வள்ளலார் எதற்காக கடவுளை காண முயற்சித்தார்?
வள்ளலார் எதற்காக கடவுளை காண முயற்சித்தார்?
அல்லது
வள்ளலார் தனது புதிய வழியில் (சுத்த சன்மார்க்கத்தில்) வைத்த விருப்பம் என்ன? – – ஏபிஜெ அருள்.
ஆம், இது மிக முக்கியமான பகுதி ஆகும்.
வள்ளலார் கீழ்வரும் விருப்பத்திற்கே கடவுளை காண வேண்டும் என தீர்மானித்திருந்தார்.
ஆதாரம் 4வது விண்ணப்பம்.
இதோ:
“…. இத்தேகத்திற்கு இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொண்டு, எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எத்துணையும், தடைப்படாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது அதி தீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது….”
ஆக, வள்ளலார் வழி
(சுத்த சன்மார்க்கம்) என்றாலே சாகாமல் இருக்க ஆசை உள்ளவர்களுக்கு மட்டுமே.
தொடரும்…
நன்றி
ஏபிஜெ அருள்.