January 22, 2025
tamil katturai APJ arul

வள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை

IMG-20180320-WA0071

வள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை.
********************************
பெறுநர்:
1. உயர்திரு முதன்மை செயலாளர் அவர்கள்,
தமிழக அரசு , சென்னை – 600 009.
2. உயர்திரு செயலாளர் அவர்கள்,
இ. ச. அ.ஆ.துறை & சுற்றுலா துறை
தமிழக அரசு, சென்னை – 600 009.
3. உயர்திரு முதலமைச்சர் தனிப்பிரிவு,
தமிழக அரசு , சென்னை – 600 009.
********************************
மதிப்பிற்குரிய அய்யா/அம்மா,

1. திருஅருட்பிரகாச வள்ளலார் 19ம் நூற்றாண்டில் ஒரு புதிய தனி மார்க்கத்தை கண்டு வெளிப்படுத்தினார்கள். அம்மார்க்கத்தின் பெயர் “சமரச சுத்த சன்மார்க்கம்” எனப்படும்.
2. சுத்தசன்மார்க்கத்தின் கடவுள் கொள்கை, அக்கடவுளின் அருள் பெறும் சாதனம், அக்கடவுளின் அருளால் கிடைக்கும் பலன், இவை அனைத்தும் புதியதாகவும், தனி வழியிலும் உள்ளது.
3. வள்ளலார் கண்ட சுத்தசன்மார்க்கம் உலகில் காணப்படும் சமய மத மார்க்கத்திற்கு கீழ் அல்லது அவை கிளையோ அல்ல.
இது புதிய மற்றும் தனி தன்மை கொண்டது.
4. மேலும், உலகில் காணப்படும் சாதி சமய மத மார்க்கங்களையும்
அதன் ஆசாரங்களையும் உலகாசாரங்களையும் தன் மார்க்கத்திற்கு எக்காலத்துக்கும் முக்கியத் தடையாக அறிவிக்கிறார் வள்ளலார். அதே நேரத்தில் எல்லா சமயமத மார்க்கங்களுக்கும் சமரச சுத்தசன்மார்க்கம் உண்மை பொது நெறியாக விளங்குகிறது என்கிறார் வள்ளலார்.
5. தான் கண்ட மார்க்கத்திற்கு:
“தனி கொடி”,
“தனி சங்கம் ”
” சபை-சாலை”,
“விதிகள் – கொள்கைகள்”
“கட்டளைகள்-அறிவிப்புகள் “,
“தனிப்பாடல்கள்”,
“தனி சாதனம்”,
“மகாமந்திரம்”,
“உபதேசம் – விண்ணப்பங்கள்”
உணவு – உடை குறிப்புகள்”
“தகுதிகள் – தடைகள் ”
” வழிப்பாட்டு முறைகள்”,
“நிலையங்கள், நிலங்கள்”
முதலிய அனைத்தும் ஏற்படுத்தியுள்ளார்கள்.
(மேலே சொல்லப்பட்ட அனைத்திற்கும் உரிய ஆதார ஆவண நகல்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.)
6. வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்தில் கடவுளின் அருளால் மரணம் தவிர்க்கலாம் என்ற “சாகாகல்வி” பற்றி சொல்கிறது.
7. மேலும் வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் மற்றும் அதன் நெறி ஒரு தனி நெறி என ;
# இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை துணை, இணை, மற்றும் ஆணையர் அவர்களால் அவர்களின் பல ஆணைகள் மூலம் வெளிபடுத்தப் பட்டுள்ளது. (நகல்கள் இணைக்கப்பட்டுள்ளது).
# மேதகு உயர்நீதிமன்றம், சென்னை நேரிடையாக சில வழக்குகளில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் சமயமதம் சாராத கொள்கை கொண்டு விளங்குகிறது என தீர்ப்பு வழங்கி உள்ளது.
மேலும், மற்றொரு வழக்கில் மிகத்தெளிவாகவே மேதகு உயர்நீதிமன்றம், சென்னை, வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் தனி கொள்கை கொண்டது என கூர் நோக்கி குறிப்புகள் கொடுக்கப்பட்டு அவ்வழக்கின் பிரச்சனைக்கு தீர்வு வழங்கி உள்ளது. (நகல்கள் இணைக்கப்பட்டுள்ளது.)
7. மேலும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி ஒன்றை தனி சமயமாக (மார்க்கமாக) அறிவிக்க வேண்டுமெனில் சொல்லப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் பெற்றுள்ளது.
இந்நிலையில் தங்களிடம் பணிவுடன் வேண்டுவது;
1) வள்ளலாரின் சமரச சுத்தசன்மார்க்கம் ஒரு புதிய மார்க்கம் எனவும், அதன் நெறி தனி நெறி எனவும் விளம்புகை செய்ய வேண்டுகிறோம்.
2) வள்ளலாரின் சமரச சுத்தசன்மார்க்கம் தழுபவர்கள் தாங்கள் சுத்தசன்மார்க்கம் சார்ந்தவர்கள் என அழைத்திட, எழுதிட சட்டப்படி உரிமை வழங்கிட வேண்டுகிறோம்.
3) மேற்படியான கோரிக்கைகள் ஏற்று சட்டம் வடிவம் கிடைத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தாங்கள் பரிசீலித்து கோரிக்கைகளை மேதகு மத்திய அரசுக்கு பரிந்துரை உடனே செய்ய வேண்டுகிறோம்.

இங்ஙனம்:
ஏபிஜெ. அருள்.
சகாதேவராஜா. சாசங்கன்.
சுப்பிரமணியன். செங்கான். சந்திரமோகன்.ரவிசந்திரன்.
ஹரிகோவிந்தன்.பாலமுருகன். கண்ணன்.தனசேகரன்.
சொக்கலிங்கம். ராமசாமி.
(குறிப்பு: மேதகு கர்நாடக அரசு அம்மாநிலத்தில் தோன்றிய “லிங்காயத்” அமைப்பை தனி மதமாக அறிவித்திட அவ்வரசு மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. அதுபோல்
வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் ஒரு புதிய மார்க்கம் எனவும், அதன் நெறி தனி நெறி எனவும் விளம்புகை செய்ய பரிந்துரைக்க வேண்டுகிறோம்).
அனைத்து சுத்த சன்மார்க்கத்தார்கள் தனியாகவும், அமைப்பு மூலமாகவும், மேற்படிப்பு கோரிக்கையை மேதகு அரசுக்கு அனுப்பி வைத்து வேண்டலாம். அறவழியில் பணிவாக உரிமையுடன் கோரிக்கையை பதிவு தபாலில் அனுப்பலாம்.

நன்றி. ஏபிஜெ.

unmai

Channai,Tamilnadu,India

4 thoughts on “வள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை

  • தனி பெரும் மார்க்கம்!தனி பெரும் சிறப்பு!தேவை இக்கணம்!நிலை மாறும் உலகில் நிலைக்கும் இந்த மாபெரும் மார்க்கம்!தனி மனித மேம்பாடு வலியுறுத்த….

  • தனி பெரும் மார்க்கம்! தனி மார்க்கம் தேவை இக்கணம்

  • வள்ளலார் வகுத்த வாழ்வியல் இலக்கணம்

  • உலகளாவிய,உலகமே தழுவும்..தனி மார்க்கம்!தனி பெரும் மார்க்கம் தேவை

Comments are closed.