November 19, 2024
Blog

ஏமாறுதல் இருக்கும் வரை  ஏமாற்றுதல் இருக்கும்

ஏமாறுதல் இருக்கும் வரை ஏமாற்றுதல் இருக்கும். – apjarul.

கடந்தமுறை வடலூர் சென்றிருந்த போது பல “இளைஞர்கள்”
(வயது 25 to35) வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்தில் முழுமையாக ஈடுபட்டிருப்பதை பார்க்க முடிந்தது. அவர்களில் சிலரிடம் நாங்கள் பேசக்கூடிய சூழல் ஏற்பட்டது. அதில் ஒருவர் வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு முழுமையாக ஈடுபடலாம் என உள்ளேன் என்றார். அவரிடம் தாங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? வருமானம் என்ன? என கேட்டோம்.அதற்கு வேலையெல்லாம் இல்லைய்யா? இங்கு வந்திட்டேன். அன்னதானம் செய்து ஜூவகாருண்யத் தொண்டு செய்யப் போகிறேன் என்றார். அவரிடம் எந்த சபையயில் பணி செய்ய போகிறீர்கள் என்றதுக்கு தனியாக என்றார். அவரை பார்த்தால் வசதி படைத்தவராக தெரியவில்லை. இருப்பினும் உங்கள் வீடு, வசதி குறித்து கேட்டதுக்கு, அவர் வீடு குடும்பம் குறித்து கூறாமல், தனக்கு வசதி கிடையாது என்றார். பணம் வசூல் செய்து ஜூவகாருண்ய பணி செய்ய வள்ளலார் கட்டளை என்றாரே பார்க்கலாம்.
எதற்காக இங்கு இது குறித்து பேசுகிறோம் என்றால், அன்னதானம் ஜூவகாருண்யம் என்ற பெயரில் பலர் இறங்கி உள்ளனர்.ஏற்கனவே பல சபை சங்கங்கள் இப்பணியில் இருக்கின்றன. அங்கு பல வயதானவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அங்கு பணி செய்ய இது போன்ற இளைஞர்கள் செல்லாமல், தனியாக இவர்கள் கலெக்சன் பண்ணி செய்ய முற்படுவது தவறே ஆகும். இன்று வயதான ஏழைகள் பலர் (வயது 70 க்கும் மேல்) உழைத்து கஞ்சிக்காவது சம்பாதித்து பிழைக்கிறார்கள். பழ வியபாரி பாட்டிகள், மூடை தூக்கும் வயதான தாத்தாக்கள், சோப்பு சீப்பு விற்கும் கண் தெரியாதவர்கள் என நாம் தினம் பார்க்கிறோம். ஏழையாக இருந்தாலும் பெரிய படிப்பு படித்து, உழைத்து நாலு பேருக்கு உதவிட முயலும் இவர்கள் மத்தியில் எந்தொரு படிப்பு,உழைப்பு இல்லாமல் வள்ளலார் பெயரைச் சொல்லி வரும் இந்த இளைஞர்களை நினைத்து பார்க்கமுடியவில்லை. உழைத்து வருமானம் செய்ய வேண்டிய வயதில் அந்த எண்ணமில்லாத இந்த இளைஞர்களை எண்ணி வருத்தப்படுவதா? இல்லை, இவர்களுக்கு அன்னதானம் ஜூவகாருண்ய பணிக்கு பணம் கொடுத்து ஊக்குவிக்கும் மனிதர்களை குறித்து கோபப்படுவதா?
இனி இது போன்று வருபவர்களிடம் கூறுங்கள்;
வள்ளலார் ஆன்மீகவாதி மட்டுமில்லை
முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர், வள்ளலார் ஒரு சித்த மருத்துவர், வள்ளலார் ஒரு பதிப்பாசிரியர், நூலாசிரியர், வள்ளலார் ஒரு அருட்கவிஞர் இன்னும் பல. அறிவு அன்பு சொல் செயல்கள் பணிகள் எல்லாவற்றிலும் இருந்து தான் ஒரு அருட்ஞானியாக உயர்ந்தார் என்று சொல்லுங்கள். முற்றிலும் கைவிடப்பட்ட அநாதைகளுக்கு அன்னமிடுவதே ஆன்ம லாபம் என அறிக. அன்னதானம் மட்டுமில்லை அநாதைகளின் மற்ற தேவைக்கும் நாம் உதவிட வேண்டும். தருமசாலையில் ஏழைகளின் பசியை நீக்கி இறை உண்மையை அவர்களுக்கும் தெரிவிக்கவே சபையும் அருகில் உள்ளது. அன்னதானம், ஜூவகாருண்ய பணி,சுத்த சன்மார்க்க நெறி பரப்பும் பணி என்று சொல்லி வருபவர்களின் உண்மை தன்மை அறிவதும் முக்கியம். அவர்களின் விபரம்,சுத்த சன்மார்க்கம் குறித்த அவர்களின் அறிவு இவை நாம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். (எல்லோரையும் இப்படியாக நினைத்து விடமுடியாது என்பதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்).எப்படி இருந்தாலும்,படிப்பு, (இங்கு படிப்பு என்றால் ஸ்கூல் செல்வது மட்டுமில்லை பள்ளி செல்லாமலும் ஒன்றை குறித்து தெரிந்து கொள்ளுதலும் படிப்பே) ஆக படிப்பு, உழைப்பு இல்லாதவர்களுக்கு சுத்த சன்மார்க்க தகுதி வராது.
“ஏமாறுதல் இருக்கும் வரை ஏமாற்றுதல் இருக்கும்.” 
நிலையத்திடமே நாம் நன்கொடைகள் வழங்கிடுவோம்.
கோடிகள் கணக்கில் உள்ளது. டன் கணக்கில் அரிசி பருப்பு உள்ளது. அன்னதானம் மற்றும் ஜூவகாருண்ய பணிகள் விரிவாக்கி பணியாட்களை அமர்த்தி மற்றும் நம் சேவையையும் வழங்கி, நிலையம் சிறப்பாக செயல்பட ஆதரவும், அங்ஙனம் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைப்பதே நம் கடமையாகும்.

— அன்படன் ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India