புதிய தனி கடவுள் “சுத்த சிவம்”
புதிய தனி கடவுள் “சுத்த சிவம்”
இக்கடவுள் சமய,மத,மார்க்கங்களில் சொல்லப்பட்ட கடவுள் இல்லை –இக்கடவுளை தான் தான் கண்டதாக சொல்லுகிறார் வள்ளலார் –
உலகில் பல சமய,மத,மார்க்கங்களில் பல கடவுள்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளது – அவரவர் நம்பிக்கை கொண்டு வழிப்பட்டு வருகிறார்கள் – சில மார்க்கங்கள் புதியதாக தோன்றினாலும் அதில் சமய, மதங்களில் வெளிப்பட்டுள்ள கடவுளரை தான் சுட்டி காட்டியுள்ளார்கள் –
ஆனால், வள்ளலார் தன் சுத்த சன்மார்க்கத்தில் வருகிறகடவுள் இதற்கு முன் சமய, சாத்திரப் புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல என்கிறார் வள்ளலார் –
உலகில் பல வேறுப்பட்ட கடவுளர்கள், தேவர்கள் சமயங்களில், புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது – ஒரு மார்க்கக் கடவுளரை மற்றொரு மார்க்கத்தார்கள் ஏற்பதில்லை – மேற்படி சமய,மதங்களில் கடவுளரை உருவமாக, அல்லது அருவமாக அல்லது உருஅருவமாக காட்டப்பட்டுள்ளது –
வள்ளலார் தன் வழியில் (மார்க்கத்தில்) கண்ட “உண்மை பொது” கடவுளரைப் பற்றி குறிப்பிடும் போது, கீழ் வருமாறு விள்ளக்குகிறார்கள் :
ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
இதுஅது எனஉரைப் பரிதாய்த்
தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
புத்தமு தருத்திஎன் உளத்தே
அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.
வள்ளலார் குறிப்பிடும் கடவுள் பொதுவாகவும், அறிஞர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகவும் இருப்பதை பாருங்கள் – எது எல்லோராலும் ஒத்து கொள்ளப்படுகிறதோ அதுவே இறைவன் வீற்றியிருக்கும் இடமாகும் என்பதில் என்ன சந்தேகம்?
மேலும் மற்ற மார்க்கங்களில் சொல்லப்பட்டுள்ள ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள், கடவுளர், தேவர்,அடியார், யோகி,ஞானி முதலிய இவர்கள் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி யை தான் கண்டதாக வள்ளலார் சொல்லுகிறார்கள் – இந்த உண்மை கடவுளை கண்டு அருள் பெற்றால் மரணம்,பிணி,மூப்பு,பயம், துன்பம் முதலிய அவத்தைகள் நீங்கும் என்கிறார்கள் – உண்மை கடவுளின் அருள் பெற யாருக்கும் யாதொரு தடையுமில்லை – அஞ்ச வேண்டாம் என்கிறார் வள்ளலார் –
இன்றே அறிந்திடுவோம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தையும் அதில் வருகிற உண்மை கடவுளாகிய் சுத்த சிவத்தையும் –
நன்றி வணக்கம் :::: ஏபிஜெ அருள் ::::::