January 22, 2025
tamil katturai APJ arul

“ கருணை “ பற்றி வள்ளலார் தரும் தனி விளக்கம்- வள்ளலார் தரும் விளக்கங்கள் புதிய மற்றும் தனித்தன்மையுடையது

“ கருணை “ பற்றி வள்ளலார் தரும் தனி விளக்கம்- வள்ளலார் தரும் விளக்கங்கள் புதிய மற்றும் தனித்தன்மையுடையது – ஏபிஜெ அருள்

“வள்ளலார் மார்க்கம் என்றாலே கருணை என எல்லோரும் அறிவோம்ஆனால் கருணைக்கு வள்ளலார் கொடுத்துள்ள விளக்கம் தனிப் பொருளாகும்இதுவரை யாரும் மேற்படியாக விளக்கம் தராததினால் புதியதாகவும் உள்ளதை காணலாம் – 
கருணை என்றால் பொதுவாக நாம் அறிந்திருப்பது; மனிதர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவுதலும், மேலும் உயர்வாக பொருள் கொண்டால்; உலகில் உள்ள எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ளுதலும், அவை துக்கப்படும் போது உருக்கம் கொள்வதும் கருணையாகும்-அப்படித்தானே –
ஆனால் வள்ளலார் கருணைக்கு தரும் விளக்கம் யாதெனில்;
“கருணை” என்பது; எல்லா உயிர்களிடத்தும் தயவும், 
ஆண்டவரிடத்தில் அன்புமே” என்கிறார்கள் –
சுத்த சன்மார்க்கத்தின் சாதனமும் இதுவே-

கருணை யில் முதல் பகுதி; 
எல்லா உயிர்களிடத்தும் தயவும் என உள்ளது எங்ஙனம் உலகில் உள்ள உயிர்களிடத்தும் தயவு காட்ட முடியும்? தயவு, கருணை, அருள் இம்மூன்றும் ஒரு பொருளையே குறிக்கும் என்கிறார் நம் வள்ளலார் – 
என் மார்க்கத்தில் “ஆன்ம அறிவு” கொண்டியிருக்க வேண்டும் என்கிறார்கள்- 
ஆன்ம அறிவு என்றால் என்ன என வள்ளலார் கூறும் போது; ஒரு பொருளினது உண்மையை அறிதல் ஆன்ம அறிவு என்கிறார்கள்

– எனவே உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் கடவுள் சமுகத்தின் அணுக்களே என்ற உண்மையை நாம் முதலில் அறிதல் வேண்டும்இந்த ஆன்ம நேயத்தால் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கின்ற உணர்வை வருவித்து கொண்டாலே போதுமானது- அதன் பின்பு அவரவரின் கருணை விருத்திக்கு ஏற்ப உயிர்களுக்கு உபகாரம் இருக்கும்-

கருணையில் இரண்டாவது பகுதி; 
ஆண்டவரிடத்தில் அன்பு  – எப்படி ஏற்படுத்திக் கொள்ள? அன்பு என்றால் என்ன? அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்ம உருக்கம் – கடவுளின் நிலை குறித்து உள்ளழுந்தி சிந்தித்திக்க தொடங்குவதிலே கடவுளின் அன்பை பெற்று விடலாம் – வள்ளலார் தன் மார்க்கத்தில் கடவுளை எங்ஙனம் அறிய முடியும்? என வியம்பும் போது; ஒழுக்கம் நிரப்பிக்கொண்டு, நினைந்து,உணர்ந்து, நெகிழ்ந்து அன்பு நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் நம்மிடம் என்று ஏற்படுதோ அந்த கணமே கடவுளின் உண்மையை உள்ளத்தில் உணரலாம்- அருள் கிட்டும்- பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் என்கிறார் நம் வள்ளலார்-

இது வரை நான் வீண்காலம் கழித்து விட்டேன்இதோ நான் ஒழுக்கம் நிரப்பி, நல்ல விசாரணை செய்யப் போகிறேன் – எல்லாம் வல்ல என் ஆசான் வள்ளலார் என்னுடன் இருந்து உண்மை கடவுளின் நிலைக் காண உதவிடுவார்கள் – இது சத்தியம் – ஏபிஜெ அருள்-
(“என்னை இந்த ஏறாத நிலை மேல் ஏற்றிவிட்டது கருணையே – அந்த கருணைக்கு ஒருமை வரவேண்டும் – ஒருமையில் தான் கருணை வரும்”- அடுத்து, ஒருமை என்றால் என்ன என வள்ளலார் சொல்லியிருப்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்

 

–நன்றி ஏபிஜெ அருள், மதுரை கருணை சபை-)

unmai

Channai,Tamilnadu,India