January 22, 2025
Blog

சன்மார்க்கப் பெரும்பதி வருகை

His Holiness Vallalar published Notification on 12-04-1871 as follows;

சன்மார்க்கப் பெரும்பதி வருகை .

பிரஜோற்பத்தி வருடம் சித்திரை மாதம் 12 ம் தேதி – 12 .4 . 1871 .

திருச்சிற்றம்பலம் .

சுத்த சிவ சன்மார்க்கம் ஓன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும் . இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை . தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும் . அதன்மேலும் வழங்கும் . பலவகைப்பட்ட சமய பேதங் களும் , சாத்திர பேதங்களும் , ஜாதி பேதங்களும் , ஆசார பேதங் களும் போய் சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும் . அது கடவுள் சம்மதம் . இது 29 மாதத்திற்கு மேல் .

இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கா்த்தா்கள் , மூா்த்திகள், கடவுளா் , தேவா் , அடியார் , யோகி , ஞானி முதலானவா்களில் ஓருவரல்ல . இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் , எல்லாத் தேவா்களும் , எல்லாக் கடவுளரும் , எல்லாத் தலைவா்களும் , எல்லா யோகிகளும் , எல்லா ஞானிகளும் , தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிற்பார்க்கின்றபடி எழுந்தருளு கின்ற தனித்தலைமைப் பெரும்பதி .

இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன் . பெறுகின்றேன் . பெற்றேன் . என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை . பெறுவீர்கள் .பெறுகின்றீா்கள்.பெற்றீா்கள் அஞ்சவேண்டாம் .

-வள்ளலார்

(

சிதம்பரம் இராமலிங்கம்)

(Kindly note that the above notification issued only by Our His Holiness Vallalar. This is a original hand writting document of Vallalar.)

Urainadai Paguthi

unmai

Channai,Tamilnadu,India