பேருபதேசம் (தமிழ்) & THE GREAT SERMON (English)
பேருபதேசம் தமிழ் & ஆங்கிலம் — ஐப்பசி 7 (22-October-1873) சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டி பேருபதேசம் ஆற்றிய நாள் பேருபதேசம்ஸ்ரீமுக வருஷம், ஐப்பசி மாதம், 7ஆம் நாள், புதவாரம், பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டினவுடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு. இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண்டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற – பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் – வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது – வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் – அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையிலிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் – இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம். அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையா யிருக்கின்றது இவற்றிற் பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில்: விசார மென்கின்றதற்குப் பொருள்: வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் – இதைவிடக் – கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம். ஆதலால், இவ்வுலகத்தில் வி-சாரமென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதைத் துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது. அவர்கள் பண்ணுகின்றது – துக்கமே விசாரமென்கின்றது – அது தப்பு; அவ்வர்த்தமுமன்று. சார மென்கின்றது துக்கம். விசார மென்கின்றது துக்க நிவர்த்தி. வி உபசர்க்கம். சாரமென்கின்ற துக்கத்தை நிவர்த்தித்தது வி ஆதலால், விசாரமென்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது. ஆதலால் இடைவிடாது நாம் விசார வசத்தராயிருக்க வேண்டியது. மேலும் வி – சாரமென்பது: வி விபத்து; சாரம் நீக்குதல், நடத்தல். ஆதலால் இடைவிடாது நன் முயற்சியின்கண் பயிலுதல் வேண்டும். மேலும், சிலர் “இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?” என்று வினவலாம். ஆம், இஃது – தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுகின்றதுஞ் சத்தியந்தான். ஆனால், முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்: அசுத்தமாயாதிரை சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொருகூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயாதிரை. மேற் பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லக்ஷியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது. இவற்றில் – ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்றபோது, முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்ப்பாகத்திலிருக்கிற அசுத்தமாயை யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார். ஆதலால், அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடியவரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக இருக்கலாமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது. மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும். மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின. ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும். கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். “தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?” என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது. முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் இயல்வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தாலு* முணர்க. மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள். இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம் இதுபோல் வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம் முதலியவைகளில் சொல்லியிருக்கின்ற இலக்கணங்கள் முழுவதும் குற்றமே. அவைகளில் குற்றமே சொல்லியிருக்கின்றார்கள். எவ்வாறெனில்: தொண்ணூறு தொள்ளாயிரம் என்கிற கணிதத்தின் உண்மை நான் சொன்ன பிறகு தெரிந்து கொண்டீர்களல்லவா? இப்படியே ஒன்று இரண்டு முதல் நூறு முதலான இலக்கணங்களுக்கும் உகர இறுதி வருவானேன்? ஒருவாறு சித்தர்கள் காரணப் பெயராக இட்டிருக்கிறார்கள். தொல் – நூறு தொண்ணூறென்றும், தொல் – ஆயிரம் தொள்ளாயிரமென்றும் வழங்குகின்றன. தொல் என்பது ஒன்று குறையத் தொக்கது. தொன்மை தொல்லெனப் பிரிந்தது. வழக்கத்தில் தொள்ளாயிரம் தொண்ணூறு என மருவியது. இதற்குப் பத்திடத்திற்கு ஓரிடம் குறைந்த முன் ஆயிரமென்றும், ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க. இப்படி நான் சொன்னதுபோல் சொன்னால், சிறு குழந்தைகள் கூட அறிந்து கொள்ளும். இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் – அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானேயிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற – திருவருட்பாவில் அடங்கியிருக்கிற – ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்தலாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், “எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, “தேடியதுண்டு நினதுருவுண்மை” என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். “கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக”** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றிவிட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது. மாயையாற் கலங்கி வருந்திய போதும் கருணையும் சிவமே பொருள்எனக் காணும் அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள். என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்; அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட “நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று…” ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திரமல்ல. உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்: எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது நீங்கள் – இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் – சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது – அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன். ஆதலால், நீங்கள் அப்படிச் செய்து கொண்டிருங்கள். சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை. “தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!” என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள். அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் – இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் – இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந்நகம் வளர்தலும் – இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள். இப்படி இடைவிடாது விசாரஞ் செய்து கொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக்குறித்து ஏளனமாக சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லக்ஷியம் செய்யக்கூடாது. இப்படியே “காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் – ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால் – காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா” என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பக்ஷத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? இப்படி விசாரித்துப் பிரபஞ்ச போகத்தின்கண் அலக்ஷியம் தோன்றினால், நிராசை உண்டாம், ஆதலால், சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில், மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும்படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள். இவ்விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. இது முதல் – கொஞ்ச காலம் – சாலைக்குப் போகின்ற வரைக்கும், ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்து கொண்டிருங்கள். மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்…. நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை. இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை. இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை – தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை – எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த – உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. “சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்”* என்னும் பிரமாணத்தால் உணர்க. மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம். இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும். உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃதுஆண்டவர் கட்டளை. எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம்(சித்தி வளாகம், மேட்டுக்குப்பம், வடலூர்). இது ஆண்டவர் கட்டளை. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் பேருபதேசம் முற்றிற்று. THE GREAT SERMON(பேருபதேசம்) SAINT RAMALINGAM.(Revealed on 22-10-1873) This was revealed on 22nd October, 1873 (Tamil month of Aipasi 7th day), Tuesday morning 8a.m. at Mettukkuppam, Siddhivalaaham Thirumaligai,Cuddalore District. (Home of perfection where Vallalar attained Immortal body and made his body invisible and mingled with Arutperunjothi Almighty). After unfurling the Suddha Sanmarkam Flag, (one fourth yellow colour at the top, and three fourth white colour at the bottom). This Maha Upadesa (or) Perupadeasam was given to be noted down by the disciples. “All of you living here are advised not to waste the time in vain, as you had been doing now. Until for some time when it is expected for the outward manifestation of the “Almighty” Arutperunjothi at the salai at Vadalur, you must be continuously involved in good enquiry and inquiry of the soul and God. To know how to do the “VICHAARAM” self inquiry, it is:- What is the nature and conditioned state of our-selves and our soul. And all so, what is the nature of self-existing Almighty God who is mastering and ruling us being seated above all of us. Accordingly, all of you should do “VICHAARAM”, either individually solitarily or collectively, along with amicable friends who are harmonious with or fit to your intelligence or knowledge and disciple, or otherwise, if you can have inquiry with VELAYUTHAM , (His disciple), he will reply upto the maximum standard of a man’s enough understanding. If we can do this kind of ‘VICHAARAM’, the fore most veil of dark green, which obstructs strongly our soul-knowledge without enlightment will get removed and vanish. If that first veil vanishes, all other veils will vanish more quickly and automatically. That Green colours the fundamental colour of black. We should appeal to the “Almighty” ARUTPERUNJOTHI”, with continuous thinking and singing with prayer for the removal of the so called Thick veil and also realizing our short comings and faults combined with our needs, even when we are sitting and relaxing by lying down on bed; and also we should make efforts with Devotion, and Divine love so that the real truth will be revealed to us. This “VICHAARAM”, is of two kinds; 1. Param, the Supremely higher one which is about “ARUTPERUNJOTHI” 2. Aparam, the lower which is related to The World of the Divine, or Param; where as aparam is related to This World, Aparam. Between these two, the ‘VICHARAM”, which is related to this world “IHA – LOHAM”: is not the real inquiry (VICHAARAM). Because, if anyone is involved in VICHAARAM, it should not be considered as standard “VICHAARAM” is VI + CHAARAM, Here this “VI” is prefixed to distinguish and deny the ordinary worldly “VICHAARAM”; Truly, CHAARAM means misery, sorrow. So “VI + CHAARAM” means to remove and renounce the misery and sorrow. Moreover, “VICHAARAM” is revealed only to refer to “para-loka-VICHAARAM” the inquiry about the divine world and divine life. Just as we remove the fungus above the stagnant water of the pond, it is not easy to remove the thick dark green veil of “RAAGA DHUVESA”, the “likes” and ‘dis-likes” which obstructs the vision of our soul knowledge, without the transcendental heat of “VICHAARAM”, ‘VICHAARA ATHI-USHNAM”. This kind of divine causal heat can be realized by the spiritual experience of an adept yogi. This Divine heat is not be known to be created or kindled by any other human efforts. Even more than that “VICHAARAM” exceedingly great heat. ATHI – USHNAM can be created by doing melting prayer, praying with devotional songs, and meditating and thinking about the Divine nature, Divine truth and glory. Only for this ATHI – USHNAM, the Yogi, go and live in forests, mountains and caves, for hundreds and thousands of years and kindle the heat with severe tapas, penance and strict observances and self-control. Besides doing this kind of TAPAS and creating “ATHI – USHNAM” or heat, it is by singing the Divine glory and greatness with prayerful songs and meditating the Almighty God Arutperunjothi, it is possible to create crores and ten crores (millions and billions) times of “ATHI – USHNAM”. How to produce that VICHAARA – ATHI – USHNAM ?. It is as follows: If we can try for one JAAMA or YAAMAM, (three or four hours of duration continuously) involved in Para VICHAARAM (i.e.) Divine inquiry. Without (IHA-VICHAARAM) this worldly enquiry, and also meditating or singing the glory, along with prayer of Devotional songs with melting of the soul and mind, we can attain and achieve whatever we have to attain. And hence in this world, the worldly people would refer to the VICHAARAM as misery and sorrow without knowing or understanding real truth and meaning of VICHAARAM. But we should not consider that kind of meaning. What they mean is that VICHAARAM itself as misery or sorrow, which is wrong, and also it is not the right meaning, ‘CHAARAM’ means, misery and sorrow (DHUKKAM). But “VICHAARAM” means the removal or destruction of sorrow and misery. And hence VI + CHAARAM = removing or driving away, the misery and sorrow. The prefix, “VI”, which had removed the misery and sorrow, (i.e.) CHAARAM so VICHAARAM refer only to PARA – LOKA – VICHAARAM, inquiry of the Divine World. And so we have to be continuously involved in VICHAARAM. Also VI + CHAARAM means “VI” danger or accident and mishappening, CHAARAM means removal or driving away danger and accident. Conclusively we should be trained and inculcated in good efforts continuously in SATH – VICHAARAM. Moreover, somebody may ask: Oh ! This is the best occasion or proper – time for the advent of the Almighty “ARUTPERUNJOTHI”. Why is it necessary to do efforts at this time of the manifestation of God ? Can we attain and achieve whatever we have to achieve ? Yes. This is good that you asked this; it is really True that the Almighty is to manifest. Also it is True that the veil and obscuring screen is going to be removed by Him. It is also true that you will achieve or obtain whatever you have to obtain. But the already mentioned green veil or screen which is connected with RAGA DHUVESA, the likes and dislikes, is existing in two parts. That is as follows: (1) Asuddha Maya veil, which is related to impure kind of Maya. (2) Suddha maya veil, which is related to pure kind of maya or illusion. Among these two one part is at the base on the lower portion; another at the top portion. That which is at the lower is the veil of Asuddha Maya. That which is at the top is veil of Suddha Maya. Among these two, Asuddha Maya veil has the aim, and tendency of enjoying this worldly enjoyment “IHA LOKA PHOGA”, But the suddha Maya veil is related to the achievement and perfect realization of paraloka, the Divine world and life. When the Almighty ARUTPERUNJOTHI manifests, and grants favour by His Omni Grace, he will remove only the Asuddha Maya Veil at the lower part of the ordinary human beings, who had no effort and practice of SATH – VICHAARAM. Therefore it is possible at that time when that lower veil get removed, we will be blessed with purity to become purified persons, but we can not achieve whatever wish and goal of perfection. Moreover we cannot obtain the Divine favours of performing the penta-divine functions (of creation, production, purification, involution and evolution by grace-blessing), along with other siddhis or (supernatural powers of perfection) and also to practice and gain the spiritual experience, ANMA – ANUPAVA. Therefore, we will have to do good efforts and get spiritual upliftment. Also the confusion and loud crying and noisy talks, etc., had emeroad, with the divine, purpose, of preparing training the true, and adherents and devotees to perfection and ripening of soul and also to avoid and remove the sinners and criminals. And so if we can live with continuous effort along with special attention or awareness, both Asuddha Maya Veil at the bottom and suddha Maya veil at the top which is of green colour will be removed at the time of the advent and manifestation of the Almighty God. Asuddha Maya Veil is of dark green colour but the Suddha Maya Veil of golden green colour. When the Suddha Maya Veil of dark green colour had been removed, other following veils will be very quickly removed. You can find and realize the detailed descriptionof these Veils or screen detailed or described in the Arutperunjothi Agaval poem (of 1596 lines). Moreover, when these veil get removed, anyone can perform the divine, penta functions, etc., Super natural deeds. And so, if every one can try with good efforts, it is possible to gain proper and sufficient benefits and profits. Further more, let us not put our belief or faith and goal in the philosophical Art’s and stories such as VEDAS, AHAMAS, PURANAS, ITHIHASA etc. Because, in these books of imaginary arts, only symbolic and hidden Truths are erotic without revealing the real facts, the authors had veiled and obscured the truth, as though somebody is covering with soil and dust (over the death body). Even without revealing with a little atomic measure, they had symbolically represented the micro-cosmic (pindami-Nature superimposed upon the micro-cosem (Andam). For example, the false authors had named and represented the Almighty as “KAILASAPATHI”, ‘VAIKUNTAPATHI’ and ‘SATHYA YOKAATHIPATHI’ and also imaginarily constructed the proper shrine, the vehicle (VAAHANAM, WEAPONS (ARPUTHAM). The inner mould (VADIVAM), the external form “RUPAM” etc., exactly like a human being and even forgetting the Truth, they had expressed the imagination itself as Truth. If anybody enquires, “Does the divine God possess hand and legs similar to a human being ?”. They hesitate and get be wildered without knowing to reply. The later followers, calling or naming themselves as great men, had puff led and bluffed nonsense things by closing their eyes of Truth vision. But the ancient one who had covered and hidden the Para Truth was a great Adept or genius and powerful person. Till now, nobody had discovered and found out what he had veiled and hidden, what he had looked or covered, no one had struck and broken the lock that he had sealed. In the false religions, some occult power (KARMA), Siddhi had been imaginatively promised. If we try perseveringly for ten or eight years for every SIDDHI, it is possible to attain little siddhi. If we put our Goal or Aim for these siddhis, the goal towards the Almighty God, will get deviated away. If the aim of God realisation goes, at last the great profit or benefit will go in vain. Or, otherwise, if anyone tries for a long time, and attains a little siddhi, the great gain or soul benefit will go away. So, let no one put the aim to attain the little siddhi but should aim at the Almighty God only. The evidence for the imaginatory description of above said siddhis: the prose writing ‘PERU VINNAPPAM’ (of Vallalar) and THIRU ARUTPAA – ARUL VILAKKA MAALAI poem which begins as “IYAL VEDHA AAHANAMGAL” and also one should realize the important notes and ideas in them. Like this, the grammatical formulas in “VYAAKARANAS, THOLKAAPIYAM, PAANINEEYAM” etc., are almost false and imperfect. The explanation is (90 ninety, Thonnooru) 900 Nine hundred, THOLLAAYIRAM, which are the numerical names “THOL’ – The real meaning of “Thol” is one digit less than the said 90, 900 also ONDRU (one-1, two-2…) Nooru (hundred) 100…. (999). The last letter ends in ‘U’. This is because the siddhar’s had named the number to end in “U” for some reasons.THOL + NOORU = THONNOORU, 90 = 100 – 10. THOL + AAYIRAM = THOLLAAYIRAM: 900= 1000 – 100. “THOL’ means one digit less than the said. “THONMAI” had been inflected or reduced to “THOL’ (THOL + MAI) = THONMAI. Likewise, we should not put faith in ‘SAIVAM, VAISHNAVISM” etc., religious and VETHAANTHA AND SIDDHAANTHAM ETC. philosophies. Because in them, the Truth had been revealed only partially, and Mystically (secretely, obscuring the Truth but not expressed plainly and perfectly). If we learn and practice these arts, there is not enough time for us. And so, let no one put the aim on the above religions etc., Because we can gain only a little benefit but cannot attain the great life of eternal bliss of soul gain which is natural truth and also realize with active living Because there is no time for us, I stand evidence for this truth. First, in my early life time, I had put my full aim and goal in SAIVA RELIGION with intense devotion, as known or witnessed even by PATTANATHTHU SWAMIGAL VELAYUTHA MUDHALIYAR ETC. and also few others. That Dogmatic faith had gone away (how ?) you will know from my early poems (of Fifth Volume) of ‘THIRU ARUTPAA SONGS’. Why I(Vallalar) had that much attachment and was immersed in that was that I had been a very little knowledge and so-little understanding, but now the Almighty Arutperunjothi had lifted me up above lofty Summit heights. This because I had abandoned every thing or attachments and also if you can leave anything untrue and unwanted things, you can get great gain like me(Deathless life). Had anyone, who had not renounced or sacrificed fully gainedany Profit no but they had only lost what they had got. They had not gained any profit, if anyone assumes that the attachment and aim on the religion had lifted me up. But what is that which had lifted me to this highest place, that the DHAYAVU – (THANIPERUNGARUNAI’ or supreme compassion) ‘the Almighty had revealed that which had to be INFORMED even in my early times”, the reference from my Prose Writings of great Appeals (PERU VINNAPPAM) and also from the songs of grace (THIRUVARUTPA POEMS) beginning from ETHTHEAVARAIYUM NIN SAAYAIYAAI”, I viewed all Gods or Devas as the shadow or similitude of ‘ARUTPERUNJOTHI’ and also in the poem ‘THEDIYATHUNDU NINATHURUVUNMAI’. “That I had searched for the truth of Thy Reality. Moreover, what He had revealed the true and great discipline is “KARUNAIYUM SIVAMEA PORUL ENAK KAANUM KAATCHIYUM PERUGA’ meaning ‘the compassion and the aim of God Almighty, ARUTPERUNJOTHI, is the aim of real matter and goal to be seen as the view point. Only this Gracious compassion had lifted me up. That is DHAYAVU, Compassion. Only this mercy or compassion had uplifted me up, for that compassion “ORUMAI” the oneness or the unity feeling of souls, is necessary. Only when that “ORUMAI” the oneness of unity of souls is realized the compassion will emerge or manifests ‘only when compassion comes, we can go up to great heights. Now my knowledge had transcended above so many millions of universes (ANDAMS), that had resulted from this ‘ONENESS’ of soul fellowship. If anyone who is obstinate, does not come along with my path or does not heed to my words, or obey my advices and instructions,in whatever manner, but behaves rudely. I will try my best with skilful STRATEGEM or by any trick (THANTHIRAM), of 1. அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன் 2. மிரட்டிச் சொல்லுவேன் 3. தெண்டன் விழுந்து சொல்லுவேன் 4. அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன் 5. அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன் 1. saying good or friendly words or speeches; or 2. I will teach or mend with threats or scoldings or challenges (of strict observances of spells) or; 3. I will fall prostratedly at the feet, making entreaties to condescend to my words or I will surrender with obedience and obeisance to get him friendly; or 4. I will try by giving money and other desirable objects, gift articles to bring anybody under my control and favourable co-operation or; 5. atleast I will try my earnest prayer, (appellations, worshipful chantings or singing songs of Divine – Love and compassion). Like wise, I will bring anybody to come to the path of virtue and goodness of compassion and grace. Let all of you also try and pursue, like me, in the same method and manner. Even during the previous night, I had been appealing and soliciting with prayers to the ALMIGHTY ARUTPERUNJOTHI, that without any active presence, even for a second, the people here would not feel at home and live satisfactorily. That is NOT meant exclusively to the people living HERE ONLY, but also to the whole human beings, or groups of people living all over the world. The reason is that I had been appealing to the Lord that all are my brothers and sisters of integral unity of Right of soul love and be loved by compassion, I had been revealing this truth of the universal Right of the Integrity or oneness of soul-love, ‘AANMA NEYA – ORUMAIPPAATTU – URIMAI’. If anyone does not come to the path of discipline and perfection, but behave like mean-minded or petty minded persons with lower intentions (of animal feelings and behaviour), I will try my best as there is little or short time for the manifestation of the Almighty before the sanctum sanctorum of Sathya Dharma – Saalai (Sanctuary of Eternal Service) or in the public way of common preparation and collective evolution, till then let all of you come to accordance to fit with true discipline and also try to pursue and mend others also, to bring into harmonious trend of ourselves or merciful beings, try and through any trick or means of psychological methodology. Let you all try and do like this for some time. I will also pray and appeal to the Lord, for the attainment of soul profits and so all of you also should behave and not according to me. NOT ONLY the religious persons but also the God men VEDANTHA AND SIDDHAANTHA systems of philosophy, who had been proclaiming and calling themselves as great man and great genius or leaders, prattle and babble like religious fanatics are revealing ONLY false rumours and statements leaving the Truth. They are NOT revealing the truth outwardly or explicitly to be understood by clear reasoning. I had been sympathizing with or feeling heavy at heart at those people who, without knowing or realizing the Divine, are circumventing me or coming round in obeisance to me. Considering me as the Divine-embodiment or God head. Oh ! Pity ! I had been fully sympathizing with them that these (our) brothers, not knowing or realizing the Divine are coming round me and accompanying me always. The reason why they had not realized the Divine is that without experiencing the taste of any eatable, the real taste could not be known there will be no wish or liking for any eatable, whose taste had not been known or experienced already. Likewise, until one has the direct experience of Divine, there will be no wish or devotion for the Divine. And hence, let you be involved in doing “SATH VICHAARAM” with the main goal or intention or realizing of knowing the Divine. The methodology of doing SATH – VICHAARAM is as follows: – ‘What is the real position and status of the sun, the moon and the stars in the macrocosmic-universe (ANDAM) ? What is the inner form, outer form and the real nature of them (the son, the moon and the stars). Who are in this physical body, the Microcosmic-form, (PINDAM) ? What is the reason that there is the over growth of hair on the eye-brows, hand-pits etc., What is the factor of reason for the hair, not growing upon the parts of the body like the forehead etc.,? What is the reason for the emanation or germination and their further growth of the nails on the fingers at the legs and hands ? What is the inner form, outer form and the self existent Nature of them ? Likewise, one should enquire about the Micro-cosmic phenomenon (PINDAM). This should be done uninterruptedly and continuously. If we are deeply involved in this and continuously in doing SATH – VICHAARAM, the worldly people would speak ridiculously or criticize about that. To speak ridiculously ill of this (SATH – VICHAARAM), like that is the inner tendency or nature of those people. Because they don’t know the real TRUTH (UNMAI) about this. And hence, let you NOT consider or bother about their criticism (or let you not intently worry about their ridiculous censures). Likewise, if we can inquire about the fact that the Almighty Creator, who had put proper and sufficient holes in the ear-lobes, He could have already put proper and fit holes in the ear and nose, if HE (THE ALMIGHTY) had the wish and will to adore the ears with ear-studs for the males and to adore the nose with nose-rings for the females, then no one would have the acceptance and preparation for adorning the ear with the ear-rings and the nose with diamond-studs etc, If we do self enquiry thus and create carelessness or intention less ness for the worldly enjoyments, the state of desire less ness (NIRAASAI), would be attained. And hence, the fifteenth state of YOGAM IN GNAANAM (Gnaanaththil Yogam) which is among the four kind of steps of divine practice of preparation (SAADHANAM), like i) SARIYAI (divine discipline and observances) ii) KIRIYAI (divine action or divinely deeds of devotion etc., ) iii) YOGAM (Divine union); iv) GNAANAM (Divine Wisdom) Then the third step of Yogam in Gnanam Whereas, i) Gnaana – Sariyai, 13th step. ii) Gnaana – Kiriyai, 14th step. iii) Gnaana – Yogam 15th step. iv) Gnaana – Gnaanam, 16th step. And hence, let you be involved fully in this VICHAARAM or self enquiry. If you could be practicing this Saadhana of Vichaaram, continuously, the Almighty will reveal to you limitedly for the conditioned knowledge). (KANDAMAAHA – கண்டமாக) when the Almighty manifests out (for collective evolution) and again, when you attain the state of ONENESS ofINTEGRITY (ORUMAI) of feeling and realization. He will (surely) manifest fully or unlimitedly (AKANDAMAAHA அகண்டமாக), (without reserve or exemption or exception). And hence, let you be involved peaseveningly in this effort. I had been advising and revealing the TRUTH to you for about 2 ½ (Two and half) years, Further, there will be some “STOPPING” or half of involution for those who will tell or revel to you. Further more, let you NOT think and behave or live as you had been so, in the past till now. (THIS WILL BE THE LAST WORD OR REVELATION (KADAISI VAARTHTHAI) “From NOW ONWARDS”, let you be involved for some time, until the manifestation of the Almighty in the public or common revelation at the DHARMA SALAI (Sanctuary for the external service) in doing SATH – VICHAARAM or self inquiry. Moreover, in the sacred tests or Religious and Religio-philosopher, their so-called authors or authorities had hinted or noted the Divine Truth, as symbolic Representation and also without revealing exoternically or explicitly, they had revealed the partial truth, esoterically or mystically, such as or like this “SIVAAYANAMA” (Salutations to the Lord Siva) combining, with the core formula ‘SIVAAYANAMA” other complex forms (SANGAI) of 1, 2, 3, 4, 5, 6, 8, 10, 13, 15, 16 etc., permutations and combinations of MANTRAS and had put them into practice and it is seen prevailing in the daily practice of the public. The meaning of the Mantras will vary in many measures and interpretations. And hence, our GOAL to be attained is ONLY the (AANMA – LAABAM) Soul-experience or Soul Profit which is the experience or enjoyment of the Divine Bliss (SIVVANUBHAVAM). For all of you living here (with Almighty’s faith), there is no worry or enquiry about (SUVARGA (Heaven) or NARAHA (hell). Those who are concerned about the heaven or hell, will practice so many Saadhana or practices and after attaining little profit or infinitesomel Boddhis (occult or supernatural powers), will get obstructed in their spiritual path and at last,,by divine favour or Divine help of omnnigrace, they will practice the good effort or perseverance of compassionate service (KARUNAI – NAN MUYARCHI) and consequently or ultimately obtain the ultimate perfection of bliss (Siddhi – inbam). This process is very rare and tedious. At his moment, the Almighty ARUTPERUNJOTHI had removed or abolished everything (untruth or non bliss or all miserable manifestations) had been revealing as to me, in order to attain the supreme, soul-bliss, with the favourable help and guide of the primary saadhana, for the ultimate experience or enjoyment of the Divine Bliss (of Eternal Blissful Life). I had already revealed, I am revealing this NOW and I will also reveal in this future out of the sympathetic feeling of the universal Right of the Integrity or Oneness of Soul-love and compassion (AANMA NEAYA ORUMAIPPAATTU URIMAI) this TRUTH, emerging from the soul experience of Truth knowledge (MEYYARIVU), the Truth experience of Truth knowledge and the enjoyment of the soul bliss of (Eternal Blissful Life), so that all of you have to attain like me. without doubt, misconception or confusion or of understanding. The Divine commandment of our Almighty ARUTPERUNJOTHI, is as follows: – “As our FIRST or FOREMOST Saadhana or spiritual practice, is the “KARUNAI” the Discipline of soulful compassion, the Almighty had taken explicitly this Divine Formula (THIRU MANTRA), as the Foremost practice or primary saadhana, as “ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERUNGARUNAIARUTPERUNJOTHI” “Omnigracious Infinite Light, Omnigracious Infinite Light, Unique-Immense-compassion Omnigracious Infinite Light” Mercy (DHAYAVU),compassion (KARUNAI) and omnigrace (ARUL) will reveal or hear the same, and similar meaning, and hence, the soul knowledge with Supreme compassion ITSELF, is the fully perfect and whole Bliss. That is, the Supreme Knowledge with its Supreme Compassion. This is the word – for word meaning of the MAHAMANTRA VAAKYA, the Great sentence of the Greatly Divine – formula. If anyone continuous and got ripened into the spiritual Saadhana of Practice, there is no obstacle for the ultimate enjoyment of the Divine Bliss (INBA – ANUBHAVAM). Let your realize this fact through the evidence of proof of the classical Text: “SANTHATHAMUM VEDAMOZHI, YAATHONRU PATRIN ATHUTHAAN VANTHU MUTRUM” Meaning, whatever VEDA or Truth of knowledge, you take as the word of belief of faith, to be realized, the ultimate GOAL will be attained accordingly. Moreover, the Karma Siddhar (Supernatural persons of divine action, with occult powers), of impure – maaya – nature, had obscured or veiled the Divine – TRUTH, with revealing it explicitly. Till today, these had been not other – Gnaana Siddhar of pure – Maaya (illusion),nature, who were great in experience of Truth knowledge and Bliss. Till now, there had been no prevalence of Suddha-Sanmaarkam, the Absolutely True path of compassion and Eternal Blissful Life. Moreover, even the dead would have got resurrected back to new spiritual life. And hence, NOW, THIS ONLY, IS THE PERIOD OR Duration of SUDDHA SANMAARKAM. ONLY to hear witness to this TRUTH, the external symbol of aanman, a Flag had been unfurled, NOW ONLY. The bare TRUTH of the Flag is that, there is a system of plexus, starting from the navel (umbilicus, NAADI) and terminating at the eye-brow centre. At the fore end of the fore head, there is a membrance hanging within. The base or bottom of that membrance is of white colour, whereas the upper part of it is yellow colour Below this membrance, there is a NERVE, moving up and down in simple Harmonic Motion. This kind of FLAG could be got realized in our soul experience. ONLY to refer to this experience, symbolic colour had been unfurled. Further more, better experience will be revealed for all in our soul knowledge. Even when I start to reveal the TRUTH, as I had been ORDAINED to do so, there is NONE, to understand and realize this fully. As there is the Sanmarka Flag got unfurled externally, all of them will realize the TRUTH. Those who had come earlier with this Mission of Messengers to reveal the TRUTH, had NOT ONLY hidden the truth, but also obscuredit as though throwing mud and soil upon the TRUTH. At this moment, the Almighty had been revealing them, revealing NOW, and will be revealing further. Let all of you perseverinoly pursue, with continuity SATH VICHAARAM Self inquiry, with full vigilance, attention and true knowledge. Necessarily and compulsorily, there should be the discipline of compassion, which is the basic for SATH VICHAARAM. Also, there should ALSO be the general, public and common feeling of the soul Right of sharing with the common Right of Integrity or Oneness of Soul Love. If you can live like this, you will gain all benefits, and gains at the time of the manifestation of the Almighty ARUTPERUNJOTHI. This SHRINE (of Siddhivalaga Thirumaligai – Sanctum Sanctorum) will bestow millions and billions times help and assistance, more than that which could be done by one’s father, mother elder and younger, brothers etc., This is TRUE, TRUE, TRUE as this is the Divine commandment or the ORDAINED DECREE of the Almighty. Arutperunjothi Arutperunjothi Thaniperungarunai Arutperunjothi Karunai Sabai-Salai 34, Poombuhar Nagar North Extn., Uthangudi, Madurai-625 107. Tamil Nadu. India. |