சுத்த சன்மார்க்கத்தார்கள் எதற்காக சமய லட்சியத்தை கைவிடவேண்டும்? சுத்த சன்மார்க்கத்தின் ஒரே சாதனம் “தயவு” என்னும் கருணையே. இறையருள் கிடைக்க இந்த ‘தயவு’ விருத்தியாக வேண்டும் என்கிறார் வள்ளலார். தயவு விருத்திக்கு தடையாக சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் உள்ளன.அவையை ஒழித்தால்தான் “பொதுநோக்கம்” வரும். இந்த “பொது நோக்கம்” சுத்த சன்மார்க்கத்தின் “சத்திய ஞானாசாரம்” ஆகும். சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் எவை என தெரிதல் வேண்டும்.அவையாவன. ஜாதி, குலம், ஆசிரமம், லோக, தேச, கிரிய, சமய, மத, மரபு, கல, சாதன, அந்த, சாஸ்திர ஆசாரங்கள் ஆகும். தயவு விருத்திக்கு இவைகள் தடையாக உள்ளன. இவை அனைத்தும் உலகில் காணும் சமய, மதங்களில் உள்ளன. சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் ஒழித்தல்
Read More