January 22, 2025
tamil katturai APJ arul

வள்ளலார் முடிபாக சொன்னது இது தான்

வள்ளலார் முடிபாக சொன்னது இது தான். — ஏபிஜெ அருள்.

22/10/1873 ல் வள்ளலார் சொன்னது; 
“உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.”
30/01/1874ல் சொன்னது;
” இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (சுத்த)சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை.
நிற்க! ஆக
வள்ளலார் சொல்ல வந்ததை 
தெரிந்து கொள்ளாதவர்களாக (முயற்சிக்காதவர்களாக) இருந்தோம்.
இந்நிலையில் வள்ளலார் மீண்டும் நம்மிடம் கீழ்வருமாறு சொல்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். 
அது;
சித்திவளாகத்தில் உள்ளிருந்த விளக்கை திருமாளிகைப் புறத்தில் வைத்து,

      “இதைத் தடைபடாது ஆராதியுங்கள். இந்த கதவைச் சாத்திவிடப் போகின்றேன். இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர் தீப முன்னிலையில் விளங்குகின்றப் படியால் உங்களுடைய காலத்தை வீணிற்கழிக்காமல், “நினைந்து நினைந்து” என்னும் தொடக்கமுடைய 28 பாசுர மடங்கிய பாடலிற் கண்டபடி தெய்வ பாவணையை இந்தத் தீபத்திற் செய்யுங்கள். நானிப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்.'”

 

அன்பர்களே!
வள்ளலார் சொல்ல வந்த உண்மை, 
சுத்த சன்மார்க்க நெறி, கடவுள் அருள்
எல்லாம் இந்த “நினைந்து நினைந்து” என்னும் தொடக்கமுடைய 28 பாசுரப் பாடல்களில் தான் உள்ளது என்பதை சத்தியமாக இன்று அறிந்து உணர்வோம். 
எவர்க்கெல்லாம் வள்ளலார் சொல்ல வந்த உண்மை, உண்மை கடவுளின் நிலை, பேரின்ப பெருவாழ்வு பற்றி தெரிந்து கொள்ள “ஆசை” உள்ளவர்கள் இன்றே 28 பாசுரப்பாடல்களை வாசிப்போம் பாடுவோம் கடவுள் அருளை பெறுவோம்.
அன்புடன்:
ஏபிஜெ அருள்.

28 பாசுரப்பாடல்களுக்கு (ஞான சரியை என்ற தலைப்பில் ஆறாம் திருமுறையில்)
https://www.atruegod.org/vallalar/ இதை கிளிக் செய்து காண்க

unmai

Channai,Tamilnadu,India