“சாதி” பற்றி வள்ளலார்.
“சாதி” பற்றி வள்ளலார்.
நான் இந்த சாதி என்ற வாய் சழக்கை தவிர்க்க வேண்டும்.சாதி விட வேண்டும்.சாதி நீக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார். இங்ஙனம் சாதி,குலம், சமயம் மதம் தவிர்த்தவர் உள்ளத்திலே இறைவன் தன்னை வெளிப்படுத்தி அருள் பாலிக்கிறார் என்கிறார் வள்ளலார்.
தொழில் நியாயத்தை அனுசரித்து ஜாதிகள் ஏற்படுத்தப்பட்டது.ஆனால் ஒருவன் அத்தொழிலை தொடர்ந்து செய்யாவிட்டாலும் சாதி ஒட்டிக்கொண்டது. சமயங்களும் சாதியை நிலைநாட்டியது.இந்த அழுத்தமான சாதி பொதுநோக்கத்தை தராது.எல்லாரிடத்திலும் கருணைதராது.கருணை விருத்திக்கு தடையாக உள்ளது என்கிறார் வள்ளலார்.
“சாதி”விட்டொழிப்போம் சமரசம் காண்போம்.ஆண்டவன் அருள் பெறுவோம்.
அன்புடன் ஏபிஜெ அருள்.கருணை சபை.
இதோ வள்ளலாரின் பாடல்கள்.
####################
சாதியு மதமுஞ் சமயமும் பொய்யெனஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
#####################
சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
#######################
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
#######################
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
########################
சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் – ஓதுகின்ற பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
#####################
சாதி ஆச்சிரமா சாரம்
சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக வழக்குவெளுத் தது
#####################
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்தியச் சுத்தசன் மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்மினோ விரைந்தே.
#####################
சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்
தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்
######################
இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தன
#######################
சாதி சமயச் சழக்கெலாம் அற்றது சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
######################
சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்சோதியைக் கண்டேன டி – அக்கச்சி
சோதியைக் கண்டேன டி.
########################
சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.
######################
சிறந்த பதிப்பு