Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cm-answers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6114
மரணமில்லா பெருவாழ்வு பெற்றவள்ளலார் இப்பொழுது எங்கே??? வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் ??? – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
December 21, 2024
tamil katturai APJ arul

மரணமில்லா பெருவாழ்வு பெற்றவள்ளலார் இப்பொழுது எங்கே??? வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் ???

மரணமில்லா பெருவாழ்வு பெற்றவள்ளலார் இப்பொழுது எங்கே??? வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் ???   

தைப்பூசம் 2017 ல் திருமதி ஏபிஜெ அருள் @ இராமலெட்சுமி வெளியிட்ட கட்டுரை;

  மதிப்பிற்குரிய பெரியவர்கள், சான்றோர்கள் அன்பிற்குரிய சகோதர சகோதரிகள், மற்றும் அனைவருக்கும் எனது மற்றும் மதுரை கருணை சபை சாலை சார்பாக வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் –

  திருவருட்பிரகாச வள்ளலார், இடைவிடாது நல்ல விசாரணை செய்து, உண்மை கடவுளை கண்டு, அருள் பெற்று, “மரணமில்லா பெருவாழ்வு” பெற்றார்கள் – தான் பெற்ற இந்த பேரின்பவாழ்வை எல்லோரும் பெறும் பொருட்டு ஒரு மார்க்கத்தை நிறுவினார்கள் – அந்த மார்க்கத்தின் பெயர் “சுத்த சன்மார்க்கம்” – என் மார்க்கம் இறப்பையொழிக்கும் மார்க்கம் – என் மார்க்கத்தில் “சாகா கல்வியை” தவிர வேறு ஒன்றுமில்லை – சாகாதவனே சுத்த சன்மார்க்கி என்கிறார் நம் வள்ளலார் – 

இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும் – அப்படித்தானே – 

எந்த உண்மை எல்லோருக்கும் தெரியும்? சொல்லுங்கள் –

  • ஆண்டவரை ஜோதி சொரூபமாக வள்ளலார் தரிசித்தார்கள்
  • நமது வள்ளலார் மரணமில்லா பெருவாழ்வு பெற்றார்கள் 
  • கடவுளின் அருளால் அவர்தம் தேகம் “ஒளிவடிவமாக” மாறியது 

அன்பர்களே !

வள்ளலார் தனக்கு ஒளி வடிவம் கிடைத்த பின்பும், நம்மோடு நம் பார்வையில் தெரியும் படியாக இரண்டரை வருட காலமாக இங்கு இருந்து வந்தார்கள் – எதற்காக?

தனக்கு கிடைத்த இந்த பேரின்ப பெருவாழ்வு, எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையில் தெரிவிப்பதற்காகவே – தான் சென்ற வழியை மற்றும் கடைப்பிடித்த வழிபாட்டை, அப்படியே உலகத்தார்க்கு உள்ளது படியாக உரைத்தார்கள் – 

ஆனால் நடந்தது என்ன? இதோ வள்ளலார் அவர்களே சொல்கிறார்கள் கேளுங்கள் –

 “உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை”

எப்படி நம் முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்?

ஏன் அவர்களை சொல்வானேன்? 

இன்று நாமும் வள்ளலார் சொல்ல வந்த உண்மையை தெரிந்துக் கொண்டோமா?

இல்லை என்பதே உண்மை- தெரிந்து கொண்டியிருந்தால் நமக்கு ஏது அவத்தைகள் வரும்? பிணி, மூப்பு நாம் பெற்றுக் கொண்டியிருக்கிறோம் –

இன்று நான் தெரிந்து கொள்ள ஆசை கொண்டுள்ளேன் – நீங்கள்?

நாம் கண்டிப்பாக நம் வள்ளலார் சொன்ன உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? பதில் சொல்லுங்கள் –

மரணத்தை தவிர்த்து கொண்ட நம் வள்ளலார் இப்போது எங்கே?  திருவருட்பிரகாச வள்ளலாரை இப்பொழுது இங்கே, நீங்கள் காண ஆசை கொண்டு உள்ளீர்களா? இல்லையா? 

ஆம் என ஆசை உள்ளவர்கள், சற்று நிமிந்து உட்காருங்கள் –

திருமந்திரத்தை சொல்லி நம் வள்ளலாரை அழைப்போம் –

அருட்பெருஞ்ஜோதி    அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி    அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி

திருவருட்பிரகாச வள்ளலாரே ! எங்கள் ஆசானே !

உண்மை கடவுளின் சொரூபத்தை கண்ட சுத்த ஞானியே !

ஆண்டவரின் அருளை பெற்ற வள்ளலாரே! 

மரணத்தை தவிர்த்து கொண்ட சுத்த சன்மார்க்கியே !

நீங்கள் இன்று வெளிப்பட வேண்டும் – இது சத்தியம் – இது சத்தியம் –உங்களை காண ஆசை உள்ளவர்களாக உள்ளோம் – 

நீங்கள் சொல்லும் உண்மையை தெரிந்து கொள்ள தயாராக உள்ளோம் – இது உண்மை – 

ஆண்டவர் உங்களுக்கு உரைத்த அந்த நான்கு மரபுகளை தெரிந்து கொள்ள ஆசை உள்ளவர்களாக உள்ளோம் –

எங்கள் அய்யாவே ! எங்கள் ஆசானே ! எங்களை மன்னியுங்கள் – 

இதுகாறும் வீண்காலம் கழித்து கொண்டியிருந்த எங்களை, மன்னித்து, உண்மை கடவுளின் உண்மை குறித்து எங்களுக்கு அறிவியுங்கள் – 

இதோ இடைவிடாது நீங்கள் சொல்லிய வண்ணம் எங்கள் அறிவு ஒழுக்கம் ஒத்தவர்களுடன் நல்ல விசாரணைக்கு தயாராகி விட்டோம் – திருவருட்பிரகாச வள்ளலாரே !

எங்களுடனிருந்து, எங்களுக்கு சத்திய அறிவு வெளிப்பட உதவிட வேணுமாய் பிரார்த்திக்கின்றோம் –

அருட்பெருஞ்ஜோதி    அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி

அன்பர்களே ! 

உண்மை நோக்கி நல்ல விசாரணை செய்வோம் –

உண்மை கடவுளின் சொரூபத்தை கண்ட நம் வள்ளலார்க்கு இன்பமும், வியப்பும் ஏற்பட்டது- 

 “இன்பம்” என்பது; கடவுளை கண்டது

 “வியப்பு” எதனால் ஏற்பட்டது ? 

 இப்போது, தான் கண்டு கொண்டியிருக்கும் கடவுள் 

 “அருட்பெருஞ்ஜோதியாகிய தனிப்பெருங்கருணை கடவுள்” இதுவரை உலகில் வெளிப்பட்டிருந்த சமய, மத, மார்க்கங்களில் சொல்லப்பட்டியிருக்கவில்லை – எனபதே வள்ளலாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி – 

அன்பர்களே, இது குறித்து 12-04-1871 ல் ஒரு கடிதத்தில் அறிவித்துள்ளார் வள்ளலார் – 

அன்பர்களே ! நாம் இன்று இப்பொழுதே வள்ளலாரை காண வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது “ஒன்றே ஒன்று” தான் 

அது அவர் சொன்ன உண்மையை

தெரிந்து, அறிந்து, அனுபவிக்க வேண்டும் –

அவர் கண்ட கடவுளை மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும் 

வள்ளலார் சொன்னபடி வழிபாடு செய்ய வேண்டும் 

நமக்கு சாதனம் ”கருணை” மட்டுமே !

அன்பர்களே !

– இங்கு இருக்கும் நம் எல்லோரிடமும் கருணை உள்ளது-

– கருணை ஒன்றையே இதுநாள் வரை கொண்டு   பிரார்த்திக்கிறோம்- அப்படிதானே !

ஆனால், வள்ளலாரையோ ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே ? 

அது ஏன்?

அதற்கு காரணம் என்ன தெரியுமா அன்பர்களே !

நம்மிடம் கருணை உள்ளது – ஆனால்;

நம் கருணை விருத்தியாகமலே உள்ளதை முதலில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும் –

 அதற்கு என்ன காரணம் ?

அக்கருணை நம்மிடம் விருத்தியாகமல் தடை செய்வது நம்மிடம் உள்ள “ஆசாரங்களே” காரணம் என்கிறார் வள்ளலார்வள்ளலார் நமக்கு சுட்டி காட்டியுள்ள ஆசாரங்கள் “13” ஆகும் –

இவையை விட்டொழித்தே ஆக வேண்டும் என்கிறார்கள்-

அன்பர்களே ! உங்களிடம் கேட்கிறேன் –

சத்திய ஞான சபைக்குள் எல்லோரும் உள்ளே சென்று விட முடியாது – உள்ளே புகுதல் வேண்டுமானால் நம்மிடம் என்ன தகுதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? 

 “கொலை புலை தவிர்த்தவர்களாக” இருக்க வேண்டும் என்று வள்ளலார் கட்டளையிட்டுள்ளார்கள் – அப்படிதானே? 

ஆக, நம்மிடம் அடிப்படை தகுதியாக ஜீவகாருண்யம் உள்ளது – ஜீவகாருண்யம் உள்ளவர்களே ஞான சபைக்குள் செல்ல முடியும்-

அன்பர்களே !

உள்ளே சென்ற பிறகு எது குறித்து விசாரணை செய்ய வேண்டும்? அதே ஜீவகாருண்யம் குறித்தா? இல்லை –

ஆண்டவரின் நிலை காணவே நாம் நன்முயற்சி செய்ய வேண்டும் – அதற்கு, “உள்ளழுந்தி, சிந்தித்து, சிந்தித்தலை விசாரிக்க” வேண்டும் என்கிறார் நம் வள்ளலார் – 

இதற்கு பெயர் ”விசார சங்கல்பம்” ஆகும் –

இதுவே, “வள்ளலார் சொல்லிய உண்மை” ஆகும்-

என் மார்க்கம் உண்மையறியும் மார்க்கம் – என் மார்க்கம் அறிவு மார்க்கம் – என் மார்க்கத்தில் அக அனுபவே உண்மை – என்கிறார்கள் –

இப்பொழுது சொல்லுங்கள்;

 “நாம் வள்ளலாரை காண வேண்டுமானால்,

::::::அவர் நம்மிடம் சொல்ல வந்ததை தெரிந்து கொண்டோம் என்று அவரிடம் தெரிவிக்க வேண்டும்::::::

இங்ஙனம் தெரிவிப்பவர்க்கு வள்ளலார் வெளிப்படுவார் 

இது சத்தியம் – இது சத்தியம் – இது சத்தியம் –

மீண்டும் ஒரு முறை வள்ளலார் சொல்லிய உண்மை குறித்து காண்போம் –

ஒன்று;

கருணை விருத்தியாகாமல் செய்யும் ஆசாரங்களாகிய சாதி,குலம்,ஆசிரமம்,லோகம்,தேசம்,கிரியை,சமயம்,மதம்,மரபு, கலாசாரம்,சாதனம்,அந்தாசாரம்,சாஸ்திரம் முதலிய ஆசாரங்கள் நம்மிடமிருந்து ஒழிந்து போக வேண்டும் – 

இரண்டாவது;

ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்ய வேண்டும் –

மூன்றாவது;

அத்தெய்வத்தை நினைந்தும் உணர்ந்தும் நமது குறையை ஊன்றியும் இவ்வண்ணமாக இடைவிடாது விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டும் என்கிற விசார சங்கல்பத்துடன் முயற்சியுடனிருத்தல் வேண்டும்-

  நமது இந்த நன்முயற்சி உண்மையாக தூய்மையாக இருக்குமே யானால் திருவருட்பிரகாச வள்ளலார் நேரில் வந்து நமக்கு துணை புரிவது சத்தியம் – சத்தியம் – சத்தியம் என நம்புதல் வேண்டும் –

நான் “சுத்த சன்மார்க்க நெறி ஒன்றையே” சார்ந்து,

குரோதம் காமத்தை ஞான அறிவினால் தடுத்து கொண்டு, ஆசாரத்தை ஒழித்து தலைவனையே தொழுது கொண்டியிருக்கிறேன்

— என்று நாம் சொல்வோமானால் இன்றே இப்பொழுதே சபை முன்பு அமருங்கள் ஆண்டவர் உண்மை தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்கு துணை புரிய திருஅருட்பிரகாச வள்ளலாரே நீங்கள் வரவேண்டும் என அடம் பிடித்து உட்காருவோம் கண்ணீர் விட்டு நெகிழ்ந்து வேண்டுவோம் – 

இது உண்மையாயின் நான் பெறுவேன் – பெறுகின்றேன் – பெற்றேன் –

என்னை அடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை – பெறுவீர்கள் – பெறுகின்றீர்கள்  – பெற்றீர்கள் –

அஞ்ச வேண்டாம் –

அருட்பெருஞ்ஜோதி    அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி

unmai

Channai,Tamilnadu,India

One thought on “மரணமில்லா பெருவாழ்வு பெற்றவள்ளலார் இப்பொழுது எங்கே??? வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் ???

  • மிக்க நன்று….யானும் இவ்வாறே வள்ளல் பிரானிடம் இறைந்து மரணமில்லா பெருவாழ்வு பெற்றிடுவேன்…நன்றி

Comments are closed.