:: வள்ளலாரின் கடவுள் கொள்கை ::
:: வள்ளலாரின் கடவுள் கொள்கை ::
_ ஏபிஜெ அருள்.
“தெய்வம் ஒன்றே”
“ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்”
என்கிறார் வள்ளலார்.
வள்ளலார் தான் கண்ட கடவுள் நிலையை கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.
ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
அன்பர்களே!
உலகில் உள்ள ஒவ்வொரு சமயமதங்கள் தனி தனி கடவுள் கொள்கையை கொண்டு உள்ளது.
வள்ளலார் ஆரம்ப காலத்தில் சைவ சமயத்தில் பற்று வைத்திருந்தார்கள். ஆனால் கடவுள் குறித்து மேலும் விசாரணை செய்வதற்கு அனைத்து சாதி சமயங்களின் கட்டுப்பாட்டு ஆசாரங்கள் தடையாக உள்ளது என்ற உண்மை அறிந்து, தன் சமயப் பற்றை கைவிட்டு விட்டு கடவுள் உண்மை நிலை குறித்து நல்ல விசாரணையை மேற்க் கொண்டார்கள். சமயமத சாதனங்களை கைக்கொள்ளாது கடவுளிடத்திலேயே இரக்கம் விட்டு கண்ணீர் கால்வழி ஓடும் அளவுக்கு வேண்டிக்கொண்டே இருந்தார்கள்.
முடிபாக வள்ளலார் கண்டார் உண்மை கடவுளின் நிலையை. தான் கண்ட கடவுள் சாத்திர சமயங்களில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளோ தெய்வமோ இல்லை என்கிறார் வள்ளலார்.
இங்ஙனம் உண்மை இருக்கும் போது சங்கத்தார்கள் எப்படி இருக்க வேண்டும் என கீழ்வருமாறு சொல்கிறார் வள்ளலார்.
“…சமயத் தெய்வங்கள்,
உண்மை கடவுளுக்கு கோடி கோடி பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள்.ஆகையால் சமயத் தெய்வங்களை வழிபாடு செய்து அற்ப சித்தியில் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலே ஏறவேண்டிய படிகளெல்லாம் ஏறிப் பூரண சித்தியை அடையாமல் தடைப்பட்டு அச்சமயத் தெய்வங்கள் நிற்றல் போல் நில்லாமல், சர்வசித்தியை உடைய கடவுள் ஒருவர் உண்டென்றும் வழிபாடு செய்து பூரண சித்தியை பெற வேண்டுமென்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை. இதை ஆண்டவர் தெரிந்தார் என்கிறார் வள்ளலார். ஆதாரம்::-
(பக்கம் 306 உரைநடைப்பகுதி ஊரன் அடிகள் பதிப்பு) நன்றி ஏபிஜெ அருள்.
பாடல்கள்:
“ஒன்றே சிவம்”
————————
எம்பொருள் எம்பொருள் என்றே – சொல்லும்
எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர்
_________________________
“சன் மார்க்கமும் ஒன்றே”
—————————————-
ஒன்றே சிவம்அதை ஒன்று
சன் மார்க்கமும் ஒன்றே
என் றீர்இங்கு வாரீர்
நன்றேநின் றீர்இங்கு வாரீர். வாரீர்
என்கிறார் வள்ளலார்.
சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றேஎங்கும்
துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே ..
மேலும்,
கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக மலைவறு சன்மார்க்கம்ஒன்றே
நிலைபெறமெய் உலகம்
வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
உலைவறும்இப் பொழுதே
#
தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும்
சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று
ஆற்றஅதில் பரமா அணுஒன்று பகுதி
அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்றுஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக் கிறைஒன்றாம் இத்தனைக்கும் என்கணவர் அல்லால் ஆற்றமற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில் ஆடும்அவர் பெருந்தகைமை யார்உரைப்பார் தோழி.
#
ஒளிஒன்றே அண்டபகி ரண்டமெலாம் விளங்கி ஓங்குகின்ற தனிஅண்ட பகிரண்டங் களிலும்
வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும்
விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே
உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை
உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும் தான் எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே.
ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்
வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம் தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர். —வள்ளலார்.
— வணக்கம். நன்றி.
ஏபிஜெ அருள்.
கருணை சபை சாலை.