January 22, 2025
tamil katturai APJ arul

மிகப்பெரிய அற்புதம் நடந்த நாள்

30 January- இன்று மிகப்பெரிய அற்புதம் நடந்த நாள்

1874 ம் ஆண்டு ஜனவரி 30 இரவு 12 மணி

ஆம், திருவருட்பிரகாச வள்ளலார் தான் பெற்ற பேரின்ப பெருவாழ்வில் வாழ சித்தி வளாக திரு அறையில் சென்று திருக்காப்பிட்டு கொண்ட நாள் –
இதோ அன்று வள்ளலார் திருகதவு சென்று காப்பிட்டு கொண்ட இரவில் வெளியிட்ட அறிவிப்பு:
இதை தடைபடாது ஆராதியுங்கள் – இந்த கதவைச் சாத்திவிடப் போகின்றேன் – இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல், நினைந்து நினைந்து” என்னும் தொடக்கமுடைய 28 பாசுர மடங்கிய பாடலிற் கண்டபடி தெய்வபாவணையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் – நானிப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன் – இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் “
மேலும்,
திருக்கதவந் திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் “இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்” என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடையது கடமை.


அன்பர்களே மிகப் பெரிய விசயம் கடந்த 19ம் நூற்றாண்டில் நடந்து உள்ளது – இது குறித்த உண்மையில் நல்ல விசாரணை செய்ய இந்த நாடும் நாமும் முன் வரவில்லை என்பது எவ்வளவு வேதனைக்குரிய விசயம் – ஏன் முக்கியம் கொடுக்கவில்லை என்றால் தான் கண்ட கடவுள் உண்மை உலகில் காணும் சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்ட கடவுளரோ தெய்வமோ இல்லை என்பதினால் ஆன்மிக பெரியவர்கள் இது குறித்து வெளியிட முன் வரவில்லை – அதே போல் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் நாக்கு முட நாக்கு என்று சொன்னதனால் நாத்திகர்களும் இதை வெளிப்படுத்த முன் வரவில்லை – ஆனால் வள்ளலார் நெறி எல்லா சமயங்களும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது என்ற உண்மை வெளிப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை – இதன் உண்மை குறித்து விசாரணை செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும் – நன்றி : அன்புடன் ஏபிஜெ அருள் கருணை சபை –

unmai

Channai,Tamilnadu,India