வள்ளலார் ஆன்ம நேயத்தால், தான் சென்ற வழியை(வழி என்றால் மார்க்கம்) நமக்கு வெளிப்படுத்தினார்கள்
வள்ளலார் தான் கண்ட கடவுளை எல்லோரும் தெரிந்து அறிந்து அனுபவிக்க வேண்டும் என்று ஆன்ம நேயத்தால், தான் சென்ற வழியை(வழி என்றால் மார்க்கம்) நமக்கு வெளிப்படுத்தினார்கள்.
சுத்த சன்மார்க்க சாதனம் கொண்டு ஆண்டவரின் நிலை கண்டு அருள் பெறாமல் வள்ளலாரை தெய்வமாக பார்க்கிறோம். உண்மை கடவுளை என்னை போல் நீங்களும் கண்டால் தான், எனக்கு கிடைத்த பேரின்பம் போல் உங்களுக்கும கிடைக்குமே அன்றி வேறு வகையில் கூடாது (முடியாது).—என்கிறார் வள்ளலார்.
அன்பர்களே, இந்த உண்மை உணர வேண்டும். வள்ளலார் கடவுளின் உண்மையை பல ஆண்டுகள் செலவழித்து பெரும் முயற்சியால் கண்டார்கள்.அந்த உண்மையை எளிதாக நாம் தெரிந்து கொள்ள முன் வராமல் அவரையே தெய்வம் என்றோம் எனச்சொல்லி 22-10-1874 ல் பரிதாபம் அடைந்ததாக வள்ளலாரே தெரிவித்துள்ளார்கள். வள்ளலாரை தெய்வமாகவே கருதியவர்கள் சுத்த சன்மார்க்க பயனை அடையவில்லை என்பதே வரலாற்றின் உண்மை. வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்க நெறியே முக்கியம். அந்நெறி ஒன்றையேபிடித்து பயணிக்கும் போது நம்முடன் விலகாது துணை நிற்பவரே வள்ளலார். திருவருட்பிரகாச வள்ளலார் வழியில் அவர் துணைக் கொண்டு அவராலேயே நாம் தரிக்க போவது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை.
பேரின்ப பெருவாழ்வை தான் பெற்றது போல் இந்த பிறவிலேயே மனிதர் பெறுதல் வேண்டும் என்பதே வள்ளலாரின் லட்சியம்.
இந்த உண்மையை தான் வள்ளலார் சொன்னார்கள்.
அன்புடன் :: ஏபிஜெ அருள் கருணை சபை. மதுரை.