ஜீவர்கள் தயவு – A.B.C
Moment for All Being Compassion [A.B.C]
“ஜீவர்கள் தயவு ” — என்னும் ஒரு புதிய இயக்கம் — சேர்வீர்
அக்டோபர் 5, திருவருட் பிரகாச வள்ளலார் பிறந்த இந்த இனிய நாளில் 05-10-2019 சனிக்கிழமை ” ஜீவர்கள் தயவு ” திருமிகு ஏபிஜெ அருள் – இராமலெட்சுமி (கருணை சபை சாலை) அவர்களால் ஏற்படுத்தி, அன்பர்கள் திரு கண்ணன், திரு சுப்பிரமணியன் திரு செங்கான்
திரு ரவிசந்திரன் திரு சசாங்கன்
திரு வெற்றிவேல் திரு ஹுஸைன் திரு கங்காதரன் திரு சகாதேவராஜா
முன்னிலையில் தொடங்கப்படுகிறது.
“ஜீவர்கள் தயவு” என்பது;
எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் உணர்வு உள்ளவர் என வெளிப்படுத்திக் கொள்ளுதல்,
ஜீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை, இவைகளால் , துக்கத்தை அனுபவிக்க கண்ட போதாயினும், கேட்ட போதாயினும் நம்மிடையே உருக்கம் உண்டாகி, நம்மால் முடிந்தவரை ஜீவகாருண்யப் பணியாற்றுதல்,
” ஜீவகாருண்யப் பணியாற்றுதல்” என்பது;
நம் அறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது அல்லது தனியாவது நம்மால் முடிந்தவரை நற்செயல்கள் ஆற்றுகை எனப்படும்.
ஆக,
“ஜீவர்கள் தயவு”
1) மேற்படி சொல்லப்பட்ட எல்லா உயிர்களிடத்தும் “தயவு உணர்வு உள்ளவர்” என உலகிற்கு வெளிப்படுத்தும் ஒரு வழி (மார்க்கம்);
2) மேற்படி சொல்லப்பட்ட ஜீவகாருண்யப்பணி அதாவது உயிர்களின் துன்பததை நிவர்த்திச் செய்யும் பொருட்டு அவரவர் சொந்தப் பொறுப்பில், அவரவர்க்கு முடிந்தவரை அல்லது நம் அறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது நடைமுறையில் உள்ள சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மேற்படி ஜீவகாருண்யப் பணியை செயலாற்றுதல்,
மற்றும்
3) மேற்படி (1) (2) ல் சொல்லப்பட்ட உணர்வு மற்றும் பணியை தவிர மற்றபடி எதுவும் புறத்தில் “ஜீவர்கள் தயவு” பெயரில் இல்லை மற்றும் கூடாது.
மனிதர்கள் அனைவரிடத்திலும் ” கருணை ” இயற்கையாகவே உள்ளது. அக் கருணை எல்லோரிடத்திலும் விரைந்து வெளிப்பட வேண்டும் என்ற சுத்த ஞானி திருவருட் பிரகாச வள்ளலார் வழியில் ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமை அடிப்படையில் மட்டுமே “ஜீவர்கள் தயவு”
நன்றி : ஏபிஜெ அருள்
மற்றும் அன்பர்கள். வணக்கம்.
” எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
உங்களை ” ஜீவர்கள் தயவில்” வெளிப்படுத்திக் கொள்ள தொடர்புக்கு:
E mail :allbeingscompassion@gmail.com
Web:
www.atruegod.org
Video / வீடியோ கிளிக் செய்து பார்க்க
Web:
www.atruegod.org
Video / வீடியோ கிளிக் செய்து பார்க்க