மரணமிலாப் பெரு வாழ்வை எப்படி அடைவது? [DEATHLESS LIFE ]
மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள் —-.வள்ளலார்
who they are ?
LET US SEE.
சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.
இவர்கள் தான் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் – இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.
அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால்
தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும்.
அப்படி இல்லாது இவ்விடம் காத்திருப்பவர்கள்
மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள்.
அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.—வள்ளலார்
Beloved friends who want to get Deathless Body
kindly read the sentences in the following SONGs
NO: 4783 மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்
பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
SONG NO; 5579
கண்டதெலாம் அனித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மனமேஉட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
BUT OUR VALLALAR SAID ON 22-10-1873;
“உண்மை சொல்ல வந்தனனே-என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை”
அன்பர்களே!
(சாதி, சமயங்களின் மீது வெறியும் பற்றும் கொண்டிருந்த அக்காலங்களில் வள்ளலாரின் உயர்வான உண்மைப் பொது நெறியைத் தெரிந்து கொள்ள முன் வந்திருக்கமாட்டார்கள் என்பதை நாம் உணர முடிகிறது.
இன்று அந்த உண்மையைக் குறித்து தெரிந்து கொள்ளும் தருணம் வந்துள்ளது. அந்த உண்மையை உள்ளது உள்ளபடியே இன்று நல்ல விசாரணையில் அறிவோம்.)
On 30-01-1874, OUR VALLALAR SAID AS FOLLOWS;
‘இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும்
(சுத்த) சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை-
உரைநடைப்பகுதி பக்கம் 410ல்;
திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் (30.01.1874) வள்ளலார் குறிப்பிட்டது;
‘இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும்
(சுத்த) சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை யாதெனில்:
“இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்;
எல்லாப் பற்றுகளுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள் என்ற திருவார்த்தை அதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடைய கடமை”
ஆக, சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலாரால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்
உண்மை பொது நெறி எனப் பார்க்கும்போது;
* உண்மை அறிவால் அறியப்படும் உண்மை கடவுள் ஒருவரே!
* அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல் வேண்டும்.
* கடவுளின் நிலையறிய ‘ஒழுக்கம்’ நிரப்பிக் கொள்ள வேண்டும்.
* இவ்வுலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் லட்சியம் வைக்கக்கூடாது.
* நம்மிடமுள்ள சாதி சமய “கட்டுப்பாட்டு ஆசாரங்களை” ஒழித்தல் வேண்டும்.
* கடவுள் குறித்து நல்ல விசாரணை செய்தல் வேண்டும்.
* நல்ல விசாரணை என்பது;
உள்ளமுந்துதல்
சிந்தித்தல்
சிந்தித்தலே விசாரித்தல்.
THEREFORE,
One who follows the principle of Suddha Sanmarga found by Vallalar can get DEATHLESS LIFE as His Holiness Vallalar.
One who having faith with customs and practice of Religions available in the world cannot get DEATHLESS LIFE.
Are you ready to get Deathless Life? You should leave faith with caste and religions and need not make any practice namely thavam,thiyanam,simple yoga,viradaham. You should make good enquiry about state of GOD.
THANKING YOU,
Yours,
APJ.ARUL.