வேடிக்கையும், வேதனையும்
வேடிக்கையும், வேதனையும்
–ஏபிஜெ அருள்.
திருவருட்பிரகாச வள்ளலாரின் சத்திய வாக்கியங்களை உள்ளது உள்ளபடி கண்டு வாசித்தால் தான் அவர்தம் உயர்வான தனி நெறி அறிந்து கொள்ளமுடியும்.
* வள்ளலார் வழியில் உள்ளவர்கள் என்று பலர் முன்வந்து செய்யும் சொற்பொழிவால்,
* ஜீவகாருண்ய பணி என அவர் பெயரில் அன்னதானம் செய்பவர்களின் வழிபாடு செய்கையால்,
* அவர் பாடல்களுக்கு பலர் உரை எழுதியிருப்பதிலிருந்து,
வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையை தெரிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
காரணம்;
** அவர் ஒரு புதிய தனி பொது நெறியை சொல்கிறேன் என்பதால். மேலும்,
** தான் சொன்ன உண்மையை தெரிந்து கொள்வாரில்லை, என்றும் என்னோடு நீங்கள் பழகியும் என் மார்க்க ஒழுக்கத்தை தெரிந்து கொள்ளவில்லையே என வள்ளலாரே தெரிவித்த பிறகு,
அவர் காலத்து திரு வேலாயுத முதலியாரிலிருந்து இன்று என் வரையுள்ளவரைகளை எப்படி நம்பி, வள்ளலாரின் தனி நெறியை இவர்கள் மூலம் தெரிந்துக் கொள்வது?
ஆம், இன்று வள்ளலாரின் நெறி இதுவே என சொல்வதில் வள்ளலார் பெருமளவில் பலவாறு விமர்சிக்கப் பட்டு வருவது வேடிக்கையாகவும், வேதனையாக உள்ளது.
அன்பர்களே!
வள்ளலாரின் அனைத்து ஆவணங்களும் எளிய உயர்வான தமிழ் மொழியிலேயே உள்ளது.
எனவே நாம் அனைவரும் நேரிடையாகவே வள்ளாரின் ஆவணப்பிரதிகளை வாசிக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.
கண்டிப்பாக வள்ளலாரின் நெறி உண்மை பொது நெறி என உணருவது சத்தியமே.
— கருணை சபை சாலை அறக்கட்டளை.