பொங்கலோ… பொங்கல். சுத்த சன்மார்க்கப் பொங்கல் பொங்கட்டும்
பொங்கலோ… பொங்கல். சுத்த சன்மார்க்கப் பொங்கல் பொங்கட்டும் — ஏபிஜெ அருள் (2019).
பொய்யை விட்டு ஒழிக்கும்
போகி நாள்.
உண்மை வெளிப்பட்டு பொங்கும் பொங்கல் நாள்.
பொய்யான சாதிகளும்,
கற்பனையான சமயங்களும்,
நம்மிடமிருந்து ஒழிக்கப்பட்டு,
மெய்யான சுத்த சன்மார்க்கமும்,
உண்மை கடவுளின் அருளும்
வந்து சேர்க்கும் “தை”யே வருக!
தென் மொழி தமிழ் காட்டும்
தெய்வம் ஒன்றே அது இயற்கையே!
இயற்கையை வழிபடும்
இன்ப பொதுத் திருநாளே வருக!
இயற்கையின் உண்மை, விளக்கம் இன்பம் இவை பூரணம் இறைவன்.
இந்த உண்மை கடவுளை காட்டும்
தமிழே..வாழ்க! தையே… வருக!
“தை” யில் தைரியம் பிறக்கும்,
பயம் பூஜ்யமானது.
பொதுவுடமை சுத்த சன்மார்க்கப்
பொங்கல் பொங்கியது.
சாதிசமயமத குலமரபுதேச சாத்திர ஆசாரங்களை விட்டொழித்து,
போகி நாளை கொண்டாடுவோம்.
பொதுநோக்கம் இரக்கம் அன்பு
உள்ளத்துப் பானையிலிட்டு,
பொங்கல் நாளை கொண்டாடுவோம்.
உண்மை உரைக்கும் “தமிழ்”
உண்மை கடவுள் “இயற்கை”
உண்மை காட்டியவர் “வள்ளலார்”
உண்மை இன்பம் “தைப்பொங்கல்”.
நன்றி:: ஏபிஜெ அருள்.
இவண்:: கருணை சபை சாலை.
apjarul1@gmail.com
www.atruegod.org