சாகா கல்வி என்றால் என்ன?அதற்குரிய பயிற்சி எது?
சாகா கல்வி என்றால் என்ன?அதற்குரிய பயிற்சி எது?
– ஏபிஜெ அருள்.கருணை சபை.
அன்பர்களே!
இனி இவைக்கான பதிலை எவரிடமும் கேட்காதீர்கள். எவரேனும் விளக்கினாலும் நம்ப வேண்டாம். ஆம்.
சாகா கல்வி எவரும் கற்று தரமுடியாது. எந்த பயிற்சியும் கிடையாது என்பதே உண்மை.ஆம், சாகாகல்வி என்பது சாகா தலை, வேகா கால்,
போகா புனல் இம்மூன்றுமே சாகா கல்வியை தெரிவிக்கும் என்கிறார் வள்ளலார். நிற்க! நமக்கு சாகாத தலை வேகாத கால் என்பவை பற்றி உரைப்பதும் போகாத புனலை பற்றி தெரிவிப்பதும் ஆண்டவரே.ஆம், வள்ளலாருக்கு சாகா கல்வியை காட்டி,தந்து,
உணர்த்தியவர் ஆண்டவரே.சாகாத நிலை பெறுதலே சிறந்தது என்ற உண்மை வள்ளலாருக்கு முன் ஞானிகள் தெரிந்திருந்திருந்தனர்.அதை பெற பல வழியை கையாண்டு செய்த முயற்சியளவுக்கே பயன் அவர்கள் பெற்றனர்.அதாவது நீடுழி வாழ்ந்தனர். சித்திகள் பல பெற்றனர்.முத்தி,சமாதி,மாயம்,மறைந்து ஒடுங்கி போதல் போன்ற அருளை பெற்றனர்.
இவையே முடிபு எனக்கொண்டனர். ஆனால் வள்ளலார் விசாரம் தொடர்ந்து செய்தார்கள்.முழு உண்மை இதுவல்ல என்று கண்டார்கள். இடைவிடாத நன்முயற்சி செய்ய ஒரு புதிய தனி வழி கண்டார்கள்.அதில் உண்மை கடவுளின் நிலை கண்டார்கள்.தன் முழு உண்மை நிலை கண்ட வள்ளலாருக்கு சாகாத கல்வியை அருளினார் ஆண்டவர். தான் பெற்ற இந்த இன்பம் எல்லாரும் பெறல்வேண்டும் என்று ஆண்டவரிடம் வேண்டினார் வள்ளலார். வள்ளலாரின் இந்த முழு தயவை/நேயத்தை கண்ட ஆண்டவர் வள்ளலாருக்கு தன் நிலையையே கொடுத்து அருளினார்கள். இந்த உண்மையை நீயே மனிதர்களுக்கு உரைப்பாய் என்றதினால் “வருவிக்க உற்றவரானர் ” நம் வள்ளலார். ஆக அன்பர்களே, சாகாகல்வி என்பது கடவுள் அருளே என்றும் அது கடவுளின் நிலை காணும் போது ஆண்டவரால் உரைக்கப்படும் கல்வி என இன்று அறிவோம்.நிற்க! கடவுளின் நிலை காண சுத்த சன்மார்க்கமே சிறந்தது, அந்த வழியை தவிர வேறு எந்தொரு வழி்யிலும் காணமுடியாது என்று சத்தியமிட்டு சொல்கிறார் வள்ளலார்.
ஆக சாகா கல்வி கற்க சுத்த சன்மார்க்கம் மட்டுமே சார வேண்டும். வள்ளலார் வெளிப்படுத்திய
சுத்தசன்மார்க்கம் என்றால் என்ன என்று அடுத்த நல்ல விசாரணையில் காண்போம். வள்ளலார் சொல்லியபடியே சமர்ப்பித்துள்ளேன்.
வள்ளலாரின் நெறி உள்ளது உள்ளபடி தந்து உங்களிடம் விசாரம் செய்த அனுமதித்தற்கு நன்றி
::ஏபிஜெ அருள்,கருணை சபை,மதுரை.