ஏன் பல்வேறு முரண்பாடுகள்? ஏன் தெரிந்துக் கொள்ள முடியவில்லை?
ஏன் பல்வேறு முரண்பாடுகள்?
ஏன் தெரிந்துக் கொள்ள முடியவில்லை?
– ஏபிஜெ அருள்
அன்பர்களே,
வள்ளலார் இறுதியாக என்னச் சொன்னார்கள் என்பதை முதலில் பார்ப்போம். 22-10-1873 அன்று சொன்னது:
“உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை “
30-011874 அன்று சொன்னது:
“இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லையே,..”
ஆக,
வள்ளலாரின் மேற்படியான இரு சத்திய வாக்கியங்களிருந்து நமக்கு தெரிய வருவது,
1. வள்ளலார் சொல்லிய உண்மை,
2. சுத்த சன்மார்க்க ஒழுக்கம்,
3. மேற்படி உண்மை மற்றும் சுத்தசன்மார்க்க ஒழுக்கம் வள்ளலார் வெளிப்படுத்தியும் நாம் தெரிந்து கொள்ளவில்லை.
இது அன்றைய நிலை.
இந்த உண்மை, ஒழுக்கம் தெரியாமல் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் குறித்து பேசவோ, எழுதவோ, விசாரம் செய்யவோ கூடாது, முடியாது. உண்மை, ஒழுக்கம் தெரிந்துக் கொள்ளலாமல் பேச, எழுத, விசாரிப்பதினால் தான், கூச்சலும், குழப்பங்களும், பிரச்சினைகளும் என அறிதல் வேண்டும்.
ஆனால், இன்று நமக்கு அவை குறித்து தெரியும் என்றால்,
வள்ளலார் சொன்ன உண்மை என்ன?
சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்றால் என்ன?
இந்த உண்மையை ஒழுக்கத்தை எவர் தெரிந்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே சுத்த சன்மார்க்க பேரின்ப பெருவாழ்வு நன்முயற்சியில் கைக்கூடும்.
வள்ளலார் சொல்லிய அந்த உண்மை, ஒழுக்கம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
::: வள்ளலார் சொல்லும்
சுத்த சன்மார்க்க ஒழுக்கம்:::
பக்கம் 410 ல்(Book Reference:திருவருட்பா உரைநடை பகுதி)
“திருக்கதவந் திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் 30-01-1874;
“இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (
:::::இங்கு குறிப்பிடும் ஆசாரங்கள் என்பவை எவை?:::
வள்ளலார் ஆசாரங்கள் எவை என பக்கம் 418ல் விளக்குகிறார்கள்.
“சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள். அவையாவன: ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். “
:::::எதற்கு ஆசாரங்கள் கூடாது
என்கிறார் வள்ளலார்?:::::
இதோ அவரே விளக்கம் தருகிறார்கள்;
தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்.
ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்தசிவசன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.”
கடவுள் அருள் எதற்காக பெற முயற்சிக்க வேண்டும்?
இங்கு தான் வள்ளலார் சொல்லிய உண்மை வெளிப்படுகிறது. அது:
” திருவருட் சுதந்திரத்தால், அவத்தைகள் எல்லாவற்றையும் நீக்கி, இத்தேகத்தை நித்திய தேகமாக்கி, எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் கூடும் என்ற உண்மை.”
ஆக,
சுத்தசன்மார்க்கத்தில்:
1. சாகாக்கல்வி கற்க ஆசை வேண்டும்.
2. மேற்படி கல்வி, திருவருளால் உரைக்கப் படுகிறது.
3. திருவருள் பெற, உண்மை கடவுளின் நிலைக் காணுதல் வேண்டும்.
4. கடவுள் நிலைக் காண, சுத்த சன்மார்க்க ஒழுக்கம் நிரப்புதல் வேண்டும்.
5. ஒழுக்கம் என்பது எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டொழித்து, தலைவனையே தொழுதல் .
6. தலைவராகிய ஒனறெனும் ஒன்றாகிய பெருங்கருணை கடவுளை கண்ணீர் விட்டு இடைவிடாது கருணை நன்முயற்சி செய்தல் வேண்டும்.
பாடல்::
துன்பம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
அன்பகத்தில் வாழும்சிற் றம்பலத்தான் – இன்புருவம்
தாங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்றொளியால்
ஓங்கினேன் உண்மை உரை
*****************
அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே
அணைப்போம் என்னும் உண்மை யால்என் ஆவி தங்கு தே
விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளு தே
மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளு தே.
எனக்கும் உனக்கும்
வள்ளலார் சொல்கிறார்கள்:
# என் மார்க்கம் உண்மை அறியும் மார்க்கம்.
# என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம்,
சாதரண தரத்தில்,
சகஜப் பழக்கத்தில்
உண்மை பொது நெறியாக
உள்ளது. அதே நேரத்தில்,
எவர் ஒருவரின் அறிவு அண்ட திறங்கள் அறிய ஆசைக் கொள்கிறதோ, கடவுளின் உண்மையறிய நன்முயற்சி செய்கிறதோ, அவரே சுத்தசன்மார்க்கம் சார்ந்தவராவர் என்கிறார் வள்ளலார்.
எனவே இம்மார்க்கம் ஓர் உயரிய அறிவு மார்க்கம் ஆகும்.
உண்மை அறிவு
உண்மை அன்பு
உண்மை இரக்கம்
உள்ளவர்களால் மட்டுமே உணர்வதாகவும் உள்ளது.
வள்ளலார் சொல்கிறார்கள்:
# என் மார்க்கம் உண்மை அறியும் மார்க்கம்.
# என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
நன்றி:- ஏபிஜெ அருள்.