November 18, 2024
tamil katturai APJ arul

சத்திய ஞான சபை” வழக்கில் ஆணையரின் ஆணை விபரம்

சத்திய ஞான சபை” வழக்கில் ஆணையரின் ஆணை விபரம்

Karunai Sabai-Salai Trust.

சுத்தமாதி மூன்று தேகங்கள் பெற்ற ஞானி வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கு முற்றிலும் வேறுபாடான முறையில் 132 வருடங்களாக சமய அடிப்படையில் விகரகங்களை வைத்து சமய வழிபாடு செய்து வந்த “சமய பூசாரி”யை வெளியேற்றிய சிறப்புமிகு ஆணையரின் ஆணையின் முழு விபரம் வெளிப்படுத்துவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். —MRS. APJ. ARUL AND M/S karunai Sabai Salai Trust, Madurai.

இந்த சிறப்புமிகு வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்தி சத்தியத்தை நிலைநாட்ட திருவருள் காரியப்பட்டது “ஓர் அன்பரிடம்”. இன்று வரை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பிடாத அந்த அன்பர்க்கு இந்நாளில் நமது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம். மேலும் இதற்கு உற்ற துணையாகவும், வேண்டிய போராட்டங்களை நல்ல நிலையில் ஏற்படுத்தி வழி நடத்திய “அனைத்து அன்பர்களும்” “வடலூர் வாழ் மக்களுக்கும்” திரு ஆணையர் & மேதகு தமிழக அரசாங்கத்திற்கும் எங்களது நன்றிகளை நாங்கள் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இந்த சிறப்புமிகு வரலாற்று ஆணையை வெளியிட உதவியாக இருக்கும் ஜ்ஜ்ஜ்.ஸ்ஹப்ப்ஹப்ஹழ்ள்ல்ஹஸ்ரீங்.ஸ்ரீர்ம் க்கு நன்றிகள் மற்றும் ஙழ்ள். அடஒ. அதமக அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்.

 

இங்ஙனம்

Ø திரு. எ. சுப்பிரமணியம், குறிஞ்சிபாடி
Ø திரு. அ. செங்கான்
Ø திரு. சந்திரமோகன் அய்யா அவர்கள், மதுரை
Ø திரு. ஓ.ந. சகாதேவராஜா, இராஜபாளையம்
Ø திரு. தர்மலிங்கம், இராமநாதபுரம்
Ø திரு. அண்ணாமலை, விழுப்புரம்
Ø திரு. பாலசுப்பிரமணியம், நெல்லை
Ø திரு. பி.இரா. விஜயராகவன், வடலூர்
Ø திரு. சுப்புராஜ், தூத்துக்குடி
Ø திரு. முரளிதரன், திண்டுக்கல்
Ø திரு. தாயுமானவர், குமரி

வெளியீடு
வள்ளலார் பேரவை, 228-2, மாடசாமி கோவில் தெரு, இராஜபாளையம்

வெளியீட்டாளர் நோக்கம்

Ø வள்ளலாரின் உண்மை பொதுநெறி “உள்ளது உள்ளபடியே” வெளிப்படுத்துதல் வேண்டும்.
Ø அந்த சுத்திய நெறியை அறியாமையிலோ அல்லது அபக்குவிகளால் வேண்டுமென்று திரித்து கூறுவதினாலோ, வள்ளலாரின் உண்மை தெரியாமல் ஆகிவிடும்.
Ø அச்செயலை தடுக்க நமக்கு உரிமையுண்டு என்பதை அறிய வேண்டும்.
Ø வள்ளலாரின் உண்மை “உள்ளது உள்ளபடியே” உலகத்தார் அறிய வேண்டுமெனில், 
Ø “மூலம்” மாற்றப்படாமல் பாதுகாக்க வேண்டும்.
Ø முரணாக நடைபெறும் செயலை உடனே சட்டத்தின் துணை கொண்டு தடுக்கும் அறிவு வேண்டும்.
Ø வரலாற்றினை திரித்து கூறுபவர்களை உலகிற்கு அடையாளம் காட்டுதல் வேண்டும்.
Ø இந்த “கடமை”யிலேயே இந்த ஆணை விபரம் தரப்படுகிறது.

ஆணையாளர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, 
சென்னை 600 034 முன்பாக

திங்கட்கிழமை, 30ம் தேதி, ஏப்ரல் மாதம், இரண்டாயிரத்து ஏழு
சர்வஜித் ஆண்டு, சித்திரை மாதம் 17-ம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2038

முன்னிலை : திரு. த. பிச்சாண்டி, இ.ஆ.ப.,
சிறப்பு ஆணையர் மற்றும் ஆணையர்.

சீராய்வு மனு 72 / 2006

திரு. சபாநாதஒளி சிவாச்சாரியார் மனுதாரர்

மற்றும்

  1. இணை ஆணையர்,
    இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை,
    விழுப்புரம்.
  2. திரு. ஜி. சுப்ரமணியன்,
    குறிஞ்சிப்பாடி,
    கடலுôர் மாவட்டம். எதிர்மனுதாரர்

அருள்மிகு சத்தியஞான சபை, வடலூர்,
கடலூர் மாவட்டம் குறித்து

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, விழுப்புரம், இணை ஆணையர் செ.மு.ந.க. 1426/2006 அ.2 நாள் 18.09.2006 மற்றும் செ.மு.ந.க. 1971/2006 அ.2 நாள் 18.09.2006ல் மேற்படி சபையின் பூஜை முறைகள் குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்திரவிற்கு எதிராக இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப் பிரிவு 21ல் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு.

சீராய்வு மனு 72/2006ன் ஆணை

  1. இந்து சமய அறநிலையத் துறை, விழுப்புரம் மண்டல இணை ஆணையாளர் தனது 18.09.2006 நாளிட்ட ந.க.எண். 1971/2006 ஆ.2ல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டப் பிரிவு 21ன் கீழ் திரு. சபாநாதஒளி சிவாச்சாரியார் என்பவர் இந்த சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கின் விவரம் சுருக்கமாகக் கீழே தரப்பட்டுள்ளது.
  2. கடலூர் மாவட்டம் வடலூர் அருள்மிகு வள்ளலார் தெய்வ நிலையம் என்பது வள்ளலார் ஜோதியாய் மறைந்த சித்தி வளாகம், அவர் உருவாக்கி வழிபட்ட சத்திய ஞான சபை, அவர் துவக்கி இன்றும் நடந்து வரும் தருமசாலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இது, இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டப் பிரிவு 46 (ண்ண்ண்)ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு சமய நிறுவனமாகும். பரம்பரை அல்லாத அறங்காவலர் குழுவும், துறையின் செயல் அலுவலரும் இதன் நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றனர்.
  3. திரு. சுப்பிரமணியன் என்பவர் சென்னை, உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம் இணை ஆணையருக்கு அளித்த 07.06.2006ம் நாளிட்ட மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், சத்திய ஞான சபையில் தற்போது நடைபெற்று வரும் பூஜை முறைகள் வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானவை என்றும், அவற்றை மாற்றி அமைக்கத் தீர்வு காண வேண்டுமென்றும் நீதிப் பேராணை மனுத் தாக்கல் செய்தார். நீதிப் பேரணை மனு மீது மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் 17.07.2006 அன்று பிறப்பித்த தீர்ப்பில் மேற்குறிப்பிட்ட 07.06.2006 நாளிட்ட மனு மீது விரைவில் நடவடிக்கை எடுத்து முடிவெடுக்க வேண்டும் எனக் காலக்கெடு விதித்தது.
  4. இதையடுத்து, விழுப்புரம் மண்டல இணை ஆணையாளர் முறைப்படி விசாரணை நடத்தி, சத்திய ஞான சபையில் வள்ளலார் 18.07.1872 அன்று ஏற்படுத்திய வழிமுறைகளின்படியான ஜோதி வழிப்பாட்டிற்கு மாறாக, வேறு பூஜை முறைகளைக் கடைப்பிடிக்கக் கூடாது என்றும், குறிப்பாக விக்ரக வழிபாடு சத்திய ஞான சபையில் செய்யக்கூடாது என்றும் 18.09.2006 அன்று பொதுவான ஆணைகள் பிறப்பித்தார். இந்த ஆணை எதிராகத்தான் திரு. சபாநாதஒளி சிவாச்சாரியார் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
  5. திரு. சுப்ரமணியம் அளித்த மனுவில், வடலூரில் ஏற்படுத்திய ஞானசபையானது – சாதி, மதம் கடந்த, உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற ஏற்றத் தாழ்வு அற்ற, கொலை, புலால் தவிர்த்தவர்கள், மனித நேயமும், அன்பு உள்ளமும் கொண்டவர்கள் கூடி, அருவரும் உருவரும் இல்லாத ஜோதி தீப வடிவமாக இருக்கின்ற இறைவனை தரிசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இடம் என்றும், இதில் பூஜை முறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளலாரே 18.07.1872 நாளிட்ட பெரு விண்ணப்பத்தில் சபை வழிகாட்டி விதிகளை வெளியிட்டுள்ளார் என்றும், ஆனால் தற்போது வள்ளலாரின் விதிமுறைகளுக்கு முழு மாறாக, விக்கிரகங்கள், சடங்குகள் முதலியன சத்திய ஞான சபைக்குள் புகுத்தப்பட்டுள்ளன என்றும், ஜோதி தீபம் காட்டுவதற்கு முன்பு, வழக்கத்திற்கு மாறாக மற்ற சமயக் கோயில்களில் உள்ளவாறு கோயில் மணி அடிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு திரை விலகும்போதும் கற்பூரச் சுடர் காட்டப்படுவதாகவும், ஜோதி தீபம் தெரியும்போது அதை முற்றிலும் மறைக்கும் நோக்கத்துடன் கற்பூரச் சுடர் மேலே தூக்கிக் காட்டப்படுவதாகவும், திரு. சபாநாதஒளி சிவாச்சாரியார் ஞான சபைக்குள் சென்று லிங்கம் வைத்து பூசை செய்வதாகவும், பிரதோஷ நாளன்று சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து மக்களுக்கு விபூதி, நைவேத்யம் முதலியன கொடுப்பதாகவும், எனவே வள்ளலார் பெருமான் அருளிச் சென்ற சபை வழிபாட்டு விதி 18.07.1872 (வள்ளலார் தெய்வ நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள திருவருட்பா உரைநடைப்பகுதி பக்கம் 551) மற்றும் சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி 25.11.1872 (வள்ளலார் தெய்வ நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள திருவருட்பா உரை நடைப்பகுதி பக்கம் 553) வழிகாட்டுதல்களின்படியும், கொள்கைகளின்படியும், ஞான சபையையும், தரும சாலையையும் நடத்துவதற்கு தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டுமென வேண்டியிருந்தனர்.
  6. சீராய்வு மனுதாரர் தம் மனுவில் பின்வரும் முக்கிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Ø விழுப்புரம் மண்டல இணை ஆணையாளர் இவ்வழக்கு தொடர்பான விசாரணையின்போது சிவில் நீதிமன்ற நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டார்.
Ø எதிர் மனுதாரர் தன் தரப்பு வாதத்துக்கு சான்றுகள் எதையும் விசாரணையின்போது சமர்ப்பிக்கவில்லை.
Ø 18.07.1872ம் நாளிட்ட விதிமுறைகள் என்று சொல்லப்படுபவற்றை வள்ளலார்தான் வழங்கினார் என்பதை எதிர் மனுதாரர் தரப்பில் நிரூபிக்கவில்லை. மேலும், வள்ளலார் வாழ்ந்த காலத்திலேயே இந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை இணை ஆணையர் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டார்.
Ø வள்ளலாரின் முதல் சீடரான தொழுதாவூர் வேலாயுதம் முதலியார் முதல் வள்ளலாரின் கடைசி சீடரான ந.ங. கந்தசாமி பிள்ளை வரை எவரும் தாங்கள் எழுதியவற்றில் வள்ளலாரின் 18.07.1872 நாளிட்ட விதிமுறைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
Ø வள்ளலார், சிவபெருமான் தனக்கு ஜோதி வடிவமாய் தரிசனம் கொடுத்தமைக்கு அடையாளமாக கண்ணாடியையும், ஜோதியையும் பிரதிஷ்டை செய்யும்படி ஆரூர் சபாபதி சிவாச்சாரியாரிடம் கூறினார். இவை வள்ளலார் உயிருடன் இருக்கும்போதே 25.01.1872 அன்று ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டன. மேலும், வள்ளலார் பெருமான் அவர்கள் ஆரூர் சபாபதி சிவாச்சாரியரிடம் ஸ்படிக லிங்கம் உள்ளிட்ட பல பூஜை பொருட்களை ஒப்படைத்து சைவ ஆகப்படி பூஜை செய்யும்படி கேட்டுக் கொண்டபடி இன்றுவரை அதன்படியே பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
Ø வள்ளலார் தான் வாழ்ந்த காலத்தில் சைவ வழிபாட்டைப் பின்பற்றினார். தனது நெற்றியில் விபூதி அணிந்ததுடன் மற்றவர்களுக்கும் விபூதி வழங்கி, அவர்களின் நோயை குணப்படுத்தினார்; தனது பாடல்கள் பலவற்றில் சிவனின் பல அம்சங்களைப் புகழ்ந்து பாடியுள்ளார்; அவரது கடிதங்கள் பலவற்றின் வாயிலாகவும் அவரது சிவபக்தி நன்கு புலப்படுகிறது.
Ø வள்ளலார், மறை ஞான சம்பந்தரின் ஓலைச் சுவடிகளைத் தம்மிடம் வைத்திருந்து, அதற்கு பாத பூஜை செய்து வந்ததும், தம் கடிதங்கள் எல்லாவற்றிலும் உ. சிவமயம், திருச்சிற்றம்பலம் என்று எழுதி வந்ததும் அவர் சைவ சமயத்தைப் பின்பற்றினார் என்பதற்கு சான்றுகள்.
Ø வள்ளலார் இந்து மதத்துக்கு எதிராக எதையும் செய்யவில்லை; அவர் சொன்னதெல்லாம் இந்து மதத்தின் ஒரு பிரிவேயாகும்.
Ø ஆறாம் திருமுறையில் இந்து மதக் கோட்பாட்டுக்கு எதிராக உள்ள பகுதிகளை வெளியிட வேண்டாம் என்று வள்ளலாரே குறிப்பிட்டுள்ளார்.
Ø திருவண்ணாமலையிலும் ஜோதி தரிசனம் உள்ளது. தில்லை நடராஜர் ஆலயத்திலும் திரைக்கு பின் அருவ வழிபாடு நடைபெறுகிறது. இவை சைவ சமயத்துக்குப் புறம்பானவை என்று சொல்ல முடியாது.

  1. எதிர் மனுதாரர் சமர்ப்பித்த பொதுவான எதிருரையில் பின்வரும் முக்கிய கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார்கள் ;

Ø வள்ளலார் பெருமான் தான் கண்ட சுத்த சன்மார்க்கத்துக்கு தனிப்பெயர், தனிக்கொள்கை, தனிக்கொடி, தனி இடம் ஏற்படுத்தி அவற்றிற்கான திருமந்திரம், சபை, சாலை வழிபாட்டு விதிகள், கட்டளைகள், நூல்கள், உரைகள், பாடல்கள் முதலிய எல்லாவற்றையுமே வழங்கியுள்ளார். இதனை மற்ற மதங்களுடன் ஒப்பிட இயலாது.

Ø சுத்த சன்மார்க்கம் என்பது மதம், சமயம் கடந்ததோர் கொள்கையாகும். வள்ளலாரின் ஆறாவது திருமுறை, விண்ணப்பங்கள், வழிபாட்டு விதிகள், அருட்பெருஞ்ஜோதி அகவல், பேருபதேசம் ஆகியவை சமரச சுத்த சன்மார்க்கத்தின் முக்கியமான பிரிக்க முடியாத பகுதிகள் (டழ்ண்ம்ஹழ்ஹ் ஹய்க் ஐய்ற்ங்ஞ்ழ்ஹற்ங்க் டஹழ்ற்ள்) ஆகும். இவற்றைத் தவிர, ஆரம்ப காலத்தில் வள்ளலார் இயற்றிய ஐந்து திருமுறைகளையும் அவர் பின்னாளில் பின்பற்றவில்லை. இது குறித்து வள்ளல் பெருமானே தனது பேருபதேசத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

Ø வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் உள்ள கருத்துக்களே மக்களிடம், அனைத்து நாட்டவர்களிடம், மிகுந்த விழிப்புணர்ச்சியையும், உலகத்தார் அனைவரையுமே ஒரு குடையின் கீழ் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை கொண்டு இறைவனின் உண்மையை ஐயம், திரிபு, மயக்கம் இன்றி அனுபவத்தில் காண வழிவகை செய்கிறது. இந்தக் கருத்துக்களை அறிந்தே, விருப்பம் கொண்டு, நம் நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும், கிறித்துவ, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களும், வடலூருக்கு சன்மார்க்கம் பற்றி அறிய வருகின்றனர். சத்திய ஞான சபை வழிபாடு, சமயம் சார்ந்ததாக இருப்பின் அவர்களின் இத்தகைய வருகை இருக்காது.

Ø வள்ளலாரின் கோட்பாடுகள் எந்தவொரு சமயத்தையும் சாராத ஒரு தனிப்பட்ட தத்துவத்தை உள்ளடக்கிய தனித்தன்மை வாய்ந்த லட்சியத்தை, இறைவனைக் கொண்டது ஆகும்.

Ø வள்ளலார் தான் கைப்பட எழுதிய ‘அருட்பெருஞ்ஜோதி அகவலின்’ மூலப் பிரதி இன்றும் தருமச் சாலையில் உள்ளது. வள்ளலாரின் தத்துவங்களின் சாரமே அகவல் ஆகும். வள்ளலார் சமயம் சாராத உன்னத தனித்தன்மையான கொள்கையைக் கொண்டவர் என்பது இந்த ‘அருட் பெருஞ்ஜோதி அகவல்’ மூலம் விளங்கும்.

Ø சத்திய ஞான சபை, வள்ளலார் சைவ சமயத்தை சார்ந்திருந்த போது கட்டியது அல்ல. இந்த சபை வள்ளலார் பெருமான் தன் சித்தியில் கண்ட அக உண்மையே. அகமாகிய ஆன்மப் பிரகாசமே – ஞான சபை. அந்தப் பிரகாகத்துக்குள்ளிருக்கும் பிரகாசம் – கடவுள். அந்த உள்ளொளியின் அசைவு நடனம். இதுதான் ஞானப் பிரகாச நடனமென்றும், அசைவுற்றதே நடராஜ நடனமென்றும், ஆனந்த நடனமென்றும், வள்ளலார் நெறி சொல்கிறது. பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டும் சமயவாதிகளின் பால் லட்சியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துள்ள லட்சியம் போய்விடும் என்றார் வள்ளலார்.

Ø சத்திய ஞான சபையின் ஒவ்வொரு அமைப்பும், சபை சுற்றி கிடக்கும் திருச்சங்கிலி முதல் உள்ளே வைத்திருக்கும் ஜோதி வரை ஒவ்வொன்றும் அக உண்மையாகும். உள்ளே அமைந்திருக்கும் படிகள், திரைகள், கட்டடத்தின் உயரம், அகலம் போன்ற அளவுகள் எல்லாம் வள்ளலார் சித்தியில் கண்ட அக உண்மையே. இவற்றிடையே வேறு ஏதேனும் (பித்தளை விளக்கு, சிலைகள் முதலியன) புகுத்தி வைக்கப்பட்டால் அது வள்ளலார் கண்ட அக உண்மையை அழிப்பதாகவே அமையும். சீராய்வு மனுதாரர் சத்திய ஞான சபையை கோயிலாக, மடமாக, சாதாரண கட்டடமாக உலகத்தார்க்குக் காட்ட திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். 

Ø ஞான சபையின் உள்ளே தற்சமயம் சீராய்வு மனுதாரர் செய்யும் சடங்கு நடவடிக்கைகள், வைத்திருக்கும் விக்கிரகங்கள், நிலைக் கண்ணாடி, பித்தளை விளக்குகள், சிறு தெய்வ உருவங்கள் அனைத்தும் வள்ளலாரின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபாடானது. வள்ளலாரின் மதம் சாராத தனிக் கொள்கைக்கு முற்றிலும் வேறுபாடான உருவ வழிபாட்டினை சத்திய ஞான சபையில் புகுத்த வேண்டும் என்பது சீராய்வு மனுதாரரின் தீய எண்ணமாகும்.

Ø சீராய்வு மனுதாரர் குறிப்பிட்டுள்ள சிவன், ஆகம விதிகள், பூஜைகள், லிங்கங்கள் இவை அனைத்துமே இந்து சமயத்தின் நியதி முறைகள். இவை சன்மார்க்கத்திற்கு சிறிதும் பொருந்தாது. சீராய்வு மனுதாரர் சொல்லியிருக்கும் பட்டியல் உண்மையானதல்ல. இதை மட்டுமே வைத்து வள்ளலாரின் கோட்பாட்டை மாற்ற முயற்சி செய்வது தடுக்கப்பட வேண்டும்.
Ø சிராய்வு மனுதாரர் குறிப்பிடும் வேலாயுத முதலியாரும், கந்தசாமி பிள்ளையும் இருவரும் ஆறாம் திருமுறையை வெளியிட்டுள்ளனர். வள்ளலாரின் தமக்கையார் குடும்பத்தாரின், அருட்பெருஞ்ஜோதி அச்சகத்தின் வெளியீட்டிலும் சத்திய ஞான சபை வழிபாட்டு விதிமுறைகள் அடங்கியுள்ளன.

Ø வள்ளலார் தன் கடிதங்களில் குறிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற சொல் சைவ சமயக் குறியீடாகக் கொள்ளக் கூடாது. சிற்றம்பலம் என்ற வார்த்தை பொதுவான பண்புடைய ஒரு பெயர்ச் சொல்லே. ‘உ’, ‘சிவமயம்’ என்ற வார்த்தைகளை வள்ளலார் சித்தி பெற்ற பின்பு எங்கும் பயன்படுத்தவில்லை. 

Ø சீராய்வு மனுதாரர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையிலிருந்து எவ்வித சம்பளமும் பெற்று வருபவர் அல்ல. துறையின் மூலமாக முறையாகப் பணி அமர்த்தப்பட்டவர் அல்ல.

Ø உரிய கால அவகாசம் கொடுத்து, முறைப்படி தொடர்புடைய அனைவருக்கும் அறிவிப்பு கொடுத்து, விசாரணை நடத்தி ஆவணங்களின் அடிப்படையில் விழுப்புரம் மண்டல இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவு நியாயமானதாகும்; அதை உறுதி செய்திட வேண்டும்.

 

  1. சீராய்வு மனுதாரரின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த எழுத்துப் பூர்வமான வாதுரையில் கீழ்கண்ட கூடுதல் கருத்துரைகள் தெரிவித்துள்ளனர் :

Ø விழுப்புரம், இணை ஆணையரின் விசாரணையின்போது, எதிர் மனுதாரர் அளித்த மனுக்கள் பற்றிய விவரங்கள் சீராய்வு மனுதாரருக்குத் தெரிவிக்கப்படவில்லை.
Ø விழுப்புரம், இணை ஆணையர், தான் பிறப்பித்த ஆணை, இந்து சமய அறநிலையச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. எதிர் மனுதாரர் சொல்வதுபோல் சட்டப் பிரிவு 25ல் இணை ஆணையருக்கு அதிகாரம் இல்லை.

Ø வள்ளலார், ஆறாம் திருமுறையை தன் வாழ்நாளில் வெளியிடவில்லை. மேலும் கி.பி. 1872க்கும் 1936க்கும் இடையில் வள்ளலாரின் 18.07.1872 நாளிட்ட வழிபாட்டு முறைகள் தான் கடைப்பிடிக்கப்பட்டதா என்பதற்கு எதிர் மனுதாரர்கள் ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்கவில்லை.

Ø வள்ளலார் தெய்வ நிலையங்கள் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட நிர்வாகத் திட்டத்தின் ஷரத்துக்களில் இந்த வழிபாட்டு முறை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.

Ø சபாநாதஒளி சிவாச்சாரியாரின் முன்னோடியான ஆரூர் சபாபதி சிவாச்சாரியாரிடம் வள்ளலார் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். சைவ முறைப்படி பூஜைகள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் சிவாச்சாரியாரை இங்கு வள்ளலார் அமர்த்தியிருந்தார்.

Ø வள்ளலார் தன் காலத்திலேயே ஆகம சாஸ்திர முறைப்படிதான் சத்திய ஞான சபையில் வழிபாடுகள் நடத்தினார். இதன்படியே இன்றும் பூஜைகள் தொடர்ந்து வருகின்றன.

  1. சீராய்வு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் திரு. எம்.சி. சுவாமி, திரு. அய்யாத்துரை ஆகியோரும், எதிர் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் திரு. வி. பாரதிதாசன், திரு. எம். சரவணகுமார், திரு. கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோரும் வாதிட்டனர். இரு தரப்பிலும் வள்ளலார் மற்றும் அவரது எழுத்துக்கள் தொடர்புடைய சில ஆவணங்களைத் தாக்கல் செய்தனர். சீராய்வு மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்களின் வாதங்களையும், தொடர்புடைய ஆவணங்களையும் நான் கவனமாகப் பரிசீலித்தேன்.
  2. சீராய்வு செய்யக்கோரும் ஆணையை விழுப்புரம் மண்டல இணை ஆணையாளர் எந்த சட்டப் பிரிவின் கீழ் பிறப்பித்துள்ளார். அத்தகைய ஆணையைப் பிறப்பிக்க, அவருக்கு அதிகாரம் உள்ளதா என்பது முதலில் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் 17.07.2006 நாளிட்ட ஆணையில் சத்ய ஞான சபை பிரச்சினை தொடர்பாகக் கொடுக்கப்பட்ட மனுவினை ஒரு காலக் கெடுவுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று விழுப்புரம் இணை ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே இணை ஆணையர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்பதை அவரது ஆணையிலிருந்து அறிய முடிகிறது.
  3. இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப் பிரிவு 28 (1)ல் ஒரு சமய நிறுவனத்தின் அறங்காவலர் அந்த நிறுவனத்துக்கான டிரஸ்டில் உள்ள உட்கூறுகளின்படியும், அதன் வழக்கப்படியும் அந்த சமய நிறுவனத்தின் காரியங்களை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப் பிரிவு 27ல், இந்த சட்டத்தின் பல்வேறு ஷரத்துக்களின்படி அரசோ, ஆணையாளரோ, கூடுதல் ஆணையாளரோ, இணை, துணை அல்லது உதவி ஆணையாளரோ ஒரு சமய நிறுவனத்தின் அறங்காவலருக்கு இடும் கட்டளைகளை ஏற்று செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சமய நிறுவனத்தில் ஏதேனும் ஒரு நடைமுறை பழக்க வழக்கம் பற்றிய பிரச்சனை எழுந்தால், அது பற்றி முடிவு செய்ய இணை ஆணையாளருக்கு சட்டப் பிரிவு 63 (ங்)ல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சீராய்வு மனு தொடர்பான விசாரணை எந்த அதிகாரத்தின் அடிப்படையில் என்று குறிப்பாகத் தெரிவிக்காவிட்டாலும், இணை ஆணையர் தனது ஆணையில் சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இணை ஆணையாளர் மேலே குறிப்பிட்டபடி சென்னை உயர் நீதிமன்றத்தின் திட்டவட்டமான ஆணையின்படியும், சட்டப் பிரிவு 28, 27 மற்றும் 63 ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுமே அவர் விசாரணையை நடத்தி ஆணை வெளியிட்டதாகக் கருத வேண்டியுள்ளது. தன் ஆணையில் சட்டப்பிரிவு பற்றி குறிப்பிடாததாலேயே அவரது ஆணை சட்டப்படி தவறானது என்று கருத முடியாது.
  4. சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி, வடலூர் சத்திய ஞான சபையில் நடைபெறும் பூஜை முறைகள் அதன் நிறுவனரான வள்ளலார் பெருமான் ஏற்படுத்திய நடைமுறைப்படிதான் நடத்தப்படுகின்றனவா என்பது பற்றிய விசாரணையை விழுப்புரம், மண்டல இணை ஆணையர், வள்ளலார் தெய்வ நிலைய செயல் அலுவலர் மற்றும் தக்கார் உள்பட தொடர்புடைய அனைவருக்கும் முறைப்படி அறிவிப்பு கொடுத்து நடத்தியுள்ளார். சீராய்வு மனுதாரருக்கு, 13.07.2006ம் தேதிய விசாரணைக்கு ஆஜராகும்படி 06.07.2006ம் தேதிய குறிப்பின் மூலமும், 03.08.2006ம் தேதிய விசாரணைக்கு ஆஜராகும்படி 20.07.2006ம் தேதிய குறிப்பின் மூலமும், 20.08.2006 விசாரணைக்கு ஆஜராகும்படி 10.08.2006ம் தேதிய குறிப்பின் மூலமும், 18.09.2006ம் தேதிய விசாரணைக்கு ஆஜராகும்படி 05.09.2006ம் தேதிய குறிப்பின் மூலமும் இணை ஆணையர் அறிவிப்பு அனுப்பிள்ளார். அதில், 20.07.2006 மன்றும் 10.08.2006ம் தேதிய குறிப்புகள் பெறப்பட்டமைக்கு சீராய்வு மனுதாரர் ஒப்புதலும் அனுப்பியுள்ளார். இறுதியாக 18.09.2006ல் விசாரணைக்கு ஆஜராகி, சீராய்வு மனுதாரர் இணை ஆணையர் முன் ஆவணங்களைத் தாக்கல் செய்து வாக்குமூலமும் கொடுத்துள்ளார். விசாரணை நடைமுறையில் ஏதேனும் மாற்றம் வேண்டும் என்று மனுதாரர் சார்பில் முறையீடு ஏதும் அப்போது செய்யப்படவில்லை. ஆவணங்களைப் பார்க்கும்போது, இணை ஆணையர் தொடர்புடைய அனைவருக்கும் போதிய வாய்ப்பு கொடுத்து, இந்த விசாரணையை முறைப்படி நடத்தியுள்ளதாகவே நான் முடிவுக்கு வருகிறேன்.
  5. மேலும், தற்போது என் முன்பு நடந்து முடிந்துள்ள சீராய்வு மனு மீதான விசாரணையில் சீராய்வு மனுதாரருக்கு எல்லா வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. அவரும் பிரச்சினை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பார்வையிட்டு, தன் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதுரை உட்பட எல்லா ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளார். சீராய்வு மனுதாரரின் வழக்கறிஞர் வாதங்களும் முழுமையாகக் கேட்கப்பட்டுள்ளன. இணை ஆணையாளர் நடத்திய விசாரணை சட்டபூர்வமானது தான் என்று நான் குறிப்பிட்டுள்ள நிலையில், மேலே உள்ளவற்றையும் கருத்தில் கொண்டு, வழக்குப் பிரச்சினையின் நியாயங்கள் பற்றிய ஆய்வுக்கு செல்வது பொருத்தமானது என்று கருதுகிறேன்.
  6. வள்ளலார் பெருமான், தான் நிறுவிய சத்திய ஞான சபையை ஒரு சிவன் கோவிலாகக் கருதி, சைவ ஆகமப்படியான வழிபாட்டு முறையை தான் பின்பற்றி வந்தார் என்றும், அத்தகைய வழிபாட்டு முறையை திரு. சபாபதி சிவாச்சாரியார் முதல் தம் முன்னோர்கள் தான் பூசகர்களாக இருந்து நடத்தி வந்தார்கள் என்றும் சீராய்வு மனுதாரரின் பொதுவான வாதம். இதற்கு முக்கிய சான்றுகளாக அவர் தரப்பில் காட்டப்படுவது பின்வருவனவாகும்.
    1) அவரது கடிதங்களில் ‘உ’ ‘சிவமயம்’ என்றும், ‘சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை’ என்றும் தவறாமல் குறிப்பிட்டு வந்தார்.
    2) சத்திய ஞான சபை சிதம்பரம் சிற்சபையின் மற்றொரு பரிணாமமே தவிர வேறொன்றுமில்லை.
    3) ஆறாம் திருமுறையிலும் சிவனைப் பற்றியும், சிவன் வழிபாட்டைப் பற்றியும், தில்லை சிற்சபையைப் பற்றியும் வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்.
    4) சபாபதி சிவாச்சாரியிடம் வள்ளலார் தம் வாழ்நாளில் ஒப்புவித்த பூசை பொருட்களில் சிவலிங்கமும், துôப, தீப, நிலைக் கண்ணாடியும் அடங்கும்.
    5) சத்திய ஞான சபை துவக்கப்பட்ட காலத்தில் எவ்விதப் பூசை முறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவோ, அதே பூசை முறைகள் தான் இப்பொழுதும் நடத்தப்படுகின்றன.
    மேலே குறிப்பிட்டுள்ள வாதுரைகள் அனைத்துக்கும் எதிர் மனுதாரர் தரப்பில் விரிவான மறுப்புரைகள் தரப்பட்டுள்ளன.
  7. வடலுôர், அருள்மிகு வள்ளலார் தெய்வ நிலையம் என்ற அமைப்பில் ஒரு பகுதியான சத்திய ஞான சபையை வள்ளலார் பெருமான் அவர்கள் உருவாக்கினார் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். இந்த சத்திய ஞான சபையில் வள்ளலார் காலத்திலோ அல்லது அதற்குப் பின்போ சிவ ஆகமத்தின்படிதான் வழிபாடு இருந்தது என்பதை நிரூபிக்க சீராய்வு மனுதாரர் சார்பில் திட்டவட்டமான ஆதாரம் எதுவும் தரப்படவில்லை. சிற்சில வருடங்களில் நடைபெற்ற தைப்பூச விழாக்களின் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள நடராஜர் படமும், அனுக்ஞை போன்ற வாசகங்களும் மட்டுமே சத்திய ஞான சபையில் சைவ ஆகமப்படியான சிவ உருவ வழிபாடு நடந்தமைக்கான சான்றுகள் எனக்கொள்ள இயலாது. மேலும், இந்தப் பத்திரிக்கைகள் சீராய்வு மனுதாரரும், அவரது முன்னோரும் தன்னிச்சையாக அச்சிட்டவையாகும். சைவாகமப்படியான, சிவ உருவ வழிபாட்டு முறைகள் முற்றிலும் வேறானவை. இந்த அழைப்பிதழ்களில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைக் கூட வள்ளலார் நிறுவிய சன்மார்க்க நெறியினர் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர்.
  8. சத்திய ஞான சபையை நிறுவுங் காலத்தில் சிவ ஆகமப்படியான வழிபாட்டினை வள்ளலார் அவர்கள் கடைப்பிடித்திருப்பாரேயானால், சத்திய ஞான சபையை, சைவ ஆகம விதிகளின்படி, ஒரு சைவத் திருக்கோயிலாக அமைத்திருப்பார். சைவ ஆகம விதிகளின்படி ஒரு கோயில் அமைக்கப்பட்டால், அந்த அமைப்பில் கருவறையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். திருக்கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் போன்ற அமைப்புகள் இருக்கும்; மேலும், சிவலிங்கத்திற்கு முன்பாக நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இதுபோன்ற அமைப்பு எதுவும் சத்ய ஞான சபையில் இல்லை. சைவாகமப்படியான எந்த அமைப்புமில்லாமல், முற்றிலும் வித்தியாசமான ஒரு வழிபாட்டுத்தலமாக சத்திய ஞான சபையை வள்ளல் பெருமான் நிறுவியுள்ளார். இப்படி முற்றிலும் மாறுபட்ட அமைப்பாக, சைவாகமங்களுக்கு அப்பாற்பட்டு அமைந்த இவ்வழிபாட்டுத்தலத்தை சைவாகமத்தின்படி அமைக்கப்பட்ட சிவன் கோயிலாகக் கற்பித்து, அங்கு உருவ வழிபாடு, பிரதோஷ பூஜை, அபிஷேகம் முதலியன செய்வதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.
  9. அடுத்து, ஆறாம் திருமுறையை வள்ளலார் தாம் வாழ்ந்த காலத்தில் பதிப்பிக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி, ஆறாம் திருமுறையில் உள்ளவற்றை வள்ளலார் ஏற்கவில்லை என்று சீராய்வு மனுதாரர் கூறுகிறார். பண்டைத் தமிழ் இலக்கியங்களை, அவற்றை எழுதியவர்களே பதிப்பித்து வெளியிட்டதாக வரலாற்றுச் சான்றுகள் இல்லை. மாறாக, அவை கையெழுத்துப் பிரதிகளாகவோ அல்லது ஓலைச் சுவடிகளாகவோ கிடைக்கப்பெற்று, பிற்காலத்தில், தமிழ் அறிஞர்களால் படி எடுக்கப்பட்டு, அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு வெளியிடப்பட்ட பிரதிகளே இன்று நமக்கு காணக் கிடைக்கின்றன. ஒரு புத்தகத்தை எழுதியவரே அதைப் பதிப்பிக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி அந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்களை அவர் ஏற்கவில்லை என்று கூற முடியாது. அதே போல், வள்ளலார் எழுதிய ஆறாம் திருமுறை அவர் காலத்தில் பதிப்பிக்கப்படவில்லை என்பதாலேயே, ஆறாம் திருமுறையில் உள்ள கருத்துக்களை அவர் ஏற்கவில்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.
  10. சத்திய ஞான சபை வழிபாட்டு முறைகளைப் பற்றி வள்ளலார் பெருமான் 18.07.1872 அன்று வெளியிட்ட அறிவிக்கை, ஆறாம் திருமுறையிலுள்ள அருட்பெருஞ்ஜோதி அகவல் முதலிய பாடல்கள், உரைநடைப் பகுதி, கடிதங்கள் ஆகியவற்றை எதிர் மனுதாரர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தொடக்க காலத்தில் பதிப்பிக்கப்பட்ட ஆறாந்திருமுறைகளில் இப்பகுதிகளில் பல இல்லை என்றும், எனவே, இவற்றை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படும் வழிபாட்டு முறைகளை ஏற்கக் கூடாது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. திருவருட்பா ஆறாந் திருமுறை வள்ளலார் ஜோதியாய் மறைந்து சில வருடங்களுக்குப் பின்பு பதிப்பிக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆறாம் திருமுறை பதிப்புகளுள் பழமையானவை என்று சொல்லத்தக்கவை. 1885ஆம் ஆண்டில் திரிசிரபுரம் லோகநாத செட்டியாரால் வெளியிடப்பட்ட பதிப்பும், 1896ஆம் ஆண்டில் பிருங்கிமாநகரம் ராமசாமி முதலியாரால் வெளியிடப்பட்ட பதிப்பும், 1924ஆம் ஆண்டில் ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்ட பதிப்பும், 1931-32ஆம் ஆண்டில் ஏ. பாலகிருஷ்ணப்பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்ட பதிப்பும், 1932ஆம் ஆண்டில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரால் வெளியிடப்பட்ட பதிப்பும் ஆகும். எல்லாப் பதிப்புகளிலும் அருட்பெருஞ்ஜோதி அகவல் உள்ளதையும், இது வள்ளலார் பெருமானின் திருக்கரத்தாலேயே எழுதி அருளப் பெற்றது என்பதையும் மறுக்க முடியாது.
  11. அதேபோல, வள்ளலாரின் உபதேசப் பகுதி, திருமுகப் (கடிதங்கள்) பகுதி முதலியனவும் இந்தப் பழம் பதிப்புகளில் இருந்தன என்பதை திரு. பாலகிருஷ்ணப் பிள்ளை அவர்களின் பதிப்பையும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் பதிப்பையும், பின்னாளில் வள்ளலார் தெய்வ நிலையம் வெளியிட்ட பதிப்பின் முன்னுரையையும் பார்த்தால் தெரிய வரும். உபதேசப் பகுதிகள் அனைத்தும் வள்ளலார் காலத்தில் வாழ்ந்த அவர்தம் சீடர்களும், மற்றவர்களும் அவ்வப்போது வள்ளலார் ஆற்றிய உபதேசங்களைக் கேட்டு எழுதி வைத்த குறிப்புகளாகும். இக்குறிப்புகளில் உள்ள செய்திகளும், வள்ளலார் தம் கைப்பட எழுதிய அருட்பாக்களில் உள்ள செய்திகளும் ஒன்றுக்கொன்று இசைந்து இருத்தலே இவை வள்ளலார் பெருமானாரால் சொல்லப்பட்டவை என்பதற்கு சான்றாகும். திருமுகங்கள் / கட்டளைகள் பெரும்பாலும் வள்ளலார் தம் கைப்பட எழுதியவையாகும். இவையனைத்தும் 1900ஆம் ஆண்டு வாக்கிலேயே வெளிவந்துவிட்டன எனினும், 1920-1930 வாக்கில் முறைப்படி பதிப்பிக்கப்பட்டுள்ளன. தற்காலம் வெளிவரும் பதிப்புகள் அனைத்திலும் இவை அனைத்தும் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் புறக்கணிக்கவோ, இவற்றில் உள்ள செய்திகளை உண்மையில்லை என்று ஒதுக்கவோ முடியாது. அவ்வாறு மறுப்பதற்கான ஆதாரம் எதையும் சீராய்வு மனுதாரர் தரப்பில் வைக்கவில்லை.
  12. ஆறாம் திருமுறையில் உள்ள சில பாடல் பகுதிகளைத் தங்களுக்கு ஆதாரமாக சீராய்வு மனுதாரர் தனது சீராய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, “நினைத்து, நினைத்து” என்ற பாடல் முதலான 28 பாடல்களை, வள்ளலார் சிவ வழிபாட்டில் வைத்திருந்த நம்பிக்கையை மாற்றவில்லை என்பதற்கு ஆதாரமாக சீராய்வு மனுதாரர் சுட்டிக்காட்டி உள்ளார். சீராய்வு மனுதாரர் குறிப்பிடும் பாடல்கள் திருவருட்பா ஆறாந்திருமுறையில் 110. ஞானசரியை என்ற பகுதியில் உள்ளன. இப்பாடல்களில் “சிவன்” என்றும் “சிற்சபை” என்றும் சொற்றொடர்கள் ஆங்காங்கே வருவது சிவாலயத்தையும், சைவ சமயத்தையுந்தான் குறிக்கிறது என்பது சீராய்வு மனுதாரரின் கருத்தாக இருக்கலாம். இவ்விரு சொற்றொடர்களைக் கொண்டே வள்ளலார் சைவாகமப்படியான சிவன் வழிபாட்டை, தான் சமரச சன்மார்க்க சங்கம் நிறுவிய பின்பும் ஏற்றுக் கொண்டார் என வாதிடுவது பொருத்தமற்றது. வள்ளலார் பெருமான் “சிவன்” என்று தமது ஆறாம் திருமுறைப் பாடல்களில் குறிப்பிடுவதெல்லாம் பொதுவான இறைவனைத்தான்; சிற்சபை என்று குறிப்பிடுவது இறைவன் ஒளி நடம்புரியும் சபையைத் தான். இதைத் தன் ஞானத்தால் அறிந்து, அதை வெளிப்படுத்தும் இடமாக சத்திய ஞானசபையை பெருமான் நிறுவியுள்ளார். “கடவுள் பற்றி இதுவரை நாம் கண்டதும், கொண்டதும் எல்லாம் அனைத்தும் நிலையற்றவை; உண்மைக்குப் புறம்பானவை” என்று கூறி, தான் கண்ட உண்மையை இப்பாடல்களில் வள்ளலார் எடுத்துக் கூறுகிறார். இவ்வகையில், ஞானசரியை என்ற தலைப்பில் உள்ள பாடல்களில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் சீராய்வு மனுதாரரின் வாதத்துக்கு எதிராகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, பின்வரும் இரு பாடல்களில் உள்ளவற்றைக் கூறலாம்.
    “கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
    கற்றதெலாம் பொய்யே நீர் களித்ததெலாம் வீணே
    உண்டதெலாம் மலமேயுட் கொண்டதெலாம் குறையே
    உலகியலீர் இதுவரை உண்மையறிந் திலீரே!” – பாடல் 4

“முயன்றுலகில் பயனடையா மூடமத மனைத்தும்
முடுகியழிந் திடவும்ஒரு மோசமில்லாதே
இயன்றஒரு சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும்
எம் இறைவன் எழுந்தருள இது தருணம் கண்டீர்” – பாடல் 17

21) சீராய்வு மனுதாரர் சொல்வது போல, வள்ளலார் அவர்கள் அருளிச் செய்த திருவருட்பா ஆறாவது திருமுறையில் சிவ வழிபாட்டை வலியுறுத்தவில்லை. மாறாக, உருவ வழிபாட்டை விலக்கி, சன்மார்க்க நெறியையே வலியுறுத்தியுள்ளார். ஆறாம் திருமுறையில் உள்ள அவர் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் முதலிய பாடல்களும், அவர் எழுதி வெளியிட்ட பல கடிதங்களும், கட்டளைகளும், அவர் உபதேசம் செய்ததைக் கேட்டு அக்கால அன்பர் எழுதி வைத்த குறிப்புகளும் இதற்கு சான்றாக பெருமளவில் காணக் கிடைக்கின்றன. இவற்றை நாம் ஒதுக்கிவிட முடியாது. உருவ வழிபாட்டிலிருந்து விலகி, ஜோதி வழிபாட்டை வலியுறுத்தியது ஆறாம் திருமுறையில் உள்ள கீழ்க்கண்ட பகுதிகளின் மூலம் தெளிவாய் தெரிய வருகிறது. (1932 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருவருட்பா ஆறாவது திருமுறை – சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு)

அ) வள்ளலார் வெளியிட்ட “அற்புதப் பத்திரிக்கையில்” (பக்கம் 555-557) வள்ளலார் அவர்கள் “எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெருஞ்சுகத்தையும் பெருஞ்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள், தாமே திருவுள்ளம் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய இலட்சியமாகிய உண்மை விளக்கஞ்செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தாலியற்றுவித்து, இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம், அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளை எல்லாம் விளங்க, யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் எனும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி அருட்பெருஞ்சோதியராய் வீற்றிருக்கின்றார்” என்றும், “சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்றும், பூரணம் பொது வெளியில், அறிவாரறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆ) வள்ளலார் அவர்களால் வெளியிடப்பட்ட உண்மைப் பத்திரிக்கையில், (பக்கம் 558) “இப்போது வருகிற நமது கடவுள் இதற்குமுன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாக சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டு கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுள், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார். இதே உண்மைப் பத்திரிகை 1932ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பாலகிருஷ்ணப்பிள்ளை அவர்களின் பதிப்பிலும் ‘சன்மார்க்கப் பெரும்பதி வருகை’ என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இ) வள்ளலார் அவர்களால் வழங்கப்பட்ட உபதேசத்தில் (பக்கம் 572 – 573)இதற்கு மேற்பட நாம் நாமும், பார்த்தும், கேட்டும் இலட்சியம் வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் இலட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால் அவைகளில் ஒன்றிலாவது குழுஉக்குறி யன்னியில் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள்என்றும், “இதுபோல், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும இலட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில்.தெய்வத்தைப் பற்றி குழுஉக்குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். 
இது தவிர வள்ளலாரின் உபதேசப் பகுதிகளிலும் அவர் சைவ, வைணவ நெறிகளிலிருந்து விலகி அன்பை முன்னிலைப் படுத்திய சமரச சன்மார்க்கம் கண்டதை தெளிவுபடுத்தியுள்ளார். 

22. வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவியது 1865 ஆம் ஆண்டிலாகும். அதன் பின்பும் அதன் நடைமுறைகளிலும், பெயரிலும், அமைப்பிலும் பல்வேறு மாற்றங்களை அவர் செய்து வந்திருக்கிறார். சமரச வேத சன்மார்க்க சங்கம் என்று 1865ல் துவக்கியதை பின்னர் 1872ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் எனப் பெயர் மாற்றி அறிவித்துள்ளார். இதே ஆண்டில் தான் அடிகளார் சத்திய ஞான சபையை நிறுவியுள்ளார். சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவிய 1865க்கும், 1872க்கும் இடையில் வள்ளலாரின் பாடற் கருத்துக்களில் அவரது முந்தைய கொள்கை அடிப்படையில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. இம்மாற்றங்கள் அனைத்தும் இறைவன் உருவமற்ற ஜோதிமயமானவர் என்ற நிலையை நோக்கிய படித்தளங்களாகவே அமைந்துள்ளன. தன் வழியைப் பின்பற்றும் சன்மார்க்க நெறி அன்பர்களை, மெதுவாக, கவனமாக அவர் சத்திய ஞான சபை வழிபாட்டு நெறிமுறைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். சரியான ஒரு கட்டத்தில் சத்திய ஞான சபையினை நிறுவி அங்கு முற்றிலும் உருவ வழிபாடு இல்லாத, ஜோதி வழிபாட்டைத் துவக்கியிருக்கிறார். உண்மை நிலை இவ்வாறிருக்க, முற்காலப் பாடல்களில் உள்ள ‘ சிவ’, ‘ சிற்சபை’ என்ற பொதுவான வார்த்தைகளை மட்டும் வைத்து வள்ளலார் சைவாகம ரீதியான உருவ வழிபாட்டில் தன் இறுதிக் காலத்திலும் நிலைத்திருந்தார் எனக் கூறுவது வியப்புக்குரியது.

  1. மனுதாரர் சபாநாத ஒளி சிவாச்சாரியாரின் முன்னோடியான ஆடுர் சபாபதி சிவாச்சாரியாரை வள்ளலார் அவர்கள் சைவ முறைப்படி பூஜைகள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தம்மிடம் அமர்த்தியிருந்தார் என்று சீராய்வு மனுதாரரால் குறிப்பிட்டுள்ளது ஏற்கத்தக்கதாக இல்லை. சபாபதி சிவாச்சாரியார் 1869ல் தான் வள்ளல் பெருமானிடம் வந்து சேர்ந்தார் என்பது வரலாறு. அதற்கு முன்பு சபாபதி சிவாச்சரியார் வள்ளலாருக்குப் பழக்கமானவர் என்றாலும், வள்ளலாரிடம் வந்து நிரந்தரமாகத் தங்கியது 1869 முதல்தான். வள்ளலார் ஒரு மகான். தம் எழுத்துக்கள் அனைத்திலும் ஓர் அதீதப் பணிவை, எளிமையை அவர் காட்டியுள்ளார். அதே பணிவைத்தான் அவர், தான் சபாபதி சிவாச்சாரியாருக்கு 1868ல் எழுதிய கடிதத்திலும் வெளிப்படுத்தியுள்ளார். இக்கடித வாசகங்களைக் கொண்டு, சபாபதி சிவாச்சாரியார் வள்ளலாருக்கும் மேலான மகான் என்றும, அவர் சொன்னபடியெல்லாம் தான் வள்ளலார் நடந்தார் என்றும், அவரை வைத்து சத்திய ஞான சபையில் வள்ளலார் சிவகாமி பூஜையை செய்து வந்தார் என்றும் சொல்ல முயல்வது முற்றிலும் உண்மைக்கு மாறானவை. விசாரணையின்போது சமர்ப்பித்த அறங்காவலர் பட்டியலைப் பார்க்கும் போது, முதலியார், ஐயர், சிவாச்சாரியார், ரெட்டியார், செட்டியார் மற்றும் பல்வேறு வகுப்பினைச் சேர்ந்தவர்கள் சத்திய ஞான சபையின் அறங்காவலர்களாக, பல்வேறு காலங்களில் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அந்த அடிப்படையிலேயே, சீராய்வு மனுதாரரின் முன்னோர்கள் அறங்காவலர் குழுவில் பங்கேற்றிருக்கலாம். இதனால் மட்டுமே சத்ய ஞான சபையில் சிவ வழிபாடு நடைபெற்று வந்தது என்று கூற இயலாது. மனுதாரர் அளித்துள்ள ஆவணங்களில், அவர் சத்திய ஞான சபையில் அர்ச்சகராக முறைப்படி நியமிக்கப்பட்டதற்கோ, பணியாற்றியதற்கோ ஆதாரம் இல்லை.
  2. சத்திய ஞான சபை கட்டடம் கட்டும் பணி 1871ல் துவங்கப்பட்டு, 1872ல் முடிவடைந்து, சத்திய ஞான சபையின் முதல் தைப்பூச விழா 25.1.1872 அன்று நடைபெற்றிருக்கிறது. அதே நாளன்று தான் சபையைப் பற்றிய விளம்பரம் ஒன்றை பெருமான் வெளியிட்டிருக்கிறார். பின்னர் 18.4.1872 அன்று அருட்பெருஞ்ஜோதி அகவலை அடிகளார் அருளினார் “ அருட்பெருஞ்ஜோதி அகவற் பாவானது வள்ளல் பெருமானுக்கு அருட்தரிசனம் உண்டாகும் காலையில் அருளிச் செய்த தென உணரப்பட்டேன்” என்று பெருமானோடு பழகியவர்களுள் ஒருவரான ஆனந்த நாத சண்முக சரணாலய சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். இத்தகு சிறப்பு மிக்க அருட்பெருஞ் ஜோதி அகவலில் “திரை விளக்கம்” என்ற தலைப்பில் அடிகள் தெரிவித்துள்ளவாறுதான் சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் செய்யும் முறையை பெருமான் வகுத்துள்ளார் என்பது தெளிவு.
  3. சத்திய ஞான சபையில் நாள்தோறும் வழிபாடு நடைபெற்று வந்தாலும், பெருமானது கெள்கையின்படி நடைபெறவில்லை எனத் தெரிகிறது. எனவே சபைக்குரிய வழிபாட்டு விதிகளை பெருமான் 18.7.1872 அன்று வகுத்தருளினார் ‘ஞானசபை விளக்க விபவ பத்திரிக்கை’ என்ற அந்த அறிவிக்கையில்தான் பெருமான் சத்திய ஞான சபை வழிபாட்டு விதிமுறைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிக்கைப் பத்திரிக்கை வள்ளலாரால் வெளியிடப்பட்டதன்று என்பது சீராய்வு மனுதாரரின் வாதம். இதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் எதையும் அவர் அளிக்கவில்லை. இந்த விளம்பரம் ‘ஞானசபை விளக்க விபவ பத்திரிக்கை’ என்று பாலகிருஷ்ணபிள்ளை பதிப்பிலும் (1932),சமரச சுத்த சன்மார்க்க சங்கப் பதிப்பிலும் (1932) வந்துள்ளது. இந்தப் பத்திரிகை பற்றி பாலகிருஷ்ணப்பிள்ளை ‘ஞானசபைக் கதவை நேர்ந்த காலத்தில் திறந்து, நேர்ந்தவர்களுக்குக் காட்டி மரியாதையில்லாது இருந்ததைப் பற்றி ஸ்ரீ சங்க பிரபுக்களில் ஒருவராகிய உத்தரவாதமுடைய ஆறுமுக முதலியார் சன்னிதானத்தில் விண்ணப்பித்துக் கொண்டதற்கு வெளியான பத்திரிகை என்பது ஒர் பிரததியில் கண்ட இத் தெய்வத் திருமுக வரலாறாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார். வள்ளலார் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த பெரியோர்களின் கூற்றுக்கள், அறுவகைச் சமய நெறிகளினின்று விலகி, சாதி பேதமற்ற சமரச சத்திய சன்மார்க்க சங்கத்தை வள்ளலார் நிறுவியதன் நோக்கம், முதலிய அனைத்தையும் நோக்கினால் 18.7.1872 நாளிட்ட, அவர் கைப்பட எழுதிய சபை நடைமுறை விதிகள் அறிவிக்கை உண்மையானதே என்பது புலனாகும். வள்ளல் பெருமானாரின் முதல் ஐந்து திருமுறைகளும் சமயத்துக்குட்பட்ட சொருப தோத்திரமாயும், ஆறாவது திருமுறை சமயாதீத பரவஸ்துவின் இலக்கணத்தை உள்ளடக்கி நிற்கும் தோத்திரப் பாக்களாயும் அமைந்த நிலையில், அதிலும் ஆகம சாஸ்திர முறைப்படி சத்ய ஞான சபை அமைக்கப்படாத நிலையில், அங்கு ஆகம சாஸ்திரப்படி பூஜைகள் நடைபெற்று வந்துள்ளன என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.
  4. சீராய்வு மனுதாரர் தன் மனுவில், திரு. சபாபதி சிவாச்சாரியாரிடம், வள்ளல் பெருமான் ஒரு நிலைக் கண்ணாடியையும், தீபத்தையும் கொடுத்து,தற்போது நடைபெற்று வருவது போன்ற பூஜையைத் தொடங்கி வைத்தார் எனக் குறிப்பிட்டு, அதற்கு சான்றாக வள்ளல் பெருமான் தம் கைப்பட எழுதிக் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். இதையே விழுப்புரம் இணை ஆணையர் முன்பு விசாரணையின் போதும் ஒரு சான்றாவணமாக தாக்கல் செய்துள்ளார். இந்த சான்றாவணத்தில் வருடம், தேதி, நாள் , கிழமை முதலிய எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், இதில் உள்ள திரு. சபாபதி விசாச்சாரியாரின் கையொப்பமும், வள்ளலாரின் கையொப்பமும், அவர்களுடையது தான் என்பது நிரூபிக்கப்படவில்லை. இதனால் ஆவணத்தின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்படவில்லை என்றும் விழுப்புரம் இணை ஆணையர் தன் ஆணையில் குறிப்பிட்டுள்ளார். விழுப்புரம் இணை ஆணையரது உத்தரவில் இந்த ஆவணம் குறித்து குறிப்பிட்டுள்ள கருத்துக்களை மறுப்பதற்கு ஆதாரம் எதையும் சீராய்வு மனுதாரர் தற்போதும் தாக்கல் செய்யவில்லை. மேலும், அவர் தாக்கல் செய்துள்ள சான்றாவணத்தில் ஸ்படிக லிங்கமும் இடம் பெறவில்லை அதில் உள்ள இராமலிங்க அடிகளாரின் கையொப்பமும் மற்ற ஆவணங்களோடு ஒப்பிடும்போது மாறுபாடுகிறது.
  5. சீராய்வு மனுதாரர் குறிப்பிடும் உ. “ சிவமயம்” சொற்கள் சிவ வழிபாட்டை வலியுறுத்தும் என்பதை எதிர் மனுதாரர்கள் மறுத்துள்ளனர். மேலும் மேற்கண்ட வார்த்தைகளை வள்ளலார் சித்தி பெற்ற பின்பு பயன்படுத்தவில்லை என்றும் எதிர் மனுதாரர்கள் வாதிக்கின்றனர். மேலும், மேற்கண்ட சொற்களைப் பயன்படுத்துவதனாலேயே சத்ய ஞான சபையில் சிவ வழிபாட்டு முறை உள்ளதாகக் கூற இயலாது. ஏற்கனவே தெரிவித்தபடி சை ஆகமப்படி உருவாக்கப்பட்ட கோயில் வேறு சத்திய ஞான சபை முற்றிலும் வேறுபாடான அமைப்புள்ளது.
  6. மேலும், விழுப்புரம் இணை ஆணையாளர் தமது உத்தரவின் மூலம், வள்ளலார் தெய்வ நிலையங்களை இந்து சமய அறநிலைய சட்டத்தின் ஆளுகையிலிருந்து எடுத்துவிட்டதாகவும் சீராய்வு மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இதனை எந்த அடிப்படையில் மனுதாரர் குறிப்பிடுகின்றார் எனத் தெரியவில்லை. மனுதாரர் உருவ வழிபாடு உள்ள நிறுவனங்களே இந்து சமய அறநிலைய சட்டத்தின் கீழ் வரும் என்று அவர் கருதி அதன் அடிப்படையில் மேற்கண்டவாறு கூறியிருக்கலாமெனத் தெரிகிறது. சட்டப்பிரிவு 6 (20) ல் திருக்கோயில் என்ற சொல் வரையறுக்கப்பட்டுள்ளது. அதில், திருக்கோயில் என்பது “பொது மத வழிபாடு’’ நடைபெறும் இடம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உருவ வழிபாடு கட்டாயமாக்கப்படவில்லை. உருவ வழிபாடு இல்லாவிட்டாலும், பொது வழிபாடு இருக்குமேயாயின், அந்த வழிபாட்டுத்தலம் இந்து சமய அறநிலைய சட்டத்தின் கீழ் வருமென உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவாக்கியுள்ளது. இதனடிப்படையில் தான் வள்ளலார் தெய்வ நிலையங்களை இந்து சமய அறநிலையத்துறை சட்டத்துக்குட்படுத்தி இந்து சமய அறநிலைய வாரியம் தன் 12.2.1935 நாளிட்ட ஆணையில் அறிவித்துள்ளதும், இதன் நிர்வாகத்துக்கு 28.9.1953 அன்று திருத்தப்பட்ட திட்டம் வகுக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, சீராய்வு மனுதாரரின் வாதம் ஏற்கத்தக்கதல்ல.
  7. வள்ளலார் பெருமானுடன் நெருங்கிப் பழகி அவரது முதல் சீடனாக விளங்கிய தொழுதாவூர் வேலாயுத முதலியார் அவர்கள் 1882 ஆம் ஆண்டு பட்ங்ர்ள்ர்ல்ட்ண்ஸ்ரீஹப் நர்ஸ்ரீண்ங்ற்ஹ் யாருக்கு அளித்த வாக்குமூலத்தில் வள்ளலாரைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
    அவர் சாதி வேற்றுமையை கண்டித்துப் பேசியதால் அனைவரது பெரும் பாராட்டிற்கு உரியவராக இல்லை. ஆயினும், எல்லா சாதியாரும் பெருந்திரளாக அவரை சூழ்ந்திருந்தனர்.

    “ இயற்கைக்கு மேம்பட்ட எதையும் அவர் ஒப்புவிப்பதில்லை. தனது மார்க்கம் அறிவியலை அடிப்படையாகக் கொண்டது என்று இடையறாது வற்புறுத்தியுள்ளார்.” அவர் போதித்தவற்றுள் சில பின்வருமாறு …………….
    5, மக்களால் ‘ கடவுள்’ என்று சொல்லப்படுவது உண்மையில் எல்லா உயிர்களிடத்தும் காட்டும் அன்பே, இவ்வன்பே இயற்கை முழுவதையும் ஒளியாக இயங்கச் செய்கிறது. 
    6. மக்கள் தமக்குள்ளே மறைந்து கிடக்கும் தெய்வீக சக்தியை உணர்ந்து கைவரப்பெற்றால், பூமியின் ஈர்ப்பாற்றல் முதலிய இயற்கை நியதிகளையும் மாற்றும் அரிய சக்திகளையும் பெறக் கூடும்.

  8. இராமலிங்க அடிகளார் 19 ஆம் நூற்றாண்டில் அவதரித்த ஒரு மிகப் பெரிய ஞானி ஆவார். அவர் புத்தருக்கு அடுத்தபடியாக சமயத்துக்கென்றே ஒரு சங்கத்தை நிறுவிய தகைமையாளர். சாதி, பேதமின்றி, ஏற்றத்தாழ்வு, இல்லாத எல்லா உயிர்களிடத்தும் அன்பை முன்னிலைப்படுத்திய ஒரு கொள்கையை அடிப்படையாக வைத்து அதையே தனது அமைப்பாக அறிவித்தார். வள்ளல் பெருமான் கடந்து வந்த ஞானத் தேடல் எனும் பாதை மிக நீண்டதாகும். இப்பாதையின் ஒவ்வொரு கட்டமும் இறைவனை அடைய விரும்பும் மனிதனின் குறிப்பிட்ட நிலையைப் பிரதிபலிப்பதாகும். சத்ய ஞான சபையை நிறுவும் காலம் வரை வள்ளலார் சைவ சமயத்தின் இயல்பான கொள்கையை மக்களுக்கு எடுத்தோதி வந்தார். உருவ வழிபாட்டைக் கடைப்பிடிப்பதால் சாதி, இன பேதத்தை அகற்ற முடியவில்லை என்ற காரணத்தால். பரிபக்குவம் பெற்ற சமரச சன்மார்க்கியர்க்கென ஜோதி வழிபாட்டை எடுத்துக் காட்டி அதற்கென சத்திய ஞான சபையை வள்ளல் பெருமான் நிறுவினார். அருட்பெருஞ்ஜோதி அகவல் வள்ளலாராலேயே எழுதப்பட்டது. இதில் வரும்

    “ சமயம் கடந்த தனிப் பொருள் வெளியாய்
    அமையும் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி ”
    “ சாதியும் மதமும் சமயமும் காணா 
    ஆதி அநாதியாய் அருட்பெருஞ்ஜோதி ”
    “ முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும் 
    ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி ”
    சாதியும் மதமும் சமயமும் பொய் என 
    ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி ”
    சமயம் குல முதல் சார்பெலாம் விடுத்த 
    அமயன் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி”
    வேதமும் ஆகம விரிவும் பரம்பர 
    நாதமும் கடந்த ஞான மெய்க் கனலே ”
    – எனும் பாக்களும். 
    – அனுபவ மாலையில் வரும் 
    சாதி சமயங்களிலே வீதிபல வகுத்த 
    சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்றெனவே 
    ஆதியில் என் உளத்திருந்தே அறிவித்தபடியே 
    அன்பால் இன்றுண்மை நிலை அறிவிக்க அறிந்தேன்”
    என்பதும் இங்கு நோக்கத்தக்கவை.

  9. அருட்பெருஞ் ஜோதி தரிசனம் கிடைத்த பின்பு அருட்பெருட் ஜோதி ஆண்டவர் வெளிப்படுத்திய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தும் வண்ணம் சத்ய ஞான சபையை நிறுவினார். சத்திய ஞான சபை எந்த சைவ ஆகமத்திலும் உட்படாத, முற்றிலும் தனித்துவம் வாய்ந்த ஒரு வழிபாட்டு மையமாக இருக்க வேண்டுமென்று அவர் விரும்பி அதை அவ்வாறே படைத்தார். அதற்கென சிறப்பு வழிபாட்டு முறைகளையும் வகுத்துக் கொடுத்தார். ஆறாம் திருமுறையில உள்ள கருத்துக்கள் அனைத்தும் உருவ வழிபாட்டை வலியுறுத்துபவனவாகும். ஆறாம் திருமுறையானது வள்ளலார் வாக்கின்படி சமரச சுத்த சன்மார்க்கம் பெற வேண்டிய சாதகர்களுக்கே உரித்தனவாகும். இந்த ஆறாவது திருமுறையைக் கையாள்பவர்கள் வள்ளற் பொருமான் காட்டியுள்ளபடி புனிதமுறும் சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பட்டு உரிமையைப் பெற்று, ஜீவ காருண்யத்தையே தெய்வ வழிபாடாகக் கொண்ட சமரச நன்னிலை எய்திய பக்குவ நிலை உடையவர்களேயாவார். இவையெல்லாம் வரலாற்றுச் செய்திகள், இவ்வரலாற்று உண்மைகளை சீராய்வு மனுதாரர் மறைக்க முயல்வது வள்ளலார் பெருமானுக்கு அவர் செய்யும் நன்றியாகாது.
  10. எனவே, வள்ளலார் பெருமான் அருளிச் ùன்ற 18.7.1872 ல் ஏற்படுத்தப்பட்ட சபை வழிபாட்டு விதியில் சொல்லியபடி அதாவது ஜோதி தீபம் தகரக் கண்ணாடியில்தான் காட்ட வேண்டும் என்றும், எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி காட்ட வேண்டும் என்றும், ஜோதி தீபம் காட்டும் போது, மக்கள் அமைதியாக நின்று சத்தம் செய்யாமல், அருட்பெருஞ்ஜோதி தாரக மந்திரத்தை ஒதவேண்டும் என்றும், உபதேசங்களில் வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்றும், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். என்றும் வள்ளலார் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி இணை ஆணையர், பிறப்பித்துள்ள 18.9.2006 நாளிட்ட உத்தரவு சட்டப்படியும், உண்மையின் அடிப்படையிலும் சரியானதே என்றும்., அதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் உத்தரவிடப்படுகிறது. சத்திய ஞான சபை வள்ளலாரால் உருவாக்கப்பட்டது. அவர் வகுத்த சட்டதிட்ட நெறிமுறைகளின்படிதான் இந்த சபை நடத்தப்படவேண்டும். சத்திய ஞான சபை உள்ளிட்ட வள்ளலார் தெய்வநிலையங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சமய நிறுவனமாகும். இதன் நிர்வாகத்தையும், பூசை முறைகளையும் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இதன் அறங்காவலர்களையும், செயல் அலுவலரையுமே சேரும். சத்திய ஞான சபையில் மேலே தெரிவித்தபடி வள்ளலார் வகுத்து 18.7.1872 அன்று அறிவித்த வழிபாட்டு முறைகள் படிதான் இங்கு இனி வழிபாடுகள் நடைபெறவேண்டும். இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அறங்காவலர் குழு மற்றும் செயல் அலுவலரின் தலையாய கடமையாகும். இந்நிலையில் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்து ஆணையிடப்படுகின்றன.

ஓம் த. பிச்சாண்டி, 
சிறப்பு ஆணையர் மற்றும் ஆணையர் . 
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை
சென்னை

(என்னால் சுருக்கெழுத்தருக்கு பகரப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது).

unmai

Channai,Tamilnadu,India