது நெறியாக வள்ளலார் இராமலிங்க அடிகளார் கண்ட “சுத்த சன்மார்க்க நெறி” விளங்குகிறது.
அன்புடன் 
ஏபிஜெ அருள்,
கருணை சபை சாலை.
நல்ல விசாரணை செய்த உங்களுக்கு நன்றி.

unmai

Channai,Tamilnadu,India