உண்மையை நம்புதல் வேண்டும் -வள்ளலார்
உண்மையை நம்புதல் வேண்டும் – வள்ளலார்
: அந்த உண்மை :
இறைவன் ஒருவரே. எங்கும் பரிபூரணமாக நிறைந்திருக்கும் “ஓர் உண்மை கடவுள்” உண்டென்றும், உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல் வேண்டும்.
ஒழுக்கம் நிரம்பி, கருணை ஒன்றையே சாதனமாக கொண்டு, இரக்கம் விட்டு இறையருள் பெறுதல் வேண்டும்.
சமய, மத, மார்க்கங்களில் லட்சியம் கூடாது. ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையை லட்சியமாக கொள்ளுதல் வேண்டும். ஆசார வகைகளை விட்டொழித்து, பொது நோக்கம் வருவித்துக் கொள்ள வேண்டும்.
சாகா கல்வி கற்க, அண்ட திறங்கள் அறிய, உண்மை கடவுளின் நிலை காணஆசைக் கொள்ள வேண்டும்.
இறவாப் பெருவாழ்வு அருளால் பெற, நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து,அன்பால் துதித்து கண்ணீர் விட்டு வேண்டுதல் வேண்டும்.
நல்ல விசாரணையை, உள்ளழுந்துதல், சிந்தித்தல், சிந்தித்தலை விசாரித்தல் ஆகிய நன்முயற்சியை இடைவிடாது செய்தல் வேண்டும்.
– – வள்ளலார்.
(நன்றி APJ Arul)