மனசாட்சியோடு சொல்லுங்கள் — ஏபிஜெ அருள்.
மனசாட்சியோடு சொல்லுங்கள்.– ஏபிஜெ அருள்.
வள்ளலார் ” சுத்த சன்மார்க்கம் ” என்ற புதிய தனி வழியை கண்டு உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்கள். வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல்,
சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன?
சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் யார்?
வழிபாடு எப்படி? என விளக்கியுள்ளார்கள்
சங்கம், சாலை, சபை, கொடி கொடுத்துள்ளார்கள்.
தனது மார்க்கத்தாருக்கு தகுதிகள் இவை என பட்டியல் கொடுத்துள்ளார்கள்.
சுத்த சன்மார்க்க கொள்கை வகுத்துள்ளார்கள். மார்க்கத்திற்கு எக்காலத்துக்கும் முக்கிய தடையாக உள்ளவற்றை சுட்டி காட்டி உள்ளார்கள்.
சங்கத்தார்கள் எவையில் லட்சியம் வைக்கக்கூடாது என குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள். அன்னதானம் எதுவென்றும் கருணை,ஒருமை,சமரசம்,சுத்த சன்மார்க்க ஓழுக்கம் என்பவையின் பொருள் என்ன என விளக்கியுள்ளார்கள். தனது மார்க்கத்திற்கும் மற்ற சமய மத மார்க்கங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கி உள்ளார்கள். இவ்வளவும் விளக்கமாக வள்ளலாரால் விளக்கப்பட்டு வெளிப்படுத்திப் பிறகும், மேற்படி முடிபான எல்லாவற்றையும் மறைத்து வள்ளலாரை ஆரம்ப காலத்து சமயத்திலேயே வெளிப்படுத்தியும், கைவிடப்பட்ட ஸ்தோத்திரப்பாடலை பாடியும், சமய அடையாளங்களில் காட்டியும் செய்வது என்ன செயலோ??
இப்படி ஒரு துரோக செயல்கள் செய்து அடையும் லாபம் என்ன? ஆயிரமாயிரம் ஆண்டுகள் முன்பு தோன்றிய சமய மத மார்க்கங்களில் ஏதேனும் ஒன்றையே நாம் நம்பிக்கை வைத்து தழுவி வருகிறோம். பல ஆயிரமாண்டுகளுக்கு பின்பு ஒரு புதிய மார்க்கம் 19ம் நூற்றாண்டில் தோன்றியுள்ளதை உங்கள் தவறான் செயலால் மறைப்பது சரியா?
மன சாட்சியோடு சொல்லுங்கள். எல்லோருமே சரி என்றுச் சொல்லக் கூடிய உண்மை பொது நெறி கொண்டிருக்கும் சுத்த சன்மார்க்கத்தை உள்ளது உள்ளபடியாக வெளிப்படுவதை தடை செய்யாதீர்கள். இன்று நமக்கு சரின்னு படாதது பின்னாளில் சரின்னு படலாம்.அதனால் எதையும் மாற்றாமல் உள்ளது உள்ளபடியாக இருக்கப்பட வைக்க வேண்டும்.
இளைஞர்களே விரைந்து வாருங்கள்!
பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு உண்மையறியாதுஉளறி உள்ளார்கள்.(இன்றும் உளறுகிறார்கள்) ஒன்றையும் நம்ப வேண்டாம் என இங்ஙனமாக சொல்பவர் வள்ளலாரே.
நம்மை நம்மிலிருந்தும் மற்ற உயிர்களிடமிருந்தும் வேறுப்படுத்தும் முழு உண்மை உரைக்காத சாதி சமய மத மார்க்கங்களை பொய் என தெரிந்து, உண்மை கடவுளை சத்திய அறிவால் விசாரணை செய்யச் சொல்லும்
சுத்த சன்மார்க்கத்தை அறிய வாருங்கள்.
அச்சம்,ஆணவம்,போர்,கொலை,
கொள்ளை,பொய்,கற்பனை,அறிவின்மை,அவத்தைகள் இவையே நமக்கு தரும் சாதியை சமயத்தை மதத்தை கைவிட்டு விட்டு அறிவால் எது உண்மை ? கடவுளின் நிலை என்ன? என நல்ல விசாரணை செய்ய சொல்லும் வள்ளலார் மார்க்கம் சாருவோம். இங்ஙனமாக நாம் தெரிய அறிய அனுபவிக்க மட்டுமே கூடுவோம். எல்லோரும் இந்த உண்மையறிய பொதுவாக உள்ள வழியே சுத்த சன்மார்க்கம் ஆகும். “இங்ஙனமாக” “ஆசை உண்டேல் ” வம்மீன் என்று தான் வள்ளலார் அழைக்கிறாரே அன்றி வேறில்லை.
என் மார்க்கம் “அறிவு மார்க்கம்” என்கிறார்.
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் வள்ளலார் என்ற பெயரிலும் சுத்த சன்மார்க்கம் என்ற பெயரிலும் சங்கம் சபை வைத்து கூட்டம் நடத்திபழைய நெறிலும் சமயமதங்களில் பற்று வைத்தும் வேறுப்பட்ட கொள்கை உள்ளவர்கள் மூலமாக கொள்கையை (??) விளக்குவதும் சரியா? எங்ஙனம் நெறியை அவர்கள் சரி என்பார்கள்? சரி என்றால் இந்த நெறியை கடைப்பிடிக்க வரவில்லை.?
கைவிட்ட சமய பற்றிலேயே வள்ளலாரை வெளிப்படுத்துவதும் சரியா?
வள்ளலார் சொல்லும் உண்மைகள்;
* காலமில்லை.
* உன் அறிவும் ஒழுக்கமும் ஒத்தவர்களுடன்
* உண்மை கடவுளின் நிலையறிதல்
* பொது நோக்கம், நல்ல விசாரணை (ஒழுக்கத்துடன்,கண்ணீரால்.. , )
* கடவுள் அருளால் சாகா கல்வி
* பேரின்ப பெருவாழ்வு
* இவை நம்மிடம் கூட எந்த ஒரு ஆசாரப் பற்றில்லாமல் இருத்தல் என்ற கட்டளையை கருத்தில் ஏற்றல்.
இதுவே சுத்த சன்மார்க்கம்-வள்ளலார்.
நன்றி: கருணை சபை மதுரை.
அன்புடன் தாழ்மையுடன் ஏபிஜெ அருள்.