January 22, 2025
Uncategorized

“பின்பு வந்ததைப்பட வேண்டும்” — வள்ளலார்

“பின்பு வந்ததைப்பட வேண்டும்.” — வள்ளலார்.

திருவருட்பிரகாச வள்ளலார் தனது தேடுதலுக்கு, சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் தடையாக இருப்பதை அறிந்து தெளிந்தார்கள். எனவே தான் தான் வைத்திருந்த சமயப்பற்றை முற்றிலும் பற்றற கைவிட்டு கடவுளின் உண்மை குறித்து நல்ல விசாரணையை ஒரு தனி புது வழியில் செய்தார்கள். அவ்வழியே சுத்தசன்மார்க்கம் ஆகும். இதுவே உண்மை கடவுள் அறிய உதவும் பொது வழி ஆகவும் விளங்குகிறது. எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக உள்ளது சுத்த சன்மார்க்க நெறி என்கிறார் வள்ளலார். அதே நேரத்தில் உலகில் காணும் சமய மத மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களே சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள் என்கிறார் வள்ளலார்.
இங்ஙனமாக வள்ளலாரின் முடிபான கொள்கை விளங்கும் போது வள்ளலாரை அவரால் கைவிடப்பட்ட சமயத்திலேயே வெளிக்காட்டுவதும்,சமய மதப்ப்பற்றுக் கொண்டோரை,சாதி தலைவர்களை,சினிமாக்காரர்களை,அரசியல்வாதிகளை இவர்களை மேடையில் ஏற்றி வள்ளலாரின் நெறி பற்றி பேச சொன்னால், அவர்களும் அதாவது சாதி தலைவர் சாதி பொய் என்றவர் வள்ளலார் என்றோ அல்லது சமய மதத்தலைவர் சமயம் மதம் பொய் என்றோ அல்லது சினிமாக்காரர் ஒழுக்கமே பிரதானம், கலை கற்பனை கூடாது என்றோ அல்லது அரசியல்வாதி கருணை வேண்டும் அன்பு வேண்டும் புலை கொலை கூடவே கூடாது என்று வள்ளலார் சொன்னார் என அவர்களால் எப்படி பேச முடியும்? அல்லது அவர்களை மேடையில் நாமலே வரவழைத்து சாதி சமய மதங்கள் பொய் என்றோ புலை கொலை கூடவே கூடாது என்றோ இடம் பொருள் தெரியாமல் சொல்வது சரியாகுமா? ஆக, மொத்தத்தில் இவர்களை அழைத்து அவர்களும் வள்ளலாரை முந்தய சமயப்பற்றிலேயே காட்டியும் நெறியை தவறாக எடுத்துக் கூறுவதை நாம் கேட்டும் அல்லது நாம் உண்மையை எடுத்து கூறும் போது அவர்கள் மனம் புண்படுவதை தேவையில்லாமல் நாம் செய்வதும் எந்தவிதத்தில் நியாயம்? எதற்காக இப்படி? இவை தேவையா? நம்மாலேயே இன்னும் சரியாக அறியப்படாமல் இருக்கும் போது நமக்குள் ஒரு நல்ல விசாரணைக்கு தான் ஏற்பாடு செய்ய வேண்டும். நாமலே பல முறை கூட வேண்டியுள்ளது உண்மை அறிய. இதுவே வள்ளலாரின் நேரிடையான கட்டளையாகும்.ஆனால் ,அதே நேரத்தில் அவர்கள், ஏன், அனைவருமே வள்ளலார் சொன்னது என்ன ? எனத்தெரியும் பொருட்டும் எவரும் இங்கு வருவதற்கு யாதொரு தடையுமில்லை.(அல்லது) ஒன்றில்/ சிலவற்றில் வள்ளலார் சொல்லியது மட்டும் பிடித்துள்ளது என்று வள்ளலாரை (புகைப்படம்) எவரும் வைத்துக்கொள்வதற்கும் அல்லது அவர்கள் அந்த பிடித்த விசயத்திற்கு மட்டும் விழா எவரும் எடுப்பதற்கும் உரிமை உள்ளது. இதில் நாம் தலையிடவில்லை.கூடாது. ஏன் அதில் நாம் கலந்தும் கொள்ளலாம்.
ஆனால் வள்ளலாரின் மார்க்கத்தார்கள் (எனச்சொல்லி) வள்ளலாரை சமய நெறியிலும் சமய ஸ்தோத்திர பாடல்களிலும் பாடி காட்டி, தனி நெறியை மறைக்கும் செயல், அச்செயலைத் தான் கூடாது என்றும் , முடியாது என்கிறோம். அப்படி நடப்பது மிகவும் வேதனையான விசயமாக உள்ளது. வள்ளலார் தனது முந்தய சமயப்பற்றை கைவிட்டு விட்டேன் என்ற பிறகும், அவரே பாடியிருந்தாலும் திருவருட்பாவில் உள்ள சமய ஸ்தோத்திர பாடல்களில் லட்சியம் வையாதீர்கள் என்று பின்பு அவரே சொன்னப் பிறகும், வள்ளலார் பெயரிலேயே சபை நிறுவி கூட்டம்,மாநாடு நடத்தி வள்ளலாரை சமயம் சார்ந்து காட்டியும், முடிபான புதிய தனி நெறியை மறைப்பது எந்ந விதத்தில் நியாயம்? அறியாது செய்தாலும்,அறிந்தே செய்தாலும் தவறு தவறே மற்றும் குற்றமே ஆகும். கருணையை வெளிப்படுத்தும் வள்ளலார் கண்டிக்கவும் செய்கிறார். இதோ (9-3-1872):: ” சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என் மேல் பழியில்லை. சொல்லி விட்டேன். பின்பு வந்ததைப்பட வேண்டும்.” இப்படி சொன்னவர் வள்ளலார்.
இதோ திருவள்ளுவரின் குறள்::
* செய்தக்க அல்ல செயக்கெடும்செய்தக்க
செய்யாமை யானும் கெடும். ஒருவர் தனது நிலைமைக்குத் தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாது விடுவதாலும் கேடு அடைவான்.
** ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
தகுந்த வழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக இருந்து காத்தலும் முடியாமல் தவறிவிடும்.
இதற்கு மேல் விளக்கவும் வேண்டவும் முடியாது.
தொடர்ந்து வள்ளலாரை அவரால் லட்சியம் வையாது கைவிடப்பட்ட சமய நெறிலும் ஸ்தோத்திரப்பாடலிலும் பாடி வெளிப்படுத்தினால் மிகப்பெரிய பாவத்தை செய்தவர்களாகவும், பின் வள்ளலாரின் கண்டிப்புக்கு ஆளாகி வந்ததைப்பட நேரிடும்.
வள்ளலார் கண்டது
ஒரு புதிய தனி உண்மை பொது
நெறி ஆகும்.உள்ளது உள்ளபடியாக உலகில் வெளிப்பட வேண்டும். எல்லா நெறியுமே நல்லது செய்யுங்கள் என உரைக்கிறது.வள்ளலார் நெறி உண்மையை உரைக்கிறது.
பணிவுடன்: ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India