January 22, 2025

சுத்த சன்மார்க்கம்

சுத்த சன்மார்க்கமே சிறந்தது- வள்ளலார்

முன்னுரை :-

அன்பர்களே !

வணக்கம்

இன்றைய உலகில் நாம் எங்ஙனம் வாழ்ந்து கொண்டு வருகிறோம்.

அவை ;

  1. சமய,மத, மார்க்கங்களளைல் பிரிவுப்படுத்தப்பட்டியிருக்கின்றோம். பொதுநோக்கம் இன்றி அவையின்  கட்டுபாட்டு ஆசாரங்களில் பற்று  வைத்துள்ளோம்.
  2. பொருளாதாரநிலையின் அளவுகோலால் உயர்வு தாழ்வு நமக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  3. புலனிச்சையின்அடிப்படையில் நமக்குள் உண்மையாக இல்லாமல் இருக்கின்றோம்.
  4. ஒரேகடவுளின் “ உண்மை” தெரியாமல் திரிபு நிலையில் உள்ளோம்.
  5. வளரும்நாடு என்ற பெயரில் விஞ்ஞான வளர்ச்சி கண்டுபிடிப்புகளில் இயற்கையின் தன்மையில் மாசுபடுத்தி துன்பம் பெற்று வாழ்கிறோம்.
  6. எல்லாஜீவர்களிடத்தும் தயவு செலுத்தாது இருக்கின்றோம்.

ஆக மேற்படியானவையால் நாம் பிரிக்கப்பட்டு , பேதப்படுத்தப்பட்டு,தாழ்வாக்கப்பட்டு,  எதிரியாக்க்பபட்டு மேலும் அவையால் அஞ்ஞானத்தில்அழுந்தியும்,

இயற்கைச் சீற்றத்தால் துன்பபட்டும் , பெருநோயாலும்அல்லல்படுகிறோம்.

எங்ஙனம் இவை தவிர்த்து பேரின்ப வாழ்வு பெறக் கூடியதாக உள்ளது?

அன்பர்களே!

உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களிலும் வள்ளலாரின் தனிநெறி மார்க்கமான சுத்தசன்மார்க்கத்திலும் சொல்லப்பட்டிருக்கும் ஒழுக்கம், ஆசாரம்,

மற்றும் கடவுள் அருள் பெற கூறப்பட்டிருக்கும் வழி ஆகியவற்றை பற்றி

விளக்கத்தினை வள்ளலாரின் உபதேச குறிப்பின்அடிப்படையில்  உள்ளது

உள்ளபடியாக கொண்டு இந்நுலில் அறிவோம்.

கலை அறிவும் அருள் அறிவும்

பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப்பாரம்.சூல்வண்டி  ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிரஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் பெற முடியும்.  அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை, ஒருவன்

அருள் முன்னிடமாகச் சுத்தசிவ (அருட்பெருஞ்ஜோதி அருளால்) நோக்கத்தால்

அறியத் தொடங்கினால்,  ஒருகணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்.

சமய சன்மார்க்கம் அனுபவம்

சன்மார்க்கம் என்பதில் வகை தொகை விரிவு அனந்தம். இதன் தாத்பரியம்      யாதெனில்; சமயசன்மார்க்கத்தின் பொருள் குணத்தினது லட்சியத்தை          அனுசந்தானஞ் செய்வது .குணமென்பது யாது? சத்துவகுணம் . இயற்கைஉண்மை ஏகதேசமான  சத்துவ குணத்தின்சம்பந்தமுடைய மார்க்கமே  சமய சன்மார்க்கம்  சத்துவசம்பந்தமுடைய மார்க்கம்யாதெனில், சத்போதம், சத்கர்மம். சத்சங்கம்,   சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சற்சனம், நற்செய்கை முதலியனவும் சத்துவ சம்பந்தம் உடையன இதனியல் பாவன.கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஆன்ம இயற்கை குணமாகிய ஜீவகாருணியம். இது சத்துவ  குணத்தின் வாச்சியார்த்தம். இவ்வண்ணம்வாச்சியானுபவம் பெற்றுச்சொரூபானு பவமாகிய  சாதனமே சமய சன்மார்க்கம்.

மத சன்மார்க்கம் அனுபவம்

சமயாதீதமாவது மதம். மத சன்மார்க்கத்தின் பொருள் நிர்க்குண லட்சுயஞ்      செய்வது.நிர்க்குணமாவது;  பூர்வகுணமாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம்   பெற்று லட்சியானுபவம்பெறுதல், யாதெனில், சோகம்,  சிவோகம், தத்வமசி,     சிவத்துவமசி என்னும் வாக்கியத்தின்முக்கியானுபவம். அனுபவம் என்பது யாது?. சத்துவகுண நிர்க்குண லட்சியத்திற்குமார்க்கம் நான்கு. எவை எனில் சத்துவ குணத்தின் முதல்  விளைவு  தன்னடிமையாகப்பலரையும் பாவித்தல், இரண்டாவது   புத்திரனாகப் பாவித்தல், மூன்றாவது சிநேகிதனைப்போலப் பாவித்தல், நான்காவது தன்னைப் போலப் பாவித்தல், இதுஜீவ நியாயம்.இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாதல், புத்திரானாதல், சிநேகனாதல,கடவுளேதானாதல், இது சத்துவகுண  லட்சியார்த்தமாகிய மத  சன்மார்க்க முடிவு.

சத்துவகுண விளைவு என்பதற்குப் பொருள் சத்துவகுணத்தின் முக்கிய லட்சியமாகியஎல்லாம்  வல்ல சர்வசித்தியோடு ஞானசித்தியைப் பெறுதல், நெல்லை     விளைத்தான்என்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்த்து       அனுபவிக்கிற பரியந்தம்அடங்கியிருப்பது போல் சன்மார்க்கம் என்பது          சாதாரணம் முதல் அசாதாரணம் ஈறாகஅடங்கிய பொருளெனக் கொள்க. குணநிர்க்குண  வாச்சிய லட்சியார்த்தமாகிய சமயமதத்தின்  அனுபவ மல்லாதது

சுத்தசன்மார்க்கம். இம்மார்க்கத்திற்கு மேற்குறித்தமார்க்கங்கள் 

அல்லாதனவேயன்றி   இல்லாதனவல்ல.

சுத்த சன்மார்க்கந்தான் யாதெனில், சுத்தம் என்பது ஒன்று மல்லாததுசுத்தம் என்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்குப் பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமய மதானுபவங்களைக்  கடந்தது சத்மார்க்கம் என்னும்  பொருட்கு அர்த்தம் நான்கு   வகை அஃது பூர்வாதி உத்தரோத்தர பரியந்தம். இதன் முக்கிய லட்சியம் 

சுத்தசன்மார்க்க அனுபவஸ்தானமாகிய சுத்த சிவ துரியாதீத நிலைபெறில் விளங்கும்.  ஏகதேசத்தில் ஒருவாறுபூர்வம் என்பதற்குப் பொருள்; சிருஷ்டியாதி அனுக்கிரக மீறாகச் செய்யும் பிரமாதி சதாசிவமீறாகவுள்ள பஞ்ச கிருத்திய கர்த்தர்களின் ஒவ்வொரு கிருத்தியத்தின் விரிவு  ஐந்தாகவிரிந்த கர்த்தர் பேதம், இருபத்தைந்தாக  விரிந்த மஹாசதாசிவானந்த அனுபவ காலத்தைஅறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய கால அளவு          எவ்வளவோ அக்கால அளவு சுத்தமகாசதா சிவானுபவத்தைப் பெற்றுச் சுத்த தேகியாயிருப்பது.  சத்தென்பது பரிபாஷை.  அதுஅனந்த தாத்பரியங்களைக்கொண்டு  ஓர் வாக்கிய பதமாய் நின்றது. மார்க்கம் என்பதுயாதெனில், துவாரம், வழி. வழியென்பது  சத்தென்னும் பொருளின் உண்மையைத்தெரிவிக்கிறமார்க்கம்.

ஆதலால். எவ்வகையிலும் உயர்வுடையது பாவனாதீத அதீதம். குணாதீத அதீதம்,லட்சியாதீத  அதீதம் வாச்சியாதீத அதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கம்

மேற்படி மார்க்கத்தின் ஏகதேசம் அடியிற் குறிக்கும் அனுபவங்கள் எக்காலத்தும்

எவ்விடத்தும் எவ்விதத்தும்  எவ்வகைத் தடையும் வாராத சுத்தமாதி ஞானதேக

சித்தியும்,அண்ட பிண்ட தத்துவங்களைச் சுதந்தரத்தில்  நடத்தும் தனிப்பெரும்

வல்லமையும், ஏமரவுப்பிய பிரேதஜீவிதாதி சித்தியும், வஸ்துப் பிரத்யஷனுபவ  சித்தியும் ஆகிய இவற்றைஒருங்கே அடைவது மேற்குறித்து மார்க்கத்தின் முடிவு ஒருவாறு.

சாதகர் – சாத்தியர்

சத் என்னும் சொல் பரிபாஷை என்பதற்குக் குழுஉக் குறியாக இதன் கீழ்வரும் சில மந்திரவாசக  பதவர்ணாதிகளை உணர்க. காரண மாத்திரமாய் விளங்கா நின்ற விந்து நாதமுதலியனவும்,  காரிய காரண மாத்திரமாய்விளங்கா நின்ற அம், அங், சிங், வங், மங்,சிவா, வசி, ஓம் முதலியவும், காரிய மாத்திரமாய் விளங்கா நின்றஹரி, சச்சிதானந்தம்,பரிபூரணம், ஜோதியுட் ஜோதி,  சிவயவசி,சிவயநம, நமசிவய,தத்துவங்கள்நாராயணாயநம, சரவணபவாயநம முதலியவும்,  இவ்வண்ணம் குறித்த பரிபாஷைகளின்உண்மை ஆன்மஅனுபவத்திலும் வகர தகர  வித்தையிலும் விளங்கும்.மேலும், மேற்குறித்த வண்ணம் தத்துவங்களை உபாசித்தும்,அர்ச்சித்தும்,தத்துவாதீதாதீதத்தைத் தியானித்தும், இடையில்      ஜபித்தும், கரணலயமாகச் சமாதிசெய்தும்,தத்துவச் சேட்டைகளை அடக்க      விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும்சாதகர்கள் மேற்குறித்த வண்ணம்  செய்வார்கள். சாத்தியர்கட்கே கேட்டல், சிந்தித்தால்,தெளிதல், நிஷ்டைகூடல் என்னும் நான்கும்  கடந்து அவர்கள் ஆரூடராக நிற்பதால்சாதனமொன்றும் வேண்டுவதில்லை. மேற்படி  சாத்தியர்களே  சுத்ததேகிகள். அவர்கள்அனுபவத்தை விரிக்கில் பெருகும்.

சன்மார்க்க வகைகள்

சன்மார்க்க மென்பது யாது? அது 3 வகைப்படும். சமய சன்மார்க்கம்மத சன்மார்க்கம், சுத்த சன்மார்க்கம்.சமய சன்மார்க்கமாவது சத்துவகுண லட்சியானு சந்தானம் சத்துவகுண  சம்பந்தமுடையமார்க்கமே சமய சன்மார்க்கம் சத்துவ சம்பந்தமுடைய சேர்க்கை யெல்லாம்  சன்மார்க்கம்,அதாவது சத்போதம், சத்கர்மம்,  சத்சங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சத்ஜனம்,சத்செய்கை முதலியவை சத்துவகுண  சம்பந்தமானவையாம், சத்துவகுண இயல்பாவதுகொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம்  இந்திரிய  நிக்கிரம், ஜீவகாருண்ணியம். இதுசத்துவ குணத்தின் வாச்சியார்த்தம்.  இந்த உண்மையைக்கொண்டு சத்துவ குணத்தின்வாச்சியத்தை  லட்சியம்

செய்வதே சமய சன்மார்க்கம்.

சன்மார்க்கம் – சத்மார்க்கம் என்பதற்குப் பொருள் 4 வகை பூர்வம், பூர்வ பூர்வம், உத்தரம்,

உத்தரோத்தரம்,ஆதலால் இதன் முக்கிய லட்சியம் இனிச் சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும்  பூர்வம்என்பதற்குத்தாத்பரியம் ஒருவாறு சிருஷ்டி ஸ்திதி, சம்மாரம், திரோபவம், அனுக்கிரஹம்  எனும் பஞ்சகிருத்தி யங்களுக்குக்  கர்த்தாவாக

வழங்கி வருகின்ற பிரமாவிஷ்ணு ருத்திரன்மகேசுரன் சதாசிவ மென்னும்

தத்துவங்களில்,சிருஷ்டியில் சிருஷ்டி, ஸ்திதி, மேற்படி சம்மாரம், சிருஷ்டியில் திரோபவம்  மேற்படி அனுக்கிரஹம் இதுபோல் 5 ஆக விரிந்த தத்துவங்கள் 25.

இந்த இருபத்தைந்தையும் அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய காலம்

எவ்வளவோ அவ்வளவு கால பரியந்தம் மகாசதாசிவ அனுபவத்தைப் பெற்று,சுத்ததேகியாக

இருப்பது.வருஷம் தொகை மொத்தம் ஒரு கோடி அறுபது லட்சம் சத்தென்பது பரிபாஷை குழுவ்க்குறிப்பெயர்  அனந்த தாத்பரியத்தைக் கொண்டு ஓர்மொழியானது. மார்க்க மென்பது வழி. வழியென்பது  சத்தென்னும்  பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம். ஆகையால் எவ்வகையிலும்          உயர்வுடையதுசுத்த  சன்மார்க்கம்.

சத்மார்க்கத்தின் ஏகதேசமென்பது எந்தக் காலத்தும் எவ்வகைத் தடைகளும்     இன்றி அழியாதசுத்தப் பிரணவ ஞானதேகமென்கின்ற தேகசித்தியும் எல்லாம்

வல்ல  சர்வசித்தியும்பெற்றுக்கொள்வது.

மார்க்கங்களின் விரிவு

சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிற்குள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம்.  அதில் சமயசன்மார்க்கம் 36. அதை விரிக்க ஆறுகோடியாம். இதுபோலவேமதத்திலும் 36.

மேற்குறித்த சமயம்  மதங்களிலும் ஏமசித்தி தேகசித்தி முதலியவை உண்டு.

அவை சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தா, மூர்த்திகள், ஈசுவரன், பிரமம் சிவம்

முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஓழிய   அதற்குமேல் இரா.

சமய மதங்களினும் சமரசம் உண்டு. வேதாந்த சித்தாந்த சமரசம். யோகாந்த

கலாந்த சமரசம். போதாந்த  நாதாந்த சமரசம். இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம்.

இதற்கு அதீதம்சன்மார்க்க சமரசம். இதற்கு அதீதம் சுத்த  சமரசம். ஆதலால் சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்கச் சுத்த சமரச சன்மார்க்கமாம்.  இவை

பூர்வோத்தரநியாயப்படி, கடைதலைப்பூட்டாக, சமரச சுத்த சன்மார்க்கமென

மருவின. ஆன்மாவுக்கு  அனன்னிய அருள் எப்படியோ, அதைப்போல் சுத்த

சன்மார்க்கத்துக்கு அனன்னியமாக இருப்பது சர்வ  சித்தியாம். சுத்த சன்மார்க்கத்துக்குப் படி மூன்றுஷடாந்தங்களின் பொதுவாகிய சுத்த

சன்மார்க்க படிகள்

  1. ஷடாந்த சன்மார்க்கம் 
  2. சமரசசன்மார்ககம்
  3. சுத்த சன்மார்க்கம் , ஆக 3

ஆதலால் சுத்த சன்மார்க்கத்திற்குப் படிகள் 3

  1. சிற்சபை
  2. பொற்சபை
  3. சுத்தஞானசபை

 ஆக 3, இவைகள் மூன்றுந்தான் படிகளாகஇருக்கும்.

சுத்த தேகத்தினுடைய அனுபவத்தை விரித்தால் விசேஷமாம். சுத்த சன்மார்க்கம்

விளங்குங் காலத்தில் எல்லாம் ஆண்டவர் வெளிப்படையாகத் தெரிவிப்பார்.

பரிபாஷையும் சுத்த சன்மார்க்கமும்

பரிபாஷை அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம்,  பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ,நாராயணாயநம, சிவோகம், சோகம்  முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திரதந்திர ரகசிய வாசக வாச்சிய வசன

அஷர தத்துவபவுதிக முதலியவையும் பரிபாஷையாம்,மேற்குறித்த வண்ணம் ஜபித்தும்,

தியானித்தும், அர்ச்சித்தும்,  உபாசித்தும், சமாதிசெய்தும்,சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு

வகைத் தொழிற்பட்டுப்பிரயாசையெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது.

பாவானாதீதாதீதம்,குணாதீதாதீதம்,வாச்சியா தீதாதீதம், லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்த

சன்மார்க்கப்பொருளாகிய அருட் பெருஞ்சோதி  ஆண்டவரால் இதனது உண்மைகள்  இனி  வெளிப்படும்.

 

சாத்தியநிலை

சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கைகூடும், என்றும் சாகாத நிலையைப் பெற்றுச்சர்வ

சித்திவல்லபமும் பெறக்கூடும். மற்றச் சமய மத மார்க்கங்களெல்லாம் சுத்தசன்மார்க்கத்துக்குச் செல்லக்கீழ்ப்படிகளளைதலால், அவற்றில் ஐக்கிய மென்பதேயில்லைதாயுமானவர் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர் மத சன்மார்க்கிகள்  என்றுஒருவாறு சொல்லலாம். இதில் நித்திய தேகம் கிடையாது. இது  சாதகமார்க்கமே அன்றிச்சாத்தியமல்ல. நாளைச்சுத்த சன்மார்க்கம்   வழங்கும் போது இவர்கள் யாவரும்உயிர்பெற்றுமீள வருவார்கள். முன்னிருந்த அளவைக்

காட்டிலும் விசேஷஞானத்தோடு சுத்தசன்மார்க்கத்துக் குரியவர்களாய் வருவார்கள்.

சாத்தியர்களாய் இரண்டறக்கலப்பார்கள்.

சுத்த சன்மார்க்கக் கொள்கை

சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை நோக்கி       அணுக்கள் தபசுசெய்து சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களையும் பெற்றுக்கொண்ட

மூர்த்திகளாகியவர்  ஒரு தொழிலுடைய பிரமாவும், இரண்டு சித்தியுடைய

விஷ்ணுவும், மூன்று சித்தியுடையருத்திரனும் இதுபோன்ற மற்றையர்களும்.

மேற்குறித்த   மூவரால் ஏற்படுத்திய தத்துவசித்திக் கற்பனைகளாகிய சமய  மதமார்க்கங்களை   அனுஷ்டித்து, அவர்களையே கர்த்தாக்களாக வணங்கி வழிபாடு செய்துவருகின்ற

இதுவரையிலுமுள்ளஅணுக்கள் மேற்குறித்தவர்களது

பதப்பிராப்தியை மேற்படி அணுக்கள் லேசம் பெற்றுக்  கொண்டார்கள்.ஆதலால்  இவர்களை அசைப்பித்து அனுக்கிரகிக்கும் சர்வ சித்தியையுடைய தனித்

தலைமைக்கடவுளின் சித்தியின் லேசங்கள் இவர்களுக்குள.ஆதலால் இவர்கள் அந்தச் சர்வசித்தியையுடைய கடவுளுக்குக் கோடி கோடிப்பங்குதாழ்ந்த தரத்திலிருக்கின்றார்கள்.ஆகவே சமயத் தேவர்களை வழிபாடு செய்வதுஅவசியமல்ல. மேற்குறித்தவர்கள் அற்பசித்தியைப் பெற்று, அதில் மகிழந்து அகங்கரித்து,மேல்படிகள் ஏற வேண்டியவைகளை ஏறிப்பூரண சித்தியையடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல், இங்கு மற்றவைகளை உன்னிஅவலமடைந்து நில்லாமல்,

சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று, அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெற 

வேண்டுவது சன்மார்க்கக்கொள்கை

மேலும்,

தனித்தலைவன் லட்சியந் தவிர அநித்திய சடதுக்காதிகளைப்பொருட்படுத்தி

உபாசனாதி  மார்க்கமாய்  வழிபடுவது கொள்கை அல்ல, உபாசனைமுதலியவற்றால் வழிபடுதலும் மேற்குறித்த 

தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை.

இதற்குப் பிரமாணம் சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் என்னும் திருஅருட்பாசுரத்திரு உள்ளக்கிடையானும், “அறங்குலவு தோழி இங்கே“ என்னும் அருட்பாசுர உள்ளக்கிடையானும் பெரும்பதிதெரிவித்தார். இதன்றி, திருக்கதவந்திருக்காப் பிடுவதற்கு முந்தினஇரவில்

“இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஓழுக்கம் இன்னதென்றுதெரிந்து 

கொள்ளவில்லை.யாதெனில், இங்கிருக்கின்ற ஒன்றையும்பொருளளைகக் கொள்ளாதீர்கள், 

எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமானஆசாரவகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்”

என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாகவுடையது

கடமை.

சுத்த சன்மார்க்க சங்கத்தவர்களின் கொள்கை

சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை வேண்டித் தபசுசெய்துசிருட்டிக்குஞ் சித்தியைப் பெற்றுக் கொண்டவன் பிரமன், சிருட்டி, திதி,

ஆகிய சித்தியைப்பெற்றுக்கொண்டவன் விஷ்ணு, சிருட்டி, திதி சங்காரம் ஆகிய

சித்தியைப் பெற்றுக்கொண்டவன் ருத்திரன் . இவர்கள் ஏற்படுத்திய சமய  மார்க்கங்களை அனுட்டிக் கின்றவர்கள்இவர்களை அந்தந்தச் சமயங்களுக்குத் 

தெய்வங்களை வணங்கிவழிபாடுசெய்துவந்தார்கள். இம்மூர்த்திகளுடைய சித்திகள் 

சர்வசித்தியையுடைய கடவுள் சித்தியின்இலேசங்கள். அதில் ஏகதேசம்கூட அல்ல. ஆகையால், 

இவர்கள் அந்தச்சர்வசித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள், கோடி கோடிப் பங்கு தாழ்ந்த

தரத்தில்இருக்கின்றார்கள். ஆகையால், சமயத் தெய்வங்களை வழிபாடு செய்து, அந்தச் சமயத்தெய்வங்களிடம் பெற்றுக்கொண்ட

அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்துமேலேறவேண்டிய படிகளேல்லாம் ஏறிப் பூரண சித்தியையடையாமல் தடைப்பட்டுநிற்றல்போல் நில்லாமல், 

சர்வசித்தியையுடைய கடவுளொருவர் உண்டென்றும்,அவரை

உண்மையன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெறவேண்டுமென்றும்

கொள்ள வேண்டுவது சுத்த சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை.

இதை ஆண்டவர் தெரிவித்தார்.

சுத்த சன்மார்க்க முடிபு

சுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை.

சாகின்றவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன்.

சாகாதவனே சன்மார்க்கி.

தேவர் குறள்

தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கின்றது.அதைத் தக்க  ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்.

சாகாக்கல்விக்கு ஏது

தூக்கத்தை ஒழித்தால் ஆயுசு விருத்தியாகும். ஒருவன் ஒரு நாளைக்கு

இரண்டரை நாழிகைதூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருடஞ் சீவித்திருப்பான். எப்போதும்மறப்பில்லாமல் ஆசானுடைய  திருவடியை

ஞாபகஞ் செய்து கொண்டிருப்பதே சாகாதகல்விக்கு ஏதுவாம்.

சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள்

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடைகளளைகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களைமுற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக்குரோதம் முதலியவைகள் நேரிட்டகாலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும், கொலைபுலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் 

சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள்

ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் இவை முதலியவைகளைத்

தவிர்த்துக்கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக்கொள்பவர்களுக்குக் கேவலாதிகார மரணம் நீங்கும். அப்படி

இல்லாது இவ்விடம்காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக் கொள்ளமாட்டார்கள். 

அருள் விளங்குங்காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை 

மட்டும்அனுபவிக்கக் கூடும் பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.

சுத்த சன்மார்க்க முக்கிய சாதனம்

சுத்த சன்மார்க்கத்தக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், எல்லா ஜீவர்களிடத்தும்தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை. உதாரணம் அருட்பெருஞ் சோதிஆண்டவர் சொல்லியது. “கருணையுஞ் சிவமேபொருளெனக் காணும் காட்சியும் பெறுகமற்றெல்லாம் மருள்னெறி யெனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்.”

மற்ற சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு

அதன்படிநடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும்.ஆதலால், காலந் தாழ்த்தாது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே

சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோஅவன்தான் இறந்தவரை எழுப்புகின்றவன்.

அவனே ஆண்டவனு மாவான்.

சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை

ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச்

செய்வதால், அதில்ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன.

சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்

ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும்,

ஈசுரபக்தியால் ருத்திரன் ஆயுசும் பிரம்மஞானத்தால் என்று மழியாத சுவர்ண

தேகம்முதலியவைகளைப் பெற்றுக் கடவுள் மயமாகலாம். எப்படியெனில்,

கடவுள் சர்வஜீவதயாபரன், சர்வவல்லமையுடையவன், ஆகையால்,நம்மையும்

சர்வஜீவதயையுடையவர்களளைய்ச் சர்வவல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனித தேகத்தில் வருவித்தார். ஞானிக்குத் தயவு அதிகப்பட்டிருக்கிறபடியால்,கேளாதகேள்விமுதலிய மஹா  அற்புதங்களான இறந்தாரெழுப்புதல்முதலிய

அற்புத வல்லமையைப்பெற்றிருக்கின்றார். எந்த ஜீவர்களிடத்தில் தயாவிருத்தியாகிய அருள்  விசேஷம்விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாய் இருக்கும், மற்றவர்களிடத்தில் காரியப்படாது. ஆதலால்

மலஜல சங்கல்ப காலங்களை தவிர மற்றக்காலங்களில், கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த வேண்டும்.ஆதலால் பத்தியென்பது

மனநெகிழ்ச்சி, மனவுருக்கம், அன்பு என்பது ஆன்மநெகிழ்ச்சி,ஆன்மவுருக்கம்

எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே ஈசுவரபக்தியாம். அந்தக்காரண  சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளைவிப்பது.

ஜீவகாருண்யமுண்டானால்,அருளுண்டாகும்.

அருளுண்டானால் அன்புண்டாகும்,

அன்புண்டானால்சிவானுபவ முண்டாகும்.

தயவுக்கு தடைகள் தத்துவவொழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தொழிலொழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தயவை விருத்திசெய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டுஆசாரங்கள் 

அவையாவன;  ஜாதிஆசாரம், குலாசாரம், ஆசிரமஆசாரம், லோகாசாரம்,தேசாசாரம் கிரியாசாரம், 

சமயாசாரம், மதாசாரம்,மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம்,அந்தாசாரம், சாஸ்திராசாரம் 

முதலியஆசாரஙகள், ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள்ஓழிந்து, சுத்த சன்மார்க்க 

“சத்திய ஞான  ஆசாரத்தை” வழங்கிப் பொதுநோக்கம் வந்தால்,மேற்படி காருண்யம்

விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப்

பெறக்கூடுமே யல்லது, இல்லாவிடில் கூடாது.

பக்தி – அருள் – அன்பு

பத்தி என்பது மனநெகிழ்ச்சி மனவுருக்கம் , அன்பு என்பது ஆன்மநெகிழ்ச்சி ஆன்மவுருக்கம், ஈசுவரபக்தி என்பது எல்லாவுயிர்களிடத்தும் கடவுள்

வியாபித்திருப்பதை அறிதல்,ஜீவகாருண்முண்டானால் அருள் உண்டாகும். அருள் உண்டானால் அன்புண்டாகும்.அன்புண்டானால் சிவானுபவம் உண்டாகும். அந்தக்கரண

சுத்தியின் பிரயோஜனம்பத்தியை விளைவிப்பது.

சமயம், சாதி – ஏற்பாடு

தத்துவ நியாயத்தை அனுசரித்துச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.

தொழில்நியாயத்தை அனுசரித்து ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கினறன. தயவை விருத்திசெய்வதற்குத் தடையாக இருப்பன சமய ஏற்பாடு ஜாதிஏற்பாடு முதலியவைகள். ஆதலால்,இவைகளை விட்டொழித்துப் பொது நோக்கம் வந்தாலொழிய காருண்ணியம் விருத்தி ஆகிக்கடவுள் அருளைப் பெற்று அனந்த சித்தி

வல்லபங்களைப் பெறமுடியாது.

திரையோதச நிலைகளும் – அவை அறிதலும்

  1. பூதநிலை
  2. கரணநிலை
  3. பிரகிருதிநிலை
  4. மோகினிநிலை
  5. அசுத்தமாயாநிலை
  6. அசுத்தமகாமாயாநிலை
  7. சுத்தமாயாநிலை
  8. சுத்தமகாமாயாநிலை
  9. சர்வமகாமாயாநிலை
  10. குண்டலிநிலை
  11. பிரணவநிலை
  12. பரிக்கிரகநிலை
  13. திருவருள்நிலை

ஆக. 13. இதற்கு அதீதத்தில் சுத்த சிவநிலை, இதற்குச் சத்தி, ஆகாயம், நிலை, வெளி,

பிரகாசம், அனுபவம், பதம், இடம் முதலியபெயருள்ளன.

மேலம் , வர்னமாகிய எழுத்தாலும், வண்ணமாகிய ரூபத்தாலும், தொழிலாகியபெயராலும்  அந்தமாக விரியும் இவை யாவும் ராகம் என்கிற திரை நீங்கினால்

ஒருவாறுதோன்றும். மேலும் இவைகள் படிப்பால் அறியக்கூடாது. அறிவது எப்படி யெனில்ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்ப

முண்டானால், நாம்தாழுங் குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சத்தி

பதிந்து அறிவு விளங்கும்ஆதலால்,இடைவிடாது கருணை நன்முயற்சியில்

பழகல்வேண்டும்.

ஞானயோக அனுபவ நிலைகளும் – அவை அறிதலும்

  1. படிகமேடை
  2. ஆயிரத்தெட்டுக்கமல இதழ்
  3. ஓங்காரபீடம்
  4. குண்டலிவட்டம்
  5. ஜோதிஸ்தம்பம்
  6. சுத்தநடனம்

இவற்றை அனுபவத்தினாலறிக. இஃது நிராதார லட்சணம்.

சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானங்கள்

சுத்த சன்மார்க்கத்துக்கு அனுபவ ஸ்தானங்கள் கண்டத்துக்கு மேல் சகஜ நிலை

சமாதிப் பழக்கம் பழக்கமல்ல சகஜப் பழக்கமே பழக்கம்.

சன்மார்க்கப் பெரும்பதி வருகை 12-4-1871

திருச்சிற்றம்பலம்

சுவாமிகளுக்குத் தெரிவிப்பது

சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும் இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்தநெடுங்கால  வரையில் வழங்கும். அதன்மேலும் அதன்மேலும் வழங்கும்பலவகைப்பட்டசமய பேதங்களும்,  சாத்திரபேதங்களும், ஜாதிபேதங்களும், ஆசாரபேதங்களும் போய்,சுத்தசன்மார்க்கப்  பெருநெறி யொழுக்கம் விளங்கும்.

அது கடவுள் சம்மதம். இது 29மாதத்திற்குமேல். 

இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திரபுராணங்களில் வந்ததாகச் 

சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.இப்படி சொல்லப்பட்ட எல்லா கர்த்தர்களும், 

மூர்த்திகளும்,எல்லாத்தேவர்களும்,எல்லாக்கடவுளரும், எல்லாத் தலைவர்களும்,எல்லா 

யோகிகளும், எல்லா ஞானிகளும்தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான்பெறுவேன். பெறுகின்றேன், பெற்றேன். என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு 

யாதொருதடையுமில்லை.  பெறுவீர்கள், பெறுகின்றீர்கள் , பெற்றீர்கள்,அஞ்சவேண்டாம்

-சிதம்பரம்இராமலிங்கம்

சுத்தசன்மார்க்க ஒழுக்கங்கள்

இதில் வாசிக்க விரும்புகின்றவர்கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களாகி, நல்லறிவு, கடவுள், பக்தி, உயிரிரக்கம், பொதுநோக்கம், திரிகரண அடக்கம்

முதலியநற்குண ஒழுக்கங்களையும் உண்மையுரைத்தல், இன் சொல்லாடல்,   உயிர்க்குபகரித்தல்முதலிய நற்செயற்கை  ஒழுக்கங்களையும் பெற்று சுத்த      சன்மார்க்கத்திற்குஉரியவர்களாகியிருத்தல் வேண்டும்.

இதில் வாசிக்கின்றவர்களுக்கு சிலகாலம் வாசித்து ஒருவாறு வாசிப்பிற் பயிற்சிநேரிட்டால்,  அந்தப் பயிற்சிக்கும் அவரவர்கள் குடும்பத்திற்கும் தக்கபடி         மாதந்தோறும்பொருளுதவி  செய்யப்படும். காலை மாலை சுமார் ஐந்தைந்து     நாழிகை வாசித்தல்வேண்டும்

திருச்சிற்றம்பலம்

சத்திய ஞான சபை விளம்பரம் 25 -11 -1872

உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற  நண்பர்களே!

அறிவு வந்த கால முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும், அடைந்து   அறியாதஅற்புத குணங்களையும், கேட்டு அறியாத அற்புத குணங்களையும்,    கேட்டு அறியாத அற்புதக்கேள்விகளையும், செய்து அறியாத அற்புச் செயல்களையும்,           கண்டு  அறியாத அற்புதக்காட்சிகளையும், அனுபவித் தறியாத அற்புத அனுபவங்களையும்., இத்தருணந் தொடங்கிக்கிடைக்கப்  பெறுகின்றேன்

என்றுணருகின்ற ஓர் சத்தியவுணர்ச்சியாற்பெருங்களிப்புடையேனாகி

இருக்கின்றேன்.நீவிர்களும் அவ்வாறு பெற்றுப்பெருங்களிப்பு அடைதல்

வேண்டும் என்று எனக்குள்ளேநின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த  சன்மார்க்க லட்சயமாகிய ஆன்நேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசை

பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.

இயற்கையிற்றானே விளங்குகின்றவராயுள்ளவரென்றும், இயற்கையிற்றானேயுள்ளவராய்  விளங்குகின்ற வரென்றும், இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும்,எல்லா  அண்டங்களையும்,எல்லா உலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச்சத்திகளையும், 

எல்லாச்  சத்தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும்,எல்லாத் 

தத்துவங்களையும், எல்லாத் தத்துவி களையும், எல்லா உயிர்களையும், எல்லாச்செயல்களையும்.  எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களையும், எல்லாப் பயன்களையும்,எல்லா

அனுபவங்களையும் மற்றெல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால்தோற்றுவித்தல்,

வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல், பக்குவம் வருவித்தல், விளக்கஞ்செய்வித்தல், முதலிய

பெருங்கருணைப் பெருந்தொழில்களை இயற்றுவிக்கின்றவ ரென்றும்,எல்லாம் ஆனவரென்றும், ஒன்றும் அல்லாதவரென்றும்,  சர்வகாருணிய ரென்றும்,

சர்வவல்லபரென்றும், எல்லாம் உடையராய்த்தமக்கு ஒருவாற்றானும்  ஒப்புயர் வில்லாத்தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ் ஜோதியர் என்றும் சத்திய

அறிவால்அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம்புற முதலிய       எவ்விடத்தும்நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் 

அறியும்வண்ணங்க  எல்லாமாகி விளங்குகின்றார். 

அவ்வாறு    விளங்குகின்ற ஒருவரேயாகியகடவுளை  இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்புசெய்து அருளையடைந்துஅழிவில்லாத சத்திய  சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பல வேறுகற்பனைகளளைற் பலவேறு  சமயங்களிலும்      பல்வேறு மதங்களிலும் பலவேறுமார்க்கங்களிலும் பல வேறு லட்சியங்களைக் 

கொண்டு,நெடுங்காலமும் பிறந்து பிறந்துஅவத்தை வசத்தர்களளைகிச் சிற்றறிவு மின்றி  விரைந்து விரைந்து பல வேறுஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி    இறந்திறந்து வீண்  போகின்றார்கள்.

இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல்,

உண்மையறிவு, உண்மையன்பு, உண்மையிரக்கம் முதலிய

சுபகுணங்களைப் பெற்று நற்செய்கை யுடையராய்,எல்லாச் சமயங்களுக்கும்,

எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப்பொது நெறியாகி

விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுபெருஞ் சுகத்தைதயும்பெருங்க

களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமேதிருவுள்ளங் கொண்டு சத்த சன் மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை

விளக்கஞ்செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால்

இயற்றுவித்துஇக்காலந் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு

குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் என்னுந் திருக்குறிப்பைவெளிப்படுத்தி, அருட்பெருஞ் ஜோதியராய் வீற்றிருக்கின்றார்.

ஆகலின், அடியிற் குறித்த தருணந் தொடங்கி வந்த வந்து தரிசிக்கப்

பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி, இறந்தவர்

உயிர்பெற்றெழுதல்மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை

அற்புதங்களைக் கண்டுபெருங்களிப்பும்  அடைவீர்கள்.

முடிவுரை :-

வள்ளலாரின் “உபதேச குறிப்பில்” மேற்படியான முக்கியமானவைகளிலிருந்து    அறிவதுயாதெனில்;

இப்போது அனுபவத்தில் சுத்த வேதாந்த சுத்த சித்தாந்தமாய் வழங்குகின்றன.

சுத்த சன்மார்க்கத்திற்கு சமய, மதங்களளைகிய சன்மார்க்கங்கள் அந்நநியமாய் விளங்கும். அந்நியமல்ல.

சமய சன்மார்க்கம் – சத்துவ குணத்தின் சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன் மார்க்கம்

மத சன்மார்க்கம் – சத்துவ குணமாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று லட்சியானுபவம் பெறுதல். (நிற்குண லட்சியம்)

சுத்த சன்மார்க்கம் – மேற்குறித்த சமய, மதானுபவங்களை கடந்தது. அக அனுபவமேஉண்மை.

அவை

  1. பாவனாதீதஅதீதம் – எவ்விதத்தும் எண்ணுதற்கரியது
  2. குணாதீதஅதீதம் – குணமாகிய சத்துவ குணத்தை கடந்தது.
  3. லட்சியாதீதஅதீதம் – கொண்ட அனுபவமாகிய லட்சியானுபவங்களை கடந்தது.
  4. வாச்சியாதீதஅதீதம் – சொல்லுக்குரிய பொருளை கடந்தது.

வேதாந்த அந்தாதீத சித்தாந்த அந்தாதீத சுத்த சன்மார்க்கமே நீடூழி அழியாத சத்திய மார்க்கம்.

சமய, மத மார்க்கங்கùளல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்படிகளளைதலால், அவற்றில் ஐக்கிய மென்பதேயில்லை.

அன்பர்களே,

ஜீவகாருண்யம், கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம்,

ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருண்யம் முதலிய சத்துவ குணத்தினை கொண்ட ஒழுக்கத்தினை சமயமும், சத்துவகுண நிர்க்குண இலட்சியமாகிய அனுபவங்களைக் கடவுளின் உண்மையை எங்ஙனம் பெற முடியவில்லை என காணும்பொழுது தான் வள்ளலாரின் தனிநெறி விளங்கும். அது எதுவெனில் சமய, ஜாதி கட்டுப்பாட்டு  ஆசாரங்கள் ஆகும். அவையாவன

“தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு  முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் அவையாவன; ஜாதிஆசாரம், குலாசாரம், ஆசிரமஆசாரம்,

லோகாசாரம், தேசாசாரம் கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம்,   கலாசாரம்,   சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரஙகள்,  ஆதலால் மேற்குறித்த

ஆசாரங்கள் ஓழிந்து, சுத்த சன்மார்க்க “சத்திய ஞான ஆசாரத்தை” வழங்கிப்பொதுநோக்கம்

வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி  முத்திகளைப் பெறக்கூடுமே யல்லது, இல்லாவிடில் கூடாது. “

அன்பர்களே முடிவாக வள்ளலார் கட்டளையாக சொல்லியதை நாம் அறிய     வேண்டும்அது;

  1. மேற்படியானஆசாரங்கள் விட்டொழிக்க வேண்டும்.
  2. சுத்தசன்மார்க்க ஞான ஆசாரமாகிய பொது நோக்கம் வர வேண்டும்.
  3. சுத்தசன்மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை. படிப்பால் அறிதல் கூடாது.
  4. கடவுளின்நிலையை அறிய விசார சங்கல்பம் உண்டாகும் வரை ஒழுக்கம் நிரம்புதல்   வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் தனிநெறி இவையென அறிதல் வேண்டும்.

அன்புடன்

APJ. ARUL

வெளியீடு

கருணை-சபை சாலை அறக்கட்டளை

பதிவு எண் 4/2009

பூம்புகார் நகர் வடக்கு விரிவாக்கம்,

உத்தங்குடி, மதுரை-625 107.

போன் 9489269169

நிறுவநர் & தலைவர்

திருமதி. இராமலெட்சுமி இளங்கோ

KINDLY TO NOTE : BELOVED FRIENDS, OUR TRUST ISSUES VIZ, BOOKS ARE PUBLISHED ON FREE OF COST. IF YOU WANT THE SAME KINDLY CONTACT US.

A MONTHLY MAGAZINE IS TO BE RELEASED VERY SOON ON FREE OF COST. KINDLY BOOK FOR YOUR COPY WITH DETAILS OF YOUR ADDRESS THROUGH POST.